தேவனின் கோயில் பாடலை பல முறை கேட்க நேர்ந்தாலும் மனதில் அதை என்றுமே சோக கீதமாக நிலைநிறுத்த முடியவில்லை. ராஜா இசையில் புகழ்பெற்ற சோக கீதங்கள் எல்லாமே பாடல் ஆரம்பித்து முடியும் வரை இசையும், வரிகளும் அந்த உணர்வுகளை தெளித்துக் கொண்டே செல்லக்கூடியவை. பாடல் வரிகள், குரலைத் தவிர.. பாடல் முழுவதும் பின்னணி இசையில் சோக உணர்வுக்கான இசைக் குறிப்புக்களை தேட வேண்டியிருக்கிறது. இரண்டாம் இடையிசை - ராஜாவின் "தந்தன தந்தன" - துள்ளலான பாடலுக்கு அப்படியே வாடகைக்கு விடலாம். "தேவனின் கோயில்" பாடல் - நல்ல மெலடி என்ற நிலையில்தான் இருக்கிறது இன்றும். சுகா எழுதியிருக்கும் உணர்வுகளை என்றுமே நான் எட்டியதில்லை. ஆச்சர்யமாகவும் அதீதமாகவும் தோன்றுகிறது. பாடலையொட்டிய ஒவ்வொரு ரசிகனின் உணர்வுகளும் வெவ்வேறு என கருதிக்கொள்கிறேன். ராஜாவின் இசையில் சோக கேதங்கள் என பட்டியலிட்டால் முதல் நூறு இடங்களில் கூட என்னால் இந்தப் பாடலை அடைக்க முடியாது.





Bookmarks