Page 208 of 400 FirstFirst ... 108158198206207208209210218258308 ... LastLast
Results 2,071 to 2,080 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2071
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    திரு ராகவேந்தர் சார், திரு முரளி சார் தங்களின் அன்பான வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2072
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Sivandha Mann's helicopter chase tried to equal Russia With Love scene?!Within our technical know-how and budget we also try at our level best as helicopter chase scenes are risky and expensive at that time. Of course in Pattanaththil Bootham with Jaishankar the heli scene was bit improved and Jai took the risk of hanging from the flying copter! Here NT does the chase thrill mood without any stunt double for him with some inherent risks!





    கடைசியில் ஹெலிகாப்ட்டர் புகைவிடும் சீன் நம் காதுகளில் புகையும் கண்களில் நீரையும் வரவழைக்கிறதே!
    Last edited by sivajisenthil; 10th October 2014 at 07:25 AM.

  4. Likes kalnayak, Russellmai liked this post
  5. #2073
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Raja : NT tries to establish and carve a niche for his own interpretation of stylish but believable stunts!

    Sivaji Ganesan's performance is different from that of Sean Connery though the styles are almost the same : suave appearance but rough and tough fight with equals by strength!
    Equal weightage for offensive and defensive modes in a fight!


    Last edited by sivajisenthil; 10th October 2014 at 08:08 AM.

  6. Likes Russellmai liked this post
  7. #2074
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT's Goldmine (Thangasurangam) Vs JB's Goldfinger!!

    This James Bond styled movie Thanga surangam offered great scope for NT to parade his believable and sophisticated fashion of stunt choreography with his slim, slender and sleek physique in a fitting manner at that time!









    Last edited by sivajisenthil; 10th October 2014 at 07:22 AM.

  8. Likes Russellmai liked this post
  9. #2075
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    NT's consistent efforts to present believable stunt choreography par excellence Hollywood style time tested!

    திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் : நம்பகத்தன்மையும் ஜனரஞ்சக ரசனையும்!
    இந்தியத்திரையுலகைப் பொறுத்தவரை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தின் வெற்றி படத்தின் விறுவிறுப்பான நகர்வுக்கு உறுதுணையாக திட்டமிடப்படும்

    சண்டைக்காட்சிகளோ பங்கேற்கும் கலைஞர்களின் timing based choreographyதான். அடிப்பது போன்ற பாவனை, அடிவாங்குவது அல்லது லாவகமாக தப்பிப்பது போன்ற பாவனை, உருண்டுபுரண்டு விழுந்து எழுந்து பாய்ந்து சாய்ந்து கலைஞர்கள் செய்யும் சாகசங்கள் நம்பகத்தன்மை கூடிய action-reaction base ஆக இருந்தால்மட்டுமே பாடல்களைப்போல நிலைத்து நிற்கமுடியும். இந்த கண்ணோட்டத்தில் வைத்துப்பார்க்கும் போது Hollywood திரைப்படங்கள் நம்முடைய டிஷ்யூம் டிஷ்யூம் கும்மாங்குத்து கைச்சண் டைகள், உதைகள்,, நீளமான சிலீர்சிளீர் கத்தி வீச்சுக்கள்....இவற்றைவிட தொழில்நுட்ப ரீதியிலும், நம்பகத்தன்மையிலும் பலமடங்கு மேல்!
    நடிகர்திலகம் தனது உள்ளார்ந்த நடிப்புத்திறன் வாயிலாக நம்பும் வகையிலான சண்டைக்காட்சிகளையே நம் ரசனைக்குரியதாக அளிக்க முயன்று வெற்றிகண்டவர்!



    Dear Sir,

    One Great aspect in Nadigar Thilagam's JANARANJAGA FILMS is that, be it is black and white (or) Color, the fight sequences will be highly natural.

    It would not look like a fixed match. The most important aspect to be noted is that, be the main villain or his henchmen, all of them would be projected as equally strong ( both in physical appearance and technique) and sometime, if they are well built, the due respect for them is always given.

    Had Nadigar Thilagam wanted, he could have asked the stunt master to do a stunt where NT does not even get one blow from the villain. But, NT is not like that.

    Nadigar Thilagam and Jaishankar, Ravichandran and some of them understood that and that's why the stunts look highly natural in their films.

    The above scene is one classic example of natural stunt.

    Kudos to those who took part in the stunt sequence and made it highly natural looking stunt sequence.


    Regards
    RKS
    Last edited by RavikiranSurya; 10th October 2014 at 08:17 AM.

  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #2076
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a recap from old post of Saradha Madam


    'இளைய தலைமுறை'

    இளைய சமுதாயத்துக்கு, குறிப்பாக மாணவ சமுதாயத்துக்கு சீரிய கருத்துக்களைச் சொல்லவந்த நல்லதொரு திரைப்படம். நடிகர் திலகத்தின் படங்களில் மிக நீண்ட அல்ல, கொஞ்சம் நீண்ட தயாரிப்பில் இருந்த படம். 1977 மே மாத மத்தியில் வெளியானது. அதற்கு முன்னர் இரண்டு முறை தியேட்டர் பெயர்களோடு விளம்பரம் வந்து, தியேட்டர்களில் ரிசர்வேஷனும் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டு, தாமதமாக ரிலீஸ் ஆனதாம். அதனால் (அதிசயமாக) தீபம் படத்துக்கும் இளைய தலைமுறைக்கும் 107 நாள் இடைவெளி விழுந்தது. (1977ல் சென்னை மகாராணி திரையரங்கில், 'புதிய பறவை' ரீ-ரிலீஸ் ஆனபோது, இளைய தலைமுறைக்கு அச்சடிக்கப்பட்ட ரிசர்வேஷன் கூப்பன்கள் உபயோகப்படுத்தப் பட்டதாம். என் தந்தை சொல்வார்).

    ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பட்டப் படிப்பு படித்த சம்பத் (நடிகர் திலகம்) வேலை தேடி சென்னைக்கு வர, அவருடைய நண்பன் (கே.விஜயன்) பிரின்ஸிபாலாக இருக்கும் கல்லூரியின் மாணவர் விடுதியில் 'வார்டன்' ஆக வேலை கிடைக்கிறது, (திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே அந்த வேலையில் சேர முடியும் என்ற நிபந்தனையுடன்). ஊரில் தான் காதலிக்கும் வாணிஷ்ரீயின் நினைவு மனதில் இருந்தபோதிலும், வறுமையான குடும்ப சூழ்நிலை அவரை அந்த வேலையை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. (பட்டம் வாங்கி வந்ததும், "அம்மா நான் பட்டம் வாங்கிட்டேன்" என்று அம்மாவிடம் காட்ட, "இதை என்ன விலைக்குப்பா விற்கலாம்?" என்று அம்மா (எஸ்.என்.லட்சுமி) அப்பாவியாக கேட்கும் இடம், குடும்பத்தின் வறுமை சூழலை காட்டும்).

    'ராகிங்' என்பது புதிதாக வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக வேலையில் சேரும் வார்டனுக்கும்தான், என்பதாக, முதல் நாளில் மாணவர்கள் செய்யும் ராகிங்கும் அதை வார்டன் சம்பத் (நடிகர் திலகம்) முறியடிப்பதும் சுவையான காட்சிகள். மாணவர்களாக வருபவர்களில் (பழைய) ஷ்ரீகாந்த், விஜயகுமார், ஜூனியர் பாலையா, பிரேம் ஆனந்த், ஜெயச்சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் வார்டனை, (அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் தங்களுக்கு அடக்குமுறைகள் போல தோன்றுவதால்) தங்கள் எதிரிகளாக நினைத்து வெறுக்க, அவர்கள ஒவ்வொருவரையும் வார்டன் தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். ஒருகட்டத்தில் வார்டனை பழிவாங்குவதற்காக, தங்களுடன் எப்போதும் சேராமல் இருக்கும், குருக்கள் குடும்பத்து மாணவனுக்கு ஷ்ரீகாந்த் வலுக்கட்டாயமாக பெண் வேடம் போட்டு நள்ளிரவில் வார்டன் மேல் தள்ளிவிட்டு, அதை போட்டோ எடுத்து நோட்டீஸ் போர்டில் அம்பலப்படுத்த, அவமானம் தாங்காமல் அந்த மாணவன் தற்கொலை செய்து கொள்வது கொடூரம் என்றால், இன்னொரு பக்கம், ஊரில் சிவாஜியின் தந்தை இறந்து விட்டதாக வந்த 'தந்தி'யை ஜெயச்சந்திரன் மறைத்து விடுவது சோகம். மகன் வருவான், வருவான் என்று எதிர்பார்த்து இறுதிச்சடங்கையும் முடித்து விட்டு, விதவைக்கோலத்துடன் தன்னைத்தேடி தாய் வந்து நிற்கும் கோலம் கண்டு நடிகர்திலகம் உடைந்து நொறுங்கிப்போவாரே... அது சோகத்தின் உச்சம்.

    ஒவ்வொரு மாணவனும் வார்டனால் திருத்தப்பட்டு, அவரது தூய உள்ளம் கண்டு அவர் பாகம் வந்துசேர, ஷ்ரீகாந்த் மட்டும் கடைசி வரை திருந்தாத வில்லனாகவே இருந்து விடுவார். கிளைமாக்ஸ் காட்சியில் வார்டன் மீது திராவகம் நிரப்பிய பல்பை வீச, அதை அவர் தாம்பாளத்தால் தட்டி விட, திராவகம் ஷ்ரீகாந்த் மீதே விழுந்து அவரைப்பழி வாங்கி விடும் கட்டம் நல்ல முடிவு.

    இன்னொரு பக்கம் வார்டனின் சொந்த ஊரில், அவரது காதலி வாணிஷ்ரீயின் முறைமாமன் (எம்.ஆர்.ஆர்.வாசு) அவரை திருமணம் செய்துகொள்ள தீவிரமாக இருக்க, வாணியின் அம்மா எம்.என்.ராஜம், தன் தம்பிக்கே அவளை மணமுடிக்க வேண்டும் என்றும் துடிக்க, அப்பா (வி.கே.ஆர்) தன் மகளின் காதலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். 'திருமணம் செய்தவர்கள் வாரடன் வேலையில் நீடிக்க முடியாது' என்ற கல்லூரியின் சட்ட விதிகளின்படி, (வாணியை மணந்து கொள்வதற்காக) வேலையை விட்டு விலக முடிவு செய்ய, வார்டனை விட்டு பிரிய மனமில்லாத மாணவர்கள் 'தங்களை தீய பழக்கங்களில் இருந்து திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்த வார்டன், தங்களை விட்டுப்போவதன் மூலம் தாங்கள் மீண்டும் தவறான வழிக்கு திரும்ப வேண்டுமா?' என்று கண்கலங்கி நிற்க, அதைப்பார்த்து நெகிழ்ந்துபோன வாணி தன் காதலை அந்த மாணவர்களுக்காக தியாகம் செய்ய முடிவு செய்ய, நடிகர் திலகம் செய்வதறியாது திகைத்து நிற்க.... எல்லோர் பேசுவதையும் வாய்மூடி கேட்டுக் கொண்டிருக்கும் பிரின்ஸிபால் விஜயன் பேசும் ஒரு வசனத்தால் முடிவு எல்லோரும் மகிழும்படியாக...... சுபம். எப்படி?. ("இதோ பார் சம்பத், உன்னுடைய சின்ஸியரான வேலை பற்றி மேனேஜ்மெண்டுக்கு எடுத்து சொல்லி, கல்லூரியின் தேவையில்லாத ஒரு சட்டத்துக்காக ஒரு நல்ல வார்டனை இழக்க வேண்டுமா என்று வாதாடினேன். நீ திருமணம் செய்துகொண்டு இந்த வார்டன் வேலையில் நீடிக்க கல்லூரி நிர்வாகம் சம்மதம் அளித்து விட்டது").

    நகைச்சுவைக்கு, விடுதியில் மெஸ் நடத்தும் 'சர்மா' வாக வரும் நாகேஷும் அவரது உதவியாளனாக வரும் பையனும். நாகேஷின் மலையாள வாடை கலந்த பேச்சு நேச்சுரல். (அவருக்கு சொல்லணுமா?). ஒவ்வொரு வசனமும் சரியான சிரிப்பு.

    (தொடரும்)

  12. #2077
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    'இளைய தலைமுறை' - 2

    மல்லியம் ராஜகோபால் கதை வசனம் எழுத கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர். வசனம் அருமை. குறிப்பாக, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும் இடத்தில், அந்த ஸ்ட்ரைக்கை கண்டித்து நடிகர்திலகம் பேசும் வசனம் சூப்பர். (அதில் ஒரு துளி... "ஊரில் உங்க அப்பா சாகக்கிடக்கிறார். நீ உடனே போக வேன்டிய கட்டாயம். ஆனால் ஸ்ட்ரைக் நடக்கிறது. வண்டிகள் ஓடவில்லை. உன்னால் போக முடியவில்லை. உன் தந்தையின் முகத்தைக்கூட நீ கடைசியாக பார்க்க முடியாமல் செய்கிறது இந்த ஸ்ட்ரைக். இது ஏன் உங்க மூளையில் ஸ்ட்ரைக் ஆகலை?")

    கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 'இளைய தலைமுறை... இனிய தலைமுறை' பாடலை மட்டும் மல்லியம் ராஜகோபால் எழுதியிருந்தார். (பட்டிக்காடா பட்டணமா போல) டைட்டில் ஓடும்போது எம்.எஸ்.வியும், படம் துவங்கியதும் (நடிகர் திலகத்துக்காக) டி.எம்.எஸ்ஸும் பாடியிருப்பார்கள். நல்ல பொருள் பொதிந்த பாடல். பட்டம் வாங்கியதும் நடிகர் திலகம் மற்ற சக மாணவர்களுடன் (கல்விக்கண் திறந்த) காமராஜரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதாக காட்டியிருப்பது அருமை.

    நடிகர்திலகம், வாணிஷ்ரீ பாடும் டூயட் பாடலான 'யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடலும் நன்றாக அமைந்திருக்கும். அடையாறு ஆலமரத்தின் பிரம்மாண்ட விழுதுகளுக்குள் கேமரா நுழைந்து நுழைந்து படமாக்கியிருக்கும் டூயட் பாடல் கண்ணுக்கு விருந்து (இப்போது அந்த ஆலமரம் இல்லை)

    இருவருக்கும் காதல் அரும்பும் முன்னர், குட்டை பாவாடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் தெருவில் செல்லும் வாணியை கிண்டல் செய்து, நடிகர் திலகம் பாடும்
    "சிங்கார தேர்கூட திரைமூடி போகும்
    அதுகூட உனக்கில்லையே
    செவ்வானம் தனைக்கூட மேகங்கள் மூடும்
    மூடாத வெண்முல்லையே"
    என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் அருமை. குடகு மலை மெர்க்காராவில் படமாக்கப்பட்டிருக்கும். (முதலில், இந்தக்காட்சிக்காக 'பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு' என்ற பாடல் ஒலிப்பதிவாகி அது இசைத்தட்டில் கூட வந்ததாம்).

    படத்தில் ஏராளமான நட்சத்திரக்கூட்டம்... நடிகர்திலகம், வாணிஷ்ரீ, சங்கீதா (பொம்மை), கே.விஜயன், வி.கே ராமசாமி, எம்.என்.ராஜம், எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், ஷ்ரீகாந்த், விஜயகுமார், ஜூ.பாலையா, மகேந்திரன், ஜெயச்சந்திரன், பிரேம் ஆனந்த் என்று ஏகப்பட்ட முகங்கள்.

    படம் பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராகத்தான் ஓடியது. ஆனால் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம். அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகர் திலகத்தின் சில படங்கள் நீண்ட கால தயாரிப்பில் இருந்தன. வைர நெஞ்சம் (Hero-72), ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, சித்ரா பௌர்ணமி, என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி இப்படி சில படங்கள். (ஆனால் எந்தப் படத்தின் தாமதத்துக்கும் நடிகர் திலகம் காரணமல்ல. தயாரிப்பாளர்களின் ஃபைனான்ஸ் பிரச்சினையே முக்கிய காரணம்). இவற்றில் பல படங்கள் வெற்றிப் படத்துக்குரிய சிறப்புகளைப் பெற்றிருந்தும், தாமதமான வெளியீடு வெற்றியை பாதித்தது.

    'இளைய தலைமுறை' படத்தைப்பற்றிய எனது கருத்துக்களைப் படித்த நல்ல இதயங்களுக்கு என் நன்றி.

  13. #2078
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a review by Mr Murali - a recap

    பலே பாண்டியா

    தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

    இயக்கம்: பந்துலு

    இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

    வெளியான தேதி : 26.05.1962

    கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற மாபெரும் படங்களுக்கு பிறகு பந்துலு எடுத்த ஒரு லைட் என்டர்டைனர். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படம்.
    (நடிகர் திலகத்தின் கமெண்ட் " நான் அமெரிக்காவிற்கு போவதற்கு முன் நடித்து முடித்து நான் அமெரிக்கா போய் விட்டு வந்த பின் வெளியான படம்."). நடிகர் திலகம் மூன்று வேடங்களிலும் நடிகவேள் இரண்டு வேடங்களிலும் நடித்த படம். "ப" என்று பெயர் ஆரம்பித்தாலும் பீம்சிங் டைரக்ட் செய்யாத படம். கதை,திரைக்கதையை பொறுத்தவரை லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய படம்.

    கதாநாயகனான பாண்டியன் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்க முற்படுவதோடு படம் ஆரம்பம். பாண்டியனை பார்க்கும் கபாலி (ஒரு திருட்டு கும்பலின் தலைவன்) அவனை காப்பாற்றுகிறான். கிழே நிற்கும் கூட்டத்தில் காரில் வந்து இறங்கும் கீதாவும் அவரது தந்தை அமிர்தலிங்கம் பிள்ளையும் அடக்கம். மேலே இருந்து கீதாவை பார்க்கும் பாண்டியனுக்கு அவளை பிடித்து போய் விடுகிறது. ஒரு திருடன் அப்போது கீதாவின் கை பையைஅறுத்துக்கொண்டு ஓடுவதையும் பாண்டியன் கவனித்து விடுகிறான். கிழே வந்து அந்த திருடனை பிடித்து பையை வாங்கும் பாண்டியன் ஆனால் அதை கீதாவிடம் கொடுப்பதற்குள் அவள் போய் விடுகிறாள். கபாலியுடன் அவன் வீட்டுக்கு செல்கிறான். அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது ஆனால் பாண்டியன் கண்ணில் யாரும் தென்படுவதில்லை. கபாலியிடம் அடியாளாக வேலை செய்யும் மருது பாண்டியனை போலவே இருக்கிறான். பாண்டியனை ஒரு மாதம் தன்னுடன் இருக்க சொல்கிறான் கபாலி. அவன் திட்டம் என்னவென்றால் ஒரு மாதம் கழித்து பாண்டியனை கொன்று விட்டு மருது இறந்து விட்டதாக செய்தியை பரப்பி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடைவது. (இது எப்படி சாத்தியம் என்பது தெளிவாக இல்லை). இதற்கிடையில் கீதாவை தேடி போகும் பாண்டியனை முதலில் விரட்டும் அவள் பிறகு தன் சம்மதத்தை சொல்கிறாள். கீதாவின் அத்தை மகன் ரவி, கீதாவின் வீட்டிலேயே இருக்கிறான். இதற்கிடையில் ஒரு மாதம் முடிந்து விடுகிறது.

    தன் திட்டப்படி பாண்டியனை கொல்ல கபாலி முற்படுகிறான். அவனிடமிருந்து தப்பித்து வரும் பாண்டியனுக்கு காரை ஒட்டி கொண்டு வரும் ஒரு பெண் லிப்ட் கொடுக்கிறாள். சிறிது தூரம் சென்றபிறகு தான் அந்த பெண்ணிற்கு கார் ஓட்ட தெரியாது என்றும் மனோ நிலை பாதிக்கப்பட்டவள் என்றும் புரிகிறது. ஆனால் அதற்குள் கார் ஒரு மரத்தில் மோதி விபத்துகுள்ளாகிவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த பெண் விபத்தில் பட்ட அடியால் இயல்பான நிலைக்கு திரும்புகிறாள். அவளின் தந்தை ஒரு பெரிய எஸ்டேட் முதலாளி. பாண்டியன் யாருமற்ற ஆள் என்று தெரிந்ததும் அவனை தன் மகனாக ஏற்றுகொள்கிறார். எஸ்டேட் செல்லும் பாண்டியனால் கீதாவை சந்திக்க முடியவில்லை. சிறிது நாள் கழித்து செல்லும் பாண்டியனை தன் தந்தையை வந்து சந்திக்க சொல்கிறாள் கீதா. தந்தையிடமும் அனுமதி வாங்குகிறாள்.

    பாண்டியனை கொல்ல முயன்று தோல்வியுற்ற கபாலி அவனை தேடிக்கொண்டிருக்கிறான். கீதாவை சந்திக்க வரும் பாண்டியனை பார்த்து விடும் கபாலி அவனை சிக்க வைக்க போலீஸ் கண் முன்னால் ஒரு திருட்டை மருது மூலமாக நடத்துகிறான். பாண்டியன் சிக்கி கொள்ள அவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. சொன்ன நாளில் வராததால் கீதாவின் தந்தை பாண்டியன் மேல் கோபமாக இருக்கிறார். சிறையிலிருந்து வெளி வரும் பாண்டியன் ரவியை சந்தித்து அவனோடு கீதாவின் வீட்டிற்க்கு செல்கிறான். அங்கே கீதாவின் தந்தையும் கபாலி போல் இருக்க கடுமையாக பேசி விட்டு வெளியே வர அங்கே வாசலில் கபாலி. உண்மை புரிந்து கபாலியிட்மிருந்து தப்பித்து எஸ்டேட் வந்து சேருகிறான். அங்கே வளர்ப்பு தந்தை இறந்து போன விவரம் தெரிகிறது. இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்ற வசந்தியின் (எஸ்டேட் முதலாளியின் மகள்) கேள்வியிலிருந்து தப்பிக்க, இல்லாத ஒரு அத்தை மகனை பற்றி கதை அடிக்க அது வசந்தியின் மனதில் ஒரு உறவிற்கு அச்சராமிடுகிறது. மீண்டும் கல்யாண விஷயமாக ரவியை சந்திக்கும் பாண்டியனின் கையில் இருக்கும் வசந்தியின் புகைப்படத்தை பார்த்து விட்டு யார் என்று கேட்க, எல்லாவற்றையும் பாண்டியன் சொல்லி விடுகிறான். பாண்டியன் ஊருக்கு செல்வதற்கு முன் ரவி சென்று வசந்தியிடம் தன்னை அத்தை மகனாக அறிமுகப்படுத்திக்கொள்ள அவர்கள் இருவருக்கும் காதல் அரும்புகிறது.

    ஊருக்கு திரும்பி வரும் பாண்டியன் மூலம் உண்மை தெரிந்தும் கூட வசந்தி தன் முடிவில் உறுதியாக இருக்கிறாள். இதே நேரம் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் தந்தையிடம் சண்டை போட்டு பாண்டியனை தேடி கீதா வந்து விட, இரு ஜோடிகளும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்து கொண்டு விடும் கபாலி, அமிர்தலிங்கம் பிள்ளையாக கல்யாணத்திற்கு வந்து கலந்து கொள்கிறான். இரவு பாண்டியனை கடத்த திட்டம் போடுகிறான். இதற்குள் மனது மாறி அமிர்தலிங்கம் பிள்ளை மகளை தேடி வர குழப்பம் உருவாகிறது. விளக்கை அனைத்து விட்டு பாண்டியனை கடத்தி கொண்டு போய் விடுகிறான். அப்போது கேட்கும் கூக்குரலில் கீதா இறந்து விட்டதாக பாண்டியன் தவறாக புரிந்து கொள்கிறான். தனி அறையில் அடைத்து வைக்கப்படும் பாண்டியன் எஸ்டேட் வக்கீலிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் தன் பங்கிற்கு உள்ள சொத்தை நிர்வகித்து அதில் வரும் வருமானம் தன்னை வளர்த்த அண்ணனுக்கு மாதா மாதம் கொடுக்க வேண்டும் என்றும் தான் உயிரோடு திரும்பி வந்தால் இதை மாற்றி கொள்ளலாம் என்றும் அதில் எழுதி வைத்து விடுகிறான்.

    பாண்டியனை நடுக்கடலிலே கொண்டு போய் போட்டு விடுகிறார்கள். ஆனால் வேறொரு படகில் இருக்கும் மீனவர்கள் இதை பார்த்து விடுகிறார்கள். கபாலியும் மருதும் போலீஸ் கண்ணில் இருந்து தப்பிபதற்காக வேறொரு ஊருக்கு செல்ல அங்கே பாண்டியனை போல் இருக்கும் சங்கர் என்ற வயதானவரை பார்க்கிறார்கள். (இவர்தான் பாண்டியனின் அண்ணன்). அவரை பின் தொடர்ந்து செல்ல அவர் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதும் தன் ஆராய்ச்சிக்காக நிறைய கடன் வாங்கி இருப்பதும் கடன்காரர்களின் தொல்லையில் அவதிப்படுவதும் தெரிகிறது. ஒரு வேலைகாரனாக அந்த வீட்டில் சேர்கிறான் கபாலி. அந்த நேரத்தில் எஸ்டேட் வக்கீல் வந்து பாண்டியன் லெட்டர் விவகாரத்தை சொல்கிறார். பாண்டியனாக எஸ்டேட் சென்றால் முழு சொத்தையும் அனுபவிக்கலாம் என்று திட்டம் போடும் சங்கரின் மனைவி தன் கணவனை பாண்டியனாக மாறும்படி வலியுறுத்துகிறாள். மனைவி சொல்லை தட்டாத சங்கர் அதற்கு ஒப்பு கொள்கிறார். வக்கீல் சொல்வதை ஒட்டு கேட்ட கபாலி மருதுவை பாண்டியனாக்கி அனுப்ப முடிவு செய்கிறான். இதற்கிடையில் சங்கர் வீட்டிற்க்கு வரும் கீதா, வசந்தி, ரவி எல்லோரும் வேஷம் மாறி நிற்கும் சங்கரை பாண்டியன் என்று நினைத்து கொள்கிறார்கள். கீதா தன் கணவன் என்று நெருங்கி பழக சங்கருக்கு தர்ம சங்கடம் என்றால் அவரது மனைவிக்கு அளவிட முடியாத ஆத்திரம்.

    மீனவர்களால் காப்பாற்ற படும் பாண்டியன் வக்கீலை வந்து சந்திக்க கீதா உயிருடன் இருப்பது தெரிந்து அவளை சந்திக்க தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்ல அங்கே உச்ச கட்ட குழப்பம். பாண்டியனை சுடும் கபாலியின் துப்பாக்கி குண்டிற்கு மருது இரையாக, அதை பார்த்து கபாலி தன்னை தானே சுட்டுக்கொண்டு சாக, சங்கர் பாண்டியன் குடும்பங்கள் ஒன்றாகின்றன.

