-
22nd June 2012, 03:24 PM
#241
Junior Member
Junior Hubber

Originally Posted by
KCSHEKAR
Yes. Definitely.
Thanks.
I have sent a mail to you.
Please give your Tel No.
Regards,
Shivaji Mohan
-
22nd June 2012 03:24 PM
# ADS
Circuit advertisement
-
22nd June 2012, 08:34 PM
#242
Senior Member
Seasoned Hubber
கர்ணன் மறு வெளியீட்டு 100வது நாளையொட்டி திருச்சி ரசிகர்களால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளின் நிழற்படங்கள் இங்கே நம் பார்வைக்கு

கருப்பு வெள்ளை நிழற்படமாக நமக்கு அனுப்பி வைத்த அன்பர் ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. ஒரு மாறுதலுக்காக வண்ணமாக்கப் பட்டுள்ளன.
-
23rd June 2012, 03:16 AM
#243
Senior Member
Veteran Hubber
அந்த சர்ப்ரைஸ் பதிவு இதுதான்..!!!
ஞானத்தந்தையின் "ஞான ஒளி" [வெளியான தேதி : 11.3.1972]
சிறப்புப்பதிவு
[ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு
இந்த ஆவணப்பதிவு சமர்ப்பணம்..!]
சாதனைப் பொன்னேடுகள்
அரிய வண்ணப் புகைப்படம்

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" : தினத்தந்தி : _.3.1972

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 4.3.1972

"அட்வான்ஸ் புக்கிங்கில் அசுர சாதனை" : தினத்தந்தி : _.3.1972

'இன்று முதல்' விளம்பரம் : தினத்தந்தி : 11.3.1972

"சாதனைகளின் சக்கரவர்த்தி" என நிரூபிக்கும் விளம்பரம் : தினத்தந்தி : 27.4.1972

"சிங்காரச் சென்னையில் 1000 வெற்றிக் காட்சிகள்" : தினத்தந்தி : 3.6.1972

"சென்னை 'பிளாசா'வில் வரலாறு காணாத சாதனை" : மாலை முரசு : 3.6.1972

['பிளாசா'வில் 134 CHF Shows; Totally 195 HF Shows]
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 18.6.1972

காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1972

குறிப்பு:
1. பெருவெற்றிக் காவியமான "ஞான ஒளி" 100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்கு:
சென்னை - பிளாசா - 104 நாட்கள்
2. சென்னையில் "ஞான ஒளி":
பிளாசா - 104 நாட்கள்
பிராட்வே - 76 நாட்கள்
சயானி - 76 நாட்கள்
கமலா - 69 நாட்கள்
[தவிர, திருவொற்றியூர் 'தமிழ்நாடு' திரையரங்கில் 41 நாட்கள் ஓடி நல்ல வெற்றி..!]
3. மதுரை 'நியூசினிமா'வில் 90 நாட்களும், திருச்சி 'பிரபாத்'தில் 83 நாட்களும், சேலம் 'சாந்தி'யில் 76 நாட்களும், கோவை 'ராஜா'வில் 56 நாட்களும், வேலூர் 'அப்ஸரா'வில் 56 நாட்களும், நாகர்கோவில் 'ராஜேஷ்' அரங்கில் 55 நாட்களும் ஓடி வசூல் மழை பொழிந்த "ஞான ஒளி", மேலும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 48 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது.
4. கோவையிலும், வேலூரிலும், நடிகர் திலகத்தின் அடுத்த திரைக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா"வுக்காக மாற்றப்பட்டது.
5. நாகர்கோவில் 'ராஜேஷ்' திரையரங்கில் வெளியான முதல் புதிய திரைப்படம் "ஞான ஒளி".
பக்தியுடன்,
பம்மலார்.
-
23rd June 2012, 03:47 AM
#244
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்,
'பாசமலர்' பதிவுகளுக்கு தங்களின் விலையில்லா மதிப்பு மிக்க பாராட்டு என் மீது தாங்கள் கொண்ட அளவில்லாத பாசத்தை குறிக்கிறது. மிக்க நன்றி!
THE ONE & ONLY "RAJA" ராஜாவுக்கெல்லாம் நான் தான் ராஜா என்று சொல்லாமல் சொல்லுகிறது.
பதிவுகளின் ராஜா நடிப்புலக ராஜாவின் சாதனை செப்பேட்டு விளம்பரங்களை பதித்து பட்டை கிளப்பி விட்டார். அதுவும் பிரம்மாஸ்திரம் பிரமாதத்திலும் பிரமாதம். திரியின் பத்தாம் பாகத்தின் 23-ஆவது பக்கம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.
தேசிய திலகம் 'ராஜா' மூலம் விமானப் படையில் பணிபுரிந்து நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈன்ற வீரர்களின் மனைவிமார்களுக்கு ஷேம நலநிதி அளித்தது இவர்தான் உண்மையான வள்ளல் என்பதைக் காட்டுகிறது.
அருமையான 'ராஜா' பதிவுகளை அளித்த 'ராஜா'வின் ரோஜாவே! பிடியுங்கள் என் அன்புப் பரிசாக

டியர் வாசுதேவன் சார்,
தங்களின் வண்ணமயமான பாராட்டுக்கு எனது வளமான நன்றிகள்..! [Rose பூங்கொத்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!]
ரோஜா மனம் படைத்த தாங்கள், அன்புப்பரிசாக அடியேனுக்கு அளித்த ரோஜாக்களை போற்றிப் பாதுகாத்து வைத்துக் கொள்வேன். ஏனெனில், பாசப்பெருக்கில் வழங்கப்பட்ட இந்த ரோஜாக்கள், என்றென்றும் நறுமணம் வீசப்போகும் வாடாமலர்கள்..!
நமது நடிகர் திலகத்தின் திரையுலகப் பயணத்தில், சண்டைக் காட்சிகளில், நமது அன்புள்ளங்களால் நம்பர் ஒன்னாகப் போற்றப்படும் "ராஜா" சண்டைக்காட்சியை [ரந்தாவாவுடன் போடும் சண்டைக் காட்சியை] தரவேற்றி அதகளப்படுத்திவிட்டீர்கள்..! அக்காட்சி பற்றிய வருணனையும் அருமை..! பாராட்டுக்கள்..!
நமது நடிகர் திலகம் 'ஆக்டிங் கிங்' என்பது உலகறிந்த விஷயம். அவர் 'ஆக்ஷன் கிங்'கும்தான் என்று இந்த வீடியோ தொடரின் மூலம் ஆதாரபூர்வமாகப் பறைசாற்றி வரும் தங்களின் இந்த அசத்தல் சேவை செவ்வனே தொடர வானளாவிய வாழ்த்துக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
23rd June 2012, 04:01 AM
#245
Junior Member
Junior Hubber
Gnana Oli

Originally Posted by
pammalar
அந்த சர்ப்ரைஸ் பதிவு இதுதான்..!!!
ஞானத்தந்தையின் "ஞான ஒளி" [வெளியான தேதி : 11.3.1972]
சிறப்புப்பதிவு
[ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு
இந்த ஆவணப்பதிவு சமர்ப்பணம்..!]
சாதனைப் பொன்னேடுகள்
அரிய வண்ணப் புகைப்படம்
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" : தினத்தந்தி : _.3.1972
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 4.3.1972
"அட்வான்ஸ் புக்கிங்கில் அசுர சாதனை" : தினத்தந்தி : _.3.1972
'இன்று முதல்' விளம்பரம் : தினத்தந்தி : 11.3.1972
"சாதனைகளின் சக்கரவர்த்தி" என நிரூபிக்கும் விளம்பரம் : தினத்தந்தி : 27.4.1972
"சிங்காரச் சென்னையில் 1000 வெற்றிக் காட்சிகள்" : தினத்தந்தி : 3.6.1972
"சென்னை 'பிளாசா'வில் வரலாறு காணாத சாதனை" : மாலை முரசு : 3.6.1972
['பிளாசா'வில் 134 CHF Shows; Totally 195 HF Shows]
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 18.6.1972
காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1972
குறிப்பு:
1. பெருவெற்றிக் காவியமான "ஞான ஒளி" 100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்கு:
சென்னை - பிளாசா - 104 நாட்கள்
2. சென்னையில் "ஞான ஒளி":
பிளாசா - 104 நாட்கள்
பிராட்வே - 76 நாட்கள்
சயானி - 76 நாட்கள்
கமலா - 69 நாட்கள்
[தவிர, திருவொற்றியூர் 'தமிழ்நாடு' திரையரங்கில் 41 நாட்கள் ஓடி நல்ல வெற்றி..!]
3. மதுரை 'நியூசினிமா'வில் 90 நாட்களும், திருச்சி 'பிரபாத்'தில் 83 நாட்களும், சேலம் 'சாந்தி'யில் 76 நாட்களும், கோவை 'ராஜா'வில் 56 நாட்களும், வேலூர் 'அப்ஸரா'வில் 56 நாட்களும், நாகர்கோவில் 'ராஜேஷ்' அரங்கில் 55 நாட்களும் ஓடி வசூல் மழை பொழிந்த "ஞான ஒளி", மேலும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 48 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது.
4. கோவையிலும், வேலூரிலும், நடிகர் திலகத்தின் அடுத்த திரைக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா"வுக்காக மாற்றப்பட்டது.
5. நாகர்கோவில் 'ராஜேஷ்' திரையரங்கில் வெளியான முதல் புதிய திரைப்படம் "ஞான ஒளி".
பக்தியுடன்,
பம்மலார்.
பம்மலார் சார்,
ஞான ஒளி கொழும்பு சென்ட்ரல் திரையில் 81 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றி அடைந்தது.
ராஜா யாழ்ப்பாணம் ராணி திரையிலும் 100 நாட்கள் ஓடியது.
Jeev
-
23rd June 2012, 04:03 AM
#246
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
பம்மலாரே,
அழகான பிரம்மாஸ்திரம். முக்கியமான சமயத்தில் மறந்து போனால் மீண்டும் திரியில் பார்த்து விடலாம். ஆனால் கொடுக்க தாமதம் ஆனதால்,மாணவர் கோபித்து சென்று விட்டார் போலும். காணவே இல்லையே!!??
அன்புக்குரிய அடிகளாரே,
பாராட்டுக்கு நன்றி..!
உளமாரப் பாராட்டும் உயர்ந்த பண்புடையவரான நமது அருமைச் சகோதரர் mr_karthik அவர்களுக்கு நமது நல்லிதயங்களின் மீது கோபம் என்பதே வராது. வேண்டுமானால் பாருங்கள், இன்னும் 24 மணி நேரத்திற்குள் அவர் இங்கு வருகை புரிந்து, இடுகை செய்யப்பட்டுள்ள பதிவுகளைப் பாராட்டி நிச்சயம் எழுதுவார்..!
அதுசரி அடிகளாரே, உங்களுக்கேன் இந்தக் கலக உத்தியோகம்..??!! {Take it in the lighter sense..!!}
ரொம்ப ரொம்ப ஜாலிமூடில்,
பம்மலார்.
-
23rd June 2012, 04:21 AM
#247
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Jeev
பம்மலார் சார்,
ஞான ஒளி கொழும்பு சென்ட்ரல் திரையில் 81 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றி அடைந்தது.
ராஜா யாழ்ப்பாணம் ராணி திரையிலும் 100 நாட்கள் ஓடியது.
Jeev
அரிய இலங்கைப் புள்ளிவிவரங்களுக்கு அன்பார்ந்த நன்றிகள், ஜீவ் சார்..!
இந்த விவரங்களை அடியேன் அறிந்திருந்த போதிலும், ஐயப்பாட்டின் பலனாக, இவற்றை ஆணித்தரமாக குறிப்பிட முடியாத காரணத்தால், அந்தந்தப் பதிவுகளில் வெளியிடவில்லை.
-
23rd June 2012, 04:25 AM
#248
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பம்மலார் சார்,
பிரம்மாஸ்திரத்தை மறக்காத கர்ணன் நீங்கள்.. தங்களுக்கு மட்டும் அது மறக்காது என்ற ஆசீர்வாதம் உண்டு. சமயம் பார்த்து ஏவும் வல்லமை படைத்தவர் நீங்கள். கீப் இட் அப். ராஜா 100 காட்சிகள் அரங்கு நிறைந்த மறுநாள் தியேட்டரில் நண்பர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது. தேவி பேரடைஸின் பின் பக்க வாசல் திறந்திருந்தாலும் அந்த வழி தூரம் சற்றுக் குறைவு என்றாலும் அண்ணா சிலையருகில் ராஜா விற்காக வைக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்டமான பேனரைப் பார்ப்பதற்காகவே அந்த வழியே வீட்டுக்கு செல்வோம். மஞ்சள் உடையில் டையுடன் இரு கைகளையும் சவாலுக்கு அழைக்கும் வகையில் வைத்துக் கொண்டு நிற்கும் அந்த போஸ் பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. அந்த போஸ் படத்தில் இடுப்பு வரையில் தான் வரும். முழு போஸும் பேனரில் மட்டுமே இடம் பெற்றது. அந்த பேனரைப் பார்க்க வேண்டுமானால் பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் நடிகர் திலகத்தைக் காரில் அழைத்துச் செல்லும் காட்சியில் பார்க்கலாம்.
வாசு சார் அந்தக் காட்சியிலிருந்து அந்த பேனரின் நிழற்படத்தை எடுத்து இங்கே இடுகை செய்ய முடியுமா.
அன்புடன்
பிரம்மாஸ்திரத்தை பாராட்டிய பிரம்மாவே,
தாங்கள் படைத்துள்ள "கர்ணன்" 100வது நாள் டிசைன் பிரமாதம்..! நடிகர் திலகத்தின் அசத்தல் நிழற்படத்தோடு, காவியத்தில் பங்குபெற்ற முக்கிய கலைஞர்களின் புகைப்படங்களையும் மறவாமல் சேர்த்துள்ளது இந்த வடிவத்தின் கூடுதல் சிறப்பு,,! பாராட்டுக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
23rd June 2012, 04:30 AM
#249
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
பாசமலர் காவியத்தின் பெருமைகளை அதன் 6 மாத விளம்பரங்கள் மூலமாகவும் அதன் அடர்த்தியான உணர்வுபூர்வமான காட்சிகளை வீடியோ புகைப்படங்கள் மூலமாகவும் தொகுத்தளித்த [சுவாமிநாத] சிவா [வாசுதேவ] விஷ்ணு -விற்கு பல்லாயிரம் கோடி நன்றிகள்.
அன்புடன்
என்ன முரளி சார்,
தங்கள் கூற்றின்படி சுவாமிநாதன் : சிவன், வாசுதேவன் : விஷ்ணு.
எனது கூற்றின்படி ராகவேந்திரன் : பிரம்மா, சரி தானே..!
மும்மூர்த்திகள் இருந்தாலும் நாரதர் இல்லாமலா..!
கோபாலகிருஷ்ண அடிகளாரே நாரதர்..!
நாரதரின் கலகம் நன்மையில் முடியும்..!
அடிகளாரின் கலகம் ___________________..! [கோடிட்ட இடத்தை அன்புகூர்ந்து வாசு சார் மட்டுமே நிரப்ப வேண்டுகிறேன்..!]
மிகவும் ஜாலியாக,
பம்மலார்.
-
23rd June 2012, 04:52 AM
#250
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
நாளை...
ஸ்டைல் சக்கரவர்த்தி "ராஜா"வின் கண்கவர் சிறப்பு நிழற்படங்கள் என்றும் மறக்க முடியாதபடி.
அன்புடன்,
வாசுதேவன்.
வாசு சார், "ராஜா"வின் ரகளைக்காகக் காத்திருக்கிறோம்..!
Bookmarks