Page 125 of 401 FirstFirst ... 2575115123124125126127135175225 ... LastLast
Results 1,241 to 1,250 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #1241
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Imagine urself how excited Raja has become, if he has went to the extent of he himself playing(& recording) some guitar and few instrumental pieces! We are for an class and art treat for sure! Me putting karcheef for atleast 3 CD's!

    * Pinch of Salt!
    *
    * Be Careful! (Ennaichchonnen)
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1242
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    http://www.facebook.com/notes/rajiv-.../3513274145048

    ♫ Celebration of 36 Years of Musical Excellence !!! ♫

    Goosebumbs!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #1243
    Senior Member Veteran Hubber V_S's Avatar
    Join Date
    Nov 2010
    Posts
    1,058
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    2 songs From the High voltage "ExperiMedia" Album!

    Adi RaniMangamma -> http://www.thiraipaadal.com/tpplayer...4'&lang=en

    Vaa VeLiye by SPB -> http://www.thiraipaadal.com/tpplayer...7'&lang=en

    Kindly help me identify other rare songs...
    skv,
    Here is the partial list, I could not find songs #3 and #7 (mostly music and too short to find).

    1. Vikram - Vikram
    2. Adi Rani Mangamma - Poruthathu POthum
    4. Baby You Are My Baby - Oruvar Vaazhum Aalayam (Singer:Francis Lazarus)
    5. Pala Raathiri pochu - Iravu Pookkal
    6. Chittukkuruvi - Chinna veedu
    8. Paattenge - Poovizhi VaasalilE
    9. Theme - Punnagai Mannan
    10. Raajathi Raaja - Agni Natchathiram
    11. Pavazha Malligai - Mandhira Punnagai
    12. Ninnukori Varnam - Agni Natchathiram
    13. Theme - Punnagai Mannan
    14. I Want to Tell You Something - Anand
    15. Valayosai - Sathya
    16. Vaa VeLiyE - Paadu NilaavE

    Waiting to order my CD (sold out!)

  5. #1244
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Wow, thanks V_Sji!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  6. #1245
    Member Junior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    38
    Post Thanks / Like
    Tracklist:
    1. Vikram – Kamal Hassan
    2. Adi Rani Mangama – Mano
    3. Instrumental Music
    4. Baby – Anuradha
    5. Pala Rathiri – Vani Jairam, M. Vasudevan & G. Amaran
    6. Chittu Kuruvi – S.P. Balasubrahmaniam & S.Janaki
    7. Disco King – Yesudas & Vani Jairam
    8. Pattu Engey – Malaysia Vasudevan & S. P. Sailaja
    9. One Two – Francis Lazarus
    10. Raja Rajadhi Raja – Ilaiyaraaja
    11. Pavala Malligai – Malaysia Vasudevan & Chithra
    12. Ninnukkori – Chitra
    13. Love Theme On Computer
    14. I Want To Tell You Something – S.P. Balasubrahmaniam
    15. Valaiyosai – S.P. Balasubrahmanyam & Lata Mangeshkar
    16. Vaa Veliye – S.P. Balasubrahmanyam & Chitra

    First time hearing the 7th song Disco King from Isai Padum Thendral.
    http://soundcloud.com/cargorecords/d...as-vani-jairam

    Sivakumar & Ambika on screen

  7. #1246
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Looks like 3rd one is very tough to find!!! come on expert raja-fans!!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  8. #1247
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    1,466
    Post Thanks / Like
    Finally, Sony may bag the audio rights of NEPV !

    http://timesofindia.indiatimes.com/e...w/13131218.cms

  9. #1248
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    36 years before, same day

    இன்று (14.5.1976) – அன்னக்கிளி வெளியான நாள்..

    ’அன்னக்கிளி’யின் இசையமைப்பாளராக இசைஞானி தேர்வு செய்யப்பட்டபின், அவரைப் படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார் இசைஞானி.

    இது பற்றி இசைஞானி கூறியது:-

    “பஞ்சு சாரின் கதை-வசனத்தில் ஹிட் ஆகியிருந்த ‘உறவு சொல்ல ஒருவன்”, “மயங்குகிறாள் ஒரு மாது” என்ற 2 படங்களுக்கு விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார். அவரிடம் வேலை செய்த குருபாதம் என்ற இன்சார்ஜ், அவருக்கு வரவேண்டிய படத்தை நான் தட்டிப் பறித்து விட்டேன் என்ற தவறான எண்ணத்தோடு தயாரிப்பாளர் சுப்புவிடம் போனார். ‘பஞ்சு சார், விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆகும் கூட்டணி சார். அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப்போயிருக்கு. அதை ஏன் மாத்துறீங்க?” என்றார். இதில் சுப்பு குழம்பிவிட்டார். கூடவே பஞ்சு சாரின் இன்னொரு தம்பி லட்சுமணன் வேறு. அவருக்கும் கேள்விக்குறிகள். “சார்! இந்த ராஜா, ஜி.கே.வி.கிட்டே கிட்டார் வாசிக்க்கிறாவர் சார். ஏற்கெனவே Unlucky Music Director என்று பெயர் எடுத்திருக்கிறார். அவர் மியூஸிக் பண்ணி பூஜை போட்ட படம் எல்லாம் நின்றுவிடும்” என்று பலவிதமாக சொல்லி பயத்தை ஏற்படுத்திவிட்டார். சுப்புவும் பயந்துவிட்டார்.

    பஞ்சு சாரிடம் நேராக சென்ற சுப்புவும், லட்சுமணனும், ‘எதுக்கு நமக்கு ரிஸ்க்? விஸ்வநாதன் சார் பிரமாதமாக மியூஸிக் போடுகிறார். நம்ம படத்திற்கு ஒரு மெரிட் இருக்கும். டிஸ்ட்ரிப்யூட்டரும் படத்தை வாங்குறதுக்கு ஒரு பேரும் இருக்க வேண்டாமா?’ என்று சொன்னார்கள். ‘அதைப் பற்றி ஒன்றும் பேசவேண்டாம், முடிந்து போன விஷயம். ராஜாதான் மியூஸிக்!” என்று பஞ்சு சார் ஒரேயடியாக அடித்துச் சொல்லிவிட்டார். இதைக்கேட்டு அவர்களது தம்பிகளும் பேசாமல் இருந்தார்கள். பூஜை தேதியும் குறிக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசனிடம் பாட்டெழுத கேட்ட நேரத்தில் அவர் சிங்கப்பூர் போவதாகச் சொல்லிவிட்டார். ‘எப்போது திரும்பி வருவார்?’ என்று கேட்டதற்கு, ‘படத்தின் பூஜை முடிந்த பிறகுதான் திரும்பிவருவார்’ என்று பதில் வந்தது. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதே நேரம் ‘பூஜையை நிறுத்த வேண்டாம். நானே பாட்டு எழுதிவிடுகிறேன்’ என்று பஞ்சு சார் கூறிவிட்டார். அதன்படி பாடலை எழுதித்தந்தார்.

    ரிகர்சல் நாள் வந்தது. கவிஞர் வீட்டின் அருகில் இருக்கும் பாலாஜி கல்யாண மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லா ஆர்கெஸ்ட்ராவும் வந்தது. காலையில் ‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’ பாடலுக்கு ரிகர்சல் செய்தோம். அவர்களுக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. எனக்கும் உற்சாகமாக இருந்தது. இரண்டாவதாக, ‘மச்சானைப் பார்த்தீங்களா’ பாடலை ரிகர்சல் செய்தோம். மதிய உணவுக்குப் பின் மாலை 4 மணிக்கு பாடகி எஸ். ஜானகி வந்தார். பெரும்பாலும், பாடகர்கள் பெரிய இசையமைப்பாளருக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் ஜானகி, ஜி.கே.வி. ரெக்கார்டிங்கில் என்னிடம் பழகி இருக்கிறார். தவறாகப் பாடினால் ஜி.கே.வி. என்னைவிட்டு சரியாக சொல்லிக்கொடுக்கச் சொல்லும்போது, நான் பாடி சரிசெய்வதை தெரிந்தவர். ரிகர்சலுக்கு வந்து ஒத்துழைத்தார். பாடல் சொல்லிக்கொடுக்கும்போதே, அதனுடைய ஜீவனைப் புரிந்து கொண்டார். இது மிகவும் புதிது என்று தெரிந்து மிகவும் கவனத்தோடு கற்றுக்கொண்டார்.

    சுப்புவுக்கும், லட்சுமணனனுக்கும், என் மீது இருந்த சந்தேகம் தீர்ந்துபோனது. ‘நீ நன்றாகப் பாடுவாய் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அது இவ்வளவு புதுசாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று இரட்டிப்பு சந்தோஷத்தோடு பஞ்சுசார் சொன்னார். அடுத்த நாள் பூஜை. நானும், பாஸ்கர், அமர் ஆகியோரும் 6 மணிக்கு திருவேற்காடு போய்விட்டு, ஸ்டுடியோவுக்கு 7 மணிக்கு முன் வந்துவிட்டோம். பூஜை முடிந்தது, ரிகர்சல் தொடங்கியது. அர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, ‘Ready .. One .. Two .. Three” என்று நான் சொன்ன அந்த நொடியில் ‘மின்சாரம் கட்’ ஆகி விளக்குகள் அணைந்துவிட்டன. எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. டோலக் வாசிக்கும் பாபுராஜ், ‘ம்ம்.. நல்ல சகுனம்’ என்றார், கேலியாக.

    மனம் உடைந்த நான், ஸ்டுடியோவில் பாடுபவர்களுக்கு இருக்கும் ரூமின் பின் கதவைத் திறந்து தனியாக உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் அப்படியே கழிந்தது. தம்பி அமரும், பாஸ்கரும் என்னைத் தேடிவந்து, ‘டைரக்டர் மாதவன் சார் வந்திருக்கார். உன்னைப் பார்க்க வேண்டுமாம்’ என்றனர். நான் உடனே எழுந்து போனேன். அவர் ‘கருமாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன். இந்தா பிரசாதம்’ என்று என் கையில் கொடுத்தார். பின்னர், ’நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்னு நினைத்தேன். ஆனா பஞ்சு முந்திவிட்டார்’ என்றார். அது உடைந்த மனதுக்கு ஆறுதலாக இருந்தது. போன மின்சாரமும் வந்தது. தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமிக்குக் காட்டிவிட்டு வெளியே சிதறுகாய் எறிந்து உடைக்கப்பட்டது.

    “Silence..! Take..! Running..!” என்ற குரல் ஒலிக்க கோவர்தன் மாஸ்டர், ‘One.. Two..” கொடுக்க, ஜானகி ‘ஆ…ஆ…’ என்று ஹம்மிங் தொடங்க, பாடல் நன்றாக வந்தது. எஞ்சினியர் சம்பத், ஒன்ஸ்மொர் என்று கேட்கப் போனார்.

    “முதல் டேக் டேப்பைப் போட்டுக்காட்டினால், ஆர்கெஸ்ட்ராவின் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக்கொள்வார்களே’ என்று நான் கூறினேன். எல்லாரையும் உள்ளே அழைத்தேன். சம்பத்தோ, ‘என்ன இது? இந்தப் பையன் இப்படிச் செய்கிறானே?’ என்று நினைத்தார். ‘ராஜா! இன்னும் ஒரு டேக் எடுத்திடலாமே’ என்றார். ‘எடுக்கலாம் சார்! ஆனா இதைப் போட்டுக்கேட்டா, அவங்க தவறி வாசிச்சதை அவங்களே திருத்தி வாசிப்பாங்க’ என்றேன்.

    ‘சரி’ என்று டேப்பை Rewind செய்தார். அதன் பின்னர் டேப்பை ஆன் செய்தார். டேப் ஓடியது. இப்போது வரும், இப்போது வரப்போகிறது என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, எதிர்பார்க்க, டேப் ஓடியதே தவிர, அதிலிருந்து ஒரு சப்தமும் வரவில்லை. காரணம் பாடல் பதிவாகவில்லை! ரெக்கார்ட் மூடில் மெஷினே ஓட்டவில்லை என்பது சம்பத்துக்குத் தெரிந்து போய்விட்டது. உடனே, ‘சார், சார்..! பாட்டு பதிவாகலை சார், One More take Sir..!” என்றார். சுப்பு சாரின் முகம் மாறியது. ஒரு மாதிரியாகி வெளியே எழுந்து போய்விட்டார்.

    ‘டேக் நம்பர் ஒன்று இரண்டு’ என்று நம்பர்களை ஏற்றிக்கொண்டே போனார்கள். 12 டேக் ஆனது. பஞ்சு சார் மட்டும் இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவிலும் அமைதியாக இருந்தார். 2வது பாடல் ‘மச்சானைப் பார்த்தீங்களா” பதிவாகியது. ‘சொந்தமில்லை பந்தமில்லை’ பாடலை சுசீலா பாட ரெக்கார்டு செய்தோம்.

    ‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’ பாடல், சோகப்பாடலாக மறுபடியும் ஒருமுறை வந்தால் நன்றாக இருக்கும் என்று பஞ்சுசாரும், டைரக்டர் தேவராஜ் மோகனும் விரும்பினார்கள். அந்தப் பாடலை டி.எம்.சவுந்திரராஜன் நன்றாகப் பாடிக்கொடுத்தார். பாடல்கள் எல்லாம் பதிவாகி முடிந்தன. அதன்பின் படத்தின் சூட்டிங் நடந்தது”

    சிவகுமாரும், சுஜாதாவும் நடித்த ‘அன்னக்கிளி’ 14-05-1976 அன்று வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கொடிகட்டிப் பறந்த காலம் அது. எனவே அன்னக்கிளிக்குப் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இல்லை. சில ஊர்களில் ஒரே வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள். படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, ‘படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசையமைப்பாளர் பாடல்களுக்குப் போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன’ என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின. இதனால் தியேட்டர்களில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகியது. ஒரே வாரத்தில் படத்தை எடுத்த தியேட்டர்களில், மீண்டும் ‘அன்னக்கிளி’ திரையிடப்பட்டது. 15 நாட்களில் ‘அன்னக்கிளி’ திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்ஃபுல் ஆனது. அன்னக்கிளி இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது. ‘அன்னக்கிளி ஒன்னைத்தேடுது’, ‘மச்சானைப் பார்த்தீங்களா’, ‘ நம்ம வீட்டுக் கல்யாணம்’ முதலான பாடல்கள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன. அன்னக்கிளி 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.

    நன்றி: ’வரலாற்றுச் சுவடுகள்’, தினத்தந்தி
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  10. #1249
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Rare foto, Paavalar brothers!

    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  11. #1250
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    http://www.facebook.com/photo.php?fb...type=1&theater

    ஜூன் 2002 ‘கணையாழி’யில் வெளியான திரு. செழியன் அவர்களின் கட்டுரையிலிருந்து…

    ”ஒருமுறை எனது இசைவகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் (Chords) பற்றிய பாடத்தில் ‘C Major’ Scale பற்றி நடத்தினார். அப்போது ‘C Major’ Scale’ன் முதல் Chord ‘C’ Major, இரண்டாவது Chord ‘D Minor”. ஒரு பாடலின் ஏற்பாட்டில் (Arrangements) இந்த இரண்டு Chordகளையும் அடுத்தடுத்து இசைப்பது தவறானது' என்று சொன்னார். கர்நாடக சங்கீதத்திலும், ஸட்ஜமம் என்கிற முதல் ஸ்வரத்திற்கு, அடுத்து வருகிற இரண்டாவது ஸ்வரமான ரிஷபம் பகைஸ்வரம். இதுபோலவே மேற்கத்திய இசையிலும் முதல் Chord (இதனை Tonic Chord என்றும் இரண்டாவது Super tonic Chord என்றும் அழைக்க வேண்டும்) அதற்கடுத்த இரண்டாவது Chord’உடன் இணைந்து வருவதில்லை.

    ’உதிரிப்பூக்கள்’ படத்தில் ‘அழகிய கண்ணே’ பாடலைக் கேட்கும்போது அந்தப் பாடலின் துவக்கமே C Major, D Minor இரண்டு Chord’களின் அடுத்தடுத்த தொடர்ச்சியோடு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதைப்போல ஹார்மனி (Harmony) பற்றிய பாடத்தில், ஒரு இசையை இயற்றும்போது, ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்கு நகருகையில் ஒரு ஒழுங்கான இயக்கம் (movement) இருக்க வேண்டும். முதல் ஸ்வரத்திலிருந்து ஏழாவது ஸ்வரத்துக்கு தாவுதல் போன்ற Great Jump செய்யக்கூடாது; அது இனிமையாக இருக்காது என்பது இசைக் கோட்பாடு. ஒரு இசைவிதி. ‘செந்தூரப்பூவே’ என்ற ‘பதினாறு வயதினிலே’ பாடலைக் கேட்கும்போதும், ‘என்னுள்ளில் எங்கோ..’ என்ற ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ பாடலின் ஹம்மிங் கேட்கும்போதும் இந்த விதி இவரால் எவ்வளவு அழகாக மீறப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது.

    இவை மிகச்சிறிய உதாரணங்கள். இதுபோல மேலோட்டமாகப் புலப்படாத, இசைவிதிகளுக்கு முரணான மீறல்களைத் தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளைத் திருத்தி எழுதியிருக்கிறார். இதுபோலவே ‘மலர்களே, நாதஸ்வரங்கள்’ என்ற பாடலின் முடிவு அந்தரத்தில் ஒரு மணியோசையோடு முடியும். Cadence’ விதிகளின் இனிமையான மீறல் இது.

    ஒரு பாடலை ஏதேனும் இசைக்கருவியில் வாசித்துப் பார்க்கும்போதுதான் ராகங்களை, அதன் கடினத்தன்மையை எப்படியெல்லாம் இவர் இனிமையாக்கியிருக்கிறார் என்பது புரியும். Chord Progression’ல் Dischord என்று ஒதுக்கப்படுகிறவைகளைக்கூட இவர் இனிமையாகக் கையாள்கிற விதம் ஆச்சரியமானது. ‘என் வானிலே’ என்ற ‘ஜானி’ படப்பாடலின் ஸ்வரங்களின் முரணான தொடர்ச்சியும், அதன் போக்குக்கேற்ப புனையப்படும் chordகளின் தொடர்ச்சியும் அலாதியானது.

    ஒரு மைத்துளி நீர்ப்பரப்பில் உதிரும்போது உள்வரையும் சித்திரம்போல, இவரது படைப்புச் செயல்பாடு தன்னிச்சையாக, விதிகளைப் பொருட்படுத்தாமல் தனக்குள்ளாக ஒரு இயங்குதலோடு நிகழ்கிறது.

    நன்றி : கணையாழி, ஜூன் 2002

    தகவல் நன்றி: திரு. Senthil Kumar Jayakumar
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •