Religion is the opiate fed to the proletariat to deaden their sensibilities towards subjugation - Marx அன்றே சொன்னார்
antidepressants are a means of modifying an individual's internal state in such a way as to enable him to tolerate social conditions that he would otherwise find intolerable - Unabomber நேற்றே சொன்னார்

இந்த சடங்கை அறிவுபூர்வமா விளக்கும் முயற்சிகள்லாம் எனக்கு கொஞ்சம் clumsyஆ தோணும். என்னமோ அறிவுபூர்வமா எதையாவது சொல்லி அதுமூலமா தான் அதுக்கு ஒரு legitimacy கிடைக்கவைக்கணும்ன்றது மாதிரி. அதெல்லாம் எதுக்கு?

கற்றது தமிழ்ல ஒரு வசனம் வரும்: பலநூறு வருஷம் முன்னாடி ஒரு சாமியார் ஒரு மரத்துக்கு கீழ உக்கார்ந்து தவம் பண்ணார்னு அந்த மரத்தை எல்லாரும் தொட்டு கும்பிடுவாங்க. அப்படி செய்யுறது மூலமா அந்த சாமியாரையே தொடுறதா நினைக்கிறாங்க போல... அப்படின்னு.

சாதாரண (தேடிச் சோறு நிதம் தின்று) வாழ்க்கைல கொஞ்சம் fantasy தேவைப்படுது.

Harness tightA வைக்கணும்னு சொல்லுங்க. ஒத்துக்கறேன்.
Shirdi, Haj எல்லாம் stampede ஆகாம இருக்கறதுக்கு வழிவகை செய்யணும்னு சொல்லுங்க ஒத்துக்குறேன்.
அதுக்காக, அறவுணர்ச்சி உள்ளவன் இதையெல்லாம் வன்மையா கண்டிச்சே ஆகணும் 'ன்ற மாதிரி எல்லாம் ஏன் எதிர்பார்க்குறீங்க.