Cenima Nadigaiyaana Thogupaalini Vaishali...........
http://www.mayyam.com/talk/showthrea...Artists/page36
Nandri.Dinamalar.
Printable View
Cenima Nadigaiyaana Thogupaalini Vaishali...........
http://www.mayyam.com/talk/showthrea...Artists/page36
Nandri.Dinamalar.
Pudhiya hair coloringai Twitteril veliyitta Dhivyadharshini........
http://cinema.dinamalar.com/tamil-tv...hair-color.htm
Nandri.Dinamalar.
Quote:
சினிமா-சீரியலில் திரைதான் வித்தியாசம்! -பாலாசிங்
நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலாசிங். அதன்பிறகு இந்தியன், கன்னத்தில் முத்தமிட்டாள், தீனா, சாமி, விருமாண்டி, ஜிகர்தண்டா, பூலோகம் என பல படங்களில் நடித்த அவர், தற்போதும் சில படங்கள் மட்டுமின்றி ஆதிரா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாலாசிங் சீரியல் ஸ்பாட்டுகளுக்கு செல்லும்போது, சீரியல் நடிகர் - நடிகைகளிடம் ரொம்ப சகஜமாக பழகினாராம். ஓய்வு நேரங்களில் அவர்களிடம் செம காமெடி அரட்டையிலும் ஈடுபட்டாராம். பாலாசிங் சினிமா நடிகர், சீரியல் நடிகர்களிடம் சகஜமாக பழக மாட்டார் என்று நினைத்து விலகியே நின்ற நடிகர்கள், அவர் தங்களிடம் இயல்பாக பேசிப்பழகியதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார்களாம்.
இதுபற்றி பாலாசிங் கூறுகையில், நான் சினிமா நடிகன் என்றாலும், சினிமா- சீரியல் இரண்டிற்குமிடையே பெரிய மாற்றம் தெரியவில்லை. திரைதான் வித்தியாசம். அதேபோல் நடிகர் நடிகைகளும் எனக்கு வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் ஒரேமாதிரியான கலைஞர்களாகத்தான் பார்க்கிறேன் என்று கூறும் பாலாசிங், இனிமேல் நான் சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.
நன்றி: தினமலர்
Quote:
சீரியல்களில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் துபாய் செல்கிறார் சாய்சக்தி!
சொந்த பந்தம், வள்ளி, நாதஸ்வரம், சரவணன் மீனாட்சி, சபீதா என்கிற சபாபதி உள்பட பல தொடர்களில் நடித்தவர் சாய் சக்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரியான வருமானம் இல்லாததால் விரக்தியடைந்த அவர், தற்கொலை முயற்சியில் ஈடுபடப்போவதாக வாட்ஸ்அப்புகளில் செய்தி வெளியானது. அதையடுத்து, அவரைக்கேட்டபோது, சீரியல்களை நம்பிதான் எனது குடும்பமே உள்ளது. ஆனல் எனக்கு சரியானபடி நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் கடன் தொல்லை அதிகமாகி விட்டது. நான் சான்ஸ் கேட்க சென்ற இடங்களில் யாருமே வாய்ப்பு தரவில்லை. அதனால் ஏற்பட்ட மன உளச்சல் காரணமாகத்தான நான் தற்கொலை முயற்சியில் இறங்க முடிவு செய்தேன் என்று சொன்னார் சாய் சக்தி.
இந்தநிலையில், தற்போது துபாய் செய்ய முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார் சாய் சக்தி. அதுபற்றி அவர் கூறுகையில், தமிழ் சீரியல்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வேலை வெட்டி இல்லாத இந்த ஊரில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை. அதனால் துபாய் சென்று அங்குள்ள லோக்கல் சேனல் களில் நடிக்கப்போகிறேன். அங்குள்ள சில நண்பர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பிழைப்பு தேடி துபாய் செல்லும் நான் எப்போது மீண்டும் சென்னை திரும்புவேன் என்று சொல்ல முடியாது. ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோகூட ஆகலாம். சீரியல்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே சென்னை திரும்புவேன் என்கிறார் சாய்சக்தி.
நன்றி: தினமலர்
Malaiyala Serial-galukku SENSOR Arasu Theeviram.
Malaiyaala serialgalil 30kkum mearpatta serialgal oliparappaagi varugiradhu......
http://cinema.dinamalar.com/tamil-tv...am-serials.htm
NANDRI.DINAMALAR.
Thamizil Dub Aagiradhu Sudha Chandranin Hindi Serial.....
Sudha Chandran Naditha Naagin Hindi Serial colorsTvyil kadandha aandu oliparapaanaggi vetri karamaaga odiya serial......
http://cinema.dinamalar.com/tamil-tv...d-in-Tamil.htm
NANDRI.DINAMALAR.
Serialgalil Nadikka vaayppu illaadhathaal Dubai selgiraar saai sakthi.....
http://cinema.dinamalar.com/tamil-tv...in-serials.htm
NANDRI.DINAMALAR.
Chinnathiraiyil kalakkum Sanni Liyon.......
Hollywood phornographicstar-aana sanniliyon MTv Nadathiya split villaaa Nigalchiyin mulamaaga india vandhaar.
http://cinema.dinamalar.com/tamil-tv...ision-also.htm
NANDRI.DINAMALAR.
Karunanidhiyin adutha thodar THenpaandi singam.....
Kalaijnar tv-yil kalaijar kathai, thiraikadhai,vasanathil thodarthu serialgal oliparapaagi varugiradhu.....
http://cinema.dinamalar.com/tamil-tv...ndi-Singam.htm
NANDRI.DINAMALAR.
Ji thamilil puthiya nigalchi junior Super Star.....
Siruvar sirumiyin Nadana thiramai,Paadum thiramaigalai velipadutha pala nigalchigal nadathappattu varugiradhu.....
http://cinema.dinamalar.com/tamil-tv...er-star%22.htm
NANDRI.DINAMALAR.
Gramangalai nokki sellum nadana nigalchigal......
http://cinema.dinamalar.com/tamil-tv...in-Village.htm
NANDRI.DINAMALAR.
Quote:
இந்தி சீரியலில் நடிக்கும் கார்த்திகா!
1980-90களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய பல நடிகைகளில் ராதாவும் ஒருவர். ரஜினி, கமல், விஜயகாந்த் என அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தவர். ஆனால் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ராதா, தனது வாரிசுகள் கார்த்திகா, துளசி இருவரையும் சினிமாவில் இறக்குமதி செய்தார். அந்த வகையில், கார்த்திகா கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி பின்னர், அன்னக்கொடி, புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்தார். அதையடுத்து அவர் நடித்த வா டீல் என்ற படம் கிடப்பில் கிடக்கிறது.
அதேபோல், ராதாவின் இளைய மகளான துளசி நாயர், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு கே.வி.ஆனந்தின் யான் படத்திலும் நடித்தார். அதன்பிறகு அவருக்கும் படங்கள் இல்லை. இந்த நிலையில், புதிய படவாய்ப்புகளே இல்லாத கார்த்திகா, துளசி நாயர் இருவரும் மும்பைக்கே திரும்பிச்சென்று விட்டனர். இவர்களில் கார்த்திகாவுக்கு சினிமாவில் தொடர்ந்து கோலேச்ச வேண்டும் என்கிற ஆசை இருப்பதால் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தவருக்கு இப்போது இந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். முதலில் சீரியலில் நடித்தால் சினிமா நடிகை என்கிற இமேஜ் போய் விடுமே என்று தயங்கிய கார்த்திகாவிடம், இந்தி சினிமா நடிகைகள் சிலர் சினிமா, சீரியல் இரண்டிலும் நடிப்பதை சுட்டிக்காட்டி, நடிக்க சம்மதம் வாங்கி விட்டாராம் தாய்குலம் ராதா.
நன்றி: தினமலர்
Quote:
ஒரே சீரியலில் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கிறேன்! -ஜெயராம் பெருமிதம்
வாணி-ராணி தொடரில் வில்லனாக நடித்தவர் ஜெயராம். அதையடுத்து கண்ணாமூச்சு, கேளடி கண்மணி போன்ற தொடர்களில் நடித்த அவர், தற்போது தாமரை தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோ-வில்லன் என டபுள் ரோலில் நடிக்கும் அவருக்கு வில்லன், மனநோயாளி, நல்லவன் என மூன்றுவிதமான கோணங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்
இதுபற்றி ஜெயராம் கூறுகையில், சினிமா மோகத்தில்தான் நான் நடிக்க வந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்னத்திரைக்கு வந்தேன். வாணி ராணி தொடரில் அழுத்தமான வில்லன் வேடம் கிடைத்தது. அதன்பிறகு நடித்த தொடர்களிலும் நானே எதிர்பார்க்காத வித்தியாசமான வேடங்கள் கிடைத்த நிலையில், இப்போது நடித்து வரும் தாமரை தொடரில் டபுள் ரோல் கிடைத்தது.
இந்த தொடரில் நல்லவன்-கெட்டவன் என இரண்டுவிதமாக நடித்தபோதும் மனநோயாளியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இப்படி ஒரே சீரியலில் மூன்றுவிதமான டைமன்சனில் நடிக்கிறேன். இந்தமாதிரியான வாய்ப்பு கிடைப் பது அரிதான விசயம். அந்த வகையில் இந்த தாமரை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.
மேலும், சீரியல்களில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் மனதளவில இருப்பதால் சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடிப்ப தற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். விரைவில் படங்களில் கமிட்டாகி விடுவேன் என்று நினைக்கிறேன். அதேசமயம், சினிமாவில் நடிகனாகி விட்டேன் என்பதற்காக சீரியல்களை தவிர்க்க மாட்டேன். இரண்டு மீடியாக்களிலும் நல்ல கேரக்டர்களாக செலக்ட் பண்ணி நடிப்பேன். முக்கியமாக, நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். நினைவுகூர்ந்து பேசும்படியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறும் ஜெயராம், ராஜ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு புதிய சீரியலிலும் தற்போது கமிட்டாகியிருக்கிறாராம்.
நன்றி: தினமலர்
Quote:
மீண்டும் வந்தார் ஆர்த்தி
மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் மீடியா வாழ்க்கையை துவக்கியவர் ஆர்த்தி. சின்ன சின்ன ஆசை, சொல்விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு கடந்த 10 வருடங்களாக முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய ஆர்த்தி இயக்குனர் பாலாவின் உதவியாளர் விவேக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்த்தி தற்போது ஒரு குழந்தைகக்கு தாயாகி இருக்கிறார். மகன் பெயர் தியோடன். தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் ஆர்த்தி. 'வானவில்‚ தொலைக்காட்சியில் 'நல்வரவு‚, 'திரைப்படம் உருவான கதை‚ என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். “எங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக செல்கிறது. என் கணவர் எனக்கு அழகான வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறர். கடவுள் அழகான குழந்தையை கொடுத்திருக்கிறார். மீடியாவில் பரபரப்பா இயக்கி விட்டு வீட்டில் முடங்கி கிடக்க முடியவில்லை. அதனால் மீண்டும் வந்திருக்கிறேன்” என்கிறார் ஆர்த்தி.
நன்றி: தினமலர்
Quote:
பாசமலர் சீரியல் தாமரையின் டைரக்சன் ஆசை!
தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் மலையாள சீரியல்களில் இருந்து தமிழுக்கு வந்தவர் சந்திரா லட்சுமண். அதையடுத்து பல சீரியல்களில் நடித்த அவர் தற்போது பாசமலர் சீரியலில் தாமரை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். வழக் கம்போல் இந்த தொடரிலும் அவரது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வரு கிறதாம்.
இதுபற்றி சந்திரா லட்சுமண் மேலும் கூறுகையில், இதுவரை நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களில் நடித்துள்ளேன். அப்படி நடித்த எல்லா சீரியல்களிலும் என்னை பாசிட்டீவான வேடங்களில்தான் நடிக்க வைத்துள்ளார்கள். நானும் அந்தந்த கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப நடித்து வருகிறேன். முக்கியமாக நடிப்பு என்று அதை எடுத்துக்கொள்ளாமல் என் வாழ்க்கையில் நடப்பது போன்றே நினைத்துக்கொண்டு நடித்து வருகிறேன். அதனால்தான் ஒவ்வொரு சீரியல்களிலும் எனது நடிப்பு யதார்த்தமாக இருப்பதாக நேயர்கள் பாராட்டுகிறார்கள்.
மேலும், பாசிட்டீவ் வேடங்களாக நடித்தபோதும் வித்தியாசமான வில்லி வேடங்கள் வந்தாலும் அதற்கேற்ப எனது முகபாவணையை மாற்றியும் என்னால் பர்பாமென்ஸ் பண்ண முடியும். அதனால் டைரக்டர்கள் என்னை நம்பி இன்னும் மாறுபட்ட வேடங்கள் கொடுத்தாலும் நடிப்பேன் என்று கூறும் சந்திரா லட்சு மணுக்கு, டைரக்சன் பண்ண வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாம். அதற்காக முயற்சி எடுக்க மாட்டேன். ஆனால் எதிர்காலத்தில் வாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக படமோ, சீரியலோ டைரக்ட் பண்ணுவேன். அப்படி நான் இயக்கும் கதைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் சந்திரா.
