-
16th June 2013, 07:42 PM
#11
Junior Member
Newbie Hubber
தங்க பதுமை.
உட்காரும் போது அரை நம்பிக்கையுடன் உட்கார்ந்தேன் ,ஏனென்றால் சிறு வயதில் என்னை அவ்வளவாக கவராத படம். ஆனால், I was Spell bound with performance ,dialogues ,music and making style . சிலப்பதிகாரத்தை விட விறுவிறுப்பான திரைக் கதை.என்னால் ஒரு நிமிடம் அங்கு இங்கு அசைய முடியவில்லை.
மிக மிக ரசித்தவை.....
சிவாஜியின் ஆரம்ப அப்பாவி காட்சிகள். நீராடும் போது அவர் காட்டும் குஷி (உண்மையான கண்மணிக்காக!!!),கல்யாணமான முதல் இரவு காட்சி (இதிலும் ஒவ்வொரு முதலிரவும் ஒவ்வொரு மாதிரி.),மாமனார் வேலை வாங்கும் காட்சியில் indifference ,மனைவியுடன் கொஞ்ச,சாப்பாட்டிற்கு அலைவது, தானறியாமலே நடன நர்த்தகியின் வலையில் விழும் காட்சிகள் (ராஜகுமாரி எவ்வளவு அழகு!!வயது அழகை கூட்டியே இருந்தது. சிவாஜியின் சிறந்த இணையாக இவரையும் தேர்வு செய்கிறேன்) ,உளறி கொட்டி சமாளிக்கும் இளவரசியின் சால்ஜாப்புகளை கேட்டு விடாமல் நகைத்து எள்ளி, உங்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது என்ற ஊசி குத்தல், கடைசி காட்சியின் மௌனம், NT மேதை என்று கட்டியமே கூறுகின்றன. பத்மினி நடிப்பு படு powerful (பூம்புகார் விஜயகுமாரி இதற்கு ஈடே கிடையாது).
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை படு பிரமாதம்.அரு.ராமநாதன் திரைக் கதை,வசனம் படு class .
என்னா படமைய்யா? சும்மாவா அத்தனை re -release போதும் பிளந்து கட்டியது?
-
16th June 2013 07:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks