http://timesofindia.indiatimes.com/c...w/14037987.cms
Printable View
வாணியின் ரசிகர் மகேஷ் அவர்கள் தேவிகா பற்றி (தமாஷாக) ஒரு அறிக்கை விட, அதை எதிர்த்து தேவிகா ரசிகர்களாகிய நாங்கள், பதிலுக்கு (தமாஷாக) ஒரு கண்டன அறிக்கை விட, அது ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கவில்லை.
எனவே மேலும் இதுகுறித்த சீரியஸ் பதிவுகள் வரும் முன் முற்றுப்புள்ளி வைத்து விடுவோம்.
'பைலட் விழா' நினைவுப்பதிவைப்பாராட்டிய ஜோ, பம்மலார், கோபால் அனைவருக்கும் நன்றி.
முரளியாரின் பதிவுகளைக்காண மனம் ஏங்குகிறது.
Finished reading, some of the incidents narrated are new for me. Thanks so much, Raghavendra-sir.
Thanks mr raghavendran for publishing society magazine page war. we are able to understand how much labour he has given for his movies by working in three shifts and all and not with wife at the time of ramkumar's birth and all. it is very difficult to see such a person in the field that too while at peak period. SO MUCH DEDICATED TO HIS PROFESSION ALWAYS. I have visited anna iillam many times and witnessed his PUNCTUALITY.
ALWAYS GREAT IN ALL FIELDS.
அன்புள்ள பம்மலார் அவர்களே தாங்கள் கர்ணன் திரைப்படம் 100 நாள் ஓடியது என்பதற்கு ஆதாரமாக இந்த வாரம் தினமலர் வாரமலர் (10 /06 /2012 ) இதழில் நடிகை சந்தியா அவர்கள் (செல்வி ஜெயலலிதா அவர்களின் தாயார்) பேட்டிஒன்று வெளியிடப்பட்டு உள்ளது அதில் கர்ணன் 100 வது நாள் வெற்றி விழா நடந்ததாக சந்தியா அவர்கள் தெரிவித்து உள்ளார்கள் அந்த மேடையில் தான் செல்வி ஜெயலலிதா சினிமா பிரேவசமும் முடிவானதாக கூறி உள்ளார்கள் என்றும் ஆவண திலகமும் ஆதார திலகமும் பம்மலார் அவர்கள்தான்
Dear Pammalar sir,
How much Karnan has collected till now in its re release? What is the next movie of NT to be re released? As I have asked earlier I have seen stills of NT in Jeeva Bhoomi(Like Adimai Penn MGR Style), Ravanan as Sanyasi (NT Autobiography) Could you provide any information on this please?
திரு கார்த்திக் அவர்களே, பைலட் பிரேம்நாத் 100 -வது நாள் விழா குறித்த தங்களது அனுபவம் சுவாரசியமாக இருந்தது.
அனைவருக்கும் வணக்கம்!
அலுவல் காரணமாக ஒரு பத்து நாள் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், கடைசியாக திரு. பம்மலார் அவர்களுக்கு கடந்த 02.06.2012 அன்று நன்றி பதிவு ஒன்று பதிந்துவிட்டு பத்து நாள் கழித்து சென்னை திரும்பியவுடன் வந்து திரியை பார்த்தால்............374வது பக்கத்திலிருந்த திரி 397வது பக்கத்திற்கு போய்விட்டிருக்கிறது. எத்த்னை எத்தனை பகிர்வுகள், பதிவுகள், அப்பப்பா மலைத்து போய் விட்டேன்.
முதலில் விருந்தோம்பல்....
புதிதாக நம் திரிக்கு வருகை புரிந்திருக்கும் திரு. பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களையும், திரு. சிவாஜி செந்தில் அவர்களையும் வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
திரு. பம்மலார் அவர்களுக்கு,
இளையராஜா பிறந்த நாள் வாழ்த்துக்களுடன், நடிகர் திலகம் அவர்களுடன் கூடிய புகைபடம் என்ன.....
கலைஞர் பிறந்த நாளின் கட்டுரை என்ன...
சத்யம் திரைப்படத்தின் விளம்பர அட்டை என்ன...
இளைய தலைமுறை திரைப்படத்தின் தொகுப்பு என்ன...
சிறப்பு மலர் ஏன்? என்ற கட்டபொம்மனின் கட்டுரை என்ன...
உச்சக்கட்டமாக mgr raju bs என்கிற புல்லுரிவியை, (அவர் அடக்கம் மீறிய வார்த்தைகளை உபயோகித்திருந்தும்) சற்று கூட சலனப்பட்டுவிடாமல் அடக்கமாக ஆனித்தரமான ஆதாரங்களை அளித்து புறமுதுகு ஓடச்செய்தது என்ன...
என்ன... என்ன.... என்ன... என தகவல்களின் பொக்கிஷமாகிப் போன தங்களுக்கு என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,
தங்கப்பதக்கத்தின் புகைப்படத்தின் தொகுப்பு என்ன...
தங்கை திரைப்படத்தின் சண்டைக் காட்சி என்ன... (வாசுதேவன் சார்! தங்கை திரைப்படத்தில் பின்னால் ஒரு காட்சியில் சீட்டாட்ட கிளப்பில் வாயில் சிகரெட் புகைந்தபடி சீட்டுக்கட்டைக் குளுக்கி இடது கையில் இருக்கும் சீட்டுகளை வலது கையில் உயரப் பிடித்து தனித் தனி சீட்டுகளாக மீண்டும் இடது கையில் பிடிப்பாரே அந்த காட்சி இருந்தால் தையவு செய்து பதிவிடவும்)
சத்யம் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பு என்ன...
சிவாஜி வீட்டில் இரண்டு மணி நேரம் கட்டுரை என்ன...
இளைய தலைமுறை திரைப்பட தொகுப்பு என்ன...
1981ல் வெளிவந்த நான் ரசித்த வசனம் கட்டுரை என்ன...
கட்டபொம்மனுக்கு மும்பையில் கிடைத்த கௌரவம் ஆவணம் என்ன...
முத்தாய்ப்பாக தமிழனின் மீது வீசினாய் ஒரு சொல் இப்போது தூக்கு கல் என்று mgr raju bs என்கிற மேதாவிக்கு பதிலடி அடித்தது என திரி முழுதும் வலம் வந்திருக்கும் தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
கலைஞரின் பிறந்த நாள் நினைவைப் போற்றும் வகையில் பராசக்தி திரைப்படத்தின் கோர்ட் சீன் காட்சிப் பதிவு என்ன...
தங்கப்பதக்கத்தின் பாடல் காட்சிப் பதிவு என்ன...
தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் திரைப்பட அணிவகுப்பு என்ன...
மகாலட்சுமியில் சிவாஜி வாரம் தகவல் என்ன... ஞாயிறு அன்று கொண்டாட்ட புகைப்படங்கள் என்ன...
ஓஹோ ஹோ ஹோ மனிதர்களே என்கிற தலைவரின் பாடல் வரிகளின் மூலமாக mgr raju bs போன்றோருக்கு பதிலடி கொடுத்தது என்ன...
soceity நாளிதழில் வெளிவந்த "THE LEGEND THAT CREATED AN ERA" கட்டுரை தொகுப்பென்ன...
SUNDAY TIMESல் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு என்ன...
பாரதி கலா மன்றத்தின் நடிகர் திலகம் அவர்களின் நாடகங்களின் விளம்பரம் என்ன...
உங்களின் பதிவுகளை பார்க்கும்போது எனக்கு "WHERE HE GOES HE GETS" என்கிற வாக்கியம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அளவிற்கு இன்றைய நிகழ்வுகளைத் தேடி தேடி தருகிறீர்கள். தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்.
திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,
இந்தியா டுடே வில் வெளிவந்த "கேப்புச்சினோவும் கர்ணனும்" என்கிற கட்டுரைப் பதிவிற்கும், 87வது நாளும் ஹவுஸ் புல் ஆக வெற்றிநடை போடும் கர்ணன் பற்றி ஆதாரபூர்வமாக பதிவிட்டமைக்கும் என் நன்றிகளை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
திரு. கோல்ட் ஸ்டார் அவர்களுக்கு,
ஜாதி மல்லிகை பாடலை பதிவிட்டு எந்தன் மனமெங்கும் மல்லிகை மணம் வீச வைத்துவிட்டீர்கள். தங்களுக்கு எனது நன்றிகள்.
திரு. ஞான குருசாமி அவர்களுக்கு,
தங்களின் உணர்ச்சிமயமிக்க வார்த்தைகளை படித்த போது... கடந்த 05.06.2012 அன்று அதிகாலை 4.00 மணிக்கு ஏனோ தூக்கம் வராமல் எழுந்து, டி.வி. யை ஓடவிட்டபோது ஜெயா டி.வி.யில் "தங்கப்பதக்கம்" S.P. சௌத்ரி ஜகனை கைது செய்கிற காட்சி. தூக்கம் முற்றிலும் கலைந்து படம் பார்க்க ஆரம்பித்தேன். ஏனோ படம் முடியும் வரை என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டேயிருந்தது. கடைமைக்கும், பாசத்திற்கும் இடையே தவிக்கும் ஒரு தகப்பனை நினைத்தா... மனைவியை இழந்த போதும் கடமையை போற்றும் ஒரு அதிகாரியை நினைத்தா...அல்லது இப்படியெல்லாம் கம்பீரமான அதிகாரியாகவும், கரைந்துருகும் தகப்பனாகவும் நடிக்க நம்மிடத்தில் நடிகர் திலகம் இல்லையே என்று நினைத்தா...ஆனால் ஒரு கோபம் மட்டும் வந்தது. ஏதோ எம்.ஜி.ஆரை சொல்ல வேண்டுமே என்பதற்காக S.P. சௌத்ரியோடு என் கடமை எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு இன்றைய திரைப்படங்களில் பேசுவது அந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்து மேலும் என் கண்ணீரை அதிகப் படுத்தியது. நீங்கள் கூறியது போல TWINKLE TWINKLE LITTLE STAR பாடல் ஒரு தாயின் தாலாட்டும், தகப்பனின் ஆதங்கமும் கலந்ததுதான். தங்களின் பதிவிற்கு என் நன்றிகள்.
மேலும் அண்ணிகளுக்காக செல்லமாக சண்டையிட்டு கொடும்பாவி எரிப்பு வரை கலகலப்பாக எடுத்துச் சென்ற திரு. mr. கார்த்திக் அவர்களுக்கும், திரு. கோபால் அவர்களுக்கும் மேலும் இவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.
நட்புடன்
http://mohanpaul.com/exnora/cyclists...phyimage11.jpg
ஜெயலலிதா அவர்களின் தாயார் திருமதி சந்தியா அவர்களின் பழைய பேட்டி வேறொரு பத்திரிகையில் வெளிவந்ததை மேற்கோள் காட்டி தினமலர் வாரமலர் திண்ணை பகுதியில் வெளிவந்துள்ளது. அதில் தரப்பட்டுள்ள தகவலிலிருந்து ஒரு பகுதி
அதன் இணையப் பக்கத்திற்கான இணைப்பு...Quote:
நான் நடித்திருந்த, "கர்ணன்' தமிழ்ப்படத்தின், 100 வது நாள் விழாவுக்குப் போயிருந்தேன். என்னுடன் அம்முவும் வந்திருந்தாள். அம்முவை கண்ட தயாரிப்பாளர், டைரக்டர் பி.ஆர்.பந்துலு, அம்முவை அவரது படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் வழக்கம் போல மறுத்தேன். கோடை விடுமுறையிலேயே படப் பிடிப்பை முடித்துக் கொள்வதாகக் கூறினார். கல்யாண குமார் நடித்த கன்னடப்படம் அது. அதில் நடிக்க அம்மு ஒப்பந்தமானாள்.
ஜெயலலிதா அவர்கள் நடித்த அந்த முதல் கன்னடப் படம் சின்னத கொம்பே - இந்தக் கன்னடப் படம் தான் தமிழில் நடிகர் திலகம் நடித்த முரடன் முத்து படத்தின் ஒரிஜினல் படம்.
மேலே படத்தில் காணப்படுபவர் பேசும் படம் திரைப் பட சஞ்சிகையின் ஆசிரியரும் எக்ஸ்நோரா அமைப்பின் தலைவரான எம்.பி.நிர்மல் அவர்களின் தந்தையும் ஆவார்.
thank you mr sivajidhasan for welcoming me. hope to contribute more in placing our NTs image in the minds of generations to come
அன்பு ராகவேந்திரன் சார்,
கலக்கலின் மறு பெயர் தங்கள் பெயர்தானோ?... என்ன ஒரு அசத்தல் பதிவுகள். நண்பர் குமரேசன் அனுப்பிய பெங்களூருவில் கர்ணன் வெளியீட்டையொட்டி நடைபெற்ற அலங்காரங்களின் புகைப்பட பதிவுகள் பிரமாதம். அதே போன்று மகாலட்சுமி திரையரங்கில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் தலைவர் வார விழாவையொட்டி அரங்கில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளின் புகைப்பட பதிவுகள் பலே!
மும்பையில் சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடக விழாவிற்கான விளம்பரங்களின் நிழற்படங்களை குமுதம் கட்டபொம்மன் பதிவிற்கு ஏற்றாற்போன்று பதிவு செய்து நெஞ்சை அள்ளி விட்டீர்கள். கல்கி 19-11-1961 மலரில் வெளிவந்த அந்த இரண்டு அரிய, அற்புத விளம்பரங்களும் ஏதோ இன்று வந்த விளம்பரம் போல அப்படி ஒரு "பளிச்". அதற்காக தங்களுக்கு என் "பளிச்" நன்றிகள்.
