Page 1 of 400 1231151101 ... LastLast
Results 1 to 10 of 3998

Thread: Makkal Thilagam MGR Part-3

  1. #1
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Makkal Thilagam MGR Part-3

    மக்கள் திலகம் பாகம் -3

    மக்கள் திலகம் பாகம் -3 .இந்த திரியை மக்கள் திலகத்தின் தீவிர பக்தனான என்னை துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட எங்களது இனிய நண்பர்களும் . நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ராகவேந்திரன் , திரு பம்மல் சுவாமிநாதன் , திரு நெய்வேலி வாசுதேவன் மூவேந்தர்களின் அன்பு வேண்டு கோளை ஏற்று இதயங்கனிந்த வணக்கங்களுடன் வாழ்த்துக்களுடன் இந்த பொன்னான நன்னாளான ஆயுத பூஜை தினமான இன்று துவக்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் .
    மக்கள் திலகத்தின் நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் இந்த திரியை மக்கள் திலகத்தின் சாதனை வரலாற்று சுவடாக கொண்டு செல்வோம் .
    மக்கள் திலகம் பாகம் -2 திரியில் பதிவுகளை அளித்த எல்லா நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியில் பங்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கின்றேன் .
    என்றும் நட்புடன்
    வினோத்
    Last edited by esvee; 23rd October 2012 at 09:02 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை
    அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்

    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வரவேண்டும் தோழா
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வரவேண்டும் தோழா
    பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
    துணிவும் வரவேண்டும் தோழா
    பாதை தவறாமல் பண்பு குறையாமல்
    பழகி வரவேண்டும் தோழா
    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோவில்
    ஒன்றே உன் வேதம்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை

    வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
    கோழை குணம் மாற்று தோழா
    நாளை உயிர் போகும் இன்று போனாலும்
    கொள்கை நிறைவேற்று தோழா
    வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
    கோழை குணம் மாற்று தோழா
    நாளை உயிர் போகும் இன்று போனாலும்
    கொள்கை நிறைவேற்று தோழா
    அன்பே உன் அன்னை
    அறிவே உன் தந்தை
    உலகே உன் கோவில்
    ஒன்றே உன் வேதம்

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
    கடமை அது கடமை
    கடமை அது கடமை

  4. #3
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !
    எழுத்தும் மூன்று - இவன்
    மூச்சு உள்ளவரை

    முடியாது என்றில்லாமல்
    நினைத்ததை முடித்தவன்

    நடித்து படைத்தான் - இன்றும்
    சரித்திரம் பேசியது

    வள்ளலாய் வாழ்ந்தது - அன்று
    மூச்சிருக்கும் வரை முதல்வனாய்

    கோடி ரசிகர்களை பெற்று என்றும்
    நடிகனாய் மக்கள் மனதில்

    courtesy -!-ஸ்ரீவை.காதர் -

  5. #4
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ஈகை எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.


    நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார் எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.

    முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் வாழ்நாளில் மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர். “செத்துப் பிழைச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்று வாலிப கவிஞர் வாலி எழுதிய வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை.
    Last edited by esvee; 24th October 2012 at 06:29 PM.

  6. #5
    Senior Member Diamond Hubber HonestRaj's Avatar
    Join Date
    Aug 2008
    Posts
    7,900
    Post Thanks / Like
    MGR pidikkum pidikkadhu enbadhai ellam thaandi.. sameebakaalamaga avar padangalin paadalgalai virumbi ketkikren..
    adhukkaga indha part-3'ku oru


  7. #6
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வினோத் சார்,
    தொய்வுற்றுக் கிடந்த இந்தத் திரியின் இரண்டாம் பாகத்திற்கு உத்வேகம் கொடுத்து புத்துயிர் தந்து மிகக் குறுகிய காலத்தில் மூன்றாம் பாகம் துவக்கும் அளவிற்கு வளர்த்து விட்ட பெருமை தங்களுக்கும் ரவிச்சந்திரன் இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. தங்கள் இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள். செயற்கையாக உருவாக்கப் படக் கூடிய ஆவணங்களை ஏற்க மாட்டோம் என்று கூறி நேர்மையான நெஞ்சோடு வெற்றி நடை போட வைக்கும் தங்களுடைய பங்களிப்பில் இந்த மூன்றாம் பாகமும் இதே வேகத்துடன் வெற்றி நடை போடும் என்பதில் ஐயமில்லை. தங்களுக்கும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும், மற்றும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இத்திரியில் பங்களித்து பதிவளித்த பம்மலார், வாசுதேவன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இதயங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.



    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #7
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் mgr -பாகம் -3 துவங்கியதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரு ராகவேந்திரன் ,திரு பம்மலார் ,திரு நெய்வேலி வாசுதேவன் ,திருப்பூர் ரவிச்சந்திரன் ,பேராசிரியர் செல்வகுமார் ,பேராசிரியர் சிவகுமார் மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்த சென்னை , பெங்களூர் ,மதுரை , திருச்சி , கோவை ,நகர மக்கள் திலகம் mgr -அன்பு ரசிக உள்ளங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள் .
    நட்புடன் வினோத்
    Last edited by esvee; 24th October 2012 at 06:16 AM.

  9. #8
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  10. #9
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
    ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!
    அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
    'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.
    பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
    புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
    எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
    எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
    எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
    வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
    courtesy-one india tamil

Page 1 of 400 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •