மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள்
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் குறிப்பாக நெல்லை - நாகர்கோயில் மாவட்டங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது .மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நாகர்கோயில் நகரை சேர்ந்தவருமான திரு நாகர்கோயில் k.s .மணி அவர்கள் மூலமாக பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய மக்கள் திலகத்தின் சாதனை பட்டியல் .
நன்றி திரு மணி சார் . செல்வகுமார் சார் .
.
1. முதன் முதலில் நாகர்கோயில் நகரில், 1969ம் ஆண்டிலேயே, ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்தது இதய தெய்வம் எம். ஜி. ஆர்.
அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். முத்து திரை அரங்கில் வெளியானது.
2. அதே போல் முதன் முதலில் நாகர்கோயில் நகரில் ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் பொன் மனச்செம்மலின்
"உலகம் சுற்றும் வாலிபன்" படமே. வெளியான ஆண்டு 1973. திரை அரங்கம் : முத்து.
3. மறு வெளியீடு செய்யப்பட பழைய படங்களில் முதன் முறையாக ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் மக்கள் திலகம்
எம். ஜி. ஆர். அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். இம்முறை கார்த்திகை திரை அரங்கில் வெளியானது. மறு வெளியீடு
செய்யப்பட்ட வருடம் 1987.
4. நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1969ல் சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட "அடிமைப்பெண் ' திரைப்படம் தான்.
5. அதே நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் மூன்று லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1973ல் அதே சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட " உலகம் சுற்றும் வாலிபன் ' திரைப்படம்.
6. நெல்லை மாநகரில் முதன் முதலாக வெள்ளி விழா கண்டதும் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். நடிப்பில் 1974ம் வருடம் வெளியான
"உரிமைக்குரல்" திரைப்படம்.
7. நெல்லை மாநகரில் 1977ம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படங்களாக, நமது கலியுக கர்ணன் எம்.ஜி.ஆர்.
அவர்களின் நடிப்பில் வெளியான "மீனவ நண்பன்" மற்றும் "இன்று போல் என்றும் வாழ்க" திரைப்படங்கள்.
8. நெல்லையில் 1975ல் அதிக வசூல் சாதனை படைத்தது சென்ட்ரல் அரங்கில் வெளியிடப்பட்ட கலையுலக
காவலனின் "இதயக்கனி" திரைப்படமும், பூர்ணகலா அரங்கில் வெளியிடப்பட்ட "பல்லாண்டு வாழ்க" படமும் தான்.
9. நெல்லையில் 1976ல் "நீதிக்கு தலை வணங்கு" 11 வாரங்களும், "உழைக்கும் கரங்கள்" 9 வாரங்களும், "ஊருக்கு உழைப்பவன்"
50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது.
Bookmarks