PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7



Pages : 1 2 3 4 5 6 [7] 8

DHANUSU
30th March 2011, 09:04 PM
I want to share my experience with a die-hard MGR fan.

He is a typical character who takes things very easily and does not attach any importance to even rare events. He had the opportunity of travelling with NT in train from Tanjore to Chennai, some 15 years ago, but he behaved very casually with NT, as an ordinary co-passenger. Had it been MGR he would have jumped and hit the roof of the train.

Such a person, while we were passing through the Marina Beach road, some three years back, remarked after seeing NT's statue that "I JUST COULD NOT BELIEVE WHEN I HEARD THAT NT IS NO MORE. EVEN NOW I FEEL THAT, SUCH AN ACTOR CAN NOT DIE, THOUGH I KNOW THAT DEATH IS INEVITABLE. I AM UNABLE TO GULP THE REALITY THAT HE IS NO MORE". From his body language and facial expressions while making this comment, I could feel that he was speaking from his heart.




Dear Rakesh,

Nice one liners. Reminds me of NT's own one liners about his movies. As Saradhaa had rightly pointed out you had confused Deivappiravi with Kai Kodutha Deivam. So much so that even Swami has been caught napping [a very rare occasion].

ராகவேந்தர் சார்,

பாலாடை படப் பாடலுக்கு நன்றி. விரைவில் டிவிடி ஆகவும் வெளிவரும் என நம்புவோம்.

டிவிடி என்று சொன்னதும் நினைவிற்கு வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு ஏவிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான Sound Zone என்ற கடைக்கு சென்றிருந்தேன் [TTK சாலை]. ஒரு சில படங்களின் டிவிடி கிடைக்குமா என்று கேட்பதற்காக. நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் மும்முரமாக டிவிடிகளை எடுத்துக் கொண்டிருந்தார். சில படங்களின் பெயரை சொல்லி அவை இருக்கிறதா என்று கேட்டு கேட்டு எடுத்தார். இறுதியில் 25-க்கும் மேற்பட்ட டிவிடிகளை வாங்கியிருந்தார். பில் போடும்போது கவனித்தேன். அனைத்து டிவிடிகளுமே நடிகர் திலகம் நடித்த படங்கள். மருந்துக்கு கூட வேறு படங்கள் இல்லை.

அந்த தளத்தின் மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்ன செய்திகள். இப்போதெல்லாம் இது போன்ற டிவிடி கடைகள் ஓடிக் கொண்டிருப்பதே பழைய படங்கள் மூலம்தான். புதிய படங்களின் டிவிடிகள் விற்பனை மிக குறைவு. அதே நேரத்தில் பழைய படங்களின் டிவிடிகள் அமோகமாக விற்பனையாகிறது. குறிப்பாக அதில் முன்னணியில் நிற்பது நடிகர் திலகத்தின் படங்களே. அநேகமாக அவரின் அனைத்து படங்களுமே விற்று விடுகின்றன. நடிகர் திலகத்தின் படங்களின் டிவிடிகள் சில நல்ல பிரிண்டில் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் கூட அந்த டிவிடிகளின் விற்பனையில் தேக்கம் இல்லை. அவர்களின் கடையைப் பொறுத்தவரை [ஏவிஎம் என்பதால்] டிவிடி பிரிண்ட் சரியில்லை என்றால் அதை வாங்கும் வாடிக்கையாளரிடம் முன்பே சொல்லி விடுவார்களாம். அப்படியிருந்தும் என்ன கொஞ்சம் கட் கொஞ்சம் ஜம்ப் இருக்கும் அவ்வளவுதானே பரவாயில்லை என்று சொல்லி வாங்கி போகிறார்களாம்.

பலரும் வந்து அவர்களுக்கு வேண்டிய நடிகர் திலகத்தின் படங்களை லிஸ்ட் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று சொன்னவர் ஒரு குறிப்பிட்ட ரசிகர், நடிகர் திலகத்தின் படங்களில் இதுவரை வெளிவராத டிவிடிகளை ஒரு நோட் புக்கில் எழுதிக் கொடுத்துவிட்டு போயிருப்பதை எடுத்துக் காட்டினார். அதில் இதுவரை டிவிடியாக வெளியாகாத நடிகர் திலகத்தின் ஆரம்பகாலப் படமான கண்கள் முதல் பூ பறிக்க வருகிறோம் வரை வரிசைகிரமமாக வருடவாரியாக வெளியான படங்கள் எழுதப்பட்டிருந்தன. நடிகர் திலகம் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களைகூட விடாமல் எழுதியிருந்தார். அந்த ரசிகரை பற்றி விசாரித்த போது மறைந்துவிட்ட ஒரு பிரபல தமிழக அரசியல்வாதியின் சகோதரர் என்பது தெரிந்தது. இந்தப் படங்களின் டிவிடி கிடைத்தால் என்ன விலை கொடுத்தும் வாங்க தயார் என்று சொல்லியிருக்கிறாராம். கடையை விட்டு கிளம்புவதற்கு முன் அவர் சொன்ன இரண்டு விஷயங்கள்.

டிசம்பர் இறுதியில் பெண்ணின் பெருமை மற்றும் விடிவெள்ளி டிவிடிகள் வெளியாகின. இந்த மூன்று மாதத்தில் மட்டும் அவர் இந்தப் படங்களின் 1000 டிவிடிகள் விற்றிருக்கிறார். [எண்ணிக்கையை மீண்டும் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டேன்].

இரண்டாவது விஷயம் அப்படியே அவரின் வார்த்தைகளிலேயே "சார், கணேசன் இருக்கும் போது அவரின் பெருமைகள் பலருக்கும் தெரியவில்லை. இப்போது உணர்கிறார்கள். இனியும் உணர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்". இத்தனை விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்ட அவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டது தான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் என்று.

அன்புடன்

joe
31st March 2011, 07:39 AM
நடிகர் திலகத்தின் திரி-க்கு இது ஒரு பொற்காலம் என்றால் அது மிகையல்ல ..இந்த அளவுக்கு ஆச்சரியப்படுத்தும் அலசல்கள் , அசரடிக்கும் தகவல்கள் , ஆராய்ச்சிக்கு நிகரான படைப்புகள் அள்ளி வழங்குவதற்கு அற்புதமான ஜாம்பவான்களை கொண்டியங்கும் கால கட்டம் இது . இவைகளை படித்து இன்புறும் உணர்வுக்கு நிகரில்லை ..தொடரட்டும் பெருமக்கள் தொண்டு . படரட்டும் எங்கும் நம் நடிகர் திலகம் புகழ் :thumbsup:

parthasarathy
31st March 2011, 01:13 PM
அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
ராகவேந்திரன்

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்கள் மற்றும் ஏனைய நண்பர்களே,

நேற்று நடிகர் திலகத்தின் எட்டாவது திரி துவங்கப்பட்டு, அதில் சாரதா மேடம் அவர்கள் சிறிய பதிவையும், நான் என்னுடைய சிறிய பதிவையும், இட்டு, அவை அந்த எட்டாவது திரியில் வந்தது. இருப்பினும், நேற்று இரவு முதல், எட்டாவது திரி மீண்டும் இணைப்பில் வர மறுக்கிறது. அதனால், புதிதாக எந்த விஷயத்தையும் பதிய முடியவில்லை. இதற்கிடையே, ஏழாவது திரி 150 பக்கங்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஏழாவது திரியினை 150 பக்கங்கள் முடிந்ததால், மேற்கொண்டு தொடராமல், நிறுத்தி விட்டு, எட்டாவது திரியினைத் திரு ராகவேந்தரின் பொற்கரத்தால் துவங்க முடிவெடுத்து, அந்தத் திரியும் நேற்று இனிதே அவரால் துவங்கப் பட்டுவிட்டதால், மேற்கொண்டு ஏழாவது திரியில் நான் எதுவும் பதியாமல் இருக்கிறேன் (இந்த ஒரு பதிவினைத் தவிர்த்து, வேறு வழியில்லாததால்.) - திரு. தனுசு அவர்கள் ரொம்ப நாட்களுக்குப் பிறகு இந்தத் திரியில் வந்து, என்னை வரவேற்கவும் செய்து, ஒரு மக்கள் திலகம் ரசிகருக்கு நடிகர் திலகத்தின் மேல் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் பற்றிப் பதிந்திருக்கிறார். அவருக்கும் பதில் பதிய வேண்டும்.

ஆவன செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
31st March 2011, 06:53 PM
அன்பு நண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பணிவான வணக்கங்கள்.
தங்களைப் போலவே நானும் வியப்புற்றேன். 8ம் பாகம் துவக்கினோமே, அவையாவையும் 7ம் பாகத்திலேயே தொடர்கிறதே என்கிற கேள்வி என்னுள்ளும் எழுந்தது. ஏதேனும் நிர்வாக ரீதியான காரணங்களால் அவை இங்கேயே தொடரப் பட்டிருக்கலாம் என நான் யூகிக்கிறேன். ஏனென்றால் முந்தைய கட்டமைப்பில் 100 பக்கங்கள் தாண்டியபிறகு நம்மால் அடுத்த பாகத்தைத் துவங்க முடிந்தது. தற்போதைய கட்டமைப்பு உலக அளவிலான நியதிப் படி அமைக்கப் பட்டிருக்கலாம், அதில் ஏதேனும் குறிப்புகள் அல்லது விதிகள் இருக்கலாம், அதனடிப்படையில் 7ம் பாகம் தொடரப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய யூகம். இருந்தாலும் நிர்வாக அமைப்பினர், அதாவது மாடரேட்டர் அவர்கள் இதனை விளக்கினால் தான் நமக்கு தெரியவரும்.
அது வரையில் நாம் இதிலேயே நம்முடைய கருத்துப் பகிர்வுகளைத் தொடரலாம் என்று நான் எண்ணுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

joe
31st March 2011, 09:03 PM
ராகவேந்திரர் ஐயா,
மன்றத்துக்கு புதிய வடிவம் வந்த பிறகு ஒரு திரிக்கு 100 பக்கங்கள் என்பது போன்ற வரைமுறைகள் இல்லை .அது மட்டுமல்ல , இப்போதுள்ள வடிவத்தில் எல்லோருக்கும் பக்கங்களின் எண்ணிக்கை ஒன்று போல தெரியாது ..அவரவர் ஒரு பக்கத்தில் எத்தனை இடுகைகள் இருக்கலாம் என தெரிவு செய்து வைத்திருக்கும் கணக்குக்கு ஏற்ப பக்கங்களின் எண்ணிக்கை தெரியும் ..உதாரணமாக இந்த பக்கம் என்னைப் பொறுத்தவரை 51-வது பக்கம் ..ஆனால் உங்களுக்கு வேறு மாதிரி இருக்கலாம்.

இப்போதைக்கு ஒரு திரி கட்டற்ற வகையில் தொடர முடியும் என்பதால் அடுத்த பாகங்கள் தனியாக தொடங்க தேவையில்லை என்பது நான் புரிந்து கொண்டுள்ளது .ஆனால் நாமாகவே ஒரு வரைமுறை வைத்து புதிய திரி தொடங்கலாம் என்றே நினைக்கிறேன்.

RAGHAVENDRA
31st March 2011, 09:28 PM
அன்பிற்கினிய ஜோ அவர்களுக்கு (தங்கள் பெயரைத் தூய தமிழில் எழுதினால் ஒரு பிரபல பத்திரிகையாளர் நடிகர் பெயர் வருகிறது, எனவே ஜோ என்றே விளிக்கிறேன்)
தங்களுடைய பதிவில் உள்ள விளக்கமே போதுமானது என எண்ணுகிறேன். தாங்கள் கூறியது மற்றும் நான் யூகித்தது போல், கட்டமைப்பு உலாவிகளின் அமைப்பையும் பொறுத்ததாக இருக்கலாம். எனவே இந்த புதிய கட்டமைப்பில் வரைமுறை இல்லாத காரணத்தினை யொடடி நாம் இதிலேயே தொடரலாம். இதுவும் வரவேற்கத் தக்க அமைப்பே ஆகும். என்னுடைய உலாவியில் இது 151ம் பக்கமாக வருகிறது. பொதுவான கட்டமைப்பு என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரி வரலாம். ஆனால் அவரவர் தத்தம் வசதிக்கேற்ப உலாவியினை வடிவமைத்திருந்தார்களானால், தாங்கள் சொல்வது போல் இந்தப் பக்க எண்ணிக்கை மாறு படலாம். எனவே வரைமுறை வடித்துக் கொள்வது கூட சற்றுக் கடினமாக இருக்கலாம். அனைவரின் கருத்துக்களையும் அறிந்து, அதன் பின் இதைப் பற்றி யோசிக்கலாம்.

அன்புடன்
ராகவேந்திரன்

joe
31st March 2011, 09:36 PM
என்னுடைய உலாவியில் இது 151ம் பக்கமாக வருகிறது.

General settings என்ற பகுதியில் Number of Posts to Show Per Page: 30 என நான் வைத்திருக்கிறேன் ..நீங்கள் 10 என வைத்திருக்கிறீர்கள் ..எனவே தான் எனக்கு 51-வது பக்கம் உங்களுக்கு 151- ஆக இருக்கிறது :)

RAGHAVENDRA
31st March 2011, 09:40 PM
சமீபத்தில் மோசர் பேர் நிறுவனம் நடிகர் திலகத்தின் மூன்று படங்களடங்கிய ஒரு நெடுந்தகட்டினை வெளியிட்டுள்ளது. மூன்று படங்களும் ஏற்கெனவே வெளியிடப் பட்டவை தான் - அண்ணன் ஒரு கோயில், நவராத்திரி மற்றும் பொன்னூஞ்சல் - ஆகிய மூன்று படங்கள். இருந்தாலும் இதில் ஒரு சிறப்பம்சம் என்ன வென்றால் முகப்பில் வெளியிடப்பட்டுள்ள ஸ்டில் ஆகும். இதில் வளர்பிறை படத்தின் ஸ்டில் வெளியிடப் பட்டுள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது. தங்கள் பார்வைக்கு அந்த முகப்பு இதோ.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/AOKNAVPON.jpg
அன்புடன்
ராகவேந்திரன்

joe
31st March 2011, 09:41 PM
Just 32 rs :shock:

parthasarathy
1st April 2011, 10:50 AM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

நடிகர் திலகத்தின் ஒப்பற்ற காவியங்களுள் ஒன்றான ஞான ஒளியைப் பற்றிய என் பதிவிற்கு (பாதி தான் முடிந்திருக்கிறது) தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். கூடவே, அந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்களையும் உடனுக்குடன் அளித்து வழக்கம்போல் அசத்தி விட்டீர்கள்.

அது மட்டுமல்லாமல், நெஞ்சிருக்கும் வரை பற்றிய அரிய தகவல்களையும் தந்து அசரடித்து விட்டீர்கள். அதாவது, நான் எழுதியதுபோல், அந்தப் படம் தோல்விப்படம் இல்லை. ஒரு சராசரியை மீறிய வெற்றிப் படமே என்றும் கூறி மகிழ வைத்து விட்டீர்கள். ஏற்கனவே கூறியது போல், திரு ஸ்ரீதர் மட்டும் இடைவேளைக்குப் பின் சரியான கணக்கு போட்டிருந்தால், மாபெரும் வெற்றிப்படமாகியிருக்கும். நடிகர் திலகத்தின் ஒப்பற்ற களஞ்சியங்கள் - அதாவது மாபெரும் வெற்றியடைந்த கலைப்படைப்புகளில் ஒன்றாக - நெஞ்சிருக்கும் வரையும் அமைந்திருக்கும். இந்த வாய்ப்பை - அதாவது - நடிகர் திலகம் என்ற அந்த அட்சய பாத்திரத்தை - சரியாகப் பயன்படுத்தத் தவறிய இயக்குனர்களின் வரிசையில் இடம் பெறாது போயிருப்பார் - இழந்து போகாமல் இருந்திருப்பார், இயக்குனர் திரு. ஸ்ரீதர். அந்த வகையில், Mr. Sreedhar only is the loser; not NT.

நன்றியுடன்,

பார்த்தசாரதி

parthasarathy
1st April 2011, 11:06 AM
Dear Mr. Parthasarathy,

I welcome you to the NT thread. I am one of those countless devotees of NT, who contributed to this thread in a very miniscule manner way back. I am indeed happy that the thread is still going strong and best wishes for you all.

You have listed many scenes from the magnum opus "Gnana Oli". One particular scene where NT simply excels in his performance is the "I mean that silver tumbler". The style with which he would remove the gloves from his hands is simply awesome. I am sure you will mention this scene also in your continuation of the review.

Dear Mr. Dhanusu,

Thanks for welcoming me into this great thread of NT. I have joined this great thread more than a month ago and enjoying my stint here and will continue to do so.

I am also delighted to note that you have posted your thread after a long time. I have seen a lot of your postings in the 2nd and 3rd thread (if I'm right) and amazed at the way you have been giving details of the greatest thespian.

As regards "Gnana Oli", no one, (not necessarily an NT Fan) can conclude his/her posting without mentioning the "Silver Tumbler" scene. The rocking style of NT actually starts from the moment he enters the house of Saradha (Jaya Kousalya will bow at the entrance to pick some thing when NT enters and as a coincidence, Jaya Jousalya will be touching his feet.) From that moment till the completion of the scene, NT will dominate the proceedings with style flowing from his entire body (eyes, the way in which he enters with his walk, staring at Major till removing his gloves and subtly laughing at Major in retaliation).

I have also covered many other outstanding scenes comprising NT's extraordinary acting, in the second half of the movie. I am in the process of transliterating the same in Tamil, which is taking time, due to my official preoccupation. I hope to post it ASAP, and make everybody including me to enjoy the same, because the Joy of thinking, referring, feeling, sharing and discussing about NT itself (apart from seeing him perform), is the ultimate joy for any of his Fan.

Regards,

R. Parthasarathy

Murali Srinivas
1st April 2011, 11:52 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

மன்னிக்கவும். நமது மன்றம் [ஹப்] இயங்கும் தளம் முன் போல் இல்லாமல் ஒரு திரி எத்தனை பக்கங்களை கொண்டிருந்தாலும் அதை எந்த இடர்பாடும் இன்றி முன்னெடுத்து செல்ல முடியும் என்பதாலும் திரிகள் பிரிக்கப்படுவதால் ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்காகவும் அனைத்து திரிகளையும் ஒரே திரியாகவே கொண்டு செல்ல moderators முடிவெடுத்திருப்பதாக அறிகிறேன். அது நமது திரிக்கும் பொருந்தும் என்பதால் பார்ட் 8 மீண்டும் பார்ட் 7-ல் இணைக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் வேண்டாம் என்று விலகி நின்ற போதும் என் வற்புறுத்தல் காரணமாக உங்களுக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அதற்காக மன்னிக்கவும்.

நமது பதிவுகள் தொடர்ந்து இந்த திரியில் நடைபெறட்டும்.

Sorry.

அன்புடன்

RAGHAVENDRA
2nd April 2011, 05:40 AM
டியர் முரளி சார்,
நமது ஹப்பில் உள்ள கட்டமைப்பு அற்புதமாக உள்ளது. அதனால் நமக்கு மிகுந்த பயனளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. ஜோ அவர்கள் கூறியது போல் அவரவர்க்கேற்ற படி பக்கங்களின் அமைப்பின வடிவமைக்கும் வசதியும் உள்ளதால், ஒருத்தருக்கு 100 பக்கங்களாக தெரிந்தால் மற்றவருக்கு 75 அல்லது 125 பக்கங்களாக தெரியலாம். எனவே இதில் பாகங்களை பிரிக்க வேண்டியதில்லை - பாகப் பிரிவினை வேண்டியதில்லை. நம் அனைவரையும் ஒற்றுமையாக வாழ வைக்கவேண்டும் என்பதற்காகவே பாகப் பிரிவினையை தவித்திருக்கிறார்கள். ஆனால் நம்மால் பாகப் பிரிவினையைத் தவிர்க்க முடியாது. எனவே நாம் இங்கேயே தொடரலாம்.
இதில் தாங்கள் மன வருத்தம் அடைய தேவையில்லை. நாம் வழக்கம் போல நம் பணியைத் தொடர்வோம்.
நான் ஏற்கெனவே யூகித்திருப்பது போல் முன்னர் கொடுத்த நெடுந்தகடு முகப்பில் வளர் பிறை பட ஸ்டில் இடம் பெற்றுள்ளது. இந்த வகையான ஸ்டில் இந்த அளவிற்கு அட்டகாசமாக இதற்கு முன் வெளி வந்ததில்லை. எனவே இப்படம் விரைவில் வெளிவரும் என்று நம்புவோமாக.
என்னுடைய கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப் போய் சிறிய ஹிட்ச் ஏற்பட்டு, அதனை ஹப் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்து, உடனடியாக அதை சரி செய்து கொடுத்த ஹப் நிர்வாகத்திற்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
3rd April 2011, 02:19 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 1

"ஒரு ராஜா ராணியிடம்"


http://www.youtube.com/watch?v=u8V8ON2BbGY

நடிப்பு : நடிகர் திலகம், நடிகை காஞ்சனா

பின்னணிக் குரல்கள் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்., பாடகியர் திலகம் பி.சுசீலா

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : சிவந்த மண்(1969)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd April 2011, 02:27 PM
மதுரையம்பதியின் 'சென்ட்ரல் சினிமா' திரையரங்கில்,1.4.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்".

சாக்லெட் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கும் ஸ்வீட் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
3rd April 2011, 02:36 PM
டியர் பம்மலார்,
நடிகர் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர் ஹிட்ஸ் சூப்பரோ சூப்பர். இதில் அனைவரும் கலந்து கொண்டு பாடல்கள் வழங்கலாம் என விரும்புகிறேன், உரிமையோடு வழங்கவும் செய்கிறேன்.
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 2

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது

http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U



நடிப்பு : நடிகர் திலகம், புன்னகையரசி கே.ஆர்.விஜயா

பின்னணிக் குரல்கள் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்., பாடகியர் திலகம் பி.சுசீலா

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : ஊட்டி வரை உறவு (1967)

அன்புடன்,

பம்மலார்
மற்றும் ராகவேந்திரன்

RAGHAVENDRA
3rd April 2011, 02:47 PM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் 1

எந்தக் காலத்திற்கும் பொருந்தும் கதையமைப்பும் காட்சியமைப்பும் நடிப்பும் கொண்டவை நடிகர் திலகத்தின் பாடல்கள். சில பாடல்களைப் போல் ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ துதி பாடுவது போல் அல்லாமல், சமுதாயத்தில் தாக்கமும் பாதிப்பும் ஈடுபாடும் ஏற்படுத்தும் பாடல்கள் நடிகர் திலகத்தின் படங்களில் பல உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதே இதன் நோக்கம்.

இதி்ல் முதலில் இடம் பெறும் பாடல் எந்தக் காலத்திலும் குறிப்பாக தற்காலத்தில் மிகவும் எடுபடக்கூடிய பாடல். பொதுவாக ஒரு கொள்கைப் பாடல் என்றால் அதனை முதலில் ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்பவே எவரும் விரும்புவர். ஆனால் இந்தப் பாடலை ஒலிபரப்பவோ அல்லது ஒளிபரப்பவோ நேர்மையும் நெஞ்சில் உறுதியும் உள்ளவர்களுக்கு மட்டுமே மனம் வரும். அப்படி இந்தப் பாடலைத் துணிந்து ஒளி அல்லது ஒலி பரப்புவோர்க்கு நாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஆதரவுதரலாம்.

பாடல் - நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா
படம் - என் மகன்
குரல் - டி.எம்.எஸ்.
இயற்றியது - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்



http://www.youtube.com/watch?v=jwf_1q05DI0

பாடலின் வரிகள்

தொகையறா

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...

பல்லவி

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள் – உங்கள்
ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
ஹேஹே...
உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே –
பின்னே
நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே - நீங்கள்

சரணம் 1

அழகாகத் தோன்றும் ஒரு
கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும
மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று
சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும்
பரிதாபம் கண்டேன்
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே
வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
காண்கின்றான் - நீங்கள்

சரணம் 2

சட்டத்தின் பின்னால் நின்று
சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று
அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில்
இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது
சொல்கின்றேன்
பல நாள் திருடன்
ஒரு நாள் சிறையில்
பாவம் செய்தவன்
தலைமுறை வரையில்
பார்க்கின்றேன் - நீங்கள்


அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
3rd April 2011, 03:09 PM
வீடியோ வேந்தர் ராகவேந்திரன் சார்,

'பூமாலையில் ஓர் மல்லிகை' பாடலுக்கு நன்றிப் பூங்கொத்துகள்!

என்ன ஆச்சரியம், இப்பாடலைத்தான் அடியேன் இரண்டாவது பாடலாக பதிவிடலாம் என்று இருந்தேன். தாங்கள் பதிவிட்டமைக்கு மீண்டும் நன்றிகள்!

நம் எல்லோரது எண்ணங்களும் ஒன்றாக ஓடுவதற்கு ஒரே காரணம் நமது நடிகர் திலகம் மற்றும் அவரது அருளாசி மலர்கள்!

தாங்கள் குறிப்பிட்டது போலவே, பாடல்களை அனைவரும் இணைந்து பதிவிட்டு அவர் புகழ் பாடுவோம்!

காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 3

"நான் பேச நினைப்பதெல்லாம்"


http://www.youtube.com/watch?v=lWDg8dheihg&feature=relmfu

நடிப்பு : நடிகர் திலகம், அபிநய சரஸ்வதி சரோஜாதேவி

பின்னணிக் குரல்கள் : பாடகியர் திலகம் பி.சுசீலா, பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : பாலும் பழமும்(1961)

அன்புடன்,
ராகவேந்திரன்
மற்றும் பம்மலார்.

goldstar
3rd April 2011, 03:49 PM
Guys,

Just watching Anbe Aaruyere, NT's very casual performance. One of the NT movie which does not attract me to watch fully.

Swamy, Ragavendra, is it something NT wanted to do some lighter movie purposely or any other reason and what about box office collections?

NT's facial expression and way of walking like innocent excellent.

Cheers,
Sathish

pammalar
3rd April 2011, 08:46 PM
வீடியோ வேந்தர் ராகவேந்திரன் சார்,

தேசிய திலகத்தின் கொள்கைப் பாடல்கள் தொடரில் முதல் பாடலே படு அமர்க்களம் !

'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா?' எனக் கேள்வி கேட்கும் நிரந்தர தகுதி, உலக உத்தமரான நமது நடிகர் திலகம் போன்ற ஒரு சிலருக்கே உண்டு !

2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் இப்பாடலைக் கேட்கும் போது நிதர்சனமான பல உண்மைகள் கண்முன் பளிச்சிடுகின்றன.

தற்போதைய தேர்தல் களத்தில் பங்குகொள்ளும் எந்தவொரு கட்சியைச் சேர்ந்தவர்களும், இப்பாடலைக் காது கொடுத்துக் கேட்டால், அவர்களது மனசாட்சியே [அப்படி ஒன்று இருந்தால்] அவர்களை ஒரு வழி செய்து விடுமே!

'நாங்கள் அத்தனை பேரும் எத்தர்கள் தான்' என்பதனை ஒப்புக் கொள்வார்கள்?!

உத்தமமான பாடலை அளித்தமைக்கு தங்களுக்கு எனது உயர்வான நன்றிகள்!

தொடர்ச்சியாக இன்னொரு அற்புதப்பாடல்.

காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் : 2

"ஓஹோ ஹோஹோ மனிதர்களே"


http://www.youtube.com/watch?v=tSniJTR7_Yo&feature=related

நடிப்பு : நடிகர் திலகம்

பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : படித்தால் மட்டும் போதுமா(1962)

அன்புடன்,
ராகவேந்திரன்
மற்றும் பம்மலார்.

pammalar
3rd April 2011, 09:23 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 4

"பூவா மரமும் பூத்ததே"


http://www.youtube.com/watch?v=q2nxXYj52CM

நடிப்பு : நடிகர் திலகம், நடிகை ஜி.வரலக்ஷ்மி

பின்னணிக் குரல்கள் : கானக்குயில் ஜிக்கி, பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : திரை இசை ஜாம்பவான் ஜி.ராமநாதன்

படைப்பு : கவி கா.மு.ஷெரீஃப்

திரைக்காவியம் : நான் பெற்ற செல்வம்(1956)

அன்புடன்,
ராகவேந்திரன் & பம்மலார்.

pammalar
3rd April 2011, 09:51 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 5

"உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே"


http://www.youtube.com/watch?v=xSIKl3M_awg&feature=related

நடிப்பு : நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி பத்மினி

பின்னணிக் குரல்கள் : பாடகியர் திலகம் பி.சுசீலா, இசைத் தென்றல் ஏ.எம்.ராஜா

இசை : திரை இசை மாமேதை டி.சலபதிராவ்

படைப்பு : பாட்டுக்கோட்டை கட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திரைக்காவியம் : புனர்ஜென்மம்(1961)

அன்புடன்,
ராகவேந்திரன் & பம்மலார்.

pammalar
4th April 2011, 12:27 AM
எத்தனை வசூலை அள்ளிக் குவிக்குது

மதுரை 'சென்ட்ரல் சினிமா' [தினசரி 4 காட்சிகள்]

சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்"

கலெக்ஷன் ரிப்போர்ட்

1.4.2011 : வெள்ளி : ரூ.10,082/-

2.4.2011 : சனி : ரூ.7,192/-

3.4.2011 : ஞாயிறு : ரூ.10,961/- [மாலைக் காட்சி வரை]

1.4.2011 முதல் இன்றைய [3.4.2011] மாலைக் காட்சி வரை "சிவகாமியின் செல்வன்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் ரூ.28,235/-.

படத்தில் எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது; படமோ எத்தனை வசூலை வாரிக் குவிக்குது.

2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் இது போன்ற கலெக்ஷன் எல்லாம் சாதனைகளின் சிகரம்!

அதனால் தானே கூறுகிறோம்,

"சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே" என்று.

பெருமிதத்துடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
4th April 2011, 02:57 AM
டியர் பம்மலார்,
தங்களது பெருந்தன்மைக்கும் ஆதரவிற்கும் எனது நன்றி. தொடர்ந்து பாடல்களை பகிர்வோம்.
சிவகாமியின் செல்வனும் அவர் புகழ் பாடும் ராஜாமணியின் செல்வனும் கொண்ட பெருமையையும் அருமையையும் மக்கள் மிகவும் தாமதமாக தெரிந்து கொள்கிறார்கள் என்பதற்கு மேற்கண்ட தகவல் ஓர் சாட்சி. மதுரை மையத்தில் (Central) மக்கள் கண்டு களித்த சிவகாமியின் செல்வனை இந்த மையத்தில் (Hub) மக்கள் காண விரும்ப மாட்டார்களா என்ன. இதோ உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அன்பை வெளிப்படுத்தும் பாடல்.

http://www.youtube.com/watch?v=OLyGq9BGZF0
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
4th April 2011, 03:03 AM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 6
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

http://www.youtube.com/watch?v=DI2wSU7LO-M

திரைக்காவியம் - சாந்தி
குரல்கள் - பாடகியர் திலகம் சுசீலா, மற்றும் விசில் எம்.எஸ்.ராஜு
பாடல் - கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு - நெஞ்சை அள்ளும் நடிகர் திலகம், தெவிட்டாத பேரழகி தேவிகா

அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்

pammalar
4th April 2011, 03:11 AM
Guys,

Just watching Anbe Aaruyere, NT's very casual performance. One of the NT movie which does not attract me to watch fully.

Swamy, Ragavendra, is it something NT wanted to do some lighter movie purposely or any other reason and what about box office collections?

NT's facial expression and way of walking like innocent excellent.

Cheers,
Sathish

Dear GoldStar Satish,

Our NT's "Anbe Aaruyire" is a full length romantic comedy but not in the class of SABAASH MEENA or GALAATA KALYAANAM. It hit the silver screens on 27 Sept 1975 and ran upto 1 Nov 1975, for a small period of 36 days. On 2 Nov 1975 [Deepavali day], in most of the theatres - all over South & Chennai, it gave way to Dr.SIVA & VAIRA NENJAM. It did a below average business in the Box-Office.

Apart from NT, MSV's music was the saving grace in the film. Particularly one song 'Malligai Mullai Pooppandhal' sung by Vani Jayaram attained evergreen status.

Warm Wishes & Regards,
Pammalar.

RAGHAVENDRA
4th April 2011, 03:15 AM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 3

காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தால் மாணப் பெரிது. உதவி செய்வதை உடனே செய்ய வேண்டும் என்பதே இதன் சாராம்சமாக விளங்குகிறது. என்றும் ஒன்றே செய்யுங்கள், ஒன்றை நன்றே செய்யுங்கள், நன்றும் இன்றே செய்யுங்கள், நீங்கள் எதிலும் வெல்லுங்கள் என்று கூறியிருக்கிறார் நடிகர் திலகம். நல்லதை தள்ளிப் போட வேண்டாம் என்பதும் இதன் உட்கருத்து. அதனடிப்படையில் அமைந்த பாடல் நாளை என்ன நாளை, இன்று கூட நமது தான், வேளை என்ன வேளை, விழுந்தவர்க்கு வாழ்வை, வழங்க வாரும் தோழரே... என்று துவங்கும் இப்பாடலின் வரிகளை கவனியுங்கள். காலங்கடந்து நின்று இன்றைக்கும் பொருந்துகின்றன அல்லவா. குறிப்பாக இந்த வரிகள்.
ஞானத்தோடு வாழுவோம்
நிதானத்தோடு வாழுவோம்
மாபெரும் தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்

ஆஹா... என்ன வரிகள்

இதோ அந்தப் பாடல்...

http://www.youtube.com/watch?v=iCvNPidaDN8

திரைக் காவியம் - அவன் ஒரு சரித்திரம் 1977
குரல் - டி.எம்.எஸ். அவர்கள் மற்றும் குழுவினர்
நடிப்பு - நடிகர் திலகம், காஞ்சனா மற்றும் பலர்
பாடல் - கவியரசர் கண்ணதாசன்
இந்தப் படத்தில் நடிகர் திலகம் ஏற்றிருப்பது மாவட்ட ஆட்சியர் பாத்திரம் என்பது குறிப்பிடத் தக்கது.
அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்

goldstar
4th April 2011, 05:06 AM
Dear GoldStar Satish,

Our NT's "Anbe Aaruyire" is a full length romantic comedy but not in the class of SABAASH MEENA or GALAATA KALYAANAM. It hit the silver screens on 27 Sept 1975 and ran upto 1 Nov 1975, for a small period of 36 days. On 2 Nov 1975 [Deepavali day], in most of the theatres - all over South & Chennai, it gave way to Dr.SIVA & VAIRA NENJAM. It did a below average business in the Box-Office.

Apart from NT, MSV's music was the saving grace in the film. Particularly one song 'Malligai Mullai Pooppandhal' sung by Vani Jayaram attained evergreen status.

Warm Wishes & Regards,
Pammalar.


Thanks Mr. Swamy.

Is it possible to have photos of Sivakamin Selvan Sunday gala photos?

Cheers,
Sathish

RAGHAVENDRA
4th April 2011, 08:29 AM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 4

தொகுப்பில் அடுத்தது ..

சரணத்தின் இடையில் வரும் வரிகளை கவனியுங்கள் ..


தம்பி ஒருவன் வெளியில் இருந்து காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் இருந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்குதடா
அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு
வெளியில் நிக்குதடா ... அட
என்னத்தைச் சொல்வேண்டா தம்பி
என்னத்தைச் சொல்வேண்டா

இந்த வரிகளை கவியரசர் எந்த யூகத்தில் 1962ல் எழுதியிருப்பார் ...

பாடல் - யாரை எங்கே வைப்பது என்று
படம் - பலே பாண்டியா
குரல் - பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்
இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி


http://www.youtube.com/watch?v=HX_rKbjSrFI

இதோ பாடலின் வரிகள்

யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியலே – அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியலே .. பேதம் புரியலே

பேரெடுத்து உண்மையை சொல்லி
பிழைக்க முடியலே – இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
பேதம் புரியலே - யாரை

நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவன் இருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியலே – இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியலே .. அட
என்னத்தைச் சொல்வேண்டா தம்பி
என்னத்தைச் சொல்வேண்டா ...

தம்பி ஒருவன் வெளியில் இருந்து காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் இருந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்குதடா
அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு
வெளியில் நிக்குதடா ... அட
என்னத்தைச் சொல்வேண்டா தம்பி
என்னத்தைச் சொல்வேண்டா - யாரை

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷம் எல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவை திறந்து பறவை பறந்து பாடி செல்லுமடா .... அட
என்னத்தைச் சொல்வேண்டா தம்பி
என்னத்தைச் சொல்வேண்டா - யாரை

அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்

RAGHAVENDRA
4th April 2011, 08:48 AM
ஓஹோஹோ மனிதர்களே பாடல் வரிகள்...


ஆஹஹா.... ஹம்மிங்

பல்லவி

ஓஹோஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள் ..ஓஹோஹோ..

சரணம் 1

அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித்திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது
காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை .... ஓஹோஹோ...

சரணம் 2

அடிப்படை இன்றி கட்டிய மாளிகை
காத்துக்கு நிக்காது
அழகாய் இருக்கும் காகித பழங்கள்
சந்தையில் விக்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை
நிரந்தரம் ஆகாது
விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல்
வெளிச்சம் கிடைக்காது
கண்ணை மூடும் பெருமைகளாலே
தன்னை மறந்து வீரர்கள் போலே ...ஓஹோஹோ

சரணம் 3

ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும்
உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும்
காரம் போகாது
பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு
பாழ்பட்டுப் போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள்
ஊர்போய் சேராது
காற்றைக் கையில் பிடித்தவனில்லை
தூற்றித் தூற்றி வாழ்ந்தவனில்லை ...ஓஹோஹோ

mr_karthik
4th April 2011, 10:55 AM
Parthasarathy sir,

Just now I have finished all your analysis about various movies of NT, which are simply outstanding. You have analysed each and every movements of NT in various angles.

Excellent job. Please continue.

mr_karthik
4th April 2011, 11:09 AM
Pammalar sir & Raghavendar sir,

You have started a new topic of analysing the songs of NT, with visual treat. Romantic songs are nice to watch and 'koLgaip pAdalkaL' are verymuch enjoyable 'kannukkum karuththukkum'.

Particularly that song from 'neengaL aththanai pErum uththamarthAnA sollungaL' from en magan.

wow... what outstanding lines by kaviyarasar which will coincide with any period any situation, especially for this election period.

mr_karthik
4th April 2011, 11:36 AM
ராகவேந்தர் சார், அசத்திட்டீங்க

அவன் ஒரு சரித்திரம் படத்தில் வரும் 'நாளை என்ன நாளை?. இன்று கூட நமதுதான்' என்ற பாடலைத்தான் சொல்கிறேன். இந்தப்பாடல்கள் எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மாட்டார்கள், அரசியல் கருத்துக்களை உள்ளடக்கியது என்று. (ஆனால் மற்றவர்களுடைய பாடல்கள் இதைவிட வெளிப்படையாக அரசியல் பேசக்கூடியதை எல்லாம் ஒளிபரப்புவார்கள்). எல்லா வகையிலும், எல்லா பக்கத்திலும் நடிகர்திலகத்துக்கு வஞ்சனை.

இவ்வரிகளை கவியரசர் எழுதிய காரணம், இதற்கு சற்றுமுன்னர்தான் இவரது போட்டியாளரான கவிஞர் வாலி எழுதி, நடிகர்திலகத்தின் போட்டியாளர் நடித்த 'நாளை நமதே' என்ற பாடல் வெளியாகியிருந்தது. அதற்குப்போட்டியாகவே நடிகர்திலகத்துக்காக கவியரசர் கண்ணதாசன் 'நாளை என்ன நாளை?. இன்று கூட நமதுதான்' என்று எழுதினார். (எல்லோருக்கும் நல்லவரான எம்.எஸ்.வி.தான் இரண்டு பாடல்களுக்குமே இசையமைத்தார்)

இந்த அருமையான பாடலை விருந்தாக அளித்தமைக்கு மிக்க நன்றி.

parthasarathy
4th April 2011, 11:56 AM
டியர் பம்மலார் மற்றும் ராகவேந்தர் அவர்களே,

நடிகர் திலகத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டும் அற்புதமான பாடல்களைப் பதிவிட்டு அசத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

நாடகத் துறையிலிருந்து வந்த ஒரு கலைஞன், எப்படி திரைப்படம் என்கின்ற visual ஊடகத்திர்கேற்பத் தன்னை மாற்றிக் கொண்டார் என்பதற்கு அவரின் அத்தனை பாடல்களுமே சாட்சி. உண்மையைச் சொல்லப் போனால், அவரது முதல் படத்திலேயே, தன்னை அவர் முழுவதுமாக மாற்றிக் கொண்டார் என்று சொல்லலாம். "கா... கா..." பாடல் - ஒரே இடத்தில் உட்கார்ந்து பாடுவதாய் இருந்தாலும், ஒரு moving உடல் மொழியில் செய்திருப்பார்; "தேசம், ஞானம், கல்வி" பாடல் கேட்கவே வேண்டாம்; "நெஞ்சு பொறுக்குதில்லையே", பொருமல் என்னும் உணர்வை, மிகவும் subtle -ஆக வெளிப்படுத்தியிருப்பார்; "புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு" பாடலில், அவரது நடையை அப்போதே ஆரம்பித்திருப்பார்.

அப்போது, எனக்கு ஒரு பத்து வயதிருக்கும். எழுபதுகளின் ஆரம்பத்தில், சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள, கமலா திரை அரங்கத்தில், ஞாயிறு காலை மட்டும் நண்பகல் காட்சி திரையிடுவார்கள். (காலை பத்து மணிக்குத் துவங்கி இரண்டு மணிக்குள் முடிந்து விடும்). இதில், எப்போதும், பழைய படங்களைத் தான் திரையிடுவார்கள். கமலாவில், முதல் படமாக, அன்னை வேளாங்கண்ணியும், இரண்டாவதாக, ஞான ஒளியும் திரையிடப்பட்டு, இரண்டுமே, பெரிய வெற்றி பெற்றன. குறிப்பாக, ஞான ஓளி, மிகப் பெரிய வெற்றி. அந்தக் காலத்தில், விருகம்பாக்கம் என்ற புறநகர் பகுதியில் - ஒரு மாதிரி கிராமம் என்றும் சொல்லலாம் (இன்று கதையே வேறு.) - எங்களைப் போன்ற அதுவும் நடிகர் திலகம் பக்தர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது கமலா திரை அரங்கத்தின் வரவு. ஏனென்றால், புதிய படங்கள், குறைந்தது நூறு நாட்கள் கழித்துதான் பெட்டி மாறி, புற நகருக்கு வரும். இல்லையென்றால், சாந்திக்கு செல்ல வேண்டும். ஞான ஒளிக்குப் பின், நிறைய புதிய படங்கள் - குறிப்பாக, டாக்டர் சிவா போன்ற படங்களை முதல் நாள் ஒப்பனிங் ஷோவே பார்த்து விட்டோம்! கமலா திரைஅரங்க உரிமையாளர் திரு வி.என். சிதம்பரம் வேறு நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். அன்பே ஆருயிரே, ரோஜாவின் ராஜா, கிரஹப்ரவேசம் உட்பட பல படங்கள் கமலாவிலும் வெளியானது.

அப்படி ஒருநாள், ஞாயிற்றுக்கிழமையன்று, நடிகர் திலகம் தன் விழிகளால் மொழி பேசி நடித்த "தங்கமலை ரகசியம்" படத்தைப் பார்த்தேன். அதில் வனங்களில் சுற்றித் திரிந்து வளரும் "டார்ஜான்" பாத்திரத்தில் படத்தின் முற்பாதியில் நடித்திருப்பார். இடைவேளைக்கு மேல் தான், நடிகர் திலகம் பேச ஆரம்பிப்பார். அதுவும், ஒரு பாடலில் தான். "இக லோகமே இனிதாகுமே" என்று - பி. லீலா என்று நினைக்கிறேன். ஜமுனாவுக்கு பாடியிருப்பார். அந்தப் பாடலுக்கு முன் வரை, நடிகர் திலகம் பேசக்கூட மாட்டார். ஆனாலும், ஜமுனாவுக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டு, அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பிப்பார். இந்தப் பாடல், ஆரம்பித்து, இரண்டாவது சரணம் என்று நினைவு. "வானவர் காணாத வன ராணியே" என்று ஆரம்பித்து, நடிகர் திலகம், திரு. டி.எம்.எஸ். அவர்களில் அற்புதமான குரல் வளத்தில், பாட ஆரம்பிக்கும் போது, திரை அரங்கம் அலறியது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அதற்கப்புறம், இன்று வரை இந்தப் படத்தையும், பாடலையும், பார்த்ததில்லை. இருப்பினும், அந்த நினைவு, என் மனதை விட்டு அகலவில்லை. Such was the impact NT created with that song among the audience, which is unparallelled even today!

The songs you are going to post, will surely, show to the entire world the way a Stage Artiste, adapted and evolved himself to Visual Media - started enjoying himself and made the entire people enjoy his performance throughout his career. It's a lesson to all budding Artistes forever, to see his performances and grow their careers.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
4th April 2011, 12:06 PM
Parthasarathy sir,

Just now I have finished all your analysis about various movies of NT, which are simply outstanding. You have analysed each and every movements of NT in various angles.

Excellent job. Please continue.

Dear Shri. Karthik,

Thanks very much for your kind words of appreciation. Shall certainly continue to enjoy myself and make others enjoy too i.e., the joy of seeing/sharing/reminiscing about NT.

Regards,

R. Parthasarathy

Plum
4th April 2011, 02:18 PM
poomaalaiyil Or malligai and muththukkaLo kaNgaL - been searching for a mp3 download link for both these songs full version. Been getting only multilated versions edited crudely by the uploader with tape-off-on noises audible.

parthasarathy
4th April 2011, 06:11 PM
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி...)

8. ஞான ஒளி (தொடர்ச்சி)

நடிகர் திலகம் சிறைக்குச் சென்ற பின் அடைக்கலம் பாதிரியாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து, அவரும் தான் மறைவதற்குள் மொரட்டுப்பயலைப் (அந்தோனி - நடிகர் திலகம்) பார்க்க விரும்புவதாக மேஜரை வற்புறுத்தி, அவரும் வேறு வழியின்றி அவரது மேலதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி, நடிகர் திலகத்துடன் பாதிரியாரைப் பார்க்க வருவார். அவரது அறையின் வாயிலுக்கு இருவரும் வந்தவுடன், நடிகர் திலகம் என்ன செய்வார் என்று தெரிந்து கொண்டு "பாதிரியாரிடம் போ.. ஆனால் தப்பிக்கக்கூடாது... தப்பிக்க நினைத்தால் ... என் ரிவால்வர் அதன் வேலையைச் செய்யும் ஜாக்கிரதை " என்று சைகையால் சொல்லி, அவரை அனுப்பியதும், ஒரு குழந்தைப் போல் ஓடி வரும்போதே, பார்க்கும் அனைவரையும், அந்தக் கட்டத்துக்குள் கூட்டிச் சென்று, தொண்டையை வலிக்கச் செய்து விடுவார். ஓடி வந்து,பாதிரியாரின் மடியில் முகத்தைப் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி சத்தமே கேட்காமல் அழும்போது கரையாத நெஞ்சமும் கரையும் (இப்போது

அழும் அழுகை சத்தமில்லாமல், முகத்தையும் பெரிதாகக் காட்டாமல், உடல் மொழியாலேயே வரவழைத்த அழுகை – இந்த அழுகை பார்க்கும் அனைவரையும் தொற்றிக் கொள்ளும்!) மொரட்டுப்பயலே, சொல்லு, இனிமே நான் மனுஷனா மாறுவேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடுடா!" என்று சொல்லி நடிகர் திலகம், மேஜர் இருவரது கைகளையும் பற்றிக் கொண்டே உயிரை விடும் திரு. கோகுல்நாத் அவர்கள் இந்தப் படத்தின் முக்கியமான தூண்களில் ஒருவர் - நாடகத்திலும், இந்தப் பாத்திரத்தை இவர் தான் செய்தார். இவர், மேஜரெல்லாம் ஒரு காலத்தில், கே. பாலசந்தர் அவர்களின் ராகினி கிரியேஷன்ஸ் நாடக ட்ரூப்பில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் தான். பின் அவரது படங்களிலும் தவறாமல் நடித்தார்கள்.)

பாதிரியார் இறந்தவுடன் நடந்தேறும் களேபரம் – நடிகர் திலகமும் மேஜரும் கண்ணை மூடி ஜபம் செய்ய – மேஜர் கண் விழிப்பதற்குள் நடிகர் திலகம் கண் விழித்து – தன் குறுக்கு மூளையால் யோசித்து – மேஜரின் ரிவால்வரில் இருக்கும் தோட்டாக்களை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு – “என்ன விடு நான் போகணும்” என்று கூறி வெகு இயல்பாக அப்பாவித்தனம் கலந்த முரட்டு தனத்துடன் தப்பிக்க முயன்று, கடைசியில் மேஜரை மெழுகுவர்த்தி ஹோல்டரால் மண்டையில் அடித்து விட்டு – மன்னிச்சிக்க லாரான்சே என்று சொல்லித் தப்பித்து – மனது கேட்காமல் – மறுபடியும் பாதிரியார் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு பாதிரியாரின் அங்கியில் வந்து மறுபடியும் மாட்டிக் கொண்டு தப்பித்து – கடைசியில் கடலில் குதித்துத் தப்பிக்கும் வரை - படம் போவது புல்லட் எக்ஸ்பிரஸ் வேகம்.

இடைவேளைக்குப் பின்னர், அதே பூண்டி கிராமத்துக்கு, பெரிய கோடீஸ்வர அருணாக வந்து கலக்கும்/கலங்கும் கட்டங்கள்!

பூண்டி கிராமத்துக்குத் திரும்பவும் கோடீஸ்வர அருணாக வரும்போது, காரில் அவர் அமர்ந்திருக்கும் தோரணை மற்றும் சிகை அலங்காரம், மீசை மற்றும் அந்த கூலிங் கிளாஸ் – ஆரம்பமே பெரிய அமர்க்களத்துக்கு அச்சாரம்!

அமலோற்பவ மாதா கோவிலுக்குள் நுழைந்தவுடன், நேரே அங்கிருக்கும் அடைக்கலம் பாதிரியாரின் போட்டோவைப் பார்த்து மௌனமாகக் கலங்குவது; அங்குள்ள பள்ளி நிர்வாகிகள் (திரு. எஸ்.ஏ.கண்ணன் அவர்கள் மற்றும் திரு வீரராகவன்) அங்குள்ள குழந்தைகளை – குறிப்பாக ஒரு குழந்தையைப் பார்த்து நெகிழ்வது – அவரை அங்குள்ள ஆசிரியைகளுக்கு அறிமுகப் படுத்தும் போது, கடைசியாக, அவருடைய பெண் மேரியைப் பார்த்து முதலில் மேரி! என்று சொல்லி, உடனேயே, அவருக்கே உரிய பாணியில் மேரி மாதா என்று சமாளிப்பது; தன்னுடைய பெண் இப்போது எங்கு வசிக்கிறார் என்று மற்ற விவரங்களைப் பற்றி அறிய முற்படும்போது, போட்டோவில் உள்ள கண்ணாடியில், சர்ச்சுக்குள், இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் (மேஜர்) நுழைவதைத் தன்னுடைய கூலிங் க்ளாஸ் மூலமாக ஸ்டைலாகப் பார்த்து விட்டு, மெல்ல அங்கிருந்து நகர்வது எல்லாம் பார்ப்பவரை நயமாக அந்த சூழலுக்குள் இட்டுச் செல்லும்.

தன் பெண் எங்கிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு வீகேயார் வீட்டிற்குச் சென்று, அவரது பேத்தி ஜெயகௌசல்யாவைப் பார்த்து, அவர்தான் தன் பேத்தி என்று அறிந்து மகிழ்ந்து, அவருடைய பெயர் என்ன என்று கேட்டு, தன்னுடைய மனைவியின் பெயரான ராணியையே அவருக்கும் வைத்திருக்கிறார்கள் என்றறிந்து மேலும் மகிழ்வது.

அவரது பெண் சாரதா வந்தவுடன், தான் தான் அவரது அப்பா அந்தோனி என்று அவரது இடது கையால் வலது தோளை முன் போல் தடவி சைகையால் சொல்லிப் புரிய வைக்கும் நேரம் பார்த்து, பின்னால் மேஜர் கழுகு மாதிரி வருவதை சாரதா மூலம் தெரிந்து கொண்டு, கனைத்து சமாளிப்பது; தொவில்லாமல் சுவாரஸ்யமாக நகுரும் கட்டங்கள்.

உடனேயே, மேஜருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, அதே வேகத்துடன் தன் வீட்டிற்கு வந்து, வெறுப்பில் லாரன்ஸ் என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னவுடன், உடனே லாரன்ஸ் என்ற ஒரு வேலையாள் வந்து நிற்க, அவரை நீ யார் என்று வினவி, கோபத்தின் உச்சிக்குச் சென்று, செக்ரடரியைக் கூப்பிட்டு, இவருக்கு உடனே பணம் கொடுத்து செட்டில் பண்ணிடு. – நோ மோர் லாரன்ஸ் ஹியர்! என்று ஆங்கிலத்தில் சொல்லும் அந்த ஸ்டைல் – என்ன ஒரு ஆங்கில உச்சரிப்பு!

மேஜர் நடிகர் திலகத்தின் வீட்டிற்குச் சென்று அவரது கை ரேகையை எடுக்க முயல்வதும், அவரிடம் பிடி கொடுக்காமல் நடிகர் திலகம் நழுவுவதும்; அவரது இடது கண் தான் தெரியாதே (ஏனென்றால் அந்தோணியின் வலது கண் திரை போடப்பட்டிருக்கும்; ஆனால், அருணாகிய இவர் எப்படியும் இந்தப் பரீட்சையில் பெயிலாகி விடுவார் என்று மேஜர் தீர்மானிப்பார்); அதை மறைப்பதற்காகத்தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார் என்று ஊகித்து, சட்டென்று நடிகர் திலகம் எதிர்பாராத வகையில் அவரது முகத்திலிருந்து கண்ணாடியைப் பிடுங்க, நடிகர் திலகம் ரொம்பக் கூலாக, வலது கண்ணை மூடிக் கொண்டே, இடது கண்ணால் அவரைப் பார்க்க, மேஜரோ, உங்கள் இடது கண் வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்ல, அதற்கு, நடிகர் திலகம், இல்லையே, "you are wearing a black tie and the time now is seven ten" என்று அலாதியான ஸ்டைலில் அவரை மடக்குவது – எல்லாமே அற்புதம்.

மேஜர் அங்கிருந்து கிளம்பும் போது, வீட்டின் கதவிலக்கம் என்ன என்று கேட்க, நடிகர் திலகம் 1/99 என்று சொன்னவுடன், மேஜர், நக்கலாக, நான் 199-ன்னு நினைச்சேன் என்று சொல்லி விட்டு நகருவார். அவர் முன்பு கைதியாக இருந்தபோது, அவருடைய கைதி எண் 199, அதைத் தான் சாடையாகக் குத்திக்காட்டி அவரை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு மேஜர் அங்கிருந்து விலகியதும், கோபத்துடன், வேகமாக அவரது ரூமுக்குச் சென்று, மறுபடியும் அதே வேகத்துடன், படத்தின் முத்தாய்ப்பான பாடலான “தேவனே எண்ணிப்பாருங்கள்” பாடலைப் பாடுவது – வேக வேகமாய் நடந்து “தாய் மடியிலே மழலைகள் ஊமையோ; சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ; நோய் உடலிலா மனதிலா தேவனே; நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே” என்று முடிக்கும் போது இலேசாகக் காலை விரித்து இரண்டு கைகளையும் உயர்த்தும்போது அரங்கத்தில் எழும் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடிக்கும்! இந்தப் பாடலில், மேகக் கூட்டங்கள் நகர்வது படமாக்கப் பட்டது பற்றி பலர் எழுதி விட்டனர் (ஒளிப்பதிவு மேதை பி.என். சுந்தரம் அவர்கள் கூட இதைப் பற்றி விரிவாக சிலாகித்துக் கூறியிருக்கிறார்). மிகச் சரியாக அந்த மேகக் கூட்டம் நகரும்போது எடுக்கப்பட்டதால், அந்தக் காட்சி மிக மிக இயற்கையாக இருக்கும். அந்தப் பாடலின் முடிவில், கொண்டு வா இல்லை கொண்டு போ என்று ஒவ்வொரு கையாக உயர்த்தி சொல்லி, உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் என்று இரண்டு கைகளையும் கூப்பி முடிக்கும் அழகு! ஒ!

தன்னுடைய பேத்தி ஜெய கௌசல்யா வேறொரு வாலிபனுடன் (மேஜரின் மகன்) நடந்து போவதைப் பார்த்து விட்டு, பின்னர், சாரதா அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஜெய கௌசல்யா சர்ச்சுக்குச் சென்று ஜெபம் செய்யும்போது, அங்கு அவருடைய செக்ரடரியிடம் பேசிக்கொண்டே வருபவர் (கார்டன் க்ளம்சியா இருக்கு, சரி பண்ணு…. என்ன ஒரு ஆங்கிலம்!) இவரைப் பார்த்து விட்டு, ஜெய கௌசல்யாவை நெருங்கி, அவருடன் சேர்ந்து பைபிள் படிப்பது போல், அவருக்கு புத்திமதி சொல்லி, கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்ளுகிறேன். அம்மா சொல்வதைக் கேள் என்று அவருக்கு தேறுதல் கூறி அனுப்பும் பாங்கு (இதைத் தான் அடிப்படையாக வைத்து, பின்னாளில், ரஜினி அவர்கள் தந்தை வேடம் ஏற்ற நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை மற்றும் படையப்பா போன்ற படங்களில், செய்திருப்பார்!).

இப்போதுதான் படத்தின் முக்கியமான காட்சி. மேஜர் அவருடைய மகனை சாரதா தங்கியிருக்கும், வீகேயார் வீட்டிற்குக் கூட்டி வந்து, அவருடைய மகள் ஜெய கௌசல்யாவிற்கு சம்பந்தம் பேச ஆரம்பித்து, அதற்கு, சாரதா மறுக்க, சரியாக அந்த நேரத்தில், நடிகர் திலகம் கைகளில் எப்போதும் அணியும் வெள்ளை நிற உரைகளை அணியாமல் அங்கு வந்து சேர, “ஆஹா! இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே இத்தனை நாள் ஏங்கிக்கிடந்தோம்” என்று மேஜர் நினைத்து, அவரைப் பார்க்க, “என்னை உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது. என்னையா மடக்கப் பார்க்கிறாய்” என்பது போல், ஒரு பார்வை – அதற்கேற்றாற்போல் ஒரு நடை. வந்து அமர்ந்து பேசி முடிந்தபின், எல்லோரும் வெள்ளித் தம்ப்ளரில் (பாலோ, தேநீரோ ஏதோ ஒன்று) பருகிக் கொண்டிருக்கும்போதே, மேஜர் நடிகர் திலகத்தைக் குறி வைத்து, அவருடைய கை ரேகை படிந்த வெள்ளித் தம்ப்ளரை அவருக்குத் தெரியாமல் எடுத்து தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ள; (இதை சாரதா பார்த்து அதிர்ச்சியடைந்து விடுவார்!) இதை நடிகர் திலகம் கவனிக்காதது போல்தான் முதலில் தெரியும். ஆனாலும், மேஜர் காரியத்தை முடித்து விட்ட திருப்தியில், கிளம்பும் போது, நடிகர் திலகம் “இன்ஸ்பெக்டர்!” என்று கூறி அவரை அழைத்து, அவர் அருகில் வந்தவுடன், சன்னமான குரலில், கௌரவமான நக்கல் தொனியில், “இன்ஸ்பெக்டர், மத்தவங்க செஞ்சா அது குற்றம். ஆனா, அதையே நீங்க செஞ்சா அது ஞாபக மறதி, இல்லையா?” என்று கேட்க, மேஜர் நடிகர் திலகத்தைப் பார்த்து “what do you mean?” என்று சீற, நடிகர் திலகம் தனக்கேயுரிய ஸ்டைலில் “I mean the silver tumbler” என்று கூறிக் கொண்டே, அவருடைய கைகளில் இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில், மெல்லிய உறையைக் கழற்றி டீபாவில் வைக்கும் போது , திரை அரங்கமே கூரை பிய்ந்து கொள்ளும் அளவுக்கு அலறும். மேஜர் அசடு வழிந்து சிரிக்க, இவரோ, எப்படி, பார்த்தியா? என்ன ஒங்களால கட்ட முடியாது என்று சைகையால் சிரித்து முடிப்பார்.


ஞான ஒளி தொடரும்,


அன்புடன்,


பார்த்தசாரதி

RAGHAVENDRA
4th April 2011, 07:43 PM
டியர் பார்த்த சாரதி,
ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்குள்ளும் ஊறிக்கிடக்கும் ரசிப்பு வேட்கையினை மீண்டும் மீண்டும் கிளறி எழுப்பும் வண்ணம், தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்புற அமைந்துள்ளது. அதிலும் எண்ணிலடங்கா முறை நாம் பார்த்த படமாயிருந்தாலும் ஒவ்வொரு முறையிலும் புதிய பரிணாமத்தினை வெளிக்கொணரும் அவருடைய நடிப்பின் ரசிப்புத்தன்மை வேறு எந்த நடிகருக்கும் கிட்டாததாகும். குறிப்பாக தாங்கள் மேற்கூறிய ஞான ஒளி காட்சியினை படிக்கும் புதிய தலைமுறையினர், அதனை நேரில் காணும் போது மேலும் அதிகப் படியாக ஈர்க்கப் படுவர். அப்படி அனைவரும் அணுஅணுவாக ரசிக்கும் வண்ணம் இதோ நீங்கள் குறிப்பிட்ட காட்சி - I mean the Silver Tumbler.


http://www.youtube.com/watch?v=Xs_p2tcd6zQ

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
4th April 2011, 07:54 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 7

அடுத்த பாடல் தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் இடம் பெற்ற இகலோகமே இனிதாகுமே பாடல். குரல் டி.எம்.எஸ். மற்றும் பி.லீலா. பாடல் கு.மா.பாலசுப்ரமணியம். இசை டி.ஜி. லிங்கப்பா. ஆண்டு 1957.


http://www.youtube.com/watch?v=xzRA-XBzM6c

இந்தப் பாடலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கண்டு மகிழ்ந்து அந்தக் கால நினைவுகளில் மூழ்குதற்கு வசதியாக, திரு பார்த்த சாரதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப் படுகிறது.

பம்மலார் மற்றும் ராகவேந்திரன்

pammalar
4th April 2011, 09:57 PM
Dear mr_karthik,

Thanks a lot !


டியர் பம்மலார் மற்றும் ராகவேந்தர் அவர்களே,

நடிகர் திலகத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டும் அற்புதமான பாடல்களைப் பதிவிட்டு அசத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

நாடகத் துறையிலிருந்து வந்த ஒரு கலைஞன், எப்படி திரைப்படம் என்கின்ற visual ஊடகத்திர்கேற்பத் தன்னை மாற்றிக் கொண்டார் என்பதற்கு அவரின் அத்தனை பாடல்களுமே சாட்சி. உண்மையைச் சொல்லப் போனால், அவரது முதல் படத்திலேயே, தன்னை அவர் முழுவதுமாக மாற்றிக் கொண்டார் என்று சொல்லலாம். "கா... கா..." பாடல் - ஒரே இடத்தில் உட்கார்ந்து பாடுவதாய் இருந்தாலும், ஒரு moving உடல் மொழியில் செய்திருப்பார்; "தேசம், ஞானம், கல்வி" பாடல் கேட்கவே வேண்டாம்; "நெஞ்சு பொறுக்குதில்லையே", பொருமல் என்னும் உணர்வை, மிகவும் subtle -ஆக வெளிப்படுத்தியிருப்பார்; "புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு" பாடலில், அவரது நடையை அப்போதே ஆரம்பித்திருப்பார்.

அப்போது, எனக்கு ஒரு பத்து வயதிருக்கும். எழுபதுகளின் ஆரம்பத்தில், சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள, கமலா திரை அரங்கத்தில், ஞாயிறு காலை மட்டும் நண்பகல் காட்சி திரையிடுவார்கள். (காலை பத்து மணிக்குத் துவங்கி இரண்டு மணிக்குள் முடிந்து விடும்). இதில், எப்போதும், பழைய படங்களைத் தான் திரையிடுவார்கள். கமலாவில், முதல் படமாக, அன்னை வேளாங்கண்ணியும், இரண்டாவதாக, ஞான ஒளியும் திரையிடப்பட்டு, இரண்டுமே, பெரிய வெற்றி பெற்றன. குறிப்பாக, ஞான ஓளி, மிகப் பெரிய வெற்றி. அந்தக் காலத்தில், விருகம்பாக்கம் என்ற புறநகர் பகுதியில் - ஒரு மாதிரி கிராமம் என்றும் சொல்லலாம் (இன்று கதையே வேறு.) - எங்களைப் போன்ற அதுவும் நடிகர் திலகம் பக்தர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது கமலா திரை அரங்கத்தின் வரவு. ஏனென்றால், புதிய படங்கள், குறைந்தது நூறு நாட்கள் கழித்துதான் பெட்டி மாறி, புற நகருக்கு வரும். இல்லையென்றால், சாந்திக்கு செல்ல வேண்டும். ஞான ஒளிக்குப் பின், நிறைய புதிய படங்கள் - குறிப்பாக, டாக்டர் சிவா போன்ற படங்களை முதல் நாள் ஒப்பனிங் ஷோவே பார்த்து விட்டோம்! கமலா திரைஅரங்க உரிமையாளர் திரு வி.என். சிதம்பரம் வேறு நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர். அன்பே ஆருயிரே, ரோஜாவின் ராஜா, கிரஹப்ரவேசம் உட்பட பல படங்கள் கமலாவிலும் வெளியானது.

அப்படி ஒருநாள், ஞாயிற்றுக்கிழமையன்று, நடிகர் திலகம் தன் விழிகளால் மொழி பேசி நடித்த "தங்கமலை ரகசியம்" படத்தைப் பார்த்தேன். அதில் வனங்களில் சுற்றித் திரிந்து வளரும் "டார்ஜான்" பாத்திரத்தில் படத்தின் முற்பாதியில் நடித்திருப்பார். இடைவேளைக்கு மேல் தான், நடிகர் திலகம் பேச ஆரம்பிப்பார். அதுவும், ஒரு பாடலில் தான். "இக லோகமே இனிதாகுமே" என்று - பி. லீலா என்று நினைக்கிறேன். ஜமுனாவுக்கு பாடியிருப்பார். அந்தப் பாடலுக்கு முன் வரை, நடிகர் திலகம் பேசக்கூட மாட்டார். ஆனாலும், ஜமுனாவுக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டு, அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பிப்பார். இந்தப் பாடல், ஆரம்பித்து, இரண்டாவது சரணம் என்று நினைவு. "வானவர் காணாத வன ராணியே" என்று ஆரம்பித்து, நடிகர் திலகம், திரு. டி.எம்.எஸ். அவர்களில் அற்புதமான குரல் வளத்தில், பாட ஆரம்பிக்கும் போது, திரை அரங்கம் அலறியது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அதற்கப்புறம், இன்று வரை இந்தப் படத்தையும், பாடலையும், பார்த்ததில்லை. இருப்பினும், அந்த நினைவு, என் மனதை விட்டு அகலவில்லை. Such was the impact NT created with that song among the audience, which is unparallelled even today!

The songs you are going to post, will surely, show to the entire world the way a Stage Artiste, adapted and evolved himself to Visual Media - started enjoying himself and made the entire people enjoy his performance throughout his career. It's a lesson to all budding Artistes forever, to see his performances and grow their careers.

அன்புடன்,

பார்த்தசாரதி

டியர் பார்த்தசாரதி சார்,

பாராட்டுக்கு நன்றி ! தங்களது மலரும் நினைவுகளில் நறுமணம் கமழ்கிறது !

தாங்கள் குறிப்பிட்டது போல் டாக்டர் சிவா, கிரஹப்பிரவேசம், ரோஜாவின் ராஜா காவியங்கள் முதல் வெளியீட்டில் 'கமலா'விலும் திரையிடப்பட்டன. "அன்பே ஆருயிரே" மட்டும் முதல் வெளியீட்டில் தங்களது பகுதியில் 'ராம்' திரையரங்கில் வெளியானது. மேலும், சிங்காரச் சென்னையில் "அன்பே ஆருயிரே" முதல் வெளியீட்டில் வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணா, சயானி, ராம் என 4 திரையரங்குகளில் வெளியாயிற்று.

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
4th April 2011, 10:16 PM
ஞான ஒளி (தொடர்ச்சி...)

தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வந்து சாரதா வந்திருப்பதை செக்ரட்டரி சொன்னவுடன், உடனே, அந்த வாஞ்சையைக் காட்டி சட்டென்று முகத்தை சாதாரணமாக மாற்றி, அவரை வரச்சொல்லு என்று கூறுவார். சாரதா வந்தவுடன் மேரி வாம்மா! என்று கூறி பல வருடங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தும் தன்னை அப்பா என்று சொல்ல முடியாமல் சில நாள் தவித்து, பின்னர் இப்போது பார்க்கும்போது அடைந்த அன்பு மற்றும் நெகிழ்ச்சியினை முழுவதுமாக ஆனால் மிக மிக subtle -ஆக காண்பித்து, அவரை இதமாக அணைத்து, அவரது நெற்றியில் முத்தமிட்டு, அன்பை வெளிப்படுத்தும் விதம்; சாப்பாட்டு மேஜையின் மேல், கஞ்சிக்கலயம் இருப்பதை சாரதா பார்த்தவுடன், என்னம்மா நான் கஞ்சி சாப்பிடறேன்னு பார்க்கிறியா? நான் எப்பவும் அதே பழைய அந்தோணி தாம்மா என்று சொல்லி, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஓடிச் சென்று ப்ரிட்ஜைத் திறந்து, பழங்களை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, பிரிட்ஜைக் காலால் முதலில் மூட முயன்று, முடியாமல், மறுபடியும் முயன்று காலால் மூடி, மேஜை அருகில் வந்து அமர்ந்து, பழத் துண்டுகளை சாரதாவுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்ல, அவர் அதை மறுத்து, இல்லையப்பா, நான் உங்களோடு சேர்ந்து கஞ்சியே சாப்பிடுறேன் என்று சொன்னவுடன், ஸ்டைலாக, கைகளில் இருக்கும் பழத் துண்டுகளை வீசி எரிந்து விட்டு, கஞ்சியை அவருக்குக் கொடுக்க, இருவருக்கும் பழைய நினைவுகள் மலர்ந்து, கலங்கி நெகிழ.... பார்க்கும் அத்தனை பேரையும், இது படம்தான் என்பதை மறக்க வைத்து, அவர்களுடன் பயணம் செய்ய வைப்பார் நடிகர் திலகம், ஊர்வசி சாரதா அவர்களின் மிகச் சிறந்த ஒத்துழைப்போடு! சாரதா உண்மையில், நடிகர் திலகத்தை சந்தித்து, அவரை ஜெய கௌசல்யா திருமணத்திற்கு வரவேண்டாம், வந்தால், மேஜர் திட்டம் போட்டு அவரைக் கைது செய்து விடுவார் என்று கூறி, உடனே ஊரை விட்டுக் கிளம்புமாறு வேண்ட, முதலில் மறுத்து, பின், ஒத்துக் கொண்டு, செக்ரடரியைக் கூப்பிட்டு டிக்கெட் புக் பண்ணச் சொல்லும்போது, அங்கு வரும் மேஜர், "It 's too late உங்களை அவ்வளவு தூரம் கிளம்ப விட மாட்டேன் என்று கூற, நடிகர் திலகம் பதற, மேஜர், என் மகன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கூற, ஒரு மாதிரி நடிகர் திலகம் பெருமூச்சு விடுவார். சாரதாவை வீட்டுக்குத் தன் காரில் கொண்டுபோய் விடுகிறேன் என்று சொல்ல, சாரதா இல்லை என்று கூறி தானே செல்லும் போது, வெறும் காலில் முள் தைத்துவிட, அதைப் பார்த்துக் கலங்கிய நடிகர் திலகத்தைப் பார்த்து, மேஜர் கிண்டல் செய்து பின்னர் கிளம்ப, வெறுப்பின் உச்சிக்கே நடிகர் திலகம் சென்று அங்கு perform செய்யும் அந்த "one act play " - "அலையறான் ... அலையறான்... என்னைப் பிடிக்க அலையறான் ... ஒன்கிட்ட நான் பிடிபட மாட்டேண்டா.... லாரன்ச்ச்சச்ஸ் என்று சொல்லி "you can't catch me " என்று கூறி முடிக்கும் அந்த ஸ்டைல்...... அரங்கில் கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடிக்கும்!

கடைசியில், மாதா கோவிலில், மேஜர் அவரது பெண்ணை இழிவாகப் பேசப்பேச, நடிகர் திலகம் கோபத்தின் உச்சிக்கே சென்று, மேஜை மேல் இருக்கும், அந்த மரத்துண்டைப் பிடுங்கி (அவர் அதைப் பிடுங்கி எடுக்கும் விதம், அசலாக இருக்கும் ... அது ஏற்கனவே பிடுங்கி ஒப்புக்காக வைக்கப்பட்டிருந்தாலும்!) அந்த அளவுக்கு உக்கிரமாக நடிகர் திலகம் எடுக்கும் போது, மெய் சிலிர்க்கும். அப்படியே சென்று, மேஜரிடம், நான் யாருன்னு உனக்கு நிஜமா தெரியாது? சாரதாவைக் காட்டி இவள் யாரென்று தெரியாது? என்று கூறி கெஞ்ச, மறுபடியும் மேஜர் இல்லை நீங்கள் யார் என்று தெரியாது. அவரது பெண்ணைக் காட்டி, இவள் நடத்தை கெட்டவள் என்று மேலும் மேலும் கூற நடிகர் திலகம் கோபாவேசத்துடன் ஓடிச் சென்று மெழுகுவர்த்தி ஹோல்டரை எடுத்து மறுபடியும், மேஜரை அடிக்கப் போக, மேஜர் "ம்ம். ஏன் நிறுத்திட்ட. ஓங்கியது உன்னோட இடது கை. உன் மனசில் இருப்பது மிருக உணர்ச்சி" என்று சொல்ல, நடிகர் திலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, இல்லை, நான் திரும்பவும் ஒரு தப்பு செய்ய மாட்டேன். என்று கூறி அங்கிருப்பவர்களிடம் "நான் தான் மாதா கோவில்ல மணி அடிச்சிக்கிட்டிருந்த அந்தோணி என்று ஸ்டைலாகக் கூறி மேஜரிடம் "இப்ப சொல்லு. என் பெண் களங்கமற்றவள் என்று சொல்லு" என்று கூறி, "Am I not your Friend" என்று கூறும்போது மேஜருடன் சேர்ந்து அனைவரும் (மக்களும் தான்!) கலங்கி, நடிகர் திலகமும், மேஜரும் தழுவிக் கொள்ள, இவ்வாறு மேஜரின் திட்டத்துக்கு பலியாகி மறுபடியும் கைதாகி, இருவரும் ஜீப்பின் பின் இருக்கையில், சிரித்துக் கொண்டே செல்லும்போது - ஒரு கதாநாயகன் கடைசிக் காட்சியில் கைதாகி செல்லுவதைக் கூட மக்களை ரசிக்க வைத்த படம். (சாலையிலுள்ள போர்டில் "நன்றி மீண்டும் வருக" என்று முடியும்போது, எல்லோரையும் திரும்பத் திரும்ப பல நாட்கள் ஏன் இன்னும் கூட வரவைக்கின்ற மகத்தான படமாக, ஞான ஒளி முடியும்.

இந்தப் படம் நடிகர் திலகம் நடித்த எண்ணற்ற முக்கியமான படங்களின் வரிசையில் - அதாவது ஒரு காட்சி கூட சோடை போகாத படங்களின் வரிசையில் - மிக மிக முக்கியமான படம். (தெய்வ மகன், வசந்த மாளிகை, அவன்தான் மனிதன் வரிசையில்.)

ஞான ஒளி, 1980 -இல் ஹிந்தியில், தேவதா என்ற பெயரில் படமாக்கபட்டபோது, சஞ்சீவ் குமார், நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும், டேனி (ஆம் ரஜினியின் ரோபோ வில்லன்தான்) மேஜர் பாத்திரத்தையும் ஏற்றனர். சென்னை தேவி வளாகத்தில், இந்தப் படம் நன்றாக ஓடியது. அதற்கான ஷீல்டை இப்போதும் அங்கு பார்க்கலாம். சஞ்சீவ் குமாரும் ஹிந்தியில், அந்தோணி பாத்திரத்தை சிறப்பாகவே செய்தார் என்று கூறினாலும், நடிகர் திலகத்தின் ரேஞ்சை அவரால் நெருங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். இருந்தாலும், அவர் வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனலாம். மேலும், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் நலம் விரும்பியும் கூட.

தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

rajeshkrv
5th April 2011, 09:06 AM
Kulama Gunama for Viewing Pleasure


http://www.youtube.com/watch?v=HseYpkYbj5A

pammalar
6th April 2011, 02:42 AM
கர வருட தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் சித்திரைத் திருநாளான 14.4.2011 வியாழன் முதல், சென்னை 'சாந்தி' காம்ப்ளெக்ஸில், கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியம் திரையிடப்பட உள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வார இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த அருமையான செய்தியை அளித்த அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
6th April 2011, 04:58 PM
டியர் பார்த்த சாரதி,
ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்குள்ளும் ஊறிக்கிடக்கும் ரசிப்பு வேட்கையினை மீண்டும் மீண்டும் கிளறி எழுப்பும் வண்ணம், தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்புற அமைந்துள்ளது. அதிலும் எண்ணிலடங்கா முறை நாம் பார்த்த படமாயிருந்தாலும் ஒவ்வொரு முறையிலும் புதிய பரிணாமத்தினை வெளிக்கொணரும் அவருடைய நடிப்பின் ரசிப்புத்தன்மை வேறு எந்த நடிகருக்கும் கிட்டாததாகும். குறிப்பாக தாங்கள் மேற்கூறிய ஞான ஒளி காட்சியினை படிக்கும் புதிய தலைமுறையினர், அதனை நேரில் காணும் போது மேலும் அதிகப் படியாக ஈர்க்கப் படுவர். அப்படி அனைவரும் அணுஅணுவாக ரசிக்கும் வண்ணம் இதோ நீங்கள் குறிப்பிட்ட காட்சி - I mean the Silver Tumbler.


http://www.youtube.com/watch?v=Xs_p2tcd6zQ

அன்புடன்
ராகவேந்திரன்

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

நான் பதிவிட்ட ஞான ஒளி படத்தின் இரண்டாவது பாகத்தைப் படித்து பாராட்டியதோடு நிற்காமல், உடன் அந்த "சில்வர் தம்ப்ளர்" காட்சியையும், அதன் பின் வரும், சாரதா - நடிகர் திலகம் சந்திக்கும் காட்சியையும் பதிவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். (இந்தக் காட்சியையும், பின்னர் வரும் க்ளைமாக்ஸ் காட்சியையும் சேர்த்து, இப்போது தான் ஞான ஒளி படத்தைப்பற்றிய பதிவை முடித்தேன்.)

அதோடு நிற்காமல், மறுபடியும், தங்கமலை ரகசியம் படப் பாடல் "இக லோகமே இனிதாகுமே" பாடலையும் பதிவிட்டு, என்னை 1973 -க்கே கூட்டிச் சென்று விட்டீர்கள். (அப்போது தான் இந்தப் படத்தை கமலா தியேட்டரில் பார்த்தேன். என் அன்னையும், பெரியன்னையும் கூட்டிச் சென்றனர். அவர்கள் தான், என் மனதில், நடிகர் திலகத்தை ஆழமாக வேரூன்றச் செய்தவர்கள்.)

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
6th April 2011, 05:52 PM
அண்ணன் ஒரு கோயில், தீபம், அந்தமான் காதலி, பரீட்சைக்கு நேரமாச்சு உள்ளிட்ட பல படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்த நடிகை சுஜாதா இன்று காலமானதாக செய்தி வந்துள்ளது. சிவாஜி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமின்றி தானும் ஒரு சிவாஜி ரசிகையாக வாழ்ந்தவர் திருமதி சுஜாதா ஜெயகர் அவர்கள். அன்னாரது மறைவுக்கு நமது அஞ்சலி உரித்தாகட்டும்.

ராகவேந்திரன்

parthasarathy
6th April 2011, 05:55 PM
அன்புள்ள திரு. முரளி அவர்களே,

சில நாட்களுக்கு முன், உங்களுடைய "ஆண்டவன் கட்டளை" படத்தைப் பற்றிய பதிவினைப் படிக்க நேர்ந்தது. மிக மிக அற்புதமான நுணுக்கமான பதிவு.

நான் 1978 முதல் 1985 வரைப்பட்ட காலத்தில் தான், நடிகர் திலகத்தின் முதல் படத்திலிருந்து 1970 வரையில் வெளி வந்த அநேகமாக எல்லாப் படங்களையும் திரை அரங்கத்தில் பார்க்கும் பேறு பெற்றேன். 1970 -லிருந்து வெளி வந்த படங்களை அந்தந்த காலகட்டத்தில் பார்த்து விட்டிருந்தாலும், அவ்வப்போது பார்ப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தது வேறு விஷயம். நானும் எனது நண்பனும் சென்னையில் அப்போதிருந்த ராம் திரை அரங்கத்தில் இந்தப் படத்தை ஒரு நாள் மாலைக் காட்சியாகப் பார்த்தோம். பார்த்தவுடன் வீட்டிற்கு வந்து, எனது டயரியில் (அப்போதெல்லாம் எனக்கு டயரி எழுதும் பழக்கம் இருந்தது. இப்போது இல்லை.) "இன்று ஆண்டவன் கட்டளை பார்த்தேன். இந்தப் படத்தில் நடிகர் திலகம்தான் நடிக்க வேண்டும் என்பது ஆண்டவன் அவருக்கிட்ட கட்டளை!" என்று எழுதியது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது - கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் உருண்டோடியும்!

மறுபடியும், இதே படத்தை, ஒரு நான்கு வருடங்களுக்குப் பிறகு நானும், எனது அலுவலக நண்பரும் சென்னை சீனிவாசா திரை அரங்கத்தில், ஒரு ஞாயிறு அன்று மாலைக் காட்சியாக (ரூபாய் 50 /- கொடுத்து ப்ளாக்கில் - கட்டுக்கடங்காத கூட்டமாதலால்!) பார்த்தோம். எனது நண்பர் உயரிய கொள்கைகளை உடையவர். என்னை விட ஒரு பத்து வயது மூத்தவர் மற்றும் அலுவலக வேலைகளில் குரு. மேம்போக்கான படங்களைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவர். இருப்பினும், நடிகர் திலகத்தை அவருக்குப் பிடிக்கும். விடுவேனா? அவரை, முறையே, "புதிய பறவை", "தெய்வ மகன்", "நவராத்திரி", "இருவர் உள்ளம்" மற்றும் "ஆண்டவன் கட்டளை" படங்களுக்குக் கூட்டிச் சென்றேன். இந்த எல்லா படங்களையுமே அவர் மிகவும் ரசித்தார் என்றாலும், "ஆண்டவன் கட்டளை" பார்த்த அனுபவம் மட்டும் என்னால் மறக்க முடியாது. இந்தப் படத்தில், "ஆறு மனமே ஆறு" பாடலுக்கு சற்று முன், அவர் ஆசையுடன் வளர்த்த நாய், அவரைக் காப்பாற்றி, பின் உயிரை விடும் காட்சி வரும். இதை நினைக்கும் போதே தொண்டை வலிக்கிறது என்றால், பார்த்தால்? நாய் இறந்தவுடன், நடிகர் திலகம் "நானா உனக்கு எஜமானன்? நீதான் எனக்கு எஜமானன்!" என்று கூறிக் கலங்கி, அந்த சடலத்தைப் புதைத்தவுடன், இந்தப் பாடல் துவங்கும். தன்னுடைய எஜமானர் பசியோடிருக்கிறார் என்றறிந்து, அந்த நாய் எங்கோ சென்று ரொட்டித் துண்டுகளைக் கொண்டு வந்து அவரிடம் வைக்க, அவரோ, "வேண்டாம் மணி! (அவர் வைத்த செல்லப் பெயர்.) நீ போய் விடு." என்று விரட்டி விடுவார். ஏனென்றால், அவருக்கு அவர் மேலேயே வெறுப்பு வந்து தற்கொலைக்குத் தயாராகி விடுவார். பின்னர் அவர் தன்னைக் கட்டிக் கொண்டு ஆற்றில் விழுந்தவுடன்தான், மணி அவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்து போட்டு, உடனே அதன் உயிரை விடும். இந்தக் காட்சி - அதாவது, நடிகர் திலகம் மணியைப் புதைக்கிற வரை, ஒட்டு மொத்த அரங்கமும், தன் சப்த நாடியையும் அடக்கி, ஒரு குண்டூசி விழுந்தால் கூட அந்த சப்தம் கேட்கும் அளவுக்கு, தங்களை மறந்த, மெய் மறந்த நிலையில் இருந்தது. (நான் ஏற்கனவே சொன்னேன், அன்று ஹவுஸ்புல் - கட்டுக்கடங்காத கூட்டம் - ப்ளாக்கில் கொடுத்துப் பார்த்தேன் என்று.) அன்று வந்தவர்களில் குறைந்த பட்சம் எழுபது சதம் ரசிகர்கள் தான் என்றாலும், இந்தக் குறிப்பிட்ட காட்சி முடியும் வரை ஒரு சிறு சப்தம் கூட இல்லை (ஐந்து நிமிடங்களுக்கு மேல் வரும் காட்சி இது.) நான் திரும்பி, என் நண்பரைப் பார்த்தேன் - நானே என் அழுகையைக் கட்டுப் படுத்த முடியாமல் அவரைப் பார்த்தால், அவர் தன் கைக்குட்டையை வைத்து விம்மிக் கொண்டிருக்கிறார்! இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

பின், "ஆறு மனமே ஆறு" பாடல் ஆரம்பிக்க, திரை அரங்கம் மறுபடியும் அமர்க்களப்பட ஆரம்பித்தவுடன் தான், நாங்கள் அனைவரும் (அரங்கமே!) சுய நினைவுக்கு வந்தோம். அப்போதும், நடிகர் திலகத்தின் மிகப் பிரபலமான பாடல்தான் நினைவுக்கு வந்தது "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா!.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
6th April 2011, 06:03 PM
அண்ணன் ஒரு கோயில், தீபம், அந்தமான் காதலி, பரீட்சைக்கு நேரமாச்சு உள்ளிட்ட பல படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்த நடிகை சுஜாதா இன்று காலமானதாக செய்தி வந்துள்ளது. சிவாஜி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமின்றி தானும் ஒரு சிவாஜி ரசிகையாக வாழ்ந்தவர் திருமதி சுஜாதா ஜெயகர் அவர்கள். அன்னாரது மறைவுக்கு நமது அஞ்சலி உரித்தாகட்டும்.

ராகவேந்திரன்

Dear Shri Raghavendiran Sir,

The death of Ms. Sujatha Jayakar is really shocking and a premature one too. She is not that aged. She acted in so many successful movies with NT.

Our heartfelt condolences to the bereaved family and let us all pray to the Almighty that the departed soul may rest in peace.

R. Parthasarathy

RAGHAVENDRA
6th April 2011, 08:52 PM
பல படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்து நம் மனதில் நீங்கா இடம் பெற்ற திருமதி சுஜாதா ஜெயகர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பாடல் அவருக்கு சமர்ப்பிக்கப் படுகிறது.

பாடல் அம்மா ஓர் அம்பிகை போல்
படம் தீர்ப்பு
நடிப்பு - நடிகர் திலகம், சுஜாதா, விஜயகுமார், சரத்பாபு, நித்யா மற்றும் பலர்.


http://www.youtube.com/watch?v=hZBf0ExbAU0

கனத்த நெஞ்சுடன்

Murali Srinivas
6th April 2011, 11:12 PM
70-களின் மத்தியில் நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த பல நடிகைகளும் பல காரணங்களால் திரையுலகிலிருந்து விலகி நிற்க கே.ஆர்.விஜயா மட்டுமே ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு ஒரு மாற்றாக வந்தார் சுஜாதா. வெகு விரைவிலேயே சிவாஜிக்கு ஏற்ற ஜோடி என்பதை நிரூபித்தார். சுஜாதா நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த பல படங்கள் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. ஒரு சில வருடங்களுக்கு முன்பு கூட வருடா வருடம் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஒய்.ஜி.மகேந்திரா நடத்தும் விழாவில் பங்கு பெற்று சிவாஜி விருது பெற்றது நினைவுக்கு வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தின் சில காட்சிகளையும் அது போல நேற்று முன்தினம் திங்கள் அன்று பரீட்சைக்கு நேரமாச்சு படத்தின் சில காட்சிகளையும் டி.வி.யில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. சுஜாதா மறைந்து விட்டார் என்ற செய்தியே ஒரு shock ஆக தோன்றுகிறது. அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

pammalar
6th April 2011, 11:15 PM
நடிகர் திலகத்துடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகை சுஜாதாவின் மறைவுக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கும் மற்றும் அவரது ரசிக-ரசிகைகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனையும், இதயதெய்வத்தையும் வேண்டுகிறோம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

Murali Srinivas
6th April 2011, 11:39 PM
ராகவேந்தர் சார்,

பாடல்களுக்கு நன்றி. குறிப்பாக பலே பாண்டியா மற்றும் அவன் ஒரு சரித்திரம் படப் பாடல்களுக்கு. ஒரு மாவட்ட ஆட்சி தலைவர் நேர்மையாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை அன்றே நமது நடிகர் திலகம் திரையில் வடித்திருக்கிறார். அது போல சிறையில் உள்ளே இருப்பவர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருக்க வெளியே சிலர் தங்களை பணத்தை எண்ணும் காட்சியும் இன்றைக்கு சுமார் 49 வருடங்களுக்கு முன்பே சுட்டிக் காட்டப்பட்டு விட்டது என்பது ஆச்சரியமான விஷயமே.

சுவாமி,

திருவருட்செல்வர் பற்றிய நல்ல தகவலுக்கு நன்றி. தகவல் உறுதியாகும் என நம்புவோம்.

சாரதி,

ஆண்டவன் கட்டளை பற்றிய செய்திகள் உணர்வு பூர்வமாக இருந்தது. நான் உங்களிடம் குறிப்பிட்டது போல் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படங்களில் ஒன்றாக ஆண்டவன் கட்டளையை குறிப்பிடுவேன். அதன் காரணமாகவே படத்திற்கு ஒரு முறை விமர்சனமும், பிறகு சென்ற அக்டோபரில் நடராஜ் தியேட்டரில் பார்த்த போது தோன்றியதையும் மீண்டும் ஒரு பதிவு செய்தேன். ராகவேந்தர் சார் கூட ஒரு முறை வேறொருவரிடம் பேசும் போது என் எழுத்துக்களின் மூலமாக பல பேரை ஆண்டவன் கட்டளை படத்திற்கு ரசிகர்களாக மாற்றி விட்டேன் என சொன்னார். இந்த படம் முதல் வெளியீட்டில் 100 நாட்கள் ஓடவில்லை என்ற வருத்தம் எனக்கு இப்போதும் உண்டு [அதன் காரணங்களை, பாரகனில் புதிய பறவை ரிலீஸ் போன்றவற்றை பற்றி நான் எழுதியதையும் படித்திருப்பீர்கள்].

அண்மையில் மகாலட்சுமி அரங்கில் நண்பகல் காட்சியாக வெளியான போதும் நல்ல வரவேற்பு என்று சுவாமி சொன்னார். இதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சுவாமி ஒரு முறை ஒரு விஷயம் சொன்னார். பி.எஸ்.வீரப்பா தயாரித்த ஆலயமணி மற்றும் ஆண்டவன் கட்டளை படங்களை எடுத்துக் கொண்டால் ஆலயமணிதான் பெரிய வெற்றிப் படம். ஆனால் மறு வெளியீடு என்று பார்த்தால் சென்னையில் ஆண்டவன் கட்டளை வெளியான, வெளியாகிற அளவில் நான்கில் ஒரு பங்கு கூட ஆலயமணி மறு வெளியீடு கண்டதில்லை என்பதை சுட்டிக் காட்டினார். முதல் தடவை கொடுக்க தவறிய ஆதரவை வட்டியும் முதலுமாக சேர்த்துக் கொடுகிறார்கள் மக்கள் என நான் அவருக்கு பதிலளித்தேன். சென்னை என்றல்ல அனைத்து ஊர்களிலுமே ஆண்டவன் கட்டளைக்கு கிடைக்கும் வரவேற்பே தனி.

அன்புடன்

mr_karthik
7th April 2011, 10:47 AM
நடிகர்திலகத்தின் சிறந்த ஜோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த திருமதி. சுஜாதா அவர்களின் மறைவு மிகவும் வருத்தமடைய வைக்கிறது. பத்மினி, தேவிகா, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா வரிசையில் நடிகர்திலகத்தின் மிகப்பொருத்தமான ஜோடி சுஜாதா. வயது 58 தான் என்பது இன்னும் வருத்தமடைய வைக்கும் விஷயம்.

சென்ற மாதம்தான் இருவரும் நடித்த 'வா கண்ணா வா' படத்தை மீண்டும் பார்த்தேன். என்ன ஒரு பொருத்தமான ஜோடியென்று வியந்தேன். நேற்றிரவு இச்செய்தி கேட்டதும் அந்த நினைவுகள்தான் என்னைச்சூழ்ந்தன.

அவர் விட்டுச்சென்றிருக்கும் அவர் நடித்த படங்கள்தான் இனி அவரது நினைவுச்சுவடுகள்.

abkhlabhi
7th April 2011, 03:58 PM
http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-remembering-sujatha/20110407.htm

saradhaa_sn
7th April 2011, 04:40 PM
மறைந்த நடிகை திருமதி சுஜாதா அவர்களுக்கு எனது அஞ்சலிக் கட்டுரை. இங்கே...
http://ennangalezuththukkal.blogspot.com/

Murali Srinivas
8th April 2011, 12:04 AM
சுவாமி,

ராஜாமணியின் மைந்தன் சிவகாமியின் செல்வனாக உருமாறி மீண்டும் விஜயம் செய்தபோது மதுரை மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. சூடு பிடித்திருக்கும் தேர்தல் களம் மட்டுமல்ல, உலகக் கோப்பையின் இறுதி ஆட்டமும் குறுக்கிட்ட போதும் எங்கள் மதுரை வாழ் மக்கள் அசோக்கிற்கும், ஆனந்திற்கும் அள்ளி அளித்த வசூல் வியக்க வைக்கிறது. ஒரு வாரத்தை இன்றோடு நிறைவு செய்யும் போது அரை லட்சத்தை தாண்டிய வசூல் வந்திருக்கும் என நம்புகிறேன்.

சிவகாமியின் செல்வனைப் பற்றி நினைக்கும்போது என் நினைவுகள் பின்னோக்கி பறக்கின்றன. ஆராதனா -இந்தி திரைப்பட வரலாற்றிலேயே ஒரு சாதனையை ஏற்படுத்திய படம். தமிழகத்தில் மீண்டும் இந்திப் படங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பை உருவாக்கி கொடுத்த படம். சென்னை லிட்டில் ஆனந்தில் ஒரு வருடம் ஓடிய படம். அந்தப் படம் தமிழிலே ரீமேக் செய்யப்படுகிறது அதுவும் நடிகர் திலகத்தை வைத்து என்று செய்தி வந்த போது அதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி ரசிகர்களிடையே ஒரு தயக்கம் இருந்து என கூறலாம்.

மாற்று முகாமில் நின்று இரண்டு படங்களை தயாரித்து விட்டு இந்த படத்தின் ரீமேக் உரிமையோடு ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை நமது முகாமிற்கு வந்தார். சி.வி.ஆர் அவர்கள் இயக்குனராக பொறுப்பேற்று படத்தை ஆரம்பித்தார்.

ஆராதனா படத்தை பார்த்தோம் என்றால் கதை அப்படி ஒன்றும் பிரமாதமான கதை என்று சொல்ல முடியாது. படத்தின் பாடல்களும் திரைக் கதையை கொண்டு சென்ற நேர்த்தியுமே படத்தை மக்களிடையே ஒரு பெரிய அளவிற்கு கொண்டு சேர்த்தது என சொல்லலாம். மெல்லிசை மன்னர் பாடல்களில் குறை வைக்க மாட்டார் என்ற போதினும் ஒரிஜினல் பாடல்களுக்கு ஈடு கொடுக்குமா என சந்தேகம் இருந்தது.

1974 ஜனவரி 26 அன்று படம் வெளியானது. நமது படங்களுக்கு ராசியான சனிக்கிழமையும் ஜனவரி 26-ம் ஒன்று சேர்ந்த வந்த நாள். மதுரை ஸ்ரீதேவியில் ரிலீஸ். மதுரையில் முதன் முறையாக ஓபனிங் ஷோ ரசிகர் மன்ற காட்சியாக நடைபெற்றது இந்தப் படத்திற்குதான். அது மட்டுமா அந்த ஓபனிங் ஷோ அதிகாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதும் இந்தப்படத்திற்குதான். அந்தக் காட்சிக்கு நான் சென்றிருந்தேன். சரியான கூட்டம்.

படம் தொடங்கும் வரை ஒரு விதமான apprehension இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த தவிப்பு தேவை இல்லை என புரிந்து விட்டது. மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களுமே ஒரிஜினல் பாடல்களின் எந்த சாயலும் இன்றி அமைந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம். சி.வி.ஆரும் பாடல் காட்சிகளை நல்ல ரசனையோடு படமாக்கியிருந்தார். வாணிஸ்ரீ வசந்த மாளிகைக்கு பிறகு இணைந்த படம். இனியவளே பாடலும் சரி [மாற்று முகாமின் கட்சி உறுப்பினரான புலமை பித்தன் இந்த பாடலை எழுதியிருந்தார். நடிகர் திலகம் என்றைக்கு பாரபட்சம் பார்த்திருக்கிறார்?] மேள தாளம் கேட்கும் காலம் பாடலும் சரி நன்றாக எடுத்திருப்பார் சி.வி.ஆர். அதிலும் மேள தாளம் பாடலில் வாணிஸ்ரீ சேலை தலைப்பை இடுப்பில் சொருகி கொண்டு ஆடும் ஆட்டம் வசீகரமாய் இருக்கும்.

[ஒரிஜினலின் சாயலே இல்லை என சொல்லும் போது இதன் ஒரிஜினலான Gun Gunaare [குன் குனாரே] என்ற பல்லவியின் ட்யுனை மட்டும் எடுத்து அருணோதயத்தில் தனது, "எங்க வீட்டு தங்க தேரில் இந்த மாதம் திருவிழா" என்று பல்லவிக்கு மட்டும் மாமா பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முறையாக எஸ்.பி.பி. பாடியதும் (முத்துராமனுக்காக) அப்போதுதான். பிறகு குலமா குணமா படத்தில் உலகில் இரண்டு கிளிகள்(ஜெய்), பிறகு சுமதி என் சுந்தரி].

எத்தனை அழகு பாடலை சி.வி.ஆர். ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார். இவ்வகை டெக்னிகல் விஷயங்கள் பரவலாக அன்று மக்களை சென்று அடையவில்லை. எதற்கும் ஒரு காலம் உண்டு பாடலில் மன்னரின் அந்த குரல் சொல்ல முடியாத சோகத்தை மனதில் விதைக்கும். அதை போக்கும் விதமாக இறுதி சரணத்தில்

சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ! நாளை

இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ!

என்ற வரிகள் வரும்போது அரங்கமே ஆர்ப்பரிக்கும்!

என் ராஜாவின் ரோஜா முகம் பாடலில் சுசீலா பின்னியிருப்பார். அதிலும்

மன்னன் பெயரை மண்ணை தொட்டு விண்ணை அளக்க

அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க! அள்ளி அணைக்க!

என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார், அப்படியே இனிமையின் உச்சத்திற்கே நம்மை கொண்டு போய் விடும். படத்தின் நடுவில் அடிக்கடி ஒரு ஹம்மிங் வரும். haunting என்று சொல்வார்களே அந்த வகையை சேர்ந்தது. அதிலும் எம்.எஸ்.வி முத்திரை பதித்திருப்பார்.

இந்தி படம் பார்த்தவர்களுக்கு நடுவில் நாயகன் சிறிது நேரம் வரமாட்டார் என்பது தெரியும். ஆனால் தமிழில் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நடிகர் திலகம் திரையில் தோன்றாத அந்த 35 நிமிடங்களை ரசிகர்கள் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் பார்த்தார்கள். வாணிஸ்ரீ தங்கியிருக்கும் வீட்டிற்கு உறவினராக வரும் மனோகர் அடிக்கடி சொல்லும் "எங்க அமெரிக்காவிலே" என்ற வார்த்தைக்கு மட்டுமே எதிர் சவுண்ட் வரும்[அப்படி மக்களை கடுப்பேற்றுவதில் மனோகர் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்].

ஓபனிங் ஷோ முடிந்து காலை 10 மணிக்கு வெளியே வருகிறோம். அடுத்த காட்சிக்கு கடல் போல கூட்டம். எனக்கு தெரிந்து ஸ்ரீதேவியில் மிகப் பெரிய கூட்டம் என்றால் அது முதலில் தர்மம் எங்கே படத்திற்கு, அதன் பிறகு சவாலே சமாளி மற்றும் சிவகாமியின் செல்வன் படங்களுக்குதான். அந்தக் காலத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கள் Farewell விழா நடக்கும் நாளன்று ஒரு திரைப்படத்திற்கு செல்வது வழக்கம். மதுரையில் 1973-74ஆண்டு இறுதி ஆண்டு படித்த பல கல்லூரி மாணவ மாணவியர் தேர்ந்தெடுத்து சென்றது சிவகாமியின் செல்வன் படத்தைதான். இத்தனைக்கும் அதே நேரத்தில் மீனாட்சி திரை அரங்கில் Bobby ஓடிக் கொண்டிருந்தது.

மதுரையில் வெளியான முதல் 31 நாட்களில் நடைபெற்ற 104 காட்சிகளும் தொடர்ந்து ஹவுஸ் புல். இத்தனைக்கும் கெளரவம் சிந்தாமணியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரலில் ராஜபார்ட் ரங்கதுரையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருந்த படம் என்ன காரணத்தினாலோ 69 நாட்களில் மாற்றப்பட்டது. சென்னையில் தேவி பாரடைசில் 76 நாட்களை நிறைவு செய்தபோது வாணி ராணிக்காக மாறிக் கொடுக்க வேண்டிய சூழல். இந்தப் படம் இலங்கையிலும் பெரிய வெற்றி அடைந்து சில உலக புகழ் பெற்ற படங்களை விட அதிக வசூல் பெற்றது.

1974-ல் பார்த்த பிறகு மீண்டும் தியேட்டரில் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன திரையிலும் டி.வி.டியிலும் கூட பார்க்கவில்லை. மதுரையில் தற்போது இப்படத்தின் வெற்றி ஓட்டத்தை குறிப்பிட்டதன் மூலம் பழைய நினைவுகளை இந்த பதிவின் வாயிலாக அசை போட வாய்ப்பளித்த சுவாமிக்கு நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
8th April 2011, 07:48 AM
டியர் முரளி,
சிவகாமியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றிய தங்கள் அனுபவங்கள் மிகவும் சுவையாக விவரித்துள்ளீர்கள். கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களுக்கும் உள்ள அனுபவங்களே. சென்னை நகரில் இப்படத்தைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு சாரார் தவறாக பிரச்சாரம் செய்ததையும் மீறி நன்றாக போனது. மற்றொரு பக்கம் ஹிந்தி ரசிகர்கள் வேண்டுமென்றே நடிகர் திலகத்தைக் குறை கூறியும் மெல்லிசை மன்னரின் பாடல்களைக் குறை கூறியும் பிரச்சாரம் செய்ததும் நடந்தது. இப்படி எதிர்ப்புகளை மீறித் தான் இப்படமும் ஓட வேண்டியிருந்தது. ஆனால் ரசிகர்கள் மனதில் நடிகர் திலகத்தின் தோற்றமும் நடிப்பும் இப்படத்திற்கு தனியிடத்தை நிரந்தரமாக தரத் தான் செய்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ரசிகர்கள் முதலிடம் தருவது, மேளதாளம் பாடலுக்குதான், நான் உட்பட. நீண்ட நாட்களாக இப்படத்தைப் பார்க்க வில்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படம் தற்பொது நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.
இருப்பினும் நம் அனைவருக்காக நம் அபிமான பாடல் இதோ பார்வைக்கு

http://youtu.be/zR19GPhfuE4
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
8th April 2011, 07:49 AM
repeat. deleted.

goldstar
8th April 2011, 11:08 AM
சுவாமி,

ராஜாமணியின் மைந்தன் சிவகாமியின் செல்வனாக உருமாறி மீண்டும் விஜயம் செய்தபோது மதுரை மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. சூடு பிடித்திருக்கும் தேர்தல் களம் மட்டுமல்ல, உலகக் கோப்பையின் இறுதி ஆட்டமும் குறுக்கிட்ட போதும் எங்கள் மதுரை வாழ் மக்கள் அசோக்கிற்கும், ஆனந்திற்கும் அள்ளி அளித்த வசூல் வியக்க வைக்கிறது. ஒரு வாரத்தை இன்றோடு நிறைவு செய்யும் போது அரை லட்சத்தை தாண்டிய வசூல் வந்திருக்கும் என நம்புகிறேன்.

சிவகாமியின் செல்வனைப் பற்றி நினைக்கும்போது என் நினைவுகள் பின்னோக்கி பறக்கின்றன. ஆராதனா -இந்தி திரைப்பட வரலாற்றிலேயே ஒரு சாதனையை ஏற்படுத்திய படம். தமிழகத்தில் மீண்டும் இந்திப் படங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பை உருவாக்கி கொடுத்த படம். சென்னை லிட்டில் ஆனந்தில் ஒரு வருடம் ஓடிய படம். அந்தப் படம் தமிழிலே ரீமேக் செய்யப்படுகிறது அதுவும் நடிகர் திலகத்தை வைத்து என்று செய்தி வந்த போது அதை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி ரசிகர்களிடையே ஒரு தயக்கம் இருந்து என கூறலாம்.

மாற்று முகாமில் நின்று இரண்டு படங்களை தயாரித்து விட்டு இந்த படத்தின் ரீமேக் உரிமையோடு ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை நமது முகாமிற்கு வந்தார். சி.வி.ஆர் அவர்கள் இயக்குனராக பொறுப்பேற்று படத்தை ஆரம்பித்தார்.

ஆராதனா படத்தை பார்த்தோம் என்றால் கதை அப்படி ஒன்றும் பிரமாதமான கதை என்று சொல்ல முடியாது. படத்தின் பாடல்களும் திரைக் கதையை கொண்டு சென்ற நேர்த்தியுமே படத்தை மக்களிடையே ஒரு பெரிய அளவிற்கு கொண்டு சேர்த்தது என சொல்லலாம். மெல்லிசை மன்னர் பாடல்களில் குறை வைக்க மாட்டார் என்ற போதினும் ஒரிஜினல் பாடல்களுக்கு ஈடு கொடுக்குமா என சந்தேகம் இருந்தது.

1974 ஜனவரி 26 அன்று படம் வெளியானது. நமது படங்களுக்கு ராசியான சனிக்கிழமையும் ஜனவரி 26-ம் ஒன்று சேர்ந்த வந்த நாள். மதுரை ஸ்ரீதேவியில் ரிலீஸ். மதுரையில் முதன் முறையாக ஓபனிங் ஷோ ரசிகர் மன்ற காட்சியாக நடைபெற்றது இந்தப் படத்திற்குதான். அது மட்டுமா அந்த ஓபனிங் ஷோ அதிகாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதும் இந்தப்படத்திற்குதான். அந்தக் காட்சிக்கு நான் சென்றிருந்தேன். சரியான கூட்டம்.

படம் தொடங்கும் வரை ஒரு விதமான apprehension இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த தவிப்பு தேவை இல்லை என புரிந்து விட்டது. மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களுமே ஒரிஜினல் பாடல்களின் எந்த சாயலும் இன்றி அமைந்திருந்தது குறிப்பிட வேண்டிய விஷயம். சி.வி.ஆரும் பாடல் காட்சிகளை நல்ல ரசனையோடு படமாக்கியிருந்தார். வாணிஸ்ரீ வசந்த மாளிகைக்கு பிறகு இணைந்த படம். இனியவளே பாடலும் சரி [மாற்று முகாமின் கட்சி உறுப்பினரான புலமை பித்தன் இந்த பாடலை எழுதியிருந்தார். நடிகர் திலகம் என்றைக்கு பாரபட்சம் பார்த்திருக்கிறார்?] மேள தாளம் கேட்கும் காலம் பாடலும் சரி நன்றாக எடுத்திருப்பார் சி.வி.ஆர். அதிலும் மேள தாளம் பாடலில் வாணிஸ்ரீ சேலை தலைப்பை இடுப்பில் சொருகி கொண்டு ஆடும் ஆட்டம் வசீகரமாய் இருக்கும்.

[ஒரிஜினலின் சாயலே இல்லை என சொல்லும் போது இதன் ஒரிஜினலான Gun Gunaare [குன் குனாரே] என்ற பல்லவியின் ட்யுனை மட்டும் எடுத்து அருணோதயத்தில் தனது, "எங்க வீட்டு தங்க தேரில் இந்த மாதம் திருவிழா" என்று பல்லவிக்கு மட்டும் மாமா பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் முதன் முறையாக எஸ்.பி.பி. பாடியதும் (முத்துராமனுக்காக) அப்போதுதான். பிறகு குலமா குணமா படத்தில் உலகில் இரண்டு கிளிகள்(ஜெய்), பிறகு சுமதி என் சுந்தரி].

எத்தனை அழகு பாடலை சி.வி.ஆர். ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார். இவ்வகை டெக்னிகல் விஷயங்கள் பரவலாக அன்று மக்களை சென்று அடையவில்லை. எதற்கும் ஒரு காலம் உண்டு பாடலில் மன்னரின் அந்த குரல் சொல்ல முடியாத சோகத்தை மனதில் விதைக்கும். அதை போக்கும் விதமாக இறுதி சரணத்தில்

சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ! நாளை

இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ!

என்ற வரிகள் வரும்போது அரங்கமே ஆர்ப்பரிக்கும்!

என் ராஜாவின் ரோஜா முகம் பாடலில் சுசீலா பின்னியிருப்பார். அதிலும்

மன்னன் பெயரை மண்ணை தொட்டு விண்ணை அளக்க

அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க! அள்ளி அணைக்க!

என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார், அப்படியே இனிமையின் உச்சத்திற்கே நம்மை கொண்டு போய் விடும். படத்தின் நடுவில் அடிக்கடி ஒரு ஹம்மிங் வரும். haunting என்று சொல்வார்களே அந்த வகையை சேர்ந்தது. அதிலும் எம்.எஸ்.வி முத்திரை பதித்திருப்பார்.

இந்தி படம் பார்த்தவர்களுக்கு நடுவில் நாயகன் சிறிது நேரம் வரமாட்டார் என்பது தெரியும். ஆனால் தமிழில் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நடிகர் திலகம் திரையில் தோன்றாத அந்த 35 நிமிடங்களை ரசிகர்கள் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் பார்த்தார்கள். வாணிஸ்ரீ தங்கியிருக்கும் வீட்டிற்கு உறவினராக வரும் மனோகர் அடிக்கடி சொல்லும் "எங்க அமெரிக்காவிலே" என்ற வார்த்தைக்கு மட்டுமே எதிர் சவுண்ட் வரும்[அப்படி மக்களை கடுப்பேற்றுவதில் மனோகர் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்].

ஓபனிங் ஷோ முடிந்து காலை 10 மணிக்கு வெளியே வருகிறோம். அடுத்த காட்சிக்கு கடல் போல கூட்டம். எனக்கு தெரிந்து ஸ்ரீதேவியில் மிகப் பெரிய கூட்டம் என்றால் அது முதலில் தர்மம் எங்கே படத்திற்கு, அதன் பிறகு சவாலே சமாளி மற்றும் சிவகாமியின் செல்வன் படங்களுக்குதான். அந்தக் காலத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கள் Farewell விழா நடக்கும் நாளன்று ஒரு திரைப்படத்திற்கு செல்வது வழக்கம். மதுரையில் 1973-74ஆண்டு இறுதி ஆண்டு படித்த பல கல்லூரி மாணவ மாணவியர் தேர்ந்தெடுத்து சென்றது சிவகாமியின் செல்வன் படத்தைதான். இத்தனைக்கும் அதே நேரத்தில் மீனாட்சி திரை அரங்கில் Bobby ஓடிக் கொண்டிருந்தது.

மதுரையில் வெளியான முதல் 31 நாட்களில் நடைபெற்ற 104 காட்சிகளும் தொடர்ந்து ஹவுஸ் புல். இத்தனைக்கும் கெளரவம் சிந்தாமணியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரலில் ராஜபார்ட் ரங்கதுரையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு மக்கள் ஆதரவுடன் ஓடிக் கொண்டிருந்த படம் என்ன காரணத்தினாலோ 69 நாட்களில் மாற்றப்பட்டது. சென்னையில் தேவி பாரடைசில் 76 நாட்களை நிறைவு செய்தபோது வாணி ராணிக்காக மாறிக் கொடுக்க வேண்டிய சூழல். இந்தப் படம் இலங்கையிலும் பெரிய வெற்றி அடைந்து சில உலக புகழ் பெற்ற படங்களை விட அதிக வசூல் பெற்றது.

1974-ல் பார்த்த பிறகு மீண்டும் தியேட்டரில் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சின்ன திரையிலும் டி.வி.டியிலும் கூட பார்க்கவில்லை. மதுரையில் தற்போது இப்படத்தின் வெற்றி ஓட்டத்தை குறிப்பிட்டதன் மூலம் பழைய நினைவுகளை இந்த பதிவின் வாயிலாக அசை போட வாய்ப்பளித்த சுவாமிக்கு நன்றி!

அன்புடன்



Thanks Mr. Murali sir. You always come with detailed message. One more information about Sivagamin Selvan, only movie Latha has acted with our NT.

Cheers,
Sathish

saradhaa_sn
8th April 2011, 01:06 PM
டியர் முரளி,

'சிவகாமியின் செல்வன்' பற்றிய மலரும் நினைவுகள் அருமை. நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள மிகவும் ரம்மியமான படங்களில் இதுவும் ஒன்று. நடிகர்திலகம் பின்னியிருப்பார். 'ஆராதனா' ஓடியதற்கான காரணங்கள் அவற்றில் இடம்பெற்ற அருமையான பாடல்களும். அப்படத்தில் ராஜேஷ் கன்னா புதுமுகம் என்பதுமே. ராஜேஷ் ஷர்மிலா தாகூர் இணை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

நீங்கள் சொன்னது போல சிறிய கதை மட்டுமல்ல, எந்தவிதமான பெரிய திருப்பங்களும் இல்லாத கதையும் கூட. கிட்டத்தட்ட சென்னை மற்றும் பெரு நகரங்களில் மட்டுமல்ல இடைப்பட்ட சிறு நகரங்களில் கூட ஆராதனா நன்றாக ஓடியிருந்த வேளையில், படத்தின் கதை என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் பாடல்களே அப்படத்தை தூக்கி நிறுத்தியிருந்ததால், தமிழில் மெல்லிசை மன்னர் எப்படி செய்திருக்கிறார் என்பதையும், இளமைத்துடிப்புள்ள (குறிப்பாக பையன் ரோல்) நடிகர்திலகம் எப்படி செய்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தனர்.

ஆனால் மெல்லிசை மன்னர் யார்?. அசகாய சூரராச்சே. 'உன்னுடைய ஒரிஜினல் ட்யூன்களை நீயே வைத்துக்கொள். கதைக்கும் காட்சிக்கும் ஏற்றவாறு நான் போடுகிறேன் பார் ட்யூன்' என்று, ஒவ்வொரு பாடலுக்கும் நிகராக போட்டிருந்தார் பாருங்கள் மெட்டு. ரசிகர்கள் அதிசயித்துப்போயினர். என்னடா இது, இப்படத்தில் மெல்லிசை மன்னர் இன்னொரு 'வேதா'வாக மாறுவார் என்று பார்த்தால், நான் நான்தான் என்று காட்டிவிட்டாரே என்று ஆச்சரியத்தில் மூழ்கினர்.

'Mere sapnom ki rani' பாடலுக்கும் 'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று' பாடலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கிறததா...

'Kora kagaz ka ye man mera' பாடலுக்கும் 'இனியவளே என்று பாடி வந்தேன்' ட்யூனுக்கும் எந்த வகையிலாவது சம்மந்தப்படுத்த முடியுமா. இதே போல

'Gungugna rahe' பாடலின் இடத்தில் 'மேள தாளம் கேட்கும் காலம்' பாடலையும்,
'Chanda he thum' பாடலின் இடத்தில் 'என் ராஜாவின் ரோஜா முகம்' பாடலையும்

எல்லோரும் எதிர்பார்த்த
'Roppu thera masthana' படல் காட்சியில் 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது பாடலையும் ஒரிஜினல் இந்தி சாயல் கொஞ்சமும் இல்லாமல் தன் வழியில் ('என் வழி தனி வழி') மெட்டமைத்து அசத்தியிருந்தார்.

அதுபோலவே, எஸ்.டி.பர்மன் பாடியிருந்த சிச்சுவேஷன் பாடலைவிட, தன் குரலில் 'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே' பாடலை ஒருபடி மேலே தூக்கி நிறுத்தியிருந்தார் மெல்லிசை மன்னர். சுசீலாவின் தனிப்பாடலான 'என் ராஜாவின்' பாடலும், இந்திப்பாடலைவிட அருமை.

நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை, இளமை இயக்குனரோடு சேர்ந்து அட்டகாசம் பண்ணியிருப்பார். இரண்டு ரோல்களுக்கும் நல்ல வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். (ஆரதனாவில் மீசை மட்டுமே வித்தியாசம்).

சென்னை லிட்டில் ஆனந்த் திரையிடப்பட்ட ‘ஆராதனா’, அங்கே 50 வாரங்களைக்கடந்த பின்னர், நகரின் பல்வேறு தியேட்டர்களில் தொடர்ச்சியாக மாறி மாறி திரையிடப்பட்டு 99 வாரங்கள் கழிந்த பின்னர் மீண்டும் 100-வது வாரமாக அதே லிட்டில் ஆனந்தில் திரையிடப்பட்டபோது மீண்டும் கூட்டம் அலை மோதியது. (தியேட்டர் அமைந்திருந்த அண்ணாசாலைப்பகுதி கல்லூரி வளம் செறிந்த இடம்). இதே காலகட்டத்தில் இதன் அருகேயிருந்த எமரால்ட் தியேட்டரில் 'அந்தாஸ்' இந்திப்படம் 30 வாரங்கள் சக்கை போடுபோட்டது.

அன்றைய காலகட்டத்தில் தமிழ்ப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடி சில மாதங்கள் கழித்துத்தான் இலங்கையில் திரையிடப்படும். 'சிவகாமியின் செல்வன்' தமிழ்நாட்டில் ஓடி முடிந்து எடுக்கப்பட்ட பின்னர்தான் இலங்கையில் திரையிடப்பட்டது. எந்த ஒரு படத்தையும் அற்புதமாக அறிமுகம் செய்வதில் இலங்கை வானொலிக்கு நிகர் எதுவும் கிடையாது. அந்த வகையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா இப்படம் பற்றிய சிறப்பம்சங்களைத் தொகுத்து வழங்கிய அழகைக்கேட்ட தமிழ்நாட்டினர், சிவகாமியின் செல்வனைப்பார்க்காமல் விட்டதற்காக வருந்தி, பார்க்கத்தேடியபோது it was too late. ஏனென்றால் அப்போதெல்லாம் படங்களை தியேட்டரில் பார்ப்பதல்லாமல் no other choice.

உங்களுக்கே தெரியும். நான் 1967 - 77 படங்களைப்பற்றிப் பேசுவதென்றால் என்னையே மறந்து விடுவேன். அந்த வகையில் சிவகாமியின் செல்வனைப்பற்றி இன்னும் நிறையப்பேச வேண்டும். பேசுவோம்.....

முரளியண்ணாவுக்கு மீண்டும் நன்றிகள்....

abkhlabhi
8th April 2011, 01:22 PM
Tiruvarutchelvar Ad in Today's Dina Thanthi


http://abkhlabhi.blogspot.com/2011_04_01_archive.html

parthasarathy
8th April 2011, 02:26 PM
அன்புள்ள திரு. முரளி அவர்களே,

நடிகர் திலகத்தின் "சிவகாமியின் செல்வன்" படத்தைப் பற்றிய மிகவும் சுவையான செய்திகளைப் பகிர்ந்து எல்லோரையும் அந்த நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள்.

நடிகர் திலகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக பல படங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, புண்ணிய பூமி, போன்ற படங்களையும், மேலும் சில படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆராதனா சிவகாமியின் செல்வனாக ஆகப் போகிறது என்னும்போதே, நாங்கள் "நடிகர் திலகம் எதற்கு இது போன்ற கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்கிறார்" என்று புலம்ப ஆரம்பித்தோம். அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நீங்கள் குறிப்பிட்ட அந்த 35 நிமிடங்கள். தந்தை பாத்திரம் இறந்து, பின்னர், மகனாக வரும் நடிகர் திலகம் வரும் வரை. இந்தியிலும், இதே போல் வரும் என்பதால், எப்படி நடிகர் திலகம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், இவ்வளவு பெரிய இடைவெளி வர ஒத்துக் கொள்ள முடியும் என்பதால் எங்களுக்குள் ஒரு apprehension (நீங்கள் சொன்னது போல்).

ஆனாலும், அவ்வளவு பெரிய இடைவெளிக்குப் பின்னர், மகனாக நடிப்பவர் அறிமுகக் காட்சியில், அந்தக் குறையை முழுவதுமாக மறக்கடிக்கிறார்ப் போல் நடிகர் திலகம் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வேகமாகவும், ஸ்டைலாகவும் நடந்து வரும் காட்சி. ரொம்ப நேரமாக நடிகர் திலகத்தைத் திரையில் பார்க்க முடியாத வேதனையில் அனைவரும் இருக்கும் வேளையில், அவருடைய இந்த அறிமுகக் காட்சி ஒட்டு மொத்த ரசிகர்களையும் மறக்கடிக்க வைத்தது - அரங்கமும் அதிர்ந்தது, ஆனந்தப் பேரலையில்! இந்தப் பாத்திரத்தில், அவருடைய சிகை அலங்காரமும், மீசையும் ரொம்பவே நன்றாக இருக்கும். அதிலும், பைலட்டுகள் எப்படி அந்த ஹெல்மெட்டை இடுப்பில் வைத்துக் கொண்டு நடப்பார்களோ அதை அப்படியே கனகச்சிதமாகச் செய்து, தொய்ந்து போய்க் கொண்டிருக்கும் படத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்திருப்பார். அதே ஜீவனுடன், படமும் முடியும். சாரதா மேடம் குறிப்பிட்டதுபோல், தமிழில், வழக்கம் போல், நடிகர் திலகம் இரு வேறு பாத்திரங்களுக்கு அற்புதமாக வித்தியாசம் காட்டியிருந்தார்.

தந்தை பாத்திரத்தில் வருபவரின் சிகை அலங்காரமாகட்டும், உடை அலங்காரமாகட்டும், கொள்ளை அழகாக இருக்கும். எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பாடல் திரு. ராகவேந்தர் அவர்கள் குறிப்பிட்ட அந்த "மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக" பாடல்தான். இந்தப் படமும் அவன் தான் மனிதனைப் போல், முதல் வெளியீட்டுக்குப் பின் இன்னமும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவன்தான் மனிதனை சமீபத்தில் குறுந்தகடு வடிவில் பார்த்து இன்புற்றேன். ஒட்டுமொத்த தர அடிப்படையில், அவன்தான் மனிதனை சிவகாமியின் செல்வனுடன் compare செய்யவே முடியாது என்பது வேறு விஷயம்.

இசையமைப்பைப் பொறுத்தவரை, மெல்லிசை மன்னர் ஒவ்வொரு பாடலையும் அசலை ஓட்டிப் போடாமல், சொந்த மெட்டைப் போட்டு பிரமாதப்படுத்தியிருந்தார். இதே போல் பல படங்களைச் சொல்லலாம் - ஹிந்தி பிரம்மச்சாரி தமிழில் எங்க மாமாவானபோது, ஹிந்தியை விடத் தமிழில் அற்புதமான பாடல்கள் - ஒரு பாடலைக் கூடக் காப்பியடிக்காமல் கொடுத்திருந்தார்.

"மேள தாளம் கேட்கும் காலம்" - இனிய நினைவுகளைக் கிளறிய தங்களுக்கு நன்றி.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
9th April 2011, 07:50 AM
சென்னை சாந்தி திரையரங்கில் வரும் 14.04.2011 முதல் திரையிடப் படவுள்ள திருவருட் செல்வர் திரைப்படத்தின் நிழற்படங்கள் திரையரங்கின் முகப்பில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. இதோ அவை நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/tvcstillShanti.jpg
அன்புடன்

RAGHAVENDRA
10th April 2011, 01:30 PM
நான் விரும்பிய காட்சி - 1

எப்படிப் பாடல் காட்சிகளில் நடிகர் திலகம் பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்டு வந்துள்ளாரோ, அதே போன்று தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு காட்சியில் தன்னுடைய சிறப்பான முத்திரையை பதித்து விடுவார். அப்படிப் பட்ட காட்சிகளை நாம் இங்கே அலசலாம். அனைவரும் தம்முடைய அபிமான காட்சியினைப் பற்றி இங்கே தம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இதோ துவக்கமாக கோடீஸ்வரன் படத்திலிருந்து ஒரு காட்சி

http://www.youtube.com/watch?v=KPN_XlUinVI
அன்புடன்

RAGHAVENDRA
10th April 2011, 01:33 PM
மிகவும் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் செல்லக் கூடிய படம் கோடீஸ்வரன். தங்கவேலுவின் மகள் பத்மினி, மகன் ஸ்ரீராம். தங்கவேலு மிகவும் கோபக் காரர், மட்டுமல்ல, பணத்திலேயே குறியாக இருப்பவர். அவருடைய எதிர்ப்பை மீறி ஸ்ரீராம் காதல் மணம் புரிந்து கொண்டு விடுகிறார். இருந்தாலும் அவர் மனைவியிடமும் வரதட்சணை வாங்கி விடுவார் தங்கவேலு. சிவாஜி பத்மினி காதலை அறிந்தால் எதிர்ப்புக் காட்டுவார் என்று, காதலர்கள் இருவரும் நாடகம் ஆடுகின்றனர். அது தொடர்பான காட்சியே இது.
அன்புடன்

RAGHAVENDRA
11th April 2011, 09:51 AM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 5

தன்னுடைய இறுதி மூச்சு வரையிலும் தமிழகத்தைப்பற்றியும் தமிழக மக்களைப் பற்றியும் மட்டுமே கவலைப் பட்டவர் பெருந்தலைவர். அவருடைய மிக முக்கியமான லட்சியம், தமிழகம் கல்வியில் முதலிடம் பெற வேண்டும் என்பதே ஆகும். குழந்தைகள் கல்வி கற்காமல் இருப்பதற்கு அவர்களின் வறுமையும் பட்டினிக் கொடுமையும் காரணம் என்பதை உணர்ந்து ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார். அவருடைய திட்டங்களில் எந்த வித உள் நோக்கங்களோ அல்லது பிரதி பலனை எதிர்பார்க்கும் எண்ணமோ இருந்ததில்லை. அவருடைய உண்மைத் தொண்டனான நடிகர் திலகம் தானும் அதே போல் வாழ்ந்து காட்டினார். தம்முடைய படங்களில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பெருந்தலைவர் பற்றி சொல்லாமல் இருந்ததில்லை. அதுகூட வெறும் புகழுரைகள் மட்டுமே இடம் பெறாமல் அவருடைய கொள்கைகளைத் தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களுக்கு விளக்கினார்.
அப்படி ஒரு கொள்கைப் பாடல் தான் ஊருக்கு ஒரு பிள்ளை படத்தில் இடம் பெற்ற புரியாத வெள்ளாடு எனத் துவங்கும் பாடலாகும். இப் பாடல் முழுவதும் கல்வியின் மேன்மையை எடுத்துக் கூறுவதாகும். இன்றைக்கும் இந்த நிலைமை நீடிப்பது நமக்கு நிச்சயம் வருத்தத்திற்குரிய விஷயம். என்றைக்கு மக்கள் தாமாக முன் வந்து குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதற்கு முன்னுரிமை தருகிறார்களோ, என்றைக்கு குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப் படுகிறதோ, அன்றைக்கு பெருந்தலைவரின் லட்சியம் நிறைவேறியதற்கு சான்றாகும்.


http://www.youtube.com/watch?v=qDRk7ntjuhs

இனிமையான இப்பாடலை இயற்றியவர் கவிஞர் முத்துலிங்கம். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் குரல்கள் டி.எம்.சௌந்தர் ராஜன், பி.சுசீலா. நடிப்பு நடிகர் திலகம், புன்னகை அரசி.

இதோ பாடல் வரிகள்.

பெண்- புரியாத வெள்ளாடு
தெரியாமே ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம் - புரியாத வெள்ளாடு
சரியான பாதையில் ஒழுங்காக போகவே
புத்திமதி நாம் சொல்லி பார்ப்போம்
சரியான பாதையில் ஒழுங்காக போகவே
புத்திமதி நாம் சொல்லி பார்ப்போம்

ஆண் – பணிவுக்கு பூமியில் மதிப்பு
நல்ல பண்பாடு வாழ்வுக்கு சிறப்பு
பணிவுக்கு பூமியில் மதிப்பு
நல்ல பண்பாடு வாழ்வுக்கு சிறப்பு
உழைப்பால் உயர வேணும் கைகள்
உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கும் கலைகள்

இது புரியாத வெள்ளாடு ...

பெண் – உயிருக்கு தேவையெல்லாம் வயித்துக்கு சோறு
அறிவுக்கு தேவையெல்லாம் புத்தகம் பாரு
படிப்புக்கு நிகரான செல்வங்கள் ஏது
பாமரனை உலகம் என்றும் மதிக்காது கேளு

இது புரியாத வெள்ளாடு ...

ஆண் – இரவுக்கு தீபமென்று நிலவுக்கு பேரு
இதயத்தின் தீபமென்று கல்வியைக் கூறு
துணிவுக்கு கொடியேற்று துன்பத்தை வெல்லு
சோம்பல்களை நீக்கி விட்டு புகழ் வாங்க செல்லு

இது புரியாத வெள்ளாடு

பெண் – நம்பிக்கை நெஞ்சில் வைத்தால் சாதிக்கலாகும்
நல்லவர் பாதை சென்றால் வெற்றிகள் சேரும்

ஆண் – திறமைக்கு வரவேற்பு என்றைக்கும் உண்டு
தேன் கமழும் பள்ளிகள் தான் திருக்கோயில் இன்று
தேன் கமழும் பள்ளிகள் தான் திருக்கோயில் இன்று

இது புரியாத வெள்ளாடு தெரியாமெ ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்

இருவரும் – சரியான பாதையில் ஒழுங்காகப் போகவே
புத்திமதி நாம் சொல்லி பார்ப்போம்
இது புரியாத வெள்ளாடு தெரியாமெ ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்


இதில் பாமரனை உலகம் என்றும் மதிக்காது என்ற வரியில் பாமரன் என்பதற்கு கல்வி யறிவு இல்லாதவன் என்று பொருள் கொள்க. அரசியல்வாதிகள் கூறும் பாமரன் பொருள் இல்லை.
அன்புடன்

KCSHEKAR
11th April 2011, 11:20 AM
மறைந்த நடிகை திருமதி சுஜாதா அவர்களுக்கு எனது அஞ்சலிக் கட்டுரை. இங்கே...
http://ennangalezuththukkal.blogspot.com/

Very nice Tribute Article about Actress Sujatha.

Thanks

parthasarathy
11th April 2011, 06:11 PM
திரு. ராகவேந்தர் அவர்களே,

ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனையும் மேலும் உற்சாகப் படுத்தும் வண்ணம், ஒரு புதிய concept -ஐ தேர்வு செய்து, அதன் மூலம் ஏராளமான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுத்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி.

நான் விரும்பிய காட்சி (1):-

எத்தனையோ படங்களை இங்கு பட்டியலிட முடியும். முதலில், "பழனி" படத்தில் இருந்து ஒரு காட்சி. இந்தப் படமும் நான் பார்த்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும், இந்த ஒரு காட்சி பசுமையாக நினைவில். இத்தனைக்கும் இந்தப் படத்தை அதற்கப்புறம் இன்னும் பார்க்கவில்லை. அதுதான் நடிகர் திலகம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவிப் படரும் தன்மை.

படத்தில், நடிகர் திலகத்தின் சகோதரி மகளாகவும், அதே நேரத்தில், அவரது தம்பி எஸ்.எஸ்.ஆரை மணக்கப் போகிறவராகவும் வரும் தேவிகாவைப் பற்றி அவதூறாக சில வார்த்தைகள் அவரது காதில் விழ, அதிர்ச்சியில், அவரது வீட்டிற்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒரு பெஞ்சில் வந்து நடிகர் திலகம் உட்காருவார். உடனே, தேவிகா ஒரு குழந்தை போல் ஓடி வந்து "மாமா" என்று சொல்லி நிற்பார். தேவிகாவைப் பற்றிய தவறான தகவல்களுடன் இருக்கும் நடிகர் திலகம், குழந்தை போல் ஓடி வந்து தன் முன்னே நிற்கும் தேவிகாவைப் பார்த்து காட்டும் முக பாவம் "இவளையா இப்படி சொல்கிறார்கள்?" - வார்த்தைகளே இல்லாமல் வெறும் முக பாவனையினால்! அதுவும், தேவிகா "மாமா" என்று வந்து நின்ற அடுத்த நொடி!! இந்தக் காட்சிக்கு திரை அரங்கத்தில் அவருக்குக் கிடைத்த கைத்தட்டல் இருக்கிறதே!!!

இந்த ஒரே ஒரு விஷயம் போதும் நடிகர் திலகம் யார் என்று சொல்ல! உலகத்தில் வேறு எந்த நடிகனும், அவனுடைய நடிப்புக்கு - தன்னுடைய ரியாக்ஷனுக்கு அவர் வாங்கிய அங்கீகாரம் - அதாவது உடனடி அங்கீகாரம் - மக்களிடத்தில் இருந்து - இது வரை யாரும் அவர் வாங்கியதில் ஒரு பத்து சதம் கூட வாங்கவில்லை - இனியும் வாங்கமுடியும் என்று தோன்றவில்லை. இங்கு நான் அங்கீகாரம் என்று சொல்வது கைத்தட்டல் - ஏனென்றால் ஆர்ப்பரிப்பு, விசிலடிப்பது, கத்துவது, நடனமாடுவது இதெல்லாம், ஒரு ரசிகன் அவனுக்குப் பிடித்த கலைஞனுக்கு அன்பின் மிகுதியால் தருவது. கைத்தட்டல் ஒன்றுதான் தன்னை மறந்து தருவது. அது, ஒரு ரசிகனிடமிருந்து மட்டுமல்ல; எல்லோரிடமிருந்தும் வருவது. இந்த ஒரு விஷயம் மட்டும், பெருமளவில், நடிகர் திலகத்திற்கு மட்டும்தான் கிடைத்தது, இன்னும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் காட்சியை இங்கு பதிவிடும் வசதி எனக்கில்லை. கூடிய சீக்கிரம் அதற்கும் முயல்கிறேன்.

தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
12th April 2011, 10:46 AM
டியர் பார்த்தசாரதி,
தங்களுடைய வரவேற்பு பதிவுக்கு என் உளமார்ந்த நன்றி. சிவாஜி ரசிகர்களின் எண்ண ஓட்டங்கள் ஒரே மாதிரி தான் இருக்கும் என்பதற்கு தாங்கள் பழநி படத்தில் குறிப்பிட்டுள்ள காட்சியே சாட்சி. எனக்கும் அந்த காட்சிதான் முதலில் ஈர்த்தது. இது போல் தங்களிடமிருந்து மேலும், மற்ற நண்பர்களிடமிருந்தும் பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
12th April 2011, 11:01 AM
தேர்தல் 2011
ஜனநாயகத்தின் மிகமுக்கியமான கட்டம் தேர்தல். தம்மை ஆளப்போகிறவர் யாரென்று தீர்மானிக்கும் சக்தியை மக்கள் பயன் படுத்தும் நாள் வாக்குப் பதிவு நாள். நம்மிடையே இன்று நடிகர் திலகம் இல்லை. எனவே ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று நிச்சயம் யோசித்திருப்பார்கள். அப்படி ஒரு முடிவெடுக்க முடியாத ரசிகர்களுக்கு கீழ்க்காணும் கருத்துக்கள் உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

1. தம்மிடம் ஒரு மாற்று சக்தி இருக்கிறது என்ற எண்ணத்தில் 1960-70களின் துவக்கத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிப் பல அவதூறுகளையும் இழிசொற்களையும் பரப்பியவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நடிகர் திலகம் ராசியில்லாதவர், அரசியலுக்கு லாயக்கில்லாதவர், கஞ்சன் என்று பல வகையான அவதூறுகளைப் பரப்பியவர்களை பழைய சிவாஜி ரசிகர்கள் இன்றும் மறக்க வில்லை.
2. அதே மாற்று சக்தி தம்மை விட்டு விலகிய போது, அதே உதடுகள் சந்தர்ப்பவாதிகளாக, நடிகர் திலகமே மேல் என்று நாடகமாடியது.
3. அந்த இயக்கமும் நடிகர் திலகம் சார்ந்த இயக்கத்திலேயே இருந்த சிலரும் சேர்ந்து கொண்டு அவருக்கு வரவேண்டிய சிறந்த நடிகர் பட்டத்தை கிடைக்க விடாமல் செய்ததையும் நம்மால் மறக்க முடியாது.
4. காலங்காலமாக அவருடைய உழைப்பை உறிஞ்சி விட்டு, கடைசியில் சிலருடைய தவறான ஆலோசனையின் பேரில் நடிகர் திலகம் தான் சார்ந்த தேசிய இயக்கத்தை விட்டு பிரிய காரணமாக இருந்த அந்த இயக்கத்தை நம்மால் மன்னிக்க இயலாது.
5. நடிகர் திலகம் ஒரு தேசிய தலைவர், தேசப் பற்றை பல தலைமுறையிடம் வளர்த்தவர், தம் படங்களின் மூலம் இன்றும் வளர்த்துக் கொண்டிருப்பவர். அவருடைய படத்தை தம்முடைய மாநில தலைமை அலுவலகத்தில் வைப்பது அந்த இயக்கத்தின் கடமை. ஆனால் அதையே பெரிய தரும காரியம் செய்வது போல் வைத்து விட்டு பின்னர் அகற்றிவிடும் இயக்கத்தையும் நம்மால் மன்னிக்க முடியாது.
6. அரசியல் நாகரீகம் பற்றி வாய்கிழிய பேசுபவர்கள் அவர் தேர்தலில் நின்ற பொழுது அவரை தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தது.
7. கடந்த காலங்களில் தாங்கள் அவருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயசித்தமாக ஒரே ஒரு காரியம் செய்து அதையே பெரிய சாதனையாக சொல்லிக்கொள்வது.

இவர்களையெல்லாம் நாம் சரியாக அடையாளம் கண்டு கொண்டால், சிவாஜி ரசிகர்கள் யாருக்கு தங்கள் வாக்கினை அளிப்பது, என்பதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன். இது பற்றி மற்ற ரசிகர்களும் தம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். தங்களுடைய கருத்துக்களை சொல்லும் போது வழிமுறைகளை மட்டும் கூறி விட்டு தனிப்பட்ட மனிதர்களையோ அல்லது இயக்கத்தையோ குறிப்பிடாமல் இருத்தல் நலம்.

அன்புடன்

joe
12th April 2011, 11:47 AM
இவர்களையெல்லாம் நாம் சரியாக அடையாளம் கண்டு கொண்டால், சிவாஜி ரசிகர்கள் யாருக்கு தங்கள் வாக்கினை அளிப்பது, என்பதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன்.

கண்டிப்பாக எனக்கு குழப்பம் இருக்கிறது ராகவேந்திரா சார் . நீங்கள் யாரை வேண்டாமென்று சொல்கிறீர்கள் என எனக்கு புரிகிறது ..கருணாநிதியையும் , திமுக-வையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என சொல்வது புரிகிறது ..ஆனால் யாருக்கு வாக்கை அளிப்பது என்பதை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் .. அதிமுக-வுக்கும் நடிகர் திலகத்தை மிகவும் போற்றி மதித்த ஜெயலலிதாவுக்கும் வாக்களிக்க வேண்டுமா ? வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்.

goldstar
12th April 2011, 12:19 PM
கண்டிப்பாக எனக்கு குழப்பம் இருக்கிறது ராகவேந்திரா சார் . நீங்கள் யாரை வேண்டாமென்று சொல்கிறீர்கள் என எனக்கு புரிகிறது ..கருணாநிதியையும் , திமுக-வையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என சொல்வது புரிகிறது ..ஆனால் யாருக்கு வாக்கை அளிப்பது என்பதை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் .. அதிமுக-வுக்கும் நடிகர் திலகத்தை மிகவும் போற்றி மதித்த ஜெயலலிதாவுக்கும் வாக்களிக்க வேண்டுமா ? வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்.


I agree with Joe.

Joe, can you vote from Singapore or you are visiting your hown town to Tamil Nadu to cast your vote? or you are Singaporean?

Cheers,
Sathish

joe
12th April 2011, 12:44 PM
Goldstar,
I am still Indian national .There is no option to vote from singapore ..unfortunately I am not able to come home to vote this time.

thellavaari
12th April 2011, 01:38 PM
Quote Originally Posted by RAGHAVENDRA View Post
இவர்களையெல்லாம் நாம் சரியாக அடையாளம் கண்டு கொண்டால், சிவாஜி ரசிகர்கள் யாருக்கு தங்கள் வாக்கினை அளிப்பது, என்பதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன்.
கண்டிப்பாக எனக்கு குழப்பம் இருக்கிறது ராகவேந்திரா சார் . நீங்கள் யாரை வேண்டாமென்று சொல்கிறீர்கள் என எனக்கு புரிகிறது ..கருணாநிதியையும் , திமுக-வையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என சொல்வது புரிகிறது ..ஆனால் யாருக்கு வாக்கை அளிப்பது என்பதை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம் .. அதிமுக-வுக்கும் நடிகர் திலகத்தை மிகவும் போற்றி மதித்த ஜெயலலிதாவுக்கும் வாக்களிக்க வேண்டுமா ? வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். .

நடிகர் திலகத்தின் அரசியல் வெற்றி / தோல்வி எல்லாமே, அவருடைய ரசிகர்களின் மேற்கண்ட 'அரசியல் தெளிவு' தான் ஒரே காரணம்..

RAGHAVENDRA
12th April 2011, 02:28 PM
அன்பு நண்பர்களே,
என்னுடைய வாக்கை நான் யாருக்கு அளிக்கலாம் என்பதோடு என்னுடைய உரிமை முடிந்து விடுகிறது. மற்றவர்கள் யாருக்கு அளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு உரிமையோ தகுதியோ எனக்கில்லை. எனவே தான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை நான் இங்கு பகிர்ந்து கொண்டேன். இந்த சில தகவல்கள் கூட பல புதிய தலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் வழங்கப் பட்டன. அதற்காக ஒரு தலைப் பட்சமாக முடிவெடுக்க வேண்டும் என்பது குறிக்கோளல்ல. பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய வாக்கினை முடிவு செய்யும் பொழுது ஒரு சிவாஜி ரசிகன் என்ற முறையில் என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்பியதன் விளைவே இப்பதிவு. இன்றைய கால கட்டத்தில் நாம் பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்த பின்னரே நம்முடைய வாக்கினை யாருக்கு அளிக்கலாம் என்ற நிலை உள்ளது. எனவே என்னுடைய பதிவின் நோக்கம் இன்னாருக்கு நீங்கள் வாக்களியுங்கள் என்று சொல்வதல்ல. ஆனால் நினைவூட்டலுக்கான கருத்துப் பகிர்வே.

இதில் குழப்புதற்கும் இடமில்லை, அதனால் தெளிவு என்பதற்கும் இடமில்லை.

அன்புடன்

joe
12th April 2011, 02:40 PM
அன்பு நண்பர்களே,
என்னுடைய வாக்கை நான் யாருக்கு அளிக்கலாம் என்பதோடு என்னுடைய உரிமை முடிந்து விடுகிறது. மற்றவர்கள் யாருக்கு அளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு உரிமையோ தகுதியோ எனக்கில்லை. எனவே தான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை நான் இங்கு பகிர்ந்து கொண்டேன். இந்த சில தகவல்கள் கூட பல புதிய தலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் வழங்கப் பட்டன. அதற்காக ஒரு தலைப் பட்சமாக முடிவெடுக்க வேண்டும் என்பது குறிக்கோளல்ல. பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய வாக்கினை முடிவு செய்யும் பொழுது ஒரு சிவாஜி ரசிகன் என்ற முறையில் என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்பியதன் விளைவே இப்பதிவு. இன்றைய கால கட்டத்தில் நாம் பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்த பின்னரே நம்முடைய வாக்கினை யாருக்கு அளிக்கலாம் என்ற நிலை உள்ளது. எனவே என்னுடைய பதிவின் நோக்கம் இன்னாருக்கு நீங்கள் வாக்களியுங்கள் என்று சொல்வதல்ல. ஆனால் நினைவூட்டலுக்கான கருத்துப் பகிர்வே.

இதில் குழப்புதற்கும் இடமில்லை, அதனால் தெளிவு என்பதற்கும் இடமில்லை.

அன்புடன்

மன்னிக்கவும் ராகவேந்திரா சார்!

எதற்கு இந்த ஒளிவு மறைவு ?


இவர்களையெல்லாம் நாம் சரியாக அடையாளம் கண்டு கொண்டால், சிவாஜி ரசிகர்கள் யாருக்கு தங்கள் வாக்கினை அளிப்பது, என்பதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன்.

நீங்கள் அடையாளம் காண சொல்லியிருந்தவர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன் ..அவர்கள் திமுக -வும் காங்கிரசும் .

ஆனாலும் சிவாஜி ரசிகர்கள் தங்களின் வாக்கினை யாருக்கு அளிப்பதில் குழப்பம் இருக்காது என சொன்னீர்கள் ..இல்லை ..எனக்கு குழப்பமாக இருக்கிறது ..தயவு செய்து குழப்பாமல் நேரடியாக சொல்லுங்கள் ..நான் சிவாஜி ரசிகன் என்ற முறையில் அதிமுக-வுக்கு ஓட்டு போட வேண்டுமா ? உங்கள் கருத்தை எதிர் நோக்குகிறேன்.

rangan_08
12th April 2011, 05:29 PM
சென்னை சாந்தி திரையரங்கில் வரும் 14.04.2011 முதல் திரையிடப் படவுள்ள திருவருட் செல்வர் திரைப்படத்தின் நிழற்படங்கள் திரையரங்கின் முகப்பில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. இதோ அவை நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/tvcstillShanti.jpg
அன்புடன்

Good news Raghavendra sir..........earlier, Murali sir called me and shared this news.

Dear friends, I'm glad to be here after a long time........I missed all the fun......sharing my views, learning from others and of course occasionally having kutty kutty fights


And Murali sir, you may be right......Nataraj theatre stopped screening films. Not sure if it is for renovation or for winding up.

abkhlabhi
13th April 2011, 06:08 PM
Wish you everyone a happy, healthy and prosperous tamil new year

Murali Srinivas
13th April 2011, 11:15 PM
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றிய எனது நினைவலைகளை பாராட்டிய ராகவேந்தர் சார், சாரதா, பார்த்தாவிற்கு நன்றி.

மார்ச் மாதம் மயிலையில் அறுபத்தி மூவர் உலா.

ஏப்ரல் மாதம் சாந்தியில் திருவருட்செல்வர் திருவிழா.

ஈசனை வரவேற்க சிவனடியார்கள் கூடுவது போல்

கணேசனை வரவேற்க சிவாஜி அடியார்கள் கூடுகிறார்கள்.

நாளை முதல் சாந்தியில்

அன்புடன்

பாலா சென்னை வருகிறீர்களா?

Plum any idea of making it on Sunday?

parthasarathy
14th April 2011, 09:56 AM
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


சிவகாமியின் செல்வன் படத்தைப் பற்றிய எனது நினைவலைகளை பாராட்டிய ராகவேந்தர் சார், சாரதா, பார்த்தாவிற்கு நன்றி.

மார்ச் மாதம் மயிலையில் அறுபத்தி மூவர் உலா.

ஏப்ரல் மாதம் சாந்தியில் திருவருட்செல்வர் திருவிழா.

ஈசனை வரவேற்க சிவனடியார்கள் கூடுவது போல்

கணேசனை வரவேற்க சிவாஜி அடியார்கள் கூடுகிறார்கள்.

நாளை முதல் சாந்தியில்

அன்புடன்

பாலா சென்னை வருகிறீர்களா?

Plum any idea of making it on Sunday?

அன்புள்ள திரு முரளி அவர்களுக்கு,

தங்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.

அனைத்து ரசிக நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நடிகர் திலகத்தின் ஒப்பற்ற காவியமாம் "திருவருட்செல்வர்"-ஐ சாந்தியில் தரிசிக்க வரும் ஞாயிறு மாலைக் காட்சியில் கூடுவோம். அவர்தம் பெருமையைப் போற்றிப் பாடுவோம்!

அன்புடன்,

பார்த்தசாரதி

abkhlabhi
14th April 2011, 11:35 AM
Last week I was in chennai for 2 days to attend family function.
Infact, I booked train tickets last week itself, but due to unexpected happened in our office, I cancelled the tickets.
I don't think I will be in chennai on 17th. Today I booked Tatkal on 16th trains. Though I got confirmed return ticket, from B'lore it is waiting list. I will try to get it confirmed and HOPE I will at Shanthi on 16th (Sat) EXCLUSIVELY for திருவருட்செல்வர் திருவிழா.

RAGHAVENDRA
14th April 2011, 09:07 PM
அன்பு நண்பர்களுக்கு,
நடிகர் திலகம் அவர்களுடைய 60வது படமான குறவஞ்சி திரைப்படத்தினை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. ஆனால் அவரும் கலைஞரும் இணைந்த படங்களிலேயே கலைஞரின் உரையாடலில் மிகச் சிறந்த படம் என நான் எண்ணும் படம் குறவஞ்சி. அதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் கலைஞர் உரையில் வெளிவந்த படங்கள் ஏராளம். ஆனால் குறவஞ்சி திரைப்படத்தின் உரையாடல்கள் பராசக்தி யைவிட அதிக தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை. குறிப்பாக அரசவையில் சாதியை அடிப்படையாக வைத்து வரும் உரையாடல்கள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. அந்தக் காட்சியில் தான் நடிகர் திலகம் உரையாடும் போது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மொழியை உயிருடன் உச்சரிப்பார். அதைத்தான் செம்மொழி பாடலுக்காக கலைஞர் பயன் படுத்தினார். அது மட்டுமன்றி ரா.கிருஷ்ணமூர்த்தி எழுதி சி.எஸ்.ஜெயராமன் குரலில் அவருடைய வாழ்க்கையில் சிறந்த பாடலும் இப்படத்தில் தான் இடம் பெற்றது. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே என்ற பாடல். அது மட்டுமின்றி செங்கையில் வண்டு கலீர் கலீர் என்ற பாடல், என்னாளும் தண்ணியிலே என்ற பாடல், காதல் கடல் கரையோரமே என்ற பாடல் என அனைத்து பாடல்களும் தெவிட்டாத தேனமுது, கருத்துக்களின் பொக்கிஷம்.
இது மட்டுமா, பின்னாளில் மீனவ நண்பன் என்று சொல்லிக் கொள்ள பல படங்கள் வந்தாலும் மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படத்திலேயே அலசி விட்டார் கலைஞர். என்னாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு என்கிற பாடல் முழுதும் மீனவர் வாழ்க்கையினைப் பற்றியதாகும்.
நடிகர் திலகத்துடன் சாவித்திரி, மைனாவதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியான நாள் 04.03.1960. மேகலா பிக்சர்ஸ் தயாரித்து ஏ.காசிலிங்கம் இயற்றிய இப்படத்தைப் பற்றி இப்போது எழுதக் காரணம் ...

ஆம்.. தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இப்படம் தற்பொழுது நெடுந்தகடு வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். குறிப்பாக கலைஞர் உரையினை விரும்புவோர் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய படம்.
இதோ அந்த நெடுந்தகட்டின் முகப்பு மற்றும் பின் பக்கங்களின் நிழற்படங்கள்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KuravanchiFA.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KuravanchiRA.jpg

அன்புடன்

J.Radhakrishnan
14th April 2011, 09:50 PM
டியர் முரளி சார்,

நிச்சயம் "திருவருட்செல்வர்"-ஐ சாந்தியில் தரிசிக்க ஞாயிறு மாலைக் காட்சியில் கூடுவோம்.

Murali Srinivas
14th April 2011, 11:58 PM
பார்த்தா, ராதா

நிச்சயமாக ஞாயிறு மாலை சந்திப்போம். வேறு சில நண்பர்களும் வருகிறோம் என்று சொல்லியிருகிறார்கள்.

பாலா,

நீங்கள் சனிக்கிழமை வருவது பற்றி சந்தோஷம். சனிக்கிழமை மாலை காட்சிக்கு ஒய்.ஜி. மகேந்திரா மற்றும் அவருடன் சேர்ந்து திரையுலக கலைஞர்கள் சுமார் 20 பேருக்கு மேல் வருவதாக இருக்கிறார்கள்.

பொது மக்களின் வரவேற்பு இன்றே தொடங்கி விட்டது. ரசிகர்ளை விட இன்றைய தினம் பொது மக்களே அதிகம் வந்திருந்தனர். சென்ற வருடம் சாந்தியில் புதிய பறவை பெற்ற வசூலை இந்த ஒரு வருட காலத்தில் வேறு எந்த புதிய படமும் பெறவில்லை என்ற தகவலை அறிய நேர்ந்தது. திருவருட்செல்வரும் அது போல ஒரு சாதனை புரிய வாழ்த்துவோம்.

அன்புடன்

rangan_08
15th April 2011, 01:06 PM
Raghavendra sir,

Nice intro about Kuravanji.

My f-i-l watched Thiruvarutchelvar y'day eve show along with Mr Swami & others. I went to the theatre to have a glimpse of the festive look...Murali sir also came there.

RAGHAVENDRA
15th April 2011, 04:17 PM
அன்பு நண்பர் மோகன்,
நேற்று முற்பகல் முதல் மாலை சுமார் 4 மணி வரையிலும் நான் சாந்தி திரையரங்கில் தான் இருந்தேன். அங்கு நம் இணைய தளம் சார்பாக ஒரு சிறிய எளிய பதாகையினை வைத்து விட்டு, அவசர வேலை நிமித்தமாக உடனே வீடு திரும்பி விட்டேன். உங்களையெல்லாம் சந்திக்க முடியாதது வருத்தம் தான். என்றாலும் நாம் அனைவரும் ஞாயிறு மாலை சந்திப்போம் என்ற ஆவல் எனக்கு ஆறுதல். தாங்களும் பார்த்திருப்பீர்கள். நீங்கள் திரும்புகின்ற திசையெல்லாம் நடிகர் திலகத்தின் திருவுருவம் தான் காட்சி யளிக்கும் என்பது போல் சகோதரி கிரிஜா அவர்கள் அட்டகாசமாக அலங்கரித்துள்ளார். அவற்றையெல்லாம் என்னுடைய கீழ்க்காணும் வலைப்பதிவில் காணலாம்.
http://ntfilmschennai2011.blogspot.com/
அங்கே வைக்கப் பட்டிருக்கும் நம் இணைய தள பதாகை
http://2.bp.blogspot.com/-b-bOo9ECOl8/TagRbjhdvoI/AAAAAAAAAZk/YP0j6MS1Aac/s400/tvcshantidisplay08.jpg

அன்புடன்

RAGHAVENDRA
15th April 2011, 08:50 PM
நான் விரும்பிய காட்சி - 4
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியங்களில் முக்கியமானது பட்டு பிலிம்ஸ் நீலவானம். ஒவ்வொரு காட்சியிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக தேவிகா இவருடைய காதலியைப் பற்றி விசாரிக்கப் போக அவளுடைய கேள்வியை தவறாகப் புரிந்து கொண்டு அவளுடைய உடல்நலமின்மையினைப் பற்றிய, அவளுக்குத் தெரியாத விஷயத்தை இவர் சொல்லிவிட தொடரும் உணர்ச்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. எத்தனை ஆண்டுகளாயினும் மறக்க முடியாத இதுவும் நான் விரும்பிய காட்சியில் ஒன்றாகும். இதோ தாங்களும் அதைக் காண, உணர -

http://www.youtube.com/watch?v=STCBN60rIzc
தாங்களும் இக்காட்சியினைப் பற்றிய தங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிரந்து கொள்ளலாம்.
அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
16th April 2011, 03:05 PM
அனைவருக்கும் கனிவான கர வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

pammalar
16th April 2011, 03:37 PM
டியர் முரளி சார்,

தங்களுடைய "சிவகாமியின் செல்வன்" சிறப்புப் பதிவு, தங்களை மட்டுமல்ல, அனைவரையுமே 1974 குடியரசுத் திருநாளுக்கு அழைத்துச் சென்று விட்டது. நாங்களும் உங்களோடு [உங்களது தயவில்] மதுரை ஸ்ரீதேவியில் அதிகாலை 7 மணி ஓபனிங் ஷோ [ரசிகர் காட்சி] பார்த்து விட்டோம். அழைத்துச் சென்ற உங்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள் !

டியர் பார்த்தசாரதி சார்,

நடிப்புலகப் பேரொளியின் "ஞான ஒளி" காவியத்தினுடைய அலசல் பதிவுகள் ஒவ்வொன்றுமே அருமை, அற்புதம், அபாரம் ! இக்காவியத்தை மீண்டும் ஒரு முறை தரிசித்த திருப்தியை உண்டாக்கி விட்டீர்கள். எளிமையும், நேர்த்தியும் கலந்த தங்களின் எழுத்துநடை பிரமாதம். பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

சகோதரி சாரதா,

நடிகை சுஜாதாவின் மறைவிற்கு தாங்கள் வடித்துள்ள அஞ்சலிக் கட்டுரையை படித்து முடித்தவுடன் எனது கண்கள் குளமாயின !

"சிவகாமியின் செல்வன்" குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் 1970களில் சென்னையில் சாதனை படைத்த ஹிந்திப்படங்களின் புள்ளி விவரங்கள் அடங்கிய சிறப்புப் பதிவு சூப்பரோ சூப்பர். சென்னையில் நடைபெற்ற "ஆராதனா"வின் பொன்விழாவின் [50வது வார விழாவின்] போது, ராஜேஷ் கன்னாவுக்கு பொன்விழாக் கேடயத்தை வழங்கியவர் நமது நடிகர் திலகம்.

டியர் ராகவேந்திரன் சார்,

சாந்தி அரங்க "திருவருட்செல்வர்" புகைப்படக் களஞ்சியம் அருமையிலும் அருமை. அதனை உலகப் பார்வையாளர்களுக்கு உன்னத விருந்தாக்கிய உங்களுக்கு நன்றி ! தங்களது பதாகை தனித்தன்மையுடன் ஜொலிஜொலிக்கிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th April 2011, 04:42 PM
டியர் பாலா சார்,

"திருவருட்செல்வர்" திரைக்காவியத்தைக் காண்பதற்காக பெங்களூரூவிலிருந்து சென்னை வரும் தங்களது சீரிய செயலும், சிவாஜி பக்தியும் பாராட்டுக்குரியது, போற்றுதற்குரியது !

டியர் முரளி சார், ராகவேந்திரன் சார், பார்த்தசாரதி சார், ரங்கன் சார், ஜேயார் சார்,

"திருவருட்செல்வர்"-ன் ஞாயிறு மாலைக் காட்சியின் அருட்பெருஞ்"ஜோதி"யில் கலந்து ஒன்று கூடி சங்கமிப்போம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th April 2011, 05:36 PM
மதுரை 'சென்ட்ரல்' : ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா"
[21.1.2011 - 27.1.2011]

23.1.2011 ஞாயிறு மாலை அலங்காரங்கள்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/scan0059a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/scan0059b.jpg

இப்புகைப்படங்களை எடுத்த மதுரை அரசமரம் செவாலியே டாக்டர் சிவாஜி குரூப்ஸ் குழுவைச் சேர்ந்த ரசிக நல்லிதயம்-புகைப்படக் கலைஞர்-நண்பர் திரு.சாந்தாராம் அவர்களுக்கும், புகைப்படங்களை அனுப்பி வைத்த இக்குழுவின் நிர்வாகி அருமை நண்பர் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கும் கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th April 2011, 06:41 PM
மதுரை 'சென்ட்ரல்'

சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்"

1.4.2011 வெள்ளி முதல் 7.4.2011 வியாழன் வரையிலான ஒரு வார காலத்தில், தினசரி 4 காட்சிகளில், அள்ளி அளித்த சூப்பர்ஹிட் மொத்த வசூல் ரூ 53,412/- [ரூபாய் ஐம்பத்து மூன்றாயிரத்து நானூற்று பன்னிரெண்டு].

3.4.2011 ஞாயிறு மாலை கண்கொள்ளாக் காட்சிகள்

சிங்கத்தமிழனுக்கு சீரிய அலங்காரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/scan0006a.jpg


காவியம் கண்டு களித்த நிறைவுடன் வெளியே வரும் ஜனத்திரளின் ஒரு பகுதி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/scan0004a1.jpg


பார்த்து ரசித்த மக்கள் கூட்டத்தின் இன்னொரு பகுதி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/scan0005a1.jpg

இப்புகைப்படங்களை படம்பிடித்த மதுரை அரசமரம் செவாலியே டாக்டர் சிவாஜி குரூப்ஸ் குழுவைச் சேர்ந்த ரசிக நல்லிதயம்-புகைப்படக் கலைஞர்-அன்பு நண்பர் திரு.சாந்தாராம் அவர்களுக்கும், புகைப்படங்களை அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல் வசூல் விவரங்களையும் வழங்கிய இக்குழுவின் நிர்வாகி அருமை நண்பர் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கும் குதூகலமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th April 2011, 09:12 PM
கலையுலக மகானின் "திருவருட்செல்வர்"

14.4.2011 [வியாழன்] தமிழ்ப் புத்தாண்டு முதல்

சென்னை 'சாந்தி' சினிமாஸ் : தினசரி 4 காட்சிகள்

விஷுவல் விருந்து

அரங்க நுழைவாயிலின் மேல்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Thiru1.jpg


அரங்க நுழைவாயிலில் வரவேற்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3549.jpg


14.4.2011 மேட்னி கண்டு களித்த மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3552.jpg


14.4.2011 மேட்னி கண்டு களித்த மக்கள் வெள்ளத்தின் இன்னொரு பகுதி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3553.jpg

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
17th April 2011, 11:55 PM
இன்று மாலை சாந்தியில் திருவருட்செல்வர் ரசிகர்களின் சிறப்புக் காட்சியாக மிக சிறப்பாக நடைப்பெற்றது. நமது ஹப் நண்பர்கள் புடை சூழ படத்தை ரசித்து பார்த்தோம். இந்த மாதிரியான ஒரு பக்திப் படத்தை கூட அளப்பரையோடு பார்ப்பதற்கு நமது ரசிகர்களால் மட்டுமே முடியும். மன்னவன் வில்லவன் பாத்திரத்தை ரசிகர்கள் ஆர்ப்பாட்டதோடு ரசித்தது பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் அந்த அப்பர் பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு இருக்கிறதே, அது அபாரம். நான் ஆண்டவன் கட்டளை ஆறு மனமே ஆறு பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி எழுதும் போது ரசிகர்களின் ரசனையை பற்றி எழுதினேன். அதையும் விஞ்சி விட்டது நாவுக்கரசருக்கு கிடைத்த கைதட்டல். அப்பர் கதாப்பாத்திரத்தின் அறிமுக காட்சி முதல் நாகர் முடி மேலிருக்கும் பாடல் காட்சி வரை நடந்த ஆர்ப்பரிப்பு அளவிட முடியாதது.

மேலும் விவரங்களுக்கு நண்பர்கள் வந்து அப்டேட் கொடுப்பார்கள். படத்தைப் பற்றிய சிந்தனைகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

RAGHAVENDRA
18th April 2011, 11:45 AM
நேற்று 17.04.2011 ஞாயிறு மாலைக் காட்சியில் நம்முடைய மய்யம் நண்பர்கள் குழுவாக அமர்ந்து திருநாவுக்கரசரின் தரிசனம் கண்டோம். பாலா சார் தம்முடைய பல அலுவல்களுக்கிடையிலும் சனி யன்று மாலைக் காட்சிக்கு வந்திருந்தார். அன்று மாலையும் சிறப்பாக இருந்தது. ஒய்.ஜி.மகேந்திரா, நம் மய்ய உறுப்பினர் மோகன் ராமன் சார், கவிதாலயா கிருஷ்ணன் உட்பட பலர் வந்திருந்தனர். அனைவரையும் விட திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்கள் தம் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் காட்சிக்கு வந்திருந்தது சிறப்பாகும். மகேந்திரா அவர்களின் சகோதரர், திருமதி மதுவந்தி அருண் என்று அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் யாவரும் வந்திருந்தனர்.
வழக்கம் போல், ஞாயிறு மாலை அளப்பரை அட்டகாசம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 67ல் நான் சாந்தியில் பார்த்ததற்கும் நேற்று பார்த்ததற்கும் எவ்வளவு வித்தியாசம்... அப்போது விசில் ஒலி கூட வராது. கைதட்டல் தான் விண்ணை அதிர வைக்கும். ஆனால் 44 ஆண்டுகளில் ரசிகர்களின் உற்சாகமும் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே போவது மலைக்க வைக்கிறது, வியக்க வைக்கிறது. அருகாமையில் உள்ள ஒரு உணவு நிறுவன ஊழியர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் வாய் விட்டு சொல்லியும் விட்டனர். சிவாஜிக்கு இன்னும் ரசிகர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்பதே அவர்களின் ஆவல்..
நம்முடைய முரளிசாரின் கைங்கரியத்தில் அவருடைய புகைப்படக் கருவியின் உபயத்தில் இதோ சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
நன்றி முரளி சார், உடனே அனுப்பி வைத்ததற்கு.
http://4.bp.blogspot.com/-3crcg7SNOog/TavR0Yfl3zI/AAAAAAAAAak/Nrhglz1ItNQ/s1600/TMSTVC01.jpg
http://1.bp.blogspot.com/-6xqrhMNMTUY/TavR0AHLEeI/AAAAAAAAAac/UdTgWNNE2B4/s1600/TMSTVC02.jpg
http://1.bp.blogspot.com/-ij2i2CXqSvo/TavR0F-HiYI/AAAAAAAAAaU/8s0caBPbb10/s1600/TMSTVC03.jpg
http://1.bp.blogspot.com/-DDfNTF4guhI/TavRgRO-XFI/AAAAAAAAAaM/ZS1RgqppCao/s1600/TMSTVC04.jpg
[IMG]http://2.bp.blogspot.com/-
அன்புடன்

RAGHAVENDRA
18th April 2011, 11:47 AM
மேலும் சில படங்கள்
http://2.bp.blogspot.com/-ZDAtTPuYnf4/TavRgEOwZ4I/AAAAAAAAAaE/S6nzW5vAoyA/s1600/TMSTVC05.jpg
http://3.bp.blogspot.com/-_-AN1ORWFbE/TavRfktX8hI/AAAAAAAAAZ0/LdgUIB6g5VY/s1600/TMSTVC07.jpg

mr_karthik
18th April 2011, 11:55 AM
Murali sir,

Your nerration about 'Sivakamiyin Selvan' is simply superb. It takes me to 26th January 1974 to Devi Paradise theatre. Additional informations by Ragavendhar sir, Saradha and Parthasarathy are are also worthful. NT-CVR-MSV combination was wonderful in SS. Another memorable thing is, the title remembers the great 'Perundhalaivar'.

Parthasarathy sir,

Excellent and brief nerration about the movie 'Gnana Oli' another milestone in NT's career. As everyone said here, it brings the movie scene by scene. Verygood effort.

Raghavendhar sir &
Pammalar sir,

Thanks a lot for the great photo session of 'Thiruvarutchelvar' at Shanti, and 'Sivakamiyin Selvan' at Madurai Central. Eager to know more about the sunday gala at Shanti.

abkhlabhi
18th April 2011, 03:18 PM
திருவருட்செல்வர் நடிகர் 12 மணி , மற்றும் மாலை காட்சிக்கும் வந்திருந்தேன். மாலையில், திரு. ராகவேந்திரன், சிவாஜி சமுக சேவை தலைவர் சந்திரசேகரன், திரு.எஸ்.ராமஜெயம், சந்ததிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொபைல்போனில் சில் காட்சிகளை பதிவு செய்தேன். ஆடியோ, வீடியோ சுமாராகத்தான் இருக்கும். திருவருட்செல்வர் கடலில் இருந்து எடுத்த சில துளிகள் இங்கே :

http://abkhlabhi.blogspot.com/2011_04_01_archive.html

parthasarathy
18th April 2011, 04:43 PM
திருவருட்செல்வரைக் கண்டு களித்த அனுபவம்

ஏற்கனவே, திரு. ராகவேந்தர், திரு. முரளி மற்றும் திரு. பம்மலார் அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஹப் நண்பர்கள் புடை சூழ வில்லவரையும், சேக்கிழார் பெருமானையும், திருக்குறிப்புத் தொண்டரையும், சுந்தரரையும், சிகரம் தொட்ட அப்பரையும் சாந்தியில் நேற்று மாலை கண்டு, களித்து, புளகாங்கிதப்பட்டு தரிசித்தோம்.

சென்ற வருடம் சாந்தியில், புதிய பறவையைக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது என்றாலும், நேற்றைய அனுபவம் அதை விடப் பல மடங்கு சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், புதிய பறவையை நான் தனியாகத்தான் பார்த்தேன். நேற்றோ, நண்பர்கள் புடை சூழப் பார்த்தேன். அதுவும், ஒத்த கருத்துகளை உடைய, நடிகர் திலகத்தின் ரசிகர்களுடன் என்னும்போது, மகிழ்ச்சிக்கு அளவேது?

நடிகர் திலகத்தை திரை அரங்கில் மக்கள் வெள்ளத்தோடு ரசிப்பதென்பது, ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் கிடைத்த பெரும்பேறு. ரொம்ப நாட்களுக்கப்புறம், இப்பேறு மறுபடியும் கிடைக்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்?

நேற்றைய காட்சியைப் பொறுத்தவரை, பெருவாரியான ரசிகர்கள் நடிகர் திலகம் என்ற அந்த மாபெரும் கலைஞனைத் திரையில் மறுபடியும் காணும் வாய்ப்பாகத் தான் எண்ணினார்கள். அவரைப் பெரிய திரையில், மக்களோடு மக்களாகப் பார்க்க ஆரம்பித்த போதே, நிலைமை எல்லை கடந்தால், அவரது அற்புத நடிப்புக்கு முன் என்னாவது? இந்த நிலையைத் தான் நேற்று கண்டோம். இப்படி ஒரு உயிர்த்துடிப்பான நடிப்பையும், அதற்கேற்ற ரசிப்புத்தன்மையையும் திரை அரங்கில் கண்டு எத்தனை நாளாகி விட்டது? மிகச் சில நாட்களுக்கு முன்தான் இந்தப் படத்தை வீட்டில், சின்னத்திரையில் பார்த்தாலும், நேற்று பெரிய திரையில் பார்த்த போது, பல இடங்களில், இது நாள் வரை காணாத, புதிய புதிய சின்னச் சின்ன அற்புதமான nuvances -ஐ தரிசிக்க முடிந்தது. சொல்ல முடியாது; நாளை மறுபடியும் பார்த்தால், இன்னும் பல புதிய கோணங்கள் தென்பட்டாலும் படும்! அது தான் நடிகர் திலகம் என்கின்ற அட்சய பாத்திரத்தின் மகிமை!!

நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் திலகத்தைக் கண்டபோது, நான் மறுபடியும் 1980௦-க்குச் சென்றேன். வாய்ப்பளித்த ஹப் நண்பர்களுக்கு, குறிப்பாக, திரு. முரளி அவர்களுக்கு கோடானுகோடி நன்றி - அந்த அளவிற்கு அவரைக் கடந்த சில நாட்களில் தொந்தரவு செய்திருக்கிறேன். (ஏனென்றால், அவர் மூலமாகத்தான் ஏனைய நண்பர்கள் நேற்று சாந்தியில் அறிமுகமானார்கள்.).

மீண்டும் மீண்டும், இது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாது, பொதுவாகவும், நாம் அனைவரும் சந்தித்து, சாதாரண மாலைகளை, இனிய மாலைகளாக்க விழையும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

J.Radhakrishnan
18th April 2011, 10:01 PM
நேற்று 17.04.2011 ஞாயிறு மாலைக் காட்சியில் நம்முடைய hub நண்பர்கள் திரு ராகவேந்தர், திரு முரளி, திரு பம்மலார், திரு பார்த்தசாரதி, திரு ஜி.கிருஷ்ணா மற்றும் நண்பர்களோடு குழுவாக அமர்ந்து திருநாவுக்கரசரின் தரிசனம் கண்டோம். முரளி சார் கூறியது போல் ஒரு பக்திப் படத்தை கூட அளப்பரையோடு பார்ப்பதற்கு நமது ரசிகர்களால் மட்டுமே முடியும். குறிப்பாக படத்திற்கு வந்த 25 வயதிற்கு உட்பட்ட இன்றைய இளைய தலைமுறையை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

rajeshkrv
19th April 2011, 12:27 AM
i landed upon these videos

it's a telugu movie Rajaguruvu (1954) and Nt had acted in this.
i didnt see this film in the filmography too. Hero K.R.Ramaswamy & Nt acted as villain it seems


http://youtu.be/5OOxsuwpNLA

RAGHAVENDRA
19th April 2011, 01:29 AM
Dear Rajesh
Thank you for the video. It is the dubbed version of NT's film THULI VISHAM.. Directed by A.S.A. Samy and music by the legendary choreographer, K.N. Dhandayuthapani Pillai. K.R. Ramaswamy was the hero and NT villain. Besides this, Pennin Perumai, was also the film for NT as a villain, wherein Gemini Ganesh was Hero.
Raghavendran.

rajeshkrv
19th April 2011, 02:36 AM
Raghavendran,

thanks for the info. probably a bilingual because Krishnakumari's song and video are in telugu(lip sync).

yes i'm aware of pennin perumai .Thanks anyways..

joe
19th April 2011, 08:36 AM
கணேசன் மறையலாம்; சிவாஜி மறையவில்லை (http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=266)

groucho070
19th April 2011, 09:32 AM
Thanks for link, Joe. Good piece, looking forward for the part 2.

