-
23rd June 2012, 10:35 PM
#11
Senior Member
Veteran Hubber
கணிப்பொறியியலின் தந்தையான
ஏலன் ட்யூரிங்(Alan Turing) அவர்களுக்கும்,

கலையுலகத் தந்தையின் "கர்ணன்" காவியத்துக்கும் என்ன சம்பந்தம்..!!

ஒரு உன்னதமான ஒற்றுமை இருக்கிறது..!!
இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு வித்திட்ட முன்னோடிகளில் மிக முக்கியமானவர் திரு. ஏலன் ட்யூரிங். சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கான கோட்பாடுகளை(Algorithms) வரையறுத்த முன்னோடி. இந்தப் பெருமகனார் பிறந்தது 23.6.1912. இன்று [23.6.2012] அவருக்கு நூற்றாண்டு விழா நிறைவு..! அதாவது அவரது 100வது பிறந்த நாள் விழா நிறைவு.
டிஜிட்டல் டெக்னாலஜியின் முக்கிய முன்னோடியாகத் திகழ்ந்த கணிப்பொறியியலின் தந்தையின் 100வது பிறந்த நாள் நிறைவடையும் இன்று [23.6.2012], அதே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாக வந்த கலையுலகத் தந்தையின் "கர்ணன்", 100வது வெற்றித் திருநாளைப் பூர்த்தி செய்திருப்பது என்னே ஒரு வியத்தகு rare coincidence..!
இரு தந்தையருக்கும் நமது ஆத்மார்த்தமான நமஸ்காரங்கள்..!!
திரு. ஏலன் ட்யூரிங் அவர்களைப் பற்றி மேலும் அறிய:
http://timesofindia.indiatimes.com/t...w/14353203.cms
http://en.wikipedia.org/wiki/Alan_Turing
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 24th June 2012 at 02:56 AM.
pammalar
-
23rd June 2012 10:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks