-
22nd September 2012, 08:09 PM
#11
Senior Member
Diamond Hubber
விகடன் பொக்கிஷம்!
மணிரத்னம் அளித்த பேட்டியில் இருந்து!
''படமெடுக்கணும்கற எண்ணம் எப்படி வந்தது? வீனஸ் ஸ்டூடியோ ரத்னமய்யர் உங்க அப்பா என்பதாலா?''
''நிச்சயமா அந்தக் காரணத்தினால் இல்லே. எல்லா வீடுகளைப் போலவும், 'என் துறை உனக்கு வேண்டாம்'கற டைப் தான் எங்க அப்பாவும். அவர் இஷ்டப்படியே என்னை ஒரு எம்.பி.ஏ. பட்டதாரியா ஆக்கி னார். என்னைப் பொறுத்தவரை ஒரு கம்பெனிக்கு டைரக்டரா இருக்கறதைவிடவும் ஒரு சினிமாவுக்கு டைரக்டரா இருக்கறது சுலபம்னு தெரிஞ்சுது! அதனால படமெடுக்க வந்தேன்'' என்றார்.
தான் அமெரிக்கா சென்று ஃபிலிம் டெக்னாலஜி பற்றிப் படித்ததாகக் கூறப்படுவதை 'வதந்தி' என்று மறுத்தார்.
''முதல் படம் 'பகல் நிலவு' தானே?''
''அது தமிழில் முதல் படம். நான் எடுத்த முதல் படம், கன்னடத்துல 'பல்லவி, அனுபல்லவி'ன்னு. அதுல லட்சுமி, அனில்கபூர், விஷ்ணுவர்த்தன் லாம் நடிச்சாங்க. அது 'ஏ அண்ட் பி சென்ட்டர்'ல நல்லா ஓடிச்சு. இரண்டாவது 'உணரு'னு ஒரு மலையாளப் படம். அது கொஞ்சம் பொலிடிகலா, தொழிற்சங்கம் சம்பந்தப்பட்ட படம். சுமாரா ஓடிச்சு. அதுக்கப்புறம்தான் 'பகல் நிலவு', 'இதயக் கோயில்', 'மௌன ராகம்'னு தமிழ்ல மூணு படங்கள் செய்திருக்கேன்!''
https://www.facebook.com/photo.php?f...count=1&ref=nf
-
22nd September 2012 08:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks