-
25th February 2012, 10:47 PM
#11
Senior Member
Devoted Hubber
ஜூனியர் விகடன்......
கோடம்பாக்கம் முதல் ஜப்பான் வரை எதிர்பார்ப்பைக் கிளப்பி யிருக்கும்,
'கோச்சடையான்’ டீமில் பேசினோம்.
நின்றுபோனதாக நீட்டி முழக்கப்படும் 'ராணா’ படத்தின் முதல் பாகம்தான், 'கோச்சடையான்’.
'எந்திரன்’ படத்தைவிட அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தில், அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் வருகிறார் ரஜினி.
தந்தைக்கு ஜோடி ஷோபனா, தனயனுக்கு தீபிகா படுகோன்.
தங்கை கேரக்டரில் நடிக்க சிநேகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இடையில்
என்ன நடந்ததோ, இப்போது 'பொம்மலாட்டம்’ ருக்மணி வருகிறார். ருக்குவுக்கு
ஜோடி... ஆதி.
இறந்துபோன
நடிகரை நடிக்கவைக்கும் விஞ்ஞான முயற்சியை படத்தில் செய்கிறார்கள். ஆம்,
தொழில்நுட்பத்தின் உதவியால், நாகேஷ் நடிக்கிறார். மகன் ரஜினியுடன்,
'காதலிக்க நேரமில்லை’ ஒல்லி நாகேஷூம், அப்பா ரஜினியுடன் 'பஞ்சதந்திரம்’
நாகேஷூம் நடிக்கிறார்கள்.
வில்லன்
ரோலுக்கும் மறைந்த இந்தி நடிகர் அம்ரீஷ்பூரியை இதேபோன்று நடிக்கவைக்க
நினைத்தார்களாம். அந்த வேடத்துக்கு இப்போது ஒப்பந்தம் ஆகி இருப்பது ஜாக்கி
ஷெராஃப்.
சரித்திர
வசனங்களை கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இருக்கிறார். டயலாக் டெலிவரி சரியாக
வருமா என்பதில் ரஜினிக்குக் குழப்பம். அதனால், டப்பிங் ஸ்டுடியோ வந்த
ரஜினி, வரலாற்று வசனங்களை பல்வேறு மாடலில் பேசிக்காட்டி, திருப்தியான
ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறார்.
மார்ச் 19-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்குகிறது
Know something about everything and go deeper in one thing
-
25th February 2012 10:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks