Page 265 of 305 FirstFirst ... 165215255263264265266267275 ... LastLast
Results 2,641 to 2,650 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2641
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் ஆனந்த்,
    தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. சொல்லப் போனால் என்னுடைய பதிவில் நான் அசோக் கதாபாத்திரத்தைப் பற்றி எதுவும் குறிப்பாக எழுதவில்லை. ஆனந்த் கதாபாத்திரத்தைப் பற்றி மட்டும் தான், அதுவும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இன்னும் சிறந்த விற்பன்னர்கள் எல்லாம் உள்ளனர்.
    வசந்த மாளிகை படத்தின் காதலுக்கும் சிவகாமியின் செல்வன் படத்தின் காதலுக்கும் உள்ள மற்றொரு மிகப் பெரிய வித்தியாசம்



    படம் நெடுகிலும் அசோக்-சிவகாமி காதலின் உன்னதத்தினை அந்த ஹம்மிங்கிலேயே தந்து விடுவார் மெல்லிசை மன்னர். மிகச்சிறந்த இசை மேதை கே.வி.எம். அவர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் வசந்த மாளிகை படத்தின் பாடல்கள் அனைத்தும் முற்றிலும் தமிழுக்கு அந்நியமான வாடை அடிப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதே காதல் ஒரு நேடிவிடியை தழுவி நிற்பது சிவகாமியின் செல்வன் படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தான். நிச்சயம் இதற்கெனத் தனிப் பதிவு தர வேண்டியுள்ளது. Fur வைத்த அந்த காலர் நடிகர் திலகத்தின் தோள்களில் நாகமாய் அமர்ந்து கொண்டு என்னமாய் கர்வம் கொள்கிறது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு சொன்னது என்பது போல் நம்மிடம் அந்த பஞ்சு வைத்த காலர் பெருமை பேசும் போது அந்த காலராய் நாம் இருக்க மாட்டோமா என்று காதலி ஏங்குவாள். அந்த அளவிற்கு சி.வி.ஆர். அவர்கள் கவித்துவமாய் உடையிலேயே காதலை சொல்லி யிருப்பார்.

    சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...

    தொடரும்...
    Last edited by RAGHAVENDRA; 4th January 2013 at 11:49 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2642
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திர,

    நிறைய எழுதுங்கள், அது நமது பெருந்தலைவர் பெயர் தங்கிய பெரிய காவியம் அல்லவா?

    இது ஒரு காவியம் என்றல் வசந்த மாளிகை காதலின் இன்னொரு பரிமாணத்தை காட்டும் வேறு ஒரு காவியம்.

    என்னை பொறுத்த மட்டில் இரண்டுமே இரு பெரும் காவியங்கள்.

    ஆனந்த்

  4. #2643
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வனஜா,

    ராகவேந்தர் சார் அவர்களையே வெகு நாட்களுக்குப் பிறகு இத்துணை ஆர்வமாக எழுத வைத்த உங்கள் நடைக்கு ஒரு சபாஷ்! அசோக்கிற்கு இத்துணை ரசிகர்கள் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. காரணம் ஒரு காலத்தில் நானும் ராகேஷும் மட்டுமே இந்த படத்தை பற்றி பேசிக் கொண்டிருப்போம். நண்பர் ஆனந்த் மிகுந்த மகிழ்வோடு பங்கு கொண்டிருக்கிறார். சிவகாமியின் செல்வன் படத்தில் நடிகர் திலகத்தின் இரண்டாவது வேடத்தின் பெயரும் ஆனந்த்தானே!

    இடைவேளைக்கு பிறகு கிட்டத்தட்ட 30-35 நிமிடங்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்ற மாட்டார் என்ற நிலை இருந்தும் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்ட படம். நடுவில் இரண்டு பாடல்கள் வரும். எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே மற்றும் என் ராஜாவின் ரோஜா முகம். ஓபனிங் ஷோவில் எம்எஸ்வி குரலில் சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ என்ற வரிகளின் போது ஸ்ரீதேவி அரங்கமே பூகம்பம் வந்தது போல் குலுங்கியது இப்போதும் பசுமரத்தாணி போல் நினைவிருக்கிறது.

    எங்கள் மதுரையில் முதன் முறையாக காலை 7 மணிக்கு ஓபனிங் ஷோ (ஜனவரி 26,1974 அன்று மதுரை ஸ்ரீதேவியில்) தொடங்கிய படம். முதல் 31 நாட்களில் நடைபெற்ற 104 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம். மிக குறுகிய காலத்திலே தயாரிப்பாளர் cum மதுரை விநியோகஸ்தரான ஜெயந்தி பிலிம்ஸிற்கு லாபத்தை ஈட்டி தந்த படம். அந்த நேரத்தில் மதுரை மீனாட்சியில் வெளியாகி இருந்த யூத் காதல் மூவி பாபி படத்தை விட இளைஞர்களை அதிகம் ஈர்த்த படம் சிவகாமியின் செல்வன்.மிகப் பெரிய படம் என்று சொல்லப்பட்டவையெல்லாம் பின் தள்ளி இலங்கையில் புதிய வசூல் சாதனை படைத்த படம்.

    இவ்வளவு ஏன்? சென்ற 2011-ம் ஆண்டு மார்ச் 31 அன்று மதுரை சென்ட்ரலில் திரையிடப்பட்டு ஏப்ரல் 2ந் ஞாயிற்றுக்கிழமை இந்திய இலங்கை உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற அந்த நாளில் கூட மிகப் பெரிய அளவில் மக்கள் வந்திருந்து, ஓடிய அந்த 7 நாட்களுக்குள் அரை லட்சத்தையும் தாண்டி வசூல் செய்து திரையிட்ட விநியோகஸ்தருக்கு கணிசமான் லாபம் ஈட்டி தந்த படம் சிவகாமியின் செல்வன்.

    அன்புடன்

  5. #2644
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    டியர் முரளி ஸ்ரீநிவாஸ்,

    எல்லோருடைய இதயங்களையும் தொட்ட விஷயங்களை மிகவும் அற்புதமாக எழுதி உள்ளீர்கள்.

    " எம்எஸ்வி குரலில் சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ என்ற வரிகளின் போது" உணர்ச்சி வசப்படாதவர்களே இல்லை எனலாம்.

    அற்புதம்.

    ஆனந்த்

  6. #2645
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தனது பத்திரிகை விற்பனையின் எண்ணிக்கையின் நோக்கில் சில சமயம் சில பத்திரிகைகள் வெளியிடும் சில கருத்துக்கள் அல்லது கட்டுரைகளுக்காக நாம் பதில் தர யத்தனித்தால் அ்தையே தொடர்ந்து செய்து பரபரப்பின் மூலம் விளம்பரம் தேடும் முயற்சியில் அவை மேலும் அதனைத் தொடர நாம் வாய்ப்பளிக்க வேண்டாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2646
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    First of all,
    Thank you very much; brothers Raghavendar, Murali, Vasu, Anand & Adiram for giving me encouragement to write my thoughts & tastes on NT. I was about to give up. Then for a second thought, I contemplate writing in English until I practice my ‘own’ Tamil writing style, then nobody can accuse me of copying Shaw or Coleridge, can they!!(Yeah! I wish!!).

    My mother used to tease me ‘Narathar’ as I have always been a trouble maker; but with good motives, of course. Here I am doing that again. Since my bro Sasi is leaving Sri Lanka tonight, he gave me a brotherly advice: ‘stay out of trouble & mind your business only’! We are not exactly ‘Pasamalar’ Sivaji & Savithri, but I’m in a gloomy mood. Out of my other brothers, Sasi & I have a common interest: Sivaji Ganesan! Adios my bro!!

    Coming to Anand vs Ashok, I have done a good job, I think! I have even drawn the statisticians interests on the subject. Please continue.
    Last edited by Vankv; 5th January 2013 at 09:58 AM.

  8. #2647
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டியர் ஆனந்த்,
    தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. சொல்லப் போனால் என்னுடைய பதிவில் நான் அசோக் கதாபாத்திரத்தைப் பற்றி எதுவும் குறிப்பாக எழுதவில்லை. ஆனந்த் கதாபாத்திரத்தைப் பற்றி மட்டும் தான், அதுவும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இன்னும் சிறந்த விற்பன்னர்கள் எல்லாம் உள்ளனர்.
    வசந்த மாளிகை படத்தின் காதலுக்கும் சிவகாமியின் செல்வன் படத்தின் காதலுக்கும் உள்ள மற்றொரு மிகப் பெரிய வித்தியாசம்



    படம் நெடுகிலும் அசோக்-சிவகாமி காதலின் உன்னதத்தினை அந்த ஹம்மிங்கிலேயே தந்து விடுவார் மெல்லிசை மன்னர். மிகச்சிறந்த இசை மேதை கே.வி.எம். அவர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் வசந்த மாளிகை படத்தின் பாடல்கள் அனைத்தும் முற்றிலும் தமிழுக்கு அந்நியமான வாடை அடிப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் அதே காதல் ஒரு நேடிவிடியை தழுவி நிற்பது சிவகாமியின் செல்வன் படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தான். நிச்சயம் இதற்கெனத் தனிப் பதிவு தர வேண்டியுள்ளது. Fur வைத்த அந்த காலர் நடிகர் திலகத்தின் தோள்களில் நாகமாய் அமர்ந்து கொண்டு என்னமாய் கர்வம் கொள்கிறது... பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு பாம்பு சொன்னது என்பது போல் நம்மிடம் அந்த பஞ்சு வைத்த காலர் பெருமை பேசும் போது அந்த காலராய் நாம் இருக்க மாட்டோமா என்று காதலி ஏங்குவாள். அந்த அளவிற்கு சி.வி.ஆர். அவர்கள் கவித்துவமாய் உடையிலேயே காதலை சொல்லி யிருப்பார்.

    சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றி நிறைய எழுத ஆசை .... நண்பர்கள் விரும்பினால் ...

    தொடரும்...
    Rghavender sir.
    your comparison of VM AND SISELVAN simply great. please do write
    more.Always my VOTE IS for VM ONLY. SI SELVAN MADURAI COLECTIONS DETAILS by murali sir ketbatherke inimaiyaga ulladhu.
    and coming to su sundari nadigarthilagam costumes and look made him twenty years young apart fom meladious songs and tunes. but the picture has not lived upto the expectations. In brief ithe other two movies not reached general public the extent VM reached those days.

  9. #2648
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    The expenses for Mr Chandrababu's last rites has been borne by
    our great NT. We should not give importance to such articles.
    Any way Truth always triumph.

  10. #2649
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Anand vs Ashok

    ஆனந்த் குடிகாரனாகவோ அல்லது பெண் பித்தனாகவோ இருந்தது கூட தவறில்லை. ஆனால், 'லதா! ஏன் இப்படி செஞ்சே? உனக்கு அப்படி என்ன அவசியம் வந்தது?' என்று கேட்டது தான் மிக மிக தவறு. அந்த வார்த்தை லதாவின் காதலை மட்டுமல்லாமல் நம்பிக்கையையும் உடைத்துவிட்டது.

    அதேநேரத்தில் அசோக் பொய்யாக குடிப்பது போல சிவகாமியை ஏமாற்றிப் பின்னர் அவள் தற்கொலை வரைக்கும் போவதைப்பார்த்து, 'சிவகாமி! நான் இல்லையென்றால் நீ எவ்வளவு வேதனைப்படுவாய் என்று இப்போது தான் புரிஞ்சிகிட்டேன். என்மேல்தான் உனக்கு எவ்வளவு அன்பு!' என்று தனது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்துகிறான்.

  11. #2650
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    வனஜா மேடம் அவர்களே,

    தங்களின் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!

    அருமையான கட்டுரை. நன்றி.

    மிகவும் நன்றி சகோதரரே. நடிகர் திலகத்துடன் நெருங்கிப்பழகிய தங்களுக்கு எனது வணக்கம்!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •