-
25th March 2012, 10:18 PM
#671
Senior Member
Senior Hubber
Muthalvar Mahatma - I liked "Naadu Paarthathunda" very much in kamaraj. so, I am expecting the same kind in MM (...padam release aaguthu audio release aaguma?")
Note: Kamaraj - Audio was not released adn I took the songs from DVD. Hope the same fate might continue for MM too.
-
25th March 2012 10:18 PM
# ADS
Circuit advertisement
-
25th March 2012, 11:35 PM
#672
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
NormalMan
Thanks much NormalMan! Nice pics. Interesting to note he has used children choir. Curiosity level increases...!
Thanks,
Krishnan
-
27th March 2012, 01:30 AM
#673
Senior Member
Senior Hubber

Originally Posted by
K
SriRam Parthasarathy about His connection with Raja
...
Sriram sings ilangkaaththu in a much more relaxed voice now (and probably better overall).
-
27th March 2012, 05:45 PM
#674
Senior Member
Senior Hubber
-
27th March 2012, 06:04 PM
#675
Junior Member
Devoted Hubber
https://twitter.com/#!/menongautham/...687680/photo/1
GVM says "Production of a new sound in music." - a statement which raaja himself might disagree, deny and disapprove
-
27th March 2012, 08:27 PM
#676
Senior Member
Diamond Hubber
http://www.facebook.com/photo.php?fb...&type=1&ref=nf

இன்று (27 மார்ச் 1917), காலம் சென்ற இசை விமர்சகர் திரு. பி.வி. சுப்பிரமணியம் (சுப்புடு) அவர்கள் பிறந்த தினம். இசைஞானியின் பெருமதிப்பைப் பெற்ற, இசைஞானியின் சிம்பொனி இசையை கேட்கும் பேறு பெற்ற ஜாம்பவான். இசைஞானியின் இசையை அதிகமாய் விமர்சித்தவர். அதே நேரம் அவர் இசையை அதிகமாய் ரசித்தவர்; பாராட்டியவர்.
தன் இறுதி நாட்களில், 'ராஜாவின் சிம்பொனி இன்னும் கேட்க முடியவில்லை என்பதுதான் என் ஒரே கவலை' என்று சுப்புடு ஒரு பத்திரிகையில் கூறிய செய்தியைப் படித்த இசைஞானி, அடுத்த வாரமே தன் சிம்பொனி இசைப் பேழையை டெல்லியில் வசித்து வந்த சுப்புடு அவர்களுக்கு அனுப்பி அவர் ஆசையை பூர்த்தி செய்தார்.
90களின் துவக்கத்தில், பத்திரிகை ஒன்றில் இசைஞானியைப் பற்றி வியந்து அவர் எழுதியிருந்த கட்டுரையின் சில துளிகள்:
"ராஜா என்கிற மேதை படிப்படியாய் முன்னேறியவர்; மேற்கத்திய இசையில் அவர் ராஜா; ஒரு ஸ்வரம் ஒலித்தவுடனேயே ராஜாவுக்கு அதன் தாளப்பரிமாணங்கள் அவர் மூளையில் உதித்துவிடும். அவருக்கு கிராமிய இசை கைவந்த கலை. ஏனெனில் அவர் அந்த மண்ணில் புரண்டு இருக்கிறார்.
ஆர்.டி.பர்மனும் அந்த வகைதான். அசாத்திய கிராமிய இசை. அபீனுக்குச் (Opium) சமானம்.
“இசை லாகிரி” என்பார்களே.. அந்தவகை..! உதாரணமாக 'செந்தூரப் பூவே'. அது ஒரு வரிதான். ஊரையே உலுக்கி விட்டது. அந்த இசையின் வடிவில் வக்கிரம் இல்லை. சாமர்த்தியம் இல்லை. ஆனால் போதை இருந்தது.
ராஜாவின் இசை முயற்சி கூட்டு வகை (Cooperative Effort). மேற்கத்திய இசை அவருக்கு அத்துப்படி. ஆனால் இலக்கணக் கர்நாடக இசை என்று வரும்போது அவர் மூளையில் சென்று ஒரு நரசிம்மன் இயங்கிக்கொண்டிருக்கிறார்.
அவருடைய 'How to Name It' என்ற ஒலிநாடாவைக் கேட்டேன். Superb..!! ராஜா ஒரு வடிவம் உருவாக்கிவிட்டால் அதற்குப் பொருத்தமான பின்னணியை மள மளவென்று எழுதித் தள்ளிவிடுவார். நான் கண்டவரை ராஜாவுக்குத் துணிச்சல் உண்டு. ஓர் இசை வடிவம் அள்ளிக் கொண்டு போகும் என்று அவருக்கு உள் உணர்வு உண்டு.
அது அவருக்கு இறைவனின் வெகுமதி. அவர் ஆஸ்திகர்; தியானப் பிரியர்; தியானம் குண்டலி எழுச்சிக்கு ஒரு தூண்டுகோல்.
எனக்குத் தெரிந்த வரை ராஜாவின் படைப்புகளில் மேதா விலாசம் வெளிப்பட்டதில்லை. அவருக்கு அவர் படைப்புகள் காட்சிகளுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டுமென்பதுதான் குறிக்கோள்.
ராஜாவுக்கு முதுகில் மச்சம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவருக்கு தியானத்தினால் தீர்க்கதரிசனம் அமைந்திருக்கிறது. புதிய, சாஸ்திரிய, கர்நாடக இசைப் படைப்புகளில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவர் அங்கீகாரத்திற்கு அலைய வேண்டிய தேவை இல்லை.
மும்மூர்த்திகள், யாரிடமாவது அங்கீகாரம் எதிர்பார்த்தா எழுதினார்கள்?
-
27th March 2012, 08:48 PM
#677
Junior Member
Veteran Hubber
இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?
என்று நிறைய நண்பர்கள் கேட்க நாங்கள் ஆராயந்ததில் எங்களுக்கு கிடைத்த சில தகவல் உங்களுக்காக. ஈகோ பிரச்சனையா? கொஞ்சம் அலசித்தான் பார்க்கலாமே!
இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு என பிஸியாக சென்று கொண்டிருந்த இந்த பயனத்தில் விரிசல் விழத்தொடங்கியது;
வைரமுத்து பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் அதிகமாக எழுத்தொடங்கிய போதுதான். அதுவரை ஒலிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வந்து தேவைப்பட்ட நேரத்தில் பாடல்வரிகளின் திருத்தத்திற்கு பெரும் உதவியாக இருந்த வைரமுத்துவால் சரியாக ஒலிப்பதிவிற்கு வரமுடியாமல் போனதால் உரசல் உண்டாகி அது நாளடைவில் ஒருவரை ஒருவர் சமயம் கிடைக்கும் போது தாக்கிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாகியது.
அடுத்ததாக பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்றச்சொல்வது; அந்த விரிசலை மேலும் பெரியதாக்கியது.
உதாரணமாக “சிந்து பைரவியில்” வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றிவிட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்து போட்ட பல்லவிதான் “பாடறியேன் படிப்பறியேன்” என்ற பல்லவி. இந்த கிராமிய பாடலின் பல்லவியை “புதிய வார்ப்புகள்” படத்திலும் நீங்கள் கேட்கலாம்.
விரிசல் பெரிசாக பெரிசாக ஒருவர் பலவீனத்தை இன்னொருவர் இனம் கண்டு தாக்க அது மனஸ்தாபமாய் உருவெடுத்தது, உதாரணமாக வைரமுத்துவிற்கு எப்போதுமே ஒரு படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் (படத்தின் கேஸ்ட்/ரெக்கார்டில் போட்டோ, டைட்டில் கார்டு, போஸ்டர் விளம்பரத்தில் தனித்து தெரிவது) என்பது விருப்பமாய் இருக்கும். இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தாய்க்கொரு தாலாட்டு படத்திற்கு முழுப்பாடலையும் எழுத வைரமுத்து ஒப்பந்தமாகிறார் பாடல்கள் எல்லாம் ஒலிப்பதிவாகி படமாக்கப்பட்ட பின்னர்; ரீ-ரெக்கார்டிங்கின் போது மேலும் ஒரு பாடலை சேர்த்து அதை கவிஞர் வாலியை வைத்து எழுதச்சொல்லி; பாடல்கள் – வைரமுத்து என்ற டைட்டில் கார்டை பாடல்கள் – வாலி,வைரமுத்து (ஒரு பாட்டு எழுதினாலும் வாலி சீனியர் ஆச்சே வாலி பெயர்தானே முதலில் வரவேண்டும்) என்று மாற்றுகிறார் இளையராஜா. இளையராஜா இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம்? இந்த படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது “இளமைக்காலம் – என்ற புதியபறவை” பாடல் ரீமிக்ஸின் வரிகளில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று வரிகளில் வைரமுத்து வார்த்தை ஜாலம் புரிந்து இளையராஜாவை கோபப்படுத்தியதே காரணம்.
இதே போல்தான் சிந்துபைரவி டைட்டில் கார்டிலும் பிரச்சனை; “தென்றலது கண்டதுண்டு திங்களது கண்டதில்லை, மனம்தான் பார்வை” என்ற வாலி எழுதிய இரண்டு வரிகளுக்காக, வாலியின் பெயரை தியாகராஜசுவாமிகள், பாரதியார், ஆகியோருடன் சேர்த்து ஒரு டைட்டில் கார்டுடாகவும், பாடல்கள் – வைரமுத்து என்று வைரமுத்திற்கு தனி டைட்டில் கார்டு போட்டு பிரச்சனையை பாலச்சந்தர் சமாளித்திருப்பார்.
கடைசியாக இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாள் “இசை பாடும் தென்றல்” படப்பாடல் கம்போஸிங்கின் போது மோதலாக வெடித்தது. “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது” பாடலுக்கு வரியை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, “என்னய்யா பாட்டு எழுதச்சொன்னா, உரைநடை எழுதியிருக்க? இப்ப பாரு நான் எழுதுறேன்” என்று தான் எழுதிய பாடலை இளையராஜா வைரமுத்துவிடம் காண்பிக்க, வைரமுத்து “prose மாதிரி இருக்கு” என்று கூறிவிட்டு கோபமாக அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். அதன் பின்னர் எத்தனையோ போர் எவ்வளோவிதமாக சமாதானம் செய்தும் பலனேதும் இல்லை.
இப்போது கூறுங்கள் இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?
Possessiveness.
-
27th March 2012, 09:01 PM
#678
Senior Member
Platinum Hubber
Nice post Rockstar 
'kiLikku Rekka moLachchiduththu' kadhai dhAn
-
27th March 2012, 09:02 PM
#679
Junior Member
Veteran Hubber
app...
-
27th March 2012, 09:07 PM
#680
Junior Member
Veteran Hubber
இளையராஜா முதன்முதலாக சினிமாவிற்கு பணியாற்றிய படம், “கோவாவில் சி.ஐ.டி 999” என்ற ராஜ்குமார் நடித்த கன்னடப்படமாகும்.
பாடல் கம்போஸிங்கில் கிடார் வாசிப்பவராகவும், ஸ்வரங்களை எழுதுபவராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார்.
1969 ஆண்டு தொடங்கி சுமார் 150 படங்களுக்கு ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்
Bookmarks