-
20th January 2012, 10:29 PM
#2781
Senior Member
Diamond Hubber
it shud be simple! when u visit the url for 1st time, the contents are loaded and some background script shud keep 'talking' with the website continuously, and while this continues, the contents are not shown. once the communication stops, the loaded script assumes there is no connection and exposes the content.
nicee
-
20th January 2012 10:29 PM
# ADS
Circuit advertisement
-
20th January 2012, 10:32 PM
#2782
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
it shud be simple! when u visit the url for 1st time, the contents are loaded and some background script shud keep 'talking' with the website continuously, and while this continues, the contents are not shown. once the communication stops, the loaded script assumes there is no connection and exposes the content.
nicee

R u saying these URL are stored in the cache memory ?? even you log out ?
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
20th January 2012, 10:42 PM
#2783
Senior Member
Diamond Hubber
not an flash expert! btw, once can also see the content by 'cheating'. for example, one after loading the website, instead of disconnecting the web, tell the browser to block the url, so that no more communication happens and the script will 'think' the connection is lost and will expose the hidden content
-
20th January 2012, 10:43 PM
#2784
Senior Member
Diamond Hubber
the complete code is stuffed in the client and that identifies when the connection goes on and off...
pretty simple but nice thinking there...
-
20th January 2012, 11:15 PM
#2785
Senior Member
Diamond Hubber

ரஜினி சீஸன் 2 அடுத்து என்ன செய்யப்போகிறார் ரஜினி?
இப்போது இந்தக் கேள்விக்கு இன்னும் ஆயிரம் சிறகுகள். இந்திய சினிமாவில் இன்னமும் ரஜினிதான் உச்ச நட்சத்திரம். 'அரசியலுக்கு வா தலைவா!’ என அலறி ஓய்ந்துவிட்டன ரசிக ஸ்பீக்கர்கள். இரண்டு மகள்களுக்கு அப்பாவாக, தன் கடமைகளை முடித்துவிட்டார் ரஜினி தாத்தா. உடல்நிலை மோசமாகி சிகிச்சைக்கு சிங்கப்பூர் வரை போய்த் திரும்பிய ரஜினிக்கு, அவரே சொன்னது போல இது மறுபிறவிதான்.
இந்த 'ரஜினி சீஸன் - டூ’வில், எல்லாத் திசைகளிலும் அவர் முன்பு காத்திருக்கின்றன புதிய கேள்விகளும் புதிய பணிகளும். சினிமா, அரசியல், சமூகம்... என எல்லாத் தளங்களிலும் இனி என்ன செய்ய வேண்டும் ரஜினி?
ரஜினியின் நெருங்கிய நண்பரும் நலம் விரும்பியுமான, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இதுபற்றி கேட்டால், '' 'மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை’ என மா சே துங் சொன்னது மாதிரி, ரஜினிகாந்த் ஓய்வு எடுக்க நினைத்தாலும் ஊடகங்கள் விடுவது இல்லை. 'ரஜினிகாந்த் இனி என்னவாக வேண்டும்?’ என்ற விகட னின் கேள்விக்கு, அவர் நடிகராகத் தொடர வேண்டுமா? தலைவராக மலர வேண்டுமா? என்பதுதான் எனது அதிகபட்சப் புரிதல். அவர் இன்று அடைந்து இருக்கும் நிலை, நீங்களும் நானும் சொல்லி வந்தது இல்லை. அவர் என்னவாக விரும்பி னாரோ... அதுவாகவே இருக்கிறார். அவர் என்னவாக விரும்புகிறாரோ... அதற்கு அவர் முனைவார். அவர் இனி என்னவாக விரும்புகிறார்என்பது அவரது உடல்நிலை - மனநிலை - தமிழ்நாட்டுச் சூழ்நிலை மூன்றும் கூடிச் செய்யும் முடிவாகும். அதை அவரே முடிவு செய்வாரே தவிர, எந்தத் திணிப்புக்கும் தன் உடம்பையும் மனதையும் உட்படுத்தாதவர் என்பதை நான் அருகில் இருந்து அறிவேன்.
அரசியலுக்கு வருவது என்று தீர்மானித்தால், மூன்று விதமான கேள்விகள் அவர் முன் மூர்க்க மாக வந்து முகம் காட்டும் என்பதை அவர் அறிவார். ஓர் அரசியல் கட்சியின் வெற்றி, எதிரியைத் தீர்மானிப்பதில் இருக்கிறது. ரஜினிகாந்தின் எதிரி யார்? 'எதிரியும் கடவுளும் இல்லை என்றாலும் உண்டாக்கிக்கொள்’ என்றொரு வாசகம் உண்டு. தன் கடவுளைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்த ரஜினிகாந்த், எதிரியைத் தேர்ந்தெடுப்பாரா? காங்கிரஸோடு கைகுலுக்கல்-அத்வானியோடு அன்பு - முன்னாள் முதலமைச்சர்களின் வீடுகளுக்கு மத்தியில் வீடு கட்டிக்கொண்டதைப்போல இருவரோடும் நல்லுறவு - சிறு கட்சித் தலைவர்கள் ஆங்காங்கே சேர்ந்தால் அச்சடித்த ஆசீர்வாதம் - யாரையுமே பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற பழுத்த நாகரிகம் - இதுதான் ரஜினிகாந்தின் சமூக உறவு பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றம். இந்த நாகரிகத்தை உடைத்தெறிந்து அவர் வெளிவருவாரா?
'யார் நண்பன்... யார் எதிரி’என்பதை எந்த அளவுகோல்கொண்டு தீர்மானிப்பது? இது ரஜினிகாந்த் முன் நிற்கும் முதல் கேள்வி. தமிழ்நாட்டு அரசியல் வானத்தில் ரஜினிகாந்துக்கான வெற்றிட வெளி இருக்கிறதா? இது இரண்டாம் கேள்வி. திராவிடக் கட்சிகளை நம்பித்தான் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகளே இயங்குகின்றன. அதைத் தாண்டிய மாற்று அரசியலைக் கொடுப்பதற்கு ரஜினிகாந்தின் நேர்மைமட்டும் போதுமா? அல்லது அவரது நேர்மையே தடை யாக இருக்குமா? கறுப்புப் பணம் இல்லாமல் இன்று எந்தத் தேர்தலையும் எந்தக் கட்சியாவது சந்திக்க முடியுமா? (பிரசாரத்துக்கு ஓர் அரசியல் கட்சி கொடுப்பதாகச் சொன்ன பெரும் பணத்தைத் தவிர்த்தவர் அவர் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்) 'சம்பாதிக்காதவன் அரசியலில் வாழ முடியாது; சம்பாதிக்க விடாதவன் ஆள முடியாது’ என்ற அழுகிப்போன சித்தாந்தத்துக்கு ரஜினிகாந்தின் நல்ல நெஞ்சம் பழகிப்போகுமா? மூன்றாவது முக்கியமான கேள்வி - ஒருவேளை முதலமைச்சர் ஆகிவிட்டால், என்ன செய்வது? குப்பைகளை அகற்றுவதற்கு டெண்டர்களை மாற்றுவது போல, எல்லா முதலமைச்சர்களும் இந்தியாவில் மற்றும் ஒரு டெண்டராகிவிடுகிறார்கள். அரசாங்கம் என்றமக்கள் முதலீட்டு நிறுவனத்தில் வரவு -செலவு பார்க்கும் கணக்குப் பிள்ளையாகவே கழிந்துபோகிறார்கள். 'லட்சியங்களின் கூட்டம் என்பது போய் எண்களின் தர்மம்’ என்றாகிவிட்ட இன்றைய அரசியலில், பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்தில், நாடு கடைசி முன்னுரிமைக்குத் தள்ளப் படுகிறது. சுதந்திர இந்தியாவில் எந்த முதலமைச்சரும் முன்னெடுத்து வைக் காத புதிய லட்சியம் - புதிய திட்டம் ஒன்றை சமரசம் இல்லாமல் முன் வைக்க முடியுமா?
இத்தனைக் கேள்விகளும் ஒரு சராசரிக் குடிமகனான எனக்கே தோன்றுகிறதே, ரஜினிகாந்துக்குத் தோன்றாதா? தோன்றி இருக்கக்கூடும். இதற்கான விடைகளை தயாரித்து இருந்தால், அவர் வெற்றிகரமான தலைவராக வெளியேறலாம்; இல்லை என்றால் சினிமா பிம்பங்களால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டு உடல் அரசியலில் அவரும் ஓர் எண்ணிக்கையாக இடம்பெறலாம்.
'எவனுக்கு என்ன குணம்?
எவனுக்கு என்ன பலம்?
கண்டதில்லை ஒருவருமே - ஒரு
விதைக்குள்ளே அடைபட்ட
ஆலமரம் கண் விழிக்கும்
அதுவரை பொறு மனமே’ - என்கிற 'படையப்பா’ படப் பாடல்தான் என் நினைவில் நீராடுகிறது!''
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன் இது பற்றி பேசுகிறார்:
''தமிழகத்தின் திரைப்பட வரலாற்றில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் மனதில் மிக அதிகமாக இடம்பிடித்தவர் ரஜினிகாந்த். சாதாரண கண்டக்டராக இருந்த ஒருவரை புகழின் உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியது தமிழகம். அவரை முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைக்கவும் கணிசமான ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. அந்த அளவுக்கு ரஜினிகாந்த் என்கிற தனி மனிதனுக்குத் தமிழகம் செய்தது ஏராளம். கைமாறாக இந்தத் தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் ஆற்றப்போகிற காரியம் என்ன என்பது என் நெடுநாளைய கேள்வி.
கர்நாடக மாநிலத்தில் பல தொழில்களில் ரஜினி முதலீடு செய்து இருப்பதாகச் சொல்கிறார்கள். ஓர் இந்தியர் என்கிற உணர்வில் அந்த செயலைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், கர்நாடகம் அவரை ஒரு கண்டக்டராகவே வைத்து இருந்தது. தமிழகம்தான் அவரை வாழவைத்தது. எம்.ஜி.ஆர். உடல் நலமற்று மருத்துவமனையில் இருந்தபோது எந்த அளவுக்குத் தமிழகம் தவித்ததோ... தத்தளித்ததோ... அதே போன்று, சமீபத்தில் ரஜினி உடல் நலிவுற்றபோது ஆயிரமாயிரம் இளைஞர் கள் இதயம் வலிக்க இறைவனைப் பிரார்த்தனை செய்தனர். இதோ இதே தமிழகத்தில் இன்றுகடலூர், நாகை எனத் தொழில் வளமற்ற மாவட்டங்களை பாழ் குழிக்குள் தள்ளிவிட்டுப் போய் இருக்கிறது 'தானே’ புயல். இன்று அங்கே பலா மரங்களைப் பறிகொடுத்து, முந்திரிக் காடுகளைத் தொலைத்து, வாழ்வாதாரம் இழந்து, விழி நீர் சுமந்து வீதிகளில் நிர்கதியாக நிற்கின்றனர் மக்கள். இதில் இருந்து மீள அவர்களுக்கு 20 ஆண்டுகள் ஆகிவிடும். மாநில அரசு மட்டும் மக்களின் ஏழ்மையை முற்றிலும் அகற்றிவிட முடியாது. அதற்கு நல்லோர்களும் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்துக்கு வழி காட்டும் வகையில், ரஜினி தான் திரட்டி வைத்து இருக்கும் செல்வத்தில் ஒருபங்கைத் தர முன்வர வேண்டும். அந்த மண்ணுக்கு ஏற்ற தொழில்களை அங்கே தொடங்கி, அந்த மக்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். அங்கு வசிக்கிற மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அவர்களின் கண்ணீரை நிரந்தரமாக துடைக்க முன்வருவதே ரஜினியின் முதல் பணியாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான சமூகப் பணிகள்தான் ரஜினியை தமிழ் மக்களின் நினைவுகளில் என்றென்றும் வைத்திருக்கும். செய்வீர்களா ரஜினி..?''
ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கியவர். அவருடைய 'சூப்பர் ஸ்டார்’ நாற்காலியின் முக்கியமான காரணகர்த்தா இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்...
''டாக்டர்கள் விதிச்ச கட்டுப்பாடுகள் இல்லாமல், இப்போதுதான் நார்மல் உணவு முறைக்கு வந்து இருக்கிறார் ரஜினி. சினிமாவில் அவரை ரசிப்பதற்கும் கொண் டாடுவதற்கும் உலகத் தமிழர்கள் இன்னும் ஆசையாகக் காத்திருக் கிறார்கள். அவர்களுக் காக ரஜினி இன்னும் சினிமாவில் நடிக்கணும்.நடிப்பு ஒரு கடினமான பணி. நடிப்புக்கான சிரமம், ஷூட்டிங் டென்ஷன்னு எதுவும் தன் உடல்நிலையைப் பாதிக்காதவாறு ரஜினி பார்த்துக்கணும். ஏன்னா, ரஜினிக்கே அதுதான் அவரை மீட்டெடுத்துக் கொடுக்கும். அவர் எப்போதும் ஸ்டைலான ஹீரோவாத்தான் நடிக்கணும்கிறது என் கருத்து. அவரோட பலமே ஸ்பீடுதான். வாங்க ரஜினி... இன்னும் ஸ்டைலா... இன்னும் வேகமா!''
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்கிறார்...
''நண்பர் ரஜினிகாந்த் அனைவருக்கும் பொதுவானவர். அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. அவர் எந்த ஒரு குறிப் பிட்ட அரசியல் கட்சியுடனும் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மூப்ப னார் அவர்கள் தனிக் கட்சி தொடங்கிய அன்றே ரஜினியும் நேரடி அரசியலில் களம் இறங்கி இருந்தால், இந்நேரம் அவர் அரசியலில் சாதனைகளை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால், இன்று தமிழக அரசியல் சூழல், ரஜினியின் சூழல் இரண் டுமே மாறி உள்ளன. அதனால் அவருக்கு அரசியல் களம் தோதா னது அல்ல.
இந்த விஷயத்தில் அமிதாப்-ரஜினி இரண்டு பேரையும் நான் ஒரே தராசில்வைத்துப் பார்க்கி றேன். அமிதாப் அரசிய லுக்குச் சென்று, பிறகு அது தனக்கு சரிபட்டு வராது என்பதை உணர்ந்து, மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியவர். அந்த வகையில் இதுநாள் வரை அரசியலைத் தவிர்க்கும் ரஜினியை, 'கொடுத்துவைத்த வர்’ என்றே சொல்ல வேண்டும். இவர் அமிதாப்பைப் போல நல்ல கதாபாத்திரங் களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள் ரஜினி!''
'நீயா... நானா?’ கோபிநாத், ரஜினி சீஸன்-டூ பற்றி சொல்கிறார்:
''ரஜினி இன்று பொது மனிதர். அவரைப் பலரும் ஒரு முன்னுதாரண மனிதராகப் பார்க்கிறார்கள். இப்போது அவர் 'சமூகத்துக்குத் திரும்பத் தருதல்’ என்ற இடத்துக்கு வந்து இருக்கிறார். தன் திரைப்படங்கள் மூலமாகவும் விளம்பரங்கள் இல்லாத உதவிகள் மூலமாகவும் அவர் இதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால், இதையும் தாண்டி மக்களின் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. '400 கோடி ரூபாய் பட்ஜெட்’ என்ற உச்சபட்ச வியாபாரத்தை நோக்கி தமிழ் சினிமாவை இழுத்துச் சென் றது ரஜினியால் மட்டுமே சாத்தியமான ஒன்று. இதைப் போல அவர் இன்னமும் சினிமாவுக்கு நிறைய செய்யலாம். நல்ல சினிமாக்களை, தன் சொந்த கம்பெனி மூலம் தயாரிக்கலாம். ரஜினி மிகச் சிறந்த கருத்துச் சொல்லி. தான் பகிர்ந்துகொள்ளும் எல்லா மேடைகளிலும் நல்ல தகவல்களை, கருத்துக்களைச் சொல்கிறார். இந்த மேடைகளையும் அதிகமாக்கி இன்னும் அதிகமான நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கலாம்.
'ரஜினியை அரசியலுக்கு வரச் சொல் கிறீர்களா?’ எனக் கேட்டால், 'ஓட்டுப் போடுங்கள். அது ஜனநாயகக் கடமை’ என்று சொல்வதுகூட அரசியல்தான். இப்படி அவர் சொல்லும்போது ஒட்டு மொத்த தமிழகத்திலும் ஒரு சதவிகித ஓட்டுப்பதிவு உயர்ந்தால்கூட நல்ல விஷயம் தானே. 'மறக்காமல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுங்கள்’ என்று ரஜினி சொன்னபோது 'எத்தனை பேர் வந்து வரிசையில் நின்றார்கள்’ என்பது தமிழகத்துக்குத் தெரியும்!''
இன்றைய தலைமுறை இயக்குநர்களில் ரஜினிக்கு நெருக்கமான ஷங்கர் சொல்வது இது:
''ரஜினி சாரோட எதிர்காலம் பற்றி அவரும் அவரோட உடல் ஆரோக்கியமும் தான் முடிவு செய்யணும். என்னைப் பொறுத்தவரைக்கும் ரஜினி ரொம்ப டெடி கேட் ஆன மனிதர். எதைச் செய்றதா இருந்தாலும் தீர யோசிச்சு, தீர்க்கமான முடிவுகளோடு செய்ப வர். முடிவு பண்ணிட் டார்னா, அதுக்காகத் தன்னை முழுசா ஒப்ப டைக்கிறவர். அதனால், அவர் எது செய்தாலும் பெட்டரா இருக்கும்னு நம்புறேன். அவரோட நலம் விரும்பியா முதல்ல அவரோட ஹெல்த்தான் எனக்கு முக்கியமாப்படுது. நல்ல பலமும் நிறைய சிரிப்புமா அவர் நீண்ட ஆயுளோட இருக்கணும்!''
ரஜினியுடன் பல படங்களில் நடித்தவரும், அவரது நலம் விரும்பியுமான குஷ்பு பேசுகிறார்:
''ரஜினி மிகச் சிறந்த நடிகர். அவர் மாஸ் கமர்ஷியல் படங்கள் தவிர, 'தில்லுமுல்லு’, 'ஜானி’, 'ஆறிலிருந்து அறுபது வரை’ 'அண்ணாமலை’,'பாட்ஷா’, போன்ற கமர்ஷியல் ப்ளஸ் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ரஜினி சார் நிச்சயம் செய்வார்!''
ரஜினியின் உடல்நலம் தேற வேண்டிக்கொண்டு இமயமலையில் உள்ள பாபா குகைக்குப் போய் வந்த மதுரையைச் சேர்ந்த ரசிகர் ஏ.எம்.கவுண்டர்...
''இப்போ இருக்கிற சூழ்நிலையில், அடுத்து அடுத்து படங்கள் நடிக்கணும்னு அவரைக் கட்டாயப்படுத்தக் கூடாது. 'அரசியலுக்கு வாங்க தலைவா’ன்னு கூப்பிடுறது தப்பு. ஏன்னா, அவர் கேரக்ட ருக்கு கண்டிப்பா அரசியல் தோதுப்படாது. அவர் பேரைச் சொல்லி சம்பாதிக்க ஆசைப்படுறவங்கதான் அவரை அரசியலுக்கு வரச் சொல்றாங்க. என்னைப் பொறுத்த வரை, ரஜினி சார் ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறதுதான் சரி. சபரி மலைக்கும் பாபா குகைக்கும் போனப்ப கிடைச்ச பரவச நிலை, ரஜினி முகத்தைப் பார்க்கிறபோதும், அவர் குரலைக் கேட்கிறபோதும் ஏற்படுது. நடிக்கிறதுக்கும் அரசியல் பண்றதுக்கும் நம்ம நாட்டுல ஆயிரம் ஆட்கள் இருக் காங்க சார். ஆனால், உண்மையான ஆன்மிக குருக்கள் ரொம்பக் குறைவு. மக்களுக்கு ரஜினி ஓர் ஆன்மிக வழிகாட்டி ஆக இருந்தா... நிறைய இளைஞர்கள் நல்ல வழிக்குத் திரும்புவாங்க. இது என்னுடைய விருப்பம்!''
ரஜினியின் இன்னொரு ஃபேவரைட் இயக்குநர் பி.வாசு சொல்கிறார்:
''ரஜினியின் அரிதார முகம், ஆன்மிக முகம் எல்லோரும் பார்த்தது. இன்னொரு முகம் இருக்கு... அது தத்துவ முகம். நிறையத் தடவை ரஜினி சார் பேசும்போது அதில் இருக்கும் உள் அர்த்தங்கள் உணர்ந்து பிரமிச்சுப்போயிருக்கேன். 'கடவுள் இருக்காரா... இல்லையா?’ என்கிற கேள்வியை தன்னைத்தானே ரஜினி அதிகமாகக் கேட்டு இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மாபெரும் மக்கள் சக்தி. தமிழ் மக்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்போது, அவர் என்ன குரல் கொடுக்கிறார் என்பதை நாடே எதிர்பார்க்கிறது. இப்போதுகூட டாக்டர்கள் ஸ்ட்ரைக் செய்த«பாது ஏராளமான நோயாளி கள் கஷ்டப்பட்டனர். இது போன்ற சமூகப் பிரச்னைகளில் ரஜினி தொடர்ந்து வாய்ஸ் தர வேண்டும் என்று விரும்பு கிறேன்!''
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன் தந்தையைப் பற்றி இங்கே பேசுகிறார்:
''தான் என்ன செய்யணும், எப்போ செய்யணும், எப்படிச் செய்யணும்கிறதை தானே முடிவு எடுத்து செய்வார் அப்பா. எங்களையும் அப்படியேதான் வளர்த்தார், வளர்க்கிறார். அவருக்கு கடவுள் தந்த இந்த ஓய்வை ஒரு கொடை என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஓய்வு இன்றி வருஷத்துக்கு ஏழெட்டுப் படங்கள் என ஓடிக்கொண்டே இருந்தவர் இன்று தன் பேரப் பிள்ளைகளுடன் விளையாடுகிறார். நாங்கள் முதல்முதலில் மண்டியிட்டுத் தவழ்ந்ததை, நடந்ததை, மழலையில் பேசியதைப் பார்க்க கொடுத்துவைக்காததை இன்று தன் பேரப்பிள்ளைகள் மூலம் காண்கிறார் அப்பா. 'சரி ஓய்வா இருக்கோம். இதையாவது செய்வோமே’ என்கிற நிலையில் இருந்து செய்யாமல், அதையும் மனப்பூர்வமாக விரும்பி, ரசித்து செய்கிறார். அப்பா அடுத்து என்ன பண்ணினாலும் இப்ப உள்ள அதே சந்தோஷத்தோடு அவர் எப்பவும் இருக்கணும் என்பதே எங்களின் விருப்பம்!''
''நிஜமாகவே ரஜினி ஓர் அதிசயப் பிறவிதான்'' என ஆரம்பிக்கிறார் ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான ராஜ்பகதூர்:
''திரையில் ரஜினி எப்பவும் சூப்பர் ஸ்டார்தான். வயசாகிடுச்சு என்பதால் அமிதாப் பச்சன் மாதிரி கேரக்டர் ரோல், அப்பா, தாத்தா வேடங்களில் ரஜினி நடிப்பதை அவரது ரசி கர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.ரஜினி தன் ரசிகர்களை ரொம்ப மதிக்கிறார். ரசிகர்கள் இல்லாவிட்டால் தான் இல்லை என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். உடம்பு சரி இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, ரசிகர்களின், தமிழ் மக்களின் பிரார்த்தனைகள்தான் தன்னைக் காப்பாத்தினதுன்னு உறுதியா நம்புறார். அந்த ரசிகர்களுக்காகவாவது ரஜினி இன்னும் நிறைய செய்யணும். அதே மாதிரி இந்த சமூகத்துக்கு உதவுகிற நிறைய எண்ணங்கள் அவரிடம் இருக்கு. மக்களுக்கு இலவசக் கல்வி, மருத்துவ உதவிகள் நிறைய செய்யணும். கடைசி வரை அவர் ஒரு நல்ல நடிகனாக, நல்ல குடும்பத் தலைவனாக, நல்ல நண்பனாக, நல்ல மனிதனாக இருந்தாலே போதும். அப்புறம், அரசியலுக்கு ஒருபோதும் என் ரஜினி வரக் கூடாது!''
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 20th January 2012 at 11:28 PM.
-
21st January 2012, 12:29 AM
#2786
Junior Member
Veteran Hubber
-
21st January 2012, 01:09 AM
#2787
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Nerd
Wb TA bro

thanks and good to be here again.
-
21st January 2012, 07:27 PM
#2788
Senior Member
Devoted Hubber

Originally Posted by
PARAMASHIVAN
Easygoer,
IS this some kind of joke ??
A joke made into reality... he he he
Know something about everything and go deeper in one thing
-
23rd January 2012, 04:31 PM
#2789
Senior Member
Diamond Hubber
Welcome back Thamizharasan
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
23rd January 2012, 08:15 PM
#2790
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
PARAMASHIVAN
Welcome back Thamizharasan

Thanks. How have you been?
Bookmarks