-
9th June 2012, 02:47 AM
#11
Senior Member
Platinum Hubber
"முதன் முதலில் தாங்கள் பதிவு செய்த பாடல் எது? அன்று தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?" என்று கேட்டது தான் தாமதம்.
" 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' என்ற பாடலைத்தான் முதன் முதலில் ரிக்கார்ட் செய்தோம். இப்பாடலை லதா மங்கேஷ்கரைப் பாடச்செய்வதாக திட்டமிட்டிருந்தனர். சில காரணங்களால் முடியாது போகவே ஜானகி அவர்கள் பாடினார்கள். ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்கனவே இப்பாடலுக்கான ஒத்திகை முடித்து விட்டேன். ஏ. வி. எம்-மில் தான் இப்பாடல் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. முதல் நாள் ரிக்கார்டிங் பூஜை முடிந்தது. திடீரென்று எல்லா விளக்குகளும் அணைந்து விட்டன. 'நல்ல சகுனம்' என்று ஒருவர் கிண்டலாகக் கூறியது என் காதில் விழுந்தது. முதல் நாளும் அதுவுமாக இப்படி விளக்குகள் அணைந்து விட்டதே என்ற வேதனையில் ரிக்கார்டிங் தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டேன். டைரக்டர் மாதவன் அவர்கள் வேறு ஒரு பூஜைக்குச் சென்று விட்டு அங்கு வந்தார். சோர்ந்து போயிருந்த எனக்கு அன்போடு பிரசாதத்தைக் கொடுத்தார்.
"சிறிது நேரம் சென்றிருக்கும். கரென்ட் வந்துவிட்டது. அணைந்திருந்த விளக்குகள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. முதல் டேக் ரிக்கார்ட் ஆகவில்லை. மீண்டும் சோதனை. பிறகு தான் 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' பாடல் பதிவு செய்யப்பட்டது. இன்று அந்தப்பாடலைக் கேட்டுப் பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால் அந்தப்பாடலை நான் கேட்கும் போதெல்லாம் எனக்கு அன்று நடந்த சோதனைகள் தான் நினைவிற்கு வருகின்றன."
- சோதனைக்கு வித்திட்ட அந்தப்பாடல் தான் இன்று இசைத்தட்டு விற்பனையில் பெரும் சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
-
9th June 2012 02:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks