-
11th May 2012, 08:33 AM
#3301
Junior Member
Seasoned Hubber
Is Patikada Pattanama re releasing like Karnan? If so When ? Can u provide all the details sir?
-
11th May 2012 08:33 AM
# ADS
Circuit advertisement
-
11th May 2012, 09:32 AM
#3302
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
ragulram11
Is Patikada Pattanama re releasing like Karnan? If so When ? Can u provide all the details sir?
பட்டிக்காடா பட்டணமா திரைக்காவியம் மே 6, 1972 அன்று வெளியானது. அதனை நினைவூட்டும் வகையில் விளம்பர நிழற்படம் விரைவில் எதிர்பாருங்கள் என்பதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தாங்கள் விரும்புவது போல் நடக்காது என சொல்ல முடியாது. அதற்கான காலம் நேரம் சூழ்நிலை எல்லாம் வரவேண்டும்.
-
11th May 2012, 12:17 PM
#3303
Senior Member
Veteran Hubber
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
கடந்த நான்கு மாதங்களாக ஒரு ரிமோட் ஏரியாவில் பணிக்கு அனுப்பப்பட்டதால் திரியில் தொடர்ந்து பங்கேற்காத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே மீண்டு வந்தேன். அன்றைக்கே திரிக்கு வந்து விட்டேன். விட்டுப்போன பக்கங்களனைத்தையும் படித்த பின்பே பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்றுதான் படித்து முடித்தேன்.
இடையிடையே திரியில் பெரிய பெரிய புயல்கள் அடித்து ஓய்ந்தது போல தெரிகிறது. அதன் காரணமாக திரியின் முக்கிய பங்கேற்பாளர்களான அன்புச்சகோதரர் வாசுதேவன் போன்றவர்கள் ஒதுங்கியிருப்பது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
விடைபெறும் வேளையிலும் கூட என்னை மறவாமல் திரிக்கு திரும்ப அழைத்து விட்டுச்சென்றிருக்கும் அந்த நல்ல இதயம் திரும்பவும் திரிக்கு திரும்பி தனது அதிரடி பதிவுகளால் திக்குமுக்காடச்செய்ய வேண்டும்.
இது எனது அன்பான மற்றும் உரிமையான வேண்டுகோள். (பணியின் காரணமாக ஒதுப்க்கியிருப்பின், அவ்வப்போது வந்து சிறு சிறு பதிவௌகளையாவது தந்து எங்களுக்கு தெம்பூட்ட வேண்டும்). மின்னஞ்சல் மூலம் பம்மலார அவர்கள் வழியாக இடும் பதிவுகளை இங்கே நேரடியாக இட்டு பம்மலார் அவர்களின் சிரமத்தைக் குறைக்க வேண்டும்.
நமது ஒரே நோக்கம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவதே. அதனை எந்த வித மனமாச்சரியங்களையும் வென்று தொடருவோம்.
-
11th May 2012, 12:36 PM
#3304
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
ஆவணக்களஞ்சியமான தங்களது ஆவணப்பதிவுகள் எப்போதும்போல எங்கள் மனதை நிறைக்கின்றன. தங்களது பணிக்கு ஈடு இணையே கிடையாது. இதனை இதற்கு முன ஆயிரம் தடவை சொல்லியிருப்பினும், ஆயிரத்தோராவது தடவையாக இருக்கட்டும்.
மற்ற அனைவரும் நடிகர்திலகத்தின் அபார நடிப்பாற்றலை ஆராய்ந்து அவர் 'மிகச்சிறந்த திறமையாளர்' என்று (எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயத்தையே) விவாதித்துக் கொண்டிருக்கும்போது.....
நீங்கள் மட்டுமே அவர் திறமையாளர் மட்டுமல்ல "மிகப்பெரிய சாதனையாளர்" என்று (பெரும்பாலோர் பாடுபட்டு மறைக்க முயலும் விஷயத்தை) தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து அளிக்கும், யாராலும் மறுக்க முடியாத பொன்னுக்கும் மேலான பொக்கிஷ ஆதாரங்களால் ஆணித்த்ரமாக உலகுக்கு அளித்து மிகச்சிறந்த தொண்டாற்றி வருகிறீர்கள். (உண்மையை சொன்னால், நான் தீவிர ரசிகனாயிருந்தும் 'வியட்நாம் வீடு' 100-வது நாள் விளம்பரங்களையெல்லாம் இப்போதுதான் பார்க்கிறேன்).
இடையில் தாங்களும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓய்வில் அல்லது வேறு பணியில் இருந்ததால், பொங்கல் மற்றும் குடியரசு தின சாதனை வெளியீடுகளைக் கண்ணுறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது பருவம் தப்பியிருப்பினும் 'ராஜா' போன்ற சாதனைப்படங்களின் 100-வது நாள் விளம்பரங்களை மட்டுமாவது வெளியிட்டு எங்களது ஆர்வத்தை பூர்த்தி செய்யலாமே.
செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
-
11th May 2012, 12:45 PM
#3305
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar
நமது மய்யம் இணையதளத்தில் 2000 பதிவுகளை மிக வெற்றிகரமாக இடுகை செய்து பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது ராகவேந்திரன் சாருக்கு பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய பசுமையான நன்றிகள்..!
இத்திருத்தொண்டு மென்மேலும் பொலிவுடன் தொடர அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள் !
-
11th May 2012, 01:01 PM
#3306
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
ஏப்ரல் மாதத்தை பொம்மை கல்யாணத்துடன் மங்களகரமாக நிறைவு செய்து, மே மாதத்தை நல்லதொரு குடும்பத்துடன் துவக்கி சளைக்காமல் ஆவணப் பதிவுகளை அள்ளி வழங்கி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.
-
11th May 2012, 01:03 PM
#3307
Senior Member
Seasoned Hubber
திரு.ராகவேந்திரன் சார், பொம்மை கல்யாணம் வீடியோ பதிவுகள் அருமை.
-
11th May 2012, 01:05 PM
#3308
Senior Member
Seasoned Hubber
திரு.கார்த்திக் அவர்களே, நான்கு மாதங்களுக்குப் பிறகு திரிக்கு வந்திருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன்.
-
11th May 2012, 01:07 PM
#3309
Senior Member
Seasoned Hubber
பணியிருப்பினும் பம்மலார் மூலம் பதிவுகளை அளிக்கும் வாசுதேவன் அவர்களுக்கும், சுகமான சுமையாக அதனைப் பதிவேற்றும் பம்மலார் அவர்களுக்கும் நன்றி.
-
11th May 2012, 02:35 PM
#3310
Senior Member
Seasoned Hubber
பாராட்டுக்களுக்கு நன்றி, திரு சந்திரசேகர் அவர்களே
Bookmarks