-
20th November 2013, 10:51 PM
#331
Junior Member
Regular Hubber
DEDICATING THIS EXCELLENT LYRIC FOR VASU SIR, GOPAL SIR, RAGHAVENDER SIR !!
FORGET ABOUT THE CASTING & PICTURISATION. VAALI SIR ! YOU ARE A PERFECT BUSINESS MAN !
-
20th November 2013 10:51 PM
# ADS
Circuit advertisement
-
20th November 2013, 10:53 PM
#332
Junior Member
Regular Hubber
90 degree Angle - Watch the Samudriga Latchanam of Nadigar Thilagam !
Silaikku sedhukkiadhu pola ulla oru perfect nose !
Vincent's Camera - Amazing - adds fuel to the fire !
-
20th November 2013, 10:56 PM
#333
Junior Member
Regular Hubber
LET NADIGAR THILAGAM's LULLABY PUT THOSE WHOSE EYE LIDS LONGING FOR SLEEP ! LETS WATCH NT IN SMART TSHIRT OUTFIT !!
-
20th November 2013, 11:10 PM
#334
Senior Member
Devoted Hubber
டியர் வாசு சார்,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தங்கள் பங்களிப்பால் நம் திரி மென்மேலும் பிரகாசிக்கட்டும்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
21st November 2013, 12:52 AM
#335
மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாசு!
இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
-
21st November 2013, 12:53 AM
#336
ரவி,
சீனி அல்லது சக்கரை என்று சொல்லப்படும் பொருள் எதனுடன் சேர்ந்தாலும் தித்திப்பது போல ஞான ஒளி பற்றி யார் எழுதினாலும் அது படிக்க நிச்சயம் சுவையாகத்தான் இருக்கும். அப்படிதான் இருந்தது உங்கள் தொடரும்.
உங்களுக்கு ஒரு யோசனை. ஏற்கனவே பலர் எழுதிய படத்தை பற்றி எழுதப் போகிறீர்கள் என்றால் கதையை திரைக்கதையை விட்டு விடுங்கள். உங்களுக்கு பிடித்த இரண்டு மூன்று காட்சிகளைப் பற்றிய வர்ணனையாக பதிவிடுங்கள். நிச்சயம் சிறப்பாக இருக்கும்.
ராகுல்,
நான் ஏற்கனவே சொன்னது போல் உங்கள் எழுத்தில் மெருகேறி வருகிறது. குருதட்சணையில் உங்கள் தமிழ் குரு "வாசுவின்" கைவண்ணம் இருக்கிறதா என்று தெரியவில்ல. என்றாலும் நன்றாக வந்திருக்கிறது. over hype செய்யாமல் neat பதிவு. வாழ்த்துகள்.
அன்புடன்
-
21st November 2013, 12:58 AM
#337
உண்மை உணரும் நேரம் - 1
சில நேரங்களில் இல்லை பல நேரங்களில் நமது மீடியாக்களில் தமிழ் சினிமா வரலாறும் தமிழக அரசியல் வரலாறும் தவறாகவே சித்தரிக்கப்படுகின்றன என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக நமது நடிகர் திலகம் பற்றிய செய்திகள் என்றால் நிச்சயம் அடித்து சொல்லலாம் அது தவறாகவே இருக்கும். இன்றைக்கு வெளியான குமுதம் இதழில் வெளி வந்திருக்கும் செய்தியும் அந்த ரகத்தை செர்ந்ததுதான் பேசும் படம் என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் வெளிவந்திருக்கிறது. அதில் இடம் பெற்றவர்கள் பெருந்தலைவர், நடிகர் திலகம், எம்.எஸ்.வி. சந்திரபாபு மற்றும் எம்.ஜி.ஆர். அவர்கள். எழுதப்பட்டிருக்கும் செய்தி என்னவென்ற்றால் இந்தப் புகைப்படத்தை ஏ எல் எஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரிடம் காண்பித்தார்களாம். அவர் உடனே சொன்னாராம்.
இது சாந்தி திரைப்படம் வெளியாவதாக இருந்த நேரத்தில் அந்த படத்திற்கு தணிக்கை குழு அனுமதி தர மறுத்தார்களாம். காரணம் கதையின் போக்கு அப்படி இருந்ததாம். உடனே நடிகர் திலகமும் தயாரிப்பாளர் ஏ எல் எஸ் அவர்களும் தணிக்கை குழுவை சந்தித்து விளக்கமளித்தும் பலன் இல்லையாம். உடனே பெருந்தலைவரை அணுகினார்களாம். அவர் படத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னாராம். அவருக்காக சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதாம். இதற்கிடையில் இந்த படத்திற்கு இப்படி ஒரு சிக்கல என்று கேள்விப்பட்டவுடன் எம்.ஜி.ஆர் அவர்களும் விரைந்து வந்தாராம். சிறப்பு காட்சியை அவரும் பார்த்தாராம். படத்தை பார்த்துவிட்டு பெருந்தலைவர் இதில் தடை செய்வதற்கு ஒன்றுமில்லையே என்று தணிக்கை குழுவினரிடம் சொல்லி படத்தை வெளியிட அனுமதி வாங்கி தந்தாராம். எம்.ஜி.ஆர் அவர்களும் பெருந்தலைவரின் இந்த முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்தாராம். இப்படி எழுதியிருக்கிறார்கள். எழுதியவர் மேஜர்தாசன்.
மேஜர்தாசன் பற்றியும் அவரின் விஸ்வாசம் எந்தப் பக்கம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படி இருப்பதனால் அவருக்கு லாபம் கிடைக்கிறது என்றால் இருந்துவிட்டு போகட்டும். அதைப் பற்றி நமக்கு அக்கறையும் இல்லை. ஆனால் விஸ்வாசத்தை காட்டுகிறேன் பேர்வழி என்று தவறான தகவலை அதுவும் நடிகர் திலகத்தையும் உள்படுத்தி எழுதியிருப்பதுதான் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சாந்தி படத்திற்கு தணிக்கையில் சிக்கல் என்பதே இப்போது அவிழ்த்து விடப்படும் புது சரடு. சரி ஒரு வாதத்திற்காக அப்படி ஒரு சிக்கல் இருந்தது என்று வைத்துக் கொள்வோம். செய்தியோடு பிரசுரிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பார்ப்போம். எம்ஜிஆர் அவர்கள் மேக்கப்புடன் இருக்கிறார். காவல்துறை இன்ஸ்பெக்டர் யூனிபார்ம் அணிந்திருக்கிறார்.
இப்போது சாந்தி வெளியான காலகட்டம் எது என்று பார்ப்போம். 1965-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி. படம் வெளியாவதில் சிக்கல் என்றால் எப்போது இருந்திருக்க வேண்டும்? 1965 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இருந்திருக்கவேண்டும். அந்த நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் காவல்துறை அதிகாரியாக ஏதாவது படத்தில் நடித்துக் கொண்டிருந்தாரா என்று பார்த்தோமென்றால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை இல்லை. அந்த காலக்கட்டத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்த என் கடமை 1964 மார்ச் மாதமே வெளியாகி விட்டது. அதன் பிறகு அவர் அப்படி ஒரு வேடத்தை ஏற்றது முகராசி படத்தில்தான். அது வெளியானது 1966 பிப்ரவரி 18 என்று நினைவு. அது மட்டுமல்ல முகராசி படத்தைப் பொறுத்தவரை அந்தப் படம் 11 அல்லது 12 நாட்களில் எடுக்கப்பட்டதாக சொல்வார்கள். அந்த செய்தி பல இதழ்களிலும் வந்திருக்கிறது. அப்படியானால் உண்மை என்ன?
இந்தப் புகைப்படத்தில் தோற்றமளிக்கும் எம்ஜிஆர், முகராசி படப்பிடிப்பிலிருந்து வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிதான். ஆனால் அது சாந்தி பட சிறப்புக் காட்சி அல்ல. 1966 ஜனவரி 26 அன்று நடிகர் திலகம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதற்காக நடத்தப்பட்ட பாராட்டு விழா விருந்தில்தான் எம்ஜிஆர் முகராசி படப்பிடிப்பிலிருந்து வந்து கலந்துக் கொண்டிருந்தார். சரியான காலக்கட்டம் சொல்ல வேண்டுமென்றால் ஜனவரி 27 முதல் பிப்ரவரி முதல் வாரம் வரை உள்ள காலக்கட்டம்.
உண்மை இவ்வாறிருக்க சம்பந்தமேயில்லாமல் சாந்தி படத்தை இழுத்திருப்பதும், சிவாஜி படம் வெளிவர எம்ஜிஆர் உதவி செய்தார் என்று ஒரு புனித பிம்பத்தை உருவாக்குவதன் மூலமாக மேஜர்தாசன் அடையப் போகும் லாபம் என்ன? இதில் 77 வயதான ஒருவர் இதை சொல்வது போல் வடிவமைத்து அந்த பொய்யை அந்த பெரியவர் தலையில் கட்டுவது எதில் சேர்த்தி?
இதில் நடக்கும் மற்றுமொரு மக்களை முட்டாளாக்கும் விஷயத்தையும் சொல்ல வேண்டும். மேஜர்தாசன் எழுதுவது போல் இவர்கள் இது போன்ற புகைப்படத்தை தேடி கண்டுபிடிப்பதில்லை. சினிமாத்துறையில் உள்ளவர்களிடம் சென்று இது போன்ற புகைப்படங்கள் இருக்கிறதா என்று விசாரித்து அதை அவர்களிடம் இருந்து வாங்கி அதன் பின்னணியையும் கேட்டுக் கொண்டு இவர் அந்தப் புகைப்படத்தை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்தது போல் எழுதி விடுவார். இதற்கு அத்தாட்சி நடிகரும் நமது ஹப்பருமான மோகன்ராம் அவர்களின் தந்தையார் வி.பி.ராமன் அவர்கள் பிரபலங்களுடன் இருக்கும் படத்தை போட்டுவிட்டு மோகன்ராம் அவர்கள் அந்தப் படத்தை பற்றிய பின்னணியை சொல்வது போல் சில காலம் முன்பு வெளியாகியிருந்தது. ஆனால் உண்மையில் மோகன்ராம் சாரிடமே இந்த புகைப்படத்தை வாங்கி அதன் பின்னணியையும் எழுதிவிட்டு தான் என்னமோ அந்தப் புகைப்படத்தை எங்கிருந்தோ தேடி பிடித்த மாதிரி இந்த மேஜர்தாசன் எழுதினார் என்பதை மோகன்ராம் அவர்களே தன Facebook wall-ல் எழுதியிருந்தார்.
புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி படிக்கும் லட்சக்கணக்கான மக்களை இப்படி தவறான தகவல் கொடுத்து ஏமாற்றுவதில் இவருக்கு என்ன லாபமோ?
உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை என்பதை இப்படிப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு!
அன்புடன்
இதை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு மேலதிக தகவல். இதே புகைப்படம் சென்ற அக்டோபர் மாதம் சினிமா ஸ்பெஷல் இதழில் வெளியாகியிருக்கிறது. அதில் சரியான தகவலை விஜயன் அளித்துள்ளார்.
அன்புடன்
-
21st November 2013, 02:00 AM
#338
Senior Member
Senior Hubber
//உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை என்பதை இப்படிப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு! //
வாருங்கள் முரளி சார்..
தவறான செய்திகளைப் பரப்புபவர்களை நினைத்தால்..கஷ்டமாகத் தான் இருக்கிறது..ஏன் இப்படி..
-
21st November 2013, 02:32 AM
#339
Junior Member
Senior Hubber
murali sir welcome You have given very correct reply to majordasan about SHANTHI FILM contraversy of kumudam issue which is puerly an imaginary news to get cheap publicjty for VERY WELL KNOWN REASONS.
HAPPY BIRTHDAY WISHES AND BLESSINGS TO VASU AND GANPAT SIRS.
REGARDING The ongoing 12th edition things are goingvery well indeed but in a slow speed.
ravi and rahul anaysyses are interesing to read.
-
21st November 2013, 04:33 AM
#340
Junior Member
Newbie Hubber
முரளி,
அப்படி போடு அரிவாளை. இங்கே ஹிஸ்டோரியன் என்று சொல்லி அலைபவன் எல்லாம் வெத்து வேட்டு.மேஜர் தாசன் பயங்கர fraud .ஆர்.பீ.ராஜநாயகம் கூட இவரை பற்றி வருத்த பட்டு எழுதியிருந்தார்.
வாசு சார்,
உங்கள் பிறந்த இந்நன்னாளில் நீங்கள் இங்கு உங்கள் 4000 ஆவது லேண்ட்மார்க் பதிவை இட வேண்டும்.
ராகுல்,
உன் குரு தட்சிணை ,வெரி interesting .உன் பதிவுகள் மெருகேறி உள்ளன.வாழ்த்துக்கள்.
உத்தம புத்திரன்,
தனி ஆளாக திரியை தூக்கி பிடிக்கிறீர்கள் .நன்றி.
ரவி சார்,
நான் கலந்து கொண்டுதானே உள்ளேன்?
Bookmarks