So much wrong with this post. Dont know where to start. It's not Rajini's fault entirely but he has influenced some people into smoking. You can deny all you like but I know few people in my circle that were influenced by Rajini.
Printable View
The Same RAJINI in his recent speech to fans on his B'day event appealed to quit smoking...
Not sure whether this too has influenced them...
இது ஒரு மேலோட்டமான அவதானிப்பு ..நான் பார்த்தவரை என்னுடைய சுற்றுவட்டாரத்தில் திரையில் குடிக்காத எம்.ஜி.ஆர் ரசிகர்களில் தான் குடிகாரர்கள் அதிகம் . திரையில் குடிக்கின்ற சிவாஜி ரசிகர்களில் குடிகாரர்கள் குறைவு .
தன்னால் செய்ய முடியாத ஒன்றை செய்யும் இன்னொருத்தர் மீது ஆச்சரியமும் அபிமானமும் வருவது இயற்கை . அந்த வகையில் நானறிந்த பல பக்கா குடிகாரர்கள் எம்.ஜி.ஆர் பக்தர்களாக இருந்திருக்கிறார்கள் .அதே நேரம் எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டதால் நான் குடிக்கவில்லை என சொன்ன ஒருவரையோ , சிவாஜி குடிப்பதால் தான் நானும் குடிக்கிறேன் என சொன்ன ஒருவரையோ நான் கண்டதில்லை.
ரஜினியை பார்த்து சிகரெட் குடித்தேன் .தண்ணியடித்தேன் என என் நண்பர்கள் வட்டாரத்தில் சொன்னதில்லை . இன்னும் சொல்லப்போனால் என்னுடைய நண்பர் குழாமே ரஜினி ரசிகர்கள் தான் .ஆனா கிட்டதட்ட எல்லோரும் பழம் ரேஞ்ச் :) கமல் ரசிகர்கள்ல தான் அராத்துகள் அதிகம் இருந்தார்கள் .
இன்னிக்கு டாஸ்மாக்-க்கின் அபார தாக்கம் இருக்கும் தமிழகத்தை விட கேரளாவில் தான் குடி அதிகம் . அங்கேயும் ரஜினிகாந்தா சொல்லிக்குடுத்தார் ?
ஒரு குறிப்பிட்ட சினிமா நடிகரால் குடிக்க ஆரம்பித்தவர்கள் ஒரு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள் .குறைந்தபட்சம் 2000 வரை இது தான் நிலை .ஆனால் இன்றைக்கு திரைப்படங்களில் வரும் டாஸ்மாக் காட்சிகள் அளவு மீறி போய்க்கொண்டிருக்கின்றன . அதோடு வெட்டிபயல் , எவனையும் மதிக்காத தான் தோன்றி , எந்த சமூகப்பொறுப்பும் இல்லாத சுயநலவாதி போன்ற கேரக்டர்களே கதாநாயகன் என்ற நிலை எதார்த்தம் என்ற பெயரில் அளவுக்கு மீறி வந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன் . டாஸ்மாக்கோடு சேர்ந்து இதன் தாக்கம் இல்லையென்று சொல்ல முடியாது
:2thumbsup:
Completely Agree on this!
Dont know abt the past.
But Currently It is only because of Govt. and the easier aviable of drinks through TASMAC in all the streets Young children have turn alcoholists...
PMK isthe only party which is against TASMAC now...
But not sure whether all its Party-Men are no alcoholists...
எம்ஜிஆர் படங்களில் புகைக்காமல், குடிக்காமல் நடித்ததினால் ஏதாவது நன்மை ஏற்பட்டதா என்பதை விட, குடியை நியாயப் படுத்தாமல், ஒரு நல்ல கருத்தை தந்ததில், எம்ஜிஆர் அவர்கள் நல்ல கருத்தை தான் கொடுத்துள்ளார்.
(தவிர உங்களின் நண்பர்கள் எல்லாம் சிவாஜி மற்றும் ரஜினி ரசிகர்களா...ஜோ சார்..)
யார் இல்லையென்றது ? எப்படி எம்.ஜி.ஆரால் குடியை நிறுத்தியவர்கள் மிகக்குறைவோ அது போல எம்.ஜி.ஆர் குடித்ததனால் இவர்களும் குடித்திருப்பார்கள் என்பவர்களும் சொற்பமாகவே இருந்திருப்பார்கள்
//(தவிர உங்களின் நண்பர்கள் எல்லாம் சிவாஜி மற்றும் ரஜினி ரசிகர்களா...ஜோ சார்..)//
ஆம் . ஆனால் நான் சிவாஜி மற்றும் கமல் ரசிகன் . எம்.ஜி.ஆர் , ரஜினியை -யும் பிடிக்கும்