-
21st October 2019, 07:07 PM
#1711
Junior Member
Diamond Hubber
இன்னும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் இந்த படத்தில்
தலைவரின் காமெடி நடிப்பை பார்த்து ரசித்து
சிரித்து மகிழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் சபாஷ் எம்.ஜி.ஆர் என்று பாராட்டியதாக ஏதோ ஒரு பத்திரிக்கையில்
படித்திருக்கிறேன் அதை படக் குழுவினர் பட விளம்பரத்துக்கு பயன் படுத்தியதாகவும்
படித்திருக்கிறேன் சார்!........ Thanks...
-
21st October 2019 07:07 PM
# ADS
Circuit advertisement
-
21st October 2019, 07:09 PM
#1712
Junior Member
Diamond Hubber
குமார் சார் நீங்கள் சொன்னது சரிதான் இந்த படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால்
நிச்சயம் தலைவரின் பல்வேறு நடிப்பு பரிமாணங்கள் வெளிப் பட்டிருக்கும் ஆனால் படம் வெற்றி பெறாததால் மற்ற டைரக்டர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை
ஆனால் இந்த படம் வெளி வந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு
தலைவரின் இயற்கையான நடிப்பை
சரியான முறையில் வெளியே கொண்டு வந்தவர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள், "பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் உருண்டு அழுது புரளாமல் நீதி மன்றத்தில் நீதி அரசரிடம் கண்களில் கண்ணீரோடு பிள்ளையை கொடுத்து
விடுமாறு கெஞ்சும் போது நமக்கு நெஞ்சே வெடித்து விடும் அதிலும் குறிப்பாக தயவு செய்து என் பிள்ளையை பிச்சையாக வாவது கொடுங்கையா என்று
சொல்லும் போது இதுதாண்டா உண்மையான பிள்ளைப் பாசம் என்று
கத்த வேண்டும் போல் இருக்கும், இந்த திரைப் படம் ஒதுக்குப் புறமான
ஸ்டார் அரங்கில் வெளியானாலும் ஓடின
ஓட்டத்தைப் பார்த்து சிவாஜி தன்னிடம் எப்படி ரியாக்ட் செய்தார்
என்பதை ஆரூர் தாஸ் எழுதி அதை படித்திருப்பீர்கள் என்று
நம்புகிறேன் , பாசம் படத்தின் இறுதிக் காட்சியில் ரசிகர்கள் எழுந்து போவது நியாயம்தான் காரணம் நான் இப்போது அந்த படத்தை பார்த்தாலும்
தலைவர் இறக்கும் காட்சி வரும் முன் டி.வியை அணைத்து விடுவேன், ஒரு தடவை பார்த்தே எப்பா போதுண்டா சாமி இனி என் தலைவன் சாகுற மாதிரி வர்ற இந்த படத்தை இனி பார்க்கவே கூடாது என்று முடிவு செய்தேன்
மற்றபடி படத்தில் தலைவர் உலகம் பிறந்தது பாடல் காட்சியில் சும்மா பந்து
மாதிரி துள்ளிக் கொண்டே இருப்பார், இடையில் வரும் பால் வண்ணம் பாடலிலும் கொள்ளை அழகுடன் காணப் படுவார்
குமார் சார் படத்தின் ஸ்டில்ஸ் எல்லாம் மிகவும் அருமை
நன்றி சார்!....... Thanks...
-
21st October 2019, 07:10 PM
#1713
Junior Member
Diamond Hubber
குமார் சார் வணக்கம்
செழிப்பும் வனப்பும் நிறைந்து 100 சதவிகித
கல்வி அறிவும், தொன்மையான நல்ல தமிழ் பேசும் அன்பும் பண்பும் நிறைந்த மக்கள் வாழும் பழைய சேர நாடும் இப்போதைய வளம் நிறைந்த எங்கள் குமரி
மண்ணில் பிறந்த நகைச்சுவை மூலம் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைத்த அய்யா கலைவாணர் அவர்களின் நினைவாக
நீங்கள் அனுப்பிய அனைத்து படங்களும்,
கட்டுரையும் அருமை
கடைசியில் தலைவர் 1978 இல் கலைவாணர்
நினைவு நாளின் போது
கூறிய வார்த்தைகள் கண்ணில் நீர் திரையிட
வைத்து விட்டது என்ன ஒரு அழகான வார்த்தைகள்
Kalaivanar is no more, For if he had been alive, Kalaivanar would have been the Chief minister and he would have served him.
எவன் சொல்லுவான் இந்த வார்த்தைகளை
என் தலைவனிடம் இருந்து மட்டுமே இந்த
வார்த்தைகள் வரும்.
மிகவும் நன்றி சார்!....... Thanks...
-
21st October 2019, 07:12 PM
#1714
Junior Member
Diamond Hubber
"தேடி வந்த மாப்பிள்ளை" ...
தலைவரின் ஒரு சில படங்களுடன் ஒப்பிடும் போது ஏ ன் 100 நாட்கள்
ஓடவில்லை என்று ஒவ்வொரு தடவையும் படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும் காரணம் தலைவரின் சுறுசுறுப்பு, அழகு, அருமையான காமெடி, இனிமையான
பாடல்கள், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் இவையெல்லாம் இருந்தும் படம் 100 நாளை தாண்டாதது கொஞ்சம் ஏமாற்றம்தான் மற்றபடி
படம் பந்துலு அவர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை கொடுத்தது மட்டுமல்ல
அடுத்தடுத்த சுற்றுகளில் மிகப் பிரமாதமாக வசூல் குவித்த படம் குறிப்பாக
தலைவர் கட்சி ஆரம்பித்த பிறகு 1973 இல் கிராமத்தில் இருந்து நகரம் வரையில் வசூல் முரசு
கொட்டியது, இந்த செய்தி நிருபர் நமச் சிவாயம் அவர்கள் ஜூனியர் விகடன் பத்திரிக்கை யிலேயே எழுதி இருந்தார்,தலைவர் இந்த படத்தில் சார்லி சாப்ளின் வேடத்தில் என்ன ஒரு அழகாக நடித்து இருந்தார் நான் ரொம்ப ரசித்த வேடம்
ஸ்டில்ஸ் அனைத்தும்
பிரமாதம் சார்
நன்றி சார்!....... Thanks...
-
21st October 2019, 07:25 PM
#1715
Junior Member
Diamond Hubber
சகோதரர் அவர்களே..." தேடி வந்த மாப்பிள்ளை" காவியத்தை பற்றிய செய்திகள் கூறி இருக்கிறீர்... நமது காவியங்கள் 100 நாள்கள் கணக்கு... நம் காவியங்களின் வெற்றி வசூல் கணக்கீடுக்கு பொருந்தாது... மற்ற நடிகர்களின் பட ஓட்டம், வசூல் எவையும் புரட்சி நடிகரின் வசூலுடன் ஒப்பிடவோ, நியாய படுத்தோவோ முடியாது... மற்றபடி நமக்கு சென்னையிலோ, வேறு நகரங்களிலோ சொந்தமாகவோ, குத்தகைக்கோ திரையரங்குகள் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் ......... Thanks...
-
21st October 2019, 07:26 PM
#1716
Junior Member
Diamond Hubber
உங்களுக்கு மட்டுமல்ல
குமார் சார் எனக்கும் மிகவும் பிடித்த படம்
தலைவர் மிகவும் stylish
ஆக நடித்த படம் , இந்த படத்தில் தலைவரின் அழகை காண கண் கோடி வேண்டும் அவ்வளவு அழகாக இருப்பார் , குறிப்பாக பொன்னெழில் பூத்தது
பாடலில் பல்லவ சக்ர வர்த்தி யாக தோன்றும் போது அய்யோ அப்படியே பைத்தியம் பிடிக்கும் அவ்வளவு அழகு பல்லவ சக்ரவர்த்தி கூட இப்படி
இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்
அதிலும் அந்தப் பாடலின் கடைசி பகுதியில் பல்லவ கெட்டப்பில் இருந்து இருவரும் சுய நினைவுக்கு வரும்போது சரோஜா தேவி யின் வெட்க மும்
தலைவரின் அழகான சிரிப்பும் இதையே நான் குறைந்தது 500 முறையாவது பார்த்திருப்பேன் அடுத்து பல்லவன் பல்லவி பாடலில் நவரசங்களையும் குழைத்து பின்னி பெடல் எடுத்திருப்பார் ஒவ்வொரு வரிக்கும் வித்தியாசமான முக பாவங்களிலும் நடனத்திலும் பத்மா சுப்பிரமணியம் கெட்டார்
போங்கள் AVM நிறுவனத்தினர் இதே மாதிரிதான் அன்பே வா
படத்தையும் வெள்ளி விழா ஓடாமல் ஆக்கினார்கள் , சில பல
சதிகளால் ஒளி விளக்கு
படத்தையும் ஜெமினி நிறுவனம் சென்னையில் 100 நாள் ஓடாமல் முடக்கியது
பாவம் பரி தாபத்துக்கு
உரியவர்கள்!............ Thanks...
-
21st October 2019, 07:26 PM
#1717
Junior Member
Diamond Hubber
குமார் சார் வணக்கம்
தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றி
முதன் முதலாக நூறாவது நாள் என்பதற்கு பதிலாக " வெற்றி விழா" என்றுதான் தமிழ் சினிமாப் பட வரலாற்றில் முதன் முறையாக தலைவரின்
நாடோடி மன்னன் படத்திற்கு விளம்பரம் செய்யப் பட்டு விழா எடுக்கப் பட்டது மிகப் பெரிய வரலாறு அது மட்டுமல்ல கணேசனை வைத்து பல படங்களை
எடுத்த( எல்லாம் மொக்கை படங்கள், அதிலும் தவப் புதல்வனை 100 நாள் தேய்த்தது மிகப் பெரிய
கொடுமை) முக்தா சீனிவாசன் அவர்கள்
தலைவரின் ஒரு படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம் என்று பாராட்டிப் பேசிய
75 ஆம் ஆண்டில் இந்தியப் பட உலகையே
வியப்பில் ஆழ்த்தி " டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிக்கையில் சிறப்புக் கட்டுரை எழுத
வைத்த தலைவரின் " இதயக்கனி" இந்த இரண்டு படங்களின் ஸ்டில்ஸ் மற்றும் காணொளிகள் அனைத்தும் அற்புதம்
மேலும் கண்ணதாசனின் வசனங்களை தலைவர்
வெளுத்து வாங்கியிருப்பது மற்றொரு சிறப்பு ஆக அனைத்தும் பிரமாதம்
மிகவும் நன்றி சார்!........ Thanks...
-
21st October 2019, 07:28 PM
#1718
Junior Member
Diamond Hubber
குமார் சார் நீங்கள் அனுப்பி யிருந்த திருமதி. ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்கள் எழுதியிருந்த இந்த கட்டுரையை முதன் முதலாக தற்செயலாக "குமுதம் லைஃப்" இதழில் நான் படிக்க நேர்ந்தது , அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியமும் அதிர்வும் கொஞ்ச நேரத் திற்கெல்லாம் மாறவே இல்லை, இவ்வளவு நேர்த்தியாக
தெளிவாக ஒரு ரசிக மனோ பாவத்தில் அல்லாது பொதுவான முறையில் தலைவரின்
இயற்கையான நடிப்பு மற்றும் அவரின் ரசிகனுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்ட விதம் இவைகளையெல்லாம் இதை விட சிறப்பாக பெரிய பெரிய கட்டுரை ஆசிரியர்களால் கூட எழுத முடியாது இது சத்தியம் இதைப் படிக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு அதிர்வு ஏற்படுவது நிஜம், இந்த கட்டுரையை தலைவரின் நூற்றாண்டு விழா சிறப்பாக குமுதம் வெளியிட்டது மிக மிக சிறப்பான விஷயம் ஆகும் காரணம் குமுதம்
இதழை நிறுவிய அண்ணாமலை, பார்த்தசாரதி இருவரும் தலைவரைப் பற்றி தமிழில் என்ன என்ன அவமானகரமான வார்த்தைகள் உண்டோ
அத்தனையையும் பயன்படுத்தி தலைவரை வார்த்தைகளால் குத்திப் பிளந்தவர்கள்
அப்படிப்பட்டவர்களின் குழும இதழில் இப்படிப் பட்ட ஒரு கட்டுரை வந்ததுதான் தலைவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்
திருமதி. ஷாலி ன் அவர்கள் எவ்வளவு அழகாக குறிப்பிடுகிறார் பாருங்கள் பெண்களுக்கு எப்போதுமே acting காதலனை விட active ஆன காதலனையே அதிகம் பிடிக்கும் ஆனால் இதையெல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை வாரே வாஹ் எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இதை பகிரங்கமாக சொல்வதற்கு கூட ஒரு துணிச்சல் வேண்டும் அது இந்த சகோதரியிடம் நிறைய இருக்கிறது அது மட்டுமல்ல லத்தீன் அமெரிக்க நாடுகளின் நடன வகைகள் மற்றும்
ஹாலிவுட் பிரபலங்கள் கிரி கிரி பெக், பால் நியுமன்,கேரி கிராண்ட்
போன்றவர்களின் உடை அலங்காரங்களை தலைவரின் உடை அலங்காரங்களோடு ஒப்பிடுவது என்றால் அதற்கு உலக சினிமாவைப் பற்றிய அறிவும், ரசனையும் வேண்டும் அது திருமதி.
மரியா லாரன்ஸ் அவர்களிடம் நிரம்ப இருக்கிறது , வீர உணர்ச்சியில் ஏனோ
தலைவரை ஹாலிவுட்டின் " எரால் பிளைனுடன் ஒப்பிட மறந்து விட்டார் , இன்னொரு விஷயம் இந்த கட்டுரை குமுதத்தில் எழுதப் பட்டதால் நாகரீகம் கருதி சிவாஜியின் காதல் உணர்ச்சியை விமர்சிக்காமல் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன், சிவாஜியின் காதல் முகபாவம் ஒன்று வக்கிரமாக பார்த்து சைகை செய்வது இல்லை என்றால் இறுக
கட்டிப் பிடிப்பது இந்த இரண்டும்தான் இருக்கும் அதற்கு உதாரணமாக " சவாலே சமாளி, தெய்வமகன்,டாக்டர் சிவா, ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் தலைவரைப் போல நாயகிகளை மென்மையாக, நாகரீகமாக, ரசனையாக கையாண்டதை உலகத்திலே எவனும் இல்லை என்று அடித்துச்
சொல்லலாம் உதாரணத்துக்கு "நேற்று இன்று நாளை"
அங்கே வருவது யாரோ,
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல் காட்சிகளை பாருங்களேன் தலைவரின் அழகையும்
சுறு சுறுப்பையும் பார்க்கும் போது நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்
திருமதி. மரியா லாரன்ஸ் அவர்கள் விவரிக்கும் போது மீண்டும் ஒரு முறை தலைவரின் பாடல்களை பார்க்கத்
தூண்டுகிறது
அந்தக் காலத்தில் பாவைக் கூத்து, தெரு நாடகங்களின் நீட்சி தான் திரைப் படங்களாக விரிவு பெற்றது அந்த நேரத்தில் நாடகத்தில் எப்படி உச்ச ஸ்தாயில் கத்திப் பேசி பாடுவார்களோ அதைத்தான் சினிமாவிலும் கடை பிடித்தார்கள் அதற்கு நடிப்பு என்று பெயரும் வைத்தார்கள் , அப்போதிருந்த ஊடகங்களும் கத்தி கூச்சல் போடுவதையும்
உடம்பை தேவை இல்லாமல் அலட்டிக் கொண்டு வசனம் பேசுவதையும் அது மட்டும்தான் நடிப்பு என்று இறுக்கமான முத்திரையை குத்தி விட்டார்கள் அந்த கால கட்டத்தில் ஒரு மனிதனுக்கே உரித்தான ஆவேசமும்
கோபமும் இப்படித்தான் இருக்கும் என்று" மதுரை வீரனும், மன்னாதி மன்னன், மருத நாட்டு இளவரசி படங்களின் மூலம் தலைவர் சொன்னபோது எவனும்
ஒத்துக் கொள்ள வில்லை அதற்கு ஒரு முக்கிய காரணம் தலைவரின் மேல் ஏற்பட்ட பொறாமையும்,
காழ்ப்புணர்ச்சி யும் தானே தவிர வேறு ஒன்றுமில்லை
ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்த இவனுக்கு இத்தனை ஆதரவும், மக்கள் செல்
வாக்குமா என்று புகைந்தவர்களுக்கும் கிடைத்த ஆயுதம்தான்
தலைவருக்கு நடிக்கத் தெரியாது என்னும் முனை மழுங்கிய ஆயுதமே தவிர வேறு
ஒன்றுமில்லை
1971 ம் ஆண்டு தலைவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்த போது இப்படித்தான் ஒரு அற்பத் தனமான
குற்றச் சாட்டை முன் வைத்தார்கள் அது சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய பட்டம் எம்.ஜி.ஆர் விலை கொடுத்து விலைக்கு வாங்கி விட்டார் என்று
அப்போது தலைவர் மிக
அழகாக சொன்னார் இந்த ஒரு வருடத்துக்கு
மட்டும்தான் நான் சிறந்த நடிகனே தவிர காலமெல்லாம் அல்ல என்று ஆனால் அந்த வருடதுக்குப் பிறகு சிவாஜி நடித்து எவ்வளவோ படங்கள் வந்தது ஆனால் சிறந்த நடிகர் பட்டம் மட்டும் கடைசி வரை கிடைக்கவே இல்லை
இவ்வளவுக்கும் சிவாஜி
காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்த 1961 கால கட்டத்தில் இருந்து எத்தனையோ ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பீடத்தில் இருந்தது ஆனால் சிவாஜிக்கு அந்த பட்டம் கொடுப்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை காரணம் அவர்களுக்கே நன்றாகத் தெரியும் சிவாஜியின் நடிப்பு ஓவர் ஆக்டிங் என்று
எப்படியோ இந்த கட்டுரை எழுதிய திருமதி. ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்கள் நீடூழி வாழ்க!........... Thanks.....
-
21st October 2019, 07:29 PM
#1719
Junior Member
Diamond Hubber
ராஜு சார் இந்த மாதிரி
நாலாந்தர விமர்சனங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் , விமர்சனம் செய்யும் இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா?
கோஷ்டி சண்டைகளுக்கும் வேட்டி உருவல்களுக்கும் பெயர் போன இவர்களெல்லாம் பேசினால் என்ன ஆகி விடப் போகிறது, சமீபத்தில் கூட கராத்தே
தியாக ராஜனும் கே. எஸ் அழகிரியும் மாறி மாறி நாறிக் கொண்டது
ஊருக்கே தெரியும் அப்படியிருக்க இவர்களெல்லாம் பேச வந்து விட்டார்கள் , அந்தக் காலத்தில் இருந்தே திண்டிவனம் ராமமூர்த்தி கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி,
சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என்றெல்லாம் கோஷ்டி
அரசியல் நடத்திக் கொண்டு அடுத்தவன் காலை எப்படா வாரலாம் என்று குழி பறிப்பதற்கு என்றே பிறந்த கூட்டம் தலைவரைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? விமர்சனம் என்பது பொதுவானது யார் மீது வேண்டுமானாலும் விமர்சனம் வைக்க முடியும், அது காந்தி ஆனாலும் சரி புத்தன் ஆனாலும் சரி ஆனால் அது வைக்கும் விதத்தைப் பொறுத்தது
நான் மட்டும் யோக்கியன் அடுத்தவன் எல்லாம் அயோக்கியன் என்ற வகையில் விமர்சனம் செய்வது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் போன்றது, சிவாஜிக்கு
அந்தக் காலத்தில் குழி
பறித்தது அவர்களின்
ஆட்கள் தானே தவிர வேறு யாரும் கிடையாது திண்டிவனம் ராமமூர்த்தி, பழ. நெடுமாறன், போன்றவர்கள் சிவாஜிக்கு எதிராக என்ன உள்ளடி வேலை எல்லாம் செய்தார்கள் என்பதை " நான் கண்ட
அரசியல்" புத்தகத்திலும் இன்னும் பல புத்தகங்களிலும்
கண்ணதாசன் விலா வரியாக சொல்லி இருப்பார் ஏன் ஒரு படி மேலே போய் காமராஜர்
எப்படிப் பட்ட புத்தி உள்ளவர் அடுத்தவன் மேலே வந்தால் அவனை அமுக்குவதற்கு என்ன செய்வார் எப்படி எல்லாம் பொறாமை அடைவார் என்பதையும் இதே கண்ணதாசன் தான் புத்தகத்தில் எழுதினார் இவ்வளவுக்கும் கண்ணதாசன் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர்
தலைவர் பொய் சொல்லி ஜெயித்தார் என்ற வார்த்தைக்கு வருவோம், அப்போ அரசியலில் ஜெயித்தவர்கள் எல்லாம் பொய் சொல்லி ஜெயித்த வர்கள் அப்படித்தானே சரி காமராஜர் பொய் புரட்டு சொல்லித்தான் முதல்வர் ஆனாரா?
