-
26th July 2012, 08:57 PM
#11
Senior Member
Diamond Hubber
If there is no official news, hese websites will write the same stuff in vareity of ways. idiots!
சினிமாவை விட்டு ஒதுங்குகிறாரா சமந்தா? கொஞ்ச நாட்களாக இன்டஸ்ரியை குடைந்து கொண்டிருக்கிறது இந்த சூறாவளிக் கேள்வி. தமிழில் பாணா காத்தாடி மூலம் முழு கதாநாயகியாக அறிமுகமான சமந்தா அப்படத்தின் தோல்வியை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவே இல்லை. அதே காலத்தில் வெளிவந்த வி.தா.வ திரைப்படம் சமந்தாவை ஒரு சின்ட்ரெல்லவாக்கியது ரசிகர்கள் மத்தியில்.
தெலுங்கு இன்டஸ்ட்ரியில் இவரை, 'மயிலே மானே மரகதமே' என்று கொண்டாடி தீர்த்தார்கள் ரசிகர்கள். அடுத்த நயன்தாரா, அடுத்த அனுஷ்கா என்றெல்லாம் பேசப்பட்ட சமந்தா, திடீரென மணிரத்னம், ஷங்கர் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் படத்திலிருந்தே விலக நேர்ந்தது. இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள முடியாமல் ஆளாளுக்கு தாயக்கட்டையை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்...
வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாராம் சமந்தா. அவ்வப்போது மிக மிக ரகசியமாக சிகிச்சைக்கு சென்று வருகிறார். இவரது சருமத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு பிளாஸ்டிக் சர்ஜரியில் கூட வழியில்லை என்று கூறிவருகிறார்களாம் மருத்துவர்கள்.
இந்த பேரதிர்ச்சியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. காரணம் இப்போது வந்திருக்கும் பிரச்சனை உடலில் அல்ல. முகத்தில்!
சமந்தாவுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டிலிருந்து அவர் விரைவில் மீள வேண்டும் என்பதே எல்லாருடைய விருப்பமும்.
http://www.tamilcinema.com/CINENEWS/...uly/260712.asp
-
26th July 2012 08:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks