அனைவருக்கும் வணக்கம்!
சமீபத்திய பதிவுகள் அனைத்திற்கும் என் நன்றி!
இதோ என்னால் முடிந்த சிறு பதிவு.
இந்த ஓரங்க நாடகத்திற்கு பின்னால்....
இந்த ஓரங்க நாடகத்திற்காக கலைஞர் அவர்கள், தான் ஏற்கனவே நாடகத்திற்காக எழுதி அதை திரு.SSR அவர்கள் பேசியதை நடிகர் திலகம் அவர்களுக்காக தந்திருக்கிறார். இதை அறிந்த நடிகர் திலகம் அவர்களோ அது எச்சில் பட்டுவிட்டது அது எனக்கு வேண்டாம் என்று கலைஞரிடம் கோபித்திருக்கிறார். இதை கேட்ட கலைஞரோ கவலைப் படாதே கணேசா! இதோ உனக்காக உடனே வேறு வசனம் எழுதி தருகிறேன் என்று கூறி ஒரு மணி நேரத்தில் எழுதித் தந்ததை நடிகர் திலகம் அவர்கள் அரை மணி நேரத்தில் மனப்பாடம் செய்து ஒரே டேக்கில் பேசி நடித்து தந்திருக்கிறார். இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால் ஒரே டேக்கில் பேசி நடிப்பது என்று முடிவாகியப் பிறகு, அரங்கம் மொத்தமும் அமைதியாக இருக்க நடிகர் திலகம் அவர்கள் ஒரே டேக்கில் மொத்த வசனத்தையும் பேசி நடித்து முடிக்க அனைவருக்கும் ஒரே சந்தோஷம். ஒருவருக்கொருவர் தங்கள் சந்தோஷத்தை பரிமாரிக் கொண்டிருந்தபோது கேமரா மேனும் அவருடைய உதவியாளரும் மட்டும் ஏதோ தங்களுக்குள் முனுமுனுத்து கொண்டிருந்திருக்கிறார்கள். இதை கவணித்த நடிகர் திலகம் அவர்கள் கேமரா மேனை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் கேமராவில் ரீல் லோடு செய்யவில்லை என்பது தெரிய வந்தது. உடனே நடிகர் திலகம் அவர்கள் அதை சொல்ல வேண்டியது தானய்யா! என்று கூறி உடனே மறுபடியும் ஒரே டேக்கில் இரண்டாவது முறை பேசி நடித்து தந்திருக்கிறார்.
THAT IS OUR BELOVED NADIGAR THILAGAM
நட்புடன்!




Bookmarks