-
24th July 2012, 09:58 PM
#71
Senior Member
Seasoned Hubber
டியர் சந்திரசேகர்
திருநெல்வேலி நடிகர் திலகம் நினைவு நாள் நிழற்படங்கள் அருமை. பாராட்டுக்கள்
டியர் பம்மலார்
சூப்பர் டூப்பர் ராக்கெட் வேகத்தில் திரி கொடி கட்டிப் பறக்கிறது. பாராட்டுக்கள். கர்ணன் அமெரிக்க விஜயம் பற்றிய மாலை மலர் செய்திகளுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
கர்ணன் மார்ச் 16ல் வெளியான நாள் முதல் பல்வேறு கட்டங்களில் ரசிகர்கள் சென்னையில் நடத்திய விழாக்களின் காட்சிகள் ஒளித் தகடாக வெளி வந்துள்ளன.

தேவைப்படுவோர் திரு விஜயகுமார் அவர்களை 7299215188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th July 2012 09:58 PM
# ADS
Circuit advertisement
-
24th July 2012, 10:48 PM
#72
Senior Member
Devoted Hubber
டியர் பம்மலார் சார்
தங்களின் சீரிய முயற்சியால் துவங்கப்படிருக்கும் இந்த திரியை கண்டவுடன் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே வரவில்லை, கடந்த சில வாரங்களாக தாங்கள், ராகவேந்தர் சார் மற்றும் வாசுதேவன் சார் பதிவுகள் இல்லாமல் சற்று வெறுமையாக இருந்தது, இனி நம் திரி ராஜநடை போடும் என்பதில் ஐய்யமில்லை!
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
24th July 2012, 11:01 PM
#73
Senior Member
Diamond Hubber
I saw some North Indian tweet "Have any of you guys in Chennai watched 'Karnan' in Sathyam? I just love that film, Shivaji at his best.". Good to know there are exceptions too.
...an artist without an art.
-
25th July 2012, 12:37 AM
#74
Senior Member
Veteran Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
நமது நடிகர் திலகம் திரியில், வான்மழை போல் தாங்கள் வளமுடன், சிவாஜி பேரவை சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுகை செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நமது நடிகர் திலகத்தின் பதினோராம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில், சிவாஜி பேரவை சார்பில் வெளியிடப்பட்ட போஸ்டர்(திருச்சி), பேனர்(கோவை) அருமை..! நாளிதழ் செய்திகளுக்கு நயமிகு நன்றிகள்..!
எல்லாவற்றுக்கும் சிகரமாக விளங்குவது திருநெல்வேலி நிகழ்ச்சிகள். புஷ்பாஞ்சலி, விஷுவலாஞ்சலி(கண்காட்சி), இசையாஞ்சலி(கச்சேரி), இலவச கண்சிகிச்சை முகாம், முதியோர் இல்லத்தில் அன்னதானம் போன்ற சமூக நற்பணிகளால் அஞ்சலி என தேசிய திலகத்துக்கு அவரது அவதார நிறைவு நாளில் எல்லாவிதமான அஞ்சலியையும் செலுத்தி, சிவாஜி பேரவையின் மாநிலத் தலைவராகிய தாங்கள் நமது இதயதெய்வத்தின் உண்மையான தொண்டன் என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்..! தங்களுக்கும், தங்களின் அமைப்புக்கும்,
பாசமான பாராட்டுக்கள்..! வளமான வாழ்த்துக்கள்..! நெஞ்சார்ந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
25th July 2012, 02:39 AM
#75
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார்,
அமரதீபம் 100-வது நாள் விளம்பரததைத்தந்து, அதன் வெற்றியை உலகறிய உரக்கச்சொல்லி விட்டீர்கள். அன்றைய நாட்களில் திரைப்படங்களின் 100-வது நாளின்போது அதில் நடித்த பிரதான நட்சத்திரங்கள் திரையரங்குகளின் மேடையில் ரசிகர்கள் முன் தோன்றுவது வழக்கமாக இருந்து வந்துள்ளதை பல்வேறு விளம்பரங்களின்மூலம் அறிய முடிகிறது. இந்த வழக்கம் எப்போது, எப்படி நின்றுபோனது என்பது தெரியவில்லை.
அறுபதுகளின் பிற்பகுதி மற்றும் எழுபதுகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவது கூட அபூர்வமாகிப்போனது. இதில் நடிகர்திலகத்தின் பல படங்களும் அடக்கம்.
சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் இந்தியன் மூவிநியூஸ் பத்திரிகையில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' பக்கங்களை எனக்கு டெடிகேட் செய்ததற்கு மிக்க நன்றி. இவற்றைப்பார்க்கும்போது, இன்று நம்மிடையே அண்ணனும் இல்லை, 'அண்ணி'யும் இல்லையென்ற உண்மை மனதைத் தாக்குகிறது.
சாந்தி அரங்கில் நடிகர்திலகத்தின் நிரந்தர உருவப்படத்துக்கு மலரஞ்சலியையும், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க அஞ்சலியையும் பத்திப்பித்தமைக்கும் மிக்க நன்றி.
டியர் mr_karthik,
தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள்..!
நம் அனைவரின் உள்ளம் கவர்ந்த ஜோடி, சிவாஜி-தேவிகா ஜோடி. அந்த அற்புத pair-ன் முழுமுதல் பக்தரான தங்களுக்கு இந்த "ஆண்டவன் கட்டளை" விமர்சனப் பக்கங்களை dedicate செய்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தாங்களும் அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டதில் எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
நம் எல்லோருக்காகவும் 'அழகே வா அருகே வா' பாடல்:
இப்பாடலில் தேவிகா, நடிகர் திலகத்தை மட்டுமா நிலைதடுமாற வைக்கிறார், பார்க்கும் நம்மையும்தான்..!
அன்புடன்,
பம்மலார்.
-
25th July 2012, 02:51 AM
#76
Senior Member
Seasoned Hubber
My wishes for the success of this thread.
To all those who've contributed in this thread- It is because of your efforts that, youngsters like me and many others actually get to appreciate NT, the legend.
Thank you.
-
25th July 2012, 03:28 AM
#77
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
நமது நடிகர் திலகம் திரியின் மெகா வெற்றிக்கு, இறையருளும், இதயதெய்வத்தின் அருளாசிகளும், அன்புள்ளங்களின் வாழ்த்துக்களும், பெருமதிப்புக்குரிய பங்களிப்பாளர்களின் செயல்பாடும்-உழைப்பும்-அணுகுமுறையும், பாசத்துக்குரிய பார்வையாளர்களின் வருகையும், மரியாதைக்குரிய மாடரேட்டர்களின் அனுமதியும், மூல காரணங்கள். அனைவருக்கும் நமது ஆத்மார்த்தமான நன்றிகள்..!
திருச்சி சிவாஜி மன்ற போஸ்டருக்கும், டிஜிட்டல் "கர்ணன்" வசந்த உற்சவ நெடுந்தகடு வெளிவந்துள்ள செய்திக்கும் ஸ்பெஷல் நன்றிகள்..!
புதுவை முதல்வர் ரங்கசாமி, கலையுலக முதல்வரான நம்ம சாமிக்கு, புதுவை அரசு சார்பில், நினைவு நாள் அஞ்சலி செலுத்திய நற்செயல் மிகுந்த போற்றுதலுக்குரியது. பெருமதிப்புக்குரிய அவருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும், புதுவை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் புதுவை அரசுக்கும் நமது இருகரம் கூப்பிய சிரந்தாழ்த்திய நன்றிகள்..!
இந்த உணர்வுபூர்வமான நிகழ்வின் நிழற்படங்களை அள்ளி அளித்து, செய்திக்கான சுட்டியையும் பாங்குற வழங்கிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
25th July 2012, 03:42 AM
#78
Senior Member
Veteran Hubber

Originally Posted by
J.Radhakrishnan
டியர் பம்மலார் சார்
தங்களின் சீரிய முயற்சியால் துவங்கப்படிருக்கும் இந்த திரியை கண்டவுடன் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே வரவில்லை, கடந்த சில வாரங்களாக தாங்கள், ராகவேந்தர் சார் மற்றும் வாசுதேவன் சார் பதிவுகள் இல்லாமல் சற்று வெறுமையாக இருந்தது, இனி நம் திரி ராஜநடை போடும் என்பதில் ஐய்யமில்லை!
டியர் ஜேயார் சார்,
'வருக ! வருக !', மிகுந்த மகிழ்ச்சி, மிக்க நன்றி..!
இந்தத் திரி நமது திரி, mr_karthik அவர்கள் சொன்னது போல் நம் சொந்த வீடு..!
தொடர்ந்து இங்கு வருகை புரிந்து, தங்களின் மேன்மையான பங்களிப்பை நல்குங்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
25th July 2012, 03:51 AM
#79
Senior Member
Veteran Hubber

Originally Posted by
kid-glove
I saw some North Indian tweet
"Have any of you guys in Chennai watched 'Karnan' in Sathyam? I just love that film,
Shivaji at his best.".
Good to know there are exceptions too.
Thank you so much, for the sweet tweet, Mr.kid-glove & a warm welcome to you to our NT thread..!
-
25th July 2012, 04:02 AM
#80
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Arvind Srinivasan
My wishes for the success of this thread.
To all those who've contributed in this thread- It is because of your efforts that, youngsters like me and many others actually get to appreciate NT, the legend.
Thank you.
Welcome, Mr. Arvind Srinivasan..!
My special thanks to you for your sincere wishes & kind words..!
Kindly visit often & also participate..!
Once again, thanks a lot..!
Bookmarks