நடிகர் திலகம் 300 படங்களுக்கும் மேலாக கொடுத்ததால் வெற்றி படங்களும் தெரியவில்லை. தோல்விபடங்களும் தெரியவில்லை. அவரது படங்களை அவரது படங்களே வெற்றி கொண்டன. வெற்றிப் படங்களையும் தோல்விப்படங்கள் என திரும்ப திரும்ப கூறுவார் முன்பு பம்மலார் போல எல்லாரும் எல்லாப் படங்களுக்கும் ஆதாரங்கள் கொடுத்திட முடியுமா?
தங்கப்பதுமை படத்தில் நடித்ததினால்தான் இதை போன்ற கதை அமைப்பு கொண்ட சிலப்பதிகார கதையான கலைஞரின் "பூம்புகார்' படத்தில் நடிகர் திலகம் நடிக்கவில்லை என்றும் தகவல் உண்டு.