    (தொடரும்)

  14. #2079
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    பலே பாண்டியா - Part II


    பலே பாண்டியாவை பொறுத்தவரை நடிகர்திலகம் மற்றும் ராதா இருவரின் வேடங்களுக்கு பொருத்தமாக ஒரு திரைக்கதை உருவாக்கபட்டது என்றே சொல்ல வேண்டும். நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன்னால் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் திரைக்கதை எழுதப்பட்டது.. ஒரே உருவமுடைய இரண்டு பேர் இடம் மாறும் போது ஏற்படும் குழப்பங்களை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் இது ஆள் மாறாட்டம் செய்ய முயற்சிக்கும் ஒருவனது கதையை சொல்லியது.

    நடிப்பை பொறுத்தவரை முதல் மார்க் பாண்டியனுக்குதான். அந்த வெகுளியான கதாபாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருப்பார். முதல் காட்சியில் தன்னை காப்பாற்ற வரும் கபாலியிடமிருந்து பேசுவதில் ஆரம்பித்து (" Binocular சார் ") கடைசி வரை அதே momentum maintain ஆகும் கபாலியின் வீட்டை பார்த்து மலைத்து போய் கமெண்ட் அடிப்பது( இது வீடா சார்? அரண்மனை. ஆனால் அநியாயம் சார். அவனவன் இருக்க இடம் இல்லாம இருக்கிறான். இங்கே நூறு பேர் தாராளமாக இருக்க கூடிய இடத்திலே நீங்க தனி ஆளா இருக்கீங்க.") . தேவிகாவின் வீட்டுக்கு போய் பாண்ட் ஷர்ட் போட்டிருக்கும் அவரை ஆண் என்று நினைத்து பேசுவது.( "நீங்க நல்ல பேசுறீங்க. உங்க தங்கச்சி தான் எரிஞ்சு விழறாங்க") , உண்மை தெரிந்தவுடன் அசடு வழிவது எல்லாமே அக்மார்க் NT முத்திரை. அது போல் கபாலியின் சுய ரூபம் தெரியாமல் அன்பாக இருப்பது, வளர்ப்பு தங்கை மேல் வைக்கும் பாசம், அவள் ரவியைதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும்போது கெஞ்சாத குறையாக பேசுவது( "வசந்தி, இவனை நீ உண்மையிலே விரும்பிறியா ?" அதற்கு ஆமாம் என்று வசந்தி சொல்ல " கெடுத்துட்டான் கெடுத்துட்டான் " என்று புலம்புவது, மறுபடியும் "அம்மாடி! உண்மையிலே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறியா" அதற்கும் ஆமாம் என்று பதில் வர "ரொம்ப கெடுத்துட்டான்" என்று முனுமுனுப்பது) இவை எல்லாமே கிளாஸ். இந்த படத்தில் உணர்ச்சிவசப்படும் கட்டங்கள் குறைவு என்றாலும் வளர்ப்பு தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும் வசனங்கள் இல்லாமல் சட்டென்று மாறும் முக பாவம்,அவரால் மட்டுமே முடியும்.

    பாண்டியன் characterodu ஒப்பிடும் போது மருதுவிற்கு சின்ன ரோல்தான். ஆனால் அந்த லுங்கி கட்டிக்கொண்டு பீடியை உதட்டில் அப்படியும் இப்படியும் உருட்டிக்கொண்டு (45 வருடங்களுக்கு முன்பே) வருவது அவரது ஸ்டைல் முத்திரை. ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டு நடிப்பவர் நடிகர் திலகம் என்பதற்கு ஒரு உதாரணம் மருது, பாண்டியனாக வேஷமிடும் போதும் அணிந்திருக்கும் பாண்டை லுங்கி போல மடக்க முயற்சிப்பது. வசனங்கள் குறைவு என்கின்றபோதும் மருது வரும் காட்சிகளில் எல்லாம் நடையிலும் உடல் அசைவிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.

    கடைசி அரை மணி நேரம் மட்டுமே வரும் கேரக்டர் ஷங்கர். ஆனால் கடன் தொல்லையால் அவதிப்படும் அந்த Hen pecked கேரக்டர்-ஐ வேறு யாராவது இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு முறை சொல்வது( நடிக்க சொல்லும் மனைவியிடம் "It is not correct"),மனைவியின் முகத்தை பார்த்து விட்டு உடனே " நீ சொல்லி நான் எதை செய்யாமல் இருந்திருக்கேன்?" என்று அடங்கி போவது, தம்பி மனைவி தன்னை தம்பி என்று நினைத்து கொண்டு நெருங்கி வரும் போது ஒரு பக்கம் தர்ம சங்கடம் மறு பக்கம் தன் மனைவியின் முகத்தில் வெடிக்கும் கோபத்தை பார்த்து விட்டு நான் என்ன செய்வது என்பது போல் முகத்தை வைத்து கொள்வது, இப்படி சின்ன வாய்ப்பிலும் சிக்ஸர் அடிப்பார். ஒரே ஆள் எப்படி மூன்று வேடங்களையும் வித்யாசமாக செய்ய முடியும் என்பதற்கு காட்சிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

    நடிகவேளின் திரைப்பட வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இரண்டு வேடங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.. கபாலி அவருக்கே உரித்தான நக்கல் கேலி நையாண்டி கேரக்டர். ( வீட்டை பற்றி பேசும் பாண்டியனிடம் " பங்களவிற்கு வந்து politics பேச கூடாது" ). சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் ஸ்டைல் வெளிப்படுத்த தயங்க மாட்டார்.. அமிர்தலிங்கம் பிள்ளையாக அடக்கி வாசித்திருப்பார். இரண்டு ராதாக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி சுவையாக இருக்கும். (நிலை கண்ணாடிக்கு பதிலாக இன்னொரு ராதாவே நிற்பது).

    கீதாவாக தேவிகா அழகு என்றால் ரவியாக பாலாஜி smart and handsome. வசந்தியாக மாலினி, ஷங்கரின் மனைவியாக (குமுதம்?) சந்தியா (JJ -வின் தாய்) கொடுத்ததை நன்றாக செய்திருப்பார்கள்.

    பந்துலுவை பொறுத்தவரை பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் குழப்பமில்லாமல் கொண்டு போயிருப்பார். மா.ரா வின் வசனங்களும் Down to Earth.. படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் மெல்லிசை மன்னர்கள் - கவியரசு கூட்டணியில் வந்த பாடல்கள்.

    1. வாழ நினைத்தால் வாழலாம் - ஆரம்பத்தில் வரும் இந்த பாடல் climax-irkku முன்பும் வரும். அப்போது பாடலின் பின்னணி இசை சிறிது வேறுபடும்.

    2. நான் என்ன சொல்லிவிட்டேன் – TMS பாடல். NT - தேவிகா நடிக்க அழகாக எடுத்திருப்பார்கள்.

    3. யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே - NT சிறையில் இருக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலின் பின்னணிக்கு ஒரு சம்பவத்தை சொல்வார்கள். இந்த படம் வெளி வந்த காலத்தில் (1962) தமிழகத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. திமுக தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார். இதற்கு முன்னரே திமுகவை விட்டு வெளியேறிய கண்ணதாசன் தமிழ் தேசிய கட்சி என்ற அமைப்பை நிறுவி இருந்த போதிலும், அண்ணாதுரையின் தோல்வி அவரை பாதித்ததாகவும் அதனால் இந்த பாடல் எழுதினார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.[இதை போலவே தெய்வ மகன் படத்தில் வரும் தெய்வமே பாடலின் போது "முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்! அட என் ராச என் தம்பி வாடா" என்று TMS குரலில் பாடி விட்டு திடீரென்று NT தன் குரலில் அண்ணா! அண்ணா! என்று மூன்று தடவை சொல்லுவார். Top Angle Shot-aga எடுத்திருப்பார்கள். அது வெளி வந்த போது (1969 செப்டம்பர்) அண்ணாதுரை இறந்து விட்டார். (1969 Feb). NT- அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியதாக சொல்லுவார்கள். இதுவும் உறுதி செய்யப்படாத தகவல்]

    4. நீயே என்றும் உனக்கு நிகரானவன் - ரொம்ப பிரபலமான பாடல். மாமா மாபிள்ளை பாடல் என்றும் சொல்லுவார்கள்.

    5. ஆதி மனிதன் காதலுக்கு பின் - PBS, ஜமுனா ராணி - பாலாஜி, மாலினி ஜோடி பாடல்.

    6. அத்திக்காய் காய் காய் – TMS, PS, PBS, ஜமுனா ராணி.

    இந்த பாடலை பற்றி சொல்லவே வேண்டாம். என்றும் பசுமையாக இருக்கும் பாடல்.

    மொத்தத்தில் சிரித்து ரசிக்க ஒரு படம்.

    அன்புடன்.

  15. #2080
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a recap - from Saradha Madam old post

    "எங்கிருந்தோ வந்தாள்"

    தீபாவளி திருநாட்களில் 1967 தீபாவளியும், 1970 தீபாவளியும் நடிகர்திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாதவை. அந்த இரண்டு தீபாவளியிலும் ஒரே நாளில் நடிகர்திலகத்தின் இரண்டு படங்கள் வெளியிடப்பட்டு இரண்டுமே நூறு நாட்களைக் கடந்து ஓடி சாதனை புரிந்தன. கே.பாலாஜி தன் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த ஐந்தாவது படம் 'எங்கிருந்தோ வந்தாள்'. நடிகர்திலகத்துடன் (தங்கை, என் தம்பி, திருடன் படங்களைத் தொடர்ந்து) நான்காவது படம். இந்தியில் சஞ்சீவ்குமார் நடித்த 'கிலோனா' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. பின்னாளில் எங்கிருந்தோ வந்தாள் படத்தைப் பார்த்த சஞ்சீவ் 'நல்லவேளை சிவாஜிக்கு முன்னால் நான் நடித்து விட்டேன். இல்லாவிட்டால் அதே நடிப்பை என்னிடமும் மக்கள் எதிர்பார்த்திருப்பார்கள்' என்று சொல்லிக் கொண்ட படம். தன் கண் முன்னேயே தன் காதலி மரணத்தை தழுவியதால், மனநிலை பாதிக்கப்பட்ட நாயகனின் உணர்வுகளைக்காட்டும், கத்தி மீது நடப்பது போன்ற கதாபாத்திரம். இந்தியில் அவராலும், தமிழில் இவராலும் மட்டுமே செய்ய முடியும் என்று அனைவரும் சான்றிதழ் வழங்கிய படம்.

    பாலாஜியின் படங்களிலேயே நாயகனுக்கு இணையாக நாயகிக்கும் சம வாய்ப்பும், நடிப்பில் பரிணமிக்க சவாலான பாத்திரமும் அமைந்த படம். (பின்னாளில் 'நல்லதொரு குடும்ப'த்தில் வாணிக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது). நடிகர்திலகம் பிய்த்து உதறுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் ஜெயலலிதாவிடமும் இவ்வளவு திறமைகளா என்று வியக்க வைத்தது. 'கலைச்செல்வி' ஜெயலலிதாவின் சிறந்த பத்து படங்களை பட்டியலிடும்போது முதலில் எழுதப்பட வேண்டிய படமாக அமைந்தது. (பட்டியல் சவாலே சமாளி, சூரியகாந்தி, அடிமைப்பெண், திருமாங்கல்யம்... என்று தொடரும்)

    ஐதராபாத் நாட்டியக்காரியாக, ஜெயலலிதா அறிமுகமாகும் பாடலுடன் படம் துவங்கும். அங்கே வரும் பட்டவராயர் (மேஜர்) பைத்தியமாக இருக்கும் தன் மகனை குணப்படுத்த தன்னோடு தன் வீட்டுக்கு வருமாறு அழைக்க, ஜெயலலிதாவும் திகைப்புடன் ஒப்புக்கொண்டு வர, அவர் வருகையைப் பிடிக்காத மேஜரின் மூத்தமகன் (பாலாஜி) உள்ளிட்டோரின் வெறுப்பையும் பொருட்படுத்தாது, மாடியறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் சேகரைக் காணச் செல்லும்போது (திரையில்) நடிகர் திலகத்தின் அறிமுகம்.

    சேகருடன், அவருக்கு ஏற்றாற்போலவே பேசி அறிமுகமாகும் ராதா, மெல்ல மெல்ல அவரைத் தன் பேச்சைக்கேட்கும் அளவுக்கு மாற்றுகிறார். அவர் ஏன் பைத்தியமானார் என்பது ஃப்ளாஷ்பேக்காக சொல்லப்படுகிறது. கவிதாவை (ஜெய்குமாரி) உயிருக்குயிராக காதலிக்கும் சேகர், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவள் வேறொருவனுக்கு மாலையிடும் சூழ்நிலையில் காண நேரிடும்போது, அவளை நினைத்து உருகி பாட, அதில் கரைந்துபோன அவள், மற்றவனுக்கு மனைவியாவதைவிட மாய்ந்துபோவதே மேல் என முடிவெடுத்து, கையில் நெருப்போடு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள, அதை கண்ணெதிரே காணும் சேகருக்கு சித்தம் கலங்கிப்போகிறது. சேகரின் கடந்துபோன சம்பவங்களைக் கேட்ட ராதா (ஜெ) அவரைக் குணப்படுத்தும்வரை அவருடனேயே இருப்பது, அதனால் எந்த எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிப்பது என்று தங்கி விடுகிறார். அதைத் தொடர்ந்து சேகர் குணமாகும்வரை அவர் செய்யும் சேட்டைகளும், அதைப்பொறுத்துக்கொண்டு ராதா சேகரை குணமாக்கும் முயற்சியிலேயே குறியாக இருக்கிறார்.

    இதனிடையே படத்தை இழுத்துச் செல்வதற்காக நாகேஷ், அவர் மனைவி ரமாபிரபா, 'போலிச்சாமியார்' குலதெய்வம் ராஜகோபால், இது போதாதென்று தன் ஆஃபீஸ் டைப்பிஸ்ட் சச்சுவிடம் வழியும் பாலாஜி என்று அங்கங்கே கதை காடு மேடெல்லாம் சுற்றுகிறது. ஒரு கட்டத்தில் சேகரின் சேட்டைகள் தாங்க முடியாமல் வீட்டைவிட்டுப் போக நினைக்கும் ராதாவை போக விடாமல் தடுக்க, பூட்டிய அறைக்குள்ளிருந்து சேகர் "நான் உன்னை அழைக்கவில்லை... என் உயிரை அழைக்கிறேன்" என்று உருகிப்பாட, அதில் மனம் மாறிய ராதா, போகும் முடிவைக்கைவிட்டு திரும்புகிறார். ஆனால் அதைத்தொடர்ந்து மழையில் நனைந்துவிடும் ராதா, சூழ்நிலை காரணமாக சேகரிடம் தன் கற்பை பறிகொடுத்து விடுகிறார். சேகரின் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் ராதாவை, விஷயம் புரியாமல் சேகரின் தம்பி (முத்துராமன்) ஒருதலையாக காதலிக்கிறார். ராதாவோடு தனித்திருக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் அவரிடமிருந்து, ராதா நாசூக்காக கழன்று கொண்டு விடுகிறார்.

    சேகருக்கு காளிதாசனின் 'சாகுந்தலம்' கவிதையை வாசித்துக்காட்டும் ராதா, அப்படியே கற்பனை விரிந்து... தானே சகுந்தலையாகவும், சேகரை துஷ்யந்தனாகவும் பாவித்து, அந்தப்பாடலின்போது துஷ்யந்தனோடு கலந்துவிட, துர்வாச முனிவரது சாபத்தால் துஷ்யந்தன் தன்னை மறந்து சென்றுவிடுவதாக கனவு கண்டு திடுக்கிட்டு எழுவது... கதையோட்டத்துடன் கலந்த அற்புதமான இடைச்செருகல். கிளைமாக்ஸில் சேகர் என்ன சொல்லப்போகிறான் என்பதை முன்கூட்டியே சொல்வது போலவும் அமைந்திருந்தது. (ராதா கவிதை வாசித்துக்காட்டும் இந்தக்காட்சி, நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல'த்தின் முன் படமாக்கப்பட்டிருக்கும்).

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •