Post production works are going on.. This shoot is for some patch works required...
Printable View
Nov 22 Friday is the day speculated for VR2 Release. Its 3 weeks after diwali and also 3 weeks b4 12.12.13 Kochadaiyaan expected release date
irir & Nasc, Thanks and Noted! Surely VR had a stunning and attagaasamaana Run in US! As usual our man never publicies thee things, waste phlo, in this regard :(
SKV - even I used to wonder why Kamal does not bother about these things - and then I happened to watch a recent interview of his - one of the questions about the books he has read recently or intends to read - Kamal mentions Richard Dawkins' "The God Delusion", "The Greatest Show on Earth" and "The selfish gene" !! my eyes popped !
On the one hand, he reads history, from back home - sithhar paadalgal, puraanam etc etc - and he has mentioned Gibbons in another interview - historian Gibbons' books on the Roman empire, contain such thoroughly researched material on several aspects of Roman history as well as Christianity, which are not even mentioned in the Bible (Old or New Testaments) - one small ex: just like the sitthars of TN, there were equivalent middle-east sitthars amongst the early gnostics!
this man (KH) reads these books and also Dawkins' amazing books that criticize the ritualistic, blind beliefs inherent in faiths/religions and talks about evolution etc etc.
for a man to read such a diverse amount of literature, it is not surprising that his worldview has been so exquisitely fashioned to something sublime enough that I wouldnt be surprised that he would sooner or later arrive at the inferences/observations that someone like me has arrived at after reading similar stuff - and thus it is not surprising that he makes a film like 'anbe sivam' or a 'hey ram' or a 'vr'
most relevant to our topic, I dont think Kamal either bothers as much about the BO reports, or the material gains - most importantly, for someone to be reading all these books, he would NOT HAVE THE TIME FOR publicizing his films BO success ! simple matter of logistics thats all
A well know fact is that Nammavar reads atleast 80 pages a day no matter what !!!
irir & pushpak, yes! afterall verum BO records ai solli perumai pattukka vendiya nilaiyilaa avar irukkaar! Thats just one of its achievement! ;)
"Vishwaroopam2 is going to be a classy film with very high standards of visual effects, thanks to #KamalHaasan's vision.Ulaga Nayagan deserves to be in International cinema and the offers coming in aren't a surprise."- Mr. Madhusudhanan (VFX incharge)
ike @thenameisike 22h
Watched rough cuts of axn seq #Vishwaroopam 2 Mindblowing!! #Ulaganayagan does wat he does best above da rest #Salute
http://i1366.photobucket.com/albums/...psb2bc5737.jpg
நான்கு மொழிகளில் மருதநாயகம். கமல்ஹாசனின் மெகா பிளான்.
நடிகர் கமலஹாசனால் கடந்த 1997ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட 'மருதநாயகம்' ஒரு வரலாற்றுத் திரைக் காவியமாகச் சித்தரிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய கதை இதுவாகும்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்படுவதாக இருந்த இந்தத் திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பொருளாதாரப் பிரச்சினையும், மற்ற சில வெளிவராத பிரச்சினைகளும் இந்தப் படத்தைக் கிடப்பில் போட்டன.
விஸ்வரூபம் முதலாம் பாகத்தில் மட்டும் கமல்ஹாசனுக்க 100 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது. எனவே இந்த தைரியத்தில் மீண்டும் மருதநாயகம் படத்தை ஆரம்பிக்க முடிவுசெய்துள்ளார். ் தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம் என்ற நான்கு மொழிகளில் தயாரிக்க மெகா பிளான் செய்துள்ளார் கமல்ஹாசன்.
தற்போது 'விஸ்வரூபம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார். இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது. அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாகக் கூறியுள்ளது அவரது ஆர்வத்தினை மேலும் தூண்டியுள்ளது. அதனால், தன்னுடைய தீவிரமான ரசிகர்களுக்காக 'மருதநாயகம்' படத்தினைத் தயாரிக்கும் முயற்சியில் அவர் மீண்டும் ஈடுபடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Legend Dr.Kamal Haasan FB)
சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?: கமல்
http://i1366.photobucket.com/albums/...ps9eb4c2db.jpg
சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்த தான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா என்று சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார். விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருதை ஜெயலலிதா வழங்கினார்.
விழாவில் பேசிய கமல் கூறுகையில், நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். இருப்பினும் நான் இன்னும் சின்ன குழந்தை தான். நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?. சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் உள்ளனர். ஒருவர் சிவாஜி கணேசன் மற்றொருவர் கே. பாலசந்தர். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் என்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும் என்றார்.
கலைஞர் மேடையில் இருந்தால் "நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்து கலைஞரின் வசனத்தால் தமிழ் கற்றுக்கொண்டேன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?" என அடித்துவிட்ருப்பார். காசா பணமா ?Quote:
Originally Posted by ganse
சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா? என்று தானே குறிப்பிட்டுள்ளார்.
கமல், நடிகர் திலகத்துடனும் மக்கள் திலகத்துடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதனால் கமல் அப்படி சொன்னது பொய் இல்லையே. நிஜத்தை தானே குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் பற்றி குறிப்பிடுவதை தவிர்த்து இருப்பது அவர் மட்டும் அல்ல; அங்கு பேசிய ரஜினி உட்பட அனைவருமே...
http://i1366.photobucket.com/albums/...ps9eb4c2db.jpg
this image promises a green patch ahead of the release of VR2..hopefully..
It is good that he avoided MK considering the problems he faced this year. He has praised MK in so many platforms before this. One cannot deny MK's influence in Kamal considering his eloquent Tamil.
Kamal in great shape, and trim.
Yes, looks like all is well ...
kamal's trimmed look is mind blowing at his age.
Expecting good graphics in V2.
Any updates on release date?
வரலாறு படைத்த தமிழ் சினிமாக்கள்
http://i1366.photobucket.com/albums/...psf9839a5d.jpg
(தினத்தந்தி)
thanks ganse. xlnt article
ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம்: கமல் பெருமிதம்
http://i1277.photobucket.com/albums/...psa37c9d4d.jpg
திரைப்பட கலைஞர்களாகிய நாம், சினிமாத் துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம் என, கன்னட திரைப்படத் துறையினர் முன்பு நடிகர் கமல் பேசினார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை(செப்.22) கன்னடத் திரைப்படத் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:
""தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து திரைப்பட விழாக்களும் தனித் தனி அல்ல; அனைத்தும் ஒன்றுதான். திரைப்பட கலைஞர்களாகிய நாம், சினிமா துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம். நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அதில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
நான் இந்த கன்னட திரைப்பட விழாவுக்கு வந்ததற்கு சிலர் நன்றி கூறினர். இந்த விழாவிற்கு என்னை நீங்கள் வரவேற்றதற்கு நான்தான் நன்றி கூற வேண்டும். நீங்கள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் கண்டிப்பாக நான் இதில் கலந்து கொள்வேன். ஏனென்றால் இந்த சினிமா நூற்றாண்டு விழா கலைஞர்களாகிய நம் விழா என்றார் நடிகர் கமல்ஹாசன்.
இந்த நிகழ்ச்சியில் "லோகேஷன்' என்ற 100 ஆண்டு கன்னட சினிமா தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தையும் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
கர்நாடக அமைச்சர்கள் பங்கேற்பு: முன்னதாக கர்நாடக பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ, கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜெ.ஜார்ஜ் ஆகியோர் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
பழம்பெரும் தயாரிப்பாளர் ஆறுமுகம், முன்னாள் கன்னட திரைப்பட வர்த்தகத்துறையின் தலைவர் ஜெயமாலா,பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, லீலாவதி, ஹேமா செüத்ரி, பாரதி விஷ்ணுவர்தன், பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான வசந்த் குமார் பாட்டீல், "துளு' மொழி திரைப்பட தயாரிப்பாளர் கே.என்.டெய்லர், தயாரிப்பாளர்கள் குருதத் முஷ்ரி, வி.என்.கங்காதர், பார்கவா, ராஜாராம், தர்ஷன், பெத்தன்னா, நவீன்கிருஷ்ணன்,
நடிகர்கள் ராஜேஷ், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீநாத், சிவராம், உமேஷ், முரளி, ஒய்.ஆர்.சாமி, பங்கஜ், வினோத் ராஜ், யோகேஷ், நடிகைககள் அனு பிரபாகர், ஜெயந்தி, ராகினி, ஹர்ஷிதா, லைலா, பாவனா பாடலாசிரியர் அம்சலேகா, நடனக் கலைஞர் மூகூர் சுந்தரம், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற கன்னடத் திரைத்துறையினர் 67 பேருக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
கன்னடத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் தயாரிப்பாளர் விஜயகுமார், துணைத் தலைவர்கள் ராக்லின் வெங்கடேஷ், தாரா கோவிந்து, செயலாளர் கணேஷ், கன்னட நடிகர் சங்கத் தலைவர் அம்ரீஷ், செயலாளர் விஜய ராகவேந்திரா, கன்னட திரைப்படத் தொழிலாளர் சங்கத் தலைவர் அசோக் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
Only One Star who made it to all the functions of 100 years of Cinema Celebrations is our Padmashree Dr.Kamal Haasan he was present during the celebrations of Malayalam film industry in honoring MR. Madhu, Legend from Malayalam Film Industry.
http://i1366.photobucket.com/albums/...ps0d67b54f.jpg
சினிமா நூற்றாண்டு 3-வது நாள் விழாவில் கேரள பாரம்பரிய நடனங்களுடன் மலையாள பட கலை நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்
சினிமா நூற்றாண்டு 3-வது நாள் விழாவை நேற்று காலை மலையாள பட உலகம் கொண்டாடியது. அதில், கேரள பாரம்பரிய நடனங்களுடன், மலையாள பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
நூற்றாண்டு விழா
இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 21-ந் தேதி நடந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கி வைத்தார்.
திரையுலகில் 50 ஆண்டுகள் சேவை செய்த 56 கலைஞர்களுக்கு அவர் விருதுகளையும் வழங்கினார்.
2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கமல்ஹாசன்
3-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று மலையாள திரையுலகினரின் விழா நடந்தது. இந்த விழாவை மத்திய மந்திரி வயலார் ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கேரள மந்திரி கே.சி.ஜோசப் முன்னிலை வகித்தார். விழாவில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மத்திய மந்திரி வயலார் ரவி பேசும்போது, ‘‘நான் சிறுவனாக இருந்தபோது டூரிங் தியேட்டரில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். போல் மலையாள சினிமாவில் பிரேம் நசீர், சத்யன், மது ஆகியோர் இருந்தார்கள். மலையாள பட உலகில் வர்த்தக படங்கள் வெற்றி பெற்றது போல், சோகமான கதையம்சம் கொண்ட படங்களும் வெற்றி பெற்றுள்ளன’’ என்றார். கமல்ஹாசன் பேசும்போது, ‘‘மது சேட்டன் படத்தில் நான் டெக்னீசியனாக வேலை செய்து இருக்கிறேன். என் திரையுலக வளர்ச்சிக்கு மலையாள சினிமா கலைஞர்களும் உதவியிருக்கிறார்கள். இந்த இடத்தில் நான் நிற்பதற்கு அவர்களும் ஒரு காரணம்’’ என்று கூறினார்.
மம்முட்டி-மோகன்லால்
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்று பேசினார். துணைத்தலைவர்கள் எம்.பாலசுப்பிரமணியம், எடிட்டர் மோகன், பொன் தேவராஜ், தாமஸ் டிசவுசா, செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், டைரக்டர் கே.பாலசந்தர், மலையாள நடிகர்கள் மது, மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், மனோஜ் கே.ஜெயன், நடிகைகள் ஷீலா, சாரதா, லிசி பிரியதர்ஷன், சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், அம்பிகா, ஊர்வசி, ரேகா, ரோகிணி, கார்த்திகா, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணா, பின்னணி பாடகி சித்ரா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.
டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி’ செயலாளர் ஜி.சிவா, டைரக் டர்கள் பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், செய்யார் ரவி, ‘மங்கை’ ஹரிராஜன் ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தார்கள்.
கலைநிகழ்ச்சிகள்
கேரள பாரம்பரிய நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பழைய மலையாள சினிமா பாடல்களுக்கு நடிகைகள் நஸ்ரியா, ரம்யா நம்பீசன், மீராநந்தன், ஸ்வேதா மேனன் ஆகியோர் நடனம் ஆடினார்கள்.
விழா மேடையில், நடிகர் மதுவின் 80-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.
இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழா, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. அதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமய்யா, கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
‘விஸ்வரூபம் 2’-வில் கமலுக்கு அம்மாவாக நடிக்கும் வஹீதா ரஹ்மான்
'விஸ்வரூபம்' படத்தின் வெற்றிக்குப் பின்னர் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடும் மும்முரத்தில் கமலஹாசன் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் முதல்பாகத்தில் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் பழம்பெரும் இந்தி நடிகையான வஹீதா ரஹ்மானும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இவர் நாயகனின் அம்மாவாக நடிக்க உள்ளாராம். வஹிதா ரஹ்மான் கடந்த 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த 'ரேஷ்மா அவுர் சேரா' என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர்.
இவர் கடைசியாக அபிஷேக் பச்சனுடன் 'டெல்லி 6' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தில் கமலுடன் நடிக்கிறார். விஸ்வரூபம்-2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. இந்த படம் இந்தி, தமிழ் என்று இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. வரும், நவம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Kamal's Anbe Sivam (Digitalized)
http://i1277.photobucket.com/albums/...psf4c5e451.jpg
http://i1277.photobucket.com/albums/...psb9476e22.jpg
Padmashree Dr.Kamal Haasan met ANR yesterday at ITC GrandChola (100 Years of Indian Cinema) after Party — Kamal With Akkineni Nageshwara Rao
Kamal in 100 years of Indian Cinema Celebration event
http://i1366.photobucket.com/albums/...psf89022e5.jpg
http://i1366.photobucket.com/albums/...ps6eb0bc15.jpg
-del-
Thala rasigan Sir,
Kindly avoid posting gossip news.
This may lead to controversies and conflicts.
Thank you.