மின்னஞ்சல் அனுப்புவிட்டேன். பதிலளிக்கிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம்!
-------------------------------------------------------------------
திரு ஜெமோ,

தூக்க நேர்ச்சை கட்டுரையில் கொடுக்கப்பட்ட காணொளியை கண்டேன். பச்சிளம் குழந்தைகள் கதற கதற உயரே கொண்டு செல்வது மூடத்தனத்தின் உச்சம்! "தன்னை வருத்திக்கொண்டு கடவுளின் கோபத்தைக் குறைக்கும் சடங்குகள் இல்லாத மதங்களே உலகில் இல்லை." என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த மதம் என்றாலும் மூடத்தனம் மூடத்தனம்தானே! ஒன்றுமே அறியாத சிசுக்களை வாட்டுவது அரக்கத்தனம் அல்லவா! சீற்றம் இதுபோன்றவைகளை காணும்போது எழாதா? ஒரு புறத்தில் அறம், ஆன்மீகத்திற்கு பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் கை, இதையெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்யாமல் போறப்போக்கில் பதிவு செய்துவிட்டு நகர்வதேன்?

வாசகன்
வெங்கிராம்.
-------------------------------------------------------------------