எம்.ஜி.ஆர். படப் பாட்டுப் புத்தகத் தகவல்கள்
இந்தத் தொடரில் பாட்டுப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில் பணி புரிந்த கலைஞர்கள், மற்றும் பாடல்கள் பற்றிய விவரங்கள் இடம் பெறும். நண்பர்கள் தங்களிடம் பாட்டுப் புத்தகங்கள் இருந்தால் அவர்களும் இதனைத் தொடரலாம். இதன் மூலம் அவர் படங்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் திரட்ட ஏது வாக இருக்கும். நான் கொடுக்கும் போகும் பட்டியலில் மற்ற கலைஞர்கள் பெயர் இடம் பெறும். எம்.ஜி.ஆர். பெயர் தனித்தனியாக ஒவ்வொரு படத்திற்கும் குறிப்பிட வேண்டும் என்பதில்லை என நான் எண்ணுகிறேன்.
தொடக்கமாக சத்யா மூவீஸ் இதயக் கனி
இதர நடிக நடிகையர்
ராதா சலூஜா, எஸ்.வி.சுப்பையா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.ராமதாஸ், ஐசரி வேலன், வெண்ணிற ஆடை நிர்மலா, பண்டரிபாய், ராஜசுலோச்சனா, தேங்காய் சீனிவாசன், கே.கண்ணன், சண்முக சுந்தரம், திருச்சி சௌந்தர்ராஜன் மற்றும் பலர்.
உரையாடல் - ஜெகதீசன்
கதை தயாரிப்பு - ஆர்.எம்.வீரப்பன்
இயக்கம் - ஏ.ஜெகன்னாதன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்கள்
1. நீங்க நல்லா இருக்கணும் - புலமைப்பித்தன்- சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினர்
2. இதழே இதழே தேன் வேண்டும் - வாலி - எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரமோலா
3. ஒன்றும் அறியாத பெண்ணோ - வாலி - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. இன்பமே உந்தன் பேர் - புலமைப் பித்தன் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
இந்தத் தகவல்களில் பிழை இருப்பின் அதை சரியான தகவல்கள் தந்து முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.
அன்புடன்
Bookmarks