-
12th May 2012, 05:43 AM
#3321
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பட்டிக்காடா பட்டணமா
[6.5.1972 - 6.5.2012] : 41வது உதயதினம்
சாதனைப் பொன்னேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 1.5.1972

'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 6.5.1972

முதல் வெளியீட்டு விளம்பரம்

முதல் வெளியீட்டு விளம்பரம்

50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 24.6.1972

[ஆறு வாரங்களின் வசூல் அளிக்கப்பட்டுள்ள அத்தனை ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது]
100வது நாள் விளம்பரம் : தினமணி : 13.8.1972

வசூல் சாதனை விளம்பரம் : தினமணி : 15.10.1972

வெள்ளிவிழா விளம்பரம் : தினமணி : 27.10.1972

குறிப்பு:
அ. வெள்ளி விழா கண்ட திரையரங்கம்:
மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள்
ஆ. 100 நாட்களுக்கு மேல் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 146 நாட்கள் [பின் 'சித்ரா'வுக்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு வெள்ளிவிழா]
2. சென்னை - கிரௌன் - 111 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 104 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள் [நேரடியாக வெள்ளிவிழா]
5. சேலம் - ஜெயா - 146 நாட்கள் [பின் 'நடராஜா'வுக்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
6. திருச்சி - ராக்ஸி - 139 நாட்கள் [பின் 'பாலாஜி'க்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
7. நெல்லை - பார்வதி - 111 நாட்கள்
8. கொழும்பு (இலங்கை) - சென்ட்ரல் - 115 நாட்கள்
9. யாழ்ப்பாணம் (இலங்கை) - ராணி- 100 நாட்கள்
10. கோவை - ராஜா - 90 நாட்கள் [பின் 'வள்ளி'க்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]
11. வேலூர் - அப்ஸரா - 69 நாட்கள் [பின் 'கிரௌன்' அரங்குக்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]
இ. சென்னை 'சாந்தி' மற்றும் சேலம் 'ஜெயா' அரங்குகளில் மிகமிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இக்காவியம், "வசந்த மாளிகை"க்காக வேறு அரங்குகளுக்கு மாற்றப்பட்டது.
ஈ. தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே, முதல் வெளியீட்டில், முழுவதும் ஓடி முடிய, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டிய ஒரே கறுப்பு-வெள்ளைக் காவியம்.
உ. இமாலய வெற்றிக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா", 1972-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் பெற்ற காவியம். 1972-ல் பாக்ஸ்-ஆபீஸில் வசூல் சாதனையில் முதலாவது இடத்தைப் பிடித்த திரைக்காவியம் "வசந்த மாளிகை".
ஊ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது 1972-ல் தான். அந்த இரு காவியங்கள் : "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 12th May 2012 at 05:51 AM.
pammalar
-
12th May 2012 05:43 AM
# ADS
Circuit advertisement
-
12th May 2012, 06:54 AM
#3322
Senior Member
Seasoned Hubber
ஊ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது 1972-ல் தான். அந்த இரு காவியங்கள் : "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.
மனசாட்சி உள்ளவர்கள் மனமுவந்து பாராட்டும் சாதனை....
-
12th May 2012, 09:30 AM
#3323
Junior Member
Junior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் சிவாஜி தாசன்
ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகக் காட்சி யின் காணொளிக்கு உளமார்ந்த நன்றி. இது போல் மேலும் பலவற்றைத் தாருங்கள்.
அன்புடன்
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
தங்களின் பெரும்பனிக்கு முன்னால் அடியேனின் சிறும்பனியையும் மெச்சியமைக்கு என் உளமார்ந்த நன்றி! மேலும் மெருகூட்டப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் நமது இனைய தளத்திற்கும், தாங்கள் 2000 பதிவுகளை கடந்தமைக்கும் என் வாழ்த்துக்கள்!
நட்புடன்!
-
12th May 2012, 09:36 AM
#3324
Junior Member
Junior Hubber
திரு. பம்மலார் அவர்களுக்கு,
பட்டிக்காடா பட்டணமா பதிவுகள் அருமை. அதிலும் எந்தெந்த திரையரங்குகளில் எவ்வளவு வசூல் என்ற விவரம் வரை அசைக்க முடியாத ஆதாரமாக பதிவிட்டமைக்கு நன்றி!
நட்புடன்
-
12th May 2012, 10:43 AM
#3325
Senior Member
Seasoned Hubber
-
12th May 2012, 10:52 AM
#3326
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
பட்டிக்காடா பட்டணமா - முதல் வெளியீட்டு விளம்பரத்திலிருந்து, 25-வது வாரம் வெற்றி விழா வரையிலான விளம்பரங்களையும், சாதனைகளையும் தொகுத்தளித்திருப்பது அசத்தல். நன்றி.
-
12th May 2012, 11:57 AM
#3327
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
என்னை மீண்டும் வரவேற்றமைக்கு நன்றி,
என் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி,
'பட்டிக்காடா பட்டணமா' சாதனைக்காவியத்தின் ஆவணச்செப்பேடுகளை (ஸாரி) பொன்னேடுகளை அழகுற அள்ளி அளித்தமைக்கு மிக மிக மிக மிக நன்றி.
ஆவணங்கள் அனைத்தும் நம்மை பொற்காலமான 1972-க்கு அழைத்துச்செல்கின்றன.
ஆவணங்கள் ஒவ்வொன்றும், தற்கால வலைப்பூ பிரகஸ்பதிகள் இப்படத்தின் ஓட்டத்தைப்பற்றி கன்னா பின்னாவென்று தங்கள் மனம் போனபடி கிறுக்குவதற்கு முன் அவர்கள் அவர்கள் வாய்க்குப்போடப்பட்ட திண்டுக்கல் பூட்டுக்கள்.
இதுக்குத்தான் எங்கள் பம்மலார் வேணும்ங்கிறது.
-
12th May 2012, 12:11 PM
#3328
Junior Member
Junior Hubber
-
12th May 2012, 12:28 PM
#3329
Junior Member
Junior Hubber
Pattikada Pattanama
Pammalarin Pathivugal Parijatha Pookkal
-
12th May 2012, 12:40 PM
#3330
Senior Member
Veteran Hubber
என்னை அன்புடன் வரவேற்ற செயல்வீரர் சந்திரசேகர் சார் அவர்களுக்கும், புதுப்புயல் கோபால் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.
2000 பதிவுகளைக்கடந்து வீறுநடை போடும் ராகவேந்தர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Bookmarks