-
26th May 2012, 12:02 PM
#3561
Senior Member
Regular Hubber
Dear pammalar and vasu sir
great note
regards
kumar
-
26th May 2012 12:02 PM
# ADS
Circuit advertisement
-
26th May 2012, 12:16 PM
#3562
Junior Member
Junior Hubber
Pammalarin Pathivugal Pattasu
-
26th May 2012, 12:17 PM
#3563
Junior Member
Junior Hubber
Thanks Vasudevan sir
Kumutham katturai arumai
Last edited by BALAA; 26th May 2012 at 12:22 PM.
-
26th May 2012, 01:47 PM
#3564
Junior Member
Junior Hubber
-
26th May 2012, 04:39 PM
#3565
Senior Member
Seasoned Hubber
ஆஹா.... கலக்கல் ... யாரைப் பாராட்டுவதென்றே தெரியவில்லை...போட்டி போட்டு ஆவணங்களையும் அழகிய நிழற்படங்களையும் அள்ளித் தரும் பம்மலாரையும் வாசுதேவன் சாரையும் எப்படி பாராட்டுவது... எந்தத் திரியில் நடிகர் திலகத்தின் விவாதம் என்றாலும் அங்கே நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் முதலில் நிற்கும் கார்த்திக்கைப் பாராட்டுவதா... உங்கள் அனைவருடனும் எனக்கு அறிமுகம் தந்த மய்யத்தைப் பாராட்டுவதா...
அனைவருக்குமே பாராட்டுக்களும் நன்றிகளும்..
குறிப்பாக சித்ரா திரையரங்க கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மூடப்பட்ட செய்தியினைத் தெரிவிக்கும் விளம்பரத்தையிட்டு அசத்தி விட்ட பம்மலாரே ...சூப்பர்... அதேபோல் சக்தி கிருஷ்ணசாமி, பந்துலுவுடன் கலைஞரும் நடிகர் திலகமும்... ஆஹா.. வாசுதேவன் சார்... பிடியுங்கள். பாராட்டுக்களை...
கோபால் சார்...
வந்தாச்சு..
-
26th May 2012, 04:41 PM
#3566
Senior Member
Seasoned Hubber
கர்ணன் 75வது நாளையொட்டி [29.05.2012 அன்று 75வது நாளைக் காண்கிறது] வந்த விளம்பரத்தின் நிழற்படம்.
-
26th May 2012, 05:23 PM
#3567
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் அவர்களே,
அண்ணனின் புகழ்க்காவியங்களில் தலையாய ஒன்றான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பட விளம்பர வரிசையைப்பார்த்து அசந்து போன அதே நேரத்தில், எனக்கு மிகப்பெரிய சந்தேகமும் உண்டாகிறது. அது வேறொன்றுமில்லை...
'நாம் இருப்பது 2012 மே மாதத்திலா அல்லது 1959 மே மாதத்திலா' என்ற சந்தேகம்தான். படம் வெளிவந்தபோது வாழ்ந்த மக்களே இத்தனை விளம்பரங்களைப் பார்த்திருப்பார்களா என்றிருக்கும்போது முழுமையாக 53 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஏதோ பேருக்கு ஒன்றிரண்டு என்றில்லாமல் எந்தெந்த பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரங்கள் வந்ததோ அவற்றை அப்படியே பொலிவு மங்காமல் த்ருவதென்றால்.... ஊகும், இது சாதாரண மனிதனின் வேலையல்ல, நிச்சயம் 'பட்டணத்துக்கு வந்த பூதத்தின்' சித்து வேலைதான்.
மரியாதைக்குரிய பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள் தமிழ்த்திரையுலகின் பெரிய ஆவணக்காப்பாளர் என்றால் அதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அவர் ஏற்கெனவே 75 ஆண்டுகளைக்கடந்தவர். ஆனால் 1972-ல் பிறந்த ஒருவர் (வேறு யார்? பம்மல் தந்த செல்வமாகிய நீங்கள்தான்) , தான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்த இத்தனை ஆவணத்திரட்டுகளைத் தரமுடிகிறதென்றால் அது என்ன சாதாரண காரியமா?. வியப்பதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.
அன்று புதிய பறவைக்காக பாரகன் திரையரங்கு மூடப்பட்டு, புதுப்பொலிவு பெற்றதற்கான விளம்பரத்தைத்தந்து ஆச்சரியத்தில் மூழ்கடித்த நீங்கள், இன்று கட்டபொம்மனின் வருகைக்கான அலங்காரத்துக்காக சித்ரா அரங்கில் அதற்கு முன் ஓடிக்கொண்டிருந்த படத்தின் காட்சிகள் ரத்துச்செய்யப்பட்ட விளம்பரத்தையும் தர முடிகிறதென்றால்,
ஆதாரங்களை அள்ளித்தரும் ஆவணச்செம்மல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று "சிலருக்கு" எடுத்துக்கூறுவது போல் அமைந்துள்ளது.
கட்டபொம்மனின் வீர நடை, வெற்றிநடை தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.
-
26th May 2012, 05:47 PM
#3568
Senior Member
Veteran Hubber
அன்புள்ள வாசுதேவன் சார்,
முந்தைய பதிவில் நடிகர்திலகம், கட்டபொம்மனாக கர்ஜனை செய்யும் பல்வேறு போஸ்களைத்த்ந்து அசத்தியதுடன், தற்போது 'குமுதம்' இதழின் பக்கங்களையும் சுடச்சுட (23.05.2012 இதழ்) தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளீர்கள்.
தங்களின் சீரிய பதிவுகளுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.
அன்பு ராகவேந்தர் சார்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி. 'கர்ணன்' 75-வது நாள் விளம்பரம் கண்களைக் கொள்ளை கொள்வது மட்டுமல்லாது, "சிலரது" கண்களையும் திறந்திருக்கும் என்று நம்புகிறேன்.
வரலாற்று விற்பன்னர் நமது முரளி சீனிவாஸ் அவர்கள் எங்கே?. கட்டபொம்மன் மாபெரும் வெற்றியைப்பற்றிய அவரது கட்டுரையை இங்கு மறுபதிப்பு செய்யலாமே. இது பொருத்தமான தருணம் அல்லவா?.
-
26th May 2012, 05:48 PM
#3569
Senior Member
Seasoned Hubber
அன்பு கார்த்திக் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. தங்கள் அனைவரையும் போல் முரளி சாரின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.
-
26th May 2012, 05:52 PM
#3570
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர்களே,
நம்முடைய NTFANS அமைப்பின் உறுப்பினர்களுக்கான அடுத்த நிகழ்ச்சி நாளை 27.05.2012 ஞாயிறு மாலை 4.15 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ருஷ்யக் கலாச்சார மய்ய அரங்கில் நடைபெறும். நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றான எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் திரையிடப் பட உள்ளது. அதில் பங்கேற்ற கலைஞர்களில் ஒருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இன்னும் உறுப்பினர்களாகாதோர் விரைக.

அனுமதி உறுப்பினர்களுக்கு மட்டும்.
நிழற்படத்திற்கு நன்றி திரு பம்மலார்
Last edited by RAGHAVENDRA; 26th May 2012 at 05:56 PM.
Bookmarks