அரசியலை நாம விட்டாலும் அது நம்மை விடாது போல...
பம்மலார் /ராகவேந்திரன் சார் ஒரு நிலையிலும் , ஜோ மற்றொரு நிலையிலும் இருந்துதங்கள்நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை தமிழக அரசியலின் இரு பெரும் கூறுகள் திராவிட மற்றும் தேசிய இயக்கங்கள்.
பெரியஅரசியல் கட்சிகள் எல்லாமே இந்த இரண்டில் ஏதாவது ஒன்றின் அங்கங்கள்தான்.
திராவிடஇயக்கம் - கடவுள்மறுப்பு, மொழி மற்றும் இன ரீதியான பிரிவினையில் பற்று , இந்திய தேசியத்தின் மீது அல்லாமல் திராவிட ( அதாவதுதமிழ்) தேசியத்தின் மீது நம்பிக்கை, இந்தியாவின் மற்ற கலாச்சாரக் கூறுகளைவிட திராவிட ( அதாவதுதமிழ்) கலாச்சாரம் சிறந்தது என்கிற அடிப்படைகளில் அமைந்தது.
தேசிய இயக்கம் என்பது மேற்சொன்ன அனைத்தையும் புறந்தள்ளுவது . இவற்றிற்கு நேர்மாறானது.
இன்று இந்த கொள்கைகள் அனைத்துமே வெறும் பெயரளவில் மட்டுமே கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் கூட, அடிப்படையான வேறுபாடு என்பது இந்த இரு அரசியல்கூறுகளின் இடையே தமிழகத்தில் இன்னும் தொடரவேசெய்கிறது.
இவற்றில் தேசிய பாரம்பரியத்தில் பிறந்து, வளர்ந்து அந்த பாரம்பரியத்தின் ஆதரவாளராகவே (இடையில்ஒருசிலஆண்டு 'வனவாச' காலம்தவிர) இருந்து மறைந்தவர் நடிகர் திலகம் -
இந்த இரண்டில் நான் தேசிய பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை உள்ளவன் - நடிகர்திலகத்தைப்போலவே.
என்னுடைய இந்த நிலைப்பாட்டுக்கு நடிகர்திலகம் படங்களில் ஏற்ற பல கதாபாத்திரங்கள் , பாடல்கள் மூலம் அவர் சொன்ன கருத்துகள் இவையும் ஒரு காரணம்.
ஒரு சமயம் நடிகர் திலகம் மாற்று அணியில் இருந்திருந்தால் நிச்சயம் இப்போது போலவே அவரது ரசிகராகத்தான் இருப்பேன். ஆனால் அரசியல் ரீதியாக மாறுபட்டிருப்பேன்.
நான் விரும்பும் கலைஞனுக்கும் எனக்கும் ஒரே அரசியல் கருத்துக்கள் எனபதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு.
இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் நமக்குள்ளே இருந்தாலும் நேர்மை, விசுவாசம் , காலம் தவறாமை, (இன்றைய அரசியலுக்கு கொஞ்சமும் ஒத்துவராத) வெளிப்படையான தன்மை இவற்றின் மூலம் ஒரு நல்ல நடிகராக இருந்தது போலவே , நல்ல அரசியல்வாதியாகவும் திகழ்ந்து நம்மையெல்லாம் பெருமைப்பட வைத்தவர் நடிகர் திலகம்.
இந்த ஒரு விஷயத்தில் நம்முடைய வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் தாண்டி, நம் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்.