Page 41 of 402 FirstFirst ... 3139404142435191141 ... LastLast
Results 401 to 410 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #401
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #402
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திருடாதே - நிழற் படங்கள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து .நன்றி திரு முத்தையன் .
    23.4.2015 இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பணக்கார குடும்பம் - 51 ஆண்டுகள் நிறைவு .
    24.4.1964 அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் . மக்கள் திலகத்தின் நவரச நடிப்பு நம்மை எல்லோரையும் மயக்கியது .
    கவியரசரின் வரிகள் ''என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே ''- 1964ல் ஒலித்த குரல் .....1967 முதல் இன்று வரை 48 ஆண்டுகளாக ...
    தொடர்ந்து ஒலிக்கபோகும் பாடல் . என்ன நிதர்சனமான உண்மை .
    கவியரசர் எழுதினார்
    மெல்லிசை மன்னர்கள் இசையில்
    பாடகர் திலகம் - ஈஸ்வரி குரலில்
    மக்கள் திலகம் - மணி மாலா பாடி நடித்தார்கள் .
    மக்கள் திலகம் வாழ்ந்து காட்டினார் .
    நம் திராவிட ஆட்சி தொடர்ந்தது .... தொடர்கிறது ... தொடரும் ...
    அதுதான் மக்கள் திலகம் எம்ஜிஆர் .


  4. #403
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு கலை வேந்தன் - இதோ உங்களுக்கு பிடித்த பாடல் ( எனக்கும் தான் ) கண்ணன் என் காதலனில் எல்லா பாடல்களுமே அருமையாக இருப்பதினால் நீங்கள் விரும்பும் இந்த பாடலை குறிப்பிட்டு சொல்ல மறந்துவிட்டேன் - மன்னிக்கவும் .



    என்ன வரிகள் சார்!! - காதலின் மென்மையை எவ்வளவு தெளிவாக சொல்லும் வரிகள் - கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கின்றது . கண்கள் இரண்டும் விழி விளக்காக ,கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக , கைகள் இரண்டும் தொட்ட சுகமாக கலந்திருப்போமே யுகமாக யுகமாக !! இப்படி இருந்தால் திருமண வாழ்வு முறிவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை . இப்பொழுது நடக்கும் கூத்துக்களை பார்த்தால் , இந்த வரிகள் இறந்து போய் பல யுகங்கள் ஆகி இருக்கலாம் என்றே தோன்றுகின்றது . புறாக்கள் வரும் இரண்டு பதிவுகளை NT திரியில் போட்டவுடன் மீண்டும் இந்த பாடலில் புறாக்களை சந்திப்பது மனதிற்கு இதமாக உள்ளது .

    அன்புடன்
    ரவி

  5. Likes Russellrqe liked this post
  6. #404
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கவியரசரும் வாலியும் போட்டி போட்டு கொண்டு மக்கள் திலகத்தின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்தார்கள் .
    1964ல் வெளிவந்த தெய்வத்தாய் படத்தில் ''மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் '' பாடல் ...
    உலகம் உள்ளவரை இந்த வைர வரிகள் வாழும் ....

  7. #405
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..


    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்.. முழுக்க முழுக்க பாடல்களின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்! பத்துப் பாடல்கள்.. அனைத்தும் முத்துப் பாடல்களாக வரவேண்டும் என்று பணிக்க.. மெல்லிசை மன்னரும் தன் திறம் முழுக்கச் செலுத்தி ஒவ்வொரு பாடலாக உருவாக்கித் தருகிறார். காலை முதல் மாலைவரை நடந்திடும் அப்பணியை மாலையிலே வந்து கேட்டு கருத்து வழங்கிய மக்கள் திலகம்.. ஒவ்வொரு பாடலையும்.. எதிர்பார்த்த அளவு சரியாக வரவில்லை.. என்று சொல்ல, மெல்லிசை மன்னரோ.. சரி.. அப்படியென்றால் நாளைக்கு இதே பாடலுக்கு வேறு மெட்டுக்கள் அமைத்துக் காட்டுகிறேன் என்பாராம். எம்.ஜி.ஆரோ.. சரி.. விடுங்க.. அடுத்த பாடலையாவது இன்னும் நல்லா பண்ணுங்க என்று விடைபெறுவாராம்.

    அப்படியே படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எம்.ஜி.ஆர். அவர்களின் தினசரி கருத்தின்படி பரவாயில்லை ரகமாகவே அமைந்திட மெல்லிசை மன்னருக்கு.. மனம் திருப்தியாக இல்லை.. எனவே கடைசிப் பாடலை இசையமைத்துவிட்டு.. இதோ பாருங்க.. இந்தப் பாடலும் உங்களுக்கு திருப்தியாக இல்லையென்றால்.. நான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.. நீங்கள் வேறொரு இசையமைப்பாளரை வைத்து இசை அமைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல.. கடைசிப்பாடலையும் கேட்டபின் பொன்மனச் செம்மல் புகன்றிட்ட பாராட்டுகள் எத்தனை தெரியுமா? எம்.எஸ்.வி.. உங்கள் இசையை வேறு எவரும் குறை சொல்லக் கூடாது.. நான் மட்டும்தான் அந்த உரிமை பெற்றவன்.. மேலும் ஒவ்வொரு பாடலையும் நீங்கள் வித்தியாசமான முயற்சி செய்து புதுமையாக செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என்றார். அது தவிர.. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பாடல்கள் அனைத்தும் காலங்களை வென்று நிற்கும் கானங்களாகும் என்றே அன்றே உறுதிபட தெரிவித்து உள்ளத்து மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்கு மேலே பல மடங்கு மெல்லிசை மன்னருக்கு வழங்கிய வள்ளலின் இசை ரசனை என்றைக்காவது சோடை போனதுண்டா?

    வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.. என்கிற முதல் பாடல் முதல் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் தமிழ்பேசும் மக்கள் அனைவரின் விருப்பப் பாடல்களானதை மறுக்க முடியுமா? இதோ பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ .. வாலிபக் கவிஞர் வாலியின் கைவண்ணம்.. மக்கள் திலகத்தோடு தாய்லாந்து நாட்டு கதாநாயகி இணைசேர.. கற்பனை வானம் திறக்கிறது.. கன்னித்தமிழ் மணக்கிறது.. இன்பத்தேன் வழிகிறது.. இதயம்வரை நனைகிறது.. அதற்கு முன்னரோ.. பின்னரோ.. வந்த எந்த இசையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்.. மெல்லிசை மன்னருக்கு நிகர் மெல்லிசை மன்னரே என்று நிரூபிக்கும் தரமான இசை.. மேலைநாட்டு சங்கீதத்தை தன் கற்பனையாலே கேள்வி ஞானத்தாலே மீட்டெடுத்துத் தருகின்ற வித்தைக்காரர்.. இதைவிட சிறந்ததொரு இசை உலகம் சுற்றும் வாலிபனுக்கு கிடைத்திடுமா?

    டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் அமைந்த இன்னிசை ஸ்வரமாலை..
    இதோ.. மெல்லப் பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ……………

    திரைப்படம்:உலகம் சுற்றும் வாலிபன்.
    பாடியவர்:டி.எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    வரிகள்: கவிஞர் வாலி

    பச்சைக்கிளி முத்துச்சரம்
    முல்லைக்கொடி யாரோ
    பாவை என்னும் பேரில் வரும்
    தேவன் மகள் நீயோ ?
    பொன்னின் நிறம் பிள்ளை மனம்
    வள்ளல் குணம் யாரோ
    மன்னன் எனும் பேரில் வரும்
    தேவன் மகன் நீயோ (பொன்னின்)

    தத்தை போலத் தாவும் பாவை
    பாதம் நோகும் என்று
    மெத்தை போல பூவைத் தூவும்
    வாடைக் காற்றும் உண்டு
    வண்ணச்சோலை வானம் பூமி
    யாவும் இன்பம் இங்கு
    இந்தக் கோலம் நாளும் காண
    நானும் நீயும் பங்கு
    கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
    நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ (பச்சை)

    பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
    நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
    சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
    கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
    பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
    கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா (பச்சை)
    பல்லவி முதல் சரணங்கள் வரை பாடலில் இனிமை..இளமை.. புதுமை!!

    courtesy
    கவிஞர் காவிரிமைந்தன்
    Last edited by Varadakumar Sundaraman; 23rd April 2015 at 01:29 PM.

  8. Likes ainefal liked this post
  9. #406
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #407
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம்
    40 ஆண்டுகள் கலைப்பயணம் .
    34 ஆண்டுகள் அரசியல் பயணம் .
    134 மொத்தம் நடித்த படங்கள் .
    115 படங்களில் கதாநாயகன் .
    10 படங்கள் ஒரு கோடிக்கு மேல் வசூலாகி சாதனை .
    22 லட்சம் அதிக பட்ச ஊதியம் - மீனவ நண்பன்
    3 முறை தொடர்ந்து தமிழக முதல்வர் .
    27,674 வாக்குகள் வித்தியாசத்தில் 1967 தேர்தலில் வெற்றி .
    1962ல் தமிழக சட்ட மேலவை உறுப்பினர் .
    1971ல் மீண்டும் பரங்கிமலை தொகுதியில் வெற்றி .
    1977ல் தமிழக முதல்வர் .
    1980ல் மீண்டும் முதல்வர்
    1985ல் மூன்றாம் முறை முதல்வரானார் .
    1991ல் இரட்டை இலை வெற்றி
    2001ல் இரட்டை இலை வெற்றி
    2011ல் இரட்டை இலை வெற்றி
    2014ல் 37/39 பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை வெற்றி

    முக நூலிலிருந்து



  11. #408
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  12. #409
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    கண்கள் இரண்டும்... பாடலை தரவேற்றியதற்கு மிக்க நன்றி திரு.ரவி சார். தங்களின் 800வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    நேற்று நடிகர்திலகம் திரியில் எல்லாருக்கும் பிடித்தமானவர் என்ற வரம் எனக்கே கிடைக்கவில்லையே? என்று கடவுள் கேட்ட கதையை கூறியிருந்தீர்கள். ரசித்தேன். ஆனால், எனக்குத் தெரிந்து எல்லாருக்கும் பிடித்த ஒரு சிலரை கடவுள் படைத்திருக்கிறார். அதில் முக்கியமான ஒருவரின் பெயர்.... ஐதராபாத் ரவிக்குமார்.

    வாழ்த்துக்கள் சார். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. #410
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    திரு குமார் - மிகவும் நன்றி - எண்ணிக்கையை நான் பார்ப்பதில்லை - போடும் பதிவுகள் மக்கள் திலகம் பாடல்களை போல நல்ல கருத்துக்களை தர வேண்டும் , நடிகர் திலகத்தின் நடிப்பை போல சிறந்து விளங்க வேண்டும் , உங்கள் எல்லோருடைய நல்ல உள்ளங்கள் போல உயர்ந்து நிக்க வேண்டும் . இதில் நான் வெற்றி கண்டது 1% க்கும் கீழே - செல்ல வேண்டிய இடமும் தூரம் - கற்க வேண்டிய பாடங்களும் இன்னும் ஏராளம் - இந்த பிறவிக்குள் எல்லாம் அடைவது என்பது அசாதாரணம் .

    அன்புடன்
    ரவி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •