-
24th April 2012, 12:27 PM
#11
Senior Member
Senior Hubber
2011 ஒன்னுமே இல்லை: இந்த வருஷம் 6 போதுமா ஏ ஆர் ரஹ்மான்!
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் போன வருடம் என்ன காரணத்தினாலோ எந்த தமிழ் படத்திற்கும் இசை அமைக்கவில்லை. ஆனால் அந்தக் குறையை இந்த வருடம் போக்குவது போல் கை நிறைய தமிழ் படங்களை வைத்திருக்கிறார் இசைப்புயல். இதில் முதலில் வரவிருக்கும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படப் பாடல்கள்தான்.செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு இந்தப் படம் வருகிறது.
இன்னொரு முக்கியமான படம் மணிரத்னம் இயக்கும் கடல். ரொம்ப விசேஷமாக, படப்பிடிப்பு நடக்கும் கடல்புரத்துக்கே போய் பாடல்களை உருவாக்கியுள்ளார் இசைப் புயல்.
இவை தவிர, விஜய் நடிக்கும் யோஹன், தனுஷ் நடிக்கும் மரியான், கோச்சடையானுக்குப் பின் ரஜினி தொடங்கவிருக்கும் புதிய படம் என ஆறு படங்கள். கவுதம் மேனனின் சீரியல் ஒன்றிற்கும் இசை தர அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், “நான் தமிழில் கடந்த ஆண்டு பணியாற்றாமல் இருந்ததற்கு எந்த காரணமும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு பாடல்கள் தந்துவிடுவேன்,” என்கிறார் தனக்கே உரிய புன்னகையுடன் ரஹ்மான்!
http://www.tamilcnn.com/archives/7922.html
Super line up... ella project um promising aa irukkum nu ninaikkiren...
I'M WAITING... 
-
24th April 2012 12:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks