Page 280 of 401 FirstFirst ... 180230270278279280281282290330380 ... LastLast
Results 2,791 to 2,800 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2791
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெண்ணிற ஆடைகளில்
    நடிகர்திலகம்

    சரித்திர படங்களில் இருந்து
    சமுகப்படங்கள் வரை...









  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2792
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like









  5. Likes Russellmai liked this post
  6. #2793
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like









  7. Likes Russellmai liked this post
  8. #2794
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like









  9. Likes Russellmai, sss liked this post
  10. #2795
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Part 2.4. மணல் பாங்கான மணல் திட்டுககளாலான ஒட்டகங்களுக்கான பரப்பே பாலை நிலம்! நடிகர்திலகமோ பாலைவன சோலை!!
    கர்ணன் காவியத்தின் இறுதிக் கட்ட காட்சிகள் ராஜஸ்தான் பாலைவனத்தில் ராணுவ வீரர்களின் பங்களிப்புடன் படமாக்கப் பட்டதாக படித்திருக்கிறோம்


    சிவந்தமண்ணில் அரேபிய பாலைவன பிரமிடுகள் செட்டப்பில் பட்டத்துராணியையே சவுக்கால் சொடுக்கும் சிவாஜி ஷேக் !!



    Western Deserts!!

    Enjoy the desert ride from Clint Eastwood starrer The Good The Bad and the Ugly!! Enjoy the immortal background music by the great Ennio Morricone, with your ear phones plugged in!!

    Last edited by sivajisenthil; 8th June 2015 at 05:45 PM.

  11. Thanks ainefal thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #2796
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் கிரிக்கெட் பந்து வீசும் ஸ்டைல்.





    Last edited by senthilvel; 8th June 2015 at 05:10 PM.

  13. Likes Russellmai liked this post
  14. #2797
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    2.5. கடலும் கடல் சார்ந்த பரப்புமே நெய்தல் நிலம் !! நடிப்பின் திமிங்கிலம் உறைவிடம் கடலே!!
    திருவிளையாடல் திரைப்படத்தில் மீனவப் பெண்ணாகப் பிறந்த பார்வதியை மணமுடிக்க பூமிக்கு வந்து கடலோரம் நடக்கும் நடையழகு!!
    ஹ ஹ ஹா !! நடிப்பின் திமிங்கிலம் Vs கடல் திமிங்கில சண்டை இயக்குனரின் கற்பனை வறட்சியே!!



    அந்த கால கட்டத்தில் நமக்கிருந்த தொழில்நுட்ப வசதிகள் குறைவே !!



    In Paadhukaapu too story revolved around sea and seaside!!



    Bonus!
    Enjoy the underwater shark challenges encountered by Connery/Bond in Thunderball when technology started defining itself for underwater sequences in western movies!!
    Till date we are unable to venture on underwater scenes!!
    Last edited by sivajisenthil; 8th June 2015 at 09:43 PM.

  15. Likes Russellmai liked this post
  16. #2798
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம்

    தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.

    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

    கடந்த பதிவின் இறுதி பகுதி

    தவப்புதல்வன் வெற்றி பெற்றதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்! 1972 பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடியதைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் விளம்பரம் இதோ. மதுரையில் சிந்தாமணியிலிருந்து விஜயலட்சுமி அரங்கிற்கு ஷிப்ட் செய்யப்பட்ட தவப்புதல்வன் அங்கே 100 நாட்களை நிறைவு செய்தது. சென்னையில் பைலட் அரங்கிலும் 100 நாட்கள்.



    [மதுரை 04.12.1972 தேதியிட்ட தினத்தந்தி விளம்பரம் - நன்றி சுவாமி]

    அன்பு தாயார் ராஜாமணி அம்மையார் மறைந்து நான்கே நாட்களில் காங்கிரஸ் மாணவர் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்து கொண்டதை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக உடனே வசந்த மாளிகை படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் நடிகர் திலகம். முன்பே சொன்னது போல் தீபாவளிக்கு வருவதாக இருந்த வசந்த மாளிகை அதற்கு சற்று முன்னரே செப்டம்பர் 29 அன்று வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு விரைவாக நடந்து வந்தது, மயக்கமென்ன பாடல் காட்சியும் ஒரு சில patch up காட்சிகளுமே பாக்கி என்ற சூழலில் அதற்காக போடப்பட்ட set-ம் ரெடியாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் உடனே ஷூட்டிங்-ல் கலந்து கொண்டு அதை விரைவாக முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். பல்வேறு படங்களின் சின்ன சின்ன படப்பிடிப்பு schedules முடித்துவிட்டு ஒய்வு எடுத்தார்.எப்படி என்றால் 1972 செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை பாலாஜியின் நீதி படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் நடிகர் திலகம். மைசூருக்கு அருகேயுள்ள கிராமப் பிரதேசங்களில் படப்பிடிப்பு பிளான் செய்திருந்தார்கள்.

    நீதி ஷூட்டிங் தேதிகளுக்கும் அதற்கு முன் முடித்துக் கொடுத்த ஷூட்டிங் தேதிகளுக்கும் நடுவே கிடைத்த 5,6 நாட்கள் இடைவெளியைத்தான் சூரக்கோட்டை சென்று ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திக் கொண்டார். அதை ஒய்வு என்று சொல்லுவதை விட தாயாரின் மறைவு அவருக்குள் ஏற்படுத்திய வெறுமையையும் சோகத்தையும் மறக்கவே பண்ணைக்கு சென்றார். ஓய்விற்கு என்று சொல்லி சென்றாலும் அங்கும் அவரை காண ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வந்துக் கொண்டேயிருந்தனர் ஆக ஒய்வு எடுக்கப் போனாலும் அங்கேயும் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்துக் கொண்டுதானிருந்தார்.

    இதற்கிடையே பட்டிக்காடா பட்டணமா வெற்றி சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மதுரையை பொறுத்தவரை 100 நாட்களில் 4,19,000/- வசூலைப் பெற்று புதிய சரித்திரம் படைத்தது. 16 வாரத்தில் சுமார் 4,40,000/- ரூபாய் வசூல் செய்து அன்று வரை மதுரையில் அனைத்துப் படங்கள் [பணமா பாசமா நீங்கலாக] வெள்ளி விழா நாட்கள் ஓடி பெற்ற வசூலையெல்லாம் இந்த கருப்பு வெள்ளை காவியம் முறியடித்தது. அது மட்டுமா ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கத்தில் வெளியான படங்களிலேயே அதிகபட்சமாக 140 நாட்கள் ஓடி ரூபாய் 4,75,000/- சொச்சம் வசூல் பெற்ற கேஎஸ்ஜியின் பணமா பாசமா படத்தின் வசூலை தங்கம் தியேட்டரை ஒப்பிட்டு நோக்கினால் அதன் பாதி அளவே capacity உடைய சென்ட்ரல் திரையரங்கில் வெறும் 125 நாட்களுக்குள்ளாகவே கடந்தது பட்டிக்காடா பட்டணமா, [பணமா பாசமா வெளிவந்த 1968-ம் வருடத்தில் இருந்ததை விட டிக்கெட் கட்டணத்தில் 5 பைசா மட்டுமே 1972-ல் பட்டிக்காடா பட்டணமா வெளியானபோது அதிகமாக்கப்பட்டிருந்தது]. 19 வாரத்தில் ரூபாய் 4,90,000/- வசூலித்த இந்தப் படம் 20 வாரத்தில் மதுரையில் மற்றொரு வரலாற்று சாதனை புரிந்தது. மதுரையில் சினிமா திரையரங்குகள் தொடங்கிய காலம் முதல் அன்றுவரை மொத்த வசூலில் எந்தப் படமும் தொடாத 5 லட்சம் ரூபாயை தாண்டியது பட்டிக்காடா பட்டணமா. மிக சரியாக சொல்லவேண்டுமென்றால் 139வது நாள் இரவுக் காட்சியோடு 5 லட்சத்தை தொட்டது. அதாவது 1972-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி வியாழனன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

    ஆம் நண்பர்களே! எந்த ஒரு மனிதன் அந்த நாளில் பிறந்து பின்னாட்களில் நடிகர் திலகத்தின் சாதனை பொன்னேடுகளையெல்லாம் அகில உலகமும் அறிந்துக் கொள்ளும்வண்ணம் தரவேற்றினானோ அந்த மனிதன் பிறந்த நாளன்றுதான் அதற்கு முன்பும் சரி அதற்கு பின்னும் சரி மதுரையில் எந்த கருப்பு வெள்ளை படமும் தொடாத 5 லட்சம் வசூல் என்ற வெற்றிக் கோட்டை கடந்து இன்று வரை ஏன் இனி எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாத அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. காண கிடைக்காமல் இருந்த நடிகர் திலகத்தின் பல்வேறு சாதனை ஆவணங்களை தேடி பிடித்து வெளிக் கொண்டுவந்து நமக்கு வழங்கிய இரா. சுவாமிநாதனுக்கு இந்த மதுரைக்காரன் dedicate செய்யும் ஒரு சாதனை துளி இது.

    (தொடரும்)

    அன்புடன்

  17. Thanks adiram thanked for this post
  18. #2799
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler : Ornamental NT!!

    நகையலங்கார நடிகர்திலகம் !! புன்னகை பூத்திடுமே காண்பவர் வதனத்தில்!!

    நடிகர்திலகம் நம்மை ஈர்த்திட ஒரு புன்னகை போதுமே பின் ஏன் இவ்வ்வளவு பொன் நகை?!அவ்வளவு நகை கனத்தையும் தாங்குவது நடிப்பின் கனத்தால் நம்மை மகிழ்வித்திடவே !





  19. Likes Russellmai, sss, ainefal, KCSHEKAR liked this post
  20. #2800
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் -77
    (From Mr.Sudhangan's Facebook)


    `கை கொடுத்த தெய்வம்’ படத்தின் க்ளைமாக்ஸ் என்ன ?
    ஊரில் பேர் கெட்டுப் போன பணக்கார வீட்டுப் பெண் சாவித்ரி!
    அவருடைய அண்ணன் எஸ்.எஸ். ஆர்.!
    சிவாஜி, எஸ்.எஸ். ஆர் அவர் மனைவி கே.ஆர்.விஜயா எல்லோரும் வடநாட்டில் இருப்பார்கள்!
    இப்போது சிவாஜிக்கு பெண் பார்க்க முயற்சி நடக்கும்!
    அப்போது தமிழ்நாட்டுக்கு வரும் சிவாஜி தற்செயலாக சாவித்ரியை சந்திப்பார்!
    அவர் தான் பார்க்க வந்த பெண் என்பது சிவாஜிக்குத் தெரியாது!
    அந்தப் பெண் ஒரு கெட்டவனால் தன் பெயர் எப்படி கெட்டுப் போய் தன் திருமண வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்டது என்பதை வெகுளித்தனமாக சிவாஜியிடம் சொல்வார்!
    வளர்ந்த அந்தப் பெண்ணின் குழந்தைத்தனம் சிவாஜிக்கு பிடித்துப் போகும்!
    அந்தப் பெண்ணின் குண இயல்புகளை புரிந்து கொண்டு சிவாஜி ஒரு பாட்டு பாடுவார்!
    ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
    உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ!
    பார்வையிலே குமரியம்மா !
    பழக்கத்திலே குழந்தையம்மா
    ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ!
    என்று அந்தப் பெண்ணைப் பற்றி பாடுவார்!
    கண்ணதாசனின் அந்தப் பாடலிலேயே அந்தப் பெண்ணை சிவாஜி எப்படி புரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்கான விளக்கமே இருக்கும்!
    தமிழ்நாட்டில் இருக்கும் சிவாஜி தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் புகைப்படத்தை வடநாட்டிலிருக்கும் தன் நண்பர் எஸ்.எஸ்.ஆருக்கு அனுப்புவார்!
    படத்தைப் பார்த்தது அதிர்ச்சியடைவார் எஸ்.எஸ்.ஆர்!
    பேர் கெட்டுப் போன தன் தங்கையை தன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைப்பார் எஸ்.எஸ். ஆர்!
    தமிழ்நாட்டில் சிவாஜி அந்தப் பெண்ணை புரிந்து கொண்டு பாட்டு பாடும்போது, சிவாஜிக்கு ஒரு கடிதம் அங்கே வடநாட்டில் எழுதிக்கொண்டிருப்பார் எஸ்.எஸ்.ஆர்.
    எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைப்பார் எஸ்.எஸ். ஆர்!
    பல முறை கடிதமெழுதி கிழித்துப் போட்டுக்கொண்டிருப்பார் அந்தப் பெண்ணின் அண்ணனான எஸ்.எஸ். ஆர்!
    அங்கே சிவாஜியோ!
    பாலிலும் வெண்மை!
    பனியிலும் மென்மை!
    பச்சையிளம் கிளி மொழி
    நீ சொல்வதும் உண்மை!
    சிவாஜி அங்கே பாடும்போது, அங்கே எஸ்.எஸ்.ஆர்.பல நூறு முறை சிவாஜிக்கு கடிதம் எழுதி தாள்களை கிழித்துப் போட்டுக்கொண்டே இருப்பார்!
    அங்கே சிவாஜியோ!
    பாவிகள் நெஞ்சம்
    உரைத்திடும் வஞ்சம்!
    அங்கே எஸ்.எஸ். ஆர் கிழித்துப் போட்ட கடித காகிதங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்!
    குப்பைக் காகிதங்களுக்கு நடுவே தன் கணவன் மனம் புழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் மனைவி கே.ஆர்.விஜயா அங்கே பதறிக்கொண்டிருப்பார்!
    `பெண்ணோடு தோன்றி!
    பெண்ணோடு வாழ்ந்தும்!
    பெண் மனது என்னவென்று
    புரியவில்லையோ?
    கண்ணென்ன கண்ணோ!
    நெஞ்சென்ன நெஞ்சோ?
    களங்கம் சொல்வபவர்க்கு
    உள்ளம் இல்லையோ?
    ஆதாரம் நூறென்று
    ஊர் சொல்லலாம்!
    ஆனாலும் பொய்யென்று
    நான் சொல்லுவேன்!
    என்று அந்தப் பாடலிலேயே தன் உறுதியான எண்ணத்தை சிவாஜி பிரதிபலிப்பார்!
    திட்டமிட்டதற்கு முன்பாகவே வடநாடு திரும்புவார் சிவாஜி!
    அவரை வரவேற்கும் கே.ஆர்.விஜயா , ` அண்ணா, கல்யாணம் முடிவாயிடுச்சா ? என்று வெகுளித்தனமாக கேட்பார்! கூடவே அந்த படத்தை பார்த்ததிலிருந்து எஸ்.எஸ்.ஆர் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவு சொல்லுவார்
    அப்போது சிவாஜிக்கு ஒரு கடிதம் வரும்!
    கடிதத்தை ஒரு படித்துப் பார்ப்பார்!
    சிவாஜி கடிதத்தை படித்துக்கொண்டிருக்கும்போதே பின்னால் எஸ்.எஸ்.ஆர் நுழைவார்

    `நீ அனுப்பியிருந்தியே ஒரு போட்டோ! எனக்கு அந்த பெண்ணை அவ்வளவு திருப்திகரமாக இல்லை’ என்பார் எஸ்.எஸ். ஆர்!
    `அதலாலென்ன இப்ப1 அந்த பொண்ணுதான் இல்லேன்னு ஆயி போச்சே! ஆனால் நாம முதல் முதலா சந்திச்சப்போ! என் பிரேதத்தை கூட என் சொந்தக் காரங்க பாக்கக் கூடாதுன்னு தான் நான் இந்த ஊர்ல வந்து தற்கொலை பண்ணிக்கப்போறேன்னு சொன்னீயே அது என்ன சமாச்சாரம் ?’
    எஸ்.எஸ். ஆர் முகத்தில் ஒரு சந்தேகமான குழப்பம்!
    `பழைய விஷயத்தையெல்லாம் இப்ப எதுக்குப்பா கேட்டுக்கிட்டு?’
    `தெரிஞ்சுக்கத்தான்’
    `குடும்பம்னா பலது இருக்கும்....!’
    `குடும்பம்னா சச்சரவு இருக்கும்! மனஸ்தாபம் இருக்கும்! தற்கொலை பண்ணிக் கொள்கிற அளவுக்கு அங்க என்ன ?’
    `இந்த கேள்விக்கு பதிலை நீ எதிர்பார்க்காதே ?’ உறுதியாக சொல்லிவிட்டு நகர்வார் எஸ்.எஸ்.ஆர்!
    `நான் சொல்றேன்! நான் போட்டோ அனுப்பினேன் இல்லை1 அந்தப் பெண்ணை நீ காதலிச்சிருக்கே! அவளை கெடுக்க நினைச்சிருக்கே!’ சிவாஜி சொல்ல சொல்ல எஸ்.எஸ்.ஆர் வெகுண்டு சிவாஜி சட்டை பிடித்துக் குலுக்குவார்! சிவாஜி தொடருவார், ` ஊர்ல உன்னை எல்லாரும் கேவலமா பேச,இங்க வந்து தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணியிருக்கே!
    தாங்க முடியாமல், ` அவ என் தங்கை!’ என்று உண்மையை போட்டுடைப்பார் எஸ்.எஸ். ஆர்!
    `அப்படி வா! நான் இப்படி சொல்லலைன்னா நீ எங்க உண்மையை சொல்லியிருக்கப் போறே ?!
    தன் பையிலிருந்த கடிதத்தை எடுத்து எஸ்.எஸ்.ஆரிடம் கொடுத்து படிக்கச் சொல்வார் சிவாஜி!
    அந்த கடிதம் எஸ்.எஸ்.ஆரின் இன்னொரு தங்கை புஷ்பலதா, எஸ்.எஸ்.ஆருக்கு எழுதிய கடிதம்!
    ஆனால் எஸ்.எஸ்.ஆர் சிவாஜிக்கு எழுதிய கடிதம் சிவாஜி கைக்கு கிடைக்காமல் அந்த தங்கையிடம் கிடைத்திருக்கும்!
    இப்போது தங்கை எழுதி, தன் கையிலிருந்த கடிதத்தை கொடுத்து எஸ்.எஸ். அவரை படிக்க்ச் சொல்வார் சிவாஜி!
    அந்த கடிதத்தில்!
    நீ உன் நண்பர் ரகுவிற்கு எழுதிய கடிதத்திலிருந்து நீ உயிரோடு இருக்கிறாய் என்று தெரிந்து புத்துயிர் பெற்றேன்!! அதே கடிதத்தில் நீ கடைசியாக எழுதியிருக்கிறாயே? `இந்தப் பெண் உன் வாழ்க்கைக்கு ஏற்றவள் அல்ல என்று அந்த ஒரு வார்த்தை எனக்கு பேரிடியாக வந்துவிட்டது! சத்தியமாகச் சொல்கிறேன் உன் தங்கை கோகிலா (சாவித்ரி) மாற்றறியாத பசும்பொன்! எவனோ ஒருவன் அவன் கெட்டுவிட்டாள் என்று கதை கட்டிவிட்டான்! ஊரார் சந்தேகித்தனர்! உடன்பிறந்த சகோதரனான நீ ஊரை விட்டு ஒடிய ஒரே காரணத்தினால்தான் ஊரார் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று! பழி சுமந்த தங்கைக்கு திருமணம் முடிக்க தந்தை பாடாத பாடுபட்டார்! வந்தவர்களெல்லாம் வசைமாரி பொழிந்து சென்றுவிட்டனர்! அந்த ஏக்கத்தினால் அப்பா அணுஅணுவாக செத்துக்கொண்டிருக்கிறார்! அந்த நேரத்தில் கை கொடுத்த தெய்வம் போல உன் நண்பன் ரகு வந்து, என் நண்பனின் சம்மதம் பெற்று நான் மணந்து கொள்கிறேன் என்று சொல்லிச் சென்றார்! நீ மறுத்துவிட்டாய்! ஒரு பெண்ணின் திருமணம் ஊரார் முயற்சியால் நின்று விடுவதுண்டு!ஆனால் ஒரு தங்கையின் திருமணம் அண்ணனால் நின்றது என்கிற புகழ் உன்னைத் தவிர வேறு யாருக்கு கிடைக்கும்?
    அடுத்து வருவதுதான் ஆழமானது !

    (தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  21. Likes Russellmai, sss liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •