இசை அமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பது ஒரு symbiotic உறவே. நௌஷட் ஒரு விஸ்வநாதன்-ராமமூர்த்தி பக்தர். விஸ்வநாதன்-ராமமூர்த்தியோ நௌஷத் அவர்களை குரு போல பாவிப்பவர்கள். Mutual Admiration Group .நௌஷட் சாத்தி படத்தில் பாலும் பழமும் போல தர முடியவில்லை என்று குறிப்பிட்டதாக ஞாபகம்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,சுப பந்துவராளி ராகத்தில் அவர்கள் பாலும் பழமும்(1961) படத்தில் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா என்று முயற்சி செய்தனர். பல அற்புத பாடல்கள் நிறைந்த அந்த படத்தில் ஏனோ இந்த பாடல் சுமாராகவே எடு பட்டது. பாடல் நல்ல பாடல் என்ற போதும் ,ஒரு முழுமை missing .பிறகு 1964 இல் leader என்ற படம் நௌஷட் இசையமைப்பில் பேச பட்ட படம்.இதில் லலித் என்று ஹிந்துஸ்தானி ராகத்தில் ஒரு பாடல்.(ஏக் ஷஹன் ஷா ,ரபி-லதா)
http://www.bing.com/videos/search?q=...995E7D3F662F76
ஆஹா ,இணை ,இந்த feel ,melody ,ராக கூறுகள் ,சுப பந்துவராளியின் சில சங்கதிகள்,காதலின் உருக்கம் ,காலத்தை வென்று நிற்கும் பாடல் தயார்.உன்னை நான் சந்தித்தேன்(1965) .சுசிலாவின் அற்புத மாய குரலின் உருக்கம் நிறைந்த பிரிவின் துயர்,காதலின் போக்கு,எதிர்பார்ப்பு .
பிறகு இதனை மிஞ்சும் ஆட்டுவித்தால் யாரொருவர்(1975) இதே சுபபந்துவராளியில்.சௌந்தரராஜன் ,சுயவிரக்கம்,சுய விளக்கம்,தத்துவம் சார்ந்த சுய ஆறுதல் கலந்து பாட ,மற்ற பாடல்களுக்கு அமையாத இன்னொன்று நடிகர்திலகம்.ஏதோ சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவர்,கிருஷ்ணர் வேடமிட்டு வரும் நண்பன் குழந்தையை சட்டென்று நிலைக்கு வராமல், சுதாரிக்கும் அழகு. புது பரிமாணம் கண்ட பாடல்.
https://www.youtube.com/watch?v=SPuXeYJcXhA
https://www.youtube.com/watch?v=K0kaOdXV21g
https://www.youtube.com/watch?v=3erd1grA2y0