அனைவருக்கும் வணக்கம்!
அலுவல் காரணமாக ஒரு பத்து நாள் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், கடைசியாக திரு. பம்மலார் அவர்களுக்கு கடந்த 02.06.2012 அன்று நன்றி பதிவு ஒன்று பதிந்துவிட்டு பத்து நாள் கழித்து சென்னை திரும்பியவுடன் வந்து திரியை பார்த்தால்............374வது பக்கத்திலிருந்த திரி 397வது பக்கத்திற்கு போய்விட்டிருக்கிறது. எத்த்னை எத்தனை பகிர்வுகள், பதிவுகள், அப்பப்பா மலைத்து போய் விட்டேன்.
முதலில் விருந்தோம்பல்....
புதிதாக நம் திரிக்கு வருகை புரிந்திருக்கும் திரு. பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களையும், திரு. சிவாஜி செந்தில் அவர்களையும் வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
திரு. பம்மலார் அவர்களுக்கு,
இளையராஜா பிறந்த நாள் வாழ்த்துக்களுடன், நடிகர் திலகம் அவர்களுடன் கூடிய புகைபடம் என்ன.....
கலைஞர் பிறந்த நாளின் கட்டுரை என்ன...
சத்யம் திரைப்படத்தின் விளம்பர அட்டை என்ன...
இளைய தலைமுறை திரைப்படத்தின் தொகுப்பு என்ன...
சிறப்பு மலர் ஏன்? என்ற கட்டபொம்மனின் கட்டுரை என்ன...
உச்சக்கட்டமாக mgr raju bs என்கிற புல்லுரிவியை, (அவர் அடக்கம் மீறிய வார்த்தைகளை உபயோகித்திருந்தும்) சற்று கூட சலனப்பட்டுவிடாமல் அடக்கமாக ஆனித்தரமான ஆதாரங்களை அளித்து புறமுதுகு ஓடச்செய்தது என்ன...
என்ன... என்ன.... என்ன... என தகவல்களின் பொக்கிஷமாகிப் போன தங்களுக்கு என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,
தங்கப்பதக்கத்தின் புகைப்படத்தின் தொகுப்பு என்ன...
தங்கை திரைப்படத்தின் சண்டைக் காட்சி என்ன... (வாசுதேவன் சார்! தங்கை திரைப்படத்தில் பின்னால் ஒரு காட்சியில் சீட்டாட்ட கிளப்பில் வாயில் சிகரெட் புகைந்தபடி சீட்டுக்கட்டைக் குளுக்கி இடது கையில் இருக்கும் சீட்டுகளை வலது கையில் உயரப் பிடித்து தனித் தனி சீட்டுகளாக மீண்டும் இடது கையில் பிடிப்பாரே அந்த காட்சி இருந்தால் தையவு செய்து பதிவிடவும்)
சத்யம் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பு என்ன...
சிவாஜி வீட்டில் இரண்டு மணி நேரம் கட்டுரை என்ன...
இளைய தலைமுறை திரைப்பட தொகுப்பு என்ன...
1981ல் வெளிவந்த நான் ரசித்த வசனம் கட்டுரை என்ன...
கட்டபொம்மனுக்கு மும்பையில் கிடைத்த கௌரவம் ஆவணம் என்ன...
முத்தாய்ப்பாக தமிழனின் மீது வீசினாய் ஒரு சொல் இப்போது தூக்கு கல் என்று mgr raju bs என்கிற மேதாவிக்கு பதிலடி அடித்தது என திரி முழுதும் வலம் வந்திருக்கும் தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
கலைஞரின் பிறந்த நாள் நினைவைப் போற்றும் வகையில் பராசக்தி திரைப்படத்தின் கோர்ட் சீன் காட்சிப் பதிவு என்ன...
தங்கப்பதக்கத்தின் பாடல் காட்சிப் பதிவு என்ன...
தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் திரைப்பட அணிவகுப்பு என்ன...
மகாலட்சுமியில் சிவாஜி வாரம் தகவல் என்ன... ஞாயிறு அன்று கொண்டாட்ட புகைப்படங்கள் என்ன...
ஓஹோ ஹோ ஹோ மனிதர்களே என்கிற தலைவரின் பாடல் வரிகளின் மூலமாக mgr raju bs போன்றோருக்கு பதிலடி கொடுத்தது என்ன...
soceity நாளிதழில் வெளிவந்த "THE LEGEND THAT CREATED AN ERA" கட்டுரை தொகுப்பென்ன...
SUNDAY TIMESல் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு என்ன...
பாரதி கலா மன்றத்தின் நடிகர் திலகம் அவர்களின் நாடகங்களின் விளம்பரம் என்ன...
உங்களின் பதிவுகளை பார்க்கும்போது எனக்கு "WHERE HE GOES HE GETS" என்கிற வாக்கியம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அளவிற்கு இன்றைய நிகழ்வுகளைத் தேடி தேடி தருகிறீர்கள். தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்.
திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு,
இந்தியா டுடே வில் வெளிவந்த "கேப்புச்சினோவும் கர்ணனும்" என்கிற கட்டுரைப் பதிவிற்கும், 87வது நாளும் ஹவுஸ் புல் ஆக வெற்றிநடை போடும் கர்ணன் பற்றி ஆதாரபூர்வமாக பதிவிட்டமைக்கும் என் நன்றிகளை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
திரு. கோல்ட் ஸ்டார் அவர்களுக்கு,
ஜாதி மல்லிகை பாடலை பதிவிட்டு எந்தன் மனமெங்கும் மல்லிகை மணம் வீச வைத்துவிட்டீர்கள். தங்களுக்கு எனது நன்றிகள்.
திரு. ஞான குருசாமி அவர்களுக்கு,
தங்களின் உணர்ச்சிமயமிக்க வார்த்தைகளை படித்த போது... கடந்த 05.06.2012 அன்று அதிகாலை 4.00 மணிக்கு ஏனோ தூக்கம் வராமல் எழுந்து, டி.வி. யை ஓடவிட்டபோது ஜெயா டி.வி.யில் "தங்கப்பதக்கம்" S.P. சௌத்ரி ஜகனை கைது செய்கிற காட்சி. தூக்கம் முற்றிலும் கலைந்து படம் பார்க்க ஆரம்பித்தேன். ஏனோ படம் முடியும் வரை என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டேயிருந்தது. கடைமைக்கும், பாசத்திற்கும் இடையே தவிக்கும் ஒரு தகப்பனை நினைத்தா... மனைவியை இழந்த போதும் கடமையை போற்றும் ஒரு அதிகாரியை நினைத்தா...அல்லது இப்படியெல்லாம் கம்பீரமான அதிகாரியாகவும், கரைந்துருகும் தகப்பனாகவும் நடிக்க நம்மிடத்தில் நடிகர் திலகம் இல்லையே என்று நினைத்தா...ஆனால் ஒரு கோபம் மட்டும் வந்தது. ஏதோ எம்.ஜி.ஆரை சொல்ல வேண்டுமே என்பதற்காக S.P. சௌத்ரியோடு என் கடமை எம்.ஜி.ஆரை ஒப்பிட்டு இன்றைய திரைப்படங்களில் பேசுவது அந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்து மேலும் என் கண்ணீரை அதிகப் படுத்தியது. நீங்கள் கூறியது போல TWINKLE TWINKLE LITTLE STAR பாடல் ஒரு தாயின் தாலாட்டும், தகப்பனின் ஆதங்கமும் கலந்ததுதான். தங்களின் பதிவிற்கு என் நன்றிகள்.
மேலும் அண்ணிகளுக்காக செல்லமாக சண்டையிட்டு கொடும்பாவி எரிப்பு வரை கலகலப்பாக எடுத்துச் சென்ற திரு. mr. கார்த்திக் அவர்களுக்கும், திரு. கோபால் அவர்களுக்கும் மேலும் இவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.
நட்புடன்
Bookmarks