Ulagam Palavitham.
http://i1087.photobucket.com/albums/...7d688aad38.jpg
Ulagam Palavitham.
http://i1087.photobucket.com/albums/...7d688aad38.jpg
உலகம் பலவிதம்
http://i1087.photobucket.com/albums/...3467377a58.jpg
அன்பு வாசு அவர்களே,
இன்று காலை இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டீர்கள்.
என் பள்ளி நாட்களில் பெரும் சொத்தாய் நான் வைத்திருந்த இந்த நடிகர்திலகம் நிழற்பட+விமர்சன நூலை இன்னொரு ரசிக நண்பன் '' சுட்டு''விட்டதால்
பிறகு காணக்கிடைக்காமல் தவித்துப்போனேன்.
அழகான பதிவுகளால் அந்த மகிழ்ச்சியை மீட்டெடுத்துத் தரும் உங்களுக்கு என் நன்றி + வந்தனம்!
( என்னிடம் இருந்து எடுத்தவனும் நம் நடிகர்திலகம் ரசிகன் என்பதால் அந்த வருத்தத்திலும் மகிழ்ச்சி..
எத்தனை தீவிர ரசனை என்றால் திருடத்தூண்டும்!
நடிகர்திலகம் படத்துக்கு 'டிக்கட்' இல்லை என்று திரும்பும்போது
படம் பார்க்கவில்லை என்று அழுவதா?
அரங்கு நிறைந்துவிட்டதே என்று சிரிப்பதா?
என்ற கலவை உணர்வு எழுமே அதுபோல)
பம்மலார், ராகவேந்திரா, வாசு அவர்களின் அற்புத உழைப்புக்கும் ஈடுபாட்டுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றிகள்..
Mr. KAVERI KANNAN,
I respect your enthus, but at the same time, instead of looking on the title of the thread, kindly look in to the STRICT INSTRUCTION of the Moderator, at three pages earlier.
This thread is allowed to exist purely for Filmography of Nadigarthilagam and other discussions and postings should be made in Nadigar Thilagam Part 10, that too must related for him.
Already one thread had been locked, because it had been diverted from its purpose by unwanted discussions.
NT's Rasigargal Kodu Pottal Roadu Poduvargal.
As soon as I mentioned about the opinion of our NT
can be posted has been immediately implemented by
our Neyveli Vasu Sir.
Thanks.
சங்கரா சார்,
'காவேரி' திரைப்படத்தில் தங்கள் விருப்பப் பாடலான நடிகர் திலகம் பரத நாட்டிய முத்திரைகளில் அசத்தும் 'சிந்தை அறிந்து வாடி' பாடல் உங்களுக்காகவே இதோ இணையத்தில் தரவேற்றி.
http://www.youtube.com/watch?v=qu35W...yer_detailpage
அன்பு நண்பர்களே,
தங்கள் அனைவருடைய ஆதரவினாலும் ஒத்துழைப்பினாலும் இத்திரி இம்மய்யத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் தமிழ்த் திரையுலக வரலாற்றில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றிய தகவல்களுக்கு சிறந்த ஆவணக்காப்பகமாகவும் விளங்கும் என்பதில் எனக்கு சற்றும் ஐயமில்லை. குறுகிய காலத்தில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றதற்கு காரணமே தங்கள் அனைவரின் ஈடுபாடு தான். அனைவருக்கும் மிகுந்த நன்றி. இத்தகவலை சுட்டிக் காட்டியும், மற்றும் தன்னுடைய உழைப்பு, நேரம், திறமை அனைத்தையும் இத்திரிக்கென முழு ஈடுபாட்டுடன் அளிக்கும் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் ஸ்பெஷலாக நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
அன்பு நண்பர்களே,
தங்கள் அனைவருக்கும் மற்றொரு வேண்டுகோள்.
இதில் ஒரு திரைப்படத்தைப் பற்றி தகவல்கள் அளிக்கும் போது அது சம்பந்தப் பட்ட மேற்தகவல்கள் பதிவிடுவது, மற்றும் ஐயப்பாடுகள், பாடல்கள் போன்றவற்றைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வது உள்பட அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் முடிந்த பிறகு அடுத்த திரைப்படத்தினை நாம் எடுத்துக் கொள்வோமானால் நன்றாக இருக்கும். எனவே ஒவ்வொரு படத்திற்கும் பதிவிட்டதிலிருந்து இரு தினங்கள் வரை நாம் தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்வோம். அதனுடன் அப்படத்தை முடித்துக் கொண்டு அடுத்த படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கு செல்லலாம்.
தங்களுடைய மேலான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
டியர் வாசு சார்,
நடிகர்திலகம் தன் திரைப்படம் பற்றிய ஒரு வரி விமர்சனம் பற்றிய பதிவு அறிய ஒன்று! தொடருங்கள்.
இன்றைய (12.2.13)மாலை மலர் நாளிதழில் வந்துள்ள தகவல் : வசந்தமாளிகை திரை காவியம் மார்ச் 1 அன்று 80 தியேட்டர்களில் வெளியாகிறது !!! நாம் அடுத்த கொண்டாடத்திற்கு தயாராவோம்.
அன்பு ராகவேந்திரா + வாசு அவர்களுக்கு
உலகம் பலவிதம் படப்பதிவுகளுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி...
இத்திரியின் வெற்றிக்கு என் முழு ஒத்துழைப்பு இருக்கும்.
Sivaji Ganesan Filmography Series
23. Mangaiyar Thilagam மங்கையர் திலகம்
http://i1146.photobucket.com/albums/...ps0d0f98f9.jpg
வெளியான நாள் 26.08.1955
தயாரிப்பு – வி.சி.பிள்ளை அளிக்கும் வைத்யா பிலிம்ஸ்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – வாசு
எஸ்.வி.சுப்பையா – கருணாகரன்
கே.ஏ.தங்கவேலு – கலாமணி
கே.சாரங்க பாணி – ராவ் பகதூர்
நாராயண பிள்ளை – குஞ்சித பாதம்
ஏ.டி.கல்யாணம் – உபாத்தியாயர்
மாஸ்டர் பாஜி – சின்ன வாசு
மாஸ்டர் ரவி – குழந்தை ரவி
பத்மினி – சுலோசனா
ராகினி – நீலா
எம்.என்.ராஜம் – பிரபா
கமலம் – அகிலாண்டம்
கே.ஆர்.செல்லம் – மங்களம்
மற்றும் பலர்
தயாரிப்பாளர் – ஸ்ரீபாத சங்கர்
ஸினாரியோ மற்றும் டைரக்ஷன் – பிரசாத்
ஸ்டூடியோ வாஹினி
வெஸ்டெர்ன் எலெக்ட்ரிக் ஒலி முறையில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
கதை – வஹிநிஞ்சியா பகாடியா
வசனம் – வலம்புரி சோமநாதன், ஜி.ராமகிருஷ்ணன், டி. நாகலிங்கம்
பாடல்கள் – மருதகாசி, கண்ணதாசன், புரட்சிதாசன்
அடங்காபிடாரி நாடகம் – உடுமலை நாராயண கவி
சங்கீத டைரக்ஷன் - - எஸ். தஷிணாமூர்த்தி
நடன அமைப்பு – ஜெய் சங்கர்
ஒளிப்பதிவு டைரக்ஷன் – பி.எல்.ராய்
ஒளிப்பதிவாளர் – ஹெச்.எஸ். வேணு
உதவி – பி.என்.சுந்தரம்
ஸ்டில்ஸ் – ஆர்.நாகராஜ ராவ்
ஒலிப்பதிவு டைரக்ஷன் – ஏ.கிருஷ்ணமூர்த்தி
ஒலிப்பதிவாளர் – கே.விஸ்வநாதன்
உதவி – நரசிம்ம மூர்த்தி, ராமன்
அரங்க நிர்மாணம் – சி.குப்புசாமி நாயுடு, கே.ஸ்ரீநிவாசன்
காட்சி அலங்காரம் – கே.எஸ்.என். மூர்த்தி
மேக்கப் – ஹரிபாபு, கே.ஏ.நடராஜன், ஏ.ராம்தாஸ்
சிகை அமைப்புகள் – ரேபா ராவ்
உடைகள் – சி.கே கண்ணன்
பிராசஸிங் – எஸ்.ரங்கநாதன்
லேபரட்டரி – விஜயா லேபரட்டரி
எடிட்டிங் – என்.எம்.சங்கர்
செட் நிர்வாகம் – எஸ்.ராமாநுஜம், சி.எஸ். பிரகாஷ் ராவ்
ஸ்டூடியோ நிர்வாகம் – விஜயா புரொடக்ஷன்ஸ்
ப்ரொடக்ஷன் மேனேஜர்கள் – சி.எஸ்.ஐயங்கார், எஸ்.கங்காதரன்
உதவி டைரக்ஷன் – ஜி.ராமகிருஷ்ணன், என்.ஸ்ரீகாந்த்
பாடல்கள்
1. அன்பு என்றும் அணைந்திடாத தீபமாய் – ஏ. மருதகாசி - கே.ஜமுனா ராணி குழு
2. கண்டு கொண்டேன் – கண்ணதாசன் - ஜிக்கி
3. அடங்காப் பிடாரி இசை நாடகம் – கெட்ட பெண்மணி – உடுமலை நாராயண கவி – டி.வி.ரத்னம், எஸ்.சி.கிருஷ்ணன், வடிவாம்பாள், காந்தா, செல்லமுத்து, பொன்னுசாமி,
4. புரிந்து கொள்ள வில்லை – ஏ.மருதகாசி – ஏ.ரத்னமாலா, எஸ்.சி.கிருஷ்ணன்
5. நீல வண்ணக் கண்ணா வாடா – ஏ.மருதகாசி – ஆர்.பாலசரஸ்வதி
6. தேவா சதா சோகத் திருநாளா – கண்ணதாசன் – பி.லீலா
7. நீ வரவில்லை யெனில் – மருதகாசி - சத்யம்
பிற்சேர்க்கை - 24.02.2013
மங்கையர் திலகம் சென்னையில் வெளியான திரையரங்குகள் - சித்ரா, பிரபாத், சரஸ்வதி
100 நாட்கள் ஓடிய திரையரங்கு - சேலம் ஓரியண்டல் - 100 நாட்கள்
மங்கையர் திலகம் படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றங்களை 15ம் தேதி வரை வைத்துக் கொள்வோம். 16ம் தேதி அடுத்த படத்தின் தகவல்கள் பதியப் படும்.
இது ஒரு வரையறையாக இருந்தால் முழுமையடையும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.
மங்கையர் திலகம் படத்தின் பாடல்கள்
காணொளிகள்
நீல வண்ணக் கண்ணா வாடா
http://youtu.be/c-tPHG3LEB4
ஒரு முறை தான் வரும்
http://youtu.be/0n-7lDZuIRo
ஆடியோ இணைப்பு
http://www.raaga.com/channels/tamil/album/T0001685.html
Mangaiyar Thilagam. (Albam)
http://i1098.photobucket.com/albums/...agam000001.jpghttp://i1098.photobucket.com/albums/...agam000008.jpg
http://i1098.photobucket.com/albums/...agam000003.jpghttp://i1098.photobucket.com/albums/...agam000002.jpg
http://i1098.photobucket.com/albums/...agam000004.jpghttp://i1098.photobucket.com/albums/...agam000006.jpg
http://i1098.photobucket.com/albums/...agam000009.jpghttp://i1098.photobucket.com/albums/...agam000010.jpg
http://i1098.photobucket.com/albums/...agam000011.jpghttp://i1098.photobucket.com/albums/...agam000005.jpg
http://i1087.photobucket.com/albums/...9b1eed6979.jpghttp://i.ytimg.com/vi/sfDA-xwvAgU/0.jpg
நடிகர் திலகத்திற்கு சுப்பையா அண்ணனாகவும், பத்மினி அண்ணியாகவும் நடித்த காவியம். செண்டிமெண்ட் நிறைந்த குடும்பக்கதை. கணவரின் சிறுவயது தம்பியை தன் சொந்த மகனாக எண்ணி வளர்த்த அன்பான அண்ணி, அண்ணியையே தெய்வமாக நினைத்து பூஜிக்கும் வாசு(நடிகர் திலகம்) இவர்களுக்கிடையே மிளிரும் பாச உறவுகளை பறை சாற்றிய படம்.
இப்படத்தின் மூலம் தாய்க்குலங்களின் நீங்காத இடத்தை பிடித்தார் பத்மினி. அதுவரை நாட்டியத் தாரகையாகவும், பின் கதாநாயகியாகவும் வலம் வந்த அவர், நடிகர் திலகத்திற்கு ஜோடியாக நடித்திருந்த அவர், இப்படத்தில் நடிகர் திலகத்தின் அண்ணியாக சவாலான பாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்து நீங்காப் புகழ் பெற்றார். அற்புதமான குடும்பக் காவியம்.
நடிகர் திலகத்திற்கு இப்படத்தில் வாசு என்று பெயர். அந்தப் பெருமை ஒன்று போதாதா எனக்கு! அதனாலேயே மறக்க முடியாத படம்
கண்ணான கண்ணன் சார்,
தங்கள் ஒத்துழைப்பில் இந்தத் திரி மேலும் சுடர் விட்டு பிரகாசிக்கிறது. தங்கள் ஒத்துழைப்பிற்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றிகள்.
Thanks Radha Krishnan sir.
ராகவேந்திரன் சார்,
நன்றி! 'மங்கையர் திலகம்' பதிவுகள் தங்கள் கைவண்ணத்தில் மங்காது ஒளிவீசுகின்றன. அற்புதமான தகவல்களுக்கு நன்றிகளும் என் உளமார்ந்த பாராட்டுதல்களும்.
'மங்கையர் திலகம்' பற்றி நடிகர் திலகம் அவர்களின் கருத்து.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/23.jpg
https://encrypted-tbn0.gstatic.com/i...fHa6MUtabGMWywQuote:
இத்திரியின் வெற்றிக்கு என் முழு ஒத்துழைப்பு இருக்கும்.
டியர் வாசுதேவன் சார்
தங்களின் உளமார்ந்த முழு ஒத்துழைப்போடு இத்திரியின் மேன்மை அதிகரித்துக் கொண்டே போகிறது. விரைவில் அனைத்து நண்பர்களும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பார்கள் என நம்புவோம்.
மங்கையர் திலகம் பாட்டுப் புத்தகத்தின் நிழற்படங்கள்
sized for only indicative
http://i1146.photobucket.com/albums/...psbf1e4dbb.jpg
http://i1146.photobucket.com/albums/...ps08537e79.jpg
டியர் ராகவேந்திரன் சார் / வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் - மங்கையர் திலகம் - தகவல்கள், புகைப்படங்கள், பாடல் காட்சி தொகுப்பு அருமை.
I remember the first time watched this movie in
Doordarshan. To watch again whenever find time.
நினைவு வீதியில் எங்களை நடக்கவைத்து
காண அழகிய தெள்ளிய காட்சிகள் வைத்து
அறிய அரிய சேதிகள் தந்து
அன்பு ராகவேந்திரா + வாசு அவர்கள் இணைந்து வழங்கும் விருந்து..
பொன்னான பணி மென்மேலும் மின்ன வாழ்த்துகள்.
This thread s really different, paper cuttings, info transfer us to that golden era . These materials must be kept in exhibition
Congrats . We are tracking, following your footsteps
One small request in analysis of NT movies could you add the info of name of company which owns the copyrights for DVD, so that it will be more useful
Also Pl give us info about Meendum Gouravam Serial , I read about it in NT book, if possible clippings
Vasu Sir,
Kuzhandigal Kanda Kudiarasu was superb , I was out of station for few weeks , I accidentally saw this thread
All the best to the pillars of the thread especially the trio thirisulam
After a long wait NT Harichandra movie has been released in Kovai Delite theatre daily 2 shows 2.30 PM & 6.30 PM
உலகம் பலவிதம் - திரு ராகவேந்திரா அளித்த சுட்டியில் 1.30 மணி நேரமே காட்டுகிறது.
காட்சிகள் தாவித்தாவி செல்கின்றன.
பார்க்காத படத்துக்குச் சுட்டி தந்து பார்க்க வைத்தமைக்கு நன்றி..
இதன் கதையமைப்பே பலவிதம்தான் என நடிகர்திலகம் விமர்சித்திருப்பது சாலப்பொருத்தம்.
கதைக்குத் தொடர்பில்லாத காட்சிகளின் நீளம் - இக்கால ரசனைப்படி பார்த்தால் கொஞ்சம் சலிக்கவைக்கலாம்.
ஆனாலும் அக்கால நட்சத்திரங்கள் தம் திறமான நடிப்பால் அக்குறையை மறக்க வைக்கிறார்கள்.
காக்கா, வி.கே.ஆர் - எத்தனை இயல்பாய் வசனம் பேசுகிறார்கள்.
வழக்கம்போல் தம் பகுதிகளை மிக நிறைவாய்ச் செய்திருக்கிறார் நடிகர்திலகம்.
அந்தக் குரலும், அதன் சுகமான ஏற்ற இறக்கமும், அதற்கேற்ற முகபாவமும்....
அதற்காகவே பார்க்கலாம் !
நன்றி ராகுல்ராம்!
தங்களின் மறுவருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிது இடைவெளி விட்டு வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் பணி. இந்தத் திரியில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் பற்றிய விவரங்கள், சுட்டிகள், நிழற்படங்கள் என்று ஒவ்வொன்றாக வரிசயாக அளிக்கப்பட்டு வருகின்றன. அது சம்பந்தமான பதிவுகளை தாங்கள் அளிக்கலாம். நன்றி!
கண்ணன் சார்,
நன்றி! நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. 'உலகம் பலவிதம்' பட நெடுந்தகட்டிலேயே அப்படித்தான் உள்ளது. நெடுந்தகட்டில் இருப்பதுதான் இணையத்திலும் தரவேற்றப்பட்டுள்ளது. நிறைய சீன்கள் இல்லைதான். கிடைத்த வரையில் சந்தோஷமே! நிச்சயம் முழுமையான படத்தை சீக்கிரம் பார்க்கலாம். இது போன்ற சில படங்களின் மூலம் கிடைப்பதே அரிதாய் இருக்கிறது. அனைத்து பொக்கிஷங்களையும் பாதுகாத்து வைக்காததால் வந்த கோளாறு.
மங்கையர் திலகம்
மேலும் சில தெளிவான நிழற்படங்கள்.
நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி.
அவர்தம் பொற்பாதங்களுக்கு சமர்ப்பணம்.
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-22.jpg