-
20th August 2012, 11:43 AM
#281
Junior Member
Junior Hubber
And Mr Mathu, I am indeed grateful to you for the video clip on Thendralil Aadai Pinna. I am sure you’ll agree with me it’s a lovely song, more a ballad and Suseelamma renders it so beautifully. Although I have not watched the film Kanne Pappa, the clip you provided gave a graphic view of the scene. Sorry for this late reply as I have been overseas for some time. Thank you so very much. Cheers!
Last edited by Ravi Krishnan; 20th August 2012 at 11:44 AM.
Reason: grammar
Rose is a rose is a rose
-
20th August 2012 11:43 AM
# ADS
Circuit advertisement
-
22nd August 2012, 08:37 AM
#282
Senior Member
Seasoned Hubber
நான்கு சுவர்கள் படத்திலிருந்து ....
நினைத்தால் நான் வானம் சென்று
நினைத்துப் பார்த்தீர்களா இப்பாடல் காட்சியினைக் காண்போம் என்று....
என்று சொல்கிறார்களோ ரவிச்சந்திரனும் வாணிஸ்ரீயும்
மெல்லிசை மன்னரின் சூப்பர் ட்யூனில் எஸ் பி பாலா சுசீலா குரல்களில் தேன் மழை பொழியும் தெவிட்டாத கானம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th September 2012, 10:05 AM
#283
Junior Member
Devoted Hubber
பாடல்: திருமகள் தேடி வந்தாள்
திரைப்படம்: இருளும் ஒளியும்
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: A V M ராஜன் , வாணிஸ்ரீ
வருடம்: 1971
இசை: K V மகாதேவன்
இயக்கம்: S R புட்டண்ணா கங்கள்
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=518662
-
16th September 2012, 10:12 AM
#284
Junior Member
Devoted Hubber
Last edited by Isai Rasigan; 25th September 2012 at 08:48 AM.
Reason: To add audio link.
-
26th September 2012, 08:13 PM
#285
Senior Member
Seasoned Hubber
70களின் மத்தியில் மிகவும் பிரபலமான, விஜய பாஸ்கரின் இனிய இசையில் மறக்க முடியாத பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th November 2012, 09:55 AM
#286
Senior Member
Seasoned Hubber
Andharangam - Devarajan -PS -KJY-Kamalkanth
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் ..
அந்தரங்கம் 1975 திரைப்படத்திற்காக
கமலஹாசன் தமிழ்த் திரையில் பாடிய முதல் பாடல் என்று நம்புகிறேன்
வாய்ப்பளித்த இசையமைப்பாளர் தேவராஜன்
பாட்டுக்கு சொந்தக்காரர் நேதாஜிதானே ?
உண்ணி மேரி தீபாவின் அறிமுகம் !
லைப்பரியில் பார்த்த சாண்டில்யன் நாவலின் அட்டைப்பட இளவரசி போன்ற களையான முகம்
அவரது குண்டு உடம்பை குறைப்பதற்கு பிரயத்தனப்படும் நாயகன்
உடற்பயிற்சி என்று வெட்ட வெளியில் தீபாவை அம்மி அரைக்க சொல்லி
கவர்ச்சிக்காக ஆட்டிப் படைத்து இருக்கிறார்கள்
நல்ல வேளை அரிசி குத்த சொல்லவில்லை
கமல் தீபா இளஞ்சிட்டு ஜோடி
புதுமுகமே சிறு ? மதுக்குடமே இள மதிமுகமே ..
என்று கண்ணதாசனோ வாலியோ பாட்டு
P சுஷீலா K J யேசுதாஸ் குரலின் மிக இனிமையாக ஒலிக்கும்
கருப்பு வெள்ளைப் படத்தில் இரண்டு கலர் பாட்டுக்கள்
முடிந்தால் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்
லண்டன் டியூப்பில் தொலைந்தது கிடைத்தாலும்
யூ டியூப்பில் பார்க்கக் கிடைப்பதில்லை
அகப்பட்டாலும் நிலைப்பதில்லை
கவர்சியான நீச்சலுடை தீபாவை விளம்பரப்படுத்தி
போஸ்டரில் பெரிதாய் ஒட்டிக்காட்டி
பார்க்கும் உள்ளங்களை படாதபாடுபடுத்திய
ஒரு மாதிரியாக சிந்திக்க வைத்த திரைப்படப் பெயரும் அந்தரங்கம் என்று
போய்ப் பார்த்தால் மேஜர் சுந்தராஜனுக்கும் சாவித்திரிக்கும்
இன்னும் குமாரி பத்மினினிக்கும் இடையில் என்னமோ !
பாவமில்லையா ரசிகர்கள் 
Regards
-
9th November 2012, 05:47 PM
#287
Senior Member
Diamond Hubber
Thanks a lot TFML
கொஞ்ச காலத்துக்கு முன்னால் ஒரு thread-il நான் இந்தப் பாடல்கள் மட்டும் கலரில் வந்தவை என்று சொன்னபோது
பலரும் அதை நம்பவில்லை. ( யாருங்க அது... ? ) இப்போது இதைக் கலரில் தந்து என் வார்த்தையை காப்பாற்றிய
நீங்கள் வாழ்க
-
9th November 2012, 06:44 PM
#288
Senior Member
Seasoned Hubber
டியர் மது சார்,
அந்தரங்கம் படம் வெளியான போது கலர் பிரதி எடுப்பதில் பிரச்னை வந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். சென்னையில் பிளாசா உட்பட வெளியான திரையரங்குகளிலும் மற்றும் சில முக்கியமான அதாவது ஏ சென்டர்களிலும் இப் பாடல் காட்சிகள் கலரில் திரையிடப் பட்டாலும் வேறு சில ஊர்களில் கருப்பு வெள்ளையில் தான் வெளியானது. படம் வெளியாகி ஒரு பத்து நாட்கள் கழித்து பிளாசாவில் இரண்டாவது முறை அப்படத்தைப் பார்த்த போது, அருகில் இருந்த ஒருவர் ஆச்சரியப் பட்டார். எங்க ஊரில் கலரில் திரையிடவில்லையே என்றார். அவருடைய ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் சற்றே உள்ளே அமைந்த ஒரு சிறு நகரம் என்றார். நான் அந்த ஊர் பேரைக் கேட்டு வியந்து கேட்டேன், உங்கள் ஊரில் வெளியாகி விட்டதா என்று. அதற்கு அவர் சொன்னார் எங்கள் ஊரில் முதல் வெளியீட்டில் வராது, பக்கத்து ஊரில் வரும் அவர்கள் தியேட்டருக்கும் விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளர் தரப்பில் இருந்த கருத்து வேறுபாட்டால் அவருடைய ஊரில் வெளியிட்டதாகவும் சொன்னார். இது போல் பல சிறு நகரங்களில் இந்தப் படம் முழுதும் கருப்பு வெள்ளையில் வெளியானது. இதற்கு வண்ணப் பிரதி எடுக்கத் தேவையான மூலப் பொருள் பற்றாக்குறை எனக் காரணம் சொன்னார்கள்.
இந்தப் பாடல்களை வண்ணத்தில் இங்கு நமக்களித்த டிஎம்எ...ப்எல் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.
-
9th November 2012, 10:57 PM
#289
Junior Member
Devoted Hubber
பாடல்: வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
திரைப்படம்: பருவகாலம்
பாடியவர்: P மாதுரி
பாடல் வரிகள்: புலமை பித்தன் (ஒரு வேளை பூவை செங்குட்டுவனாக இருக்கலாம்)
நடித்தவர்கள்: கமல்ஹாசன், ரோஜாரமணி
இசை: G தேவராஜன்
வருடம்: 1974
-
10th November 2012, 08:40 AM
#290
Senior Member
Diamond Hubber
பருவ காலம் மலையாள செம்பருத்தியின் ரீமேக்...
"சக்ரவர்த்தினி", :"அம்பாடிதன்னிலோர் உண்ணி" போன்ற அருமையான பாடல்கள் தந்த தேவராஜன் தமிழிலும் இனிமையான பாடல்கள் கொடுத்திருந்தார்.
இதோ "வெள்ளி ரதங்கள்" பாட்டின் சோக வர்ஷன்..
Bookmarks