-
17th February 2012, 12:25 AM
#2111
Senior Member
Seasoned Hubber
-
17th February 2012 12:25 AM
# ADS
Circuit advertisement
-
17th February 2012, 03:58 PM
#2112
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகத்தை வைத்து கிண்டல், கேலி செய்வதே, திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் / இயக்குனர்களுக்கு வேலையாகிப் போய்விட்டது. அவ்வப்போது கண்டனக் குரல்கள் எழுப்புவதன் மூலம் அவர்கள் கண்டிப்பாக பயப்படுவார்கள், திருந்துவார்கள்.
-
17th February 2012, 04:08 PM
#2113
Senior Member
Seasoned Hubber
-
17th February 2012, 06:42 PM
#2114
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
A few images of Sunday gala at Woodlands Theatre
IMAGES COURTESY: Thiru Subramaniam Subbaraman through Murali Sir and facebook.
Thank you Ragavendran, Murali and Ramajayam sir...
-
17th February 2012, 07:01 PM
#2115
Senior Member
Seasoned Hubber
21.02.2012 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ள கர்ணன் மெருகேற்றல் திரைக்காவிய டிரைலர் வெளியீட்டு விழா சிறப்புற அமைய நமது நல்வாழ்த்துக்கள்.
Last edited by RAGHAVENDRA; 20th February 2012 at 02:57 PM.
-
18th February 2012, 02:07 AM
#2116
Senior Member
Seasoned Hubber
http://www.dinamani.com/edition/stor...ionName=Latest News&artid=554141&SectionID=164&MainSectionID=164& SEO=&Title=
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கர்ணன் படம் திரைக்கு வருகிறது
First Published : 17 Feb 2012 12:24:40 PM IST
Last Updated : 17 Feb 2012 01:12:37 PM IST
சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கும், பழைய காலப் படங்களின் பிரியர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, செவாலியே சிவாஜி நடித்த கர்ணன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. மார்ச் மாதம் சுமார் 50 திரையரங்குகளில் திரையிடப்பட கர்ணன் படம், அதற்காக பிரத்யேகமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளிப் பதிவுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சிவாஜி (கர்ணன்), ராமாராவ் (கிருஷ்ணன்) என இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களின் நடிப்பை மீண்டும் பெரிய திரைகளில் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. ரூபாய் 40 லட்சம் செலவில் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்து கர்ணன் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ள சாந்தி சொக்கலிங்கம், கர்ணன் திரைப்படத்தை மீண்டும் பெரிய திரைகளில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார். தமிழ் திரைப்பட வரலாற்றையே புரட்டிப் போட்ட கர்ணன் திரைப்படம், நிச்சயமாக தமிழ் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று நம்புகிறோம்.
kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!
-
19th February 2012, 07:59 PM
#2117
Senior Member
Diamond Hubber
திரியில் சில நாட்களாக சிறிது தொய்வு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது ..தங்கப்பதக்கம் வெளியீடு , கர்ணன் வெளியீடு போன்ற முக்கிய தருணங்களில் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா ? ..எங்கே பம்மலார் ?
-
19th February 2012, 08:48 PM
#2118
Junior Member
Senior Hubber

Originally Posted by
joe
திரியில் சில நாட்களாக சிறிது தொய்வு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது ..தங்கப்பதக்கம் வெளியீடு , கர்ணன் வெளியீடு போன்ற முக்கிய தருணங்களில் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா ? ..எங்கே பம்மலார் ?
VERY MUCH RIGHT. where is our great friends pammalar. vasudevan partha mrs sarada and kartik. we get up ferrarously from karnan release.
-
19th February 2012, 08:59 PM
#2119
ஜோ,
தவிர்க்க முடியாத காரணங்களினாலும் அவருக்கே சற்று இடைவெளி தேவைப்பட்டதாலும் சுவாமி இங்கே திரியில் எதுவும் பதியவில்லை. விரைவில் நீங்கள் குறிப்பிட்ட கர்ணன் வெளியீட்டிற்கு முன்னரே மீண்டும் வந்து கலக்க இருக்கிறார்.
அது போல் சில பல வேலைகளினால் வாசுதேவன் அவர்களாலும் வர இயலவில்லை. அது போன்றே முக்கியமான ஒரு வேலையில் மூழ்கி இருப்பதால் பாடல் அலசல் மன்னர் பார்த்தசாரதியாலும் வர இயலவில்லை. NT FAnS பிலிம் சொசைட்டியின் ஒரு சில முக்கியமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ராகவேந்தர் சாரும் நானும் சென்று விடுவதால் திரிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. [தங்கப்பதக்கம் ஞாயிறு மாலைக் காட்சிக்கு கூட இவர்கள் யாராலும் வர முடியவில்லை]. என்ன காரணம் என்று தெரியவில்லை, சாரதாவும் கார்த்திக்கும் கூட இந்த ஒரு மாதமாக காணவில்லை.
ஒரே நேரத்தில் இப்படி பலரும் வர முடியாத சூழலினால் திரி சற்று தொய்வு அடைந்துள்ளது. விரைவில் இந்நிலை மாறி மீண்டும் திரி புது பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை.
அன்புடன்
-
19th February 2012, 09:21 PM
#2120
இப்போதுள்ள நிலவரப்படி மெருக்கேற்றப்பட்ட கர்ணன் வெளியீடு மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த படம் சென்னையில் நான்கு திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது. சாந்தி, சத்யம், சங்கம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகும் என்பது தற்போதைய நிலவரம். படம் வெளியாகும் தேதியைப் பொறுத்து சில மாற்றங்கள் இருக்கலாம். மார்ச் 15-ந் தேதி முதல் ஏப்ரல் 14 ந் தேதி வரை உள்ள ஒரு மாத கால இடைவெளியில் வெளியீடு இருக்கலாம்.
அன்புடன்
Bookmarks