மூதறிஞர் இராஜாஜி மற்றும் பண்டித நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் பொய் சொல்லித்தான் முதல்வரும் பிரதமரும் ஆனார்களா? தோற் பவன் தான் காரணம் தேடுவான் , இதைத்தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் உரையாற்றும் போது சொன்னார் " மக்கள் மன்றத்தில் தோற்றுப் போய் விட்டு அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து சொல்பவர்களின் வாக்கு என்பது முற்றிப் போன ஒரு பித்தனின் வார்த்தையைப் போன்றது காரணம் பித்தன் எதையாவது உளறிக் கொண்டேதான்
இருப்பான் அதைப் பார்த்து நாம் பரிதாபப் படத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று
அதைப் போல்தான் இந்த நாறிகளின் வார்த்தையும் புலம்பலும் பற்கடிப்பும்
விட்டுத் தள்ளுங்கள் ராஜு சார்
அடுத்ததாக இலவசம் கொடுத்து ஏமாற்றிய கதைக்கு வருவோம்
ஆரம்பத்தில் இலவசத்தின் பிதாமகன் யார்? காமராஜர்தானே இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் அப்போ அது மனிதாபத்தினால் அல்ல மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும்
ஒரு தந்திரம் அப்படித்தானே, என்னய்யா இது நீங்கள் கொண்டு வந்தால் நலத்
திட்டம் மற்றவன் கொண்டு வந்தால் ஏமாற்று வித்தை அப்படித்தானே?
அடுத்தது சிவாஜி பெரிய வள்ளலாம் யாருக்கும் தெரியாமல் கொடுப்பாரா? அப்படி எத்தனைபேர் இவரால்
பயன் பெற்றனர் என்று
இதுவரை நான் எந்த பத்திரிகையிலும் படித்ததில்லை, தெரியாமலா மறைந்த
முன்னாள் அமைச்சர்
காளிமுத்து அவர்கள் சொன்னார்கள் சிவாஜியை ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று,
எனவே ராஜு சார் இந்த
மாதிரி விமர்சனங்களை வைக்கும் சூரியனைப் பார்த்து ஏதோ குரைக்குமாமே அந்த மாதிரி ஜென்மங்களாக
நினைத்துக் கொண்டு
விட்டுத் தள்ளுங்கள்
இது போன்ற விமர்சனங்களால் தலைவரின் புகழ் இன்னும் சுடர் விட்டுப்
பிரகாசிக்குமே தவிர
குறைய ப் போவதில்லை
Leave it Raju sir!......... Thanks...
-
21st October 2019, 07:36 PM
#1720
Junior Member
Diamond Hubber
தேவர் பிலிம்ஸ் புரட்சித்தலைவர் நடித்த 15 வது படம் "காதல் வாகனம்" வெளியான நாள் 21-10-1968 இன்று.
சென்னை குளோப் 35 நாள் ஸ்ரீகிருஷ்ணா 39 நாள் சரவணா 29 நாள் சீனிவாசா 25 நாள் மதுரை அலங்கார் 39 நாள் ஓடியது..... மற்ற இடங்களில் எல்லாம் 4 வாரங்கள் - 7 வாரங்கள் திருப்தியான வசூலை வழங்கியது... Thanks...
Bookmarks