நன்றி: தினமலர்
Quote:
http://img1.dinamalar.com/cini//CNew...3425586283.jpg
இந்தி சீரியல் மோகத்தை விரட்டியடிக்க முடியும்! - காயத்ரி புவனேஷ்
இமயம், கேப்டன், வசந்த், ராஜ் உள்ளிட்ட சேனல்களிலும் ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் காயத்ரி புவனேஷ். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்தவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சினிமா சினிமா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு, லெட்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ -என்ற நடன பள்ளி தொடங்கி அதன் மூலம் பிட்னஸ், நடனம், யோகா போன்ற பயிற்சிகளும் கொடுத்து வருகிறார் காயத்ரி புவனேஷ்.
தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது...
சினிமா சினிமா நிகழ்ச்சி பற்றி சொல்லுங்கள்?
புதிய படம், வரப்போகிற படம், டிரெய்லர், படக்காட்சிகள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களே அதிகமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், சினிமா சம்பந்தமாக வெளியாகும் இந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே சீரியல்களில் நடித்த நீங்கள் இப்போது நடிக்காதது ஏன்?
கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி முதல் பாகத்திலும் 6 மாதம் நடித்த நான், பின்னர் குரங்கு கையில பூமாலை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தேன். இப்போது நான் எனது கேரியரை தொடங்கிய தொகுப்பாளினி இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது மட்டும்தான் பண்ண வேண்டும் என்பதில்லை, நடிப்பு, ஆங்கரிங், ரியாலிட்டி ஷோ என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்திக்கொள்வேன். முக்கியமாக அப்படி கிடைக்கும் வாய்ப்புகளில் எனக்கு ஸ்கோர் பண்ண வாய்ப்பு இருக்க வேண்டும். எனக்கு பிடித்திருந்தால் கிடைக்கிற வாய்ப்புகளை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்வேன்.
முக்கியமாக, ரியாலிட்டி ஷோக்களில் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. காரணம், அதில் நமக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கிறது. சிவகார்த்திகேயன் போன்றவர்கள்கூட ரியாலிட்டி ஷோக்களில்தான் தங்களது திறமையை வெளிப்படுத்திதான் பிரபலமானார்கள். அதேபோல் பெப்ஸி உமாவும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி ஒரே நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த மாதிரி ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன்.
நீங்கள் நடத்தி வரும் நடனப்பள்ளி பற்றி சொல்லுங்கள்?
லெட்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ -என்ற பெயரில் சென்னை அண்ணா நகரில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். இதில் மொத்தம் 140 பேர் நடன பயிற்சி பெறுகிறார்கள். சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருமே வருகிறார்கள். நடனம், பிட்னஸ், யோகா போன்ற கலைகள் இங்கே பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும், நடனத்தில் ஹிப்ஹாப் வகை நடன பயிற்சி கொடுத்து வருகிறேன். இந்த நடனம் உலகத்தரம் வாய்ந்தது. இது மேற்கத்திய நடனம் மட்டுமின்றி கிராமியம் மற்றும் பரதநாட்டியமும் சேர்ந்த புதுமையான கலவையாகும்.
அப்படியென்றால் நீங்கள், இந்த பள்ளி மூலமே ஜூனியர் சிங்கர் போன்று ஒரு நடன நிகழ்ச்சியை சேனலில் வழங்கலாமே?
இப்போதைக்கு நிறைய ஈவன்ட்ஸ் நடத்தி வருகிறேன். அதோடு சில சேனல் களுக்கு எனது பள்ளியில் நடக்கும் நடனம், யோகா நிகழ்ச்சிகளைத்தான் வந்து சூட் பண்ணி செல்கிறார்கள். அந்த அளவுக்கு எனது பள்ளி இப்போது பிரபல மாகி விட்டது. அதனால் எதிர்காலத்தில் இங்கு வரும் திறமையானவர்களை கொண்டு பெரிய அளவில் ஈவன்ட்ஸ் நடத்தும் ஐடியா இருக்கிறது. அதோடு போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன்.
சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் எந்தமாதிரி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுப்பீர்கள்?
சீரியல்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஏதாவது மெசேஜ் சொல்ல வேண்டும் அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வேடங்களாக இருக்க வேண்டும். இப்படி செலக்டீவாகத்தான் நடிப்பேன்.
சமீபகாலமாக சீரியல்களில் பிரச்சினைகளை பயங்கரமாக காண்பித்து வருகிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
குழந்தைகளும் சீரியல்கள் பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளாமல் சில சீரியல்கள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சின்ன பிரச்சினைகளை எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி பெரிதாக காண்பிக்கிறார்கள். இந்த மாதிரி குடும்ப பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட அரைச்ச மாவையே தொடர்ந்து காட்டாமல், டெக்னாலஜி சம்பந்தமான கதைகளில் சீரியல் பண்ணலாம். குறிப்பாக, இந்தி சீரியல்களில் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதனால் தொடர்ந்து ஒரேமாதிரியான பிரச்சினைகளில் சீரியல்களை பார்த்த நம்முடைய நேயர்களும் அந்த சீரியல்கள் பக்கம் திரும்புகிறார்கள்.
அவர்களை தடுத்த நிறுத்த வேண்டியது தமிழ் சீரியல் நடிகர் நடிகைகளின் முக்கிய கடமையாக உள்ளது. அதனால் புதுமையான முறையில் பர்பாமென்ஸை கொடுத்து நேயர்களை இழுக்க வேண்டும். குறிப்பாக, பெப்ஸி உமா, கட்டிய சேலை, நெற்றியில் வைத்த பொட்டை கூட நம்முடைய நேயர்கள் ரசித்தார்கள். அதனால் புதிதாக ஏதாவது செய்யும்போது அதன்பக்கம் திரும்பி விடுவார்கள். அதனால் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தங்களது எபோர்ட்டை போட வேண்டும். அப்படி தனிப்பட்ட முறையில் தனித்திறமைகள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும்போது நேயர்கள் நம் பக்கம் திரும்பி விடுவார்கள். அப்படி செய்தால் இந்தி சீரியல் மோகத்தை விரட்டியடித்து விட முடியும் என்கிறார் காயத்ரி புவனேஷ்.
நன்றி: தினமலர்
Quote:
http://img1.dinamalar.com/cini//CNew...0838824317.jpg
உழைத்தால் தான் சின்னத்திரையில் நிலைக்க முடியும்: ராதிகா
ராதிகா தயாரித்து நடிக்கும் வாணி ராணி 1000 எபிசோட்களை கடந்துள்ளது. தயாரித்து ஒளிபரப்பும் தாமரை தொடர் 500 எபிசோட்களை கடந்துள்ளது. இதனை தனது அலுவலக ஊழியர்கள் மற்றும் கலைஞர்களுடன் கொண்டாடினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் சின்னத்திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. சின்னத்திரையில் நிறைய கத்துக்கிட்டேன். கத்துக்கிட்டதுல முக்கியமானது உழைப்பு. இங்கு உழைச்சிக்கிட்டே இருந்தா தான் ஜெயிச்சிக்கிட்டே இருக்க முடியும். கொஞ்சம் அசந்தாகூட ஓரமா உட்கார வச்சிடுவாங்க. இத்தனை வருடம் நான் நிலைச்சு நிற்கிறேன்னா அதுக்கு உழைப்பைத் தவிர வேற காரணம் எதுவுமில்லை.
இப்போது சின்னத்திரை சீரியல்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. சங்கத்தின் மூலமா அதை தீர்க்க சம்பந்தப்பட்டவங்க முயற்சி எடுக்கணும். என் கணவர் நடிகர் சங்கத்துக்கு நிறைய உழைச்சார். கடைசியில அவருக்கு கிடைத்தது வேதனையும், மன உளைச்சலும் தான் அப்படி ஒரு நிலமை எனக்கு வேண்டாம் என்று தான் சங்கத்துலேருந்து ஒதுங்கிட்டேன். அதோட எனக்கு நிறைய வேலை இருக்கு. அதை பார்த்தால் போதும்னு இருக்கேன். இப்போது என் மகள் திருமணத்துல பிசியாக இருக்கேன் என்கிறார் ராதிகா.
நன்றி: தினமலர்
Quote:
தனுஷின் பெரிய ரசிகை நான்!- தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலகலப்பான தொகுப்பாளினியாக என்ட்ரியானவர் பிரியங்கா. அதைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நான் நடிகர் தனுஷின் பெரிய ரசிகை என்கிறார் அவர்.
தினமலர் இணையதளத்திற்காக பிரியங்கா அளித்த பேட்டி...
விஜய் டிவியில் நான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரசித்து என்சாய் பண்ணி பங்கேற்று வருகிறேன். மேலும் நான் கலகலப்பான டைப் என்பதால் சக ஆங்கர்களை கேப் கிடைக்கும்போது கலாய்ப்பேன். அதேபோல் அவர்களும் என்னை கலாய்ப்பார்கள். அதனால் ஒர்க் பண்ற பீலே இல்லாமல் ஜாலியாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இப்போது கேப் கொடுக்கப்பட் டுள்ளது. அதனால் அடுத்தபடியாக கலக்கப்போவதுயாரு, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருக்கிறேன்.
இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டீம் லீடராக இருக்கிறேன். ரொம்ப அருமையான நிகழ்ச்சியாக உள்ளது. அதை நானும் ஒரு ஆடியன்ஸ் கண்ணோட்டத்தில்தான் இருந்து ரசித்து வருகிறேன். அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள் என்றதுமே எனக்கு புதிய உற்சாகம் வந்து விடும். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் எப்போது கலந்து கொள்வோம் என்று ஆர்வமாக காத்திருப்பேன். அச்சம் தவிர் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கலந்து கொண்டேன் பின்னர், கலந்து கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியில் முதலில் ஆர்வமாகத்தான் சென்றேன். ஆனால் அங்கு சென்றபிறகுதான் அதில் உள்ள ரிஸ்க் தெரிந்தது. ஆனபோதும் பல எபிசோடுகளில் சிறப்பாக செயல்பட்டேன்.
மேலும், என்னை எனது பெற்றோர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது எப்படி உற்சாகப்படுத்தி வந்தார்களே, அதேபோல் கடந்த 6 மாதமாக எனது புகுந்து வீட்டிலும் என்னை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, எனது மாமியார் நான் படப்பிடிப்புக்கு சென்று தூங்கிக்கொண்டிருந்தால் என்னை தொந்தரவு செய்வதே இல்லை. ஓய்வெடுக்கட்டும் என்று விட்டு விடுவார். ஒரு மகளைப்போல என்னை கவனித்துக்கொள்கிறார். அந்த வகையில், எனக்கு புகுந்த வீட்டிலும் மாமியார் என்ற பெயரில் ஒரு அம்மா கிடைத்திருக்கிறார் என்பதில் பெரிய மகிழ்ச்சி. அதனால், விஜய் டிவியில் ஆங்கராக எனது பயணம் என்றென்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
அவரிடத்தில், சமீபகாலமாக விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே? நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்? என்று கேட்டபோது,
சினிமாவைப்பொறுத்தவரை நான் நடிகர் தனுஷின் பெரிய ரசிகை. 3 படத்தில் இருந்து அவரது ரசிகையாகி விட்டேன். மேலும், அவரது நடிப்பில் 3 படம் மட்டுமின்றி, ஆடுகளம், பொல்லாதவன், வேலையில்லா பட்டதாரி என பல படங்கள் பிடிக்கும். கோலிவுட்டில் நடிகராகி, பாலிவுட், ஹாலிவுட் என்று இப்போது பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உணர்ந்து முழுமையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான நடிகர் அவர். அவருடன் ஒரு தங்கை வேடத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தாலும் நடிப்பேன். கலைப்பயணத்தில் இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. அதனால் அவருடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதிர் காலத்தில் அமையும் என்று நம்புகிறேன் என்கிறார் பிரியங்கா.
http://img1.dinamalar.com/cini//CNew...1906445755.jpg
நன்றி: தினமலர்
Quote:
தொகுப்பாளினி ஆனது ஏன்? ரோஜா விளக்கம்
தமிழ், தெலுங்கு மொழியில் 100 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தவர் ரோஜா. மாநிற அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். தனக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததும் அப்படியே சின்னத்திரை பக்கம் ஒதுங்கி விட்டார். லக்கா திக்கா, ஜீன்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது தெலுங்கு சேனலில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற பஞ்சாயத்து நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்தி தொகுப்பாளினி ஆனது ஏன் என்பது பற்றி ரோஜா கூறியதாவது:
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட தென்னிந்தி சூப்பர் ஸ்டார்கள் அனைவருடனும் நடித்து விட்டேன். ஒரு பெண் கடைசி வரை ஹீரோயினாக தொடர முடியாது. அடுத்த கட்டமாக அம்மா, அண்ணி, அக்கா கேரக்டர்கள்தான் கிடைக்கும். சினிமாவின் உச்சத்தை தொட்டுவிட்டு ஏன் மிச்சத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் சின்னத்திரை பக்கம் வந்தேன். சில படங்களில் வில்லியாக நடித்தேன். அது ஒரு மாற்றாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து வில்லியாக நடிக்க விருப்பம் இல்லை. அதனால்தான் டி.வி.பக்கம் வந்துவிட்டேன்.
சின்னத்திரை மூலமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நான் சென்று வருகிறேன். இது ஒரு புதுமையான அனுபவம். வெவ்வேறு மனிதர்களை சந்திக்கிறேன். வெற்றி பெற்றவர்களின் கொண்டாட்டத்தையும், தோற்றவர்களின் வலியையும் நேரடியாக பார்க்கிறேன். இது வாழ்க்கைக்கு நிறைய கற்றுத் தருகிறது. என்கிறார் ரோஜா.
நன்றி: தினமலர்
திறமையால் உயரமான பன்மொழி நடிகர் கிங்காங்கு
வணக்கம் கிங்காங்கு அவர்களே! முதலில் உங்கள் அப்பா – அம்மா பெயர், எப்படிப் படித்தீர்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களைக் கூறுங்களேன்!
என்னுடைய சொந்தப் பெயர் சங்கர். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பக்கத்தில் உள்ள வரதராசபுரம் எனும் சிற்றூர். என் அப்பா பெயர் ஏழுமலை. அம்மா பெயர் காசியம்மாள். என் உடன்பிறந்தவர்கள் அக்கா ஒருவர், தங்கைகள் மூன்று பேர். அக்கா பெயர் மகாதேவி, தங்கை பெயர் தேன்மொழி. இன்னொரு தங்கையின் பெயர் சரளா. கடைசித் தங்கையின் பெயர் சித்திரா. நான் ஐந்தாவது வரைதான் படித்திருக்கிறேன். எங்கள் ஊரான வரதராசபுரத்திலிருந்து பள்ளிக்குப் போக வேண்டிய ஊர் தென்னாத்தூர். ஒன்றரைப் புதுக்கல் தொலைவு. நடந்தே போவேன். வழியெல்லாம் வயலாக இருக்கும். நாங்கள் ஐந்தாறு பிள்ளைகள் சேர்ந்து ஒன்றாகப் போவோம். அப்படித்தான் ஐந்தாவது வரை படித்தேன். அப்பொழுதுதான் என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர், “படித்து என்ன செய்யப் போகிறாய்? நீ படித்து என்ன ஆட்சியராகவா ஆகப் போகிறாய்? உன்னுடைய உயரத்துக்கு நீ திரைப்படத்தில் நடிக்கப் போனால் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும். முயற்சி செய்!” என்று முதன் முதலில் கூறினார்.
?] முன்பெலலாம் நாடகம் மூலம்தான் திரைப்படத்திற்கு வந்துள்ளனர். நீங்கள் எப்படி..?
நானும் அப்படித்தான் வந்தேன். ஒருமுறை பக்கத்து ஊரில் ஒருவர் நாடகம் நடத்தினார். ஓரங்க நாடகம் மாதிரி நடத்துவார் அவர். “அந்த நாடகத்தில் நடிக்கிறாயா” என்று என்னை வந்து கேட்டார். நான், “எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. என் அம்மா அப்பாவை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினேன். அப்பா அம்மாவிடம் வந்து கேட்டார்கள். அவர்கள் மிரண்டு “இல்லை. எங்கள் பிள்ளையை நாங்கள் எங்கும் வெளியே அனுப்ப மாட்டோம். வேண்டா!” என்று சொன்னார்கள். அதற்கு அந்த நாடகம் நடத்தும் முதலாளி, “ஒன்றும் அஞ்ச வேண்டியதில்லை. நான் பாதுகாப்பாகக் அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் அழைத்துவந்து வீட்டில் விட்டு விடுவேன். நாடகத்தில் நடிப்பது நன்றாக இருக்கும்” என்று சொல்லி எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு நாடகத்தில்தான் நடித்துக் கொண்டிருந்தேன். நாடகங்களில் பொதுவாக நான் கோமாளிப் பாத்திரம் ஏற்று நடிப்பது வழக்கம்.
?] அப்படி எத்தனை நாடகங்கள் நடித்திருப்பீர்கள்?
நாடகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடித்தேன். ஐந்நூறு நாடகங்களுக்கு மேல் இருக்கும். அப்பொழுது மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு. நான் செய்த நகைச்சுவையையெல்லாம் பார்த்து மக்கள் நன்றாகப் பாராட்டினார்கள்; வாழ்த்தினார்கள். அப்பொழுதுதான் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் “நீ திரைப்படத்தில் நடிக்கச் சென்றால் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும். முயற்சி செய்!” என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் சென்னைக்கு வந்து, திரைப்பட நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஏறி இறங்கி, நிறைய இயக்குநர்களைச் சந்தித்தேன். அப்பொழுது எனக்கு முதன் முதலில் வாய்ப்பளித்துத் திரையுலகுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் என் ஆசான் ‘கலைப்புலி’ திரு.சேகரன் அவர்கள். படம் ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’.
?] நீங்கள் வாய்ப்பு கேட்டவுடன் கொடுத்துவிட்டாரா?
நான் போய் முதலில் அவரிடம் வாய்ப்பு கேட்டபொழுது, “உனக்குத் தெரிந்தது என்ன?” என்று கேட்டார். நான் “நன்றாக ஆடுவேன்” என்று தெரிவித்தேன். அந்தப் படத்தின் பாடலை ஓட விட்டார். ஏதோ எனக்குத் தெரிந்ததை ஆடினேன். “மிகவும் நன்று” என்று பாராட்டினார். நான் நடிகர் சாக்கி சான் அவர்களைப் போல சண்டைக்கலை வித்தைகள் செய்வேன். அவரைப் போலவே தாவுவது குதிப்பது போன்றவற்றைச் செய்வேன். அவற்றையும் செய்து காட்டினேன். அனைத்தையும் பார்த்துப் பாராட்டியவர், மறுநாளே படப்பிடிப்புக்கு வந்து விடுமாறு கூறினார்.
?] உங்களால் மறக்கமுடியாத அந்த முதல் படிப்பிடிப்புக்காட்சிபற்றிக் கூறுங்களேன்!
மறுநாள் ஒரு பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. “என்ன சின்னம்?… பானைச் சின்னம்! செயிக்கிறது?… பானைச் சின்னம்!” இதுதான் அந்தப் பாடல் வரி. அந்தப் பாடலில் இந்த வரி வரும்பொழுது நான் பானைக்குள்ளிருந்து வெளியில் வருவேன், முட்டையிலிருந்து கோழி வருவது போல. அதுதான் என்னுடைய அறிமுகக் காட்சி. அதன் பின் இயக்குநர் கலைப்புலி சி.சேகரனுக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. அதனால், பாதிப் படம் எடுத்து முடிக்கப்பட்டிருந்த நிலையிலும் எனக்காக நான்கைந்து காட்சிகள் புதிதாகப் படம் பிடித்தார். 1988இல் பொங்கல் வெளியீடாக வந்த அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
?] தொடர்ந்து பட வாய்ப்பு அவரே கொடுத்தாரா?
அதன் பின் அதே கலைப்புலி சி.சேகரன் அவர்கள் ‘காதல் பூனைகள்’ என்று ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் ஆட்டம், சண்டைக் காட்சி, நகைச்சுவை என்று பல காட்சிகள் அளித்து என் திறமையை வெளிப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் இடையாட்டம்(தடையாட்டம்-Break Dance) அது, இது என்று பல ஆட்டங்கள் ஆடினேன்; சண்டை இட்டேன்; நகைச்சுவை செய்தேன். அது நன்றாக எடுபட்டது. அதன் பிறகு அவர் ‘சமீன் கோட்டை’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் நான் இரட்டைப் பாத்திரம் ஏற்று நடித்தேன். அஃது ஒரு பேய்ப் படம். அது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நன்றாக ஓடியது. இப்படிக் கலைப்புலி சேகரன் அவர்கள் எந்தப் படம் எடுத்தாலும் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுப்பார். அவருக்கு ‘அகரமுதல’ இதழ் மூலமாக நான் நன்றி சொல்கிறேன்!
அப்புறம் இந்தக் கிங்காங்கு என்கிற பெயர் எனக்கு எப்படி வந்தது என உங்களுக்குக் கேட்கத் தோன்றும். கலைப்புலி சேகரன் அவர்கள்தாம் இந்தப் பெயரை எனக்குச் சூட்டினார். நான் நடிக்க வந்தபொழுது சங்கர் என்ற பெயர் மிகவும் வழமையாக இருப்பதாகச் சொல்லி வேறு பெயர் சூட்டத் திட்டமிடப்பட்டது. ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்ல, கலைப்புலி சேகரன் அவர்கள்தாம் கிங்காங்கு என்று இந்தப் பெயரைச் சூட்டினார். தவக்களை, நண்டு என்றெல்லாம் ஏற்கெனவே பெயர்கள் சூட்டி விட்டார்கள் என்பதால் தனித்துத் தெரிய வேண்டும், அதே நேரம் நாகரிகமான பெயராகவும் இருக்க வேண்டும் என்று சிந்தித்து எனக்கு இந்தப் பெயரை அவர் சூட்டினார். குறிப்பாக, கிங்காங்கு என்று அவர் ஏன் பெயர் சூட்டினார் என்றால், கிங்காங்கு என்று மற்போர் வீரர் ஒருவர் இருந்தார். மிகவும் பேருருவமாக (பிரம்மாண்டமாக) இருப்பார். முழுக் கோழியை அப்படியே சாப்பிடுவார். பத்துப் பதினைந்து பச்சை முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடுவார். பெரிய பயில்வான் அவர். அவர் பெயரை எனக்கு ஏன் வைத்தார்கள் என்றால், பெயருக்கும் ஆளுக்கும் தொடர்பே இல்லாமல் இப்படி முரண்பாடாகப் பெயர் வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்பதற்காகத்தான். ஆடுவதற்காக நிறைய மேடை நிகழ்ச்சிகளுக்கு நான் போவதுண்டு. அப்பொழுது ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள் “இப்பொழுது கிங்காங்கு அவர்கள் உங்கள் முன்னிலையில் நடனமாடுவார்” என்று. நான் வந்து நிற்பேன். ஆட்கள் தேடுவார்கள். ‘என்ன?… கிங்காங்கு என்றார்கள். ஆளையே காணோமே’ என்று. அப்பொழுது என்னை நானே மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வேன். உடனே எல்லாரும் சிரித்துக் கைத்தட்டி மகிழ்வார்கள்.
?]எந்தப்படத்தின் மூலம் நீங்கள் வெகுவாகப் புகழ் பெற்றீர்கள்?
மக்களிடம் என்னை வெகுவாகக் கொண்டு சேர்த்த படம் இரசினிகாந்து அவர்களின் ‘அதிசயப் பிறவி’. அதுதான் மக்களிடம் கிங்காங்(கு) என்ற பெயரைக் கொண்டு சேர்த்தது. அந்தப் படத்தில் இரசினிகாந்து அவர்கள் கட்டிலில் படுத்திருப்பார். நான் இடையாட்டம் ஆடுவேன். இதுதான் காட்சி. அதைப் படம் பிடிக்கும் முன் இரசினிகாந்து அவர்கள் புதுமையாக ஒன்று சொன்னார். “ஒலிநாடாவை நான் ஓட விட்டுக் கொண்டே இருப்பேன். நீ ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். சட்டென நான் ஒலிநாடாவை நிறுத்துவேன். அப்பொழுது நீ அப்படியே பொம்மை போல அசையாமல் நிற்க வேண்டும். மீண்டும் நான் விட்ட இடத்திலிருந்து ஓட விடுவேன். நீயும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து ஆட வேண்டும்” என்றார். நானும் அதே போல் ஆடினேன். அதைப் பார்த்து விட்டு அருமையாக இருக்கிறது என்று அவர் பாராட்டினார். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், அந்தப் படத்தில் அவர் ஆசான்; நான் அவருக்கு அடியவன்(சீடன்) என்றுதான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இரசினிகாந்து அவர்கள் அதையும் மாற்றினார். “நீ ஆசானாக நடி; நான் அடியவனாக நடிக்கிறேன்” என்றார். அதுவும் நன்கு எடுபட்டது. படத்தில் “குருவே! குருவே!” என்று அவர் என்னைக் கூப்பிடுவார். அவையெல்லாம் அவர் சொன்ன திட்டங்கள்தாம். அவர் எவ்வளவு பெரிய உச்ச நடிகர்! அவர் இப்படியெல்லாம் நடிக்க முன்வருவது உண்மையிலேயே பெரிய மனப்பாங்கு! நடிகர் இரசினிகாந்து அவர்களுக்கும் அவருடன் இப்படியெல்லாம் நடிக்க வாய்ப்பளித்ததற்காக அந்தக் கடவுளுக்கும் இந்த நேரத்தில் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
?] உங்கள் புகழுக்கு வெளிநாட்டு அன்பர்களும் காரணம் என்று கேள்விப்பட்டுள்ளோம். சரிதானே!
ஆம். உண்மைதான். நானே கூற நினைத்தேன். ‘அதிசயப் பிறவி’ படத்தில் வரும் அந்த இடையாட்டக் காட்சியை இலண்டன் அன்பர் ஒருவர் உம் குழல்(you tube) -இல் வெளியிட்டு விட்டார். இதுவரை ஒன்றேகால் கோடிப் பேர் அதைப் பார்த்திருக்கிறார்கள். இலண்டன், கனடா, அமெரிக்கா, ஆத்திரேலியா போன்ற இடங்களில் அது மிகவும் புகழ் பெற்றது. இளைய உச்சமீன் கிங்காங்கு (Little Super Star King Kong) என்று விசையைத் தட்டினால் உம் குழல் (you tube)-இல் அதைக் காணலாம். அதைப் பார்த்து விட்டு இலண்டனிலிருந்து பி.ஒ.நி.(பி.பி.சி.) தொலைக்காட்சியினர் என்னை அணுகி “உங்களைப் பற்றி ஆவணப் படம் ஒன்று எடுக்க விரும்புகிறோம். உங்களுக்கு ஒப்புதலா” என்று கேட்டார்கள். கண்டிப்பாகச் செய்யலாம் என்றேன். அதாவது, இலண்டனில் நகைச்சுவை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வரும் (உ)ருமேசு என்பவர் என்னை வந்து சந்தித்து, அந்த ‘அதிசயப் பிறவி’ பட இடையாட்டத்தை எப்படி ஆடினேன் என்று கேட்பது போலவும் அதற்கு நான் விடையளிப்பது போலவும், பின்னர், அவர் திரைப்படத்தில் கதைத்தலைவனாகத் (கதாநாயகன்) தான் நடிக்க இருப்பதாகத் தெரிவித்து எப்படி நடிக்க வேண்டும், எப்படிச் சண்டை இட வேண்டும், எப்படி ஆட வேண்டும் எனவெல்லாம் கேட்பது போலவும் அவற்றைப்பற்றியெல்லாம் நான் அவருக்குக் கற்பிப்பது போலவும் படமாக்கினார்கள். அது மிகவும் புகழ் பெற்றது. ‘இலண்டன் உருமேசு’ என உம் குழல்(you tube) -இல் தேடினால் அந்த ஆவணப் படத்தைப் பார்க்கலாம். அந்த ‘அதிசயப் பிறவி’ப் பட ஆட்டம் அந்த அளவுக்கு உலகெங்கும் சென்று சேர்ந்தது. அதற்குக் காரணமான அந்தப் பட இயக்குநர் எசு.பி.முத்துராமன் அவர்கள், இரசினி அவர்கள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
?] பிற மொழிப்படங்களில் நடித்துள்ளீர்களா?
இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிப் படங்களில் நடித்திருக்கிறேன். எல்லா நடிகர்களுடனும் நடித்தாகி விட்டது. இதுவரை ஐந்து உச்ச நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன். தமிழ் உச்ச நடிகர் இரசினிகாந்து, தெலுங்கு உச்ச நடிகர் சிரஞ்சீவி, கன்னட உச்ச நடிகர் சிவராசு குமார், இந்தி உச்ச நடிகர் சாருக்கான்… இன்னொரு உச்ச நடிகருடனும் நடித்திருக்கிறேன். அவர் யாரெனச் சொன்னால் நீங்கள் எல்லாருமே ஒரு மாதிரிப் புன்னகைப்பீர்கள். அவர் வேறு யாருமில்லை பவர் ஃச்டார் சீனிவாசன். அவருடனும் நடித்திருக்கிறேன். உண்மையிலேயே இந்த வாய்ப்புகளுக்காக நான் கடவுளுக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்!
?] பிற மொழிப்படம் ஒன்றில் வரும் குறிப்பிடத்தக்கக் காட்சியைக் கூறுங்களேன்!
சாருக்கான் அவர்களின் ‘சென்னை எக்சுபிரசு’ படத்தில் ஒரு வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் வழி தெரியாமல் சாருக்கான் காட்டுக்குள் வந்து விடுவார். என்னிடம்தான் வழி கேட்பார். அவர் மொழி எனக்குப் புரியாது; நான் பேசுவது அவருக்குப் புரியாது. அவர் பேசியும் செய்கையிலும் நெடுஞ்சாலைக்கு எப்படிப் போவது எனக் கேட்பார். நான் வெறுமே நாக்கைத் தக் தக் எனத் தட்டித் தட்டிப் பேசி அவருக்கு விடையளிப்பேன். அஃது அவருக்குப் புரியாது. கடைசியில், தலையிலடித்துக் கொண்டு போய் விடுவார். அந்தக் காட்சி உலகம் முழுவதும் நன்கு புகழ் பெற்றது. சாருக்கான் மிக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். நல்ல மனிதர்! அவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அந்தப் பட இயக்குநர் உரோகித்து செட்டி நகைச்சுவையை மிகவும் விரும்புபவர். எந்த வகையான நகைச்சுவை நடிப்பையும் விரும்பிப் பார்ப்பவர். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
?] நீங்கள் குள்ளமாக இருப்பதை நினைத்து என்றாவது வருந்தியதுண்டா?
கண்டிப்பாக வருந்தியிருக்கிறேன். பள்ளிக்குச் செல்லும்பொழுது எல்லாப் பிள்ளைகளும் என்னைக் கிண்டல் செய்வார்கள். நிறைய அழுதிருக்கிறேன். ஒரு காலக்கட்டத்திற்குப் பின், “நாம் எதற்காக அழ வேண்டும்? கடவுள் நம்மை அப்படிப் படைத்து விட்டான். ஆனால், அப்படிப் படைத்த கடவுளே நமக்கு ஏதாவது ஒரு திறமையையும் அளித்திருப்பான். நமக்கு என்ன வரும்? நடனம். அதை வைத்து நாம் முன்னேறுவோம்” என்று நினைத்து என் குறைபாட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு என் திறமைகளை வெளியே கொண்டு வந்தேன். நான் இரசினிகாந்த் போல ஆடுவேன்; கமலகாசன் போல ஆடுவேன்; விசயகாந்து போல ஆடுவேன்; எம்ஞ்சியார், சிவாசி ஆகியோரைப் போலவும் ஆடுவேன். ஒரே பாட்டுக்கு வெவ்வேறு நடிகர்கள் ஆடினால் எப்படி இருக்கும் என்று முதன் முதலில் ஆடிக் காட்டி அப்படி ஒரு நாட்டியமுறையை அறிமுகப்படுத்தியதே நான்தான். இப்பொழுது அதைப் பலரும் செய்கிறார்கள். ஆனால், அந்தக் கருத்துருவாக்கத்தை முதன் முதலில் கொண்டு வந்தவன் நான்தான். அது மக்கள் மனதில் நன்றாகச் சென்று சேர்ந்தது.
?] நாட்டியக்குழு எதுவும் நடத்துகிறீர்களா?
இப்பொழுது நான் ‘சிறப்பான நாட்டியம்’(Best Dance) என்றொரு நடனக்குழுவை நடத்தி வருகிறேன். அதில் முப்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதன் மூலம் நடனம், பல்கலை நிகழ்ச்சிகள் (Variety Show) போன்றவை நடத்தப் பெறுகின்றன. அதில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்திக் காட்ட நடிகர்களும் வருவதுண்டு; மாற்றுத் திறனாளிகளும் அந்தக் குழுவில் உண்டு. ஒரு கால் இல்லாதவர் நடனம் ஆடுகிறார். இரண்டு கைகளும் இல்லாதவர் அயல்முரசு(Drums) இசைக்கிறார். பார்வையற்றவர் புல்லாங்குழல் இசைக்கிறார். இப்படித் திறமையான மாற்றுத் திறனாளிகள் பலர் என் குழுவில் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
?} வெறும் ஆட்டம்மட்டும்தானா?
ஆட்டம்போல நகைச்சுவையிலும் முயன்றேன். நாம் உண்மையான வாழ்க்கையில் என்ன செய்கிறோம் என்பதையே நகைச்சுவையாக்கி எனக்கு ஏற்றபடி எழுத்தாக்கம் செய்து பதினைந்து நிமிட நிகழ்ச்சியாக மேடையேற்றுவேன். உடன் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து அதைச் செய்வதுண்டு. அதுவும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே, நாம் இப்படிப் பிறந்து விட்டோமே என்று ஒருபொழுதும் எண்ணக் கூடாது! மாற்றுத்திறனாளிகளுக்கு நான் சொல்லக்கூடியது அதுதான். நம்மிடம் என்ன இருக்கிறதோ, நம்மிடம் உள்ள திறமை எதுவோ அதை நாம் வெளிப்படுத்த வேண்டும்! கவலையே படக்கூடாது! கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைக் கண்டிப்பாகத் திறப்பார்!
?] நீங்கள் எத்தனை நாடகங்கள், திரைப்படங்களில் நடித்திருப்பீர்கள்?
தனிப்பட்ட முறையிலும் நான் இதுவரை ஐயாயிரம் ஆறாயிரம் மேடை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியிருக்கிறேன். தமிழ்நாடு மட்டுமில்லை, இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறேன். பல வெளிநாடுகளுக்கும் போயிருக்கிறேன். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், தோகா, அபுதாபி, மசுகட்டு இப்படிப் பல வெளிநாடுகளுக்கு மேடை நிகழ்ச்சிகளுக்காகச் சென்றிருக்கிறேன். மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறேன்! அதே போல் திரைப்படங்களிலும் இதுவரை 255 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன்.
இன்னொரு குறிப்பிடத்தக்க தகவல் என்னவெனில், 2009ஆம் ஆண்டு திசம்பர் மூன்றாம் நாள் அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்கள் கையால் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருதை நான் பெற்றிருக்கிறேன். மாற்றுத் திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வந்தால் அவர்களைப் பாராட்டி நடுவண் அரசு விருது வழங்குகிறது. அந்த விருது எனக்கு அளிக்கப்பட்டது. இந்த விருது எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர் நடிகர் நெப்போலியன். அவர்தாம் அப்பொழுது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். அவருக்கும், அந்த விருது எனக்குக் கிடைக்க உறுதுணையாயிருந்த அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
?] தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது உங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதா?
இல்லை. அஃது இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் பரிந்துரை செய்யுங்கள். உங்களைப் போன்றவர்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும்.
நான் பிறந்தபொழுது என் பெற்றோர் “நம் மகன் இப்படிப் பிறந்து விட்டானே” என்று என்னை நினைத்து மிகவும் வருந்தினர். ஆனால், இப்பொழுது அவர்கள் அதை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்படி எந்த ஒரு கவலையும் ஏற்படாதவாறு நான் அவர்களை நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறேன். மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என் பெற்றோர் மிகவும் விரும்பினர். நான் தொடர்ந்து மறுத்து வந்தேன். “எனக்கு யாரம்மா பெண் கொடுப்பார்கள்? வேண்டா! விட்டு விடுங்கள்” என்றேன். ஆனால், அவர்கள் விடவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் பெண் தேடி, அதன் பின் தொலைவான (தூரத்து) உறவில் அத்தை முறை உள்ள ஒருவரின் மகளைப் பார்த்து மணமுடிக்க ஏற்பாடு செய்தார்கள். ஒருமுறைக்கு இருமுறை அவருடைய ஒப்புதலைக் கேட்டு அவரை மணம் புரிந்தேன். என் மனைவி பெயர் கலா. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இல்லத்தரசியாக உள்ளார். எங்களுக்கு மகள் இருவர், மகன் ஒருவர். மூத்த மகள் பெயர் கீர்த்தனா; இரண்டாவது மகள் பெயர் சக்திபிரியா; மூன்றாவதாகப் பிறந்த மகன் பெயர் துரைமுருகன். அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
?] உங்கள் மனைவி உங்களை மணக்க முடிவெடுத்தது பற்றிச் சொல்லுங்களேன்!
திருமணத்துக்கு முன்பே நான் அவரிடம் கேட்டேன்! “எந்த அடிப்படையில் என்னை மணந்து கொள்வதாக முடிவெடுத்தாய்? பெற்றோர் சொல்கிறார்கள், உடன் பிறந்தவர்கள் சொல்கிறார்கள், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள் என இப்படி ஒரு முடிவுக்கு வந்தாயா?” என்று கேட்டதற்கு, “இல்லை. நீங்கள் நடிக்கும் படங்களைப் பார்த்தேன். தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தேன்…
?] தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறீர்களா?
ஆம்! அப்பொழுது ‘என்னருமை(my dear) பூதம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். அதை என் மனைவி அப்பொழுது நாள்தோறும் பார்ப்பாராம். அன்றாடம் என்னைப் பார்த்து என் மீது ஓர் அன்பு, நேசம். “அதனால்தான் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார். ஆக, அப்படி விருப்பப்பட்டு அவர் என்னை மணந்து கொண்டார்.
?] உங்கள் பிள்ளைகளுடன் படிப்பவர்கள் உங்களைப் பார்க்கும்பொழுது என்ன சொல்கிறார்கள்? கிண்டல் செய்கிறார்களா அல்லது நடிகர் என மதிப்புக் கொடுக்கிறார்களா?
திரைப்பட நடிகர் என மதிப்பாகத்தான் பேசுகிறார்கள். என் மகள் படிக்கும் பள்ளிக்கு நான் போவதுண்டு. உடனே எல்லாரும் ஓவென மகிழ்ச்சிக் கூச்சலிடுவார்கள். பிறகு என் மகள் வந்து “நாங்கள் உன் அப்பாவைப் பார்த்தோம். மிக்க மகிழ்ச்சி!” என்று அவர்கள் சொன்னதாகத் தெரிவிப்பார்.
?] இப்படிக் கேட்கக்கூடாதுதான்; இருந்தாலும் திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகள் கொண்டிருக்கும் அச்சத்தைப் போக்குவதற்காக இதைக் கேட்கிறேன். உங்கள் பிள்ளைகள் எல்லாரும் இயல்பான உயரம் கொண்டிருக்கிறார்களா?
பிள்ளைகள் மட்டுமில்லை, என்னைத் தவிர என் வீட்டில் எல்லாரும் இயல்பான உயரம்தான்.
?] நாட்டியக் குழு நடத்துகிறீர்களே அதன் மூலம் தொண்டு, உதவி, நன்கொடை இப்படி ஏதேனும் செய்ததுண்டா?
ஓ! செய்திருக்கிறேன். ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றுக்காக இலவயமாக நிகழ்ச்சிகளெல்லாம் நான் நடத்திக் கொடுத்ததுண்டு. ஆதரவற்றோர் இல்லத்துக்காக, அறக்கட்டளைகளுக்காக நடத்திக் கொடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு நான் பணம் வாங்குவதில்லை. அது நுழைவுச்சீட்டு வெளியிட்டு நடத்தப்படும் மேடை நிகழ்ச்சியோ, அவர்களுக்கென இருக்கும் அலுவலகத்துக்குள் நடத்தப்படும் ஆண்டு விழாவோ அரிமா சங்கம் போன்றோர் மூலமாக நடத்துவதோ. எப்படியாக இருந்தாலும் ஆதரவற்றோர் இல்லங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கான நிகழ்ச்சி என்றால் நான் இலவயமாக நடத்திக் கொடுத்து விடுவேன்.
?] திரையுலகில் உங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் இன்னும் எத்தனை பேர் இருப்பார்கள்?
அவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்களே!
?] அவர்களுக்கென உதவி செய்யக் குழு மாதிரி ஏதேனும் உண்டா?
இருக்கிறது. வைத்திருக்கிறார்கள். எல்லாரும் நம் நண்பர்கள்தாம். ஆனால், எனக்கு அது பற்றிச் சரியாகத் தெரியவில்லை.
?] நீங்களே ஏன் அப்படி ஒரு சங்கத்தை மாற்றுத் திறனாளிக் கலைஞர்களுக்கெனத் தொடங்கக்கூடாது?
அது தனி மனிதர்கள் செய்யக்கூடியது இல்லை. எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து அரசிடம் முறையாக விண்ணப்பித்து அரசு ஏற்பிசைவுடன்(அங்கீகாரத்துடன்) நடத்த வேண்டும். கண்டிப்பாக அப்படி ஒரு சங்கம் அமைக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு முன்பும் சிலர் இது பற்றிக் கூறியிருக்கிறார்கள். கண்டிப்பாக இதற்கென ஆட்களைத் திரட்டி ஆவன செய்ய வேண்டும்.
?] திரைப்படங்களில் குள்ளமாக இருப்பவர்களை, மாற்றுத் திறனாளிகளைக் கிண்டல் செய்வது போலக் காட்சிகள் நிறைய வருவதுண்டு. அப்படி ஏதேனும் காட்சிகள் வரும்பொழுது நீங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறீர்களா?
அது மாதிரி நிறையச் செய்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்த வரை, மக்களை மகிழ்விப்பதுதான் என் தொழில். நாம் சொல்வதைக் கேட்டு, நம் மூலமாகவும் நான்கு பேர் சிரிக்கிறார்கள் என்றால் அதுவே கடவுள் இட்ட பிச்சை. தனிப்பட்ட முறையில் யார் மனதையும் நாம் புண்படுத்தக் கூடாது. மற்றபடி, திரைப்படங்களில் அப்படிச் செய்கிறார்கள் என்றால் அது மக்கள் சிரிப்பதற்காக.
?] நடிப்பு தவிர திரைத்துறையில் இயக்கம், படத்தொகுப்பு என வேறு பணிகள் எதையாவது செய்ய வேண்டும் என்றோ திரைத்துறை சார்ந்து வேறு ஏதாவது விருப்பமோ உண்டா?
ஆம்! எனக்கு அப்படி இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று, படம் இயக்க வேண்டும். இரண்டாவது, ஒரு படத்திலாவது கதைத்தலைவனுக்கு எதிரியாக (வில்லனாக) நடிக்க வேண்டும். எப்படி என்று கேட்டால், பாதிப் படம் வரை எதிரி யார் என்பதே தெரியக்கூடாது. ‘ஊமை விழிகள்’ இரவிச்சந்திரன் போல. கடைசி இருபது நிமிடங்களில் பார்ப்பவர்களைக் கலக்கி விட வேண்டும்!
?] நீங்களே கதை சொல்கிறீர்களே! அப்படி ஒரு படத்தை நீங்களே எடுத்து விடுங்களேன்!
பார்ப்போம்! செய்யலாம்! அதற்கு ஒரு நேரம் வர வேண்டும்! (அகரமுதல இதழ் சார்பில் அதற்கு வாழ்த்து சொல்ல) எல்லாம் உங்கள் வாழ்த்துப்படி!
?] உங்களை வைத்து, உங்களைப் போல் குட்டையான உருவம் கொண்டவர்களையே முழுக்க முழுக்க வைத்துச் சிறுவர் படம் கூட எடுக்கலாமே! ஏற்கெனவே நடிகர் சித்திரகுப்தன் அவர்களை வைத்து மலையாளத்தில் அப்படி ஒரு படம் வந்தது இல்லையா?
ஆம்! ‘அற்புதத் தீவு’ என்று ஒரு படம். கேரளாவில் உண்ட பக்குரு என்பவர் இயக்குநர் வினயனை வைத்துத் துணிச்சலாக ஐந்நூறு, ஆயிரம் குள்ள மனிதர்களை ஒருங்கிணைத்து ஒரு படம் எடுத்தார். தமிழில் அப்படி யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை. மேலும், எங்களைப் போன்றவர்கள் இதுவரை நகைச்சுவையாகத்தான் நடித்திருக்கிறோம். மற்றபடி, எங்களுக்கு என்னென்ன இடர்ப்பாடுகள் இருக்கின்றன? எங்களுக்குள் உள்ள உணர்வுகள் என்ன? வெளியில் போனால் நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? இவற்றையெல்லாம் படத்தில் சொல்ல வேண்டும். அப்படி ஒரு படம் எடுக்கப்பட வேண்டும்.
?] நடிப்பு தவிர உங்களுக்கென வேறென்ன தொழில் இருக்கிறது? திரையுலகில் சில சமயம் வாய்ப்புகள் நிறைய வரும்; சில சமயம் குறைவாக வரும். நிலையாக மாத வருமானம் தரும்படி வேறென்ன இருக்கிறது?
அப்படி எதுவும் இல்லை. வேறு எந்தத் தொழிலும் எனக்கு ஒத்து வராது. கடை ஒன்று வைத்து நடத்தி வந்தேன். ஆனால், அது சரிபட்டு வரவில்லை. கடையில் போய் உட்கார்ந்து கொண்டு பட வாய்ப்புகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கையாள முடியவில்லை.
?] உங்கள் உடன் நடிக்கும் மாற்றுத் திறனாளிக் கலைஞர்கள் இன்ன பிற நடிக – நடிகைகள் ஆகியோர் உங்களிடம் நன்கு பழகுவார்களா?
எல்லாரும் நன்றாகப் பழகுவார்கள், பேசுவார்கள். எல்லா நடிக – நடிகையரும் என்னிடம் அன்பாக இருப்பார்கள்.
?] ஏனெனில், திறமைதானே ஒருவரின் உண்மையான உருவம்!
ஆம்! திரைப்பட நடிகர் கிங்காங்கு போகிறார் என்றதும் யாரோ ஒருவர் குள்ளமாகப் போய்க் கொண்டிருக்கிறாரே என்றுதான் நினைப்பார்கள். ஆனால், நடித்த திரைப்படங்களைப் பார்த்த பிறகு “அதோ அந்தத் திரைப்படத்தில் நடித்தவர் போகிறாரே!” என்று பார்த்து மகிழ்வார்கள். அப்பொழுது அந்தக் ‘குள்ளம்’ என்ற சொல் மறைந்து விடும். ‘நடிகர்’ என்பது மட்டும்தான் நிற்கும்.
தன் திறமையால் உயரம் எய்திய கிங்காங்கு பல்துறைக் கலைஞராக மிளிர்கிறார். தம் நேரத்தை அகரமுதல இதழுக்கு ஒதுக்கியதற்கு நன்றி. அவர் மேலும் உயர்வும் புகழும் பெற அகரமுதல இதழ் வாழ்த்துகிறது.
Quote:
மணிமேகலைக்கு சிறந்த தொகுப்பாளினி விருது
மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி மணிமேகலை. பாட்டு கேட்பதற்காக போன் பண்ணுகிறார்களோ இல்லையோ இவருடன் பேசுவதற்காக போன் பண்ணி பாட்டு கேட்கிற இளவட்டங்கள் அதிகம். இவர் பெயரில் பேன் கிளப்பே இருக்கிறது. தற்போது மணிமேகலைக்கு வேர்ல்ட் இண்டக்ரேஷன் கவுன்சில் என்ற அமைப்பு சிறந்த தொகுப்பாளினி விருதை வழங்கி இருக்கிறது. இந்த அமைப்பு நடத்திய விழாவில் கவர்னர் ரோசய்யா இந்த விருதை மணிமேகலைக்கு வழங்கினார்.
இதுகுறித்து மணிமேகலை கூறியிருப்பதாவது:
பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குள் நுழையும்போதே மீடியாவிற்குள்ளும் வந்து விட்டேன். முதல் பணியே தொகுப்பாளினி தான். இந்த வேலை எனக்கு பிடித்து விட்டதால் வேறு பணி பற்றி யோசிக்காமல் இதில் தொடர்கிறேன். படித்துக் கொண்டே தொகுப்பாளியாக இருக்க வீட்டிலும் சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். அந்த சுதந்திரம்தான் என்னை சிறந்த தொகுப்பாளினி விருது வரைக்கும் கொண்டு வந்திருக்கிறது. தொடர்ந்து மகிழ்ச்சியோடு எனது பணியை தொடர்கிறேன் என்கிறார் மணிமேகலை.
http://img1.dinamalar.com/cini//CNew...4007408581.jpg
நன்றி: தினமலர்
Quote:
சீரியல் இயக்குனராகிறார் சுபத்ரா
தேவதை, கைராசி குடும்பம் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் சுபத்ரா. கைராசி குடும்பத்தில் அண்ணி கேரக்டரில் அசத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் தனது அடுத்த அவதாரத்தை எடுக்க இருக்கிறார். அது எழுத்தாளர் அவதாரம் மற்றும் இயக்குனர் அவதாரம்
"எனக்கு விருப்பமானது நடிப்பா, எழுத்தா என்ற கேட்டால் எழுத்து என்று தான் சொல்வேன். பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பது தான் என் ஆசையாக இருந்தது. நிறைய கதை, கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகையாகிவிட்டேன். கடைசிவரை நடிகையாகவே இருக்க விருப்பம் இல்லை. இதனால் விரைவில் அடுத்த துறைக்கு செல்ல இருக்கிறேன். சீரியலுக்கென்று சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். அவற்றை முழுமைப்படுத்தும் பணியில் தீவிரமாக இருக்கிறேன். என் கதையை நானே இயக்குவேன். எந்த சேனல், என்ன கதை என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்கிறார் சுபத்ரா. அழகான பொண்ணு சீரியல் இயக்கினா சீரியலும் அழகாத்தான் இருக்கும்.
நன்றி: தினமலர்
Quote:
தல கூட நடிக்க ஆசை - மனம் திறக்கிறார் நடிகை ரக்ஷிதா
சின்னத்திரையில் வர்ண ஜாலம் காட்டி ரசிகர்களை தன் வசமாக்கியவர். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை தனது காந்தக் கண்களால் கட்டிப்போட்டவர் நடிகை ரக் ஷிதா. கள்ளம் இல்லா வெள்ளை மனம் கொண்ட கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். வானத்து மின்னலாய் வர்ண ஜாலம் காட்டிய ரக் ஷிதாவின் மனம் திறந்த வார்த்தைகள்.
* பிறந்தது..வளர்ந்தது..படித்தது..
பெங்களூருவில் பிறந்தேன். வீட்டிற்கு ஒரே பெண். பள்ளி படிப்பு, கல்லுாரி படிப்பு எல்லாம் சொந்த ஊரில் தான். மாஸ் கம்யூனிகேசன் படித்துள்ளேன்.
* நடிப்பதற்கு வந்தது எப்படி?
படித்து முடித்தபின் பெங்களூருவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினேன். எனது நிகழ்ச்சிகளை பார்த்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பத்து தொடர்களில் நடித்துள்ளேன். தமிழில் உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.
* தமிழ் சரளமாக பேசுவதன் ரகசியம்?
அடிப்படையில் எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சென்னையில் வந்த பின், பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த பின் தமிழ் மீது அதிக காதல் ஏற்பட்டது. அதனால், முறையாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் பிரிவோம் சந்திப்போம், இளவரசி, மசாலா குடும்பம், தற்போது மிகப்பெரிய வெற்றி தந்த சரவணன் மீனாட்சி தொடர் எல்லா மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
* எந்த நடிகருடன் நடிக்க ஆசை?
தல(அஜித்) கூட நடிக்க ஆசை. இந்த நீண்ட நாள் கனவு நிறைவேற வேண்டும். கமல் சார் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.
* பிடித்த நடிகை
நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். எந்த விஷயத்திலும் அவர் தைரியமாக செயல்படுவார். அடுத்து நடிகை அனுஷ்காவை பிடிக்கும்.
* காதல் பற்றிய கருத்து...
பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, தினேஷ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். காதலுக்கு நம்பிக்கை அவசியம். அது இருந்தால் அந்தகாதல் நிச்சயம் வெற்றி பெறும்.
* நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது அவசியமா?
நிச்சயமாக கவர்ச்சி தேவையில்லை. அந்த காலத்து திரைப்படங்களில் கவர்ச்சி இல்லையே. அந்த படங்கள் வெற்றி பெறவில்லையா. 20 ஆண்டுகளுக்கு முன் நான் பிறந்திருந்தால் சரோஜாதேவி இடத்தை பிடித்திருப்பேன்.
* எதிர்கால திட்டம்? பிடித்த நாடு
பொதுவாக ஊர் சுற்ற பிடிக்கும். மொரிஷியஸ் ரொம்ப பிடிக்கும். ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டில் ஒரு குளிர்ச்சியான கிராமத்தில் மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே தனியாக ஒரு பெரிய வீட்டை கட்டி, சுற்றிலும் இயற்கை விவசாய தோட்டம் அமைத்து வாழ ஆசை.
* தமிழ் ரசிகர்கள் எப்படி
என்னவென்று சொல்வேன். எனக்கு தமிழ்நாட்டு மருமகள் என்று பட்டம் கொடுத்தவர்கள். தமிழ் ரசிகர்களைப் போல வேறு யாரும் இருக்க முடியாது.
* ரோல் மாடல்
ரம்யா கிருஷ்ணன் தான் எனது ரோல் மாடல். அவரைப்போல அம்மன் வேடத்தில் யாரும் நடிக்க முடியாது. அவரைப் போல் அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும், என்பது நீண்ட நாள் ஆசை.
* அடுத்த சினிமா பிரவேசம் எப்போது
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு என்ற படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அவரது படத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சரவணன் மீனாட்சி தொடரை பார்த்து விட்டு இந்த கேரக்டரில் நீ தான் நடிக்க வேண்டும், என்றார். அவரே என்னிடம்கதையை சொன்னார். அவரது படத்தில் நடிக்க ஆசை. சினிமா வாய்ப்புகள் வருகிறது. தொடரில் பிசியாக இருப்பதால் முடியவில்லை. திறமையான, நடிப்பிற்கு சவாலான ஒரு கதை உள்ள படத்தில் நடிக்க விரும்புகிறேன்.
நன்றி: தினமலர்
Quote:
மீண்டும் வருகிறார் காயத்ரி பிரியா
காயத்ரி பிரியாவை நினைவிருக்கிறதா? ஆடுகிறான் கண்ணன், தீர்க்க சுமங்கலி என தமிழ் தொடர்களில் கலக்கியவர். புகழின் உச்சியில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டிலாகிவிட்டார். கணவர் தனியார் வங்கி ஒன்றின் மலேசிய கிளையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
தற்போது காயத்ரி பிரியாவின் கணவருக்கு சென்னை மாறுதல் கிடைத்து சென்னைக்கு வந்து விட்டது குடும்பம். இதனால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். விரைவில் மலையாள தொடர் ஒன்றிலும், தமிழ் தொடர் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.
"எல்லா பெண்களுக்கும் குடும்ப வாழ்க்கை மிகவும் முக்கியம். அதனால் கடந்த 4 ஆண்டுகள் குடும்பத்துக்காக ஒதுக்கி விட்டேன். பரபரவென நடித்து விட்டு மலேசியாவில் வீட்டுக்குள்ளேயே இருந்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் குழந்தைகள் வந்த பிறகு அது மறைந்து விட்டது. தற்போது சென்னைக்கு வந்து விட்டோம். மீண்டும் நடிக்க கணவரும் அனுமதி தந்து விட்டார். கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் சின்னத்திரைக்கு வந்து விடுவேன்" என்கிறார் காயத்ரி பிரியா.
நன்றி: தினமலர்
Quote:
டூப் ஜோதிகா வேடம் பெரிய ரீச் கொடுத்து விட்டது! -வம்சம் பிரியங்கா பேட்டி
பல தொடர்களில் பாசிட்டிவான வேடங்களில் நடித்தவர் பிரியங்கா. இவர் தற்போது ரம்யாகிருஷ்ணனின் வம்சம் தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் ஜோதிகா என்ற வேடம் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு கோணங்களில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது சின்னத்திரையின் பரபரப்பு நடிகைகளில் பிரியங்காவும் ஒருவராகியிருக்கிறார்.
இதுபற்றி பிரியங்கா அளித்த பேட்டியில், வம்சம் தொடர் எனது சின்னத்திரை கேரியரில் மிக முக்கியமானதாகியிருக்கிறது. முதலில் ஜோதிகா என்ற கேரக்டரில் அழுதுகொண்டேயிருந்த நான், இப்போது நெகடீவ் ஜோதிகாவாகவும் உருவெடுத்துள்ளேன். இந்த பழிவாங்கும் கேரக்டர் ரொம்ப திரில்லிங்காக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் சின்னத்திரையில் எனக்கு நிறைய நேயர்கள் கிடைத்து விட்டனர்.
மேலும், சிலர் பாசிட்டீவ் வேடத்தை பெருமையாக சொல்ல, சிலர் நெகடீவ் வேடத்தைப்பற்றி குறிப்பிட்டு எப்படி இந்த அளவுக்கு மாறி நடிக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். ஆக என்னையும், எனது நடிப்பையும் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். அதனால் இப்போது நானும் சீன் பை சீன் சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இப்போது வம்சம் தொடரில் ஆயிரமாவது எபிசோட் ஒளிபரப்பாகி வரும் நிலையில், எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, டூப் ஜோதிகா வேடம் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.
>இந்த தொடரில் முதலில் என்னை இரட்டை வேடத்துக்கு கமிட் செய்தபோது இவரால் இந்த வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கினார்களாம். ஆனால் இப்போது எனது நடிப்பைப்பார்த்து விட்டு ரம்யாகிருஷ்ணன் மேடம் உள்பட அனைவருமே திருப்தியாக உள்ளனர். அதனால் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இன்னும் நல்ல நடிப்பை வெளிப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு மேலும் சில சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. ஆனால், வம்சம் சீரியலேயே மாதம் 20 நாட்களில் போய் விடுவதால் வேறு சீரியல்களில் கமிட்டாக முடியவில்லை என்கிறார் பிரியங்கா.
நன்றி: தினமலர்
Quote:
நான் எப்போதும் ஜாலி கேரக்டர் : சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...
சின்னத்திரையில் உயிரோட்டமான நடிப்பால் பெண்களின் மனதை கவர்ந்தவர் ஸ்ரித்திகா. மலேசிய தமிழ் பெண்ணான இவர் ஹோம்லி கேரக்டர்களில் அசத்தும் அழகு பதுமை. தொலைக்காட்சியில் குல தெய்வம் சீரியலில் அலமுவாக நடிக்கிறார்
அவர் நம்மிடம்...
பிறந்து, வளர்ந்ததெல்லாம் மலேசியாவில். சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். முதலில் நான் தொகுப்பாளினியாக இருந்தேன். மதுரை டூ தேனி படத்தில் நாயகியாகவும், வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடித்தேன்.
அதே சமயத்தில் சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டர் தான் என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. இதற்கு இயக்குனர் திருமுருகனை தான் பாராட்ட வேண்டும்
சின்னத்திரையில் நடிப்போரிடம் குடும்ப உறுப்பினர் போல் பழகுகிறேன். இதனால் தானோ என்னமோ எனது நடிப்பு இயல்பாக உள்ளது. சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமாவை பொறுமையாக எடுப்பர். சீரியல் அந்த மாதிரி எடுக்க முடியாது; எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.
மொழி பெயர்ப்பு சீரியல் வந்தால் சின்னத்திரை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு சாப்ட் கேரக்டர் தான் பொருத்தம் என, எல்லோரும் கூறுகின்றனர். நான் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கு எனது முகபாவம் சரியாக வருமா என்று தெரியவில்லை.
நான் எப்போதும் ஜாலி கேரக்டர். சினிமா, சின்னத்திரை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு தொந்தரவு இருக்கும். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ; அப்படியே ஆண்களும் பழகுவர். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. எங்களை போன்றோர் வெளியே செல்லும் போது முக்கியத்துவம் கிடைக்கிறது.
சில நேரங்களில் தனித்துவம் பாதிக்கிறது. எனக்கு தகுந்த கேரக்டர் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்றார்.
நன்றி: தினமலர்
Quote:
விஜய் டிவியில் வைசாலி!
ஜெயா டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் வைசாலி. அதையடுத்து புதுயுகம் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையானார். பின்னர், கலையரசன் நாயகனாக நடித்து வெளியான ராஜா மந்திரி படத்தில் காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு வைசாலி தயாராக இருந்தபோதும் அவர் எதிர்பார்த்தது மாதிரியான வேடங்கள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சினிமா சினிமா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை முதலில் காயத்ரி தொகுத்தளித்து வந்த நிலையில், தற்போது வைசாலி இடம்பெற்று வருகிறார். அடுத்தபடியாக சின்னத்திரையில் தொகுப்பாளினி, சீரியல் நடிகை என்று தொடர்ந்து பங்களிக்கப்போவதாக சொல்கிறார் வைசாலி.
நன்றி: தினமலர்
Quote:
பொறுப்பை உணர்ந்து நடிக்கிறேன்! -சீரியல் நாயகி அகிலா
பொன்னூஞ்சல், சந்திரலேகா, தாமரை, என் இனிய தோழியே, தேவதை, ராமானுஜம் என பல மெகா சீரியல்களில் நடித்தவர் அகிலா. இதுவரை வித்தியாசமான பாசிட்டீவ், நெகடீவ் கலந்த வேடங்களில் நடித்து வந்தவர் பெரும்பாலும் செகண்ட் லீடாகவே நடித்து வந்தார். முதன்முறையாக ஷ்யாமளா என்ற தொடரில் டைட்டீல் வேடத்தில் நடிக்கிறார் அகிலா.
இதுபற்றி தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நான் நடிக்கும் சீரியல்களில் எனது கதாபாத்திரம் அந்த கதைக்கு முக்கியத்தும் வாய்ந் ததாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருக்கும். அப்படித் தான் இதுவரை நடித்து வந்துள்ளேன். ஆனால் எனக்கு செகண்ட் லீடு வேடங்க ளாகவே கிடைத்து வந்தன. அந்த வேடங்களில் நூறு சதவிகிதம் சிறப்பாக நடித்து வந்தேன். அப்படி எனது நடிப்பைப்பார்த்து விட்டுத்தான் இப்போது டிசம் பர் மாதம் முதல் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஷ்யாமளா தொடரில் எனக்கு டைட்டீல் வேடம் கிடைத்துள்ளது.
இதனால் அந்த சீரியலில் அதிக உற்சாகத்துடன் நடித்து வருகிறேன். மேலும், மலேசிய லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பைரவபுரம் என்ற தொடரிலும் நடித்து வருகிறேன். திரில்லர் கதையில் அந்த தொடர் வெளியாகி வருகிறது என்று சொல்லும் அகிலா, இப்போது லீடு ரோலில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது சந்தோசமாக உள்ளது. அதேசமயம், அதிக பொறுப்பும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதை உணர்ந்து நடித்து வருகிறேன். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டு நேயர்களின் மனதில் அழுத்தமாக பதிந்து விட வேண்டும் என்று இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன் என்கிறார்.
நன்றி: தினமலர்
Quote:
சீரியலுக்கு டைட்டில் சாங் பாடினார் கானா பாலா
ஜீ தமிழ் சேனலில் விரைவில் டார்லிங் டார்லிங் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான டைட்டில் பாடலை கானா பாலா பாடியுள்ளார். ஜில் ஜங் ஜக் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். "இக்கரைக்கு அக்கரை பச்சை... டார்லிங்... மைடியர் டார்லிங்..". என்ற டைட்டில் பாடலை பாடியுள்ளார் கானா பாலா.
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான கானா பாலா. இதுவரை 100க்கும் மேற்பட்ட கானா பாடல்களை சினிமாவில் பாடியுள்ளார். எழுதியும் உள்ளார். சில பாடல் காட்சிகளில் நடித்தும் உள்ளார். தற்போது அவர் மார்க்கெட் கொஞ்சம் இறங்கு முகத்தில் உள்ளது. அதனால் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்.
"சினிமாவில் என்னோட இடம் எப்போதும் இருக்கு. சென்னையில நான் மட்டும் கானா பாடகன் இல்லை. என்னை மாதிரி பலர் இருக்காங்க அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கட்டுமே... நானே பலபேருக்கு சிபாரிசு பண்ணியிருக்கேன். டி.வியில பாடுனது வித்தியாசமான அனுபவமா இருக்கு. தினமும் என்னோட பாட்டு எல்லோர் வீட்டிலேயும் கேட்குமே அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்" என்கிறார் கானா பாலா.
நன்றி: தினமலர்
Quote:
மீண்டும் நேயர்கள் வரவேற்பு கொடுப்பார்கள்!- மிர்ச்சி செந்தில்
விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர் மிர்ச்சி செந்தில். அந்த தொடரில் மீனாட்சியாக நடித்தவர் ஸ்ரீஜா. விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் பெரிய அளவில் பேசப்பட்ட அந்த தொடரில் நடித்து வந்தபோது காதலில் விழுந்த செந்தில்-ஸ்ரீஜா இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாகி விட்டனர். அதன்பிறகும் சரவணன் மீனாட்சி 3வது சீசன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும், மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நடித்தபோது இருந்த பரபரப்பு இப்போதைய சீசன்களில் இல்லை
இந்நிலையில், மீண்டும் சரவணன் மீனாட்சி முதல் சீசனில் நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜாவை ஜோடி சேர்த்து மாப்பிள்ளை என்ற தொடர் தற்போது தயாராகி வருகிறது. நாளை முதல் அந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இந்த மாப்பிள்ளை தொடர், சமீபகாலமாக கணவன்-மனைவிகளுக்கிடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு கதையில் உருவாகிறது.
இதுபற்றி மிர்ச்சி செந்தில் கூறுகையில், மீண்டும் என் மனைவி ஸ்ரீஜாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சரவணன் மீனாட்சியில் நடித்தபோது எங்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அந்த ரொம்ப இனிமையான அனுபவ மாக இருந்தது. இப்போது அவர் எனது மனைவியாகிவிட்டார். நாங்கள் கணவன் மனைவியாகவே நடிக்கிறோம். அது மகிழ்ச்சியாக உள்ளது
ஆனால் நிஜவாழ்க்கையில் ஈகோ என்பது துளியும் இல்லாமல் விட்டக்கொடுத்து வாழ்ந்து வருகிறோம். இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் ஈகோ உடைய வர்களாக நடிக்கிறார்களாம். அந்த வகையில், இந்த தொடர் எங்களுக்கு இன்னொரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். அதோடு, சரவணன் மீனாட்சி மூலம் எங்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்த டிவி நேயர்கள் இந்த மாப்பிள்ளை தொடருக்கும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.
http://img1.dinamalar.com/cini//CNew...3340491661.jpg
நன்றி: தினமலர்
கலைஞர்கள் கண்ட மக்கள் திலகம் - பானுமதி
மலைக்கள்ளன் படப்பிடிப்பு நடைபெற்ற போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கைரேகையை பார்த்து 'இது ஒரு அபூர்வமான ஜாதகம்' என்று ஸ்டெடி செய்து அவரிடத்திலேயே கூறினேன்.
ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டாக, டைரக்டராக, தயாரிப்பாளாராக இருந்து பெரிய அரசியல் தலைவராக, மக்கள் மனதில் சிறந்த இடத்தைப் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சாராக அவர் வந்திருப்பது - எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவது சாதாரணமானதல்லவே? இதற்காக கலைஞர்கள் சமுதாயமே பெருமைப்பட வேண்டும்.
என்றோ நான் அவர் கை ரேகையை பார்த்து கூறியதை அதன் பின்பும் பல ஆண்டுகளுக்குப் பின்பும், மறவாமல் நினைவில் வைத்திருந்து அதைப்பற்றிச் சொல்லுவார்.
இவ்வளவு பெரிய பதவிக்கு வந்த பின்பும், எந்த வகையிலும் அவர் மாறாமல் இருப்பதைக் காண்கிறேன்.
இருபது வருடங்களுக்கு முன்பிருந்து அவரை நான் பார்த்து வருகிறேன். நடிக்கும் போது தன் வரையில் நன்றாகச் செய்துவிட்டுப் போய் விடுவோம் என்று நினைக்கவே மாட்டார். தனது வேடத்தை மட்டுமல்ல அருகில் நடிப்பவர் கேரக்டரும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புவார். பெரிய ஆர்ட்டிஸ்ட் சின்ன ஆர்ட்டிஸ்ட் என்று வேற்றுமையில்லாமல் எல்லாருக்கும் சொல்லித் தருவார்.அகம்பாவம் என்பதே இல்லாமல் எப்போதும் அடக்கமாக இருப்பார். அதனால்தான் எல்லோரிடமும் அவரால் அன்புடனும் பண்புடனும் பழக முடிந்தது.
ரொம்ப மரியாதையாக கவுரமாக நடந்து கொள்ளக் கூடியவர். இன்னொருவர் கஷ்டம் காண சகிக்க மாட்டார். பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தெரியாமல் அனைவருடனும் பற்றோடு இருப்பவர்.
இப்போதும் எங்கேயுமாவது சந்திக்க நேர்ந்தால் கூட, 'அம்மா, சவுக்கியமா?' என்று பரிவோடு கேட்பார். அப்போது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறார். பல வெற்றிகளை சந்தித்து..பெரும் புகழ் பெற்று.பெரிய பதவிக்கு வந்த பிறகும் அப்படியே இருப்பது அவருக்குள்ள தனிச்சிறப்பு. இதுபோல எல்லோரும் இருக்க மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர் கவனமாக ஜாக்கிரதையாக இருப்பதால் பயமின்றி இருக்கிறார்
நாடக உலகில் சிரிப்பு நடிகராகத் தோன்றி, சினிமா உலகில் அப்பாவாகி, அப்புறம் தயாரிப்பாளராக மாறி இன்று கதாசிரியராகவும் இயக்குனராகவும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் வி.கே.ராமசாமி.
இவருடைய வளர்ச்சியின் பரிமாணம் என்ன? அனுபவங்கள் எப்படிப்பட்டவை? அவருக்கே உரிய பணியில் அவரை பேச வைத்த பொழுது:எனக்கு 57 வயசு ஆகுதுங்க.ஏழு வயசிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்த்துட்டேன்.நாடகத்திலே 15 வருஷம்.சினிமாவிலே 35 வருஷம். ஆக 50 வருஷமா நடிச்சிகிட்டே இருக்கேன்.
நாடக கம்பெனியில் நான் சிரிப்பு நடிகனாத்தான் இருந்தேன். நாகேஷ் மாதிரி ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லாம் பண்ணுவேன். "தியாக உள்ளம்" நாடகத்திலே பேங்கர் சண்முகம் பிள்ளைங்கிற 60 வயசுக்காரர் வேடம் பண்ணினேன்.
அப்போ எனக்கு வயசு 15.ஏ .வி.எம் செட்டியாரு அந்த நாடகத்த பாத்தாரு.அதையே 'நாம் இருவர்' படமா எடுக்கச்சே எனக்கே அந்த வேஷத்தை கொடுத்துட்டாரு. அதுதான் என் முதல் படம். அதுக்கப்பறம் எக்கச்சக்கமான படங்களிலே அப்பாவாகவே நடிச்சுட்டேன்.
பாகவதர், சின்னப்பா, மஹாலிங்கம், எம்.ஜி.ஆர்.சிவாஜி கணேசன் இப்போ புதுசு புதுசா வறவங்க அத்தனை தலைமுறையிலயும் நடிச்சு, நடிச்சுட்டு இருக்குற ஒரே ஆசாமி நான் ஒருத்தன்தான்.
நான் வாழ்க்கையில செட்டில் ஆனது 1969 ல தான்.அதாவது என்னோட என் சம்சாரம் ரமணி இணைஞ்சதுக்கு அப்புறம்தான் எனக்கு உண்மையான வாழ்க்கை ஆரம்பமாச்சு.
அதுக்கு முன்னே நான் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் எவன் எவனோ அனுபவிச்சான். அது என் சொந்தக் கதை. வாழ்க்கை வரலாறு மாதிரி 36 பக்கம் எழுதி வச்சிருந்தேன். விவகாரம் வந்து கோர்ட்டுக்கு போக வேண்டியதாயிடுச்சு. என் வாழ்க்கை வரலாறும் கோர்ட்டுக்கு போயிருக்கு.
எனக்கு டைரக்சன்ல என்ன அனுபவம்னு நீங்க கேக்கலாம். ஒரு அனுபவமும் இல்லை.இந்த 35 வருசமா பார்த்தது, பேசினது,நடிச்சது, படம் எடுத்து, கேள்விப்படறது எல்லாமே அனுபவம்தான்.
குடிப்பழக்கம் எல்லாம் முன்னே இருந்தது. இப்போ நிறுத்திட்டேன். அதுக்கும் ரமணிதான் காரணம். ரேஸுக்கு கூட போறத நிறுத்திட்டேன்.
சிவாஜி கணேசனுக்கும் எனக்கும் ரொம்ப நாள் சிநேகிதம்.அவரு கூட என்னை நீ பொழைக்க தெரியாதவன்டா என்பார். அவர் சொன்னதும் வாஸ்தவம்தான். இத்தனை வருஷம் இத்தனை படங்களில் நடிச்சும் கடன்காரனாயிருக்கேன்னா பாருங்களேன்.
சந்திப்பு: திரைஞானி (சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.82 இதழ்)
புதிய இளம் டைரக்டர் ஒருவர் , சாதாரணமான நட்சத்திரங்களை வைத்தே ஒரு படத்தை எடுத்து வெற்றிகரமாக ஓட வைத்திருப்பதே ஒரு சாதனைதான்.
'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன்தான் இந்த பெருமைக்குரியவர்.
"டைரக்சன்கிறத நான் ஒரு தொழிலா கத்துக்கிட்டதில்ல. எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்டாகப் பணியாற்றியதில்லை. கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் போன்ற படங்களுக்கு பாக்யராஜுடன் சேர்ந்து ஸ்க்ரிப்ட் ஒர்க் பண்ணி இருக்கேன். ஸ்க்ரிப்ட்ல நாம் என்ன பண்ணிணோம்க்கிறது நமக்குத் தெரியும். படம் வெளிவந்தவுடன் நாம் பார்க்கிறோம். நாம எழுதின ஸ்க்ரிப்ட்டை டைரக்டர் எப்படி எழுதியிருக்காருன்னு தெரியுது. இப்படித்தான் நான் டைரக்சன் கலைய கத்துக்கிட்டேன். பிறவியிலேயே கலை உணர்ச்சின்னு ஒண்ணு இருந்தா இதுவெல்லாம் சுலபம்தான்.
படபடவென்று பேச ஆரம்பித்தார் சுந்தர்ராஜன்.
"நான் ஒரு கதாசிரியன். கதையை எழுதும்போதே ஒவ்வொரு காட்சியாக நம் மனசுக்குள்ளேயே ஒரு திரைப்படம் ஓடி முடிஞ்சிடும்.
என்னதான் நல்ல கதையா இருந்தாலும் ஒரு மோசமான டைரக்டரால் அது படமாக்கப்பட்டால் அது குட்டிச்சுவராத்தான் போகும்.
ஒரு படம் தோல்வி அடைஞ்சா தோல்விக்கு காரணத்தை யார் தலையிலும் போடலாம். கதை சரியில்லை என்றோ, டைரக்சன் சரியில்லை என்றோ அல்லது நடிகர்கள் சரியில்லை என்றோ குற்றம் சாட்டலாம்.
ஆனால் ஒரு வெற்றிப்படத்திற்கு இதுதான் காரணம் என்று வரையறுத்து பிரிக்க முடியாது. டைரக்சன், நடிப்பு, பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கணும்.
பயணங்கள் முடிவதில்லைக்கு கிடைத்த வெற்றியும் இப்படித்தான். என் டைரக்சனுக்கு மட்டும் அந்தப் பெருமை சேராது. எல்லா அம்சங்களும் சிறப்பா இருந்ததும் ஒரு காரணம்.
ஒவ்வொரு படத்திலிருந்து நிறைய கத்துக்கொண்டு அடுத்த படத்துக்கு போகிறேன். இதனால் ஒவ்வொரு படத்திலும் வெற்றி பெறுவேன்னு நம்பிக்கை இருக்கு.
படம் இப்படி ஒரு வெற்றியை அடையும் என்று எதிர் பார்த்தீர்களா?
எதிர்பாராத வெற்றிதான். ஆனாலும் படம் எடுக்கும்போது, 'நிச்சயமாக தோல்வியை மட்டும் சந்திக்காது' என்கிற நம்பிக்கை இருந்தது. குரலில் ஒரு அழுத்தம் தெரிந்தது.
- ஆர்.சி.சம்பத்
(சினிமா எக்ஸ்பிரஸ் - 01.07.82)
“ஸ்கூலிங் எல்லாமே அண்ணா ஆதர்ஷ் கேர்ள்ஸ் ஸ்கூல். எஸ்.ஆர்.எம் காலேஜ்ல விஸ்காம் முடிச்சேன்.”
.ஃப்ரெண்ட்ஸ்..
“என்னோட கலகல குணத்துக்காகவே ஃப்ரெண்ட்ஸ் எக்கசக்கம். ஒரு இடத்தில் உட்கார மாட்டேன். துறுதுறுனு ஓடிட்டும், லொடலொடனு பேசிட்டும் இருப்பேன். விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு எனக்கு அவ்ளோ…ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.”
சீரியல் என்ட்ரி…
“காலேஜ்ல ஒரு கல்ச்சுரல் புரோக்ராம்ல பார்த்துட்டுத்தான் கூப்பிட்டாங்க. அப்பாவோட பர்மிஷனோட அழகி சீரியல் ஆடிஷன் கலந்துக்கிட்டேன். அப்புறம், நிறைய மாடலிங்…சினிமா சான்ஸ் கூட வந்தது. அதுக்கப்புறம் ‘பிரியமானவள்’ல அன்பான, அடக்கமான மருமகள் இப்போ.”
நிஜத்தில் நிரஞ்சனி…
“சீரியல் கவிதாக்கும், நிஜ நிரஞ்சனிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க. என்னோட வீட்ல சீரியலைப் பார்த்துட்டு ‘நீயாம்மா இது?’ அப்படினு கலாய்ச்சு எடுத்துட்டாங்க. ஆனா, மருமகளா போகிற வீட்டில், அட்லீஸ்ட் கவிதா அளவுக்கு முடியாட்டியும், பாந்தமான மருமகளா இருக்க ட்ரை பண்ணுவேன்.”
சமையல்…
”ஹா..ஹா..ஹா…நல்ல கேள்விங்க. இப்போதான் சமையல் கத்துட்டு இருக்கேன். ஓரளவு தேறிட்டேனு நினைக்கறேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சமைச்சு எடுத்துட்டு போய் எல்லாரையும் சாப்பிட வச்சு, டிரையல் பார்த்து கொடுமை பண்ணிட்டிருக்கேன்.
நிரஞ்சனி – சிவரஞ்சனி; ஆஃப் ஸ்கீரின் ஃப்ரெண்ட்ஷிப்…
”பாவங்க அவ. ஆன் ஸ்கீரினில் மட்டும்தான் அவ என்னை கொடுமை படுத்துவா. வெளில அவளைத்தான் நான் கொடுமைப்படுத்தறேன். ரெண்டு பேரும் அவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவ ஒரு நாள் ஃபோன் பண்ணாட்டி கூட, ‘ஏன் ஃபோன் கால் இல்லை?’ன்னு அவ வீட்டுக்கே போய் சண்டை போடுவேன். நிஜத்தில் கவிதா டெரர்…அவந்திகா அப்பாவி” சொல்லிவிட்டு கலகலவென கண்களை உருட்டி சிரிக்கிறார் நிரஞ்சனி.
Quote:
சீரியல் நடிப்பை கைவிட்டார் ஷபானா
தேவதை, தாமரை தொடர்களில் நடித்தவர் ஷபானா. மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். இனி தொடர்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தொகுப்பாளினியாகவே தொடர இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால் நடிப்பதற்கு நேரம் இல்லை. அதனால்தான் சீரியல்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். நிகழ்ச்சி தொகுப்பில் பல புதுமைகளை செய்யும் திட்டம் வைத்திருக்கிறேன். அதோடு எனக்கு சின்ன வயதிலிருந்தே பேஷன் டிசைனிங்கில் ஆர்வம் அதிகம். அதிலும் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். இப்போது எனது உடைகளை நானே வடிவமைக்கிறேன். இனி மற்றவர்களுக்கும் செய்ய இருக்கிறேன். என்கிறார் ஷபானா.
http://img1.dinamalar.com/cini//CNew...3853044255.jpg
நன்றி: தினமலர்
Quote:
கே.பாலசந்தர் தொடரில் நடித்தது பெருமை!-சீரியல் நடிகர் சுதாகர் -
குஷ்பு லீடு ரோலில் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலில்தான் முதன்முதலாக நான் நடித்தேன். பின்னர், கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற தொடரில் ஒரு நிருபர் வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு பொம்மலாட்டம் தொடரில் நடித்தேன். நான் நடித்த வேடங்கள் சிறியது என்றாலும், பேசப்பட்ட வேடங்கள் என்கிறார் நடிகர் சுதாகர்.
அவர் மேலும் கூறும்போது, பல சீரியல்களில் நடித்தபோதும், கே.பாலசந்தரின் இயக்கத்தில் நடித்து மறக்க முடியாது. அவரது அமுதா ஒரு ஆச்சர்யக்குறி தொடரில் நிருபராக நடித்த நான், ஒரு டைரக்டருக்கும், ஹீரோயினிக்கும் இருக்கும் காதலை பத்திரிகையில் எழுதி விடுவேன். அதனால் அந்த டைரக்டருக்கும், எனக்குமிடையே பிரச்சினை வரும். அதோடு, நேத்து வர சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்சவன் இன்னைக்கு டைரக்டராகிட்டே என வசனம் பேசுவேன். அதனால் அந்த நேரத்தில் பல டைரக்டர்கள் என்னை தவிர்த்தனர். ஆனபோதும் நான் கவலைப்படவில்லை. கே.பாலசந்தர் சீரியலில் நடித்ததை பெருமையாக எடுத்துக்கொண்டேன். அதோடு சீரியல்களில் இன்னும் அதிரடியான வில்லன் வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
மேலும், தற்போது காதல் வழக்கு, மதுரை நரிக்குறவர் போன்ற படங்களிலும் நடிக்கிறேன். பெரிய திரையில் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டபோதும் சீரியலை நான் தவிர்க்கவில்லை. சினிமா-சின்னத்திரை இரண்டிலும் வெயிட்டான வேடங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் சுதாகர்.
நன்றி: தினமலர்
Quote:
சின்னத்திரைக்கு வந்தார் ஆதவ் கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். கண்ணதாசன் மகள் அமிர்தா கவுரியின் மகன். இவர் பொன்மாலை பொழுது என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை அவர் குடும்பத்தின் சார்பில் தாய் அமிர்த கவுரியும், சகோதரி டாக்டர் கே.சத்யலட்சுமியும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.சி.துரை என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். காயத்ரி ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஆதவ் கண்ணதாசன் யாமிருக்க பயமே படத்தில் நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சின்னத்திரைக்கு வருகிறார். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் ஜோடி நம்பர் ஒண் சீசன் 9 டீமில் இணைந்திருக்கிறார். முறைப்படி டான்ஸ் மாஸ்டரிடம் நடனம் கற்றிருக்கும் ஆதவ் நிகழ்ச்சியில் நடிகைகள் மற்றும் போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் டி.ராஜேந்தரும், சதாவும் நடுவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. "எனது அபிமான நடிகர் டி.ராஜேந்தர் சாருடன் இணைந்து பணியாற்றுவது சந்தோஷமாக இருக்கிறது. அவருடன் நடனம் ஆடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் ஆதவ் கண்ணதாசன்.
நன்றி: தினமலர்
Quote:
சென்னைக்கு குடிவருகிறார் கீதாஞ்சலி
நாதஸ்வரம் தொடரில் அறிமுகமானவர் கீதாஞ்சலி. அந்த தொடருக்கு இயக்குனர் திருமுருகன் நடத்திய ஆடிசனில் தேர்வு பெற்றார். நாதஸ்வரம் காரைக்குடியில் நடக்கும் கதை என்பதால் அக்மார்க்க காரைக்குடி பெண்ணான கீதாஞ்சலி தேர்வானார்.
அதில் சிறப்பான நடிப்பின் மூலம் பாராட்டுகளை அள்ளினார். நாதஸ்வரம் படப்பிடிப்பு முழுவதும் காரைக்குடியில் நடந்ததால் அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அவர் தற்போது நடித்து வரும் வாணி ராணி தொடர் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடந்து வருகிறது. தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்து நடித்து வருகிறார்.
http://img1.dinamalar.com/cini//CNew...2744063891.jpg
மேலும் சில தொடர் வாய்ப்புகள், சினிமா வாய்ப்புகளும் வருவதால் தனது வீட்டையும், குடும்பத்தினரையும் சென்னைக்கு குடிமாற்றுகிறார் கீதாஞ்சலி. இதற்காக அவர் தீவிரமாக வீடு தேடிக் கொண்டிருக்கிறார். அதோடு தன் தங்கையையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.
நன்றி: தினமலர்
Quote:
தொடர்ந்து என்னை கிண்டல் செய்வதா? லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்
சமீபத்தில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் கலாய்த்திருந்தார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனாக ஊர்வசி நடித்திருந்தார். நிகழ்ச்சியை கிண்டல் செய்திருப்பதோடு அதில் இருக்கும் வணிக சமாச்சாரங்களையும் போட்டு உடைத்திருந்தார்கள்.
இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: தொடர்ந்து என்னையும், எனது நிகழ்ச்சியையும் பற்றி கிண்டல் செய்து வருகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. சொல்வதெல்லாம் உண்மை ஆயிரம் எபிசோட்களை தாண்டியிருக்கிறது. பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்கள் என்ன முட்டாள்களா? நிகழ்ச்சியை நடத்தும் நான் முட்டாளா?. சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்த ஒரு சம்பவத்தைதான் அம்மணி படமாக எடுத்தேன். தரமான படம் என்று எல்லோரும் பாராட்டினார்கள். சினிமாவில் என்னை கிண்டல் செய்கிறவர்கள். என்னைபோல தரமான படத்தை தர முயற்சிக்கலாம். இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
நன்றி: தினமலர்
Quote:
நடிகர்கள், சக நடிகைகளை அக்கா, தங்கையாக பார்க்கிறார்களா? ரேகா வேதனை
சின்னத்திரை தொகுப்பாளினி ரேகா பத்மநாபன். தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தொடரி படத்தில் தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளார். நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ரேகா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
சின்னத்திரை நடிகைகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. சக நடிகர்கள், நடிக்கும்போது மட்டும்தான் நடிகைகளை அம்மா, அக்கா, தங்கையாக பார்க்கிறார்களா? வேஷத்தை கலைத்து விட்டால் வேறு மாதிரி பார்க்கிறார்களோ என்று வருத்தமாக இருக்கிறது.
காதல் தோல்வி, வேலைவாய்ப்பில்லை, ஏமாற்றம் எதற்காகவும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால். தனியாக சென்று படுத்துக் கொண்டு நீங்கள் இறந்து விட்டதாக கற்பனை செய்யுங்கள். உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுவதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடலை அறுத்து போஸ்மார்ட்டம் செய்வதை பாருங்கள். பின்னர் அதனை எரிப்பதை பாருங்கள். அந்த வேதனையை அனுபவியுங்கள். தற்கொலை எண்ணம் மறைந்து விடும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
நன்றி: தினமலர்