ரஜினியை பார்த்து சிகரெட் குடித்தேன் .தண்ணியடித்தேன் என என் நண்பர்கள் வட்டாரத்தில் சொன்னதில்லை . இன்னும் சொல்லப்போனால் என்னுடைய நண்பர் குழாமே ரஜினி ரசிகர்கள் தான் .ஆனா கிட்டதட்ட எல்லோரும் பழம் ரேஞ்ச்கமல் ரசிகர்கள்ல தான் அராத்துகள் அதிகம் இருந்தார்கள் .
இன்னிக்கு டாஸ்மாக்-க்கின் அபார தாக்கம் இருக்கும் தமிழகத்தை விட கேரளாவில் தான் குடி அதிகம் . அங்கேயும் ரஜினிகாந்தா சொல்லிக்குடுத்தார் ?
ஒரு குறிப்பிட்ட சினிமா நடிகரால் குடிக்க ஆரம்பித்தவர்கள் ஒரு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள் .குறைந்தபட்சம் 2000 வரை இது தான் நிலை .ஆனால் இன்றைக்கு திரைப்படங்களில் வரும் டாஸ்மாக் காட்சிகள் அளவு மீறி போய்க்கொண்டிருக்கின்றன . அதோடு வெட்டிபயல் , எவனையும் மதிக்காத தான் தோன்றி , எந்த சமூகப்பொறுப்பும் இல்லாத சுயநலவாதி போன்ற கேரக்டர்களே கதாநாயகன் என்ற நிலை எதார்த்தம் என்ற பெயரில் அளவுக்கு மீறி வந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன் . டாஸ்மாக்கோடு சேர்ந்து இதன் தாக்கம் இல்லையென்று சொல்ல முடியாது







Reply With Quote
Bookmarks