Page 272 of 305 FirstFirst ... 172222262270271272273274282 ... LastLast
Results 2,711 to 2,720 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2711
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ராகவேந்தர் சார்,
    நான் சற்று நாகரிகமாக நடந்து கொள்வதால் திருப்பி விளையாட்டை துவங்காதீர்கள். உங்கள் அறிவு,பின்னணி,,வயது கருதி பொறுமை காக்கிறேன். கருத்தை திசை திருப்பி,உறுப்பினர்களை குழப்பும் வேலை இங்கு வேண்டாம். எங்கே நான் ஓவர் ஆக்டிங் என்று குறிப்பிட்டேன் என்னுடைய பதிவில்? ஏன் குழப்பம் விளைவிக்க அலைகிறீர்கள்?உங்கள் நோக்கம் எப்பவும் ,சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. விமரிசனம் என்பது ,இரு பக்கங்களையும் குறிப்பது? உங்களுடைய L. k .g பதிவை ஒத்த பதிவை போட நான் எதற்கு? இனிமேல் வாலை சுருட்டினால் எல்லோருக்கும் நலம். நான் எழுதாத ஒன்றை குறிப்பிட்டு,திசை திருப்பும் ,திரிசமன் வேலை என்னிடம் காட்டாதீர்கள். இன்னொன்று ,உங்கள் கவனத்திற்கு, என்னுடைய பதிவுகள் அனைத்தும் என் பெயரில்தான் வரும். வேறு குழப்பங்களை விளைவிக்க முயலாதீர்கள். இத்துடன் விளையாட்டை நிறுத்தவும்.
    தங்களுடைய அன்பான அறிவுரைக்கு மிக்க நன்றி கோபால் சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2712
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthraman View Post
    நண்பர்களே


    நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுடைய திரு ராகவேந்திரன் சார் மீது இப்படி ஒரு தரமற்ற பதிவுகளை செய்தவரின் செயலையும் அதனை வழி மொழிந்த 5 முகம் கொண்டவரின் பதிவினையும் வன்முறையாக கண்டிக்கிறேன்
    முத்துராமன்
    ஒரிஜினல் - முகமுடி இல்லை .
    டியர் முத்துராம் சார்,
    என் மேல் தாங்கள் வைத்துள்ள அன்பிற்கும் நம்பிக்கைக்கும் காட்டும் ஆதரவிற்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோபால் சாரின் கருத்துக்களுக்கு கோபப் பட வேண்டாம். அவர் நம்முடைய சகோதர சிவாஜி ரசிகர்.
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2713
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரர் கோபால் அவர்கள் தனது இரும்புத்திரை விமர்சனத்தில் கோடிட்டுக் காட்டியதைப் படித்ததும் நான் வித்தியாசமாக (அல்லது இடக்கு முடக்காக) சிந்திக்கிறேன் பேர்வழி என்று தில்லானா மோகனாம்பாளில் பத்மினிக்குப் பதிலாக வைஜயந்திமாலாவை இங்கே பொருத்திப்பார்த்து ஒப்பிடவிரும்பினேன். இது வெறும் fun க்காகத்தான். இதற்காகத் தயவுசெய்து சகோதரர்கள் என்மீது போர் தொடுக்க வேண்டாம்.

    நிஜத்தில் தி.மோ இல் பத்மினியைத் தவிர வேறு யாரையும் நினைத்துப்பார்க்க முடியாது என்பது தான் உண்மை. அதேநேரத்தில் வைஜயந்தியும் பரத நாட்டிய விற்பன்னர் சம வயதுடையவர் சம காலத்தில் நடிக்கத் தொடங்கியவர். இவர் தி.மோ வில் நடித்திருந்தால் எது miss ஆகியிருக்கும்?

    முதலில் சிவாஜி - பத்மினிக்கிடையேயுள்ள அந்த sparkle சிவாஜி-வைஜயந்திக்கிடையே இருந்திருக்காது. 'சிக்கல்' சிவாஜி வெளிப்படுத்தும் அந்த வித்துவ கர்வத்திற்கு 'தில்லானா' பத்மினியால் மட்டும் தான் ஈடுகொடுத்திருக்க முடியும். அந்த ஆக்ரோஷம் நிச்சயமாக பத்மினியிடம் தான் இருக்கிறது. உதாரணமாக அந்த நாடகக் கொட்டகைக்காட்சி . சிக்கலாரை வலிய சண்டைக்கிழுத்து அவரைச் சபதம் போடுமளவுக்கு கொண்டுபோகும் மோஹனா பத்மினியின் நடிப்பு ஆக்ரோஷத்தின் உணர்ச்சிகரத்தின் உச்சம். வைஜயந்தி அந்த உணர்ச்சியை வெளிப்படுத்த முயன்றிருந்தால் சிங்கம் வேடம் போட்ட மான் போல இருந்திருக்கும்.

    நடனக்காட்சிகளைப் பொறுத்தவரையில் இருவருமே நன்றாகவே செய்திருப்பார்கள் என்றாலும்
    (எதோ சிறு வயதில் நானும் கொஞ்சம் பரத நாட்டியம் கற்றிருக்கிறேன் என்ற வகையில் - 9 வயதில் retire ஆகிவிட்டது வேறு விடயம்!) எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் எனது கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். இது 100% amusement purposes only! யாரையும் எந்த வகையிலும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லவேயில்லை.

    பிற்காலங்களில் வந்த பத்மினியின் படங்களில் அவர் ஆடிய நடனங்களில் நளினம் missing. அவர் இளமையாகவும் இன்னும் அழகாகவும் இருந்தபோது வந்த உத்தமபுத்திரனில் ( இந்த படத்தை கலர் இல் எடுத்திருக்கலாமே என்று நான் ஏங்குவேன்) 'காத்திருப்பான் கமல கண்ணன்" பாடலுக்கு பத்மினி ஆடியது 'oscar performance' என்றால் தி.மோ இல் குறிப்பாக 'மறைந்திருந்து' பாடலுக்கு ஆடியது சற்றே குறைந்த ரகம். நான் 'நலன்தானா' வை இதில் சேர்க்கவில்லை. அது more than perfect. 'மறைந்திருந்து' பாடலுக்கு close up காட்சிகளில் பாவனைகளையும் நவரசங்களையும் பிரமாதமாகக் கொடுத்திருந்த அளவுக்கு ஜதிகளில் நளினத்தைக்காட்டவில்லை என்றே செல்வேன். தேவைக்கு சற்றே அதிகமாகவே forceful rhythmatic performance கொடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

    ஆனால் 'சாதுர்யம் போதாதடி பாடலுக்கு ஆடிய இந்த இருவரது நடனமுமே எனக்கு பிடித்திருந்தது
    என்றாலும் அதில் பத்மினி சிறப்பாக ஆடினார்.

    மகாராஜாவின் அரண்மனைக்கு போய்விட்டுத்திரும்பிய பத்மினியை சிவாஜி சந்தேகப்படும்போது முதலில் பயந்து, வருந்தி, பின்பு பொங்கியெழுந்து 'யார் நாடகம் ஆடுறா? ஆரம்பத்திலிருந்தே என்னை சந்தேகப்பட்டு பார்கிறதே உங்களுக்கு வழக்கமாய்ப்போச்சே' என்று குமுறுவதை பத்மினி ஒருவரால் மட்டும் தான் செய்யமுடியும்.

    கதைப்படி கதாநாயகிக்கு 20 வயது இருக்கலாம் என்றாலும் இளமையை உடல் மொழியில் கொண்டுவரும் தகுதி பத்மினிக்கு மட்டும் தான் உண்டு. மொத்தத்தில் she was born to perform that role.
    Last edited by Vankv; 7th January 2013 at 01:25 PM.

  5. #2714
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by muthraman View Post
    உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி .

    நான் நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்கு ரசிகன் .

    மக்கள் திலகத்தின் பாடல்கள் - சண்டைகாட்சிகள் - இளமை துள்ளல்கள் - காட்சிகளுக்கு ரசிகன்

    ஜெமினி அவர்களின் மென்மையான நடிப்புக்கு ரசிகன் .

    எனது இயற் பெயர் முத்துராமன் .

    தாய் - முத்தம்மா - தந்தை -ராஜாராம்

    இருவரின் பெயரை சுருக்கி முத்ராம் என்று பதிவிட்டேன் .


    அசோக் பற்றிய உங்களின் நீண்ட பதிவு உங்கள் ரசிப்பு திறனுக்கு எடுத்துகாட்டு .

    எனக்கு உங்கள் அளவு பதிவிட அனுபவமில்லை .

    நீங்கள் எல்லாம் ஜாம்பாவான்கள் .


    என்னை பற்றி கூறிவிட்டேன் , பன்முகம் காட்டும் நண்பர் ஒருவர் மட்டும்
    என்னுடைய புதிரை விடுவிக்கவில்லை .

    பாடும் நானே பாவமும் நானே பாடல் நினைவுக்கு வருகிறது
    நன்றி

    இவரே தான் அந்த 'பன்முக வேந்தன்'!!

  6. #2715
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    If Uthama Puthiran released in Colour it will create record of sorts.
    It is highly watchable not only by NT's Fans but also the present
    generation.

  7. #2716
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    The moderators should do something about this childish ranting between members. I'm not pointing out anybody, but are there any scale to measure who is the best NT fan or who is less of a fan? When writing a movie criticism, one can't help pointing out some bad features of the movie/acting, that is part of criticism. It doesn't make that person less of a NT fan. We are going to loose flavour in this thread if we don't analyze all kinds of views on NT movies; only movies, NO PERSONAL ATTACK OR COMMENT ABOUT NADIGAR THILAGAM OR BACKGROUND INFORMATION ON 'WHO DID TO WHO'. It would be much better if one could check their post before publish here.

  8. #2717
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு சகோதரி வனஜா
    தங்கள் கருத்து எனக்கு முழுதும் ஏற்புடையதே. யாராவது எழுதிய கருத்திற்கு என் கருத்து மாறு பட்டால் அப்போது மட்டும் நான் பதில் கருத்தினைக் கூறுகிறேன். வலிய வந்து யார் மனதையும் இது வரை புண்படும் படி எழுதியதாக எனக்கு தெரியவில்லை. அப்படி என் சிற்றறிவிற்கு அப்பாற்பட்டு நான் எழுதியதில் யார் மனதேனும் புண்படும் படி கருத்து அமைந்திருந்தால் அடுத்த நொடியிலேயே வருத்தம் தெரிவித்து விடுவேன். என்னைப் பற்றி எவ்வளவு திட்டினாலும் நான் கோபித்துக் கொள்ள மாட்டேன். ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றி தேவையற்ற கருத்துக்கள் பதியப் படுமானால் அப்போது நான் பதில் பதிவிடுகிறேன். அப்போது கூட தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்துக்கள் அமையாது. இதைத் தான் நான் எப்போதும் பின் பற்றி வருகிறேன். என்னுடைய முந்தைய பதிவுகளில் யார் மனதேனும் புண்படும் படி நான் எழுதியிருந்தால் அதற்கு நிச்சயம் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதை முந்தைய ஒரு பதிவிலும் கூறியிருக்கிறேன்.

    இதற்கு மேலும் என் மீது தவறு இருப்பதாக நண்பர்கள் கருதினால் பதிவுகளைப் படிப்பதோடு நிறுத்தி விடுவதே உசிதம் என எண்ணுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2718
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Burma
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி சகோதரி [ரன் ]

    இந்த திரியில் பங்கு பெரும் அனைவரின் பெயரும் , தொடர்பும் அறிந்து கொள்ள முடியும் . ஆனால் ஒருவரே இரும்பு கோட்டை - easy reach என்றெல்லாம் அடையாளம் காட்டி ,காதுலே பூ சுற்றும் கலை வல்லுநர் - இன்றைய நாயகன் என்றும் - ஆதி என்றும் திரியில் உள்ள அப்பாவி களை ஏன் குழப்ப வேண்டும் .

    ஆள் யார் என்று ஆராய்ச்சி செய்வது நமது நோக்கமல்ல .

    நான் அவனில்லை என்று ஜெமினி போல் வாதிட்டால் உண்மை ஒரு நாள் வந்தே தீரும் .
    உங்களை மறைப்பதும் , மறுப்பதும் உங்களின் திறமைகளை நீங்களே இழக்க காரணமாக வேண்டாம் .

    உண்மையான உங்களின் பெயரை பற்றி கூறி விட்டு அருமையான நடிகர் திலகம் பற்றியசெய்திகளை பதிவிடுங்கள் .

    யாரும் விரோதிகள் அல்ல .

    எல்லோரும் நல்லவரே .

  10. #2719
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  11. #2720
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர்களே,

    புத்தாண்டு இனிதே துவங்கியிருக்கிறது; கூடவே, மறுபடியும் சண்டை துவங்கி விட்டது.

    நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த இரண்டு படங்களையும் எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக படத்தையும், பெர்பார்மன்சையும் ஆய்வு செய்ததின் நோக்கம் அடிபட்டு விட்டது. என்ன காரணம்?

    நாம் ரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது எதற்கு? நாம் ரசித்ததை மற்றவர்களும் ரசிக்க வேண்டும், நமது பார்வையில் சொல்ல விரும்புபவற்றை சொல்லி மற்றவர்களையும் ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்குத் தானே. நான் என்னுடைய சுய திருப்திக்கு தான் எழுதுகிறேன் என்பதில் பாதி தான் நான் உடன்படுகிறேன். சொந்த திருப்திக்கு எழுதுபவர்கள் டைரியில் எழுதி அவ்வப்பொழுது பார்த்து ரசித்துக் கொள்ளலாமே! மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் போதே, அந்த மற்றவர்கள் நம்முடைய எழுத்தை எந்த அளவிற்கு ரசித்து, அதைப் பாராட்டுவார்கள், அங்கீகரிப்பார்கள் என்ற எண்ணம் சிறிதளவேனும் தலை தூக்குவதால் தானே!! ஆனால், இங்கு என்ன நடந்தது? சில தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள் அதில் இடம் பெற்றதாலும், அதை இன்னொருவரால் சகித்துக் கொள்ள முடியாததாலும், அந்த இனிய சிறந்த ஆய்வுகளைப் பற்றி எல்லோரும் சிலாகிக்க முடியாமல் போய் விட்டது!

    ஒரு படத்தைப் பற்றி விமர்சித்து எழுதும் போது, சில விஷயங்கள் தவிர்க்க முடியாது போய் விடுகிறது. ஆனால், அந்த தவிர்க்க முடியாத விஷயங்கள் மற்றும் விமர்சனங்கள் சம்பந்தப் பட்ட கலைஞரின் பெர்பார்மன்சைப் பற்றி மட்டுமே இருத்தல் நலம். அதுவும் ஒரு எல்லைக்குள் இருந்தால் மிக நலம்! ஒரு படத்தையோ அல்லது ஒரு பெர்பார்மன்சையோ ஆய்வு செய்யும் போது, அதிலுள்ள நிறை குறைகளை மட்டுமே அலசுதல் மட்டுமே நலம் பயக்கும். தனிப்பட்ட விஷயங்களையும், பின் புலத்தில் நடந்ததையும் (அது சர்ச்சையைத் தூண்டும் என்றால்) விமர்சிப்பதைத் தவிர்க்கலாமே!

    என்னைப் பொறுத்தவரை, நடிகர் திலகத்தின் நடிப்பைக் கொஞ்சமும் விமர்சிக்கக் கூடாது என்று கூற மாட்டேன். (நடிகர் திலகமே தில்லானா மோகனாம்பாளில், "குறை இல்லாத மனிதன் ஏது ஜில்லு?" என்பார்) அதைத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளலாம் என்று தான் சொல்வேன். என்னதான் இது ஜனநாயக நாடு, சொந்தக் கருத்தைச் சொல்லக் கூடாதா என்று கேட்டாலும், எந்த இடத்தில் அந்தக் கருத்தைச் சொல்லலாம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? சரி, அப்படியே சொன்னாலும், அதைப் பெரிது படுத்தவும் வேண்டாம்.

    அதே போல், சக நண்பர் மற்றும் ஹப்பரின் திறமையை பரிகசிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    இந்தத் திரி, நடிகர் திலகத்தினுடைய அற்புதமான நூதனமான, வேறு எவர்க்கும் வாய்க்காத திறமையை உலகம் தெரிந்து கொள்வதற்காக துவங்கப்பட்ட திரி. இதில் பங்கு பெறும் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டுக்குளே சண்டையிட்டுக் கொள்ளலாம் - நான்கு சுவர்களுக்குள் - ஆனால் அதை மற்றவர்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

    இன்னொன்று, ஒருவர் பத்து அல்லது பதினாயிரம் பெயர்களில் தான் எழுதட்டுமே! எதற்குத் திரும்பத் திரும்ப அதையே எழுத வேண்டும்? அது உண்மையாகவே இருப்பின், அதனை சரி செய்ய வேண்டியவர்கள் மாடரேட்டர்கள் தானே!

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 7th January 2013 at 03:34 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •