-
Quote:
Originally Posted by
vasudevan31355
ஹிட்லர் உமாநாத்.
படம் சுமாராகப் போனால் என்ன? (எவ்வளவோ நல்ல படங்கள் சுமாராகப் போனதுண்டு). இந்த 'ஹிட்லர் உமாநாத்' அருமையான நல்ல படம். நடிகர் திலகத்திடம் அதுவரை காணாத பல புதிய பரிணாமங்களை 'ஹிட்லர் உமாநாத்'என்ற வித்தியாசமான வேடத்தின் மூலம் நாம் காண முடிந்தது.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய 4000 வது பதிவாக ஹிட்லர் உமாநாத் அலசல் பதிவை அளித்து அசத்தியுள்ளீர்கள். தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல படத்தில் உமாநாத்தின் சிங்கநிகர் நடிப்பு, சுருளிராஜன் வில்லுப்பாட்டு (சுப்பு ஆறுமுகம் உதவியுடன்), என்று பல அம்சங்கள் இருந்தும் கால சூழ்நிலையால் படம் சரியாகப் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தங்களுடைய பிறந்தநாளில், 4000 வது பதிவை அளித்த தாங்கள், பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் அனைத்து பரிமாணங்களையும் வெளிக்கொணரும் விதத்தில், இன்னும் பல ஆயிரம் பதிவுகளை அளிக்கவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை வாழ்த்துக்களாக தெரிவித்துக் கொள்கிறேன்.
-
டியர் பார்த்தசாரதி சார்,
நடிகர் திலகம் திரியின் பாகம் 12-ஐ துவக்கி வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரியின் பாகம் 12 க்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
-
'ஹிட்லர் உமாநாத்' பதிவை முழுதும் பொறுமையாக படித்து விட்டு பின் தங்கள் பின்னூட்டத்தை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-
வாசு தேவன் சார்..வருக வருக..
வந்தவுடன் இனிமையாக ஒரு நீஈஈள சுவையான உழைப்புமிக்க பதிவு- ஹிட்லர் உமா நாத்..
நாங்கள் எல்லாம் வெகு சாதாரண ரசிகர்கள்..படம் மொத்தமா நல்லா இருக்கா பார்ப்போம்..சிவாஜி ஆக்டிங்க் நல்லா இருக்கும்..அதுக்காக மத்தவங்க சரியா செய்யலைன்னா எப்படிப் பார்க்கறது..என்ற மன நிலையில் இருப்பவர்கள்/இருந்தவர்கள்..
சில சமயங்களில் சிவாஜியின் நடிப்புக்காகவே சில படங்கள் திருப்பித் திருப்பி ப் பார்த்ததுண்டு/பார்ப்பதுமுண்டு.
நீங்கள் இட்டிருக்கும் ஹிட்லர் உமா நாத்தின் பதிவில் நடிகர் திலகத்தின் மீதான உங்களது பக்தி மிக அழகாக வெளிப்படுகின்றது..
இந்தப் படம் நான்பார்க்காத ஒன்று..
//அடுத்தது நமது தலைவர் இதுவரை வைக்காத ஹிட்லர் மீசை வைத்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்த விஷேசம், மகேந்திரனின் கதைக்கு மௌலி திரைக்கதை அமைத்து வசனம் எழுதிய விசேஷம்,//
மகேந்திரன் கதை மெளலி வசனம் என்பது நான் அறியாத ஒன்று.. ந.தி யின் ஸ்டில் பார்த்த போது வித்தியாசமான் கெட் அப் என்று தெரிந்ததே தவிர..வெளிப்படையாகச் சொன்னால் - அது என் மனத்துக்கு விருப்பமானதாக இல்லை என்று சொல்லுகையிலேயே சிலர் மெட்ராஸ் பாஷையிலும் சிலர் ஆங்கில கொட்டேஷன்களை வைத்தும் திட்ட வருவது போல் தோன்றுகிறது..:)
//அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ!
ஆனால் நடிக தெய்வத்திற்கு மட்டும் அந்த மீசை படு கம்பீரமாக அமர்ந்து பொருந்துகிறதே! //
படத்தைப் பார்த்து விட்டு நீங்கள் சொன்ன காட்சிகளை அசை போட்டு விட்டுச் சொல்கிறேன்..
பட் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய விஷயம்..உங்கள் அசாத்திய பக்தி- நடிகர் திலகத்திடம், அவர் புகழ் பரப்புவதற்கான உழைப்பு என்பது அளவிடற்கரிய ஒன்று.. தொடருங்கள் உங்கள் தொண்டினை..
வாசக தோஷ ஷந்தவ்யஹ..
-
என் ஆருயிர் அண்ணன் வாசு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஹிட்லர் உமாநாத் அலசல் என்ற பாதுகாக்க வேண்டிய பொக்கிஷத்தை எங்களுக்கு பிறந்தநாள் விருந்தாக கொடுத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய அண்ணன் வாசுவுக்கு நன்றி பலகோடி .
திரு முரளி சார்,
தங்கள் ஆதங்கம் நம் எல்லோரின் எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது .கண்டிப்பாக நம் கண்டனத்தை அந்த பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும்.
-
nadigarthilagam avargalukku bharatha rathna viruthu thara vendum
-
வாசு சார் - சந்தோஷம் கரைபுரண்டு ஓடுகின்றது இரண்டு காரணங்களால் - ஒன்று - எங்கள் எல்லோருடிய கோரிக்கையும் ஏற்று விரைவில் திரிக்கு வந்ததற்காக ---- இரண்டாவது - உங்கள் பிறந்த நாள் பரிசாக " ஹிட்லர் உமாநாத்" யை பற்றி பதிவிட்டது - 5 பாகங்களில் - எவ்வளவு உழைப்பு - எவ்வளவு நாள் இந்த அருமையான பதிவுக்காக உறக்கம் இல்லாமல் , சரியாக உணவு உண்ணாமல் , உடம்பை அலட்சியம் படித்திருப்பீர்கள் - 5 பாகம் படிப்பதற்கு எவ்வளவு நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் - உங்கள் 5 பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன் - திருப்தி ஏற்படவில்லை - மீண்டும் படித்துகொண்டு இருக்கிறேன் - என் பேராசை லிஸ்டில் எழுதினவை எல்லாம் நிறைவேறிவிட்டது - நீங்கள் பதிவை போட்ட பின் - 3 நாட்களக்காவது திரியில் எல்லோரும் உங்கள் பதிவை மட்டும் படிக்க வேண்டும் பிறகு தங்கள் பதிவுகளை தொடரல்லாம் - இப்படி சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை - ஆனால் :ty::ty: ஒன்று நிச்சயம் - 3 நாட்களுக்கு மேல் படிக்க பல விஷயங்கள் உள்ளது உங்கள் பதிவில் - நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இந்த மாதிரி பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று , பூண்டி ஆலய கர்த்தரையும் , நம் இறைவனையும் வேண்டி கேட்டுகொள்கிறோம் - என் கருத்துக்கள் தொடர்கின்றன
அன்புடன் ரவி
:clap::2thumbsup::grin::smokesmile:
-
அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ! வெகு வித்தியாசமான பாத்திரம். உருவ அமைப்பும் கூட. படத் தொடக்கத்திலிருந்து இறுதிக் காட்சி வரை நடிப்பில் செய்யும் சாகசங்கள் வழக்கம் போல ஏன் வழக்கத்தை விடவும் அதிகமாக நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கின்றன.
ஏழை அப்பாவியாய் ஒன்றும் தெரியாமல் அனைவரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகும் போதும் சரி... மனைவியின் அறிவுரைகளை அடக்கத்துடன் கேட்டு அதன்படி நடக்கும் போதும் சரி... படிப்படியாய் ஆபீஸில் பதவி உயர்வு நிலைகளை சாதுர்யமான புத்திசாலித்தனத்தால் அடையும் போதும் சரி... தன்னை வாழ வைத்த தன் முதலாளியிடம் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதையிலும் சரி... பிரச்னைகளை அழகாக சந்தித்து எதிர் கொள்ளும் போதும் சரி... மகளிடம், மனைவியிடம் கண்டிப்பும், பாசமும் காட்டும் போதும் சரி... தொழிலாளர்களிடையே சுமூகமாக அதே சமயம் கண்டிப்பாக நடந்து கொள்ளும் விதத்திலும் சரி!
அத்தனை பரிமாணங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் வைடூரியம் போல் ஜொலிக்கிறார் நடிகர் திலகம்.
-----
உண்மை - நவரத்தினமாக திகழ்தவர் நம் தலைவர் ஒருவரே - தன்னால் முடியாது என்று எந்த Roleயும் விட்டு விடவில்லை - அந்த அந்த Roleக்கு உரிய மரியாதையை அவர் ஒருவர் தான் கொடுத்திருக்கிறார் - படத்தின் வெற்றி தோல்விகள் , நடிப்பின் வெற்றியை தொடாமல் போயிருக்கலாம் ஆனால் அதுவே அவர் நடிப்புக்கு தந்த மரியாதையை குறைத்துவிடாது
தொடரும்
-
ஒரு தந்தையின் கண்டிப்பு, கோபம், மகள் சாகத் துணிந்தவுடன் அப்படியே அந்தக் கோபம் மாறி ஏற்படும் பயம், படபடப்பு, தந்தை என்ற உரிமை கூட தனக்கு இல்லையே என்ற தவிப்பு , 'இனி கண்டிப்பதால் புண்ணியமில்லை... இனி உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன்... கேட்பதற்கு நான் யார்?' என்ற விரக்தி, வேதனை, இனி தற்கொலைக்கு முயலக் கூடாது என்று மகளிடம் கெஞ்சல், பதற்றம், நான் உனக்கு அப்பா இல்லையா என்ற பந்ததத்தை உணர்த்தும் உரிமை, இருக்கிற ஒரு மகளும் போய் விட்டால் என்ன செய்வது? என்ற பெரும் அச்சம், மனைவி கூட புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்ற வருத்தம் அத்தனையையும் ஒரே நிமிடத்தில் நம் மனதில் ஆழமாகப் புதைத்து அழ வைக்க இந்த மனிதரை விட்டால் வேறு யாராவது பிறந்திருக்கிறார்களா காட்டி விடுங்கள் பார்ப்போம்.
======
படிக்கும்போதே கண்கள் குளம் ஆகிவிட்டன வாசு சார் - எப்படியிருந்திருக்கும் படத்தில் என்று யூகிக்க முடிகிறது - துரதிஷ்டமாக , இந்த படம் வெற்றி பெறாவிட்டாலும் , இதிலும் ஒரு சாதனை புரிந்திருக்கும் ntயை என்ன சொல்வது - அதை அருமையான நடையில் எங்களுக்கு எடுத்துசொன்ன உங்களை எப்படி புகழ்வது - கிருபா சார் மொழியில் சொன்னால் - படா ஷோக்கா எலுதரே கண்ணா - என் வீட்டு பக்கம் வரியா நயினா - அப்பால பார்ட்டி யே தரேன் - ஆங் -----
தொடரும்
-
அடால்ப் ஹிட்லருக்கும் இந்த உமாநாத்துக்கும் கொஞ்சமும் குணத்தில் சம்பந்தமில்லை. அந்த ஹிட்லர் யூதர்களை இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன். நம் ஹிட்லரோ நாதியற்ற தொழிலாளிகளுக்கு வாழ்வு கொடுப்பவர். அந்த ஹிட்லர் அசகாய வீரனாக உருவெடுத்து கோழையாக தற்கொலை புரிந்து மாண்டான். நம் ஹிட்லரோ கோழையாக வாழ்வைத் துவங்கி வீரனாகவே இறுதி வரை கம்பீரமாக வாழ்ந்தவர். அந்த ஹிட்லர் தோல்வியால் துவண்டு தற்கொலை முடிவை எடுத்த ஒரு கோழை என்று நம் ஹிட்லர் அந்தக் கோழையின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிட்டு வரும்போதே அவனைவிட உமாநாத் எல்லா வகையிலும் உயர்ந்த, பிரச்னைகளை face செய்யக் கூடிய தைரியசாலி என்று புரிந்து விடும்.
இந்த அற்புதமான ரோலில் வேறு எந்த ஒரு பயலையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.
அது நம் நடிப்பின் இறைவனால் மட்டுமே முடிந்த ஒன்று.
==============================================
முற்றிலும் உண்மை - உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை - பாத்திரங்களை பேச வைத்தார் - அது ஒரு கோழையோ , வீரனோ , முட்டாளோ , மூடனோ - அவர் கவலைப்பட்டதே இல்லை - கவலை படுவதெல்லாம் நாம் தான் - ஏன் அவர் அந்த பாத்திரத்தில் நடித்தார் - ஏன் அந்த கதாநாயகியுடன் நடித்தார் என்று - இப்படி நடித்து இருந்தால் படம் வெள்ளி விழா கண்டிருக்கும் , அப்படி நடித்ததினால் , படம் நினைவில் நிக்க வில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம் - உண்மையில் எல்லோரும் ஒரே மனதாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் - அவர் இல்லாமல் இருந்திருந்தால் - நடிப்பு என்ற வார்த்தை ஒரு NRI யாகவே இருந்திருக்கும் - சும்மாவா சொன்னார் கோபால் சார் - சிவாஜி ஒரு மாமனிதர் என்று --------
அன்புடன் ரவி
:):smokesmile:
-
Thank you and welcome back Vasu sir
-
Hitler Umanath visual treats - 2
-
Hitler Umanath visual treats - 3
-
Hitler Umanath visual treats - 4
-
முரளி சார் - உங்கள் வருகை இந்த திரியில் மீண்டும் ஒரு நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது - இனி இந்த திரி உடைய கூடாது , உடைய விடகூடாது ( சாரி கிருபா சார் - சும்மா இதையே கூவிகினே இருப்பதிற்கு மன்னிக்கவும் - முரளி அவர்கள் வந்த தெம்பில் எழுதிகிறேன்)
-
புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி படிக்கும் லட்சக்கணக்கான மக்களை இப்படி தவறான தகவல் கொடுத்து ஏமாற்றுவதில் இவருக்கு என்ன லாபமோ?
உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை என்பதை இப்படிப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு!
அன்புடன்
=====
Murali Sir - எவள்ளவோ பேர் இன்னும் NT யின் சாதனைகளை புரிந்தும் புரியாமல் , தெரிந்தும் தெரியாமல் , அறிந்தும் அறியாமல் உளறிகொன்டுதான்
இருக்கிறார்கள்- பொய் பித்தலாட்டம் , cheap publicity , என்று ஒரு கூட்டமே கங்கணம் கட்டிக்கொண்டு செயல் படும் போது , உங்கள் பதிவுகள் - அவர்கள் முக திரியை கிழித்து NTயின் புகழை மேலும் அழகு படுத்துகின்றது - great Revelation and Posting ---
:):smokesmile:
-
Quote:
Originally Posted by
Murali Srinivas
ரவி,
சீனி அல்லது சக்கரை என்று சொல்லப்படும் பொருள் எதனுடன் சேர்ந்தாலும் தித்திப்பது போல ஞான ஒளி பற்றி யார் எழுதினாலும் அது படிக்க நிச்சயம் சுவையாகத்தான் இருக்கும். அப்படிதான் இருந்தது உங்கள் தொடரும்.
உங்களுக்கு ஒரு யோசனை. ஏற்கனவே பலர் எழுதிய படத்தை பற்றி எழுதப் போகிறீர்கள் என்றால் கதையை திரைக்கதையை விட்டு விடுங்கள். உங்களுக்கு பிடித்த இரண்டு மூன்று காட்சிகளைப் பற்றிய வர்ணனையாக பதிவிடுங்கள். நிச்சயம் சிறப்பாக இருக்கும்.
அன்புடன்
Murali Sir - taken note of - many thanks . ஒரு சின்ன Clarification - நீங்கள் , வாசு சார் , கோபால் சார், ராகவேந்திர சார் , கார்த்திக் சார் அலசின பிறகு எந்த சீனும் பாக்கியே இல்லை சார் மற்றவங்களுக்கு - பிடித்த சீன்கள் எல்லாமே , நீங்கள் அலசின பதிப்புக்குள் அடக்கம் . ஹிட்லர் உமா நாத்தில் இனி எதாவது பாக்கி உண்டா ? ஆனாலும் கதையையே வேறு விதத்தில் சொல்லலாமே ( முதலில் எனக்கு பிடித்த வைகளில் கதை தான் ப்ரதானம் ) என்று தான் ஒரு சிறு முயற்சி எடுத்துக்கொண்டேன் அதற்காகதான் "எல்லாத்துக்கும் ஆசைபடு " என்ற Titleயை வைத்தேன் - But I will definitely do consider your advice .
அன்புடன் ரவி
:):smokesmile:
-
//நடிப்பு என்ற வார்த்தை ஒரு nri யாகவே இருந்திருக்கும் - // ரவிசார்..புரியவில்லை..
-
http://i1146.photobucket.com/albums/...ps7ddc6872.jpg
வாசு சார்.... நடிகர் திலகம் தங்களுக்கு அளிக்கும் மலர்ச் செண்டை பரிசாக வாங்கிக் கொள்ளுங்கள். அது வெறும் பரிசல்ல, நடிகர் திலகத்தின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் அன்பு மலர்கள், வாழ்த்து மலர்கள்..
-
Quote:
Originally Posted by
vasudevan31355
4000 ஆவது சிறப்புப் பதிவு
ஹிட்லர் உமாநாத் (26.01.1982) ஒரு முழுமை அலசல் (5 பாகங்கள்)
1982-ஆம் வருடம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளி வந்த படம்.!? அதற்கு முந்தைய வருடம்
இந்த ஹிட்லர் உமாநாத் முன்னேற்றத்திற்கான ஒரு பாடம்.
டியர் வாசுதேவன் சார்
தங்களுடைய 4000 வது பதிவான ஹிட்லர் உமாநாத் பதிவு மிக அருமை. தங்களுடைய பதிவு முழு படத்தையும் திரையில் பார்த்தது போல் உள்ளது.
மிகவும் ரசித்து படித்தேன். கதையம்சம் நன்றாகத்தான் உள்ளது பிறகு ஏன் சரியாக போகவில்லை என தெரியவில்லை.ஒரு முக்கிய் செய்தி என்னவென்றால் இந்தப் படம் இன்று வரை திருச்சியில் ரிலிஸ் ஆகவே இல்லை. ஆதலால் த்ருச்சி ரசிகர்கள் நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள்.
எனவே இந்த பத்வு திருச்சி ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாத்ம்
c. Ramachandran
-
Quote:
Originally Posted by
chinnakkannan
//நடிப்பு என்ற வார்த்தை ஒரு nri யாகவே இருந்திருக்கும் - // ரவிசார்..புரியவில்லை..
சின்ன கண்ணன் சார் - உண்மையில் புரியவில்லையா ? இல்லை புரியாத மாதிரி -------- உங்களுக்கு Clarify பண்ண கடமை பட்டுள்ளேன் ---
நடிப்பு என்ற வார்த்தை ஒரு NRI யாகவே இருந்திருக்கும் --------- அதாவது - NRI என்பதை வெறும் நான் Non Resident Indian என்று எடுத்துகொள்ள கூடாது - நமக்கு புரியாத subject யை கூட NRI என்று சொல்லலாம் - NT மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் , நடிப்பு என்ற ஒரு வார்த்தை நமக்கெல்லாம் புரியாத வார்த்தையாகவே இருந்திருக்கும் - சுருக்கமாக ஒரு NRI யாக இருந்திருக்கும் என்று சொன்னேன் ......
அன்புடன் ரவி
:):smokesmile:
-
Quote:
Originally Posted by
adiram
Mr. Murali Srnivas sir,
As we are expected (feared) the wrong information of Major Dasan had been posted in MGR thread, and appreciation was given to him. Idhaithaane edhir paarthaai Major Dasaa?.
இன்னும் கொஞ்சம் விட்டால் இந்த மேஜர் தாசன் இந்தியாவை சீன ராணுவம் தாக்க தயாராக இருந்தபோது, நடிகர் திலகம் அவர்களை இந்திய அரசாங்கம் தொடர்புகொண்டபோது அவர் ஷூட்டிங்கில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டபடியால், இதனால் ஒரு குறிப்பிட்ட செல்வாக்குள்ள நடிகரை தொடர்புகொண்டது.
விஷயத்தின் விபரீதத்தை நன்கு உணர்ந்த அவர் நாட்டுபற்றை மற்iற எந்த விஷயத்தை காட்டிலும் முக்கியமாக கருதிய அவர் ஒரு நிமிடம் கூட தாமதியாமல் அடுத்த விமானத்தில் சென்று பிரதமரை சந்தித்து அதன் பிறகு அந்த நேரத்தில் உள்ள வெளியுறவு துறை அமைச்சருடன் சென்று இரண்டு அரசாங்கத்திடம் பேசி பெரும் போரை தவிர்பதர்க்கு மிகவும் உந்துசக்தியாக இருந்தார் என்று கூட எழுதுவார் ! இதற்க்கு ஆதாரமாக நினைத்து அவர் ஜப்பான் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு, இதை ABC productions நிறுவனத்தை சேர்ந்த திரு. அய்யாகண்ணு (வயது 82 ) நினைவுகூர்ந்தார் என்பதை போல வெளியிடுவார் !
அதையும் சிலர் இங்கு, நடிகர் திலகத்தை, அவர் புகழை இறக்கும் ஒரு சந்தர்பமாக நினைத்து ...இது ஜப்பான் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று மட்டும் எழுதி, செய்தியை பற்றி எழுதும்போது இரண்டு அரசாங்கமும் செய்யாத இந்த செயலை தனி மனிதராக செய்து முடித்த நம் இறைவன் அவர்களின் இந்த வீர தீர செயலை நினைத்து நினைத்து பெருமைபடுகிறேன் என்று கூறுவார் !
காரணம் இந்த சிலரை பொருத்தவரை, தமக்கு வடிந்தால் மட்டும் அது ரத்தம் ...மற்றவர்களுக்கு வடிந்தால் அது தக்காளி சட்னி போலும் !
-
Quote:
Originally Posted by
g94127302
சின்ன கண்ணன் சார் - உண்மையில் புரியவில்லையா ? இல்லை புரியாத மாதிரி -------- உங்களுக்கு clarify பண்ண கடமை பட்டுள்ளேன் ---
நடிப்பு என்ற வார்த்தை ஒரு nri யாகவே இருந்திருக்கும் --------- அதாவது - nri என்பதை வெறும் நான் non resident indian என்று எடுத்துகொள்ள கூடாது - நமக்கு புரியாத subject யை கூட nri என்று சொல்லலாம் - nt மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் , நடிப்பு என்ற ஒரு வார்த்தை நமக்கெல்லாம் புரியாத வார்த்தையாகவே இருந்திருக்கும் - சுருக்கமாக ஒரு nri யாக இருந்திருக்கும் என்று சொன்னேன் ......
அன்புடன் ரவி
:):smokesmile:
நடிப்பை பற்றி நடிப்பின் ஆழம் பற்றி abcd தெரியாதவர்களை கூட சிவாஜி ஓவராக்ட் செய்கிறார் என்று நடிப்பை அளவுகோல் வைத்து அளக்கும் அனுபவஸ்தர்கள் போல பேச செய்தது ஒன்றே போதும் நடிகர் திலகத்தின் சாதனையை பறை சாற்ற !
-
ஹிட்லர் உமாநாத்-தங்க பதக்கத்தை அடுத்து நடிகர்த்திலகத்துக்காக மகேந்திரன் எழுதிய நாடகம்.சில பல வேறுபாடுகள் மௌலியை உள்ளே கொண்டு வந்தது. ஹிட்லர் get up பல்வேறு ஊகங்களை கொடுத்தாலும் வழக்கமான எண்பதுகளின் டிராமாதான். ஆனால் நடிகர்திலகத்தின் அபார நடிப்பு,படத்தின் கச்சா முச்சா ஓட்டத்தை மறைத்து நம்மை கட்டி விடும். நாம் உரையாடியுள்ளோம்,. நீங்கள் குறிப்பிட்ட படி மனைவியின் superiority காம்ப்ளெக்ஸ் குறித்து நடிகர்திலகம் வெடிக்கும் இடம் , என்ன சொல்வது?பார்த்து உணர வேண்டிய அதிசயம்.மாதவன் இணைவில் கடைசி படம்.உங்கள் 4000 ஆவது பதிவு,hats off .
-
Quote:
Originally Posted by
kiruba
இங்க போட்டோ வீடியோ எப்படி அட்டாச் பண்றதுன்னு தெரியாம கேட்டு இருந்தேன்.ஒரு ஆளு கூட எப்பிடி போடறதுன்னு சொல்லித்தரல.இதான் இங்க இருக்குறவங்க ஹெல்ப் பண்ற முறையா.ஏன் இப்பிடி இருக்கீங்க.சிவாஜி ரசிகன்னு சொல்லிக்கவே என்னமோ போல இருக்கு.இதுலவேற அல்லாரும் ஒத்துமையா செயல்படுவோம்முன்னு வேற எழுதிறீங்க..
சாரி கிருபா சார் - உங்கள் இந்த பதிவை இப்பொழுதுதான் படித்தேன் - வருத்த படுகிறேன் தாமதமாக உதவி செய்வதற்கு - நீங்கள் வீடியோ பதிவு செய்ய வேண்டுமென்றால் , அந்த URL யை copy செய்து அதை உங்கள் பதிவில் paste செய்துவிடுங்கள் - ஆடியோ பாடல்களும் அதே மாத்ரி URL யை Copy செய்து paste செய்யுங்கள் . இமேஜ் பதிப்பதும் சுலபமே - உங்கள் பதிவின் கீழ் , options உள்ளது - அதை folloபண்ணினாலே போதும் - திரிக்கு ஒற்றுமை தேவை சார் - அதை திட்டாதீர்கள் - எல்லோரும் பதிவுகளை போடும் மும்மரத்தில் , உங்கள் பதிவை கவனிக்க தவறி இருப்பார்கள் (நான் உட்பட ) - மன்னிக்கவும் - அன்புடன் ரவி
:smile2::smokesmile:
-
Quote:
Originally Posted by
Gopal,S.
Gopal sir - pages are not opening in any of the link provided above - were they removed since ?- these are all treasures to be preserved and protected including all yours , Vasu sir's and ragavendra sir's and karthik sir's and many such good souls as hubbers in NT's threads - hope it is not a Sabotage done
-
[QUOTE=Uthamaputhiran;1091759]இன்னும் கொஞ்சம் விட்டால் இந்த மேஜர் தாசன் இந்தியாவை சீன ராணுவம் தாக்க தயாராக இருந்தபோது, நடிகர் திலகம் அவர்களை இந்திய அரசாங்கம் தொடர்புகொண்டபோது அவர் ஷூட்டிங்கில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டபடியால், இதனால் ஒரு குறிப்பிட்ட செல்வாக்குள்ள நடிகரை தொடர்புகொண்டது.
சூப்பர் சார்
இதை பார்த்தாவது பொய்யான செய்திகளை போட்டு மற்றவர்க்கு புகழ் தேடும் நபர்களுக்கு சிவாஜி ரசிகர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
மேலும் இது போன்று நடக்காத் செய்திகளை தவறான ஆதார்ங்களோடு தரும் சிலரின் செய்திகளை போட்டு குமுதம் தன் தரத்தை இழக்க வேண்டாம் என
தெரியப்படுத்துவோம்.
-
//Gopal sir - pages are not opening in any of the link provided above - were they removed since ?- these are all treasures to be preserved and protected including all yours , Vasu sir's and ragavendra sir's and karthik sir's and many such good souls as hubbers in NT's threads - hope it is not a Sabotage done // Ravi Tamil-classics group lபோய் அந்தத் தேவையான இழைக்குள்போய் அந்தப்பக்கத்தை எடுத்துத் தான் படிக்கவேண்டும்.. நான் அப்படித் தான் சில படித்தேன்.. இன்னும் படிக்க வேண்டும்..but dont miss it..
-
//சின்ன கண்ணன் சார் - உண்மையில் புரியவில்லையா ? இல்லை புரியாத மாதிரி -------- உங்களுக்கு Clarify பண்ண கடமை பட்டுள்ளேன் ---// nijamaakavE non resident indiannuthaan ninaichchen.. Thanks for the explanation ravi..
-
ஓவர் ஆக்டிங் விமர்சனங்கள் பற்றி நடிகர் திலகத்தின் கருத்து என்ன...
இயக்குநர் மகேந்திரன் கூறுகிறார்..
http://i2.wp.com/www.kollytalk.com/w...size=432%2C270
“ சிவாஜி சாரை ஓவர் ஆக்டிங்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எங்கோ அரிதா ஒரு பத்திரிகையில் அதைப் பற்றிப் பேசியிருந்தார் சிவாஜி. ‘ ‘என்கிட்டே ஒரு பென்சில் கொடுத்து கையெழுத்துப் போடச்சொன்னால் ஒரு மாதிரி போடுவேன். அதுவே ஒரு பால்பாயிண்ட் கொடுத்து போடச் சொன்னால் வேற மாதிரியிருக்கும். அதையே பிரஷ் கொடுத்து எழுதுங்கன்னா வடிவம் வேறயா இருக்கும். அதையே கோயிலுக்கு வெள்ளை அடிக்கிற மட்டையை கொடுத்து எழுதச் சொன்னால் அதுக்கேத்த மாதிரிதான் இருக்கும். என்னை டைரக்டர்கள் எப்படிப் பார்க்க விரும்புகிறாங்களோ அப்படித்தான் இருப்பேன். என்னைச் சொல்லி குத்தம் இல்லைங்கண்ணே’ என்றார்.”
- தினகரன் தீபாவளி மலர் 2013 புத்தகத்திலிருந்து..
-
Vasu sir,
Apt post for your mile stone 4000 post enjoyed it as usual you rocked
-
Dear kiruba sir,
To upload Videos you can just copy the link of video
To upload photo you must add it by choosing it as an attachment
But I don't know how to post larger image size
Thanks for your appreciation for Gurudakshanai
-
டியர் வாசு சார்,
தங்களின் 4000வது பதிவு ஹிட்லர் உமாநாத் ஒரே மூச்சில் படித்து முடித்தேன், இந்த படம் பார்க்காத என்னை போன்றவர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்.
-
Quote:
Originally Posted by
ragulram11
Dear kiruba sir,
To upload Videos you can just copy the link of video
To upload photo you must add it by choosing it as an attachment
But I don't know how to post larger image size
Thanks for your appreciation for Gurudakshanai
for youtube video embedding
{video}video link{/video}
replace { } to [ ]
for larger/ actual images
[img]image .jpg link[/img]
i believe this works for any browser type
-
Dear Mr. Ganesh / Mr. Vasudevan (Neyveli),
Many happy returns of the day (belated - as I am able to check website only today).
Regards,
R. Parthasarathy
-
I profusely thank all friends who have wished me on starting this thread-12. In fact, it's Mr. Murali's order, which I have obeyed.
Regards,
R. Parthasarathy
-
Dear Mr. Vasudevan,
Heartiest congratulations on the 4000th post.
Your analysis on "Hitler Umanath" is examplary and outstanding, covering minutest detail, as usual, with very simple words.
Awaiting more,
Regards,
R. Parthasarathy
-
வாசுதேவன் சார்
உங்களுடைய ஸ்பெஷல் பதிவு அருமையிலும் அருமை.
உமாநாத்தை பற்றி நல்ல ஒரு அறிமுகமும் உருவகமும் அனைவருக்கும் கொடுத்துள்ளீர்கள் .
எந்த நாயகனும்...வீம்புக்காகவாவது, ஒரு பெண்ணை 100 காலிபயல்கள் தொந்தரவு செய்யும்போது ஒத்தயாளாக அடித்து நொறுக்கி சாகசம் காட்டும்படி எழுத வர்புருத்தியிருப்பான். ஆனால் நம் நடிகர் திலகம் அவர்கள் மட்டுமே கதைக்கு தேவைபடுபடியான விதத்தில் காட்சி அமையும்போது அதை ஒத்துக்கொண்டு அதற்கேற்றார்போல நடித்து கொடுப்பார்.
உழைப்பாளி முதல் முதலாளிவரயிலான பரிமாணம் அவ்வளவு அச்சு அசலாக நீங்கள் எழுதியிருக்கும் விதம் உண்மையிலயே அவருக்கு செலுத்திய புனிதமான அஞ்சலி. அவருடைய ஆன்மாவின் ஆசி வாழ்த்து நிச்சயம் உங்களுக்கு உண்டு என்பதை தவிர நான் வேறு என்ன பெரிதாக சொல்லமுடியும்.
உங்கள் உழைப்பு என்பது சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு நிகரானது ! வாழ்க உங்கள் தொண்டுள்ளம் ! வளர்க உங்கள் நற்பணி !
திரியை உங்கள் எழுத்தால் புனிதபடுத்திவரும் செயல் எங்கள் எல்லாவற்கும் பெருமை சேர்க்கும்விதமாக இருப்பது நாங்கள் செய்த பாகியம் சார் !
-
Dear Mr. Uthamaputhiran (your name please),
Even though I have started this part-12, you only have given it the momentum it required.
Excellent and thank you.
Regards,
R. Parthasarathy
-
Quote:
Originally Posted by
parthasarathy
Dear Mr. Uthamaputhiran (your name please),
Even though I have started this part-12, you only have given it the momentum it required.
Excellent and thank you.
Regards,
R. Parthasarathy
Thanks for your compliments Sir. You can call me Kannan !
Regards
s.k