Society magazine article பக்கங்களை புதுமணம் மாறாமல் பதிப்பித்தமைக்கு என் அருமையான நன்றிகள்.
அனைத்துப் பதிவுகளுக்குமான தங்களுடைய கடின உழைப்பிற்கு என் தலை வணங்கிய மொத்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் முத்தான பாராட்டுதல்களுக்கு என் அன்பு நன்றிகள்.
அப்பாடா! இப்போதுதான் மனம் முழு திருப்தியடைந்தது. எவ்வளவு நாட்களாயிற்று தங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவு வந்து? 'பைலட் பிரேம்நாத்' படத்தின் 100 ஆவது நாள் விழாவை மிகச் சரளமான தங்கள் நடையில் தகதகக்க வைத்து விட்டீர்கள்.
சுதர்ஸன் இண்டர்நேஷனல் ஹோட்டலில் தங்களுக்கும், தங்கள் நண்பர் விஜிக்கும் ஏற்பட்ட அதே பரபரப்பு தங்கள் பதிவைப் படிக்கும் போது என்னையும் தொற்றிக் கொண்டது.
சினிமாக்களில் வில்லன் கதாநாயகியைக் கொலை செய்யத் துரத்துவான். ஒரு பாழடைந்த மாளிகையில் கதாநாயகி மூட்டை குடோனில் மூட்டைகளின் பின்னால் ஒளிந்து கொள்வாள். சத்தம் வராமல் இருக்க தன் வாயைத் தன் கையாலேயே பொத்திக் கொள்வாள். வில்லன் கையில் கத்தியை வைத்து அவளைத் தேடிக் கொண்டே வருவான். அப்போது படம் பார்க்கும் நமக்கு அய்யய்யோ! கதாநாயகி மாட்டிக் கொள்ளக் கூடாது....கடவுளே! அவளைக் காப்பாற்று...என்று கிடந்து மனம் அடித்துக் கொள்ளும். அது போல நீங்களும், தங்கள் நண்பரும் எங்கே அந்த ஸபாரி சூட் ஆளிடம் ஹோட்டலின் உள்ளே மாட்டிக் கொள்ளப் போகிறீர்களோ என்று பதைபதைத்தேன். நல்லவேளையாகத் தப்பித்தீர்கள்.
மேட்டுக்குடி விழாக்களில் நம்மைப் போன்ற சாதாரண நிலையில் உள்ளவர்கள் கலந்து கொண்டால் என்ன மன நிலை நமக்கு இருக்கும் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள். ஆடம்பர 'பைலட்' விழா தங்கள் நெஞ்சை ஆக்கிரமிப்பு செய்யாமல் போனது தங்கள் பதிவுகளில் இருந்து நன்றாகப் புரிகிறது. எளிமையான அருமையான பதிவு. பாராட்டுக்கள். (நடிகர் திலகம் அந்த விழாவில் என்ன பேசினார் என்று நினைவிருக்கிறதா சார்?)
அன்பு சிவாஜிதாசன் அவர்களே!
சற்று இடைவெளிக்குப் பின் வந்தாலும் பதிவுகளை ஒன்று விடாமல் படித்து பரவசப்பட்டுள்ளீர்கள் என்று புரிகிறது. அதற்காக என் அன்பு நன்றிகள்.
பதிவுகளுக்காக ஒருவர் விடாமல் அனைவரையும் பாராட்டிய தங்களின் உயரிய பாங்குக்கு பாராட்டுப் பெற்றவர்கள் சார்பிலும், என் சார்பிலும் மிக்க நன்றி! தொடரட்டும் தங்கள் திரிப்பணி.
டியர் சிவாஜிதாசன் சார்,
பொன்னான பதிவை வழங்கிய தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்..!
நமது திரியில் பங்களிப்பை நல்கும் ஒவ்வொருவரும் இன்றியமையாதவரே என்கின்ற உயர்ந்த கோட்பாட்டின் அடிப்படையில், தாங்கள் தங்கள் பதிவில் ஒருவரையும் விட்டுவிடாமல், ஒவ்வொருவரையும் பாராட்டிய பாங்குக்கு, நற்பண்புக்கு எனது இருகரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றிகள்..!
தொடரட்டும் தங்களின் திருத்தொண்டு..!
பாசத்துடன்,
பம்மலார்.
Dear Mr. ragulram,
Marching strongly towards the 100th day [23.6.2012], Digital KARNAN is a Maha-Mega hit. It has yielded huge profits, nodoubt.
Regarding the actual collection figure, I will check & tell.
The next NT re-release movie would be VPKB or Vasantha Maaligai.
Regarding JEEVABHOOMI the ad given below will be a matter of high interest to all of us:
ஜீவ பூமி
'துரிதமாகத் தயாராகி வருகிறது' விளம்பரம்
வரலாற்று ஆவணம் : The Hindu : 22.1.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC5892-1.jpg
About 'Raavana Sanyaasi', I will refer & reply. It will take some time.
Warm Wishes & Regards,
Pammalar.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
"கட்டபொம்மன்" காவிய சிறப்பு மலரிலிருந்து சில பக்கங்கள் [தொடர்ச்சி...]
வரலாற்று ஆவணம் : கலைத்தோட்டம் : 15.6.1959
'கலைத்தோட்டம்' இதழின் கௌரவ ஆசிரியர், பிரபல கதாசிரியர்-வசனகர்த்தா திரு.ஏ.எல்.நாராயணன் அவர்களின் அனல் பறக்கும் கருத்துரை
http://i1110.photobucket.com/albums/...GEDC5895-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5896-1.jpg
"வீரபாண்டிய கட்டபொம்மன்" மிகமிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது வெளியான சிறப்பு மலர் இது.
இன்னும் வரும்...
கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
தீர்ப்பு
[21.5.1982 - 21.5.2012] : 31வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5893-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
Dear Mr.Pammalar,
It is a wonderful article by A.L.Narayanan to show that what are the hurdles and treachery ,our NT underwent from time to time. But the worst is by Congress---
Arivalayam has NT photo exhibits. But Perunthalaivar mani mandapam doesn't have. The movie "Kamaraj" by Balakrishnan doesn't even mention the name Sivaji.
What to say??
Jeeva Boomi- Superb Surprise exhibit. I am speechless,Mr.Pammalar.
I remember two things-NT Name is Rathan Santhavath Salumbra in Jeeva Boomi.
Rani Muthu published that Novel for Re 1/- with Caption Movie unfinished and cover with Sivaji-SarojaDevi in romantic posture.
ஜீவபூமி திரைப்படத் தயாரிப்பின் போது பேசும்படம் சஞ்சிகையில் பிரசுரமான படங்களிலிருந்து சில நம் பார்வைக்கு...
http://i872.photobucket.com/albums/a...boomip01fw.jpg
http://i872.photobucket.com/albums/a...boomip02fw.jpg
http://i872.photobucket.com/albums/a...oomip03faw.jpg
http://i872.photobucket.com/albums/a...boomip04fw.jpg
Thanks Pammalar and Raghavendra-sir. Waiting to know the fate of that film.
My God!! Concert feast by duo Sethuraman-Ponnusamy!!?? Pammalar-Ragavendar!! I wish Jeeva Boomi saw the light of the day. Actor Sriram(Germini studio product-villain in Malaikallan) ran into financial trouble.Movie was 60% Complete.
Thanks for the info Gopal,S. I believe actor Sriram is in the pix, last, on the right, below NT's close-up (above the restrained NT and MRR)?
ஜீவபூமி - கிடைத்தர்க்கரிய விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு நன்றி திரு.பம்மலார் & திரு.ராகவேந்திரன் அவர்களே.
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
கர்ணன் நூறாவது நாளை தொட இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், நூறாவது நாள் விழா பற்றி ஏதேனும் செய்திகள் உண்டா? எங்கு நடைபெறுகிறது? என்றைக்கு நடைபெற இருக்கிறது? விழாவின் முக்கிய அம்சம் பற்றி ஏதாவது?....
நட்புடன்
திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,
நாகர்கோவிலில் தலைவரின் சிலை, கன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபத்தில் தலைவரின் புகைப்படம், இனிப்பான செய்தி வழங்கிய தங்களுக்கு என் நன்றியும், தங்களின் முயற்சி வெற்றியடை என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நட்புடன்
நடிப்பின் கடவுளுக்கு மணி மண்டபம் அமையும் போது , வீட்டுக்கு அவுட் ஹவுஸ் போல, குட்டி மண்டபம் ஒன்று நமது சந்திர சேகர் சாருக்கு அமைக்க வேண்டும். மனிதர் பலன் கருதாமல் உழைக்கிறார்.
collection of karnan :http://cinema.maalaimalar.com/2012/0...nan-movie.html
Maalaimalar - Chennai - 13-06-2012
http://i1234.photobucket.com/albums/...13June2012.jpg