Page 259 of 305 FirstFirst ... 159209249257258259260261269 ... LastLast
Results 2,581 to 2,590 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2581
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome Mr Balaa after a long gap and also Warm welcome to
    Mr Sashidhar sister.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2582
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Warm welcome to
    Mr Sashidhar sister.
    Thank you very much Mr Vasu

  4. #2583
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Uruguay
    Posts
    0
    Post Thanks / Like
    Wish you a Happy new year vasu sir

  5. #2584
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Uruguay
    Posts
    0
    Post Thanks / Like
    2013 is a Nadigar thilagam Shivaji's year,because Vasanthamaligai,Pasamalar,Veerabandiya kattabomman will be released in this year,so we are going to celebrate this year fully.
    ENJOY!
    Last edited by BALAA; 1st January 2013 at 09:24 PM.

  6. #2585
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    As the year 2012 belongs to "Karnan" the coming years also will be that our one and only NT.
    Creating records of sorts even after his death. No can match or nearar to his records.

  7. #2586
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!

    தூரத்தில் நின்றபடி சிவாஜி என்ற சிங்கத்திற்கு இறைச்சித்துண்டைக் காட்டிவிட்டு பின்னர் அதைத் தந்திரமாகக் கூண்டில் அடைத்து அதற்கு (கமலஹாசன் சொல்வது போல) தயிர் சாதம் கொடுத்து பட்டினி போட்ட, 80 களில் முளைத்த சில இயக்குனர்கள் (பாரதிராஜா போன்ற ஒரு சிலர் தவிர) மீது எனக்கு கோபமான கோபம்.

    200 இற்கும் மேல்பட்ட படங்கள் இருக்க, 80 களில் வந்த ஒரு சில சிவாஜி படங்களைப் பார்த்துவிட்டு அந்த நடிப்புச் சக்கரவர்த்தியின் நடிப்பை நேற்று முளைத்த காளான்களும் சுள்ளான்களும் விமர்சனம் செய்யுமளவிற்கு அவர்கள் கொண்டுவந்து விட்டதால் எனக்கு எரிச்சலோ எரிச்சல்.

    1952 இலிருந்து 1999 வரையில் எல்லாத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அந்த அட்சய பாத்திரத்திடமிருந்து தத்தமக்குத் தேவையான பங்கை எடுத்து வந்திருக்கின்றனர். 80 களில் வந்தவர்கள், தாமும் அந்த சிங்கத்துடன் சம்பந்தப்பட்டதாக சரித்திரம் புகழவேண்டும் என்ற ஆசையில் அதன் பெயரில் குளிர் காய விரும்பினார்களேயொழிய, அச் சிங்கத்துக்கான உரிய தீனியை கொடுக்கவில்லை. அவர்கள் எல்லோருக்கும் சிவாஜி அழவேண்டும், காதல் செய்யவேண்டும், உணர்ச்சி வசப்படவேண்டும். இடையிடையே சண்டை போடவும் வேண்டும். மற்றைய நடிகர்கள் செய்வதையே சிவாஜியும் செய்யவேண்டும் என எதிர்பார்த்தனர். சிவாஜிக்கிருந்த தனித்திறமையை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் வெளிக்கொணரப் பெரும்பாலானோர் முயலவில்லை.

    80 களில் நடிகர் திலகத்திற்கு அளிக்கப்பட்ட பல கதாபாத்திரங்கள் ஆழமாகச் சித்திரிக்கப்படவில்லை. 'டூயட்' இல்லாமல் வந்த தில்லானா மோகனாம்பாள் வெற்றிகரமாக ஓடவில்லையா? கௌரவத்தில் பார்த்த 'overly confident' ஆன ஒரு barrister ஐப் போல வேறொரு கோணத்தில், மனோவியல் ரீதியாக ஒரு கதாபத்திரத்தைச் சிருஷ்டித்திருக்கலாமே. ஆனந்த கண்ணீரிலும் சிம்ம சொப்பனத்திலும் சிவாஜியின் கதாபாத்திரங்களை மேலோட்டமாக வெறுமே கர்ஜிக்க விட்டிருந்தார்கள். மனைவி, மக்கள் என்றொரு கூட்டத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க விரும்பினார்கள் தயாரிப்பாளர்கள். இதெல்லாவற்றையும் தான் சிவாஜி ஏற்கனவே செய்துவிட்டாரே. இதெல்லாம் முடிந்துபோன விடயம் என்றாலும் ஒரு சிவாஜி ரசிகைக்குரிய ஆதங்கம் தான்.

    சிவாஜிக்கென்று வருடக்கணக்காக ஒரு கதையை சிறப்பாக எழுதி, அதை இன்னும் சிறப்பாக எம்முன் பாரதிராஜா படைக்கவில்லையா? அவரது ஆர்வம் ஏன் பிற இயக்குனர்களுக்கு வரவில்லை? துரையின் 'துணை'யில் நாம் பார்த்தது தசரத ராமனைத்தான், நடிகர் திலகத்தையல்ல. அழாமல், அதிகமாக உணர்ச்சி வசப்படாமல் அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தது அச்சிங்கம்.

    அறுபதுகளின் இறுதியில் சிவாஜியில் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உருவாக்கினார் பாலாஜி. அத்திருப்பம் வியாபார ரீதியில் பலருக்குப் பயனளித்ததுடன் சிவாஜி நடிப்பின் இன்னொரு கோணத்தையும் ரசிகர்களுக்குக் காட்டியது. வசந்தமாளிகை, ராஜா போன்ற போழுதுபோக்குப் படங்கள் எம்மை மகிழ்வித்தன. காவல் தெய்வத்தில் சிங்கம் 'சிங்கிள்' ஆக வந்தாலும் தாக்கு வழங்கப்பட்ட 'முறையான' தீனியை ருசித்து கர்ஜித்துவிட்டுச் சென்றது. தெய்வமகனில் அச்சிங்கத்தின் மூன்று பரிணாமங்களுக்கும் தீனி கிடைத்தது.

    ஆனால் 80களில் வந்த இயக்குனர்கள் (அவர்களில் 70 களில் வெற்றிப்படங்களைக்கொடுத்த இயக்குனர்களும் அடங்குவர்) தேவையில்லாமல் நடிகர் திலகத்துக்கு இரட்டை வேடம் மூன்று வேடம் என்று கொடுத்து அச்சிங்கத்தைக் கூண்டில் அடத்துவிட்டிருந்தார்கள்.

    ஆனால் பட்டினியாய்க்கிடந்தாலும் கூட அச்சிங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துவிட்டிருந்தது. அவர்கள் கேட்டதற்கு மேலேயே கொடுத்தது. யாரையும் நட்டப்படுத்த விரும்பவில்லை. அரசியலில் இருந்தவர்கள் தனது பிரபல்யம் என்ற சூரிய ஒளியில் குளிர் காய அனுமதித்ததைப்போல, தனது திறமை என்ற தென்றலில் தயாரிப்பாளர்களைத் தாலாட்டியது அச்சிங்கம்.

    இந்த வகையில் நாம் போற்றிப் பூஜிக்கவேண்டியவர்கள், அச் சிங்கத்துக்கு ஓரளவாவது நல்ல தீனி போட்ட தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் தான். அவர்கள் படைப்பில் வந்த நல்ல சிவாஜி படங்களை, பெரிதாகப் பேசப்படாமலிருக்கும் படங்களைத் தொலைக்காட்சியில் திரையிடுவதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அவற்றைப் பிரபலப்படுத்தவேண்டும். நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லை தில்லானா மோகனாம்பாளுடனும் கௌரவத்துடனும் நின்று விடவில்லை. 300 படங்களில் எமது ரசிப்புக்கேற்ற வகையில் எத்தனையெத்தனை பாத்திரப்படைப்புகள்! அவற்றையெல்லாம் இன்றைய பார்வையாளரிடம் கொண்டு செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்போதைய ஊடகங்களைப் பயன்படுத்தவேண்டும். திறனாய்வாளர்கள் அந்த படங்களில் சிவாஜியின் நடிப்பு பரிணாமங்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேல் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணவேண்டும்.

  8. #2587
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    Wish you and your family a very Happy New Year 2013
    Vazga Sivaji pugaz

  9. #2588
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Vanaja Madam,

    Your detailed analysis of our Singam is a nice one. NT has given equial number of
    hits even after 1980.

  10. #2589
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Vanaja Madam,

    Your detailed analysis of our Singam is a nice one. NT has given equial number of
    hits even after 1980.
    Thank you Mr Vasu, you are right, NT gave us more hits but my frustration is that the few flops which I thought could have been avoided.

  11. #2590
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    [u]நடிகர் திலகத்தின் முழுமையான வாழ்க்கை

    பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கை தனிப்பட்ட, தொழில் ரீதியான மற்றும் பொது வாழ்க்கை என்ற மூன்று கோணங்களில் பரிணமிக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் தமது தனிப்பட்ட, தொழில் வாழ்க்கைகளில் தத்தமக்கேற்ற எல்லைகளில் காரியங்களைச் செய்துவிட்டோ அல்லது சிறிதாகச் சாதித்துவிட்டோ போய்ச்சேர்ந்து விடுகிறார்கள். வாழ்க்கையின் இந்த எல்லாக் கோணங்களிலும் வெற்றி கண்டவர்கள் மிகச்சிலரே.

    அந்த வகையில் ஒரு முழுமையான வாழ்க்கையை, அதையும் பிறர் போற்றத்தக்க வகையில் மிகத்திறமையாக வாழ்ந்து காட்டியவர் தான் எமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

    நடிகர் திலகத்தின் வாழ்க்கையை நாம் நான்கு பரிணாமங்களாக பிரிக்கலாம்:

    1-தனிப்பட்ட வாழ்க்கை

    2-தொழில்/கலை வாழ்க்கை

    3- பொது வாழ்க்கை

    4-அரசியல் வாழ்க்கை

    இந்த நான்கிலுமே அவர் வெற்றி பெற்றதுடன் தனது தொழில்/கலை வாழ்க்கையில் இமயத்தையும் எட்டியவர். அவரது துறையில் சம காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் இருந்தவர்களின் வாழ்க்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது தெளிவாகிறது.

    தனது குடும்ப வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் என ஒரு பெரும் கூட்டுக் குடும்பமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து, தமிழர் பண்பாட்டின் சின்னமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை நிரூபித்துக்காட்டினார். தானுண்டு தனது மனைவி பிள்ளைகளுண்டு என வாழ்ந்து விட்டுப்போகும் பலர் மத்தியில், தனது சகோதரர்கள் குடும்பத்தினருக்கும் வாழ வழிகாட்டியவர் நடிகர் திலகம். இந்த வகையில் அவர் ஒரு நிறைவான, போற்றுதற்குரிய குடும்பத்தலைவர்.

    நடிகர் திலகத்தின் தொழில்/கலை வாழ்க்கையைப்பற்றிப் பேசத்தேவையில்லை. அதில் அவர் கண்ட உச்சம் உலகறிந்த ஒன்று. தனது ஒப்பற்ற நடிப்பினால் அவர் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த பங்களிப்பினையும் இவரின் கலை வாழ்க்கையினுள் அடக்கலாம்.

    காவிய நாயகன் கர்ணனாகவும் கம்பன் மகன் அம்பிகாபதியாகவும் வாழ்ந்து காட்டி தமிழைச் சுத்தமாகவும் கம்பீரமாகவும் உச்சரித்து, அதைப்பெருமைப்படுத்தினார். சரித்திர நாயகர்களான கட்டபொம்மனையும் ராஜராஜசோழனையும் பாமர மக்களிடமும் அறிமுகப்படுத்தினார். புராதன இந்து சமயத்தின் பெருமைகளையும் கலாச்சாரத்தையும் திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற படங்கள் மூலம் சொன்னார்.

    பொது வாழ்க்கையில் அவர் எத்தனையோ நல்ல காரியங்களையும் உதவிகளையும் சத்தம் போடாமல் செய்திருக்கிறார். தான் பெரிதாகப் புகழடையத்தொடங்க முன்பே அவர் அளித்த கொடைகள் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதை வைத்து அவர் புகழ் பெற முயன்றதுமில்லை.

    அரசியல் வாழ்க்கையிலும் அவர் தமது பங்களிப்பை செய்து வெற்றியும் அடைந்திருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்பு உறுப்பினராக ஆனார். தான் போற்றிய தலைவர்களுக்குரிய தொண்டுகளை செய்தார்.

    இதைவிட ஒரு மனிதன் வாழ்க்கையில் பெரிதாக எதை அடைந்துவிடமுடியும்? தேசிய விருதுகள் தனக்குக் கிடைக்காததையிட்டு அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாததில் ஆச்சரியமில்லை. அதைவிடப்பெரிய சாதனைகளையெல்லாம் அவர் தனது வாழ்க்கையில் அடைந்துவிட்டிருந்தார். நடிகர் திலகம் தனது வாழ்க்கையைப் பரிபூரணமாக வாழ்ந்திருந்தார்.

    வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •