Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    நம்முடைய பாதையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது. நடிகர் திலகம் என்னும் உலக அதிசயம் ஒவ்வொரு அணுத்துகளாக அலசி ஆராய வேண்டிய படைப்பு. இதற்கு நமக்கு தேவைப்படும் காலமோ நம் ஆயுளி்ல் பல மடங்கு.. கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளியும் நமக்கு பொக்கிஷங்கள். நம் வாழ்வில் இறைவன் நமக்களித்த ஆயுளில் மீதத்தில் எந்த அளவிற்கு நம்மால் செலவிட முடியுமோ அந்த அளவிற்கு ஒவ்வொரு மணித்துளியும் நம் எழுத்தின் மூலம் சரங்களாக்கி அவருக்கு படைக்க வேண்டிய பணிகள் உள்ளன.

    இன்னும் 21ம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர் இந்திய விடுதலைப் போர், அதில் தமிழகத்தின் பங்கு இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள முதல் திறவு கோலாக உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் காண விருக்கும் மறு வெளியீடு, அது அடுத்த தலைமுறையின் மத்தியில் ஏற்படுத்த உள்ள தாக்கம், இவற்றைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும்.

    எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு நம் கவனத்தை நம் பாதையை விட்டு விலகாதிருக்கும் வண்ணம் செலுத்தி நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் ஈடுபடுவோம். சாதனைகளை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நடிகர் திலகத்தின் சாதனைகள் தாங்களே கட்டியம் கூறும்.

    இனி வரும் பதிவுகள் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளாக மட்டுமே இருக்கட்டும். என வேண்டிக் கொள்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes J.Radhakrishnan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •