-
2nd October 2012, 02:21 AM
#11
Senior Member
Diamond Hubber
Ajanta producer putting too much scene it seems!
http://www.tamilcinema.com/CINENEWS/...ct/011012c.asp
பாட்டுக்காகவே படங்கள் ஓடிய காலம் ஒன்று உண்டு. இன்று யூ ட்யூப்பில் பாடலை மட்டும் கேட்டுவிட்டு படத்தை அம்போவென்று விட்டுவிடுகிற ஸ்டைல் வந்துவிட்டது மக்களுக்கு. 'இது ஒரு இன்னிசை மழை' என்றே போஸ்டர் போட்ட காலம் மீண்டும் வருமா? அஜந்தா தயாரிப்பாளரும் இயக்குனருமான ராஜ்பா ரவிசங்கரிடம் கேட்டால், வராதுன்னு சொல்லவே மாட்டார். ஏனென்றால் இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே சிறந்த இசைக்கான தமிழக அரசின் விருதினை பெற்றுவிட்டது. இந்த அரிய பெரிய அங்கீகாரத்தை இப்படத்திற்கு அளித்தவர் இசைஞானி இளையராஜா. அதுமட்டுமல்ல, படமே இசை தொடர்பான கதையமைப்பு கொண்டதுதானாம்.
பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜ்பா ரவிசங்கர், 'போதும்ப்பா' என்கிற அளவுக்கு பேசித்தள்ளினாலும், தாடி வைக்காத ராஜேந்தராகவே இருந்தார் தன்னம்பிக்கை விஷயத்தில். 'இனிமேல் நான் தயாரிக்கப் போகும் எல்லா படத்திலும் இசைஞானி இளையராஜாதான் இசையமைப்பார். ஒருவேளை முடியலேன்னு சொல்லிட்டா நானே இசையமைப்பேன். ஏன்னா நான் எக்ஸ்ட்ரா பிரைன் பவர் உள்ளவன்' என்றார் அவரே.
2009 ல் இந்த படத்தை வெளியிட நாள் குறிச்சிட்டேன். அப்புறம் ஒரு சின்ன பிரச்சனையினால் ரிலீஸ் பண்ணல. அப்போ நான் ரிலீஸ் பண்ணியிருந்தா இந்த படம் முப்பது கோடி கலெக்ட் பண்ணியிருக்கும். அதுமட்டுமில்ல, இந்த படத்தை ரஜினி படம் வரும்போது ரிலீஸ் பண்ணனும்னு நினைச்சேன். அதுவும் முடியாம போச்சு என்றார். 'அஜந்தா படத்துக்கு டென்ஷனா வாங்க, சிரிச்சுகிட்டே போங்க' என்கிற இந்த ராஜ்பா ரவிசங்கர் ஒரு வழக்கறிஞரும் கூட. அது மட்டுமல்ல, அவரது இன்னொரு தொழில் ஆடிட்டர். 'சில படங்களில் வில்லனா நடிக்க கூப்பிட்டாங்க. யோசிச்சிட்டு இருக்கேன்' என்றார். போகிற போக்கை பார்த்தால் பவர் ஸ்டாரையே பஞ்சராக்குவார் போலிருக்கே!
Also I guess NEPV wave is kind of helping many producers like this, to release the IR movies lying in can! This one, Padithurai... Kavuthamu, unakku cut out paalaabishegam ellaam pathaathuyaa, Straight aa Kovil thaan
-
2nd October 2012 02:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks