-
9th July 2011, 01:02 AM
#11
என் வேண்டுகோளை ஏற்று சித்ராலயா இதழின் பக்கங்களை பதிவேற்றியதற்கு நன்றி ராகவேந்தர் சார்!
.
இந்த வாரத்தை சவாலே சமாளி சிறப்பு வாரமாக மாற்றிய சுவாமிக்கு நன்றி. இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்யப்படும் விஷயங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது என் மனம் ஐந்து வருடங்கள் பின்னோக்கி பறக்கின்றது.
நான் இந்த திரியில் அடியெடுத்து வைக்கும்போது சிவாஜி என்ற நடிகர் திறமையானவர்,சில நல்ல படங்களில் நடித்திருக்கிறார் என்றளவிலே தான் பலரின் சிந்தனை இருந்தது. நாம் இங்கே நடிகர் திலகம் என்ற மனிதனின் பல்வேறு பரிணாமங்களை இங்கே பதிவிட பலருக்கும் அது ஒரு வியப்பூட்டும் செய்தியாக மட்டுமே இருந்தது.
நண்பர் ஜோ ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் "சார், நீங்கள் திரியில் நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி எழுதியதை படித்த பிறகுதான் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதை புரிந்துக் கொண்டேன். அதுவரை மதுரை மற்ற யாரோ ஒருவரின் கோட்டை என நினைத்துக் கொண்டிருந்தேன்" என்றார். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் புத்தகங்கள், பத்திரிக்கைகள், வலைப்பூக்கள மற்றும் இணையதளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி எந்த ஒரு செய்தியையும் விடாமல் தேடிப் படிக்கும் ஜோ போன்றவர்களின் பார்வைக்கு கூட இந்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில்தான் திரியில் வரும் செய்திகளுக்கும் புள்ளி விவரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தன. நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் சாதனைகளையும் தவிர நடிகர் திலகம் கலையுலக மற்றும் அரசியலில் எப்படிப்பட்ட ஒரு ஆளுமையாக இருந்தார் என்பதனை முதலில் எழுத்துக்களில் சொன்னோம். அப்போதும் கூட இங்கே இந்த திரிக்கு தொடர்ந்து வாசகர்களாக இருக்கக்கூடியவர்கள், ரசிகர்களாக இருக்கக்கூடியவர்கள் கூட, இங்கே பதிவிடுபவர்கள் சிலர் சிவாஜியின் மீது கொண்டுள்ள அதீத அன்பின் காரணமாக சற்று மிகைப்படுத்தி சொல்வதாக ஒரு எண்ணத்தை கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தை மாற்றி நாம் நடிகர் திலகத்தைப் பற்றி பதிவிட்டவை அனைத்துமே உண்மை என்பதற்கும் இப்போது நாம் குறிப்பிட்ட அந்த ஆளுமையின் பலவாறு பரிணாமங்களை எல்லோரும் உணர்வதற்கும் இந்த பத்திரிக்கை செய்திகளும் விளம்பரங்களும் பெரிதும் பயன்பட்டிருக்கும்.
இன்னொன்று. இந்த சவாலே சமாளி படம் வெளியான போதும் சரி, விழா் நடந்த 1971 ஜூலை 10,11 தேதிகளிலும் சரி அந்தக் காலக் கட்டத்தில் இவற்றை நேரில் பார்த்த எங்களைப் போன்றோர் இந்த நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மட்டும் சொல்லி போக, அந்த காலக் கட்டத்தில் இந்த பூமி பந்தில் ஜனனம் கூட கண்டிராத நண்பர் சுவாமியின் மூலமாக இன்று உலகில் பல்வேறு இடங்களில் வாழும் பல்வேறு தலைமுறையினரும் அதை புகைப்பட வடிவிலும் செய்தியாகவும் கண்டு களிக்கிறார்கள் என்றால் அனைத்தும் அந்த "சுவாமியின் " கருணை.
உண்மைதானே! தந்தைக்கே உபதேசம் செய்ததால்தானே அவன் "சுவாமிநாதன்" ஆனான்!
அன்புடன்
-
9th July 2011 01:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks