-
13th August 2012, 11:49 PM
#11

Originally Posted by
P_R
எதுக்குங்க டெலீட், எடிட் எல்லாம் பண்ணிக்கிட்டு, தில்லானா வெளியிட சொல்லுங்க 'அப்படியே சாப்பிடலாம்'.

திருவிளையாடல் வெளியானதும் தில்லானாவின் வேலைகளை தொடங்கப் போவதாக திரு ஏ.பி.என்.பரமசிவம் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஹப்பர் நண்பர் திரு. மோகன்ராம் அவர்களுடன் நானும் ராகவேந்தர் சாரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது இந்த தகவல் கிடைத்தது. மேலும் திருவிளையாடல் படத்தின் ஆடியோ சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளும் லண்டனிலும் visuals சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளும் ஜெர்மனியில் நடைபெற்றதாக அறிய முடிந்தது. படத்தின் நீளம் சற்றே குறைக்கப்பட்டிருப்பதாகவும் படத்தில் வரும் சில தந்திரக் காட்சிகளில் சில கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்பட்டிருப்பதாக கேள்வி.[அதனால்தான் ரீ சென்சார்]. திருவிளையாடல் படத்தின் restoration மற்றும் ரிலீஸ் பற்றிய ஒரு செய்தி நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் கூட வெளிவந்திருக்கிறது.
திருவிளையாடல் தில்லானா இவற்றுக்கு நடுவில் சரஸ்வதி சபதம் வெளி வரலாம் என்றும் ஒரு செய்தி.
அன்புடன்
-
13th August 2012 11:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks