Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
எது ஒன்றைச்செய்தாலும் அதில் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்வதை வழக்கமாக, கடமையாகக்கொண்டிருக்கும் தாங்கள், 'கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் நினைவுநாளை' சிறப்பிக்கவும் கூட அவர் நடிகர்திலகத்தைப்பற்றி முதல் பட வெற்றிவிழா மலரிலேயே எழுதியுள்ள கட்டுரை மற்றும் சிறப்புக்கவிதையைப் பதிப்பித்து நினைவுகூர்ந்துள்ள விதம் அருமையிலும் அருமை.
இந்தக்க்ட்டுரை வெளிவந்த காலத்தில் (1952) என் தந்தைக்கு அதிகம்போனால் 17 வயது இருந்திருக்கலாம். என் தாய் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார். இன்றைய இளைஞர்களின் தாய் தந்தையர் அப்போது பிறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது வெளிவந்த கட்டுரையை இப்போது நாங்கள் படிக்க முடிகிறதென்றால், பம்மலாரின் அர்ப்பணிப்பை அளவிட தமிழில் வார்த்தைகளே இல்லையென்பதுதான் உண்மை.
ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடி சேகரித்து தொகுத்தளித்த தமிழ்த்தாத்தா உ.வெ.சா. அவர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர் தாங்கள்.
திரு சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தினால் என்ன?. தலைப்பு "த்மிழ்த்திரைப்பட ஆவணங்கள் அதிகம் இருப்பது பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களிடமா? பம்மலார் அவர்களிடமா?".
(தங்கள் அடியொற்றி நண்பர் வினோத் வேகமாக முன்னேறி வருகிறார். அவரது சேவையால் மக்கள்திலகம் திரி தறிகெட்டு பறந்துகொண்டிருக்கிறது).
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.