-
8th December 2012, 11:57 PM
#1251
Moderator
Diamond Hubber
சின்னத்திரைக்கு வரவிருக்கும் பிரகாஷ் ராஜ்
தனியார் தொலைகாட்சி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 வை நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவில் வில்லனாக நடித்து தனக்கென ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளவர் பிரகாஷ்ராஜ். சின்னத்திரை இவருக்கு புதிது அல்ல. சினிமாவில் அதிகமாக வாய்ப்பு கிடைக்கும் முன்பாக பாலச்சந்தரின் ‘கையளவு மனசு' தொடர்மூலம் நடித்து பிரபலமானார். பின்னர் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் நடித்தவர். இப்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அடிஎடுத்து வைக்கப்போகிறாராம்.
தனியார் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் பிரகாஷ் ராஜ் என்று சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' சீசன் 1 தொகுத்து வழங்கிய சூர்யாதான் 2வது சீசனை தொகுத்து வழங்கப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மாற்றான் படத்திற்குப் பிறகு சிங்கம்-2 படத்தில் பிஸியாகிவிட்டார் சூர்யா. ஆனாலும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்திற்காக அவருடன் பேசியுள்ளனர் தனியார் டிவி குழுவினர். நீங்களும் ஆனால் அதற்கு சூர்யா மறுத்துவிட்டாராம். தவிர்க்க முடியாத சில காரணங்களால் சூர்யா வேண்டாம் என்று கூறிவிட்டதால் தென்னிந்திய மொழிகளில் பாப்புலரான பிரகாஷ்ராஜை தேர்ந்தெடுத்துள்ளது தனியார் தொலைக்காட்சி.
நன்றி: தினகரன்
-
8th December 2012 11:57 PM
# ADS
Circuit advertisement
-
14th December 2012, 07:42 PM
#1252
Moderator
Diamond Hubber
அத்திப்பூக்கள்
5 வருடத்தின் பின் முடிவுற்றது.

சன் டி.வி.யில் புதிய தொடர் வள்ளி
சென்னை : சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ‘அத்திப்பூக்கள்’. வரும் 14,ம் தேதியுடன் இது முடிவடைகிறது.
இதையடுத்து அதே நேரத்தில் 17,ம் தேதி முதல் ‘வள்ளி’ என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஆர்.பி.மருது இயக்குகிறார். சரிகம இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. உமா, ராம்ஜி, இந்திரஜா உட்பட பலர் நடிக்கின்றனர். பிழைக்க வந்த இடத்தில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் சுப்பிரமணியும், வாழ்வின் இன்னல்களில் இருந்து விடுபட்டு அதே ஊருக்குச் செல்லும் வள்ளியும் பேருந்து பயணத்தில் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பு இரண்டு பேர் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. எப்படி என்பது இதன் திரைக்கதை.
Last edited by aanaa; 15th December 2012 at 05:39 AM.
"அன்பே சிவம்.”
-
24th December 2012, 05:44 AM
#1253
Moderator
Diamond Hubber
நாட்டிய கொண்டாட்டம்
ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாட்டிய நிகழ்ச்சி, தக திமி தா. இந்தியாவின் சாஸ்திரிய நடன கலைக்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தேடித்தந்த தக திமி தா நிகழ்ச்சி, இனி வரும் வாரங்களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள சாஸ்திரிய நடனங்களை கொண்டாடுகிறது. கதகளி, மோகினியாட்டம், ஓடிசி, சிம்ம நந்தினி, குச்சிப்புடி போன்ற பல்வேறு வித்தியாசமான நாட்டிய விருந்தை வரும் வாரங்களில் ருசிக்கலாம். 450 வாரங்களை கடந்து தொடரும் இந்த நிகழ்ச்சி ராப்பா விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதது. இந்தியாவில் வெவ்வேறு நாட்டியக்கலைகளில் புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள். தக திமிதா நாட்டிய கொண்டாட்டத்தை ஸ்ரீசித்ரா தொகுத்து வழங்குகிறார். கருத்து - வடிவமைப்பு மற்றும் இயக்கம்: ராதிகா சூரஜித். ஒருங்கிணைப்பு மற்றும் இணை இயக்கம்: சர்ச்சில் பாண்டியன்.