KCSHEKAR
19th April 2011, 05:00 PM
Thanks Mr.Joe for the article link

PARAMASHIVAN
19th April 2011, 07:50 PM
My Fav Shivaji Sir song no (1)
http://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0&feature=player_detailpage

PARAMASHIVAN
19th April 2011, 07:54 PM
My Fav Shivaji Sir no (2)
http://www.youtube.com/watch?v=XqXNKPZp9JE&feature=player_detailpage

PARAMASHIVAN
19th April 2011, 07:55 PM
My Fav Shivaji sir song (3)
http://www.youtube.com/watch?v=5-y-J9Pabq8&feature=player_detailpage

Murali Srinivas
20th April 2011, 12:58 AM
இங்கே நண்பர்கள் பலரும் குறிப்பிட்டது போல நேற்று திருவருட்செல்வர் பார்க்கும் போது பல நுணுக்கமான விஷயங்களை கூட நடிகர் திலகம் எப்படி தன் உடல் மொழியில் கொண்டு வந்திருக்கிறார் என்பது இப்போதும் ஆச்சரியம் தரும் காட்சியாகவே இருக்கிறது. அது அவர் அறிமுகமாகும் படத்தின் முதல் காட்சியிலிருந்து படத்தின் இறுதிக் காட்சி வரை நம்மால் உணர முடியும் என்பது தனி சிறப்பு.

ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ப மாறும் அவர் உடல் மொழி. மன்னன் வில்லவன் அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் போது காட்டும் arrogance, நாட்டிய மங்கை கலையரசியிடம் தனிமையில் உரையாடும் போது மோகம், தாபம்,காமம் என உணர்வுகள் கொப்பளிக்கும் பாவங்கள், voice modulation, காமத்தால் அறிவிழக்க இருந்தோமே என்ற கோப உணர்வும், இறை உணர்வை தேடும் வேட்கையுமாக அந்தபுரத்திலிருந்து வெளியேறும் அந்த நடை, அதே வேகத்தில் அதே உடல் மொழியில் மீண்டும் அரண்மனையில் நுழையும் வேகம் [இரண்டு காட்சிகளின் படப்பிடிப்பிற்கும் நடுவே எத்தனை நாள் இடைவெளியோ? இருப்பினும் அதே உடல் மொழி], அரசவையில் நடக்கும் அந்த ராஜ நடை, சிம்மாசனத்தின் படிகளில் கையில் செங்கோலுடன் நிற்கும் அந்த கம்பீரம், புலவரின் சிறு வயது பேத்தி வெகு எளிதாக தன் கேள்விகளுக்கு பதிலளித்தவுடன் தன் அறியாமையை நினைத்து வரும் அந்த வெட்க உணர்வு மன்னவன் வில்லவன் நடிகர் திலகத்தின் முத்திரை தாங்கிய வேடம்.

அடுத்த காட்சியில் அதே நடிகர் திலகம் சேக்கிழார் பெருமானாக தோன்றும் போதுதான் எத்துனை வேறுபாடு? தமிழாய்ந்த புலவர் ஆனால் சிவனடியார்களான நாயன்மார்களின் வரலாற்றை திருமறையாக தொகுத்து பாடும் தகுதி தனக்கு இருக்கிறதா என ஒரு தாழ்வு மனப்பான்மை, புலவர் பாட தயங்க, ஏன் என்று மன்னவன் கேட்க, பயம் என்ற வார்த்தையை அவர் இரண்டு முறை மென்று முழுங்கி மூன்றாம் முறை முகமெங்கும் வேர்வை துளிகள் பெருக வார்த்தையே வராமல் வாய் அசைப்பது, அவரின் நிலையை கண்ட அநாபாய சோழ மன்னன் சேடி பெண்ணிடமிருந்து கவரி வாங்கி தான் வீச, பதறி எழுந்து தடுப்பது, ஐந்து நிமிடமே வந்தாலும் சேக்கிழார் மனங்களை வென்று விடுவார்.

அடுத்து திருக்குறிப்பு தொண்டர். சலவை தொழிலை நம்பி பிழைப்பு நடத்தும் ஆனால் தினசரி ஒரு சிவனடியாரின் துணியை இலவசமாக துவைத்துக் கொடுத்த பிறகே மற்றவர்களின் துணியை துவைக்கும் அந்த இரக்கமுள்ள தொண்டன், ஒரு நாள் எந்த சிவனடியாரையும் காணாமல் தன் கொள்கை தோற்று போய் விடுமோ என்று கலங்கி நிற்கும் நேரத்தில் எங்கிருந்தோ இறைவனை போற்றி பாடும் பாடல் கேட்க, தான் காத்து நிற்கும் ஒரு சிவனடியாராக இவர் இருப்பாரோ என முகத்தில், உடலில் அந்த தேடுதலை வெளிப்படுத்திக் கொண்டே ஒரு நடை நடப்பாரே, ஆஹா! [வேறு ஒருவர் வையசைக்கும் பாடல் காட்சி, ஆனாலும் அதில் கூட தன் நடிப்பால் கைதட்டல் வாங்க கூடிய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே!] தன்னை சோதிக்க இறைவனே நேரில் வந்திருகின்றான் என தெரிந்ததும் வரும் அந்த புல்லரிப்பு!

[இந்த பாடலின் சில வரிகள் நடிகர் திலகத்தின் பொது வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் என்பதால் அதிலும் குறிப்பாக

தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே

என்ற வரிகளின் போது தியேட்டரில் கைதட்டல். அதே போல் ஆற்று வெள்ளம் காத்திருக்கு பாடலின் போது பின்னணியில் காய போடப்பட்டிருக்கும் துணிகள் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூவர்ண கொடியை நினைவுபடுத்தும் வண்ணம் திரையில் தோன்ற நடிகர் திலகம் அதன் முன் நின்று சத்தியத்தின் முத்திரை இது என்ற வரியை பாடும் போது 1967-ல் மதுரை நியூசினிமா அரங்கமே அதிர்ந்தது நினைவுக்கு வந்தது].

அடுத்தவர் சுந்தரர். பெயருக்கு ஏற்றவாறு அழகான நடிகர் திலகம், இறைவனே தன்னுடன் நேரில் வந்து விளையாடுகிறான் என்பது புரியாமல் காட்டும் அந்த கோபம், சாட்சியங்கள் எல்லாம் தனக்கு எதிராக இருக்க எதுவும் செய்ய முடியாத இயலாமையை மறைக்க சீறும் அந்த முகம், விரும்பிய பெண்ணை மணக்க முடியாமல் அடிமையாய் பித்தனின் பின்னால் நடக்கும் அந்த தளர்ந்த நடை, திருவெண்ணெய்நல்லூர் கோவிலின் உள்ளே சென்ற பிறகு உண்மை தெரிய வர மெய் சிலிர்த்து கை கூப்பி சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே என பாடல் புனையும் அந்த உணர்வு, உடலின் எந்த பாகமும் அசையாமல் நின்று பாடுவது, சரணத்தில் திருவெண்ணெய்நல்லூர் உறையும் என்ற வரிகளின் போது தனக்கே உரித்தான வலது கையை மட்டும் லேசாக மேலே உயர்த்தும் அந்த நேர்த்தி! பிரமாதம்.

Last but not the least -அப்பர் என்ற திருநாவுக்கரசர். பெரும்பாலான மக்களை பொறுத்தவரை இந்த ரோல்தான் சிகரம். இரண்டு மணி நேரங்களுக்கு முன் மன்னவன் வில்லவனாக வேடமிட்டவர்தான் இப்போது இந்த 80 வயது பெருமகனாக வேடம் மாறியிருக்கிறார் என்று சொன்னால் நம்புவது பலருக்கு கடினமாக இருக்கும்.

திருஞானசம்பந்தரின் பல்லக்கு தூக்கிகளில் ஒருவனாக அறிமுகமாகும் அந்த நிமிடத்திலிருந்து அவரின் ஆதிக்கம் துவங்கி விடும். கடலின் அருகாமையில் அமைந்திருக்கும் விடுதியில் தங்கியிருக்கும் போது கடல் மாதாவை தரிசிக்க சம்பந்தர் அழைக்க சின்ன படியேறி ஓடமுடியாமல் ஓடும் அந்த காட்சி, பூட்டியிருக்கும் கோவில் மணி கதவு திறக்க பாடும் அந்த முகம், சம்பந்தரின் பாடலில் மீண்டும் கதவு தாழிட்டுக் கொள்ள மயங்கி விழும் பெரியவர், காரணம் கேட்கும் சம்பந்தரிடம் சிறிய வயதில் அவர் மேல் இறைவன் வைத்திருக்கும் கருணையை பற்றி குறிப்பிடும் அந்த நெகிழ்ச்சி, தன்னுடைய இறை பயணத்தில் திங்களூர் செல்லும் நாவுக்கரசர், அங்கே பல தர்ம காரியங்களும் தன் பெயரால் நடை பெறுவதை பார்த்து யார் இதை செய்வது என ஆவல் மேலிட விசாரிப்பது, அப்பூதி அடிகள் என்ற அந்த தனவானை தேடி செல்லும்போது உடுத்தியிருக்கும் காவி ஆடையை தலையை மறைத்து சுற்றி ஒரு கையில் தண்டத்தை பிடித்துக் கொண்டு நடக்கும் நடை, அவர் வீட்டு திண்ணையில் ஒரு காலை மடித்து ஒரு காலை குத்திட்டு அமர்ந்து உள்ளே ஒலிக்கும் ஆதி சிவன் தாழ் பணிந்து வணங்கிடுவோமே பாடலுக்கு சின்ன குழந்தை போல் இரண்டு கைகளையும் மாறி மாறி தட்டிக் கொண்டே தானும் சேர்ந்து பாடுவது, அப்பூதி அடிகளிடமும் அவர் மனைவி அருள்மொழியிடமும் தன்னை யார் என்று வெளிப்படுத்தாமல் அவர்கள் தன் மேல் வைத்திருக்கும் அன்பை அறிந்து கொள்வது என அமர்களப்படுதியிருப்பார் சிவாஜி! [படம் பார்க்கும் பலருக்கும் இந்த காட்சிகளின் போது மறைந்த காஞ்சி மகாப் பெரியவரின் நினைவுகள் வந்துக் கொண்டேயிருக்கும்!]

ஒரு வேளை உணவருந்தி விட்டு செல்கிறேன் என சொல்லி விட்டு திரும்பி வரும் போது அவர்களின் ஒரே மகன் அரவம் தீண்டி இறந்து விட்டான் என தெரிய வரும்போது அவர் முகத்தில் வரும் அந்த அதிர்ச்சி! அவனை தூக்கி சென்று கோவிலின் முன் கிடத்தி சோகத்துடன் பாம்பை வேண்டி பாடுவது, அப்போதும் அரவம் வரவில்லை என்றதும் ஆவேசம் பொங்க பாடும் அந்த இறுதி வரிகள், பாடலை கேட்டு அவர் பக்திக்கு கட்டுப்பட்டு பாம்பு தன் விஷத்தை தானே இறக்க அந்த குழந்தையை காப்பாற்றி விட்டோம் என்ற பெருமிதம்! எதை சொல்வது எதை விடுவது!

44 வருடங்களுக்கு முன்பே இதையெல்லாம் செய்து விட்டார் என நினைக்கும்போது பிரமிப்பு பன்மடங்காய் பெருகிறது. அன்றைய நாளில் இதற்கு முழு அங்கீகாரம் கிடைத்ததா, அவரின் ரசிகர்கள் கூட இதை தெரியாதவர்களுக்கு சொல்லி முன்னெடுத்து சென்றார்களா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதைப்பற்றி பேசும்போது ஒரு நண்பர் ஒரு காரணம் சொன்னார். அதாவது தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களே ஒன்றன் பின் ஒன்றாக வந்துக் கொண்டிருந்ததால் நிறுத்தி நிதானமாக இதை ரசிக்கும் வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என்று சொன்னார். மன்னவன் வந்தானடியை ரசித்துக் கொண்டிருக்கும் போதே மாதவி பொன்மயிலாள் அங்கே மாலை மயக்கம் யாருக்காக என கேள்வி கேட்டபடியே வந்து விட அவர்களை ரசிக்கும் போதே மலர்களிலே பல நிறம் கண்டேன் என பெரியாழ்வார் பாட்டிசைக்க நம் கவனம் அங்கே போனது, அது முழுமை பெறுவதற்குள் மெல்ல வரும் காற்று என ஒரு மெல்லிசை காற்றில் படர்ந்தது, அதையாவது முழுமையாக ரசித்தோமா என்றால் இல்லை அந்த நேரத்தில் முத்து நகையே உன்னை நான் அறிவேன் என குரல் வர அங்கு பறந்தோம். மறைந்திருந்து கூட பார்க்க முடியாமல் நலந்தானா என சிக்கலார் நம்மை நாயனத்தில் கட்டிப் போட அங்கு சென்றோம். ஆக Embarrassment of Riches என்று சொல்வார்களே அதை மிக சரியாக அனுபவித்தவர்கள் நாம்.

எப்படி இருப்பினும் மீண்டும் அந்த தெள்ளிய இன்பத்தை நாம் உணர அனுபவிக்க வாய்ப்பளித்த பட வெளியிட்டாளாருக்கும், அரங்க உரிமையாளருக்கும் நமது இதயம் கனிந்த நன்றி! தங்களின் மேன்மையான ரசனையை வெளிப்படுத்திய நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் கோடானு கோடி நன்றி!

அன்புடன்

RAGHAVENDRA
20th April 2011, 07:29 AM
முரளி சார் சொல்வது போல் 1967ல் வரிசையாக நம்மை விருந்தளித்து திக்கு முக்காட வைத்து எதை எடுப்பது எதை தொடுப்பது என்று நம்மை தீர்மானிக்க முடியாமல் செய்து விட்டார் நடிகர் திலகம். அதற்கெல்லாம் வட்டியும் முதலும் சேர்த்தாற்போல் தற்பொழுது ரசிகர்கள் அணுஅணுவாய் ஆர்ப்பரிக்கிறார்கள். எப்படி இருந்தவர் இப்படி ஆகிவி்ட்டாரே என்று ஒரு நகைச்சுவைக் காட்சி ஏதோ ஒரு படத்தில் வரும் .அது போன்று கீழே அந்தக் காலகட்ட்த்தில் நடிகர் திலகத்தின் உருவம் பொம்மை அட்டையில் பிரசுரமானதைப் பாருங்கள்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntimagecp12A575722.jpg
அவரா இவர்
இந்தப் பாடல் காட்சியைப் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=ibynDVPlkqM

சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியின் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் மாஸ்டர் பிரபாகர் அவர்கள் தம்முடைய நினைவுகளைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது இந்தப் படத்தைப் பற்றிப் பேசினார். அவர் பேசியதை விட அவர் கண்கலங்கியதே அதிகம். அந்த அளவிற்கு அவர் சிலாகித்தார்.

இந்த அரிய வாய்ப்பினை நல்கிய சாந்தி திரையரங்கிற்கும், வெளியீட்டாளருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்

groucho070
20th April 2011, 07:58 AM
Raghavendra-sir, you made my day. Time for avatar change :wink:

RAGHAVENDRA
20th April 2011, 11:54 AM
Dear Rakesh,
I was really thrilled to see the image as your avatar. Keep it up. Here are a few more for use by our NT fans.
http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=219&thumb=1&d=1303280106 http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=220&thumb=1&d=1303280132 http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=221&thumb=1&d=1303280145 http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=222&thumb=1&d=1303280189

Raghavendran

groucho070
20th April 2011, 12:00 PM
Superb, superb. Keep the rare images coming, sir. I especially like the non-made up look. Like number two and three. Fortunately our fellow NT fans don't change avatar much often, so good opportunity for me to rotate them (only NT avatar changing rival is Joe) :smile:

goldstar
20th April 2011, 12:09 PM
Thanks Ragavendra. Changed my avatar.

groucho070
20th April 2011, 12:24 PM
Wow, avatar kalakkal. Expecting more to join in. Goldstar, soopeer.

saradhaa_sn
20th April 2011, 07:09 PM
டியர் முரளி,

திருவருட்செல்வர் திரைக்காவியத்தில் நடிகர்திலகத்தின் ஐந்து வித்தியாசமான நடிப்பாற்றல் பற்றிய விவரங்கள் அருமை. நீங்கள் மிகச்சரியாகக் குறிப்பிட்டது போல, இத்திரைக்காவியத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிய புதிய பரிமாணங்கள் நமக்கு தோன்றிக்கொண்டேயிருக்கும். அடடே இது நம்மகு முன்னர் தோன்றவில்லையே என்ற நினைப்பு வந்துகொண்டிருக்கும்.

நானும் பலமுறை இப்படம் பார்த்திருந்த போதிலும் சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி, இப்படத்தில் நடிகர்திலகத்தின் ஒரு நுணுக்கமான பங்களிப்பைப் பற்றிச்சொன்னபிறகு, மீண்டும் இப்படத்தை பார்த்தபோதுதான் அதிசயித்தேன். எவ்வளவு நுணுக்கமான ஒரு விஷயத்தை எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கிறார். இது எப்படி நமக்கு முன்னே தெரியாமல் போனது என்று வியந்தேன்.

சகோதரர் ராம்குமார் அவர்கள் சிங்கதமிழன் நிகழ்ச்சியில் இப்படம் பற்றிக் குறிப்பிட்டபோது, "இப்படத்தில் பெரும்பாலோருக்கு பிடித்த பாத்திரம் அப்பர் (திருநாவுக்கரசர்), எனக்கும் பிடிக்கும்தான். ஆனால் அதையும் மீறி என்னைக்கவர்ந்த ரோல் 'சுந்தர மூர்த்தி நாயனார்'. அந்த ரோலில் அப்பா ஒரு பெயிண்டிங் மாதிரி இருப்பார். அதிகம் உடல் அசைவுகளைக்காட்டாமல் முகபாவம், வசனங்களிலேயே செம்மையாகச்செய்திருப்பார்" என்று குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். அந்த திருவெண்ணைநல்லூர் கோயில் உள்ளே பாடும் 'சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே' பாடலின்போதுதான் என்ன ஒரு குழைவு, கோயிலின் உள்ளே சுவரில் அமைந்திருக்கும் சிற்ப வரிசைகளைப்பார்த்து வியந்துகொண்டே நடக்கும் அழகு. எதைச்சொல்வது, எதை விடுவது.

(விடுங்க, இவர் தோட்டியாக நடித்தால் கூட, 'ஒரு தோட்டி இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று இலக்கணம் வகுப்பதுபோலத்தான் செய்துகாட்டுவார்).

இவர் இதற்கு முன்னர் நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை படங்களுக்கும் இப்படத்துக்கும் பெரிய வித்தியாசம், இப்படம் முழுக்க முழுக்க பூலோகத்திலேயே நடப்பதால் ரொம்பவே நேச்சுரலாக இருக்கும். மந்திர தந்திரக்காட்சிகள் எல்லாம் கிடையாது. அதனால் இப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.

மாபெரும் வெற்றிப்படமாக, வெள்ளிவிழாப்படமாக அமைந்திருக்க வேண்டிய படம். வேறு யாரும் இவர் படங்களுக்குப்போட்டியாக வந்து கெடுக்கவில்லை. இவருக்கு இவரே வினை வைத்துக்கொண்டதுதான் காரணம். அதிலும் அந்த ஆண்டில் (1967-ல்) இவரது போட்டியாளருக்கு நேர்ந்த 'அசம்பாவிதத்தினால்' அவரது படங்கள் அதிகம் வரவில்லை. (எப்போதுதான் வந்தது?) நடிகர்திலகத்தின் படங்களே போதிய இடைவெளியின்றி வெளிவந்து, மாபெரும் வெற்றி வாய்ப்புகளைக் கெடுத்துக்கொண்டன.

டியர் ராகவேந்தர் மற்றும் பம்மலார்,

திருவருட்செல்வர் மற்றும் சிவகாமியின் செல்வம் புகைப்பட வரிசையும், தொடர்பான செய்திகளும் மிகவும் அருமை.

டியர் பார்த்தசாரதி,
உங்களது திருவருட்செல்வர் திரையரங்க அனுபவமும் சூப்பர். நம்மவர்கள் ஒன்று கூடி மகிழ்ந்தது மனதுக்கு இதமாக உள்ளது.

pammalar
20th April 2011, 09:24 PM
கலையுலக மகானின் "திருவருட்செல்வர்"

சென்னை 'சாந்தி' சினிமாஸ்

17.4.2011 ஞாயிறு மாலை மங்காத காட்சிகள்

மஹாதீபாராதனை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3564.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3569.jpg


மக்கள் வெள்ளம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3571.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3574.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th April 2011, 10:01 PM
கலையுலக மகானின் "திருவருட்செல்வர்"

சென்னை 'சாந்தி' சினிமாஸ்

17.4.2011 ஞாயிறு மாலை கண்கொள்ளாக் காட்சிகள்

சரத்துடன் ஆரவாரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3575.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3576.jpg


ஜனத்திரளின் ஒரு பகுதி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3577.jpg


நாவுக்கரசருக்கு நாவால் ஆராதனை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3582.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
20th April 2011, 10:18 PM
நாவுக்கரசருக்கு நாவால் அஞ்சலி.. - இதை
நம் பார்வைக்கு தந்தவர்க்கு
நம் அனைவரின் கரவொலி
http://mtbethel.blogs.com/photos/uncategorized/2008/05/14/clapping_hands_animation.gif
அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
20th April 2011, 10:40 PM
நாவுக்கரசருக்கு நாவால் அஞ்சலி.. - இதை
நம் பார்வைக்கு தந்தவர்க்கு
நம் அனைவரின் கரவொலி
http://mtbethel.blogs.com/photos/uncategorized/2008/05/14/clapping_hands_animation.gif
அன்புடன்
ராகவேந்திரன்

Thanks Sir ! FULL & ALL CREDIT TO OUR APPAR !

pammalar
20th April 2011, 11:18 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 8

"சிங்கார பைங்கிளியே பேசு"


http://www.youtube.com/watch?v=9HZKqLW2dA4

நடிப்பு : நடிகர் திலகம், நடிகை கிரிஜா

பின்னணிக் குரல்கள் : இசைத்தென்றல் ஏ.எம்.ராஜா, கானமாமணி ஆர்.ஜெயலக்ஷ்மி

இசை : இசையுலக மாமேதை எஸ்.வி.வெங்கட்ராமன்

படைப்பு : உடுமலை நாராயண கவி

திரைக்காவியம் : மனோகரா(1954)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
21st April 2011, 10:13 AM
எந்தப் பாடகரானாலும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு தன் வாயசைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் ஐக்கியமாகி விடும் ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இதே விதி மற்றவர்களுக்கும் பொருந்தும் ,,, ஏனென்றால் யார் பாடினால் என்ன, நான் வாயசைத்தால் என்ன, மூடிக் கிடந்தால் என்ன என்போரும் உண்டு. பாட்டுக்கெல்லாமா வாயசைத்து மெனக்கெட வேண்டும் என்போரும் உண்டு. பாட்டுக்கு வாயசைத்து நடித்தால் கௌரவக் குறைச்சல் என்று கருதக் கூடிய நடிக நடிகையரும் உண்டு, ரசிகர்களும் உண்டு.
அவர்களுக்காக ஒரு வார்த்தை ...
ஒரு பாடலை உருவாக்க ஒலிப்பதிவாளர், பாடகர், பாடகியர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர், அதனை படத்தில் உயிரோட்டமாக காண்பிப்பதற்கு ஒளிப்பதிவாளர், என எண்ணற்றோர் கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய உழைப்பினை மரியாதை செய்ய நினைப்போர், நிச்சயமாக பாடல் காட்சியில் ஜீவனுடன் நடிப்பர் என்பது உறுதி.

மனோகரா படத்திலிருந்து அருமையான பாடல் வழங்கிய பம்மலாருக்கு நன்றி.

இப்பாடலை எழுதியது, உடுமலை நாராயண கவியா அல்லது கலைஞரா என்ற மாறுபட்ட கருத்து நிலவுவதாக அந்தக் காலத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அன்புடன்

RAGHAVENDRA
21st April 2011, 10:18 AM
நம்முடைய மய்ய உறுப்பினர்களுக்காக மேலும் சில அவதார்...
http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=236&thumb=1&d=1303360369 http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=237&thumb=1&d=1303360383 http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=238&thumb=1&d=1303360396 http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=239&thumb=1&d=1303360406

அன்புடன்

RAGHAVENDRA
21st April 2011, 10:19 AM
மேலும் சில
http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=240&thumb=1&d=1303360418 http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=241&thumb=1&d=1303360472

அன்புடன்

RAGHAVENDRA
21st April 2011, 10:20 AM
முரளி சார், பம்மலார் சார் மற்றும் ஏனைய நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
அன்புடன்

goldstar
21st April 2011, 10:26 AM
Thanks a lot Mr. Swamy.

Simply enjoying all the photos, looking for more videos?

Swamy, are you in the half slack white shirt? Is there any photos taken our hub members Murali, Ragavendra, Parthasarathy, Swamy together?

Cheers,
Sathish

groucho070
21st April 2011, 10:51 AM
Thanks for the additional pix, sir.
முரளி சார், பம்மலார் சார் மற்றும் ஏனைய நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
அன்புடன்Good suggestion.

saradhaa_sn
21st April 2011, 11:39 AM
டியர் பம்மலார்,

சாந்தி வளாகத்தில் அப்பருக்கு நடந்த தீபாராதனைக் காட்சிகளை காணத்தந்தமைக்கு மிக்க நன்றி. கொண்டாட்டக்காட்சிகள் நம்மை எழுபதுகளுக்கு இட்டுச்செல்கின்றன. நாக்கில் சூடம் ஏற்றும் அந்த பக்தரின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

டியர் ராகவேந்தர், முரளி, பம்மலார்,
நான் கேட்க நினைத்ததை சதீஷ் கேட்டுவிட்டார். நமது மய்ய நண்பர்கள் பலர் ஒன்றுசேர்ந்து படத்தைப்பார்த்துக் களித்திருக்கிறீர்கள். அப்படியே காட்சியின்போது அனைவரும் ஒன்று கூடி நின்று, ஒரு புகைப்படம் எடுத்து (யார் யார் என்ற விவரத்துடன்) இங்கு பதித்திருக்கலாமல்லவா?. அடுத்த சிறப்புக்காட்சியின்போது செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

groucho070
21st April 2011, 03:15 PM
Can we (Plum and I, as Plum is using this avatar now) from which film this pix taken from?
http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=241&thumb=1&d=1303360472

RAGHAVENDRA
21st April 2011, 06:24 PM
Can we (Plum and I, as Plum is using this avatar now) from which film this pix taken from?
இந்தப் படம் அறிவாளி திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் எளிமையான தோற்றம்.
டியர் ராகேஷ்,
தங்களுடைய அவதார் நிழற்படத்தில் நெற்றியில் திருநீறுடன் நடிகர் திலகம் தோன்றும் காட்சி பொம்மை மாத இதழின் அட்டைக்காக பிரத்தியேகமாக எடுக்கப் பட்டது.

அன்புடன்

RAGHAVENDRA
21st April 2011, 06:48 PM
Please read a write-up in The Hindu, Arts-Cinema (http://www.thehindu.com/arts/cinema/article1715109.ece) category, likely to appear on 22nd April 2011.
Raghavendran.

pammalar
21st April 2011, 08:39 PM
எந்தப் பாடகரானாலும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு தன் வாயசைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் ஐக்கியமாகி விடும் ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இதே விதி மற்றவர்களுக்கும் பொருந்தும் ,,, ஏனென்றால் யார் பாடினால் என்ன, நான் வாயசைத்தால் என்ன, மூடிக் கிடந்தால் என்ன என்போரும் உண்டு. பாட்டுக்கெல்லாமா வாயசைத்து மெனக்கெட வேண்டும் என்போரும் உண்டு. பாட்டுக்கு வாயசைத்து நடித்தால் கௌரவக் குறைச்சல் என்று கருதக் கூடிய நடிக நடிகையரும் உண்டு, ரசிகர்களும் உண்டு.
அவர்களுக்காக ஒரு வார்த்தை ...
ஒரு பாடலை உருவாக்க ஒலிப்பதிவாளர், பாடகர், பாடகியர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர், அதனை படத்தில் உயிரோட்டமாக காண்பிப்பதற்கு ஒளிப்பதிவாளர், என எண்ணற்றோர் கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய உழைப்பினை மரியாதை செய்ய நினைப்போர், நிச்சயமாக பாடல் காட்சியில் ஜீவனுடன் நடிப்பர் என்பது உறுதி.

மனோகரா படத்திலிருந்து அருமையான பாடல் வழங்கிய பம்மலாருக்கு நன்றி.

அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி!

சிதம்பரம் ஜெயராமன் பாடினால் என்ன, ஏ.எம்.ராஜா பாடினால் என்ன, டி.எம்.எஸ். பாடினால் என்ன, சீர்காழி பாடினால் என்ன, பி.பி.எஸ். பாடினால் என்ன, எஸ்.பி.பி. பாடினால் என்ன, ஜேசுதாஸ் பாடினால் என்ன, மலேசியா பாடினால் என்ன, இன்னும் இது போன்று எத்தனையோ பின்னணிப் பாடகர்கள் நமது நடிகர் திலகத்திற்கு பின்னணியில் பாடியிருக்கிறார்கள், யார் பாடினால் என்ன, முன்னணியில் தானே பாடுவது போல், பாடும் குரலுக்கு ஏற்றாற் போல், பாடலின் தன்மைக்கு ஏற்றாற் போல் கனக்கச்சிதமாகவும் அற்புதமாகவும் வாயசைத்து அதே சமயத்தில் அப்பாடல் காட்சியில் தனது உச்சி முதல் பாதம் வரை உள்ள ஒவ்வொரு அங்கத்தையும், தசையையும் அபாரமாகவும், அபரிமிதமாகவும் நடிக்க வைத்து ஒரு பாடற்காட்சியில் பல நடிப்புப் புரட்சியை செய்து காட்ட நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.

That's why we adore him as THE GREATEST ACTOR OF THE UNIVERSE !

டூயட்டானாலும் சரி, ஸோலோவானாலும் சரி, தான் வாயசைக்காத ஸோலோவாக இருந்தாலும் சரி, நம்மவர் பின்னியெடுத்து விடுவாரே ! மேலும், எந்தவொரு வாத்தியக்கருவியை வாசித்தாலும் [வாசிப்பது போல் நடித்தாலும்], அந்த வாத்தியக்கருவிகளை வாசிக்கும் வித்வான்களே 'நாங்கள் நகல், நடிகர் திலகமே அசல்' என்று வியந்து கூறுமளவுக்கு தூக்கி சாப்பிட்டு விடுவாரே !

இவ்வளவு ஏன்?! மற்றவர்களுக்கு அத்தனை பாடல்களையும் கொடுத்து, கதாநாயகனான தான் ஒரு பாட்டும் பாடாமல் படத்தை வெற்றி பெற வைக்கும் ராஜதைரியம் இவர் ஒருவருக்கே உண்டு ! ஒரு பாட்டு கூட வேண்டாம், 'அந்த [நாள்]' படத்தையும் காலத்தை வென்ற காவியமாக நிற்க வைக்க நமது நடிகர் திலகம் தவிர்த்து யாரால் முடியும் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st April 2011, 09:46 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 9

"நான் என்ன சொல்லி விட்டேன்"


http://www.youtube.com/watch?v=9tbiihqwehs&feature=channel

நடிப்பு : நடிகர் திலகம், பேரழகி தேவிகா

பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்

இசை : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : பலே பாண்டியா(1962)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st April 2011, 09:56 PM
Please read a write-up in The Hindu, Arts-Cinema (http://www.thehindu.com/arts/cinema/article1715109.ece) category, likely to appear on 22nd April 2011.
Raghavendran.

It is nice & thrilling to read tomorrrow's print edition of 'The Hindu' today. Especially, if the write-up is about NT, the happiness is matchless.

I sincerely applaud the names figuring in the article, who are also elite figures in the Sivaji circle - Raghavendran Sir, Distributor Mr.Murali & Mr.M.L.Khan.

Our special thanks to Smt.Malathi Rangarajan & 'The Hindu' for providing us with such a brilliant article about our demi-god.

And Raghavendran Sir, Thanks for sharing it !

Two Corrections in the article:

1. Nadigar Thilagam has acted in exactly 288 films. [excluding guest role appearances]

2. The telugu film he acted was Pembudu Koduku and not as mentioned. This was the first film he acted with Savithiri.

Warm Wishes & Regards,
Pammalar.

rajeshkrv
21st April 2011, 10:34 PM
Pammalar,

thanks for the singara painkiliye pesu.Girija was the heroine .. hmmmm she then played second fiddle etc in Manalane mangayin bakkiyam, Raja sevai etc..

RAGHAVENDRA
21st April 2011, 10:47 PM
டியர் பம்மலார்,
நான் என்ன சொல்லி விட்டேன் பாடலைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு சிறிய அளவிலான இசை அட்டகாசமாக இருக்கும், கடிகாரத்தின் பெண்டுலம் வழியாக அந்தகாலத்தில் அலாரம் போன்று ஒலிக்கும் அந்த ஒலியை பாடலின் சூழலுக்கேற்ப மெல்லிசை மன்னர் கொடுத்திருப்பார். பிரமாதம். அந்த பொம்மை மிகவும் பிரபலம். இந்தப் படம் வந்த காலத்தில் அந்த பொம்மை எங்கு பார்த்தாலும், குறிப்பாக சென்னை கடற்கரையில் விற்றுக் கொண்டிருப்பார்கள். கடை விரித்து அல்ல, ஆனால் சுண்டல் விற்பவர்களைப் போல ஒவ்வொருவரிடமும் கேட்டுச் செல்வார்கள். அப்போது நான் மிகவும் சிறியவன் என்றாலும் அந்த பொம்மை மட்டும் என் நெஞ்சில் அப்படியே நிலைத்து விட்டது.
ஹிந்து கட்டுரைக்கு மாலதி ரங்கராஜன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி, நடிகர் திலகத்தின் பட வெற்றியைப் பற்றி ஹிந்துவில் வெளிவந்த பிறகு பல விநியோகஸ்தர்களுக்கு அவர் படம் திரையிடும் ஆவல் உண்டாகும் என்பது என் எண்ணம்.
படங்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள் என்னிடம் கேட்கப் படவில்லை. ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்டுள்ள முதல் தேதி, துளி விஷம் படங்கள் ஏற்கெனவே நெடுந்தகடு வடிவில் வெளியாகி விட்டன. இந்த விவரங்களை இன்னும் கொஞ்சம் துல்லியமாக எழுதியிருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை, நம்முடைய இணைய தளம், மற்றும் சகோதரி கிரிஜா இணைய தளம் போன்ற வற்றில் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
மீண்டும் ஹிந்து பத்திரிகைக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்

pammalar
21st April 2011, 11:33 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 191

கேட்டல் : சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?

கிளத்தல் : இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்து வரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன ! தொலைந்தென்ன !

(ஆதாரம் : பாவேந்தர் பாரதிதாசனாரின் 'குயில்' பத்திரிகை)

இன்று 21.4.2011 புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 47வது ஆண்டு நினைவு தினம்.

29.4.2011 அன்று அன்னாரது 121வது பிறந்த தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd April 2011, 12:26 AM
புனர்ஜென்மம் : பொன்விழா நிறைவு [21.4.1961 - 21.4.2011]

முதல் வெளியீட்டு தினமான 21.4.1961 வெள்ளியன்று 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளியான விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PJ1.jpg


அகவை ஐம்பத்து ஒன்றில் அடியெடுத்து வைத்து 'என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை' என ஆனந்தப் பண் பாடுகிறார் சங்கர்.

அன்புடன்,
பம்மலார்.

raagadevan
22nd April 2011, 03:09 AM
"His charisma rules"

http://www.hindu.com/fr/2011/04/22/stories/2011042250690400.htm

V_S
22nd April 2011, 04:41 AM
Thanks pammalar sir for sharing NT's evergreen classic 'Naan Enna Sollivitten', one of the most lilting duet (eventhough only TMS sir sings) and calms us whenever we hear this song. One of my favorite film too. No words to describe NT's action and his adorable charisma.
Seeing those old posters always makes me nostalgic and remind of my kid days.

Nice insights Raghavendra sir about the song and thanks for sharing the Hindu article, very nice read.

Sunil_M88
22nd April 2011, 04:50 AM
Sivaji in மலர்ந்து மலரத


http://www.youtube.com/watch?v=YooD5Qm2aTI

My fav raag - Abheri

Great lullaby composition by duo Vishwanathan - Ramamoorthy :bow:

groucho070
22nd April 2011, 06:23 AM
இந்தப் படம் அறிவாளி திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் எளிமையான தோற்றம்.
டியர் ராகேஷ்,
தங்களுடைய அவதார் நிழற்படத்தில் நெற்றியில் திருநீறுடன் நடிகர் திலகம் தோன்றும் காட்சி பொம்மை மாத இதழின் அட்டைக்காக பிரத்தியேகமாக எடுக்கப் பட்டது.

அன்புடன்Thank you sir. Expecting more and thank you for your efforts and sizing the pix down to permissible level.

Plum take note please.

groucho070
22nd April 2011, 06:33 AM
Thanks raagadevan. Raghavendar sir's humility is unbelievable. In a time where website owners would exaggerate their figures, you told the truth. Bravo, Sir! Too bad we Malaysians couldn't experience this :cry:
"His charisma rules"

http://www.hindu.com/fr/2011/04/22/stories/2011042250690400.htm

To the unitiated, they will think this giant is 6'5". Look at that majestic.....I don't know what!!!!


http://www.hindu.com/fr/2011/04/22/images/2011042250690401.jpg

Plum
22nd April 2011, 08:06 AM
Saw the Hindu article in print today morning. Goosepimples! The Man rules.
Thanks Raghavendra for the sized pictures and the info.
I don't usually sport avatars because basically I yam lazy (to crop and size pictures for avatar suitability). Ipdi vaazhapazhathai urichchu koduththuttInga :thanks:

KCSHEKAR
22nd April 2011, 11:00 AM
Good article carried by THE HINDU about Thiruvarutchelvar. Thanks to Mr.Ragavendran for the information. Thanks to Mr.Murali & Mr.Khan for the initiate taken.

Thanks to Mr.Pammalar for sharing the Evergreen rare classic "Naan Enna Sollivitten" song with us.

rangan_08
22nd April 2011, 12:36 PM
I sincerely applaud the names figuring in the article, who are also elite figures in the Sivaji circle - Raghavendran Sir, Distributor Mr.Murali & Mr.M.L.Khan.

Our special thanks to Smt.Malathi Rangarajan & 'The Hindu' for providing us with such a brilliant article about our demi-god.

And Raghavendran Sir, Thanks for sharing it !

Warm Wishes & Regards,
Pammalar.

And....not to forget Mr YGM who actually insisted Ms. Malathi Rangarajan to come to the theatre and watch the film. I was thrilled to read in the article that how MR YGM greatly appreciated the scene where Sekkizhar expressed fear while presenting Periya Puranam amidst the King and other elite group.....this scene was nicely captured by Murali sir in his post in the previous pages.

The glad news for me, personally, in the article is that the distributor Mr. Murali's assurance to screen GOWRAVAM in the coming weeks. Though I came with my daughter to the theatre last Sunday to watch the gala event, I was not able to watch the film among the fans. I'll somehow try to make it up for Gowravam. Looking forward to watch The Great Barrister on big screen, soon.

mr_karthik
22nd April 2011, 01:46 PM
Raghavendar sir,

Thank you verymuch for the link provided to read the woderful article in 'The Hindu' about Thiruvarutchelvar. Thanks to Malathi Rangarajan also for the wonderful nerration.

Same like she hinted about the roll of Sekkizhar, it will be more enjoyable if mention about the other four rolls, the great artist has done 44 years ago.

Pammalar sir,

Thanks for the 'Punar Janmam' rememberance with rare advertisement of the movie.

Mahesh_K
22nd April 2011, 03:23 PM
Spoke to distributor Murali, who has released Tiruvarutchelvar. He was happy about THE HINDU's coverage. If this is the response for Tiruvarutchelvar, a mythological movie which may not appeal to all sections of fans, proposed release of Gowaram ( possibily on 21st July) would do wonders.

pammalar
22nd April 2011, 04:36 PM
Dear mr_karthik,

Thanks ! திருப்பதிக்கே லட்டா?! திருநெல்வேலிக்கே அல்வாவா?! நீங்களே தீவிர NT Fan ! உங்களுக்கே ஓடும் TN Fanஆ...?!

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
22nd April 2011, 04:45 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. பம்மலார், சாரதா மேடம் மற்றும் ஏனைய நண்பர்களே,

கடந்த மூன்று நாட்களில் நடிகர் திலகத்தின் திரி மூன்று பக்கங்களைத் தாண்டி விட்டது என்பதை இப்போது தான் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் நிறைய விஷயங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலிடுகிறது. ஹிந்து நாளிதழில் இன்று வந்திருக்கும் திருமதி. மாலதி ரங்கராஜன் திருவருட்செல்வரைப் பற்றி எழுதிய கட்டுரை பலரை சென்றடைந்திருக்கிருக்கும். அவருக்கு நாம் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். Of course , இதில் திரு. ஓய்.ஜி. மகேந்திராவின் பங்கு மகத்தானது.

திரு. ராகவேந்தர் அவர்களின் ஒவ்வொரு பாடல் மற்றும் காட்சிப் பதிவும் அற்புதம் என்றால், திரு. முரளி அவர்கள் வழக்கம் போல் நுணுக்கமான விஷயங்களை அவருக்கேயுரிய அந்த எளிய, தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதிப் பிய்த்து உதறி விட்டார்.

திரு. பம்மலார் அவர்கள் வழக்கம் போல் புள்ளி விவரங்கள், கேள்வி பதில் புதையல்கள் மட்டுமல்லாது, அரிய/அற்புதமான பாடல்களையும் பதிவிட்டு திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார்.

சாரதா மேடமும் தன் பங்குக்குக் குறை வைக்காமல், திருவருட்செல்வரைப் பற்றிய செய்திகளை பதிவிட்டிருக்கிறார்.

மற்ற நண்பர்களும் இன்னும் சில அன்பர்களும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டு வருவது, இந்தத் திரியைப் பல படிகள் மேல் ஏற்றிக் கொண்டுவிட்டிருக்கிறது.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
22nd April 2011, 04:52 PM
அன்பு நண்பர்களே,

சற்று முன்தான் ஒரு சிறிய பதிவைப் பதிந்து விட்டுப் பார்க்கிறேன். ஆனந்த அதிர்ச்சி! பார்த்தசாரதி, Senior Member, Regular Hubber என்று என்னைப் பற்றி வந்திருக்கிறது!! நான் ஒரு இரண்டு மாதங்களாகத் தான் எழுதிக் கொண்டு வருகிறேன் என்பதால், இவ்வளவு நாள், பார்த்தசாரதி, Junior Member என்றுதான் வந்து கொண்டிருந்தது. இப்போது, எனக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கிறது என்று எண்ணி இறுமாந்து கொள்கிறேன். அலுவலகத்தில் எனக்கு ப்ரமோஷன் கிடைத்தது போல் உணர்கிறேன். மிக்க நன்றிகள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

pammalar
22nd April 2011, 05:02 PM
And....not to forget Mr YGM who actually insisted Ms. Malathi Rangarajan to come to the theatre and watch the film. I was thrilled to read in the article that how MR YGM greatly appreciated the scene where Sekkizhar expressed fear while presenting Periya Puranam amidst the King and other elite group.....this scene was nicely captured by Murali sir in his post in the previous pages.

The glad news for me, personally, in the article is that the distributor Mr. Murali's assurance to screen GOWRAVAM in the coming weeks. Though I came with my daughter to the theatre last Sunday to watch the gala event, I was not able to watch the film among the fans. I'll somehow try to make it up for Gowravam. Looking forward to watch The Great Barrister on big screen, soon.

Definitely Sir ! Mr.YGM is one of the pioneers in our NT fraternity.

Rajinikanth & Rangan : Guru-Sishyan !

pammalar
22nd April 2011, 06:19 PM
Raghavendar sir's humility is unbelievable. In a time where website owners would exaggerate their figures, you told the truth. Bravo, Sir!


"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது !
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது !"

கணிப்பொறியியலைக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களுக்குச் செல்லாமலேயே அதில் "படிக்காத மேதை"யாக விளங்கும் நமது ராகவேந்திரன் சாருக்கும் மேற்குறிப்பிட்ட வரிகள் நூறு சதம் பொருந்தும்.

நமது நடிகர் திலகம் ஒரு சுயம்பு ! அவரது ரசிகர் திலகமும் ஒரு சுயம்புவே !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd April 2011, 07:26 PM
Sivaji in மலர்ந்து மலரத


http://www.youtube.com/watch?v=YooD5Qm2aTI

My fav raag - Abheri

Great lullaby composition by duo Vishwanathan - Ramamoorthy :bow:

Dear Sunil_M88,

Thanks for sharing this evergreen lullaby ! NT & NT at their Himalayan best ! Perhaps this song sequence is one of the best & most powerful sequences in the annals of World Cinema.

பல வானொலி, தொலைக்காட்சி நேயர் விருப்ப திரைப்பாடல்கள் நிகழ்ச்சிகளிலும் மற்றும் மேடைக் கச்சேரிகளிலும் இந்தப் பாடலுக்கு வாய்த்த நேயர்களைப் போல் வேறு எந்தப் பாடலுக்கும் வாய்த்ததில்லை.

'மலர்ந்தும் மலராத' : ஆன்மாவை அசைக்கும் கானம் !

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
22nd April 2011, 08:53 PM
The glad news for me, personally, in the article is that the distributor Mr. Murali's assurance to screen GOWRAVAM in the coming weeks.

மிக நல்ல செய்தி!!! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

RAGHAVENDRA
22nd April 2011, 11:27 PM
Dear Pammalar, V_S, Rakesh, Plum, Chandrasekar, Rangan, Karthik, Mahesh, Parthasarathy, Radhakrishnan and all friends,
Thank you every body for the appreciations, encouragement and words of praise. Everything is directed to Nadigar Thilagam.
அவர் ஆட்டுவித்தால் நாம் ஆடுகிறோம். அவ்வளவே..
ஹிந்து பத்திரிகைக்க்கும் திரு மகேந்திரா அவர்களுக்கும் நாம் நமது நன்றியை மீண்டும் செலுத்துகிறோம். திரு மகேந்திரா அவர்களிடம் பேசும் போது நமது சாந்தி திரையரங்கினைப் பற்றி உணர்ச்சிப் பெருக்கோடு நினைவு கூர்ந்தார். தெய்வ மகன் படத்திற்கு க்யூ வரிசையில் நின்று காவலர்களிடம் அடி வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
திரு பம்மலார் குறிப்பிட்டதைப் போல் அவரைப்போலத் தான் நாம் அனைவருமே. நம் அனைவருமே உள்ளதைச் சொல்வோம், சொன்னதைச் செய்வோம், வேறொன்றும் தெரியாது.
இன்றைய ஹிந்து நம் இணைய தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டதில் ஒரே நாளில் கிட்டத் தட்ட 200க்கு மேல் ஹிட்ஸ் அதிகரித்துள்ளது. இதற்காக நமது இணையதளம் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.
மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
பம்மலார் நினைவூட்டிய பாடலோடு

http://www.youtube.com/watch?v=K1I3c64ieBs&playnext=1&list=PLE1805B3A357D1C96
அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
23rd April 2011, 12:19 AM
Thanks to Malathi Rangarajan for the article which had brought out all the points regarding Thiruvarutselvar, things associated with the film, a brief foray into future re-releases and the credit given to the persons who worked hard behind the scenes.

ஹிந்து பத்திரிக்கை தன் கட்டுரை மூலமாக nadigarthilagam.com இணையதளத்தை சரியான முறையில் சரியான நேரத்தில் அடையாளம் காட்டியிருக்கிறது. ராகவேந்தர் சார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள். குடத்திலிட்ட விளக்காக இருந்த அவரின் சேவை இதன் மூலம் குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்கட்டும்.

செஞ்சுரி அடித்த சாரதிக்கு வாழ்த்துகள். மேலும் பல செஞ்சுரிகள் நீங்கள் அடிக்க வேண்டும்.

சுவாமி,

புனர் ஜென்மம் விளம்பரத்திற்கு மிக்க நன்றி. மீண்டும் ஒரு பொன் விழா நிறைவின் அரேங்கேற்றம். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆண்டின் மற்றொரு படைப்பு. பாவ மன்னிப்பு மற்றும் பாச மலர் என்ற மிகப் பெரிய இரண்டு திரைக் காவியங்களின் இடையில் அகப்பட்டுக் கொண்டதால் பெற வேண்டிய பெரிய வெற்றியை பெற முடியாமல் போன படம்.

நடிப்பு என்றால் யாது? ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு பாத்திரமும் கதையின் தன்மைக்கேற்ப எப்படி உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும், எங்கே கூட்ட வேண்டும், எங்கே குறைக்க வேண்டும், பாத்திரத்தின் தன்மைக்கேற்ப உடல்மொழி எவ்வாறு அமைய வேண்டும், வசன உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் திரையுலகிற்கு மீண்டும் எடுத்து சொல்ல, வாழ்ந்து காட்ட நடிகர் திலகம் ஒரு புனர் ஜென்மம் எடுக்க மாட்டாரா?

அன்புடன்

pammalar
23rd April 2011, 12:52 AM
Pammalar,

thanks for the singara painkiliye pesu.Girija was the heroine .. hmmmm she then played second fiddle etc in Manalane mangayin bakkiyam, Raja sevai etc..

Dear rajeshkrv,

Thank You ! Manohara(1954) was a trilingual film produced at the same time in Tamil, Telugu & Hindi. NT-Girija pair ruled supreme in all the three versions. Actress Girija, as you said played second fiddle in many films of 1950s. She first acted with NT in Thirumbippaar(1953), in which she paired with Actor Narasimma Bharathi. Recently, I saw a film on VCD - Kaalam Maari Pochu(1956). Gemini Ganesan & Anjali Devi took the top honours in the film while Girija as Gemini's sister played second fiddle but her performance is second to none.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
23rd April 2011, 03:16 AM
Thanks a lot Mr. Swamy.

Simply enjoying all the photos, looking for more videos?

Swamy, are you in the half slack white shirt? Is there any photos taken our hub members Murali, Ragavendra, Parthasarathy, Swamy together?

Cheers,
Sathish

Dear Goldstar Satish,

Thank you very much !

I took only photos from my camera.

No, it's not myself. I always wear a full hand shirt.

I will snap one 'group photo' during the next occasion and post it here.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
23rd April 2011, 03:33 AM
டியர் பம்மலார்,

சாந்தி வளாகத்தில் அப்பருக்கு நடந்த தீபாராதனைக் காட்சிகளை காணத்தந்தமைக்கு மிக்க நன்றி. கொண்டாட்டக்காட்சிகள் நம்மை எழுபதுகளுக்கு இட்டுச்செல்கின்றன. நாக்கில் சூடம் ஏற்றும் அந்த பக்தரின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

டியர் ராகவேந்தர், முரளி, பம்மலார்,
நான் கேட்க நினைத்ததை சதீஷ் கேட்டுவிட்டார். நமது மய்ய நண்பர்கள் பலர் ஒன்றுசேர்ந்து படத்தைப்பார்த்துக் களித்திருக்கிறீர்கள். அப்படியே காட்சியின்போது அனைவரும் ஒன்று கூடி நின்று, ஒரு புகைப்படம் எடுத்து (யார் யார் என்ற விவரத்துடன்) இங்கு பதித்திருக்கலாமல்லவா?. அடுத்த சிறப்புக்காட்சியின்போது செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

சகோதரி சாரதா,

மனமார்ந்த நன்றி !

தாங்களும் சதீஷும் குறிப்பிட்டது போல் அடுத்த சிறப்புக்காட்சியின் போது நமது குழுவினரை ஒன்றாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து அவசியம் இங்கே பதிவிடுகிறோம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd April 2011, 03:44 AM
டியர் பம்மலார்,
நான் என்ன சொல்லி விட்டேன் பாடலைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு சிறிய அளவிலான இசை அட்டகாசமாக இருக்கும், கடிகாரத்தின் பெண்டுலம் வழியாக அந்தகாலத்தில் அலாரம் போன்று ஒலிக்கும் அந்த ஒலியை பாடலின் சூழலுக்கேற்ப மெல்லிசை மன்னர் கொடுத்திருப்பார். பிரமாதம். அந்த பொம்மை மிகவும் பிரபலம். இந்தப் படம் வந்த காலத்தில் அந்த பொம்மை எங்கு பார்த்தாலும், குறிப்பாக சென்னை கடற்கரையில் விற்றுக் கொண்டிருப்பார்கள். கடை விரித்து அல்ல, ஆனால் சுண்டல் விற்பவர்களைப் போல ஒவ்வொருவரிடமும் கேட்டுச் செல்வார்கள். அப்போது நான் மிகவும் சிறியவன் என்றாலும் அந்த பொம்மை மட்டும் என் நெஞ்சில் அப்படியே நிலைத்து விட்டது.
அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

அறிந்திராத அரிய தகவல்களைத் தந்தமைக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd April 2011, 04:00 AM
Thanks pammalar sir for sharing NT's evergreen classic 'Naan Enna Sollivitten', one of the most lilting duet (eventhough only TMS sir sings) and calms us whenever we hear this song. One of my favorite film too. No words to describe NT's action and his adorable charisma.
Seeing those old posters always makes me nostalgic and remind of my kid days.

Nice insights Raghavendra sir about the song and thanks for sharing the Hindu article, very nice read.

Dear V_S,

Thanks a lot !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
23rd April 2011, 04:06 AM
டியர் முரளி சார், நெஞ்சார்ந்த நன்றி !

டியர் சந்திரசேகரன் சார், மனமார்ந்த நன்றி !

டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கு நன்றி ! All the best for a century of centuries & even more !

Dear Mahesh Sir, Welcome back !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
23rd April 2011, 06:50 AM
டியர் முரளி சார்,
தங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நனறிகளும். விளக்கு நான் என்றால் ஒளி நடிகர் திலகம் அன்றோ...இதற்கும் அவர் பாடல் வைத்து வி்ட்டாரே... விளக்கே நீ தந்த ஒளி நானே.. விழியே நீ இட்ட திரை நானே....
டியர் பம்மலார்,
தாங்கள் கூறுவது போல் அடுத்த முறை நாம் அனைவரும் கூடி - இது வரை வராதவர்களும் வர வேண்டும் - ஒன்றாய் புகைப்படம் எடுத்து இங்கே பதிவிடுவோமே.

இதோ நான் கூறிய பலே பாண்டியா பொம்மை
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/balepandiyadoll.jpg

அன்புடன்

HARISH2619
23rd April 2011, 01:12 PM
Due to unavoidable reasons I could not post my views here for a long period,but never missed out viewing the thread daily.
As usual the giants murali sir,raghavendar sir,pammal sir,parthi sir,saradha madam and many others are taking this thread to a great height which is unparallalled in this hub .
thanks pammal sir and raghavendra sir for the photos of TC sunday gala.
eagerly waiting for murali sir's live relay of sunday's happenings

thankyou

saradhaa_sn
23rd April 2011, 03:40 PM
சென்ற வாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் பங்குபெற்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

(திரு ஏ.ஜெகன்னாதன், இயக்குனர் ப.நீலகண்டனின் உதவி இயக்குனராக இருந்தபோது ஏராளமான எம்.ஜி.ஆர்.படங்களுக்கு பணியாற்றியவர். இதயக்கனி படத்தின் இயக்குனர் மற்றும் பிற்காலத்தில் சத்யா மூவீஸின் ஆஸ்தான இயக்குனர்).

"நான் சிவாஜி சாரை வைத்து இயக்கிய ஒரே படம் 'வெள்ளை ரோஜா'. அப்படத்தின் தயாரிப்பாளர்களான பிலிம்கோ நிறுவனத்தினர் முதலில் சிவாஜி சாரை புக் பண்ணிவிட்டு என்னிடம் வந்து படத்தை இயக்க வேண்டுமென்று கேட்டார்கள். சிவாஜி சாரை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன். அதன்பின்னர் தயாரிப்பாளர்களுக்கு புதிய சந்தேகம் வந்துள்ளது. 'இவர் எம்.ஜி.ஆர்.டைரக்டராச்சே, இவரைப்போட்டால் சிவாஜி ஒப்புக்கொள்வாரா' என்ற ஐயம் ஏற்பட்டதால், பிலிம்கோ உரிமையாளர் காதர் மற்றும் சிலருடன் எனக்குத்தெரியாமல் சிவாஜிசாரைப்போய்ப்பார்த்து, 'வெள்ளை ரோஜா படத்துக்கு டைரக்டராக ஏ.ஜென்னாதனைப் போட்டிருக்கிறோம். நீங்க விரும்பலைன்னா சொல்லுங்க, நீங்க சொல்ற வேற் டைரக்டரைப் போட்டுடலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு சிவாஜி சார் சிரித்துக்கொண்டே “அவர் எங்க அண்ணனையே டைரக்ட் பண்ணியவராச்சே. என்னை டைரக்ட் பண்ண மாட்டாரா என்ன?. அதெல்லாம் மாற்ற வேண்டாம். அவரே இருக்கட்டும்” என்று சொல்லியனுப்பி விட்டார். இச்சம்பவம் நடந்தபோது நான் இல்லை. ஆனால் சிவாஜி சார் சொன்ன விஷயம் கேள்விப்பட்டதும் அப்படியே புளகாங்கிதம் அடைந்தேன்.

படப்பிடிப்பின்போது நான் வைக்கும் சில ஷாட்களை மனதாரப் பாராட்டுவார். போலீஸ் ஆபீஸராக வரும் அவர் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கட்டத்தில் நான் அவரது கண்ணுக்கு மட்டும் பக்கவாட்டில் குளோஸ்-அப் ஷாட் வைத்ததை பலமாக முதுகில் தட்டிப்பாராட்டினார். அமைதியான பாதிரியாராகவும், ஆக்ரோஷமான போலீஸ் ஆபீஸராகவும் இருவேறுபட்ட நடிப்பை அற்புதமாகத் தந்திருந்தார்.

சிவாஜி சாரைப்போன்ற அற்புத நடிகர் Never Before and Never After.

சிவாஜி சாரை வைத்து நான் இயக்கிய 'வெள்ளை ரோஜா' படமும், ரஜினி சாரை வைத்து இயக்கிய 'தங்க மகன்' படமும் ஒரே தீபாவளியன்று வெளிவந்தன. அந்த தீபாவளிக்கு வேறு எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தபோதிலும், இவ்விரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்களைப்பிடித்தன. மீண்டும் அதுபோன்ற ஒரு பொற்காலத்துக்காக காத்திருக்கிறேன்".

(Thank you A.Jagannathan sir)

Mahesh_K
23rd April 2011, 06:01 PM
சென்ற வாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் பங்குபெற்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

(திரு ஏ.ஜெகன்னாதன், இயக்குனர் ப.நீலகண்டனின் உதவி இயக்குனராக இருந்தபோது ஏராளமான எம்.ஜி.ஆர்.படங்களுக்கு பணியாற்றியவர். இதயக்கனி படத்தின் இயக்குனர் மற்றும் பிற்காலத்தில் சத்யா மூவீஸின் ஆஸ்தான இயக்குனர்).

"நான் சிவாஜி சாரை வைத்து இயக்கிய ஒரே படம் 'வெள்ளை ரோஜா'. அப்படத்தின் தயாரிப்பாளர்களான பிலிம்கோ நிறுவனத்தினர் முதலில் சிவாஜி சாரை புக் பண்ணிவிட்டு என்னிடம் வந்து படத்தை இயக்க வேண்டுமென்று கேட்டார்கள். சிவாஜி சாரை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன். அதன்பின்னர் தயாரிப்பாளர்களுக்கு புதிய சந்தேகம் வந்துள்ளது. 'இவர் எம்.ஜி.ஆர்.டைரக்டராச்சே, இவரைப்போட்டால் சிவாஜி ஒப்புக்கொள்வாரா' என்ற ஐயம் ஏற்பட்டதால், பிலிம்கோ உரிமையாளர் காதர் மற்றும் சிலருடன் எனக்குத்தெரியாமல் சிவாஜிசாரைப்போய்ப்பார்த்து, 'வெள்ளை ரோஜா படத்துக்கு டைரக்டராக ஏ.ஜென்னாதனைப் போட்டிருக்கிறோம். நீங்க விரும்பலைன்னா சொல்லுங்க, நீங்க சொல்ற வேற் டைரக்டரைப் போட்டுடலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு சிவாஜி சார் சிரித்துக்கொண்டே “அவர் எங்க அண்ணனையே டைரக்ட் பண்ணியவராச்சே. என்னை டைரக்ட் பண்ண மாட்டாரா என்ன?. அதெல்லாம் மாற்ற வேண்டாம். அவரே இருக்கட்டும்” என்று சொல்லியனுப்பி விட்டார். இச்சம்பவம் நடந்தபோது நான் இல்லை. ஆனால் சிவாஜி சார் சொன்ன விஷயம் கேள்விப்பட்டதும் அப்படியே புளகாங்கிதம் அடைந்தேன்.

படப்பிடிப்பின்போது நான் வைக்கும் சில ஷாட்களை மனதாரப் பாராட்டுவார். போலீஸ் ஆபீஸராக வரும் அவர் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கட்டத்தில் நான் அவரது கண்ணுக்கு மட்டும் பக்கவாட்டில் குளோஸ்-அப் ஷாட் வைத்ததை பலமாக முதுகில் தட்டிப்பாராட்டினார். அமைதியான பாதிரியாராகவும், ஆக்ரோஷமான போலீஸ் ஆபீஸராகவும் இருவேறுபட்ட நடிப்பை அற்புதமாகத் தந்திருந்தார்.

சிவாஜி சாரைப்போன்ற அற்புத நடிகர் Never Before and Never After.

சிவாஜி சாரை வைத்து நான் இயக்கிய 'வெள்ளை ரோஜா' படமும், ரஜினி சாரை வைத்து இயக்கிய 'தங்க மகன்' படமும் ஒரே தீபாவளியன்று வெளிவந்தன. அந்த தீபாவளிக்கு வேறு எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தபோதிலும், இவ்விரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்களைப்பிடித்தன. மீண்டும் அதுபோன்ற ஒரு பொற்காலத்துக்காக காத்திருக்கிறேன்".

(Thank you A.Jagannathan sir)

அந்த தீபாவாளிக்கு வந்த படங்களில் முதல் மூன்று இடங்கள் முறையே வெள்ளை ரோஜா , தூங்காதே தம்பி தூங்காதே மற்றும் தங்கைக்கோர் கீதம் படங்களுக்குத்தான்.

வெள்ளை ரோஜா பேரு வெற்றி பெற்று சென்னை நகரில் மட்டும் 6 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

RAGHAVENDRA
23rd April 2011, 06:23 PM
அன்பு சகோதரி சாரதா அவர்களின் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சி பற்றிய பதிவு நம்மையெல்லாம் 83ம் ஆண்டிற்கு அழைத்து செல்கிறது. அந்த தீபாவளியன்று வெளியான அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றன என்பது சிறப்பாகும். தீபாவளி என்றதும் நமக்கு முதல் படமான பராசக்தி நினைவுக்கு வராமல் இருக்காது. அந்த பராசக்தி படத்தைப் பற்றி நாளைய 24.04.2011 ஹிந்து நாளிதழில் வெளிவர உள்ள கட்டுரையினை இச்சுட்டியில் காணலாம்.
ராண்டார் கய் எழுதிய பராசக்தி கட்டுரை (http://www.thehindu.com/arts/cinema/article1761261.ece)

அன்புடன்

RAGHAVENDRA
23rd April 2011, 08:50 PM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 6

இந்த நாடு நன்றாய் இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்கிற எண்ணத்தில் தன் கொள்கையை இந்த நாட்டுப் பற்றை அடிப்படையாக வைத்து, சுய நலம் பாராமல், வணிக நோக்கம் பாராமல், சுய பெருமை பாடாமல், தேசப் பற்றையும் இறையாண்மையையும் தன் படங்களிலும் பாடல்களிலும் பறை சாற்றியவர் நடிகர் திலகம். இதை அடிப்படையாகக் கொண்டு நமது அடுத்த கொள்கைப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. படுத்துக் கொண்டே நடித்து வெற்றி பெற்றவர் நடிகர் திலகம் என்பதற்கு இப்பாடல் சாட்சி. இப்பாடல் முடிவில் கண்களில் நீர் வரவில்லை என்றால் அவர் தன் தேச பக்தியை இன்னும் தீவிரமாக உணர வேண்டும் என்பதே பொருளாகும். இடம் பெறும் பாடல் லீலா அவர்கள் பாடி ஜி.ராமனாதன் அவர்கள் இசையமைத்த பாரதியார் பாடல். வ.உ.சி. யாக வாழும் நடிகர் திலகம் நடித்த கப்பலோட்டிய தமிழனில் இடம் பெற்று, சற்று அபூர்வமாக ஒலிக்கக் கூடிய பாடல் இது. மரணப் படுக்கையில் இருந்தும் கூட என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்கிற வரியின் போது தன்னுடைய கைகளை விலங்குடைத்து விடுவிபபதாக செய்து, விடுதலையை எண்ணி புன்னகை பூக்கும் காட்சியில் இந்த உலகத்தில் இதற்கு மேல் கண்களால் தேச பக்தியைக் கூறக்கூடிய நடிகர் வேறு யாரேனும் உண்டா என்கிற எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கும் அந்தக் காட்சி....
இதோ நீங்களும் உணருங்கள்


http://www.youtube.com/watch?v=T80xmSzffb4

பாடல் காட்சியில் இடம் பெற்ற கலைஞர்கள்
ருக்மணி, டி.எஸ்.துரைராஜ் மற்றும் பலர்.

அன்புடன்

பம்மலார்
ராகவேந்திரன்

pammalar
24th April 2011, 12:32 AM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 6

இந்த நாடு நன்றாய் இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்கிற எண்ணத்தில் தன் கொள்கையை இந்த நாட்டுப் பற்றை அடிப்படையாக வைத்து, சுய நலம் பாராமல், வணிக நோக்கம் பாராமல், சுய பெருமை பாடாமல், தேசப் பற்றையும் இறையாண்மையையும் தன் படங்களிலும் பாடல்களிலும் பறை சாற்றியவர் நடிகர் திலகம். இதை அடிப்படையாகக் கொண்டு நமது அடுத்த கொள்கைப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. படுத்துக் கொண்டே நடித்து வெற்றி பெற்றவர் நடிகர் திலகம் என்பதற்கு இப்பாடல் சாட்சி. இப்பாடல் முடிவில் கண்களில் நீர் வரவில்லை என்றால் அவர் தன் தேச பக்தியை இன்னும் தீவிரமாக உணர வேண்டும் என்பதே பொருளாகும். இடம் பெறும் பாடல் லீலா அவர்கள் பாடி ஜி.ராமனாதன் அவர்கள் இசையமைத்த பாரதியார் பாடல். வ.உ.சி. யாக வாழும் நடிகர் திலகம் நடித்த கப்பலோட்டிய தமிழனில் இடம் பெற்று, சற்று அபூர்வமாக ஒலிக்கக் கூடிய பாடல் இது. மரணப் படுக்கையில் இருந்தும் கூட என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்கிற வரியின் போது தன்னுடைய கைகளை விலங்குடைத்து விடுவிபபதாக செய்து, விடுதலையை எண்ணி புன்னகை பூக்கும் காட்சியில் இந்த உலகத்தில் இதற்கு மேல் கண்களால் தேச பக்தியைக் கூறக்கூடிய நடிகர் வேறு யாரேனும் உண்டா என்கிற எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கும் அந்தக் காட்சி....
இதோ நீங்களும் உணருங்கள்


http://www.youtube.com/watch?v=T80xmSzffb4

பாடல் காட்சியில் இடம் பெற்ற கலைஞர்கள்
ருக்மணி, டி.எஸ்.துரைராஜ் மற்றும் பலர்.

அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி ! இந்தப் பாடல் எப்பேர்ப்பட்ட நெஞ்சையும் உருக்கி விடும் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th April 2011, 02:52 AM
அந்தக் காலகட்ட்த்தில் நடிகர் திலகத்தின் உருவம் பொம்மை அட்டையில் பிரசுரமானதைப் பாருங்கள்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntimagecp12A575722.jpg
அன்புடன்

"அன்பளிப்பு" வெளியான 1.1.1969 அன்று 'பொம்மை' தனது ஜனவரி இதழின் மூலம் தனது அன்பு வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கிய அண்ணலின் அழகிய திருமுகம் [Natural Still] தாங்கிய அட்டைப்படம் இது.

இந்த அற்புத அட்டைப்படத்தை நமக்கு அன்பளிப்பாக இங்கே வழங்கிய நமது ராகவேந்திரன் சாருக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th April 2011, 02:59 AM
இதோ நான் கூறிய பலே பாண்டியா பொம்மை
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/balepandiyadoll.jpg
அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

'பலே [பாண்டியா]' பொம்மைப் பரிசுக்கு நன்றிகள் பலப்பல !

டியர் செந்தில் சார்,

நல்வரவு ! நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th April 2011, 04:31 AM
மனோகரா படத்திலிருந்து 'சிங்கார பைங்கிளியே பேசு' என்கின்ற அருமையான பாடலை வழங்கிய பம்மலாருக்கு நன்றி.

இப்பாடலை எழுதியது, உடுமலை நாராயண கவியா அல்லது கலைஞரா என்ற மாறுபட்ட கருத்து நிலவுவதாக அந்தக் காலத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

சென்ற வருடம்(2010), தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கலந்து சிறப்பித்த ஒரு விழாவில், மாநில அமைச்சர் ஒருவர் தனது விழா உரையில் 'கா கா கா பாடலை கலைஞர் அவர்கள் எழுதினார்' என்று குறிப்பிட்டுப் பேசினார். இது தவறான தகவல். பராசக்தியில் இடம்பெற்ற 'கா கா கா' பாடலை எழுதியவர் 'உடுமலை நாராயண கவிராயர்' என்று அதன் இணைத் தயாரிப்பாளரான திரு.ஏவிஎம் அவர்களே தான் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். மனோகராவில் இடம்பெற்ற 'சிங்கார பைங்கிளியே பேசு' பாடலுக்கும் நேர்ந்துள்ள இத்தகைய தகவல் நெருடல் இது போலத்தான் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இது போன்ற தகவல் பிழைகள் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஒரு படத்தினுடைய ஒரு பாடலை யார் இயற்றினார் என்பதனை மிகச் சரியாகச் சொல்வதற்கு அதிகாரபூர்வ ஆவணமாகத் திகழ்வது அந்தப் படத்தினுடைய ஒரிஜினல் பாட்டுப் புத்தகம். ஒரு படத்தினுடைய முதல் வெளியீட்டின் போது அதன் தயாரிப்பாளர்களே [சில சமயங்களில் விநியோகஸ்தர்கள்] இத்தகைய ஒரிஜினல் பாட்டுப் புத்தகங்களை வெளியிடுவார்கள். 1970களின் இறுதி வரை இது வழக்கத்தில் இருந்தது. ஒரு படத்தினுடைய ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தின் மூலம் அதில் நடிக்கும் நடிக-நடிகையர் விவரங்கள் மற்றும் அப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் என எல்லாவற்றையும் அறிய முடியும். மேலும் ஒவ்வொரு பாடலினுடைய வரிகள், ஒவ்வொரு பாடலுக்கும் மேலே இடதுபுற ஓரம் பாடலாசிரியர் பெயர் மற்றும் வலதுபுற ஓரம் பின்னணியில் பாடியவர்கள் பெயர்கள் என ஒரிஜினல் பாட்டுப் புத்தகம் அப்படத்தைப் பற்றிய ஒரிஜினல் புள்ளிவிவரத் தகவல் களஞ்சியமாகவே விளங்கும்.

பராசக்தி படத்தினுடைய ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திலும் சரி, மனோகராவினுடைய ஒரிஜினல் பாடல் புத்தகத்திலும் சரி, ஒவ்வொரு பாடலுக்கும் மேலே கொடுக்கப்படும் பாடலாசிரியர் பெயரும், பாடியவர்கள் பெயரும் கொடுக்கப்படவில்லை. இதுவே இத்தகைய தகவல் நெருடல்களுக்கு முக்கிய காரணம். பின்னணிப் பாடியவர்களை அவர்களது பாட்டுக் குரல்களைக் கேட்டு கணித்து விடலாம். ஆனால் பாடல் வரிகளைக் கொண்டு பாடலாசிரியரை கணிப்பது மிக மிகக் கடினம்.

எனினும், திரை இசை ஆராய்ச்சியாளர் திரு.வாமனன் அவர்கள் தான் எழுதியுள்ள "திரை இசை அலைகள் (பாகம் 1)" நூலில் 'சிங்கார பைங்கிளியே பேசு' பாடலை இயற்றியவர் 'உடுமலை நாராயண கவிராயர்' என்றே பதிவு செய்துள்ளார். அடியேனைப் பொறுத்தவரை, ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திற்குப் பிறகு திரு.வாமனன் அவர்களுடைய தகவல் ஆதாரபூர்வமானது. எனவே 'சிங்கார பைங்கிளி' உடுமலைக்கே உரித்தானது.

குறிப்பு:
1. மனோகரா ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திலும் சரி, படத்தினுடைய பெயர்ப்பலகை[Title Card]யிலும் சரி, பாடலாசிரியர்கள் பட்டியலில் கலைஞர் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை. திரைக்கதை-வசனம் : கலைஞர் மு.கருணாநிதி என்று மட்டுமே இடம்பெறுகிறது.

2. 1997-ம் ஆண்டு முதல் சற்றேறக்குறைய எட்டு வருடங்கள், 'சினிமா எக்ஸ்பிரஸ்' மாதமிருமுறை இதழில், திரு.வாமனன் அவர்கள் "திரை இசை சாதனையாளர்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைத் தொடரே "திரை இசை அலைகள்" என்ற பெயரில் கூடுதல் தகவல்களுடன் பல புத்தகங்களாக (பாகங்களாக) வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர்கள் சென்னை மணிவாசகர் பதிப்பகம்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
24th April 2011, 08:49 AM
டியர் பம்மலார்,
பலே பாண்டியா பொம்மை, பொம்மை அட்டை, மற்றும் அனைத்துப் பாராட்டுக்களுக்கும் நன்றி. இவை யனைத்தும் நடிகர் திலகத்திற்கே.
தாங்கள் கூறியது தான் உண்மை. மனோகரா படத்தில் சிங்காரப் பைங்கிளியே பேசு பாடலின் இசைத்தட்டிலும் உடுமலை நாராயண கவியின் பெயர் தான் உள்ளது. அவர் இயற்றியது என்பதே உண்மை. ஆனால் சில சமயங்களில் இது போன்ற சர்ச்சைகள் வருவதுண்டு.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
24th April 2011, 08:53 AM
கேள்வி - பதில்

கேள்வி - நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு எந்த வேடம் போட்டாலும் கச்சிதமாக பொருந்துகிறதே
பதில் - அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிரமான ரசிகர் அல்லவா, பொருந்தாமல் இருக்குமா

நன்றி - தினத்தந்தி 24.04.2011 பக்கம் 14 குருவியாரின் சினிமா கேள்வி பதில் பகுதி.

அன்புடன்

RAGHAVENDRA
24th April 2011, 11:08 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 9

1961ம் ஆண்டில் வெளிவந்த மறக்க முடியாத நடிகர் திலகத்தின் காவியங்களில் மருத நாட்டு வீரனும் ஒன்று. இப் படத்தில் நடிகர் திலகத்தின் பல்வேறு தோற்றங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். மறைந்த மாமேதை தமிழ்த் திரைப்பட உலகின் முதல் இசையமைப்பாளராக கருதப் படும் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்த படம் மருத நாட்டு வீரன். அனைத்துப் பாடல்களும் இனிமை. என்றாலும் இப்பாடல் மிகவும் நெஞ்சை கொள்ளை கொள்ளும். இப்பாடலில் நடிகர் திலகத்தின் புன்னகை நம்மை வசீகரத்தில் ஆழ்த்தும். அட்டகாசமான ஸ்டைல். சொல்லிக் கொண்டே போகலாம். இப்பாடலை இதுவரை பார்க்காதவர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். பாடல் கண்ணதாசன், பாடியவர் டி.எம்.சௌந்தர்ராஜன். உடன் நடித்தவர் ஜமுனா. படம் வெளிவந்தா நாள் ஆகஸ்ட் 24, 1961. இனி பாடலைக் காண்க.


http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE

அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்

Seablues
25th April 2011, 04:05 AM
Hi all,

I have created a blog to collect all motivational/philosophical songs from Sivaji Ganesan movies. But I noticed that unlike MGR songs, there isn't any full list of thatthuva padalgal from Sivaji movies. If anyone have the full list, do provide me. In the meantime you can view the songs here :
http://sivaji-philosophical-songs.blogspot.com/

RAGHAVENDRA
25th April 2011, 07:23 AM
Dear Seablues
Our sincere appreciations for your efforts in compiling the motivational and philosophical songs of Sivaji and MGR. It's a really good service.
Please go through all the 7 parts of this thread on Nadigar Thilagam Sivaji Ganesan. You will find in-depth analyses of the songs by senior stalwarts like Saradha, Murali, Joe, Nov and later joined by many fans.
Before posting, would like to give a humble suggestion. Please categorize differently the philosophical, motivational, principle songs. Many songs of Nadigar Thilagam are motivational and principle based but unfortunately they are miscategorised as philosophical. Songs that feature in a situation where the hero or the person concerned faces despair, loss, or failure and frustration, usually deemed as philosophical. But songs in other situations are also deemed as philosophical as far as NT is concerned, where this is not correct. We shall classify and post the list here as soon as possible and you can use that list in your blog. For e.g. Ulladhai Solven is a song depicting how the character is and what he has in mind. This is not a sad song or philosophical song. Like that there are many songs which need appropriate classification.
Please keep watch on this thread for a classified list of songs featuring Sivaji Ganesan.

Raghavendran

rangan_08
25th April 2011, 11:51 AM
" Endru thaniyum indha sudhandhira dhaagam..."

Great patriot, great song, splendid performance.....thank you Raghavendra sir for posting the song.

I used to say that apart from performances in various films, this powerful, honest & realistic performance in Kappalottiya Thamizhan should have fetched a National Award for our NT.

When i think about the kind of sacrifice Chidambaram ayya and other patriots have made to attain freedom, I used to get very emotional and the way in which this class performer gave life to the character......moves me to tears.

rangan_08
25th April 2011, 11:55 AM
Definitely Sir ! Mr.YGM is one of the pioneers in our NT fraternity.

Rajinikanth & Rangan : Guru-Sishyan !


Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

Plum
25th April 2011, 01:38 PM
Malarndhum malarAdha is a knockout punch. If you cannot become a NT fanatic after seeing this song, then as the Bard said, you are only fit for treasons and strategems. And such a lovely, soothing lullaby that gives the poignancy in just the right dose without going overboard despite the overwhelming melodrama of the movie, script and situation.

veLLai rOja was THE talk of the town when it released - atleast in and around my father's circles. There was a much bigger buzz on the movie over and above Superstar's thanga magan, which from my memory was just an average grosser and an average talk-generator-among-regular-public. I dont remember TMT being released on the same day - I do remember a few watches of TMT in (Dont rememberr Sathyam, Safire or Anand complex) a Box Seat long after it released.
Absoolutely loved the movie when watched first - nagooru pakkathula dance included. Rousing stuff from the Raja of Music, too.
White Rose became one of NT's most succesful 80's movies if I remember it right. Perhaps the most succesful one after Mudhal Mariyadhai.

Mahesh_K
25th April 2011, 02:32 PM
Plum - List of 9 movies which were released on 4.11.1983 Deepavali day ....including Thoongathey..

1. Aboorva sagodarigal
2. Kaivarisai
3. Manaivi solle mandiram
4. Nenjodu nenjam Neeru pootha neruppu
5. Naalu perukku nandri
6. Thangaikkor geetham
7. Vellai roja
8. Thangamagan
9. Thoongathe thambi thoongathe

Vellai Roja, Theerpu and Neethipathi were NTs Superhits in 80s, like Mudhal mariyadhai

In fact, these 3 movies were received well in all three centers A, B and C, unlike Mudhal Mariyadhai which did not do well ( comparatively) in few centers.

Plum
25th April 2011, 03:18 PM
Mahesh, I have no first-hand facts- just memories and perceptions being as I was only 12-13 years old at that time. Obviously you speak with checked facts and figures so no questioning your observations. I just rambled in recollection randomly in my previous post.
Thangaikkor Geetham was quite a rage, too. Teeyaar family's been torturing us non-stop since 1980.

Mahesh_K
26th April 2011, 11:26 AM
. Teeyaar family's been torturing us non-stop since 1980.

.....:lol2:.....

J.Radhakrishnan
26th April 2011, 11:37 AM
நன்றி திரு ராகவேந்தர் சார்,

மருதநாட்டு வீரன் பாடல் அருமை!!! இதன் dvd வெளி வந்து விட்டதா?

Abhinaya
26th April 2011, 06:46 PM
அந்த தீபாவாளிக்கு வந்த படங்களில் முதல் மூன்று இடங்கள் முறையே வெள்ளை ரோஜா , தூங்காதே தம்பி தூங்காதே மற்றும் தங்கைக்கோர் கீதம் படங்களுக்குத்தான்.

வெள்ளை ரோஜா பேரு வெற்றி பெற்று சென்னை நகரில் மட்டும் 6 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.


100 நாட்கள் ஓடிய படம் முதல் இடத்தில். 250 நாட்கள் ஓடிய படம் இரண்டாவது இடத்திலா?

நல்ல காமெடி போங்கள்.

goldstar
27th April 2011, 05:12 AM
100 நாட்கள் ஓடிய படம் முதல் இடத்தில். 250 நாட்கள் ஓடிய படம் இரண்டாவது இடத்திலா?

நல்ல காமெடி போங்கள்.


Rajaram,

I believe you refer "ThangaMahan" run 250 days in Madurai Meenakshi paradise, if you are from Madurai then you should know the theatre capacity of Meenakshi paradise, where as VellaiRoja released in Madurai Central and Madurai Central capacity is 3 times of Madurai Meenakshi paradise, so get the fact ....

Cheers,
Sathish

parthasarathy
27th April 2011, 03:57 PM
Rajaram,

I believe you refer "ThangaMahan" run 250 days in Madurai Meenakshi paradise, if you are from Madurai then you should know the theatre capacity of Meenakshi paradise, where as VellaiRoja released in Madurai Central and Madurai Central capacity is 3 times of Madurai Meenakshi paradise, so get the fact ....

Cheers,
Sathish

Dear Friends,

Thanks for rekindling the fond memories of Vellai Roja, one of the very successful movies of NT during 1980s.

As we were sure of the success of Vellai Roja, I made advance booking for Vellai Roja, for about 10 tickets, in Udayam and took my parents, periamma, sister, brother and a few friends for the opening show at Udayam, it was one of those earliest movies got released in Udayam and was the first successful movie there (first movies - Sattam & Sivappu Sorriyan were average grossers during their release). I still remember the adulation NT received, especially, in the introduction scene of NT in the Inspector role, the way he emotes after seeing his brother, lying dead, after opening the coffin. As NT's role as a Father, was a bit soft one, he was almost subdued and Inspector role came as a joy, especially for us - his Fans. Interval followed immediately and the entire crowd was talking about that scene. The second half of the movie was racy. The success of the movie can be attributed to NT, tight screenplay, Prabhu's good performance and Ilaiyaraja's excellent music.

I am not sure, whether Thoongadhe Thambi Thoongadhe was released along with Vellai Roja, Thanga Magan and Thangaikkor Geetham (notoriously remembered for wasting Sivakumar in an insignificant role!). Here, Vellai Roja was a winner by miles closely followed by TR's movie and Thanga Magan.

This is not the first time, NT came trumps when his movies were released along with the socalled young brigade. NT did it in 1981 when Keezhvanam Sivakkum was released along with Andha 7 Naatkal, Thanneer Thanneer and Ranuva Veeran where KS was the clear winner. Already, elaborate details were given by experts Mr. Murali and Mr. Pammalar.

For NT, winning and keep winning is a habit, which he continues even now!

Regards,

R. Parthasarathy

hattori_hanzo
27th April 2011, 04:19 PM
Rajaram,

I believe you refer "ThangaMahan" run 250 days in Madurai Meenakshi paradise, if you are from Madurai then you should know the theatre capacity of Meenakshi paradise, where as VellaiRoja released in Madurai Central and Madurai Central capacity is 3 times of Madurai Meenakshi paradise, so get the fact ....

Cheers,
Sathish

Goldstar,
Abhinaya is referring to Thoongadhe Thambi Thoongadhe and not Thanga Magan.

goldstar
27th April 2011, 04:50 PM
Goldstar,
Abhinaya is referring to Thoongadhe Thambi Thoongadhe and not Thanga Magan.

Hi

TTT was released in Madurai Sugapriya theatre and also this movie did not run 250 days in Madurai, not sure in which city it has run 250 days, more over Sugapriya capacity is same as Meenakshi paradise.

Cheers,
Sathish

selva7
27th April 2011, 05:01 PM
Rajaram,

I believe you refer "ThangaMahan" run 250 days in Madurai Meenakshi paradise, if you are from Madurai then you should know the theatre capacity of Meenakshi paradise, where as VellaiRoja released in Madurai Central and Madurai Central capacity is 3 times of Madurai Meenakshi paradise, so get the fact ....

Cheers,
Sathish
தங்க மகன் நெல்லையில் சுமார் 2 வாரங்களே ஓடிய படம். தங்க மகன் தமிழகத்தில் பரவலாக அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை.
தூங்காதே தம்பி தூங்காதே நெல்லையில் 85 நாட்களுக்கு மேல் ஓடியது.
வெள்ளை ரோஜா நெல்லை பூர்ணகலாவில் 50 நாட்கள் ஓடியது.

Abhinaya
27th April 2011, 06:01 PM
Rajaram,

I believe you refer "ThangaMahan" run 250 days in Madurai Meenakshi paradise, if you are from Madurai then you should know the theatre capacity of Meenakshi paradise, where as VellaiRoja released in Madurai Central and Madurai Central capacity is 3 times of Madurai Meenakshi paradise, so get the fact ....

Cheers,
Sathish

1983 Deepavali Releases - Madurai details

Thoongathe Thambi Thoongathe - released in Sugapriya and Madhu
Sugapriya - 200+ days
Madhu - 40+ days
shanthi - 50 days(second release)

Thanga mahan - released in Meenakshi paradise and sundaram
Meenakshi paradise - 175 + days
sundaram - 40+ days

Vellai roja - central - 100 days

Thangaikkor geethan - abirami - 100 days

சிவாஜி படம் மட்டும் தான் ஓடியது. மற்ற படங்கள் ஓடவில்லை என்று வரலாற்றை மாற்றாதீர்கள்.

parthasarathy
27th April 2011, 06:04 PM
நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)

என்னடா இது இந்தக் கட்டுரையை இன்னும் முடிக்கலையா இந்த ஆள் என்று யோசிக்க வேண்டாம்! அலுவலக நிமித்தமாக இடைவிடாது வேலைகள் இருந்து கொண்டே இருந்ததால், இடையே சிறிது இடைவெளி. இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதி விட்டால், இந்தக் கட்டுரையை முடித்து அடுத்த கட்டுரையைத் துவங்கி விடுவேன். (அடப்பாவி! விட மாட்டானோ?)

9. தங்கப்பதக்கம் (1974) / கொன்ட வீட்டி சிம்ஹம் (1980) தெலுங்கு / ஷக்தி (1981) ஹிந்தி

இயக்குனர் மகேந்திரன் கதை வசனம் எழுதி செந்தாமரை அவர்களால் "இரண்டில் ஒன்று" என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு வந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு, பார்த்து, அந்த நாடகத்தை இன்னும் மெருகேற்றி, தங்கப்பதக்கம் என்ற பெயரில், சிவாஜி நாடக மன்றத்தின் மூலம், நாடகமாகவே சில காலம் நடத்தி/நடித்து, பின் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில், அதே பெயரில், திரு. மாதவனை வைத்து, திரைப்படமாக்கினார். வசூல் சாதனை செய்து (தமிழகம் மட்டுமல்லாது, பெங்களூரு போன்ற மற்ற நகரங்களிலும் கூட) வெள்ளி விழாக் கொண்டாடிய படம். நடிகர் திலகம் மறுபடியும், தொடர்ந்து, இருபத்தியிரண்டாம் வருடத்தில், நான் ஒரே நேரத்தில், அற்புத நடிகன் மற்றும் மிக மிக வெற்றிகரமான நட்சத்திரம் என்பதை நிரூபித்த படம்! அதாவது, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாமல், கதை, களம், நல்ல இயக்கம், நடிப்பு போன்ற அம்சங்களை வைத்தே, மறுபடியும், வெற்றிக்கொடி நாட்டிய படம்.

இந்தப் படத்தைப் பற்றியும் பக்கம் பக்கமாக நாட்கணக்கில் அலச முடியும்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசினால், கீழ்க் காணும் விஷயங்களைக் குறிப்பிட்டு விட்டுத்தான் படத்துக்குச் செல்ல முடியும்.

ஒன்று, அவரது ஒப்பனை மற்றும் நடை, உடை, பாவனை. குறிப்பாக, அந்த சிகை அலங்காரம் மற்றும் மீசை. இப்போதெல்லாம், ஆளாளுக்கு, தடுக்கி விழுந்தால், அதுவும் நடிக்க வந்த புதிதிலேயே, காவல் துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்கிறார்கள். ஆனால், நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்து, 22 வருடங்கள் வித விதமான பாத்திரங்களை ஏற்று நடித்து, பின்னரே, ஒரு முழு நீள காவல் துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்றார். இதற்கு முன்னர், ஸ்கூல் மாஸ்டர் (மூன்று மொழிகளில், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி) படத்தில் கௌரவ வேடத்திலும், ராஜாவில், ஒரு ஐந்து நிமிடங்களும் மட்டும் போலீஸ்காரர் வேடத்தில் வருவார். அந்தப் படங்களிலும், அந்த அர்பணிப்பையும் சிரத்தையையும் காணலாம். சிலர் நடிப்பது போல், எக்கச்சக்க தலை முடி, ஸ்டெப் கட் மற்றும் அடர்த்தியான பெரிய கிருதா இல்லாமல், ஓட்ட வெட்டிய கிராப்பு, மற்றும் மீசையுடன் வருவார். நடிகர் திலகம் ஒரு நாளும் வியாபார காரணங்களுக்காக, கலைத்தன்மையை இழந்ததில்லை. இந்தப் படம் வந்து சில மாதங்களில் வெளியான, என் மகன் படத்தில், வேறு மாதிரியான போலீஸ் கார ஒப்பனையில் வந்து, வித்தியாசமாக நடித்திருந்தார். இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்ட வெள்ளை ரோஜாவில், வேறு கெட்டப் நடிப்பு, தீர்ப்பு படத்தில், வேறு விதம், திருப்பத்தில் வேறு விதம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

நான் பல நாட்களுக்கு முன் படித்த செய்தி - இந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு, நடிகர் திலகம் அப்போதைய தமிழகத் தலைமைக் காவல் அதிகாரி திரு. I.G. அருள் அவர்களையும் இன்னும் சில மூத்த காவல் அதிகாரிகளையும் அழைத்திருந்தார். படம் முடிந்தவுடன், திரு. அருள் அவர்கள், "தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து காவல் துறை அதிகாரிகளும், அலுவலர்களும், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். இது ஒன்று போதும், நடிகர் திலகத்தின் அற்பணிப்பைப் பறை சாற்ற.

பின்னர், திரு. தேவாரம் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடிகர் திலகம், நான் இந்த சௌத்ரி பாத்திரத்திற்கு, தற்போது இருக்கும் ஒரு அதிகாரியை தான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டேன். உங்களால் அது யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் என்று சொல்ல, அவரும் தெரியாது என்று சொல்ல, பின்னர், நடிகர் திலகம், இது உங்களை வைத்துதான் என்றாராம் - அதாவது, அந்த சிகை அலங்காரம், மீசை மற்றும் சில உடல் மொழிகள். தேவாரம் வாயடைத்துப் போனாராம். நடிகர் திலகம் இத்தனைக்கும் அவரை பல வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தடவை தான் சில நிமிடங்கள் பார்த்திருக்கிறார். அதாவது, ரொம்ப நாட்களுக்கு முன், ஊட்டியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது, நடிகர் திலகத்தைக் காணப் பெருங்கூட்டம் கூடி விட, கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போது அங்கு உயர் காவல் துறை அதிகாரியாக இருந்த தேவாரம் அவர்கள், ஜீப்பில் இருந்து இறங்கிக் கூட்டத்தை அவருடைய பாணியில் கட்டுப்படுத்தி விட்டு, நடிகர் திலகத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றாராம். அந்த சில நிமிட நேரத்தில், தேவாரம் அவர்களின் உடல் மொழி மற்றும் ஒப்பனையை வழக்கம் போல், நடிகர் திலகம் கூர்ந்து கவனித்து, பின்னாளில், அதை தங்கப்பதக்கம் படத்தின் எஸ்.பி.சௌத்ரி பாத்திரத்திற்குப் பல வருடங்கள் கழித்து பயன்படுத்திக்கொண்டதை அறிந்து, தேவாரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாராம்! (தேவாரம் மட்டுமா?)

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் நடிகர் திலகம் மறைந்த சில நாட்களில், சென்னை தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றியும், அவரோடு, தங்கப்பதக்கத்தில் பணிபுரிந்த அனுபவங்களைப் பற்றியும் உணர்வுபூர்வமாகக் கூறினார். ஒரு முறை, மகேந்திரன் நடிகர் திலகத்திடம், அது எப்படி, நேரில், சாதாரண உயரமாய் இருக்கும் நீங்கள், திரையில், மிக உயரமாகத் தெரிகிறீர்கள் என்று வினவினாராம். அதற்கு நடிகர் திலகம் சிரித்துக் கொண்டே, அதெல்லாம் ஒன்றுமில்லை, ஒரு பாத்திரத்தை நான் ஏற்று நடிக்கும்போது, அந்தப் பாத்திரத்தை உணர்வு பூர்வமாய் சித்தரிக்கிறேன். ஆனால், பார்க்கும் நீங்கள் என்னை அந்தப் பாத்திரமாகத்தான் பார்க்கிறீர்கள். நீங்கள், கெளரவம் படத்தைப் பார்க்கும் போது, பாரிஸ்டர் பாத்திரத்தில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி சுய மரியாதை நிரம்பியவராய் நடித்ததால், அந்தப் பாத்திரத்தில், நான் எல்லோருக்கும் உயரமாகத் தான் தெரிவேன். இப்போதும், அப்படித்தான் என்று சாதாரணமாய்க் கூறினாராம். மகேந்திரனும், "மீண்டும் நாடகம் ஆரம்பித்தது. நாங்கள் மறுபடியும் எஸ்.பி. சௌத்ரியைப் பார்க்கும்போது திரும்பவும் அவர் உயரமாகத் தான் தெரிந்தார். இது கண் கட்டு வித்தையோ? என்று மறுபடியும் வியந்தோம். இன்றும் வியந்து கொண்டு தான் இருக்கிறோம்" என்று கூறினார்.

அதாவது, அவர் ஒரு பாத்திரத்தை மனதில் வாங்கி, அதை அப்படியே internalise செய்து ஒரு கதாசிரியன் எந்த கற்பனையோடு எழுதினானோ, அதை அப்படியே நூறு பங்கு, வடித்து, சாரி, நடித்து, மக்களிடம் அந்தப் பாத்திரத்தை எடுத்துச் செல்லும் விதம். இந்த விஷயத்தைப் பல வருடங்கள், மிக வெற்றிகரமாகச் செய்ததனால் தான் அவர் நடிகர் திலகமாகிறார். யுகக் கலைஞனாகிறார்.

தங்கப்பதக்கம் ... தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

tacinema
27th April 2011, 07:59 PM
1983 Deepavali Releases - Madurai details

Thoongathe Thambi Thoongathe - released in Sugapriya and Madhu
Sugapriya - 200+ days
Madhu - 40+ days
shanthi - 50 days(second release)

Thanga mahan - released in Meenakshi paradise and sundaram
Meenakshi paradise - 175 + days
sundaram - 40+ days

Vellai roja - central - 100 days

Thangaikkor geethan - abirami - 100 days

சிவாஜி படம் மட்டும் தான் ஓடியது. மற்ற படங்கள் ஓடவில்லை என்று வரலாற்றை மாற்றாதீர்கள்.

Rajaram alias abhinaya,

Thanks for madurai input. As NT fans, we don't claim that only NT movies ran and became history. You conveniently forget that Madurai Central has got 3-4 times seating capacity than that of Sugapriya. Moreover, TTT didn't run 40 days in Madhu. TTT was removed in 5 weeks from Madhu. So, though VR was released in only one theater, it was the biggest BO winner for that Deepavali. So, get the history and fact correct before commenting. Also, when you list out theaters, make sure you highlight seating capacity alongside - that will show a clear picture to others about your understanding of your own hometown Madurai theaters.

Regards

Abhinaya
27th April 2011, 09:39 PM
காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்.

tacinema
27th April 2011, 11:52 PM
காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்.

What the heck do you mean? enna comedy inge?

pammalar
28th April 2011, 04:24 AM
Nadigar Thilagam's VELLAI ROJA

Box-Office Mega-Hit of the year 1983

No.1 Deepavali-Grosser of 1983

100th Day Ad [Daily Thanthi : 11.2.1984]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/VR100.jpg


Collection Notice
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/VRCollectionNotice.jpg


Note:
1. VELLAI ROJA hit the Silver Screens in Chennai & all over South on the Deepavali day of 1983 [4.11.1983].

2. The film also got screened at Chennai Safire from 3.12.1983 and ran upto 16.2.1984 for a period of 76 days.

3. In a handful of centres, "Thanghaikkoar Geetham" surpassed "Thoonghathe Thambi Thoonghathe" in BO collections and attained the No.2 Slot.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
28th April 2011, 04:47 AM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 11

"புதுநாடகத்தில் ஒரு நாயகி"


http://www.youtube.com/watch?v=-QB1TLRkEAk

நடிப்பு : நடிகர் திலகம், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா

பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன்

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : ஊட்டி வரை உறவு(1967)

அன்புடன்,
ராகவேந்திரன் & பம்மலார்.

RAGHAVENDRA
28th April 2011, 11:38 AM
அன்பு ராதாகிருஷ்ணன்,
மருதநாட்டு வீரன் தெளிவான பிரதியுடன் மோசர் பேர் நிறுவனத்தால் தனியாகவும் மற்ற படங்களுடன் கூடிய நெடுந்தகடாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இதோ தங்கள் பார்வைக்கு அந்த நெடுந்தகட்டின் அட்டை
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/MNVKulamaGunamaUP.jpg

அன்பு பம்மலார்,
வெள்ளை ரோஜா திரைப்படத்தின் விளம்பரத்தை இங்கே பிரதியேற்றி நம்மை எல்லாம் அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கில் மீண்டும் வெற்றி காண வருகிறது, சிவாஜி பிலிம்ஸ் புதிய பறவை. 29.04.2011 முதல் தினசரி 3 காட்சிகள்.

http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/flimAlbum/Pudhiya%20Paravai.jpg

அன்புடன்
ராகவேந்திரன்

selva7
28th April 2011, 12:38 PM
Nadigar Thilagam's VELLAI ROJA

Box-Office Mega-Hit of the year 1983

No.1 Deepavali-Grosser of 1983

100th Day Ad [Daily Thanthi : 11.2.1984]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/VR100.jpg


Collection Notice
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/VRCollectionNotice.jpg


Note:
1. VELLAI ROJA hit the Silver Screens in Chennai & all over South on the Deepavali day of 1983 [4.11.1983].

2. The film also got screened at Chennai Safire from 3.12.1983 and ran upto 16.2.1984 for a period of 76 days.

3. In a handful of centres, "Thanghaikkoar Geetham" surpassed "Thoonghathe Thambi Thoonghathe" in BO collections and attained the No.2 Slot.

Warm Wishes & Regards,
Pammalar.

தகவல்கள் அமர்க்களமாக உடனே தந்தமைக்கு நன்றி. அதிலும், நாளிதழ் விளம்பரமே நம்பகத் தகவலாகும். இருப்பினும், விக்கிப்பீடியாவில், தூங்காதே தம்பி தூங்காதே குறித்து வெளியாகியுள்ள... "தூங்காதே தம்பி தூங்காதே 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 4 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.".... என்ற தகவலையும் கவனத்தில் கொள்ளலாம்.

parthasarathy
28th April 2011, 02:28 PM
நடிகர் திலகம் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)

9. தங்கப்பதக்கம் (தொடர்ச்சி...)

இந்தப் படமும், ஓரிரு காமெடி காட்சிகள் தவிர, பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் நேராக சொல்லப்பட்ட நடிகர் திலகத்தின் ஏராளமான வெற்றிப்படங்களில் ஒன்று. சோ அவர்கள் காமெடி கூட படத்தை அந்த அளவுக்கு பாதிக்காது. ஏனென்றால், அவரது இரட்டை வேடங்களில் ஒன்று, ஹெட் கான்ஸ்டபிள் வேடம்.

ரௌடியாக வரும் மேஜரை அவரது குடிசைக்கே சென்று மடக்கிக் கைது செய்து அழைத்துச் செல்லும் கட்டம் (இது தான் படத்தில் நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி).

ஆரம்பத்தில், ஜகன் - அதாவது, அவரது மகன் ஸ்ரீகாந்தை பம்பாய்க்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவரது மனைவி அதாவது கே.ஆர்.விஜயாவிடம், நாம் ஜெகனை பம்பாய்க்கு சென்று பார்க்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறும் கட்டத்தில், படிப்படியாக, ஆரம்பித்து, கோபத்தின் உச்சிக்கே சென்று, "என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று சொல்லும் கட்டம்.

ஆர்.எஸ்.மனோகரை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து, லாகவமாக உரையாடி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்று, வெளியில், அவரது ஆட்களுடன் மோதி தன்னுடைய போலீஸ் லட்டியாலேயே ஒரு அசல் போலீஸ்காரர் போல் சமாளித்து சண்டையிடும் கட்டம்.

அவரும் விகேயாரும் சந்திக்கும் சில காட்சிகள் கலகலப்பானவை (என்னடா எல்லா கெழவனும் சேர்ந்து என்னை கிழவன்றீங்க?...)

என்னதான் பெரிய காவல் துறை அதிகாரியாய் இருந்தாலும், பட்டாசு வெடிக்க பயப்படும் போது காட்டும் நகைச்சுவை கலந்த குழந்தைத் தனம்; மகனை ஒவ்வொரு முறையும் “twinkle twinkle little star” என்று பாடி (ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பாணியில் பாடுவார்) தூங்கவைக்கும் கட்டங்கள்;

மகன் ஸ்ரீகாந்த் பல நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்தபிறகு, ஆசையுடன், அவரைக் கட்டித் தழுவப் போகும்போது, ஸ்ரீகாந்த் அவரை உதாசீனம் செய்யும்போது, மருகும் கட்டம்;

மனைவி, மகளுடன் பூர்ணம் விஸ்வநாதன் வீட்டிற்குப் பெண்ண கேட்கச் சென்று அவமானப்படும் கட்டம்;

“நல்லதொரு குடும்பம்” பாடலில், காட்டும் அந்த கௌரவமான மற்றும் நேர்த்தியான நடன அசைவுகள் - குறிப்பாக, "அந்தப் பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன்" என்று பாடும்போது காட்டும் அந்தக் குறிப்பான பாவம் - அவரது மனைவியைக் கிண்டல் செய்து பாடும் கட்டங்களில் கூட அந்தப் பாத்திரத்தின் கௌரவத்தை maintain செய்வது; கைத் தட்டும் ஸ்டைல் - அடடா இந்தக் கைதட்டலுக்கும், "யாரடி நீ மோகினி" பாடலில் கைத் தட்டுவதற்கும் தான் என்னவொரு வித்தியாசம்!

பாடல், முடிந்தவுடன், திடீரென்று மறைந்து விட்டு (இதை படம் பார்ப்பவர்களும், படத்தில் நடிப்பவர்களும் கூட உணரா வண்ணம் அற்புதமாக எடுத்திருப்பார்கள்.) எல்லோரும் அதிர்ச்சியடையும் வண்ணம், போலீஸ் உடையில் மெதுவாக மாடியில் இருந்து இறங்கி வந்து, மகன் ஸ்ரீகாந்தைக் கைது செய்யும்படி அங்கிருக்கும் கான்ஸ்டபிள்களை உத்தரவிடும் கட்டம் அதிரடியாக இருக்கும்! அதைவிட, ஸ்ரீகாந்திடம், அவரை வலையில் விழ வைக்கக் கையாண்ட தந்திரங்களைக் கூறி, மாறு வேடத்தில் வந்த ஒவ்வொரு போலீஸ் காரரையும் அறிமுகப் படுத்தும் கட்டம் மேலும் அதிரடி. ஒரு வகையில், ஸ்ரீகாந்துடன் சேர்ந்து நமக்கும், நடிகர் திலகம் மீது கோபம் வரும்! இருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைக்கும்!!

இதற்குப் பிறகு, மனைவிக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து சக்கர நாற்காலியில் நடமாடும் நிலை வந்தவுடன், அவருக்கு ஆதரவாக ஒரு அன்பான கணவனாக அவருக்குப் பணிவிடை செய்யும் கட்டங்கள்; குறிப்பாக, "சுமைதாங்கி சாய்ந்தால்" பாடலில், அவருக்கு தலை சீவி, பொட்டு வைத்து விடும்போது, பார்க்கும் அத்தனை தாய்மார்களையும் கலங்க வைத்து விடுவார்/ ஏங்க வைத்தும் விடுவார் - இது போல், ஒரு கணவன் இருக்கக் கூடாதா என்று!

பின்னர், அலுவலகத்தில், அவரது உயர் அதிகாரியிடம் (இயக்குனர் கே.விஜயன்) பாராட்டை வாங்கி அந்த மகிழ்ச்சியை அளவோடு வெளிப்படுத்தி; உடனே, மனைவி கே.ஆர்.விஜயா இறந்ததாக செய்தி வந்தவுடன் இலேசாக தடுமாறி உடன் சமாளித்து, அந்தப் போலீஸ் நடையை நடக்கும் கட்டம் (அரங்கம் அதிரும் கட்டமாயிற்றே!)

உடனே, வீட்டிற்கு வந்து, அந்த முண்டா பனியனுடன் (படிக்காத மேதையிலும் இதே முண்டா பனியன் தான் – ஆனாலும் என்னவொரு வித்தியாசம்!) மாடி ஏறி வந்து, மனைவியின் சடலத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து, மொத்தமாக உடைந்து அழும் கட்டம். (இயக்குனர் மகேந்திரன் அவர்களை மட்டுமல்ல; பார்த்த எல்லோரையுமே கலங்க வைத்த நடிப்பு.)

உடனே, மகன் ஸ்ரீகாந்த்தின் வீட்டிற்க்குச் சென்று, அவரைத் தாயின் சிதைக்குக் கொள்ளி வைக்க அழைத்து, அவரால் அவமானப் படும் கட்டம். தாங்க முடியாத சோகத்தை வெளிப்படுத்தும் விதம் (குடையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு பின் மெதுவாக வெளியேறும் விதம்!).

"சோதனை மேல் சோதனை" பாடலின் இரண்டாவது சரணம் - மிகச் சரியாக, பிரமீளா அந்தப் புகழ் மிக்க வசனத்தைப் பேசி முடித்தபின் துவங்கும் - "நான் ஆடவில்லையம்மா சதை ஆடுது" என்று கூறிக்கொண்டே தன் இரண்டு கைகளைக் காட்டும் போது - ஒட்டு மொத்த அரங்கமும் அதிரும்.

ஸ்ரீகாந்திடம் வாதிடும் ஒவ்வொரு கட்டமும் தீப்பொறி பறக்கும் கட்டங்கள். குறிப்பாக, பின் பாதியில், “now, let me talk like a policeman”, என்று துவங்கி, கோபத்தை வெளிப்படுத்தும் கட்டம் புகழ் பெற்றது.

கடைசியில், தாய் நாட்டுக்கே துரோகம் செய்யத் துணியும் தன் மகனையே சுட்டுத் தள்ளி விட்டு அவனை மடியில் கிடத்தி "twinkle twinkle little star” என்று கதறும் கட்டம் அதுவும் "Like a diamond in the sky" அதாவது "வானத்தில் வைரமாய் தன் மகன் மின்னுவான்" என்று நினைத்து இப்படி ஆகி விட்டானே என்று கதறும் போது - இதை எழுதும் எனக்கே மயிர்க் கூச்செரிகிறதே, பார்த்த ஒவ்வொருவருக்கும் எப்படி இருந்திருக்கும்? அதுவும் முதல் முறை 1974- இல்).

தங்கப்பதக்கம், வந்தபோதே, தெலுங்கில், "பங்காரு பதக்கம்" என்ற பெயரில், டப்பிங் செய்யப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. இருந்தாலும், அந்தக் கதைக்கு இருந்த தாக்கத்தால், என்.டி. ராமா ராவ் அதை மறுபடியும், நேரிடையாக தந்தை மகன் இரண்டு வேடங்களிலும் நடித்து "கொன்ட வீட்டி சிம்ஹம்" என்ற பெயரில் எடுத்து, அதுவும் வெள்ளி விழா வரை ஓடியது. இருந்தாலும், மகன் வேடத்திலும் அவரே நடித்து ஸ்ரீதேவியுடன் டூயட் எல்லாம் பாடி, சில பல பொழுதுபோக்கு அம்சங்களை நுழைத்து அசலைக் கொஞ்சமாக சிதைத்திருந்தார். நடிகர் திலகம் அளவுக்கு, காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் என்.டி. ராமாராவால் சோபிக்கவும் முடியவில்லை.

ஆனால், தங்கப் பதக்கம் ஹிந்தியில், 1981 -இல், திலீப் குமாரும் அமிதாபும் நடித்து "ஷக்தி" என்ற பெயரில் வெளி வந்த போது, தெலுங்கு அளவிற்கு, வியாபார சமரசங்கள் பெரிதாக செய்யாமல் தான் எடுக்கப் பட்டது. திலீப் குமார், அளவோடு நடித்து பெயர் வாங்கியிருந்தாலும், அப்போது புகழின் உச்சியில் இருந்த அமிதாப் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததால், படம் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது.

இந்த இரண்டு மொழிகளிலுமே, மகன் ஸ்ரீகாந்த்தின் பாத்திரத்தை தமிழ் அளவுக்கு எதிர்மறையாகத் தராமல், இலேசாக மாற்றியிருந்தனர். தமிழில் மட்டும் எப்படி முடிந்தது? புகழ் அனைத்தும் நடிகர் திலகத்துக்கே சாரும்! இமேஜ் என்ற வட்டத்துக்குள் சிக்கி சுழலாமல், எந்த சூழ்நிலையிலும், எல்லா விதமான பாத்திரங்களையும் ஏற்று நடித்து, வியாபார சமரசங்கள் செய்யாமல், அத்தனை நல்ல படங்களையும் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய முடிந்ததால்! நடிகர் திலகம் என்ற அற்புதக் கலைஞனின் திறமை மேல் அன்றிருந்த விநியோகஸ்தர்கள் முதல் இயக்குனர்கள் வரை அத்தனை பேருக்கும் நம்பிக்கை இருந்ததால்! எந்தவொரு விஷப் பரீட்ஷையையும் நடிகர் திலகம் என்ற ஒரு அட்சய பாத்திரத்தை வைத்து எடுக்கலாம் என்ற நம்பிக்கை இருந்ததால்!! ஒரு புதிய நடிகரைப் போட்டு அவரையும் பெரிய அளவில் நடிக்க வைத்து அதை மக்களும் ஏற்கும் வண்ணம் செய்து, படத்தை வியாபார ரீதியாக வெற்றி பெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நடிகர் திலகத்தை வைத்து இருந்ததால்!!! இந்த நம்பிக்கை அவருக்குப் பின் எந்தவொரு நடிகர் மேலும் இது வரை வந்ததில்லை! இனி வரப்போவதுமில்லை!! இதில், ஸ்ரீகாந்த்தின் அருமையான நடிப்பையும் குறிப்பிட வேண்டும். அவரை ஏற்கனவே, மக்கள் நிறைய எதிர்மறையான வேடங்களில் பார்த்து விட்டிருந்ததால், இதில், அவரை அந்தப் பாத்திரத்தில் மக்கள், ஏற்றுக் கொண்டார்கள். தெலுங்கில், அவ்வாறு இன்னொரு நடிகரைப் போட்டு எடுக்க, அப்போதிருந்த, சூழ்நிலை என்டியாருக்கு இடம் கொடுக்க வில்லை. ஹிந்தியில், 1981 -இல், திலீப் குமாருக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை. அதனால், மகன் வேடத்திற்கு, அமிதாபையும் போட்டு, அந்தப் பாத்திரத்தையும் கூடியமட்டும் சிதைத்தும் விட்டிருந்தனர்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
28th April 2011, 03:13 PM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

சுடச்சுட நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைப் பட்டியலிடுவதில், தங்களுக்கு நிகர் இன்னொருவர் தான் பிறக்க வேண்டும்!

1983 தீபாவளி அன்று வந்த அத்தனை திரைப்படங்களிலும், நடிகர் திலகம் நடித்த "வெள்ளை ரோஜா" தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது அப்போதே அத்தனைப் பத்திரிகைகளிலும் வெளிவந்து ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம்! திரு. tacinema அவர்களும் சில ஆணித்தரமான விவரங்களை பதிந்திருந்தார். அவர் கூறியபடி இதில் நகைப்புக்கு என்ன இடம் என்று எனக்கும் தெரியவில்லை.

அன்புடன்,

பார்த்தசாரதி

goldstar
28th April 2011, 04:48 PM
Thanks a lot Mr. Parthasarathy for a wonderful writings of "Thangapathakkam". This is one of most favourite movie and I used to enjoy from the title to end, what a movie and what a class performance by NT.

What will be response if this movie released now in Chennai Shanthi?

Cheers,
Sathish

Abhinaya
28th April 2011, 05:03 PM
தூங்காதே தம்பி தூங்காதே - மதுரை நகர் மற்றும் சுற்றி உள்ள ஊர்களில் ஓடிய நாட்கள்.

மதுரை - சுகப்ரியா -200+ days
மது - 40+ days
திண்டுக்கல் - 85 days
விருதுநகர் - 65 days
தேனி - 65 days
பழனி - 50 days
காரைக்குடி - 50 days

1983 -தீபாவளிக்கு எந்த படம் வெற்றி பெற்றது என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.

Mahesh_K
28th April 2011, 05:06 PM
Comedy Rajaram alias Abhinaya mattumthan pannalnga. Mathavanga pannakkudathu.

Abhinaya
28th April 2011, 05:08 PM
What the heck do you mean? enna comedy inge?

நீங்கதானே விஸ்வரூபம் மதுரையில் 100 நாள் ஓடியது,வாழ்வே மாயம் 175 நாள் ஓடவில்லை என்று முன்பு கூறியவர்.

mr_karthik
28th April 2011, 05:14 PM
பார்த்தசாரதி சார்,

தங்கபதக்கம் படத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்களே. காட்சிவாரியாக நீங்கள் விவரிக்கும் அழகே தனி.

அதோடு வேற்று மொழிகளில் அப்படம் எடுக்கப்பட்டபோது நிகழ்ந்தவைகளையும் சுவைபடத்தந்துள்ளீர்கள். இவையெல்லாம் நாங்கள் அறியாதவை.

மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி.

mr_karthik
28th April 2011, 05:32 PM
அன்பு நண்பர்களுக்கு,

இப்போது 1983 தீபாவளிக்கு எந்தப்படம் முதலில் வந்தது எந்தப்படம் கடைசியில் வந்தது என்பது போன்ற விஷயங்களை அலச வேண்டியதில்லை.

பிரச்சினை எங்கிருந்து முளைத்தது என்றால், இயக்குனர் ஏ.ஜெகன்னாதனின் திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியைப்பதிப்பித்த சாரதா அவர்கள், ஜகன்னாதன் தான் இயக்கிய இரண்டுபடங்களான வெள்ளைரோஜா, தங்கமகன் இரண்டும் நன்றாக ஓடி வெற்றிபெற்றதாகச் சொன்னதைக் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் அந்த தீபாவளிக்கு வந்த மற்ற படங்கள் தோல்வியடைந்தன என்ற நோக்கில் திரு, ஜெகன்னாதன் சொல்லவில்லை. தன் உழைப்புக்கு பலன் கிடைத்ததைச் சொல்லிக்கொள்ள ஒரு கலைஞனுக்கு உரிமையில்லையா?.

உடனே மற்றவர்கள் அதை ஒரு பிரஸ்டிஜ் இஸ்யூவாக எடுத்துக்கொண்டு தூங்காதே தம்பி தூங்காதே, தங்கைக்கோர் கீதம் என்று கிளம்பிவிட்டனர். அவையெல்லாம் வெற்றிபெறவில்லையென்று யார் சொன்னார்கள்?. ஒருவேளை ஏ.ஜெகன்னாதன் சொன்னது தவறாகக்கூட இருக்கலாம். அவற்றை விவாதிக்க இது இடம் அல்ல.

பம்மலார் சார் அவர்கள் இவ்வளவு ஆதாரப்பூர்வமாக செய்தித்தாள் விளம்பரங்கள், வசூல் சாதனை நோட்டீஸ்கள் எல்லாவற்றையும் தந்தபிறகும் நான் சொல்கிறேன். 'வெள்ளை ரோஜா' ஒரு படுதோல்விப்படம்தான். போதுமா?.

(ஆனால் சிவாஜி ரசிகர்கள் போல, 'இதோ ஆதாரங்கள்' என்று எடுத்து வீச யாராலும் முடியாது என்பது மட்டும் உண்மை. வெறு டைப் பண்ணுவதென்றால் நான்கூட பண்ணுவேன்).

AREGU
28th April 2011, 06:03 PM
தங்கப்பதக்கம் கருத்தாய்வு வெகு அருமை நண்பரே..!

கடமை வீரரான மாமனாருக்கும், சமூகவிரோதியான கணவனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பிரமிளா நடிப்பும் இப்படத்தில் நன்றாக இருக்கும்..

mr_karthik
28th April 2011, 06:04 PM
தூங்காதே தம்பி தூங்காதே - மதுரை நகர் மற்றும் சுற்றி உள்ள ஊர்களில் ஓடிய நாட்கள்.

மதுரை - சுகப்ரியா -200+ days
மது - 40+ days
திண்டுக்கல் - 85 days
விருதுநகர் - 65 days
தேனி - 65 days
பழனி - 50 days
காரைக்குடி - 50 days

1983 -தீபாவளிக்கு எந்த படம் வெற்றி பெற்றது என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.
சும்மா டைப பண்ணிட்டா ஆச்சா?.

ஆதாரம்..??. செய்தித்தாள் விளம்பரங்கள்..??. ரசிகர்மன்ற நோட்டீஸ்கள்...??.

பம்மலார் அடிச்சார் பாருங்க, அது ஆதாரம்.

அதைவிட்டு சும்மா நம்ம இஷ்டத்துக்கு டை பண்ணிக்கிறதுன்னா, Hey Ram கூட 200 நாள் ஓடியது என்று சொல்லிக்கொள்ளலாமே.

AREGU
28th April 2011, 06:24 PM
திரியின் கருப்பொருளைவிட்டு, மறுமொழிகள் விலகுவதைத் தவிர்க்கலாமே..!

கமல் அவர்களும் நடிகர் திலகத்தின் இரசிகர்தான்.. யார் படம் அதிகநாள் ஓடினாலும் நமக்கு மகிழ்வே..

நடிகர் திலகம் குறித்த திறனாய்வும், தகவல் பகிர்வும் தொடரட்டும்..

அனைவருக்கும் நன்றி..

Abhinaya
28th April 2011, 06:35 PM
சும்மா டைப பண்ணிட்டா ஆச்சா?.

ஆதாரம்..??. செய்தித்தாள் விளம்பரங்கள்..??. ரசிகர்மன்ற நோட்டீஸ்கள்...??.

பம்மலார் அடிச்சார் பாருங்க, அது ஆதாரம்.

அதைவிட்டு சும்மா நம்ம இஷ்டத்துக்கு டை பண்ணிக்கிறதுன்னா, Hey Ram கூட 200 நாள் ஓடியது என்று சொல்லிக்கொள்ளலாமே.

வெள்ளை ரோஜா படம் தான் வெற்றி பெற்றது என்றால்,வெள்ளை ரோஜாவோடு வெளியான மற்ற படங்களின் 100வது நாள் விளம்பரத்தையும் வெளியிடலாமே?

அப்பொழுது தான் எந்த படம் வெற்றி பெற்றது என்ற உண்மை தெரியும் .

mr_karthik
28th April 2011, 07:21 PM
வெள்ளை ரோஜா படம் தான் வெற்றி பெற்றது என்றால்,வெள்ளை ரோஜாவோடு வெளியான மற்ற படங்களின் 100வது நாள் விளம்பரத்தையும் வெளியிடலாமே?

அப்பொழுது தான் எந்த படம் வெற்றி பெற்றது என்ற உண்மை தெரியும் .

ஓகோ... அப்போ அதையும் நாங்கதான் கொடுக்கணுமா?. நல்ல கதையா இருக்கே.

அப்படீன்னா 'அந்தப்பக்கம்' ஒண்ணும் இல்லை.

சரி... விடுங்க.

mr_karthik
28th April 2011, 07:27 PM
திரியின் கருப்பொருளைவிட்டு, மறுமொழிகள் விலகுவதைத் தவிர்க்கலாமே..!

கமல் அவர்களும் நடிகர் திலகத்தின் இரசிகர்தான்.. யார் படம் அதிகநாள் ஓடினாலும் நமக்கு மகிழ்வே..

நடிகர் திலகம் குறித்த திறனாய்வும், தகவல் பகிர்வும் தொடரட்டும்..

அனைவருக்கும் நன்றி..
நீங்க சொல்றது சரிதான். நானும் கமலை ரசிப்பவன்தான்.

ஆனால் இங்கு சிலர் ஒரு 'மோட்டிவ்'வோடு வரும்போது விடக்கூடாது. அவங்க கையைத்தூக்குவதற்கு முன் நாம அடிச்சிடணும்.

அப்படி செய்யாததால்தான் காலம் காலமாக சிவாஜியை சேத்துல போட்டு இழுத்துட்டாங்க.

Murali Srinivas
29th April 2011, 12:19 AM
சாரதி,

எஸ்.பி.சௌத்திரியின் பன்முக பண்புகளை பற்றிய திறனாய்வு வழக்கம் போல் அழகாய் அமைந்திருக்கிறது. வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட தகவல்களில் மலையாளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.நடிகர் திலகத்தின் ரோலில் மது அவர்களும் ஸ்ரீகாந்த் நடித்த வேடத்தில் மறைந்த ஜெயன் அவர்களும் நடித்து வெளி வந்தது. ஆனால் படம் [படத்தின் பெயர் எனக்கு தெரியவில்லை] தோல்வி அடைந்ததாக சொல்வார்கள்.

தங்கபதக்கத்தை பொறுத்த வரை எதிர்பார்த்தது போலவே வெற்றியைப் பெற்ற படம். படத்தின் வெற்றிக்கு மகேந்திரனின் வசனங்கள் முக்கிய பங்காற்றின. அதை நடிகர் திலகம் கையாண்ட விதமும் அதை மாதவன் திரையில் கொண்டு வந்தது நேர்த்தியும் வெற்றிக்கு வழி வகுத்தன.

இரவில் நேரம் கழித்து வரும் நடிகர் திலகம் தூங்க கொண்டிருக்கும் மகனை தோளில் சுமந்தபடி twinkle twinkle பாட்டு பாட, உங்களுக்கு ஏன் சிரமம் என்று விஜயா கேட்க நீ பத்து மாசம் சுமந்திருக்கியே நான் பத்து செகன்டாவது சுமக்கறேனே என சொல்லும் சௌத்ரி, மகன் சாப்பிடுவதை பார்த்து விட்டு அவனுக்கு ஆப்பிள் வாங்கி வச்சிருந்தேனே என ப்ரிஜை திறந்து பழத்தை எடுக்க , மகன் சாப்பிடாமல் எழுந்து போக மனவருதை முகத்தில் காட்டாமல் மறைக்கும் சௌத்ரி, அலுவலக பணம் திருடு போய்விட்டதை விசாரிக்க வரும் சௌத்ரி வெளியூருக்கு எங்கேயும் போக கூடாது என்று சொல்ல, எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க சார்,பக்கத்து ஊருக்கு போவதாக இருந்தால் கூட தனியா அனுப்ப மாட்டங்க என்று ஸ்ரீகாந்த் சொல்ல ஆனா வேலூருக்கு போறதா இருந்தா தனியாதான் போகணும் என டைமிங் பன்ச் அடிக்கும் சௌத்ரி, நல்லதொரு குடும்பம் பாடல் முடிந்ததும் வரும் கைது படலம்,சவால் காட்சி இடைவேளை அதற்கு பிறகு வரும் காட்சி, சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் மனைவி மருமகளிடம் நிதானமாக தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம் [நானே ஒரு கொலை பண்ணிட்டா,எஸ்.பிங்கறதுக்காக என்னை சும்மாவா விட்டுருவாங்க?], அவர்களை கன்வின்ஸ் செய்ய அவர் சொல்லும் வசனம் குற்றவாளி உனக்கு மகன் அவளுக்கு கணவன் ஆனா இரண்டு பேரும் ஒரு விஷயத்தை மறந்திடீங்க அவன் எனக்கும் மகன்தான் என்று முடிக்கும் சௌத்ரி, நீங்க சாப்பிடலையா என கேட்கும் மனைவியிடம் அவர்கள் சொன்ன ஒரு நாள் சாப்பிடலேனா உயிரா போயிடும் என்ற அதே வசனத்தை திருப்பி சொல்லி விட்டு வெளியேறும் சௌத்ரி, மாயாண்டி மருமகனுக்கு உதவி செய்யறதா நினைச்சு சம்பந்திக்கு உதவி செஞ்சிருக்க என நக்கல் சிரிப்புடன் சொல்லும் சௌத்ரி, லட்சுமி நான் டெய்லி லேட்டா வருவேன் நீ தூங்காம எனக்காக முழிச்சிடிருப்ப நான் இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டேன் ஆனா நீ தூங்கிடியே, லட்சுமி என்னாலே தாங்க முடியலேம்மா என விழுந்து கதறும் சௌத்ரி, இந்தியாவிலே பெரிய குடும்பம் என்னோடதுதான் என மைனரிடம் மிடுக்காய் பேசும் சௌத்ரி, மத்தவங்களை என் பக்கம் திருப்பிதான்பா எனக்கு பழக்கம், நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கம் இல்லை என தன் நிலைபாட்டை மகனிடம் விளக்கும் சௌத்ரி,குற்றவாளிகள் தப்பித்து விட்டதால் ஐ.ஜி.யின் முன்னால் தளர்ந்து நிற்கும் சௌத்ரி,குற்றவாளிகள் பிடிபட்டார்கள் என்றவுடன் உடல் மொழியில் வரும் மிடுக்கு, உடனே மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி வந்தவுடன் அப்படியே மீண்டும் தளர்ந்து shall I என்று அனுமதி கேட்கும் சௌத்ரி, இப்படி படம் முழுக்க பிச்சு உதறும் சௌத்ரியை முதன் முதலில் பார்த்த அந்த 1974 ஜூன் 1ந் தேதி முதல் இன்று வரை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவேயில்லை என்பதுதான் உண்மை.

மேஜர் பேசும் ஒரு வசனமும் அரங்கில் அதிக கைதட்டலை் பெறும். எங்க அய்யா, முருகன் கையில் இருக்கற வேல் மாதிரி வளைக்க முயற்சி பண்ணா, வளைஞ்சிருவீங்க என ஸ்ரீகாந்திடம் சொல்லும் போது அரங்கம் அதிரும்.

இனியும் இந்தப் படத்தைப் பற்றியும் அதன் சாதனைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே போகலாம். அது பிறிதொரு நாளில். மீண்டும் பழைய நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த பார்தாவிற்கு நன்றி.

அன்புடன்

AREGU
29th April 2011, 09:49 AM
அருமை முரளி..!

எவ்வளவு ஆத்மார்த்தமாக தங்கப்பதக்கம் படத்தை இரசித்திருக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது..

வெல்லப் பிள்ளையாரை எங்கு தொட்டாலும் இனிப்புதான் என்பார்கள்.. பிள்ளையார் மட்டுமல்ல ; கணேசரும் அவ்வாறே..!

parthasarathy
29th April 2011, 10:01 AM
Thanks a lot Mr. Parthasarathy for a wonderful writings of "Thangapathakkam". This is one of most favourite movie and I used to enjoy from the title to end, what a movie and what a class performance by NT.

What will be response if this movie released now in Chennai Shanthi?

Cheers,
Sathish

Dear Mr. Sathish,

Thanks for your appreciation.

The response will definitely be overwhelming. The joy of watching NT in theatre amidst large gathering is always a treat.

Regards,

R. Parthasarathy

parthasarathy
29th April 2011, 10:05 AM
பார்த்தசாரதி சார்,

தங்கபதக்கம் படத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்களே. காட்சிவாரியாக நீங்கள் விவரிக்கும் அழகே தனி.

அதோடு வேற்று மொழிகளில் அப்படம் எடுக்கப்பட்டபோது நிகழ்ந்தவைகளையும் சுவைபடத்தந்துள்ளீர்கள். இவையெல்லாம் நாங்கள் அறியாதவை.

மிகவும் நன்றி. தொடரட்டும் உங்கள் நற்பணி.

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
29th April 2011, 10:08 AM
தங்கப்பதக்கம் கருத்தாய்வு வெகு அருமை நண்பரே..!

கடமை வீரரான மாமனாருக்கும், சமூகவிரோதியான கணவனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பிரமிளா நடிப்பும் இப்படத்தில் நன்றாக இருக்கும்..

அன்பு நண்பர் திரு. Aregu அவர்களே,

தங்களது நெஞ்சார்ந்த பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். இப்போதுதான் முதல் முறை தங்களது பதிவைப் பார்க்கிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

goldstar
29th April 2011, 10:10 AM
சாரதி,

எஸ்.பி.சௌத்திரியின் பன்முக பண்புகளை பற்றிய திறனாய்வு வழக்கம் போல் அழகாய் அமைந்திருக்கிறது. வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட தகவல்களில் மலையாளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.நடிகர் திலகத்தின் ரோலில் மது அவர்களும் ஸ்ரீகாந்த் நடித்த வேடத்தில் மறைந்த ஜெயன் அவர்களும் நடித்து வெளி வந்தது. ஆனால் படம் [படத்தின் பெயர் எனக்கு தெரியவில்லை] தோல்வி அடைந்ததாக சொல்வார்கள்.

தங்கபதக்கத்தை பொறுத்த வரை எதிர்பார்த்தது போலவே வெற்றியைப் பெற்ற படம். படத்தின் வெற்றிக்கு மகேந்திரனின் வசனங்கள் முக்கிய பங்காற்றின. அதை நடிகர் திலகம் கையாண்ட விதமும் அதை மாதவன் திரையில் கொண்டு வந்தது நேர்த்தியும் வெற்றிக்கு வழி வகுத்தன.

இரவில் நேரம் கழித்து வரும் நடிகர் திலகம் தூங்க கொண்டிருக்கும் மகனை தோளில் சுமந்தபடி twinkle twinkle பாட்டு பாட, உங்களுக்கு ஏன் சிரமம் என்று விஜயா கேட்க நீ பத்து மாசம் சுமந்திருக்கியே நான் பத்து செகன்டாவது சுமக்கறேனே என சொல்லும் சௌத்ரி, மகன் சாப்பிடுவதை பார்த்து விட்டு அவனுக்கு ஆப்பிள் வாங்கி வச்சிருந்தேனே என ப்ரிஜை திறந்து பழத்தை எடுக்க , மகன் சாப்பிடாமல் எழுந்து போக மனவருதை முகத்தில் காட்டாமல் மறைக்கும் சௌத்ரி, அலுவலக பணம் திருடு போய்விட்டதை விசாரிக்க வரும் சௌத்ரி வெளியூருக்கு எங்கேயும் போக கூடாது என்று சொல்ல, எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க சார்,பக்கத்து ஊருக்கு போவதாக இருந்தால் கூட தனியா அனுப்ப மாட்டங்க என்று ஸ்ரீகாந்த் சொல்ல ஆனா வேலூருக்கு போறதா இருந்தா தனியாதான் போகணும் என டைமிங் பன்ச் அடிக்கும் சௌத்ரி, நல்லதொரு குடும்பம் பாடல் முடிந்ததும் வரும் கைது படலம்,சவால் காட்சி இடைவேளை அதற்கு பிறகு வரும் காட்சி, சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் மனைவி மருமகளிடம் நிதானமாக தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம் [நானே ஒரு கொலை பண்ணிட்டா,எஸ்.பிங்கறதுக்காக என்னை சும்மாவா விட்டுருவாங்க?], அவர்களை கன்வின்ஸ் செய்ய அவர் சொல்லும் வசனம் குற்றவாளி உனக்கு மகன் அவளுக்கு கணவன் ஆனா இரண்டு பேரும் ஒரு விஷயத்தை மறந்திடீங்க அவன் எனக்கும் மகன்தான் என்று முடிக்கும் சௌத்ரி, நீங்க சாப்பிடலையா என கேட்கும் மனைவியிடம் அவர்கள் சொன்ன ஒரு நாள் சாப்பிடலேனா உயிரா போயிடும் என்ற அதே வசனத்தை திருப்பி சொல்லி விட்டு வெளியேறும் சௌத்ரி, மாயாண்டி மருமகனுக்கு உதவி செய்யறதா நினைச்சு சம்பந்திக்கு உதவி செஞ்சிருக்க என நக்கல் சிரிப்புடன் சொல்லும் சௌத்ரி, லட்சுமி நான் டெய்லி லேட்டா வருவேன் நீ தூங்காம எனக்காக முழிச்சிடிருப்ப நான் இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டேன் ஆனா நீ தூங்கிடியே, லட்சுமி என்னாலே தாங்க முடியலேம்மா என விழுந்து கதறும் சௌத்ரி, இந்தியாவிலே பெரிய குடும்பம் என்னோடதுதான் என மைனரிடம் மிடுக்காய் பேசும் சௌத்ரி, மத்தவங்களை என் பக்கம் திருப்பிதான்பா எனக்கு பழக்கம், நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கம் இல்லை என தன் நிலைபாட்டை மகனிடம் விளக்கும் சௌத்ரி,குற்றவாளிகள் தப்பித்து விட்டதால் ஐ.ஜி.யின் முன்னால் தளர்ந்து நிற்கும் சௌத்ரி,குற்றவாளிகள் பிடிபட்டார்கள் என்றவுடன் உடல் மொழியில் வரும் மிடுக்கு, உடனே மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி வந்தவுடன் அப்படியே மீண்டும் தளர்ந்து shall I என்று அனுமதி கேட்கும் சௌத்ரி, இப்படி படம் முழுக்க பிச்சு உதறும் சௌத்ரியை முதன் முதலில் பார்த்த அந்த 1974 ஜூன் 1ந் தேதி முதல் இன்று வரை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவேயில்லை என்பதுதான் உண்மை.

மேஜர் பேசும் ஒரு வசனமும் அரங்கில் அதிக கைதட்டலை் பெறும். எங்க அய்யா, முருகன் கையில் இருக்கற வேல் மாதிரி வளைக்க முயற்சி பண்ணா, வளைஞ்சிருவீங்க என ஸ்ரீகாந்திடம் சொல்லும் போது அரங்கம் அதிரும்.

இனியும் இந்தப் படத்தைப் பற்றியும் அதன் சாதனைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே போகலாம். அது பிறிதொரு நாளில். மீண்டும் பழைய நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த பார்தாவிற்கு நன்றி.

அன்புடன்


Murali sir,

Ungala mathiri nammalale elutha mudiyathu...

But you have mentioned all my favourite scenes, I believe all NT fans have same feelings like which scene, which style and performance and even particular few seconds scene.

But you are king in explaining each and every scene completely, please continue your posting.

Cheers,
Sathish

goldstar
29th April 2011, 10:13 AM
Dear Mr. Sathish,

Thanks for your appreciation.

The response will definitely be overwhelming. The joy of watching NT in theatre amidst large gathering is always a treat.

Regards,

R. Parthasarathy

Parthasarathy sir,

Yes, the joy of watching NT inside the theatre is always a treat. I just recall how we used make so much "Allapparai" and cut outs, posters when Thangapathakkam re-released in Maduria Alankar, Chinthamani on my school days.

Cheers,
Sathish

goldstar
29th April 2011, 10:28 AM
Aregu sir,

As your location is Trichy, can you please brief us how NT fans make "Allapparai" on re-release movies and how could be the Sunday gala on Trichy theatres? I have not heared much about Trichy and whethere there will be posters still today like Madurai, because Madurai NT fans still have big big posters on all the re-release NT movies.

Cheers,
Sathish

parthasarathy
29th April 2011, 10:35 AM
நீங்க சொல்றது சரிதான். நானும் கமலை ரசிப்பவன்தான்.

ஆனால் இங்கு சிலர் ஒரு 'மோட்டிவ்'வோடு வரும்போது விடக்கூடாது. அவங்க கையைத்தூக்குவதற்கு முன் நாம அடிச்சிடணும்.

அப்படி செய்யாததால்தான் காலம் காலமாக சிவாஜியை சேத்துல போட்டு இழுத்துட்டாங்க.

அன்புள்ள நண்பர்களே,

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் அந்தந்த ரசிகனுக்கு அந்தந்த கலைஞன் ஒசத்திதான். இருப்பினும், நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி விவரம் தெரியாதவர்கள் குறைத்து மதிப்பிடும்போது, அதைத் தாங்க முடியவில்லைதான்! இருப்பினும், நாம் அனைவரும் வழக்கம்போல் நடிகர் திலகத்தை சுவாசித்து இன்புறுவோம்!

நடிகர் திலகம் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்று நிரூபித்துப் பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவருடைய சாதனைகளை திரு. முரளி அவர்கள் ஒரு தனித்திரி மூலம் அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டார். திரு. ராகவேந்தர் நடிகர் திலகத்துக்காக பிரத்தியேக வலைத்தளம் அமைத்து அவர்தம் சாதனைகளையும் அவரைப்பற்றிய செய்திகளையும் தொடர்ந்து பதிந்து கொண்டிருக்கிறார். திரு. பம்மலாரும் மிகப் பெரிய அளவில் authentic புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார். இது போக, நடிகர் திலகத்தின் அத்தனை படங்களும் எண்ணற்ற முறை மறு வெளியீடு ஆகிவிட்டது; குறுந்தகடுகளில் வெளிவந்துவிட்டது; தூர்தர்ஷன் முதல் சன் டிவி வரை கணக்கு வழக்கு இல்லாமல் போட்டாகி விட்டது; ஆயினும், இன்னமும், அவரது படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அதற்குக் கட்டியம் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், அனைத்து ஊடகங்களும் அரசியல் மற்றும் சொந்த லாபங்களுக்காக, வேறொரு மாற்றுத் தரப்பையே பெரிதாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் திலகம் குன்றின் மேலல்ல; இமயத்தின் மேலிட்ட விளக்காகிப் பலப்பல வருடங்களாகி விட்டது.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
29th April 2011, 10:46 AM
சாரதி,

எஸ்.பி.சௌத்திரியின் பன்முக பண்புகளை பற்றிய திறனாய்வு வழக்கம் போல் அழகாய் அமைந்திருக்கிறது. வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட தகவல்களில் மலையாளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.நடிகர் திலகத்தின் ரோலில் மது அவர்களும் ஸ்ரீகாந்த் நடித்த வேடத்தில் மறைந்த ஜெயன் அவர்களும் நடித்து வெளி வந்தது. ஆனால் படம் [படத்தின் பெயர் எனக்கு தெரியவில்லை] தோல்வி அடைந்ததாக சொல்வார்கள்.

தங்கபதக்கத்தை பொறுத்த வரை எதிர்பார்த்தது போலவே வெற்றியைப் பெற்ற படம். படத்தின் வெற்றிக்கு மகேந்திரனின் வசனங்கள் முக்கிய பங்காற்றின. அதை நடிகர் திலகம் கையாண்ட விதமும் அதை மாதவன் திரையில் கொண்டு வந்தது நேர்த்தியும் வெற்றிக்கு வழி வகுத்தன.

இரவில் நேரம் கழித்து வரும் நடிகர் திலகம் தூங்க கொண்டிருக்கும் மகனை தோளில் சுமந்தபடி twinkle twinkle பாட்டு பாட, உங்களுக்கு ஏன் சிரமம் என்று விஜயா கேட்க நீ பத்து மாசம் சுமந்திருக்கியே நான் பத்து செகன்டாவது சுமக்கறேனே என சொல்லும் சௌத்ரி, மகன் சாப்பிடுவதை பார்த்து விட்டு அவனுக்கு ஆப்பிள் வாங்கி வச்சிருந்தேனே என ப்ரிஜை திறந்து பழத்தை எடுக்க , மகன் சாப்பிடாமல் எழுந்து போக மனவருதை முகத்தில் காட்டாமல் மறைக்கும் சௌத்ரி, அலுவலக பணம் திருடு போய்விட்டதை விசாரிக்க வரும் சௌத்ரி வெளியூருக்கு எங்கேயும் போக கூடாது என்று சொல்ல, எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க சார்,பக்கத்து ஊருக்கு போவதாக இருந்தால் கூட தனியா அனுப்ப மாட்டங்க என்று ஸ்ரீகாந்த் சொல்ல ஆனா வேலூருக்கு போறதா இருந்தா தனியாதான் போகணும் என டைமிங் பன்ச் அடிக்கும் சௌத்ரி, நல்லதொரு குடும்பம் பாடல் முடிந்ததும் வரும் கைது படலம்,சவால் காட்சி இடைவேளை அதற்கு பிறகு வரும் காட்சி, சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் மனைவி மருமகளிடம் நிதானமாக தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம் [நானே ஒரு கொலை பண்ணிட்டா,எஸ்.பிங்கறதுக்காக என்னை சும்மாவா விட்டுருவாங்க?], அவர்களை கன்வின்ஸ் செய்ய அவர் சொல்லும் வசனம் குற்றவாளி உனக்கு மகன் அவளுக்கு கணவன் ஆனா இரண்டு பேரும் ஒரு விஷயத்தை மறந்திடீங்க அவன் எனக்கும் மகன்தான் என்று முடிக்கும் சௌத்ரி, நீங்க சாப்பிடலையா என கேட்கும் மனைவியிடம் அவர்கள் சொன்ன ஒரு நாள் சாப்பிடலேனா உயிரா போயிடும் என்ற அதே வசனத்தை திருப்பி சொல்லி விட்டு வெளியேறும் சௌத்ரி, மாயாண்டி மருமகனுக்கு உதவி செய்யறதா நினைச்சு சம்பந்திக்கு உதவி செஞ்சிருக்க என நக்கல் சிரிப்புடன் சொல்லும் சௌத்ரி, லட்சுமி நான் டெய்லி லேட்டா வருவேன் நீ தூங்காம எனக்காக முழிச்சிடிருப்ப நான் இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டேன் ஆனா நீ தூங்கிடியே, லட்சுமி என்னாலே தாங்க முடியலேம்மா என விழுந்து கதறும் சௌத்ரி, இந்தியாவிலே பெரிய குடும்பம் என்னோடதுதான் என மைனரிடம் மிடுக்காய் பேசும் சௌத்ரி, மத்தவங்களை என் பக்கம் திருப்பிதான்பா எனக்கு பழக்கம், நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கம் இல்லை என தன் நிலைபாட்டை மகனிடம் விளக்கும் சௌத்ரி,குற்றவாளிகள் தப்பித்து விட்டதால் ஐ.ஜி.யின் முன்னால் தளர்ந்து நிற்கும் சௌத்ரி,குற்றவாளிகள் பிடிபட்டார்கள் என்றவுடன் உடல் மொழியில் வரும் மிடுக்கு, உடனே மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி வந்தவுடன் அப்படியே மீண்டும் தளர்ந்து shall I என்று அனுமதி கேட்கும் சௌத்ரி, இப்படி படம் முழுக்க பிச்சு உதறும் சௌத்ரியை முதன் முதலில் பார்த்த அந்த 1974 ஜூன் 1ந் தேதி முதல் இன்று வரை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவேயில்லை என்பதுதான் உண்மை.

மேஜர் பேசும் ஒரு வசனமும் அரங்கில் அதிக கைதட்டலை் பெறும். எங்க அய்யா, முருகன் கையில் இருக்கற வேல் மாதிரி வளைக்க முயற்சி பண்ணா, வளைஞ்சிருவீங்க என ஸ்ரீகாந்திடம் சொல்லும் போது அரங்கம் அதிரும்.

இனியும் இந்தப் படத்தைப் பற்றியும் அதன் சாதனைகளைப் பற்றியும் பேசிக் கொண்டே போகலாம். அது பிறிதொரு நாளில். மீண்டும் பழைய நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த பார்தாவிற்கு நன்றி.

அன்புடன்

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

தங்களது மனமார்ந்த பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தங்களது எழுத்து வலிமையால்தான் நான் முதன் முதலில் இந்தத் திரிக்கு ஈர்க்கப்பட்டேன்.

நான் எழுதிய பல்வேறு காட்சிகள் இல்லாமல், மேலும் பல காட்சிகளை அற்புதமாக எழுதி தங்கப்பதக்கத்துக்கு மேலும் சிறப்பை சேர்த்து விட்டீர்கள். தாங்கள் எழுதிய அனைத்து காட்சிகளையும் நானும் - ஏன் அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் எழுத முடியும் - ஏனென்றால், நடிகர் திலகத்தைப் பொறுத்த வரை, அவரது அனைத்து ரசிகர்களும் ஒரே கோணத்தில் தான் சிந்திப்பார்கள். இருப்பினும், நீங்கள் எழுதும் போது, மெருகு பல படிகள் ஏறி விடுகிறது. ஆனால், அதோடு நிற்காமல், என்னைப் போன்ற புதியவர்களை மேலும் பல மடங்கு உத்வேகத்துடன் எழுதவும் தூண்டி விடுகிறது.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
29th April 2011, 11:13 AM
நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றியும் வெற்றிகளைப் பற்றியும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்தி பெருமையும் உவகை கொள்ளும் போது தாய்த் தமிழ்நாட்டில் அவருடைய வெற்றிகளையும் சாதனைகளையும் மறைத்து அதில் சந்தோஷமடையும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். கடல் கடந்து தமிழர்கள் அவரைப் பற்றி எந்த அளவிற்கு பாசமுடன் உள்ளார்கள் என்பதற்கு இந்த ஒளிப் படமே சான்று. இதனை அந்த அன்பர்களுக்கு நாம் அன்புடன் சமர்ப்பிப்போம்.


http://video.google.com/videoplay?docid=3604633588006801092#

அன்புடன்

joe
29th April 2011, 11:40 AM
கடல் கடந்து தமிழர்கள் அவரைப் பற்றி எந்த அளவிற்கு பாசமுடன் உள்ளார்கள் என்பதற்கு இந்த ஒளிப் படமே சான்று.

ஆம் ராகவேந்திரா ஐயா!

நான் குடியிருக்கும் சிங்கை மண்ணின் கலைஞர்கள் படைப்பு என்பதில் எனக்கு கூடுதல் பெருமை . சிங்கை தொலைக்காட்சி , வானொலி அமைப்புகள் எப்போதும் நடிகர் திலகத்தை மறவாது போற்றி வருகின்றன ..நடிகர் திலகத்தின் பிறந்தநாள் , நினைவு நாளில் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளை படைத்து வருகின்றன .. சிங்கை வசந்தம் தொலைக்காட்சிக்கும் , ஒலி 96.8 வானொலிக்கும் நன்றி!

goldstar
29th April 2011, 12:07 PM
ஆம் ராகவேந்திரா ஐயா!

நான் குடியிருக்கும் சிங்கை மண்ணின் கலைஞர்கள் படைப்பு என்பதில் எனக்கு கூடுதல் பெருமை . சிங்கை தொலைக்காட்சி , வானொலி அமைப்புகள் எப்போதும் நடிகர் திலகத்தை மறவாது போற்றி வருகின்றன ..நடிகர் திலகத்தின் பிறந்தநாள் , நினைவு நாளில் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளை படைத்து வருகின்றன .. சிங்கை வசந்தம் தொலைக்காட்சிக்கும் , ஒலி 96.8 வானொலிக்கும் நன்றி!

Thanks Ragavendra sir for a wonderful video link.

Even in Australia hot selling DVDs on Tamil circle are of NT only and I don't see any other Tamil actors remembered like NT on his birthday and rememberence day.

Long live NT fame.

Cheers,
Sathish

saradhaa_sn
29th April 2011, 12:46 PM
டியர் முரளி,
டியர் பார்த்தசாரதி,

பின்னி எடுத்துட்டீங்க. நீங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு 'தங்கப்பதக்கம்' திரைக்காவியத்தை அலசித்தள்ளி விட்டீர்கள். எத்தனை முறை எவ்வளவு விவரித்தாலும் அலுக்காத சலிக்காத படம் அது. அதிலும் 'சோதனைமேல் சோதனை' பாடலின்போது நடிகர்திலகம் , டி.எம்.எஸ்., கண்ணதாசன், எம்.எஸ்.வி. பி.என்.சுந்தரம் என எல்லோரும் சேர்ந்து அட்டகாசம் செய்திருப்பார்கள். ரத்தச்சிவப்பு நிற சட்டையில் நடிகர்திலகத்தின் தோற்றமும், அவருடைய நிகரற்ற முகபாவங்களும் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதற்கேற்றாற்போல மகேந்திரனின் வசனங்களும்.

தன் மகன் மணந்துகொண்டு அழைத்து வந்திருக்கும் பிரமீளா, மேஜரின் மகள் என்றறிந்ததும், 'மாயாண்டி, என் மகன் செஞ்ச தவறுகளிளேயே அழகான தவறு உன் மகளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதுதான்யா' என்று சொல்லும் வசனமும், தொடர்ந்து தன் மனைவியிடம் 'சம்பந்தி வந்திருக்கார், கவனி' என்று சொல்லிப் போகும் இடமும்.

ஒருமுறை பத்திரிகை பேட்டியின்போது மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியிடம், கேள்வி கேட்டவர், "நீங்க பார்த்த தமிழ்ப்படங்களில் உங்களை பாதிச்ச சீன் எதுன்னு சொல்லமுடியுமா?" என்று கேட்க, அதற்கு மம்முட்டி, "தங்கப்பதக்கம் படத்தில் கே.ஆர்.விஜயா இறந்து போன செய்தி கேட்டு வீட்டுக்கு வரும் சிவாஜி சார், மாடிப்படியில் ஏறும்போது தன் வலது கையால் நெஞ்சில் ஸ்லோவாக ஆனால் பலமாக குத்திக்கொண்டே ஆசுவாசப் படுத்தியவாறு செல்வார். ஏனோ தெரியலை, அந்த குத்து ஒவ்வொண்ணும் என் நெஞ்சில் விழுந்த மாதிரி இருந்தது. இதைப்பார்த்து பின்னர் நானும் ஒரு மலையாளப்படத்தில் இதை முயற்சி பண்ணினேன் ஆனால் சரியா வரவில்லை. அவர், அவர்தான்" என்று சொல்லியிருந்தார். ஒரு உண்மையான கலைஞனைப்பற்றி இன்னொரு உண்மையான கலைஞனுக்குத்தானே தெரியும்.

அதுபோலவே, தங்கள் மகனுக்கு திருமணம் செய்விப்பது தொடர்பாக நடிகர்திலகமும், புன்னகையரசியும் பேசிக்கொண்டே ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டு, பால்கனியில் நடந்து, மாடிப்படியில் இறங்கி, இன்னொரு மாடிப்படியி ஏறி, மற்றொரு அறைக்குள் நுழைவது வரை ஒரே ஷாட்டில் படமாக்கும்படி இயக்குனர் மாதவன் சொல்ல, அதைப்படமாக்க தானே கேமராவை கையில் தூக்கிக்கொண்டு பின்னோக்கி நடந்து, அப்படி நடக்கும்போது கேமரா அசைந்து விடக்கூடாது என்பதற்காக, கைமீது ஒரு 'வாட்டர் பாக்' வைத்து அதன்மீது கேமராவை வைத்து அலுங்காமல் பூப்போல எடுத்துக்கொண்டே பின்னோக்கியே நடந்து அக்காட்சியைப் படமாக்கிய சிறப்பை மறைந்த ஒளிப்பதிவு மேதை பி.என்.சுந்தரம் அழகாக விளக்கியிருந்தார்.

கேமராவுக்கு முன் இயங்கிய கலைஞர்களும் சரி, பின்னணியில் இயங்கிய தொழில்நுட்பக் குழுவினரும் சரி, தங்கப்பதக்கம் படத்தில் எல்லோருமே சிறப்பான பங்களிப்பைத் தந்திருந்தனர். இப்படத்துக்கு இசைத்த தீம் மியூசிக்கை, பிற்பாடு மெல்லிசை மன்னர் 'மன்மத லீலை' படத்தில் ஒரு பாடலாகவே இசைத்திருப்பார். எல்லோரும் பட்டபாட்டுக்கு நல்ல பலன் கிடைத்தது. தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியை இப்படத்துக்கு பரிசாகத் தந்தனர். இன்றுவரை இப்படத்துக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. எக்காலத்திலும் குறையாது.

saradhaa_sn
29th April 2011, 12:58 PM
டியர் பம்மலார்,

'வெள்ளை ரோஜா' திரைக்காவியத்தின் 100-வது நாள் தினத்தந்தி விளம்பரமும் வசூல் சாதனை நோட்டீஸும் அட்டகாசமாக உள்ளது.

இன்னும் பல்வேறு படங்களுக்கும் இதுபோன்ற சாதனை பொன்னேடுகளை எதிர்பார்க்கிறோம்.

மனம் குளிரவைத்தமைக்கு மிகவும் நன்றி.

J.Radhakrishnan
29th April 2011, 01:54 PM
டியர் ராகவேந்தர் சார்,
தங்களின் video linkக்கு நன்றி, இதை பார்க்கும் போது மலேசியாவில் உள்ள என் நண்பரின் கூற்று நினைவுக்கு வருகிறது, என் நண்பர் மற்றும் உடன் வேலை செய்யும் சீன நண்பர்களோடு நடிகர் திலகத்தின் பாசமலர் படம் பார்க்கும் போது மொழி புரியாவிட்டாலும் நடிகர்திலகத்தின் நடிப்பை பார்த்து அந்த சீனன் குலுங்கி குலுங்கி அழுதாராம்.

ஒரு உண்மையான நடிகனுக்கு இதுவே சிறந்த அங்கீகாரம்.

Abhinaya
29th April 2011, 04:52 PM
ஓகோ... அப்போ அதையும் நாங்கதான் கொடுக்கணுமா?. நல்ல கதையா இருக்கே.

அப்படீன்னா 'அந்தப்பக்கம்' ஒண்ணும் இல்லை.

சரி... விடுங்க.

தூங்காதே தம்பி தூங்காதே பெரும் வெற்றி பெற்றது என்பது ஊர் அறிந்த உண்மை.

பேப்பர் கட்டிங் எல்லாம் இதற்கு தேவை இல்லை.

நண்பர் selva7 அவர்கள் TTT நெல்லையில் 85 நாட்களுக்கு மேலும் வெள்ளை ரோஜா 50 நாட்கள் மட்டும்தான் ஓடியது என்றும் கூறிவிட்டார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஆனால் இங்கே சிவாஜி ரசிகர்கள் தான் வெள்ளை ரோஜா முதல் இடத்தை பிடித்தது என்று கூறுகிறீர்கள்.

KCSHEKAR
29th April 2011, 05:07 PM
Nadigar Thilagam's VELLAI ROJA

Box-Office Mega-Hit of the year 1983

No.1 Deepavali-Grosser of 1983

100th Day Ad [Daily Thanthi : 11.2.1984]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/VR100.jpg


Collection Notice
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/VRCollectionNotice.jpg


Note:
1. VELLAI ROJA hit the Silver Screens in Chennai & all over South on the Deepavali day of 1983 [4.11.1983].

2. The film also got screened at Chennai Safire from 3.12.1983 and ran upto 16.2.1984 for a period of 76 days.

3. In a handful of centres, "Thanghaikkoar Geetham" surpassed "Thoonghathe Thambi Thoonghathe" in BO collections and attained the No.2 Slot.

Warm Wishes & Regards,
Pammalar.


Timely posted - Thanks to Pammalar.

Abhinaya
29th April 2011, 05:14 PM
சிவாஜியை வசூல் சக்கரவர்த்தி என்று கூறுகிறீர்கள்.அவரது படங்கள் மற்ற நடிகர்கள் படங்களோடு வெளியிட்ட பொழுது எத்தனை முறை வெற்றி பெற்று இருக்கிறது?

1980 -தீபாவளி வெளியீட்டிலும் சிவாஜி படம் தோல்வி அடைந்தது.

விஸ்வரூபம் - 6-11-80 - Flop
வறுமையின் நிறம் சிவப்பு - 6-11-80 - Hit
பொல்லாதவன் - 6-11-80 - Flop

1979 - தீபாவளி வெளியீட்டிலும் சிவாஜி படம் தோல்வி அடைந்தது.

பட்டாக்கதி பைரவன் -19-10-1979 - Flop
நீலமலர்கள் - 19-10-1979 - Flop
அன்னை ஓர் ஆலயம் - 19-10-1979 - Hit

1978 - தீபாவளி வெளியீட்டிலும் சிவாஜி படம் தோல்வி அடைந்தது.

பைலட் ப்ரேம்நாத்- 30-10-1978 - Average
சிகப்பு ரோஜாக்கள் - 28-10-1978 - Super Hit
தாய் மீது சத்தியம் - 30-10-1978 - Above Average

KCSHEKAR
29th April 2011, 05:16 PM
Thanks Mr.Ragavendran for the Excellent Video clipping link (created by Singapore fans). Our sincere appreciation to Singapore fans for their effort.

Plum
29th April 2011, 06:32 PM
AhA! paththikichE.
sari namakkenna
To be on topic, I am reminded of a MSV song in NT movie today. Lovely song.
"Abinaya sundari AdugirAL. than Asai kanavai kUrugiRAL"

tacinema
29th April 2011, 07:48 PM
நீங்கதானே விஸ்வரூபம் மதுரையில் 100 நாள் ஓடியது,வாழ்வே மாயம் 175 நாள் ஓடவில்லை என்று முன்பு கூறியவர்.

This is totally idiotic. About Vishwaroopam - i told you that I wasn't living in Madurai during its release and said that it was info from other NT fans. More importantly, Murali corrected then that VR didn't run for 100 days in Madurai and said it was not a failure in any standards.

About vaazhve maayam (VM) - during your last useless debate with us, you deliberately lied saying that it ran for over 200 days and provoked us claiming that VM created history in besting NT's immortal Vasantha Maaligai in number of days run at Madurai New Cinema. Now, you are correcting yourself saying that VM ran for 175 days. Stop this nonsensical debate - you are bound to lose. What the heck do you get in lowering the gratest icon of tamil cinema?

Now coming to your icon: Take it from me, how many records Kamal has created? Though he is a decent actor, in reality, there are very few. even over hyped moondram pirai didn't run for 100 days in madurai. Moodha poyi, Manmadhan Ambuivai ootunga paa!! appuram inge vaanga.

Who knows in 2015, you might claim that Manmadhan Ambu ran for over 1 year. This is what I would expect from you in 2015

======================================
2011 record created movie: Manmadhan Ambu - collected over 1billion US dollar in 2011
Madurai 4 theaters: 200 + days
chennai: 1 year+
mumbai: 200 days
new delhi: 200 days
New york: 1 year (beating avatar collections)
LA: 1 year
London: 200 days
Paris: 1 year (because the movie was shot in paris)
Frankfurt: flopped (your justification: germans do not have taste for indian movies)
Madrid: 1 year
S.Africa: 200 days (most by any international standard)
on..on...on
======================================
Why dont you first learn to speak truth?

nee mattum madurai-le enga kaiyile kidaiche.......undu illai endru pannidivum...devar magan fight sugapriya-le nadanthathu...visil paranthathu thalaivar NT introductionle... kamal-kku nothing appove!?

thanga mudiyalle... innuma indha hub ungalai thaangudhu!!?

joe
29th April 2011, 08:11 PM
tacinema,
இது போல நம் பொறுமையை இழக்க வைத்து அதனால் வெளிப்படும் வார்த்தைகளின் மூலம் மற்றவர்களும் வந்து நடிகர் திலகத்தை தூற்ற வேண்டும் என்பதே அவர் நோக்கம் என்று தெளிவாக தெரியும் போது நீங்களும் அந்த வலையில் போய் விழலாமா ?

கமல் ரசிகர்களே அவரை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வதில்லை ..அது போக அவர் கமலை விட எம்.ஜி.ஆருக்குத் தான் ரசிகர் .. எம்.ஜி.ஆர் ரசிகராய் இருப்பதால் ஒன்றுமில்லை ..எமக்கு கூட எம்.ஜி.ஆர் பிடிக்கும் .ஆனால் இவரோ நடிகர் திலகத்தை வெறுப்பவர் .வேண்டுமென்றே தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் நோக்கம் நிறைவேற விட வேண்டாம் . தாழ்மையான வேண்டுகோள்.

tacinema
29th April 2011, 08:23 PM
சிவாஜியை வசூல் சக்கரவர்த்தி என்று கூறுகிறீர்கள்.அவரது படங்கள் மற்ற நடிகர்கள் படங்களோடு வெளியிட்ட பொழுது எத்தனை முறை வெற்றி பெற்று இருக்கிறது?

1980 -தீபாவளி வெளியீட்டிலும் சிவாஜி படம் தோல்வி அடைந்தது.

விஸ்வரூபம் - 6-11-80 - Flop
வறுமையின் நிறம் சிவப்பு - 6-11-80 - Hit
பொல்லாதவன் - 6-11-80 - Flop

1979 - தீபாவளி வெளியீட்டிலும் சிவாஜி படம் தோல்வி அடைந்தது.

பட்டாக்கதி பைரவன் -19-10-1979 - Flop
நீலமலர்கள் - 19-10-1979 - Flop
அன்னை ஓர் ஆலயம் - 19-10-1979 - Hit

1978 - தீபாவளி வெளியீட்டிலும் சிவாஜி படம் தோல்வி அடைந்தது.

பைலட் ப்ரேம்நாத்- 30-10-1978 - Average
சிகப்பு ரோஜாக்கள் - 28-10-1978 - Super Hit
தாய் மீது சத்தியம் - 30-10-1978 - Above Average

Dear impossible to change Rajaram,

Sivaji endrume vasool chakravarthy thaan... even last year Shanti re-release Pudhiya paravai proved that point. Sivaji neengal eluthiya 1978-79-80 year mattum nadikkavillai. He acted for over 40 years starting 1952. Having only 3 years records and trying to disprove NT's record is idiotic and foolish. Why do you go to that low level?

Your info - as usual untrue. I will make these corrections:

Vishwaroopam - average or above average. Per NT veterans, VR ran for over 50 days in Madurai New Cinema, 100 days in Chennai.

PPBhairvan - failed... not flop.. (definition for flop: didn't collect investment. PP Bhairavan must have collected investment, as it was not a big budget movie. Eg for flop movies: Mumbai Express, Manmadhan Ambu. Definition for failure: made meagre returns. i would put PPBhairavan under failed category)

P Premanath: Hit movie. Per veterans here, it ran for over 100 days in many centers across tamil nadu. Created history in Sri Lanka. Sigappu Rojakkal was not a super hit, it was just a hit. Dont hype your icon movies.

Why do you bring in Rajini here? Just to make you feel better... don't pretend that you are innocent, because you are not..

Do you know how long these Kamal movies ran?

1. kadal meengal
2. mangamma sabatham
3. per sollum pillai (biggest flop for AVM studios)
4. savaal
5. enakkul oruvan
6. ellam inba mayam
7. naanum oru tholillaali
etc.

Good luck in stooping any level to trash the only icon of tamil cinema.

I would be very happy if you refrain from coming to this thread.

Abhinaya
29th April 2011, 08:48 PM
TACinema,

கோபப்படாதீர்கள். முதலில் நான் கேட்ட கேள்விக்கு யராவது பதில் சொல்லுங்கள்.

சிவாஜி நடித்த எல்லா படத்தையும் வெற்றி படம் என்று கூறுகிறீர்கள்.அப்போ எத்தனை நாள் ஓடினால் தோல்வி படம் என்று கூறுவீர்கள்?

வாழ்வே மாயம் நீங்கள் 175 நாள் கூட ஓடவில்லை என்று கூறியவர்.

எம்.ஜி.ஆர். இருந்த பொழுதே அவருடைய சாதனையை சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை. அப்புறம் எதற்கு வசூல் சக்கரவர்த்தி?



Having only 3 years records and trying to disprove NT's record is idiotic and foolish. Why do you go to that low level?

சாம்பிளுக்கு 3 வருடங்கள் கொடுத்து இருக்கிறேன். எல்லா வருடமும் கொடுத்தால் நீங்கள் ரொம்ப வருத்தப் படுவீர்கள்.

tacinema
29th April 2011, 09:18 PM
TACinema,

கோபப்படாதீர்கள். முதலில் நான் கேட்ட கேள்விக்கு யராவது பதில் சொல்லுங்கள்.

சிவாஜி நடித்த எல்லா படத்தையும் வெற்றி படம் என்று கூறுகிறீர்கள்.அப்போ எத்தனை நாள் ஓடினால் தோல்வி படம் என்று கூறுவீர்கள்?

வாழ்வே மாயம் நீங்கள் 175 நாள் கூட ஓடவில்லை என்று கூறியவர்.

எம்.ஜி.ஆர். இருந்த பொழுதே அவருடைய சாதனையை சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை. அப்புறம் எதற்கு வசூல் சக்கரவர்த்தி?

Naan kooba padavillai. You are unnecessarily testing our nerves and you are so freakingly happy in doing so. First you brought in kamal, then rajini and now MGR. It is a shame on your part to flip-flop with these actors to enter into argument with us. Only mentally retarded person does so.

NT fans never claimed that all his movies were successful - he had his share of failures. This is true for other actors including MGR. But NT success ratio is way ahead of any other tamil actors.

FYI: Vasool Chakravarthy doesnt mean 100% success. For example, Rajinikanth has been vasool chakaravarthy for long time now but still he has his share of failure - eg. kooselan. Vasool charkravarthy is one whose movies make crazy collection at the BO and makes producers, movie distributor, movie hall owners and all happy. In that way, NT is far ahead of others, including MGR. Why did NT have many producers making beeline to book him? Why did NT have most of Anna Salai theaters running only his movies and still these movies were spectacularly successful? Why did NT have repeated directors wanted to direct him? Why did NT have frequent releases and still was able to make cash registers ringing? Why was NT so versatile and still unapproachingly successful? How brave NT was to release two movies on Deepavali and made both of them successful on two occasions? Why didn't NT get tired on watching him on screen?

If you know answers to these questions, then you wouldn't ask us all those stupid questions. Even his arch rival didn't have so many producers to make movie with him.

On the sidelines, btw, between MGR and NT: NT's Tiruvilayaidal bettered MGR's enga veetu pillai, NT's thangapathakkam bettered MGR's overspent USV, Poor Man NT's babu bettered failed MGR's east man color neerum neruppum, on and on. MGR vasool sathanai NT muriyadithullar.... MGR hard core fans agree this... Same way, NT vasool sathanai MGR muriyadithullar... so, don't blabber here.

Plum
29th April 2011, 09:48 PM
Baradwaj Rangan seems to have gone for thiruvarutchelvar (http://baradwajrangan.wordpress.com/2011/04/29/lights-camera-conversation-a-dinosaur-roams-again)

venkkiram
29th April 2011, 09:52 PM
Baradwaj Rangan seems to have gone for thiruvarutchelvar (http://baradwajrangan.wordpress.com/2011/04/29/lights-camera-conversation-a-dinosaur-roams-again)

Plum, your view on Abhinaya's posts/points?

Plum
29th April 2011, 09:59 PM
Venkki, enkittEyE nAradar vElaiyA? :lol:
IdhaiyellAm OramA vEdikkai pAkkaNum. Ella threadlaiyum nAne saNdai pOda mudiyumA?

pammalar
30th April 2011, 04:04 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

நடிகர் திலகம் தமது அபார நடிப்பின் மூலம் நமக்கு அளித்தார் "தங்கப்பதக்கம்" !

தாங்கள் தங்களது அற்புத எழுத்தின் மூலம் எங்களுக்கு அளித்துள்ளீர்கள் "தங்கப்பதக்கம்" !

SPசௌத்ரியைப் பற்றி RPசாரதி எழுதுவதற்கு கேட்கவும் வேண்டுமோ !

தங்களுக்கு தங்கமான பாராட்டுக்கள் ! பொன்னான வாழ்த்துக்கள் !! கோல்டன் நன்றிகள் !!!

டியர் முரளி சார்,

"தங்கப்பதக்கம்" பதிவு சொக்கத்தங்கம் !

சகோதரி சாரதா,

பாராட்டுக்கு நன்றி ! சாதனைப் பொன்னேடுகள் தொடரும் !

"தங்கப்பதக்கம்" பதிவுக்கு Golden Thanks !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th April 2011, 04:10 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி ! ஸ்டாரில் "புதிய பறவை", சந்தோஷமான விஷயம் !

டியர் selva7, நன்றி !

டியர் mr_karthik, பாராட்டுக்கு நன்றி !

டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th April 2011, 04:18 AM
நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றியும் வெற்றிகளைப் பற்றியும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்தி பெருமையும் உவகை கொள்ளும் போது தாய்த் தமிழ்நாட்டில் அவருடைய வெற்றிகளையும் சாதனைகளையும் மறைத்து அதில் சந்தோஷமடையும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். கடல் கடந்து தமிழர்கள் அவரைப் பற்றி எந்த அளவிற்கு பாசமுடன் உள்ளார்கள் என்பதற்கு இந்த ஒளிப் படமே சான்று. இதனை அந்த அன்பர்களுக்கு நாம் அன்புடன் சமர்ப்பிப்போம்.


http://video.google.com/videoplay?docid=3604633588006801092#

அன்புடன்

சிங்கத்தமிழனின் வான்புகழை வானளாவப் பாடிய சிங்கைக் குயில்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் !

இந்த அருமையான வீடியோவை இங்கே பதிவிட்ட வீடியோ வேந்தருக்கு வளமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

goldstar
30th April 2011, 04:31 AM
எம்.ஜி.ஆர். இருந்த பொழுதே அவருடைய சாதனையை சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை. அப்புறம் எதற்கு வசூல் சக்கரவர்த்தி?

Rajaram,

Could you please give the details of 100 days, 175 days of MGR movies and also give me the 100 days movies before MGR started his own party? Please give the collections of MGR movies? Please speak with proof and don't just say other said this and that...

Cheers,
Sathish

pammalar
30th April 2011, 04:36 AM
தமிழகத் தலைநகரில் தலைவரின் திரைக்காவியங்கள்

இன்று 29.4.2011 வெள்ளி முதல்

1. "பார்த்தால் பசி தீரும்" : முற்பகல் 11:30 மணிக் காட்சி : மண்ணடி 'பாட்சா' [பழைய 'மினர்வா']

2. "புதிய பறவை" : தினசரி 3 காட்சிகள் : திருவல்லிக்கேணி 'ஸ்டார்'

அன்புடன்,
பம்மலார்.

selva7
30th April 2011, 08:41 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி ! ஸ்டாரில் "புதிய பறவை", சந்தோஷமான விஷயம் !

டியர் selva7, நன்றி !

டியர் mr_karthik, பாராட்டுக்கு நன்றி !

டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

நடிகர் திலகம் பற்றிய செய்திகள் மற்றும் திரைப்படத் தகவல்கள் பலவற்றை மிகவும் சுறுசுறுப்பாக வழங்கி இந்த திரி உயிரோட்டமாக உள்ளது. அடிக்கடி இந்த திரியை வாசிப்பவனாக எனக்கு நிறைய புதிய செய்திகள் கிடைத்ததாக நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
30th April 2011, 09:33 AM
அன்பு நண்பர்களே,
நம்மில் எத்தனை பேர் கடந்த 28.04.2011 அன்று இரவு விஜய் டி.வி. நடந்தது என்ன நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என் று தெரியாது. ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் கமலா திரையரங்கு உரிமையாளர் திரு சிதம்பரம் அவர்கள் கூறிய தகவல் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் மறைந்த ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் ஒரு முறை நடிகர் திலகத்தை அழைத்திருந்தாராம். சிதம்பரம் அவர்கள் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த பகவான் அவர்கள் 50 அடி தூரத்திலுள்ள பாதையை விட்டு விட்டு, 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக நடிகர் திலகத்தை வரச் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி சென்ற நடிகர் திலகத்திடம் பாபா அவர்கள் கேட்டிருக்கிறார், கணேசு, உன்னை ஏன் 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக வரச்சொன்னேன் தெரியுமா என்று. பதில் தெரியாமல் நடிகர் திலகம் ஆவலுடன் பாபா அவர்களை நோக்க, பாபாவே பதிலளித்திருக்கிறார். உன்னுடைய நடையழகை பார்க்கவே உன்னை அப்படி வரசொன்னேன் என கூறியிருக்கிறார்.
திரு சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியின் காணொளி

http://www.youtube.com/watch?v=iRH-LBQb1rs&feature=player_embedded
அனைத்து இறையருளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் திலகத்தின் மேல் தூற்று மாரி பொழிவோரைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அவர்களை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார். நாம் நம்முடைய பணியைத் தொடர்வோம்.
அன்புடன்