நன்றி: தினதந்தி
-
24th December 2012, 05:48 AM
#1254
Moderator
Diamond Hubber
கார்த்திகைப் பெண்கள்
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை பெண்கள் தொடர் சென்டிமென்ட், மர்மம், நகைச்சுவை என எல்லாத் தளங்களிலும் சரிவிகிதக் கலவையாய் அமைந்து விறுவிறுப்பின் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. சொந்த தகப்பன் மற்றும் சகோதரனின் ஜாதிவெறிக்கு தன் கணவனை பறிகொடுத்த ஆர்த்திக்கு மீண்டும் சாருவே அடைக்கலம் தருகிறாள். மூர்த்தி பெரியவருக்கு ஆதரவாக மாறிவிடுகிறான். சாருவும் ஆர்த்தியும் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்வதை தடுப்பதற்காக அவர்களை கொல்ல பெரியவர் தனது ஆட்களை ஏவி விடுகிறார். சாருவும் ஆர்த்தியும் உயிர் பிழைப்பார்களா?
அம்மாவின் வற்புறுத்தலுக்காக சாருவின் ஹாஸ்டலை விட்டு வெளியேறிய செண்பகா, தன் மாமா வீட்டிலும் இருக்க முடியாமல் புது ஹாஸ்டலில் சேருகிறாள். அங்கு அவள் வாழ்க்கையை மாற்றப் போகும் ஒரு புதிய நபரை சந்திக்கிறாள். அது யார்? செண்பகாவும் பிரேமும் பழகுவதைக் கண்டு பொறாமைப்படும் பியூலா, அடுத்து என்ன செய்யப் போகிறாள்? பியூலாவை போனில் தொந்தரவு செய்யும் மர்ம மனிதன் யார்? கேள்விகள் அத்தனைக்கும் கார்த்திகைப் பெண்கள் தொடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பதில் கிடைக்கும் என்கிறார், தொடரின் கிரியேட்டிவ் ஹெட் எம்.திருமுருகன். தொடருக்கான கதையை வடிவமைத்ததோடு, தொடரின்தயாரிப்பும் இவரே. திரைக்கதை வசனம்: பாஸ்கர் சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். படத்தொகுப்பு: பிரேம். இசை:சஞ்சீவ் ரத்தன். இயக்கம்: கவிதாபாரதி. தொடரின் கதை மாந்தர்களாக பானுச்சந்தர், ‘கல்கி’ சுருதி, ராஜேந்திரன், ஷீபா, செல்வராஜ், ஆனந்தி, நிமா, சுவேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
24th December 2012, 05:49 AM
#1255
Moderator
Diamond Hubber
பாங்காக்கில் துளசி
ஜீ தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் துளசி தொடரின் படப்பிடிப்புக் குழு கதைக்காக பாங்காக் பறந்திருக்கிறது. பாங்காக்கின் கண்கவர் இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தன் ஆசைப்படி துளசியை திருமணம் செய்து கொண்ட பிரசன்னாவிற்கு மேலும் பல சோதனைகள் தொடர்கிறது. தான் விரும்பிய துளசி தன்னை விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம். தன்னைவிட அன்பையும், பாசத்தையும் செல்வாவிடமும், வக்கீல் வினோத்தின் குழந்தையிடமும் துளசி பாசமாக இருப்பது பிரசன்னாவிற்கு பிடிக்கவில்லை. தன் மீது மட்டுமே துளசி அன்பு காட்டவேண்டும் என்று நினைக்கிறான். தன் அக்காவின் சொற்படி துளசியை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்த நினைக்கிறான். அதற்காக துளசி மறுத்தும் அவளை சம்மதிக்க வைத்து அவளை பாங்காக்கிற்கு அழைத்துச் செல்கிறான். காதல் கனவில் செல்லும் பிரசன்னாவிற்கு அவர்கள் போவதற்கு முன்பே அங்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. துளசியை கூலிப்படையினர் மூலம் கொலை செய்ய கலைவாணியின் தந்தை திட்டமிடுகிறார்.
அதற்கு காரணம் பிரசன்னாவை விரும்பும் தன் மகள் கலைவாணியின் விருப்பத்தை நிறைவேற்ற இப்படி ஒரு கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். துளசி தன்னை புரிந்து கொண்டு தனிமையில் தன் காதலை உணர்ந்து இனி தன்னோடு சந்தோஷமாக வாழ்வாள் என்ற கனவோடு செல்லும் பிரசன்னாவை மேலும் பல அதிர்ச்சிகள் தொடர்கிறது. துளசி கடத்தப்படுகிறாள். இந்த உண்மை அறிந்து செல்வாவும் பாங்காக் செல்கிறான். துளசி இறந்து விட்டால் பிரசன்னா தனக்கு தான் என்ற சந்தோஷத்தோடு கலைவாணியும் பிரசன்னாவைத் தேடி பாங்காக் புறப்படுகிறான். துளசியை தேடிச்செல்லும் தன் கணவன் துளசியிடம் நெருக்கமாக இருந்து விடுவானோ என்ற பயத்தில் தாமரையும் பாங்காக் சென்று விடுகிறாள். கடத்தப்பட்ட துளசி இறந்து விட்டாள் என்ற செய்தி பிரசன்னாவிற்கு கிடைக்க, அவன் துடித்துப் போகிறான். காதலுக்காக வெளிநாடு சென்றவன், துளசியை இழந்த சோகத்தில் அழுகிறான். துளசியைப் போன்று பிரசன்னாவும் கடத்தப்படுகிறான்.
பிரசன்னாவின் நிலை என்ன? கலைவாணியின் எண்ணம் நிறைவேறியதா? துளசியை தேடிச்சென்ற செல்வா என்ன ஆனான்? அதிர்ச்சியான சம்பவங்களுடன் பாங்காக்கில் தொடர் தொடர்கிறது. ராஜ்பிரபுவின் திரைக்கதைக்கு பாபா கென்னடி வசனம் எழுத, இயக்கம்: பாலாஜி யாதவ்.
நன்றி: தினதந்தி
-
24th December 2012, 05:54 AM
#1256
Moderator
Diamond Hubber
சன் டிவி, இளவரசி தொடரின் கதையில் புதிய திருப்பங்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் இளவரசி தொடரின் கதையில் புதிய திருப்பங்கள் வரப்போவதாக தொடர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இளவரசி தொடர் சன் தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பல்வேறு சிக்கல்களை கடந்து 750 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது. கணவன் மனைவியான நாயகன் சுப்பிரமணி, நாயகி இளவரசி வாழ்க்கையில் திருமணம் நடைபெற்றதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகி வருகிறத. இப்போது குழந்தை பிறந்த பின்னரும் சிக்கல் நீடிக்கிறது. குழந்தையை யார் கடத்தியது என்பது தொடர்பாக கணவன் மனைவி இடையே பிரச்சினை உருவாகிறது. இப்போது இந்த தொடர் புதிய திருப்பங்களை சந்திக்க உள்ளதாம்.
கணவன் சுப்ரமணிதான் குழந்தையை கடத்தியது என்று தவறாக நினைக்கும் இளவரசி கணவனை விட்டுப் பிரிந்து தோழியின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். தோழியின் கணவன் கார்த்திக் திட்டம் போட்டு இளவரசியை சுப்ரமணியிடம் இருந்து அவளை நிரந்தரமாக பிரித்துவிடுகிறான்.
கார்திக்கின் நாடகம் இளவரசிக்கு தெரியவருகிறது. இதனை கார்த்திக் மனைவி அபியும் தெரிந்து கொள்கிறாள். இதனையடுத்து இளவரசியின் நன்மையை கருதி அபி எடுக்கும் முடிவு அவளுக்கே பாதகமாக அமைகிறது.
இதனிடையே நண்பனின் உதவியோடு ஆட்டோ ஓட்டும் சுப்ரமணிக்கு கோடீஸ்வர பெண் ரம்யாவின் நட்பு கிடைக்கிறது. அவள் இளவரசிக்கும் சுப்ரமணிக்கும் இடையே குறுக்கிடுகிறாளா? அவளது பயணம் எதை நோக்கியது என்று திடுக்கிடும் திருப்பங்களுடன் இனி வரப்போகும் எபிசோடுகளில் காணலாம். இதில் இளவரசியாக சந்தோஷியும், சுப்ரமணியாக ஸ்ரீகர் நடித்திருக்கின்றனர். இயக்கம் எம்.கே. அருந்தவராஜா, கிரியேட்டிவ் ஹெட் ராதிகா சரத்குமார்.
நன்றி: தினகரன்
-
29th December 2012, 05:56 AM
#1257
Moderator
Diamond Hubber
புகுந்த வீடு
திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகுந்த வீடு தொடர் பரபரப்பான திருப்பங்களில் வேகம் பிடிக்கிறது.
தொடரின் கதைச்சுருக்கம் வருமாறு.
விசு காட்டிய போலி பத்திரத்தை நம்பி அவனை திருமணம் செய்து கொண்ட கொள்ளைக்காரி அனுஷா, விசுவின் நிரந்தர மனைவியாக விரும்பி ராதாவுக்கு பல இன்னல்களை விளைவிக்கிறாள். அதற்காக ராதாவின் புகுந்த வீட்டினரைக் கவர திட்டமிடுகிறாள். அதன் முதல் படியாக ராதாவின் குழந்தை ஸ்வேதாவை கவர நினைத்து தோற்கிறாள். இதனால் வெறி கொண்ட புலியாக அலையும் அனுஷா, விசுவின் அம்மா ராஜேஸ்வரியை திரும்ப அவளின் வீட்டிற்கே உளவாளியாக அனுப்புகிறாள். இந்நிலையில் அனுஷாவின் உளவாளியாக ராதாவின் அப்பளக் கம்பெனியில் சேரும் பெண், அங்கு முக்கிய பொறுப்பில் இருக்கும் முருகனைக் கவர்ந்து அதன் மூலம் ராதாவை பலமிழக்கச் செய்ய திட்டமிடுகிறாள்.
இதற்கிடையே வீடு திரும்பிய ராஜேஸ்வரியை யாரும் ஏற்க மறுத்து உதாசீனப்படுத்துகின்றனர். இருப்பினும் ராஜேஸ்வரி தன் காரியத்தில் குறியாக இருக்கிறாள். விசுவும் அனுஷாவின் அம்மா, அப்பா ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து, அவர்களிடம் செய்த சபதத்தை முடிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபடுகிறான். இவை அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஜெய்குமாரின் எண்ணம் நிறைவேறியதா...? அப்பளக் கம்பெனியில் வேலைக்குச் சேரும் அனுஷாவின் உளவாளிப்பெண், முருகனின் மனதைக் கவர்ந்தாளா? ராஜேஸ்வரியின் கபடம் வெளிப்பட்டதா? பரபரப்பான வினாக்களுடன் தொடர்கிறது ‘புகுந்த வீடு தொடர்.
நன்றி: தினதந்தி
-
29th December 2012, 05:58 AM
#1258
Moderator
Diamond Hubber
நட்சத்திரங்கள் மோதும் புத்தாண்டு சிறப்பு ஜாக்பாட்
ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘ஜாக்பாட் நிகழ்ச்சி, புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஜாக்பாட்டாக களை கட்டுகிறது. நாளை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சியில், சின்னத்திரை நட்சத்திரங்கள் இரு அணிகளாக மோதுகிறார்கள். ஒரு அணியில் சதிஷ், மகாலட்சுமி. பாரதி மற்றும் விக்னேஷ் மற்றொரு அணியில் சாக்ஷி சிவா, காவ்யா, உதய் மற்றும் வெற்றிவேலன் பங்கேற்கிறார்கள். நடிகை சிம்ரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் எந்த அணி ஜாக்பாட்டை வெல்லப் போகிறது என்பது அன்றே தெரிந்து விடும்.
நன்றி: தினதந்தி
-
29th December 2012, 05:59 AM
#1259
Moderator
Diamond Hubber
‘இனி ஒரு விதி செய்வோம்’
வசந்த் தொலைக்காட்சியில் விரைவில் ஒளி பரப்பாகவிருக்கும் ‘இனி ஒரு விதி செய்வோம்’ நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்குகிறார். பள்ளிக்கூட மாணவர்களின் ஆடல், பாடல், நடிப்பு, பேச்சு போன்ற தனி திறமைகளையும் பொது அறிவு, சமூகம், மற்றும் கல்விசூழல் தொடர்பான விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும் களமே இந்த நிகழ்ச்சி. பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய மாணவர்களைக் கொண்ட பள்ளிக் கூடங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் நேரடியாக சென்று மாணவர்களை தேர்வு செய்கிறார்கள். நான்கு சுற்றுகளாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றான விவாத மேடையில் மாணவர்களோடு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பங்கு கொள்கிறார்கள் கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திரைத்துறை, கல்வித்துறை, அறிவியல் தொழில் நுட்பத்துறை போன்றவற்றில் பிரபலமானவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் பங்கு கொள்கிறார்கள். மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் இந்த நிகழ்ச்சியை கி.முத்துகுமார் இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
29th December 2012, 06:02 AM
#1260
Moderator
Diamond Hubber
சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா

சென்னை : இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில், நேற்று முன்தினம் மிகப் பிரமாண்டமான முறையில் நடந்தது. இது முழுக்க, முழுக்க பெண்களை கவுரவிக்கும் விழாவாக நடத்தப்பட்டது. சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன. இத்தொடர்களில் நடித்த சிறந்த கலைஞர்கள் மற்றும் பணியாற்றிய சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், சன் டி.வியுடன் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
அதன் விவரம் வருமாறு: வாழ்நாள் சாதனையாளர் விருது: டெல்லி குமார். நீண்ட நாட்களாக சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது: ராதிகா சரத்குமார்.
மற்றும் விகடன் டெலிவிஸ்டாஸ் பா.சீனிவாசன், விஷன் டைம்ஸ் ராமமூர்த்தி, அபிநயா கிரியேஷன்ஸ் ஜி.கிருஷ்ணமுர்த்தி, சினி டைம்ஸ் சவுந்தர்ராஜன், ஷான் மீடியா கபிலன், சரிகம பி.ஆர்.விஜயலட்சுமி, ஹோம் மீடியா சுஜாதா விஜயகுமார், யுடிவி சந்தோஷ் நாயர், திரு பிக்சர்ஸ் திருமுருகன், நிம்பஸ் குமார்.
நீண்ட நாட்களாக டி.வி தொடரின் நேரத்தை தக்கவைத்துக் கொண்டதற்கான விருது: ராதிகா சரத்குமார்.
சிறந்த நடிகை சிறப்பு விருது: ரம்யா கிருஷ்ணன் (தங்கம்).
கதாநாயகன்: திருமுருகன் (நாதஸ்வரம்).
கதாநாயகி: அபிதா (திருமதி செல்வம்).
இயக்குனர்: எஸ்.குமரன் (தென்றல்).
தொடர்: ‘திருமதி செல்வம்’.
மாமனார், மாமியார்: மகாநதி சங்கர் (நாதஸ்வரம்), வடிவுக்கரசி (திருமதி செல்வம்).
மருமகன், மருமகள்: சதீஷ் (அத்திப்பூக்கள்), ஸ்ரித்திகா (நாதஸ்வரம்).
பொருத்தமான ஜோடி: தீபக், ஸ்ருதி (தென்றல்).
ஒளிப்பதிவாளர்: வசீகரன் (செல்லமே).
எடிட்டர்: கணேஷ் (செல்லமே).
டப்பிங் கலைஞர்கள்: சங்கர் (செல்லமே), ஜெயவித்யா (தங்கம்).
பெண்மையை உயர்த்தும் கவுரவ விருது: தேவயானி (முத்தாரம்).
சகோதரர், சகோதரி: ராதாரவி (செல்லமே), அனுராதா (தங்கம்).
தாய், தந்தை: விஜி சந்திரசேகர் (அழகி), மவுலி (நாதஸ்வரம்).
பின்னணி இசை: கிரண் (உதிரிப்பூக்கள்).
திரைக்கதை: அமிர்தராஜ், அமல்ராஜ் (திருமதி செல்வம்).
வசனகர்த்தா: வாசு பாரதி (நாதஸ்வரம்).
நகைச்சுவை நடிகர், நடிகை: முனீஸ்ராஜ் (நாதஸ்வரம்), காவேரி (தங்கம்).
வில்லன், வில்லி: பாலாசிங் (முத்தாரம்), ராணி (அத்திப்பூக்கள்).
துணை நடிகர், நடிகை: பொள்ளாச்சி பாபு (தங்கம்), சந்தியா (அத்திப்பூக்கள்).
விழாவில் நடிகைகள் லட்சுமி ராய், ஆண்ட்ரியா, ஓவியா, பிரணீதா, மதுஷாலினி, பிந்து மாதவி, அனுயா ஆகியோருடன் டி.வி நடிகர்கள் ஸ்ரீ, சஞ்சீவ், தேவ், வெங்கட் ஆகியோர் இணைந்து ஆடினர்.
நிகழ்ச்சிகளை தீபக், ஐஸ்வர்யா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இடையிடையே மதுரை முத்து, இமான் அண்ணாச்சி தோன்றி காமெடி நிகழ்ச்சி நடத்தினர்.
தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள், இயக்கு னர்கள், டி.வி கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நன்றி: தினகரன்
Last edited by aanaa; 29th December 2012 at 06:05 AM.
"அன்பே சிவம்.”
Bookmarks